புலி சந்தேக நபர்கள் விடுதலை : வைத்தியப் பரிசோதனை தேவையில்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களை விடுதலை செய்வது தொடர்பில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வவுனியா நெலுக்குளம் பம்பைமடு பிரதேச முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 713 விடுதலைப் புலி சந்தேக நபர்களையும் விடுதலை செய்வதற்கு முன்னர், வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென பொலிஸார் கோரியிருந்தனர்.

எனினும், குறித்த சந்தேக நபர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்காத பட்சத்தில் வைத்திய பரிசோதனைகளை ஏன் நடத்த வேண்டுமென கொழும்பு மாவட்ட நீதவான் ஜானகீ ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

One thought on “புலி சந்தேக நபர்கள் விடுதலை : வைத்தியப் பரிசோதனை தேவையில்லை”

  1. மெச்சவேண்டிய செயல்.
    மிகவும் தைரியமான ஒரு நீதிபதியாகவே முன்பும் செயற்பட்டுள்ளார்.

Comments are closed.