புலிக் குழுக்களிடையே மோதல் : ஊடக சுந்திரத்திற்கு அச்சுறுத்தல்?

பிரெஞ்சுத்தலைநகர் பாரிசில் இருந்து சிவா சின்னப்பொடி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தாய்நிலம் எனப் பெயர்தாங்கி, புதிய வாரப்பத்திரிகை, ஒன்று வெளியாகி லாச்சப்பல் கடைகளில் விநியோகத்திற்கு வைக்கப்படடிருந்தது. அப்பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக விசனமடைந்த புலிகளின் ஒரு பிரிவுக்குழு  லாச்சப்பல் கடைகளிலிருந்த தாய்நிலம் பத்திரிகையை எடுத்துச்சென்று குப்பைத்தொட்டிகளில் போட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர்.
நாடுகடந்த தமிழீழத்திற்கு ஆதரவகச் செயற்படும் இப்பத்திரிகை நெடியவன் சார்ந்த குழுவினரால் தடைசெய்யப்பட்டிருப்பதகக் கூறப்படுகிறது. ஈழ வரலாற்றில் ஒரு புறம் பாசிச இலங்கை அரசுகளும் மறுபுறம் புலிகளும் ஊடக அடக்குமுறையக் கட்டவிழ்த்திருந்தனர். இங்கு யார் சரி தவறு என்பதற்கு அப்பால் முதலில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் முன்னெழ வேண்டும். கஸ்ரோவிற்கு எதிரான கட்டுரை ஒன்றே இப்பத்திரிகை வன்மமாகக் விற்பனைநிலையங்களிலிருந்து பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. மாபியாக்கள் போலச் செயற்பட்டுவந்த புலிப் பினாமிகளிடையேயான மோதல் வன்முறை வடிவத்தை எடுத்துவிட்டதா என அச்சம் கொள்ளத்தோன்றுகிறது.

3 thoughts on “புலிக் குழுக்களிடையே மோதல் : ஊடக சுந்திரத்திற்கு அச்சுறுத்தல்?”

 1. உலகம் இன்று தமிழர்கள் எல்லோரையும் புலிகளாகவே பார்க்கின்றது. சுதந்திரமாக வாழ்வதற்காக போராட்டங்களை முன்னெடுக்கும் அனைவருமே புலிகளாக நோக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நாங்களும் எங்கள் ஊடகங்களும் தமிழீழ விடுதலைக்கு எதிராக செயற்படும் அனைவரையுமே புலிகளாக அறிவித்து செயல்படுகிறோம். நெடியவன் தவறை நெடியவன் செய்தான். கஸ்ரோவிற் தவறை கஸ்ரோ செய்தான் என்று அறிவிக்க வேண்டும். அவர்கள் செயற்பாடுகளை முடக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும். இதனைவிடுத்து தனிப்படவோ, குழுவாகவோ இயங்கும் துரோகிகளையும் புலிகளாக அறிவித்து தமிழ்மக்கள் எல்லோருடைய செயல்பாடுகளையும் மழுங்கடிக்கும் முனைப்பையே காட்டிவருகிறோம்.

  மொழி, மதம், கலாச்சாரம் தனக்கே உரியதாக ஒருவன் தனியுரிமை கொண்டாட முடியாது. ஆனால் தமிழன் என்றால் இந்துக்கடவுளுக்கே உரியவனாகவும், புத்தனென்றால் அவன் சிங்களவனுக்கே உரியவனாகவும், எங்கள் மூதாதையர் தொட்டு நாங்களும் ஒரு மாயையை வரித்துக்கொண்டுள்ளோம். இது எங்கள் இரத்தத்தில் நாங்களே ஏற்படுத்திக்கொண்டுள்ள புற்றுநோய்.

  1. தமிழினத்தின் எதிரி யாரென காணமுடியாமல் தன்னைத்தானே அழிக்கும் தமிழனாகி
   விட்டான். புலிகள் தமிழனை அழிப்பதிலஎன்றும் முதலிடம் வகிக்கின்றனர். துரை

  2. இதனால் தான் திரும்பத் திரும்பச் சிலர் சொல்லி வருகிறோம்:
   எல்லவற்றையும் பகிரங்கமாகப் பேசி எல்லாத் தவறுகளையும் பகிரங்கமாக விசாரிப்போம். எல்லாவற்றுக்கும் கணக்குக் காட்டாதவர்களிடம் தலைமைப் பொறுப்பையோ நிதிப் பொறுப்புக்களையோ விடாதிருப்போம்.
   அதற்கு நாம் ஆயத்தமில்லாவிட்டால் பழைய தவறுகளே தொடரும்.
   மாறி மாறி ஆளையாள் குற்றஞ்சாட்டுவது பயனற்றது.

Comments are closed.