புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடித்தது இந்திய அரசு.

தடை செய்யபப்ட்ட அமைப்புகள் மீதான் தடையை நீக்குவதும் நீடிப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் கோரிக்கையின் படியே நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனும், போராளிகளும் இல்லை என்றான பின்னரும் இந்தியா விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடித்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாநில அரசிடம் இருந்து பெறப்படும் அறிக்கையோடு மத்திய புலனாய்வுத்துறை வழங்கும் அறிக்கையைப் பொறுத்தே இந்த தடை நீடிக்கப்படுகிறது. புலிகளின் தலைவர்களான பிரபாகரன், பொட்டம்மான் ஆகியோரின் மரணச்சான்றிதழை இந்தியா கோரிப் பெற்றுக் கொண்ட நிலையிலும் அது தொடர்பாக மௌனம் காத்தே வருகிரது இந்தியா. இப்போது புலிகள் மீதான தடை

நீட்டிப்புக்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் கடந்த 1992ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.