புலிகள் தமிழ் மக்களின் ஏக தலைமை அல்ல : மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

 

புலிகள் தமிழ் மக்களின் ஏக தலைமை அல்ல. அவ்வாறு கூறி வருவது புலிகளின் சொந்தக் கருத்தாகும்.” கொழும்பில் வெளிவரும் சன்டே ஒப்சேவர் ஆங்கில பத்திரிகைக்கு கடந்த வாரம் வழங்கியுள்ள பேட்டியொன்றில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இதனைக் கூறியிருந்தார். அந்தப் பேட்டியில்கடந்த இருபத்தைந்து வருட காலம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக் கூற வேண்டும்என்ற அவரது கூற்றுஇன்னும் ஏன் இந்த யுத்தம்என்ற கேள்வியை தமிழ் மக்களின் பொதுப்புத்திக்கு முன்வைத்து புதிய திசை வழியொன்றில் பதில் தேடுமாறு கோருகிறது. அரசியல் நோய்க்கூறு கொண்டஏக தலைமைஎனும் பாசிச அரசியல் தமிழ் மக்களைத் தொற்றி வியாபிக்கத் தொடங்கிய போது திருத்தந்தை இராயப்பு ஜோசப் போன்றோர் ஒரு முன் எச்சரிக்கை மணியை தேவாலயங்களில் ஒலிந்திருந்தால் இன்று அவரது கருத்துகள்ஒரு மெய்யான மேய்ப்பன் தொலைந்து போன ஆட்டுக்குட்டியை இருட்டில் தேடிய உழைப்புக்குசரிநிகராக மொத்தத் தமிழ் மக்களாலும் அவர்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல் தரப்பினராலும் மதிக்கப்பட்டிருக்கும்.

புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படும் விசேடபாஸ்நடைமுறையின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அரச படையினருடனான மோதலின் நடுவே பொது மக்களை இடைநிறுத்தி வைத்திருப்பதானது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயலெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் புலிகள் பலவந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கைப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் வடக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கும், மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டு கோள்விடுத்துள்ளது.

வன்னியிலும் வன்னியைச் சுற்றி மொத்தம் எட்டு களங்களில் நிகழும் யுத்தத்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி மாற்றுத் தங்குமிடங்களில் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகள் எதுவும் இல்லாது நிர்க்கதியாக மரணத்தின் விளிம்பில் உயிர் பிழைத்துக்கொண்டிருகின்றனர். அவர்கள் மரங்களின் கீழ் வெய்யிலிலும் மழையிலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பசியால் கதறி அழும் குழந்தைகள், மீளாத் துயரத்தில் பெற்றோர்கள், தள்ளாத முதுமை மற்றும் நோயுற்ற முதியோர்கள் என்றுயுத்தம்எல்லாத் தரப்பு மக்களையும் கையறுநிலைக்கு கொணர்ந்து சொல்லணா அவலத்திற்குள்ளாக்கியுள்ளது. யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் அவர்களை கிளிநொச்சியை நோக்கி குவியப்படுத்தி தமது இராணு வியூகங்களுக்குள் சிக்க வைக்காமல் அவர்கள் விரும்பும் பாதுகாப்பான இடங்களுக்கு சுயாதீனமாகச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வர விரும்பின் அதற்கு ஏதுவாய் அரச படைகள் குறிப்பிட்ட பாதைகளை அறிவித்து அப்பகுதிகளில் குறைந்த பட்சம் வாரத்தில் சில நாட்கள் குறிப்பிட்ட மணி நேரமாவது யுத்தத் தவிர்ப்பு நிலையை கடைபிடிக்க வேண்டும்.

 

 லிகள் தமிழ் மக்களின் ஏக தலைமை அல்ல. அவ்வாறு கூறி வருவது புலிகளின் சொந்தக்