புலிகள் தடை : அவுஸ்திரேலியாவுக்கும் கோரிக்கை

அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யவேண்டும் என்று அந்நாட்டு அரசை சிறிலங்கா அரசு கோரியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்திடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் அங்கமாக விடுதலைப் புலிகளை அந்நாட்டில் தடை செய்யவேண்டும் என்று அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன என்றும் அங்குள்ள விடுதலைப் புலிகளுக்கு சார்பான அமைப்புக்கள் புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்கா மக்கள் மத்தியில் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு, மக்களை பிழையாக வழி நடத்துகின்றன என்றும் அவுஸ்திரேலிய அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.