புலிகள் ஏன் தோற்றுப் போனார்கள் : மாவோயிஸ்ட் தோழர் கோவிந்தன் குட்டி

முன்னாள் மாவோயிஸ்டுக்களின் பிரதான உறுப்பினராகக் கருதப்பட்டவரும், பல ஆண்டுகள் pm2009-10சிறை வாசம் அனுபவித்தவரும், People’s March என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் கோவிந்தன் குட்டி கேரளாவில் அவரது இல்லத்திலிருந்த போது தொடர்புகொண்டோம். அவருடனான பதிவுசெய்யப்பட்ட நீண்ட உரையாடலின் முக்கிய பகுதிகளைத் தருகிறோம்.

இனியொரு: இலங்கை அரசியல் நிலை குறித்து உங்களது பார்வை என்ன?

கோவிந்தன்: இலங்கை சோவனிச அரசுகள் தொடர்ச்சியாக தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றன. அதின் மிக உச்சமான ராஜபக்ச அரசு அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்திருக்கிறது. இப்போது ஒரு பெரும் பகுதி மக்களை முகாம்களில் அவர்களது விருப்பிற்கு எதிராக அடைத்து வைத்திருக்கிறது. சிங்களக் குடியேற்றங்களை தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்டு அவர்களின் தேசியத்தைச் சீர்குலைத்து வருகிறது. இலங்கை சோவனிச அரசிற்கு எதிராகத் தமிழ் மக்கள் போராடுவது தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களின் போராட்டம் விடுதலைப் புலிகளின் தோல்விக்கான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு வெற்றிபெறும். இது வரலாற்று நியதி.

இனியொரு: விடுதலைப் புலிகளின் தோல்விக்கான அரசியல் காரணம் என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

dreamsகோவிந்தன்: இது தொடர்பாக மாவோயிஸ்ட் செயலாளர் கணபதி தெளிவான நேர்முகம் ஒன்றை வழங்கியிருக்கிறார். தெளிவான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான அரசியலை அடிப்படையாகக் கொள்ளாமையினாலேயே புலிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டனர். வெறுமனே ஆயுதங்களை நம்பிய போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆனால் இது முடிபல்ல. இத்தோல்வி தமிழ் மக்களுக்கு முன்னால் பல படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது. அவற்றிலிருந்து புதிய போராட்டம் முன்னெழும் அதற்கு இந்திய முற்போக்கு சக்திகளின் ஆதரவும் கிடைக்கும்.

இனியொரு: உலக மயம் புதிய உலக ஒழுங்கு விதி என்பனவெல்லாம் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவே?

கோவிந்தன் : அவையெல்லாம் ஏகாதிபத்தியங்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் சார்பான மாற்றங்களே.

இனியொரு : இந்தியாவில் மாவோயிஸ்டுக்கள் தோல்வியடைந்து விட்டார்களா?

கோவிந்தன் : இல்லை. இராணுவ ரீதியான சில பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்றாலும் அரசியல் ரீதியில் இந்திய அரசு நிலைகுலைந்து போயுள்ளது.

இனியொரு: மாவோயிஸ்டுக்கள் தளமாகக் கொண்டுள்ள மலைவாழ் பகுதிகளில் என்ன நடக்கிறது?

கோவிந்தன்: அங்குள்ள இயற்கை வழங்களையும், கனிமங்களையும், பெரு நிலப்பரப்புக்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுவதற்காக இந்திய அரசு அம்மக்கள் மீது home_pic_6தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதுதான் உண்மை. அதிலும் பல பிரதேசங்கள் இந்திய அரசின் நிர்வாக அமைப்புகளே முன்னர் இருந்ததில்லை.

93 thoughts on “புலிகள் ஏன் தோற்றுப் போனார்கள் : மாவோயிஸ்ட் தோழர் கோவிந்தன் குட்டி”

 1. புலிகள் பற்றி இந்த சாகசக்காரர்கள் விமர்சனம் செய்வதற்கு முன்னர் தம்மை பற்றி இவர்கள் சுயவிமர்சனம் செய்து கொள்வது தான் அவசியம். தமது தோல்விகளுக்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம். புலிகளின் அழிவுக்கு காராண‌ம் என்ன என்று இன்றைக்கு ஆய்வு செய்யும் இந்த சாகசவாத புரட்சிக்காரர்கள் தான் கடந்த காலத்தில் புலிகளை ஆதரித்தார்கள். இவர்களின் உண்மையான சிந்தாந்த லட்சணத்தை அறிய வேண்டுமா ? இவர்கள் பாசிச புலிகளை மட்டும் ஆதரிக்கவில்லை, கொள்ளைக்காரன் வீரப்பனை கூட ஆதரித்தார்கள்!!

  மாவோயிஸ்டுகள் தமது தவறான நடைமுறையின் காரணமாக இந்திய புரட்சியை தாமதப்படுத்தி உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய‌ தீங்கை இழைக்கிறார்கள். புலிகளின் பாசிச நடைமுறை எப்படி ஈழத்தில் மக்களை கொத்து கொத்தாக‌ காவு வாங்கியதோ அதே போல மாவோயிஸ்டுகளின் ஹீரோயிசமும் இந்திய மக்களை காவு வாங்கப் போகிறது.

  அரசும் போலிக் கம்யூனிஸ்டுகளும் இவர்களை காரணம் காட்டியே உண்மையான புரட்சிகர சக்திகளையும், மக்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அபாயமும் மாவோயிஸ்டுகளின் தயவால் நடந்து கொண்டிருக்கிறது.

 2. புலிகளைப் பற்றி வாய் திறக்க எவருக்கும் லைசன்ஸ் தேவையில்லையே.

  மாஓவாதிகளைப் பற்றி விமர்சிக்க விரும்பின் அதைக் கட்டுரையாகவே எழுதினால். பயனுள்ள விவாதத்துக்கு இடமுண்டு. இவ்விடம் அதற்குரிய களமாகாது.

  மாஓவாதிகளைப் பிற மார்க்ஸிய லெனினியவாதிகள் நியாயமான பல்வேறு காரணங்கட்காக விமர்சிக்கிறார்கள். ஆனால் அது பகைமையான விமர்சனமல்ல. அவ்வாறு இருப்பதும் கூடாது.

  மாஓவாதிகள் புலிகளைப் பற்றி வைத்திருந்த தவறான மதிப்பீட்டுக்கு ஈழத்திலிருந்து வந்த சில தொடர்புகளும் காரணமென ஊகிக்கிறேன். வேறு விதமான தவறான மதிப்பீடுகளும் பலரிடமும் இருந்து வந்து அவை படிப்படியாகவே திருத்தப்பட்டு வருகின்றன.

  1. மாஓவாதிகளைப் பிற மார்க்ஸிய லெனினியவாதிகள் நியாயமான பல்வேறு காரணங்கட்காக விமர்சிக்கிறார்கள். ஆனால் அது பகைமையான விமர்சனமல்ல. அவ்வாறு இருப்பதும் கூடாது.மாஓவாதிகள் புலிகளைப் பற்றி வைத்திருந்த தவறான மதிப்பீட்டுக்கு ஈழத்திலிருந்து வந்த சில தொடர்புகளும் காரணமென ஊகிக்கிறேன். வேறு விதமான தவறான மதிப்பீடுகளும்
   பலரிடமும் இருந்து வந்து அவை படிப்படியாகவே திருத்தப்பட்டு வருகின்றன.
   Nyayamana palveru karanangal enru neengal ezhudhiyiruppadhai vivarikkavum.

   Thavarana madhippeettirku eezhaththilirundhu vanda thodarbugalai patri theriyappaduththavum.

   Ungalukku evai ellam yar sonnadhu. 

   P.Govindan kutty

   1. “மாஓவாதிகள் புலிகளைப் பற்றி வைத்திருந்த தவறான மதிப்பீட்டுக்கு ஈழத்திலிருந்து வந்த சில தொடர்புகளும் காரணமென ஊகிக்கிறேன்” என்றேன்.
    நிச்சயமாகச் சரியான தகவல்கள் கிடைத்திருப்பின் விடுதலைப் புலிகள் பற்றிய நிலைப்பாடு கூடியளவு விமர்சனப்பாங்காக அமைந்திருக்கும் என்பது எனது மதிப்பீடு.
    மாஓவாதிகள் ஈழத்திலிருந்து வந்த தகவல்களை வைத்தே தமது முடிபுகட்கு வந்திருக்க முடியும் என்ற ஊகம் தவறாயின் ஏற்றுக் கொள்கிறேன்.
    மாஓவாதிகளின் மதிப்பீட்டுக்கான அடிப்படையை அறிய விரும்புகிறேன்.

    “வேறு விதமான தவறான மதிப்பீடுகளும் பலரிடமும் இருந்து வந்து அவை படிப்படியாகவே திருத்தப்பட்டு வருகின்றன” என்றதற்கு என் வாசிப்பே அடிப்படை. அதை இங்கு விரிவுபடுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன்.

    “மாஓவாதிகளைப் பிற மார்க்ஸிய லெனினியவாதிகள் நியாயமான பல்வேறு காரணங்கட்காக விமர்சிக்கிறார்கள்” என்பதை இங்கு விவாதிக்க நான் விரும்பவில்லை.
    “மாஓவாதிகளைப் பற்றி விமர்சிக்க விரும்பின் அதைக் கட்டுரையாகவே எழுதினால் பயனுள்ள விவாதத்துக்கு இடமுண்டு. இவ்விடம் அதற்குரிய களமாகாது” என்று ஏலவே எழுதினேன்.
    மாஓவாதிகளோ பிற மார்க்ஸிய லெனினியவாதிகளோ தவறுகட்கு அப்பபாற் பட்டவர்களுமல்ல. தவறுகளைத் திருத்த மறுப்பவர்களு மல்ல என்ற கருத்திலேயே அவற்றை எழுதினேன்.

    1. Thozhare,

     “மாஓவாதிகளைப் பிற மார்க்ஸிய லெனினியவாதிகள் நியாயமான பல்வேறு காரணங்கட்காக விமர்சிக்கிறார்கள்” என்பதை இங்கு விவாதிக்க நான் விரும்பவில்லை.

     Nyayamana palveru karanangalai patri enakku e mail vazhiyaga theriyapaduththa neengal thuniyavendum. ungal manadhil maththiram veithiruppadhu sariyillai … nyayamum illai.
     thavarugal mavovadhigal seidhalum veru yarenum seidhal thiruththappadavendum.
     nyayamana palveru karanangal endru neengal sollumpodhu adhaipatri theriyapaduththamal summa vayalappadhu sariyillai.
     மாஓவாதிகளின் மதிப்பீட்டுக்கான அடிப்படையை அறிய விரும்புகிறேன்.
     mavovadhigalin madhippeedu enpadhu ungaludaya karuththukkal pol oral karuththillai. thozhar ganapathikku kooda than sondha karuththai veliyida adhikaramum illai. anal neengalo nyayamana palveru karanangal endru mottaiyaga ezhudhivittu adhaipatri therivikkamal kuzhappangalai seigireergal.  

     P.Govindan kutty

 3. மாவோயிஸ்டுகளின் அரசியல் தவறுகள் குறித்து நாங்கள் ஏராளம் எழுதியுளோம். ஆனால் அவற்றுக்கெல்லாம் அந்த புரட்சியாளர்கள் இதுவரை பதில் சொன்ன‌தில்லை, ஏன் பதில் சொல்வதில்லை என்றால் அவர்கள் அரசியலை பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை அதாவது அதை அலட்சியம் செய்கிறார்கள் இதன் பொருள் அவர்கள் ஆயுதத்தை வழிபடுகிறார்கள், அவர்களை இராணுவவாதம் பித்தாட்டுகிறது என்பதே ஆகும். அதாவது புலிகளைப் போலவே.

  எமது ஒரு வெளியீட்டுக்கான சுட்டி கீழே உள்ளது வாசிக்கலாம்.

  மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்?
  : புதிய ஜனநாயகம் வெளியீடு
  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3634:2008-09-05-19-53-56&catid=183:2008-09-04-19-44-07&Itemid=109

 4. are you all saying because of maoist, you are not able to forward revolutionary struggles in tamil nadu. I do not think there is no logic in your writings!

 5. நான் கூறுவது வேறு விடயம்.
  கடடுரைகட்கோ நேர்காணலுக்கோ சம்பந்தமின்றிச் சம்பந்தப்பட்டவர் பற்றிய விவாதமாகவே பின்னூட்டங்கள் அமைவது நல்லதல்ல.
  இணையத்தளங்கள் விஷயச்சரர்பான விவாதங்களைப் பேசினால் படிப்பவர்கட்கும் பயனிருக்கும்.
  விவாதங்கள் வீணே திசைதிரும்பிப் போவதால் யாக்கு நன்மை?

  மாஓவாதிகளைப் புலிகளுடன் ஒரு விடயத்தை மட்டும் வைத்து ஒப்பிடுவது சரியாகப் படவில்லை. விடுதலைப் புலிகளின் வர்க்கச் சார்பே தவறானது.

 6. the life of one who suffers from the delusion of holding a transient thing as permanent will be despised.

 7. இதற்கு மேல் உங்களுக்கு என்னால் ஒன்றையும் சொல்ல இயலாது சிவா. நீங்கள் மிகப்பெரிய புரட்சியாளர்களாக கருதிக்கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளின் எதிர்கால நடைமுறைகளை நீங்களே கண்ணுற்று அவர்களைப் பற்றி எமது முடிவுக்கே வருவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இந்த விவதத்திலிருந்து இத்துடன் விலகுகிறேன்.

  நன்றி

  தோழமையுடன்
  சித்தார்தன்

  1. மாவோயிஸ்டுகள் சீரிய புரட்சியாளர்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்தோஅவர்கள் செய்வனவற்றை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டோ எதையும் நான் எழுதவில்லை.

   அவர்களை விடுதலைப் புலிகட்குச் சமன்படுத்துவதை மறுத்தும் விவாதங்கள் விஷயச் சம்பந்தமின்றி விலகும் அபாயத்தைச் சுட்டிக் காட்டியுமே எழுதினேன்.
   இதையே ஒரு விவாதமாக முன்னெடுக்கும் நோக்கமும் எனக்கில்லை. ஏனெனின் அது நான் அஞ்சுகிற திசையிலேயே உரையாடலைக் கொண்டு செல்லும்.

   1. நானும் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் ஒப்பிடத்தக்கவர்கள் என்று எங்கேயுமே கூறவில்லையே நண்பரே ? மாறாக அவர்களின் சாகசவாதம் கம்யூனிஸ்டுகளுக்குரியது அல்ல என்பதை தான் வலியுறுத்துகிறேன். ஒரே வரியில் சொல்வதெனின் குழந்தைகளுக்கு பெரியவர்கள் மிட்டாய் வாங்கிக்கொடுப்பதைப் போல‌ இவர்கள் மக்களுக்கு புரட்சியை பெற்றுத்தர கிளம்பியிருக்கிறார்கள். மக்களுடன் ஒன்றுகலக்காதவர்கள் புரட்சியாளர்களாக நீடிக்க முடியாது. பொறுத்திருங்கள், இனிவரும் காலங்களில் அனைத்தையும் நீங்களே காண‌ப்போகிறீர்கள்.

    1. Dear friend,

     History is the only proof we can submit. VIETNAM WAR 1945 to 1975 (10,000 day war) 
     Our view is based on experiences . 

     P.Govindan kutty

    2. Thozhargale,

     Charithrame satchi.

     Vietnamin Desiya Vidudalai Porattathin vetrigalin 1945-1975 (10,000 nal porattam) adipadayil ulla engalin karuththukkalai yarum kurai koora vaypillai. 

     P.Govindan kutty

     1. உங்கள் கருத்துக்களை யாரும் எதுவும் சொல்லமுடியாது தோழரே
      ஏனென்றால் நீங்கள் தானே
      Voice Of Theindian Revolution !!

      உங்கள் கட்சி முதலில் லெனினிய முறைப்படி
      இயங்குகிறதா ?
      உங்களுடைய செயல் தந்திரம் என்ன ?
      நாற்பதாண்டுகளாக நீங்கள் சாதித்தது என்ன ?
      பெற்றது அதிகமா இழந்தது அதிகமா ?

      அயிரக்கணக்கான தோழர்களை பலி கொடுத்திருக்கிறீர்கள்
      அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன ?

      முன்பு சீன புரட்சியை காப்பி அடித்தீர்கள்
      இப்போது வியட்நாமிய புரட்சியை காப்பி
      செய்கிறீர்களா ? இது நீங்கல் எக்காலத்திலும்
      உருப்படுவதற்கான வழியாக தெரியவில்லை!
      உங்கள் நாட்டில் உங்களுடைய சொந்த‌ ஆய்வின்படி
      (லெனின் கூறியதைப் போன்று) (Creative Revolution)
      படைப்பாக்க ரீதியிலான ஒரு புரட்சிக்கு தயாரிக்காமல்
      கோவிலை சுற்றி வருவதைப்போல‌ சீனா,வியட்நாம்
      என்று சுற்றி சுற்றி வருவதால் ஒருகாலும் உங்களால்
      புரட்சியை செய்ய முடியாது!
      ஆனால் இந்த நூற்றாண்டில் அவ்வாறான ஒரு படைப்பாக்க‌
      புரட்சியை முனெடுத்துச் செல்லும் நமது நேபாளா தோழர்களை
      பார்த்து நீங்கள் அது தவறான பாதை என்று விமர்சிக்கிறீர்கள்.
      இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது ??

      எல்லாம் இருக்கட்டும்,
      உங்கள் மீது நாங்கள் வைத்த விமர்சனங்களுக்கு நீங்கள்
      இதுவரை பதிலளிக்காம‌ல் அமைதி காப்பது ஏன் ?
      எமது கேள்விகளுக்கு என்ன
      பதில் ?

      http://supperlinks.blogspot.com/

     2. ஆமாம் தோழரே உண்க்களை யாரும் குறை
      கூற முடியாது தான் ஏனென்றால் நீங்கள் தானே
      Voice Of The indian Revolution !!

      உங்கள் கட்சி முதலில் லெனினிய முறைப்படி
      இயங்குகிறதா ?
      உங்களுடைய செயல் தந்திரம் என்ன ?
      நாற்பதாண்டுகளாக நீங்கள் சாதித்தது என்ன ?
      பெற்றது அதிகமா இழந்தது அதிகமா ?

      அயிரக்கணக்கான தோழர்களை பலி கொடுத்திருக்கிறீர்கள்
      அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன ?

      முன்பு சீன புரட்சியை காப்பி அடித்தீர்கள்
      இப்போது வியட்நாமிய புரட்சியை காப்பி
      செய்கிறீர்களா ?
      இது நீங்கள் எக்காலத்திலும்
      உருப்படுவதற்கான வழியாக தெரியவில்லை!

      உங்கள் நாட்டில் உங்களுடைய சொந்த‌ ஆய்வின்படி
      (லெனின் கூறியதைப் போன்று)
      (C r e a t i v e R e v o l u t i o n)
      ஒரு படைப்பாக்க ரீதியிலான புரட்சிக்கு தயாரிக்காமல்
      கோவிலை சுற்றி சுற்றி வருவதைப்போல‌ சீனா,வியட்நாம்
      என்று சுற்றி வருவதால் ஒருகாலும் உங்களால் புரட்சியை
      செய்ய முடியாது!

      ஆனால் இந்த நூற்றாண்டில் அவ்வாறான ஒரு படைப்பாக்க‌
      புரட்சியை முனெடுத்துச் செல்லும் நமது நேபாளா தோழர்களை
      பார்த்து நீங்கள் அது தவறான பாதை என்று விமர்சிக்கிறீர்கள்.
      இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது ??

      எல்லாம் போகட்டும்,
      உங்கள் மீது நாங்கள் வைத்த விமர்சனங்களுக்கு நீங்கள்
      இதுவரை பதிலளிக்காம‌ல் அமைதி காப்பது ஏன் ?
      எமது கேள்விகளுக்கு என்ன பதில் ?

     3. அயிரக்கணக்கான தோழர்களை பலி கொடுத்திருக்கிறீர்கள்அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன ?
      Thozhare,

      Puratchi enbaghu theneer virundhalla. Kasappana varga porattam.
      Thuagam seiyamal puratchi munnetra pathayil pogadhu.
      Aayirakanakkil thozhar mattum illai. irupatirku mel madhya kuzhu, manila kuzhu angaththinar thyagigalin iraththam sindhiya porattam. Grease illamal vandi odadhu. Adhpol thyagam seiyamal puratchi munnottu pogadhu.
      Parris commune mudhal, Russia puatchi, Cheena puratchi,, vetri tholvigalai patri aaraindhu karuththu koora ella arasiyal katchigalukkum avakasam undu. Maoist katchi puligalin tholvi kuriththu avar karuththinai theriviththanar.. Ungalaludaya karuththukkalai patri enakku theriyadhu theriya viruppamum illai. karanam ungaludaya thozhile idhumadhirithan. Puratchiye seiyathavargal Maoistugal eppadi puratchi seiyavendum endru vayalandukonde iruppeergalgale thavira puratchi seiya matteergal. Nammudaya vimarsanangal ulagil ulla thamizhargal parkirargal. Thozhare, podhumakkal muttalgalillai.
      Pa.Chidambaram kooda oriru gattaththil Maoistugala Bayangaravadhi endru solvadhil sariyillai endru oppu kondullar. Aanal neengalo ……..
      Neengal ularikkonde irungal. ini engalidam pathil illai.

      P.Govindan kutty 

  2. வலது சந்தர்ப்பவாத நிலையிலிருந்து விமர்சனம் செய்யும் போது உங்கள் உரை எடுபடாது. புதிய ஜனநாயக வெளியீடு என்று குறிப்பிட்டிருப்பதால் அந்த அரசியலை முன் மொழிகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

   நேபாளின் இதுவரையில் அரசியல் சரணடைவை விமர்சிக்காத நீங்கள், குறிப்பாக நிலப்பிரபுத்துவத்தையும், தரகுமுதாளித்துவத்தையும் பிரதிநிதிதுவப் படுத்துகிற இராணுவத்தையும், அரசியல் கட்சிகளையும் நட்பு சக்தியாக பார்த்து அவர்களிடம் தஞ்சம் புகுந்து அனைத்தையும் கைவிட்டவர்களை பார்த்து நேபாள் புரட்சி ஏன் தோல்வி அடைந்தது என்றோ, அதற்கு அங்குள்ள மாவொயிஸ்டுகளை காரணமாக்காமல், ஈழத்தில் நடந்த தோல்விக்கு புலிகளை காரணமாக்குவதும் ஒவ்வொருன்றுக்கும் போராடுபவர்களை காரணமாக்குவதும் எதிரிகளை விட போராடுபவர்களையே நீங்கள் பகைவர்களாகவும் பார்க்கிறீர்கள். இராணுவ சரணடைவை விட அரசியல் சரணடைவு என்பது சந்ததிகளையே மலட்டாக்குவது.

   இராணுவ சாகசத்தை எதிர்த்து பேசுவதாக நினைத்துக்கொண்டு, வலது சந்தர்ப்பவாதத்தின் மொத்தத்திலும் வீழ்ந்துகிடக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

   அரசியலாக சொல்லவேண்டுமானால் போராடுபவர்களை அவர்கள் குட்டிமுதலாளித்துவ வர்க்கமாக இருந்தாலும் அவர்களை பாசிஸ்டுகள் என்பதும் அவர்களை நிபந்தனையுடன் ஆதரிப்பதை சித்தாந்த பிழை என்று கூறும் நீங்கள், அதே போல் உள்ள நேபாளில் இராணுவத்துடனேயே ஐக்கியம் பேசுவதும், அங்குள்ள இதுவரையில் மக்களை ஒடுக்குவதற்கு துணைபோய்க் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ, தரகுசக்திகளிடம் ஐக்கியம் கட்டுவதும், இனி எக்காரணம் கொண்டும் ஆயுதப் போராட்டம் இல்லை பல்கட்சி ஆட்சி முறைதான் என்று கூறும் வலது சந்தர்ப்பவாத நிலையை நீங்கள் விமர்சனமே செய்யாததும். வலது என்றால் நண்பன் இடது என்றால் என் முதல் எதிரி என்கிறீர்கள். உங்கள் விமர்சனத்தில் நட்பு முறன் இல்லை. பகைமுரணே வியாபித்திருக்கிறது.

   பயங்கரவாதம் என்பது ஏதோ இவர்களால்தான் முளைத்தது என்பது போல் எழுதுகிறீர்கள். போராடுபவர்களின் பயங்கரவாதம் என்பது ஆளும் வர்க்கத்தின் பயங்கரவாதத்தின் எதிர்வினை என்பதை மறந்து இடது விலகலை வலது விலகல் நிலையிலிருந்து விமர்ச்னம் செய்ய வேண்டும்.

   இறுதியாக வலது விலகல் என்பது ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வது.
   இடது விலகல் என்பது மக்களை ஒன்று சேர்வதற்கு தடையாக இருத்தல்.

   இதில் ஒடுக்கப்படுபவர்கள் ஒன்று சேர தடையாக இருக்கிறது என்ற விமர்சனத்தைவிட ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் கருத்து மிகவும் ஆபத்தானது.

   புலிகளின் மீதான விமர்சனம் என்பது மக்களை திரட்டுவதற்கு எந்தளவு தடையாக இருந்தது என்ற விமர்சனம் வேறு, அதையே அனைத்து தோல்விக்கும் இன்று மக்கள் இனபடுகொலைக்கு புலிகள் மட்டுமே காரணம் என்ற விமர்சனம் வேறு. இவை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நீங்கள் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேனே என்றி வள்ளலாராகத்தான் இருக்க முடியும். போராளிகளை அவமானம் படுத்தியதுதான். மீண்டும் ஒரு சவாலே விடுகிறேன். விடுதலைப் புலிகள் உருவாகிவந்த நேரத்தில் இந்திய உளவு படைக்கு விலைபோகாதா விடுதலைப்புலிகளைத் தவிர வேறு யார்?

   இன்னும் சில மார்க்சிய அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம், இனப் படுகொலை நடந்துக்கொண்டு இருக்கும்போது அதற்கு தீர்வை வைக்காமல் சாதிப் பிரச்சனையை பிரதானப் படுத்தி இயக்கம் எடுத்தார்களே அது அரசியல் பிழை இல்லையா.

   ஒன்று நீங்கள் மார்க்சிய நிலையிலிருந்து விமர்சனம் செய்வதாக இருந்தால் தேசிய இனப் பிரச்சனை குறித்து லெனினியம் என்ன சொல்கிறது என்பதையோ, வரலாற்றில் அது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்த்திருக்கிறது என்பதை பற்றியோ, இன்று அந்த லெனினியம் பொருந்துமா பொருந்தாதா என்பதையோ விளக்குங்கள்.

   முரண்பாடே தனி ஈழம் ஏற்கிறீர்களா இல்லையா, இல்லை இந்த இன முரண்பாட்டுக்குத் தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையா (விரும்பினால் பிரிந்துபோகும் உரிமை மறுத்து). இதுதான் அரசியல் பிரச்சனை இதிலிருந்துதான் யார் உடன்நிற்பவர், யார் நட்பு சக்தி யார் காட்டிக் கொடுக்கும் துரோகி, யார் ஓடுகாலி, யார் பகைவன் என்பதை விவாதம் செய்யமுடியும்.

   மொட்டையாக அரசியல் பிழை என்பதை வைக்காதீர்கள். அதன் தொடக்கமே மேற்கண்டவாறு கூறியதுதான். அதைவிடுத்து வேறு விஷயங்களை விவாதிப்பது திசைதிருப்பலே. கல்லை கோனியில் கட்டி அடிப்பதுதான்.

 8. //./உங்கள் மீது நாங்கள் வைத்த விமர்சனங்களுக்கு நீங்கள்
  இதுவரை பதிலளிக்காம‌ல் அமைதி காப்பது ஏன் ?
  எமது கேள்விகளுக்கு என்ன பதில் ?
  //
  உண்மையான புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகளையும் ரஜாகரன் போன்ற 25 ஆண்டு புரட்சி வரலாற்றைக் கொண்டவர்களையும் விமர்சிப்பதே மருதையன் – இனியொரு குழுவின் தொழிலாகப் போய்விட்டது. உங்களைப் பற்றி மற்றவர்கள் வைத்த விமர்சனத்திற்கு என்ன பதில்?

 9. //உங்கள் கட்சி முதலில் லெனினிய முறைப்படி
  இயங்குகிறதா //

  //உங்கள் நாட்டில் உங்களுடைய சொந்த‌ ஆய்வின்படி
  (லெனின் கூறியதைப் போன்று)
  (C r e a t i v e R e v o l u t i o n)
  ஒரு படைப்பாக்க ரீதியிலான புரட்சிக்கு தயாரிக்காமல்//

  லெனினிய முறைப்படி என்ற கருத்தாக்கத்தை கூறியதாலும் நேபாள் கட்சி படைப்பாக்கப் புரட்சி செய்கிறார்கள் அவர்களை விமர்சிக்காலாம என்று எழுதியதிலிருந்து சில கேள்விகள்.

  ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியத்தின் 5 அடிப்படை அம்சங்களை அவர்கள் ஏன் காலாவதியாகிவிட்டது இன்று பொருந்தாது என்று கூறினார்கள். காவுத்ஸ்கியின் வாதத்தை ஏன் தூக்கிப்பிடிக்கிறார்கள்.
  அமெரிக்க தலைமையில் அனைத்து ஏகாதிபத்தியங்களும் அணிவகுத்து விட்டதால் இனி சிறிய நாடான நேபாளில் மட்டும் ஆயுதப்புரட்சி என்பது சாத்தியமில்லை இனி ஆசியா முழுவதும்தான் புரட்சி என்று கூறுகிறார்களே அது எந்த லெனினியம் (டிராட்சிகிசம்)
  ஆதாரம்: January 2006 Information Bulletin & International Dimensions of Prachanda Path-Basanta

  அரசு பற்றிய லெனினிய தத்துவத்திலிருந்து மாறி ஒரு வர்க்க அரசை தூக்கியெறிய அதே வர்க்கத்தை பிரதிநித்துவப் படுத்துகிற அரசோடு கூட்டு சேர எவ்வாறு முயன்றார்கள்.

  பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இனி பொருந்தாது என்றும் பலகட்சி ஆட்சி முறைதான் இனி சரியான ஜனநாயகத்திற்கு பொருந்தும் என்றும் இதுதான் புதிய ஜனநாயக புரட்சி என்றும் ஹிந்து பத்திரிக்கையில் பிரசந்தா பேட்டி கொடுத்தாரே அது எந்த லெனினிய வரையரை.

  லெனின் கூறினாரே காலாவதியாகிவிட்ட பாராளுமன்றத்தின் மூலமே (அம்பலப்படுத்தலுக்காக செயல்தந்திர ரீதியாக பாராளுமன்றத்தை பயன்படுத்துவதை அல்ல) சமூகத்தின் அடித்தளத்தை மாற்ற முடியும் என்று உண்மையிலேயே செக்குமாடாக மாறியது எந்த லெனினியம்? சட்டத்தின் மூலம் அனைத்தும் மாற்ற முடியும் என்று உங்களின் படைப்பாக்கம் மிக்க லெனினியக் கருத்தின் படி சாத்தியம் என்று கருதுகிறீரா? அதையே லிக்யூடேசனிசம் (கலைப்புவாதம்) என்று முன்பு சொன்னார்களே
  (ஆதாரம்: மார்க்சியவாதியாக இருந்தபோது எழுதிய புத்தகம்: Problem and Prospects of Nepal Revolution – Published by Nepal Maoist)

  இராணுவத்தை கலைத்து புதிதாக ஐக்கியப்படுத்துவது என்பது இராணுவம் போலீஸ் ஒரு வர்க்கத்தின் கருவி என்று லெனினியத்தை மறுத்து கூறுகிறார்களே அது எந்த மார்க்சியம். இராணுவம் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படும் என்று ஒரு மாயையை நீங்களும் ஏற்பீர்கள் என்றால் சிபிஎம் வழியை பின்பற்றுங்கள் அவர்களை விமர்சனம் செய்யாதீர்கள்.

  மன்னர் ஒழிப்பே நிலப்பிரபுத்துவ ஒழிப்பு என்று அரசுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள சின்ன (முதலாளித்துவ வாதிகள் புரிந்து கொள்ளும்) வேறுபாடுகூட அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பதும் உங்கள் மொழியில் சொல்லவேண்டுமானால் படைப்பாக்க புரட்சி என்று சொல்வதும் நல்ல விளையாட்டு நேபாள் மக்களை வைத்து.

  இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் உண்மையான போராளிகள் இலலை என்று விடுதலைப் புலிகளுக்கு கூறிவிட்டு அதையே நேபாளில் செயல் ரீதியாக இங்குள்ள ஆட்சியாளர்களிடம் மட்டுமில்லை இங்குள்ள எதிர்க்கட்சிகளையும் பி.ஜே.பி.யையும் சந்தித்து பேசிவிட்டு போயிருக்கிறார்களே எந்த அடிப்படையில். ஒரு வேளை படைப்பாற்றல் புரட்சி கொள்கையுடைய நேபாளுக்கு பொருந்தாதோ.

  இவையெல்லாவற்றையும் விட இன்னும் புரட்சி பாக்கி இருக்கிறது இது ஒரு இடைக்கட்டம் என்று கூறும் ஏமாற்றுவித்தை தெரிந்தாலும் ஒன்றை அப்பட்டமாக மீறி இருக்கிறார்கள். அது வெளிப்படையான கட்சி. இதுவரையில் அரசியல் சுதந்திரம் அற்ற ஒரு நாட்டில் வெளிப்படையான கட்சியாக மொத்தமாக மாற்றியமைத்துவிட்டு யாரை வைத்து இனி புரட்சி செய்வதாக கூறப்போகிறார்கள். இது படைப்பாற்றல் புரட்சிகொண்ட உங்களைப் போன்ற மிகப்பெரிய சர்வதேசியவாதிகள் அறிவைகொண்டவர்களுக்கு மட்டுமே புரியும்.

  நீங்கள் சொன்ன சாகசவாதம் கூட விமர்சனமாக வைக்கலாம் மாவோயிஸ்டுகளுக்கு. அது அவர்கள் பதில் சொல்லட்டும். நீங்கள் உங்கள் வலது சந்தர்ப்பவாத கருத்தினை வைத்துக்கொண்டு யாருக்கு காத்திருக்கிறீர்கள். ஒரு வேளை இன்றைய லெனினாக அவர்கள் மொழியில் பிரசந்தா வழியாக உங்களுக்கு ஏற்றுக்கொண்டிருந்தால் தயவு செய்து அதை வெளிப்படையாக நீங்கள் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.

  அரசியலை விட்டுவிட்டு வெறும் வழியை மற்றும் பேசுவது போகாதா ஊருக்கு வழி பற்றி விவாதிக்கிறீர்கள் என்பது திண்ணம்.

  1. நேபாள புரட்சியை ஒரு முழுமையான‌ படைப்பாக்க புரட்சி என்று குறிப்பிட்டதை தவறு என்று ஏற்றுக்கொள்கிறேன். பிரச்சண்டா பாத் துவங்கி அவர்களுடைய பல்வேறு தவறுகளையும் எமது தரப்பிலிருந்து அவர்களுக்கு விமர்சனமாக வைத்திருக்கிறோம், அதே வேளையில் அவர்கள் உங்களைப்போல சம்பிரதாயப் புரட்சியாளர்களாக இல்லை என்பதையும் நாங்கள் அறிவோம். புரட்சியின் பயணத்தில் அவர்கள் இதுவரை எதிர்கொண்டுள்ள இடர்களில் நூற்றில் பத்து சதம் கூட‌, மக்களை அரசியல்படுத்துவதற்கு முன்னரே மக்களுக்காக‌ புரட்சி செய்ய குதித்துவிட்ட நீங்கள் எதிர் கொள்ளவில்லை என்பது எமது கருத்து. நேபாள தோழர்களிடம் பல்வேறு தவறுகள் இருக்கின்றன ஆனால் அவற்றையெல்லாம் மக்களை சார்ந்து நின்று புரட்சியை முன்னெடுக்கும் தமது நடைமுறையினூடாக அவர்கள் களைந்து கொள்வார்கள். ஆனால் உங்களிடம் சில சரியான வரையறைகள், முடிவுகள் இருக்கலாம் ஆனால் அவை மக்களிடமிருந்து விலகி நிற்கும் உங்கள் நடைமுறையின் விளைவாக தவறுகளின் பக்கம் சாயலாம், உங்களுடைய‌ சரியான முடிவுகளை கூட நீங்கள் கைவிடக்கூடும். அப்போதும் அவற்றை நீங்கள் சரி என்று கருதலாம்.

   உங்களுடைய கடந்த கால நடைமுறையில் இதற்கு பல உதாரனங்கள் உண்டு.

   1. //நீங்கள் சொன்ன சாகசவாதம் கூட விமர்சனமாக வைக்கலாம் மாவோயிஸ்டுகளுக்கு. அது அவர்கள் பதில் சொல்லட்டும்.//

    மேற்கண்ட வரியினை படித்திருப்பீர்கள் என்றால்

    //மக்களை அரசியல்படுத்துவதற்கு முன்னரே மக்களுக்காக‌ புரட்சி செய்ய குதித்துவிட்ட நீங்கள் எதிர் கொள்ளவில்லை என்பது எமது கருத்து.//

    மேற்கண்ட வரியில் நீங்கள் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கமாட்டீர்கள்.

    மீண்டும் கூறுகிறேன். அவர்களுடைய இடது விலகலை பற்றி நீங்கள் விமர்சித்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் வலது சந்தர்ப்பவாதத்திற்கான அனைத்து சிந்தனையையும் வைத்திருக்கிறீர்கள் என்பதைத் தான் சுட்டியிருக்கிறேன். ஏன் என்றால் அரசியல் விலகலை நடைமுறை செயல்தந்திரத்தை விட குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.

    அவர்கள் அரசியலை அடிப்படை மார்க்சியத்தை தூக்கியெறிந்துவிட்டார்கள் என்பதுதான் எனது கருத்து. இவர்கள் மார்க்சிய அடிப்படை அரசியலை விட்டு விலகவில்லை. ஆனால் செயல்தந்திர ரீதியிலான பிழையை செய்கிறார்கள் என்பதுதான் எனது கருத்தும். இதை மாற்றியமைக்க முடியும். சுயவிமர்சனம் செய்து இவர்கள் சரியானதை மற்றவர்களுக்கு வழிக்காட்ட வாய்ப்பிருக்கிறது.
    ஆனால் நேபாள் நிலையோ வேறு. அவர்கள் மார்க்சிய அரசியலிலிருந்தே விலகிபோய்கொண்டிருப்பதால் இது மிகவும் ஆபத்தனாது. உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டியது என்பதை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மக்களை சார்ந்து என்று கூறுகிறீர்கள். மக்களையே இவர்களின் தவறுகளிலிருந்து மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். அதை மறந்துவிட்டால், மாபெரும் ரஷ்ய புரட்சியின் வீழ்ச்சியினை புரிந்துகொள்ள முடியாது, மாபெரும் சீனப் புரட்சியின் வீழ்ச்சியினைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் எல்லோருமே மாபெரும் மக்கள் திரளினை மூடுவிழா நடத்தும் வரை சார்ந்துதான் அனைத்து மார்க்சியத்தையும் ஒழித்துக்கட்டினார்கள். குருச்சேவின், டெங்கின் அனைத்து கருத்தினையும் மீண்டும் கவனித்தில் கொள்ளுங்கள். முன்பு ஒரு காலத்தில் சரியாக இருந்தர்கள் என்பதை வைத்தே நீஙக்ள் ஏமாந்தீர்கள் என்றால். முதலாளித்துவ மீட்சியை, நிலபிரபுத்துவ மீட்சியை, தரகுமுதலாளித்துவ மீட்சியை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள். இதுதான் இன்னும் நீங்கள் வலது திரிபுவாத சேற்றில் ஆழமாக ஊன்றி நிற்பதற்கு ஆதாரமாக மாறியிருக்கிறது. உங்கள் சிந்தனையை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் சீர்திருத்தவாத நிலைக்கு சிறுத்துபோவதைத் தவிர வேறு நிலை இல்லை என்பதாகிவிடும்.

  2. நேபாளத்தில் மாவோயிஸ்ட் தோழர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் அதை தகர்த்தெறிந்து முன்னேற‌ அவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் சரியானவை என்பதை விவரிக்கும் இரு கட்டுரைகள் கீழே.

   நேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்.
   http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2040:2008-07-02-20-23-35&catid=68:2008&Itemid=27

   நேபளாம்: சதிகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின அரசியல்; உத்தி.
   http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=996:2008-04-28-20-14-38&catid=36:2007&Itemid=27

   1. நீங்கள் கொடுத்த லிங்கில் ஒரு கட்டுரையும் ஒரு பேட்டியும் இருக்கிறது. இதில் எந்த இடத்திலும் நான் கேட்ட அடிப்படை கேள்விகளுக்கும் பதில் இல்லை. மீண்டும் புரிந்துக்கொள்ள தொகுத்துக் கேட்கிறேன்.
    அரசு பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் உங்கள் கருத்து என்ன? தேர்தலில் பங்கேற்று அரசமைப்பு அமைப்பதும், மாற்றுவதும் அரசு கட்டமைப்பையே மாற்ற முடியுமா? அவர்கள் மாற்ற முடியும் என்று அந்தக் கட்டுரையில் வாதிடுகிறார்கள். நேபாளம் போன்ற மன்னராட்சி உள்ள நாட்டிலேயே அவ்வாறு சாத்தியம் என்றால் அதை இந்தியாவுக்கும் சாத்தியம் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இது அரசு பற்றிய லெனினிய தத்துவத்துகே வேட்டுவைப்பது.

    ஆயுதப் போராட்டம் இப்போது சாத்தியமில்லை என்கிறீரா? இல்லை எப்போதுமே சாத்தியமில்லை என்கிறீரா? உங்கள் கருத்தை தெரிவிக்கவும். அவர்களைப் பொருத்தவரையில் அந்த பேட்டியில் இனி எப்போதும் தேவையில்லை என்பதை ஒட்டியே கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். ஏன் என்றால் மீண்டும் மக்களைத் திரட்டி அதே நிர்ணய சபைக்கான தேர்தலில் பெரும்பான்மையை பெருவது பற்றிதான் அவர்கள் நோக்கம் வெளிப்படுகிறது.

    இவற்றிற்கெல்லாம் மூலமாக காலாவதியாகிவிட்ட பாராளுமன்றம் என்று லெனின் வரையருக்கிறாரே அதைப்பற்றி உங்களுடைய வரையரை என்ன? அதை அம்பலப்படுத்தும் மேடையாக மட்டுமே பாராளுமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்றாரே அதைப் பற்றி அந்தக் கட்டுரையில் பதில் இல்லை, உங்களிடமும் பதில் இல்லை. இவர்கள் அதன் மூலமே மாற்றமுடியும் என்று கூறுகிறாரே அதைப்பற்றி கள்ள மவுனம் சாதிப்பதேன்.

    மார்க்சிய லெனினியம் ஏகாதிபத்திய வரையரையும், அரசு பற்றிய வரையரையும், பாராளுமன்றம் குறித்த வரையரையும் 21ம் நூற்றாண்டுக்குப் பொருந்தாது என்கிறார்களே? உங்களுடைய கருத்தும் அவ்வாறுதானா? பகிரங்கமாக சொல்லுங்கள். ஆதாரம் ஏற்கெனவே இரண்டு கட்டுரைகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

    பாட்டளிவர்க்க சர்வாதிகாரம் பொருந்தாது என்றும் இனி பலகட்சி ஆட்சிமுறைதான் வழி என்றும் அதில்தான் போட்டி வளரும் என்றும் உற்பத்தி சக்திகள் வளரும் என்றும் கூறுகிறார்களே இதைத்தான் சரியான யுக்தி என்கிறீர்களா. நன்று உங்கள் புதிய கண்டுபிடிப்பு மார்க்சியம்.

    நேபாளில் ஆட்சியில் பங்கேற்பதற்காக முயற்சித்த நாள் முதல் இன்று வரையில் எந்த இடத்தில் அவர்கள் நிலச்சீர்திருத்தம் செய்தார்கள். (முன்னமே செய்ததையும் கைவிட்டுவிட்டார்கள்).

    //ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ், 3000 ஆயுதங்களை வைத்துக் கொண்டு 30,000 படைவீரர்களை முகாம்களில் முடக்கி வைக்கவும் ஒப்புக் கொண்டது.// புதிய ஜனநாயகம், நவம்பர் 2007.

    இது நீங்கள் லிங்க் வழங்கிய கட்டுரையின் வரிகள்.

    //தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.// புதிய ஜனநாயகம், ஜூலை 2008

    இதில் நிலப்பிரபுத்துவம் தூக்கியெறிப்பட்டதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் அரை நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவமாக மாறிவிட்டது என்கிறார்க்ளா? இந்தியா மன்னராட்சியை என்றோ தூக்கியெறிந்துவிட்டது. அப்படி என்றால் இந்தியா முதலாளித்துவ நாடு என்று பொருள். ஜப்பானில் இன்னும் மன்னர் உண்டு, பிரிட்டனில் இன்னும் மன்னர் உண்டு (சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டது). அப்படி என்றால் அங்கு இன்னும் நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்படவில்லை என்பதுதான் உங்கள் விளக்கம். சரிதானே?

    அதைவிட முக்கியமாக எனக்கு எழும் கேள்வி என்ன என்றால்? அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் உள்ள நேபாளம், என்று கூறிய அவர்களே, இன்று அதன் பிடியிலிருந்து விடுதலைப் பெற்று மன்னராட்சியைப் பெற்று சுதந்திரம் மலர்ந்துவிட்டது என்று கூறுகிறீர்களா? அதை ஏற்கிறீர்களா? நேபாளில் உள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவத்துக்கு மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. இனி அங்கு பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. சரிதானே? இப்போது உள்ளதெல்லாம் மிச்சசொச்சம்தான், அதன் பாதிப்புதான். சரிதானே?

    நன்று நன்று உங்கள் சிந்தனை? ஆம் இந்தியா முதலாளித்துவ நாடு, அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடு, சரிதானே?

    இத்தனை கேள்விகளுக்கும் என்னால் விடையை உங்களிடமிருந்து பெறமுடியவில்லை. கலைஞர் போல் கேட்டக் கேள்விக்கான பதிலை என்றும் கொடுப்பதில்லை என்பதில் சிஷ்யராக இருக்கிறீர்கள். ஆரோகியமாக நேரடியாக பதில் வைத்து விவாதியுங்கள். அன்பரே, நண்பரே.

 10. நாங்கள் எல்லாரும் மற்றவர்கள் எப்படித் தங்களது புரட்சிகளை நடத்த வேண்டும் என்று சொல்வதில் நிபுணர்களாக இருக்கிறோம்.

  இந்தியாவிற்குள்ளேயே எல்லா மாநிலங்களிலும் — ஏன் ஒரு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே விதமான மூலோபாங்களைப் பயன்படுத்த முடியாது.
  குறிப்பான சூழ்நிலைகட்கேற்ப ஓரு போராட்டம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
  அது ஓரு புரட்சிகர இயக்கம் எடுக்கவேண்டிய முடிவு.

  எதை எங்கே எப்படி விமர்சிப்பது என்பதில் தோழமைக் கட்சிகளிடையே சில கட்டுப்பாடுகள் தேவை. அது இல்லாத போது நட்புச் சக்திகள் பகைமையானவையாக மாறலாம்.

  நக்சல்பரி இயக்கம் “சீனாவின் தலைவர் எங்கள் தலைவர்” என்ற கோஷத்தை எழுப்பியபோது; இலங்கைத் தோழர் சண்முகதாசன் அது தவறு எனச் சுட்டிக்காட்டினார். சீனக் கட்சித் தோழர்களும் அத் தவற்றைச் சுட்டிக் காட்டினர்.
  ஆனால் அங்த விமர்சனங்கள் கட்சிக்குள்ளும் கட்சிக்கும் கட்சிக்கும் இடையிலுனமான கருத்துப் பரிமாறலாக நடந்தனவே ஒழியப் பத்திரிகை விவாதமாக அல்ல. விமர்சனங்கள் ஆக்கமாகவும் நட்பாகவும் இருந்தது போக ; எந்தக் கட்சியும் மற்றக் கட்சி தனது புரட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்று வழிநடத்த முற்பட்டதில்லை.
  இவை நல்ல நடைமுறைகள்.

  இங்கே எந்த விதமான நடைமுறை அரசியற் செயற்பாடும் அற்றவர்கள் மற்றவர்களை நோக்கிக் குற்றஞ் சாட்டுவது சற்றே அதிகமாக உள்ளது.
  இயங்குகிற தோழர்களும் இந்த வெறும் வாய்கள் மெல்லுவதற்கு அவலை வழங்குவது தான் வருந்தத் தக்கது.

  1. //எதை எங்கே எப்படி விமர்சிப்பது என்பதில் தோழமைக் கட்சிகளிடையே சில கட்டுப்பாடுகள் தேவை. அது இல்லாத போது நட்புச் சக்திகள் பகைமையானவையாக மாறலாம்.//

   நீங்கள் பேசுவதெல்லாம் செயல்தந்திரப்பிரச்சனைத்தான் அல்லது போர்த்தந்திர பிரச்சனையாகவும் இருக்கலாம்.

   ஒன்று மறுக்கக் கூடாது. அதாவது நேபாள் சரியான படைப்பாக்க புரட்சி எடுக்கிறது என்று சர்ட்டிபிகேட் பகிரங்கமாக மக்கள் தளத்தில் கொடுக்கக் கூடாது. தவறானதை சுட்டிக்காட்டுவதற்கு உரிமை இருக்கும்போது அதை மறுத்து சரியானதை சுட்டிக்காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இன்னொரு விமர்சனம்

   //எந்த விதமான நடைமுறை அரசியற் செயற்பாடும் அற்றவர்கள் மற்றவர்களை நோக்கிக் குற்றஞ் சாட்டுவது சற்றே அதிகமாக உள்ளது.//

   சராசரி மக்களுக்கு தங்களுக்கு தெரிந்த அளவிலிருந்து சரி தவறை சுட்டிக்காட்டலாம். ஆனால் அது அரசியல் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை.

   இதையெல்லாம் விட அடிப்படை மார்க்சியத்தை கேள்வி எழுப்புபவர்களை எதிர்த்து மார்க்சியத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்க உரிமை உண்டு. நான் எழுதியவற்றுள் தனிநபர்களைப் பற்றிய எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அனைத்தும் அடிப்படை மார்க்சியம் பற்றியும் அரசியல் பற்றியும் மட்டுமே. இரண்டு கட்சிகளுக்கிடையில் நடைபெறும் இயக்கப் போக்கு பற்றிய விமர்சனம் அல்ல. இது உலகு தழுவிய விமர்சனம்.

   நேபாள் கட்சியில் அவர்கள் சொன்னதை ஒன்றை விட்டுவிட்டேன். அதாவது இது நேபாளுக்கானது மட்டுமில்லை அது உலகுதழுவியது ஏன் என்றால் இது இயக்கியவியல் வரலாற்று பூர்வமானது விஞ்ஞானமானது என்று கூறுகிறார். அப்படி என்றால் அதை விமர்சிக்க கூடாதா.
   ஆதாரம்: International Dimensions of Prachanda path – Basanta

   மாவோ மாபெரும் விவாதத்தில் கோர்பச்சேவ் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் திரிபுவாதத்தைப் பற்றி பேசுவதை மூக்கை நுழைக்கிறார் என்கிறீர்களா. அதை எதிர்த்து பேசியது எதனடிப்படையில். மார்க்சியத்தை சமரசம் செய்துகொண்டு நட்பை பாராட்ட முடியாது. இங்கு கொள்கையில் சமரசம் கிடையாது. பழகுவதில் வேண்டுமானாலும் சமரசம் இருக்கலாம்.

   இதையெல்லாம் தெரிந்தும் நீங்கள் ஏன் காப்பாற்ற முனைகிறீர்கள். அவர்கள் மார்க்சிய அடிப்படையையே தூக்கியெறிவதை நிறுத்தினால், நாம் ஏன் அவர்களை விமர்சனம் செய்யப்போகிறோம். நீங்கள் அவர்கள் கருத்தில் உடன்படுகிறீர்களா என்பதை முதலில் சொல்லிவிட்டு உங்கள் கருத்தை தொடருங்கள். அதுதான் உங்களுடன் விவாதிக்க ஆரோகியமாக இருக்கும்.

   1. //மாவோ மாபெரும் விவாதத்தில் கோர்பச்சேவ் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் திரிபுவாதத்தைப் பற்றி//

    இதில் கோர்பச்சேவ் என்று குறிப்பிட்டது தவறு. அதை குருச்சேவ் என்று திருத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும்.

  2. நான் எனக்குத் தெரிந்த நல்ல நடைமுறைகளைச் சென்னேன்.
   விமர்சனங்களைக் கட்டுப்படுத்துமாறோ தவிர்க்குமாறோ சொல்லவில்லை.

   ஒவ்வொருவரும் அவரது அறிவுக்கும் அனுபவத்துக்கும் அமைய.
   எனது அணுகுமுறையே சரி என்று நான் வற்புறுத்த மாட்டேன்.
   அதைக் கருத்திற் கொள்ள யாரும் யாரும் விரும்புவது பற்றிப் பெருமைப் படவும் மாட்டேன்.மறுப்பது பற்றி வருந்தவும் மாட்டேன்.

   1. Thozhargale,

    Podhumakkal mukhyamaga ulagil ulla ella Thamizhargalum muttalgal endru ninaika vendam. Avargal arivar yar puratchi seigirargal yar puratchi seiyamal vayalakkirargal. Ivargaludaya uralugalku pathil koduppadharku othukkum neraththai maoistugal veenakkamal puratchiyai varkavum

    P.Govindan kutty

 11. இனியொரு குழுவினருக்கு வணக்கம்.

  எனது கருத்துக்கள் இதுவரை வெளியிடப்படவில்லையே ஏன் ? எனக்கு பின்னர் எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் கூட வெளியாகியுள்ளது, எனது கருத்துக்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. என்ன பிரச்சனை என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

 12. கையில் எந்நேரமும் நாலைந்து லேபிள்களை வைத்துக் கொண்டு ‘இவர்கள் சந்தர்ப்பவாதிகள், அவர்கள் சாகசவாதிகள், குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள்’ என்று முத்திரை குத்தி தமிழகத்தில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் போராடுபவர்களை நோக்கி விரல் சுட்டுவதையே வழமையாகவும் கொண்டிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. இது அவர்களுடைய வலது சந்தர்ப்பவாத சாய்வை தெளிவாக வெளிப்படுத்தாக தன்னுடைய விவாத்தின் வாயிலாக நிறுவியிருக்கும் தோழர். மக்கள் கருத்துவிற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  தோழமையுடன்
  ஈழமுத்துக்குமரன்

  1. மாவோயிஸ்ட் தோழர்களுக்கு தமிழ‌கத்திலிருந்து ஒரு புதிய தோழர் கிடைத்திருக்கிறார்! அவர்களூடைய நிலையை ஆதரிக்கும் ஈழம் முத்துக்குமரன் அவர்களே, நீங்கள் புலியை ஆதரிப்பீர்கள் என்பது தெரியும், ஆனால் தற்போது புலிகளே இல்லை, எனவே நீங்கள் புலிப்படையில் சேர்ந்து ஆயுதம் தூக்க முடியாது. அதற்கு வாய்ப்பில்லை, ஆனால் மாவோயிஸ்டுகளின் கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால் அவர்களோடு ஆயுதம் தூக்கிக்கொண்டு காட்டுக்குக்குப் போங்கள்.

   உங்களைப்போன்ற வாய்வீச்சுக்காரர்களுடன் ஒப்பிடும் போது நாங்கள் புலிகளை மதிக்கிறோம். நீங்கள் வாய்வீச்சுக்காரரா இல்லை..

   1. //அவர்களோடு ஆயுதம் தூக்கிக்கொண்டு காட்டுக்குக்குப் போங்கள்.//

    கருத்தியல் ரீதியான ஆதரவை அளிப்பவர்கள் கூட காட்டுக்குள்தான் இருக்கவேண்டுமா தோழர். ஏன் நாட்டுக்குள் நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா?

    //உங்களைப்போன்ற வாய்வீச்சுக்காரர்களுடன் ஒப்பிடும் போது நாங்கள் புலிகளை மதிக்கிறோம். //

    நீங்கள் மதிக்கின்ற லட்சணம் எங்களுக்கு நன்றாகவே தெரியும் சூப்பர்லிங்கஸ், பிரபாகரன் இறந்துவிட்டாரா, இல்லையா என்று இருவேறு கருத்துக்கள் தமிழகத்தில் எழுந்து அது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது, புலி ஆதரவாளர்கள், பிரபாகரனுடைய என்று காட்டப்பட்ட உடல் குறித்து பல கேள்விகளை எழுப்பியிருந்தனர், அதைப்பற்றி எதுவும் கணக்கில் கொள்ளாத புதிய ஜனநாயகம் அவசரம் அவசரமாக ‘புலித்தலைமை படுகொலை’ என்ற கட்டுரையை எழுதியது, அந்த கட்டுரையில் மரபனு பரிசோதனை மூன்று மணிநேரத்தில் முடித்ததாக கூறிய இலங்கையரசின் தகிடுதத்தம் பற்றிய கேள்வி கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை, ஆனால் புலிகள் வழமையாக பயன்படுத்தும் ‘ஊடறுப்பு தாக்குதல்’ என்னும் சொல்லாடல் பகடி செய்யப்பட்டிருந்தது, புலித் தலைவர் ‘மூடர்’ என விளிக்கப்பட்டிருந்தார், இப்படி பல பரிகாசங்கள். இதுதான் நீங்கள் புலிகளை மதிக்கும் லட்சணம்.

    1. சும்மா ஒரு தமாசுக்கு புலியை ப‌ற்றி பேசினால்
     முத்துக்குமாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதே !

     மறுபடியும் சொல்கிறேன் உங்களைப் போன்ற தின்னைப்பேச்சு வீரர்களை விட புலிகள் மட்டுமல்ல, எதையாவது ஒன்றை செய்துகொண்டு ஏதோ ஒரு நடைமுறையிலிருக்கும் விசிலடிச்சான்
     குஞ்சுகளான‌ ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ மேல்!

     உறவுகளை இழந்து, உறுப்புகளை இழ‌ந்து, சொல்லொண்ணா அவமானங்க‌ளையும், சித்திரவதைகளையும் எதிர் கொண்டு
     மனச்சிதைவுகளுக்குள்ளாகி ஒரு மக்கள் சமூகமே முகாம்களில் காப்பாற்றுவாரின்றி அநாதையாக்கப்பட்டு கிடக்கிறது.
     ஆனால் உங்களுக்கு அவர்க‌ளைப் பற்றிய‌ கவலையை விட பெரிய கவலை பிர‌பாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது தான்.
     தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட‌ ஒரு கேடுகெட்ட கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா ? இது தான் எப்போதும் இவர்களின் பேச்சு. பிரபாகரன் இருந்தால் என்ன
     இல்லாமல் போனால் என்ன ?

     கடைசி வரை சயனைடு குப்பியை தனது பற்களில் கடிக்காமல் சரனடைந்த‌ புலித்தலைமையை மூடர்கள் என்று சொல்லாமல் என்வென்று சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள் முத்துக்குரன் ??

     1. உங்களைப் போன்ற தின்னைப்பேச்சு வீரர்களை விட புலிகள் மட்டுமல்ல எதையாவது ஒன்றை செய்துகொண்டு ஏதோ ஒரு நடைமுறையிலிருக்கும் விசிலடிச்சான்
      குஞ்சுகளான‌ ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ மேல்-Superlinks
      Superlinks சரியாக கூறியுள்ளார்.

     2. //சும்மா ஒரு தமாசுக்கு புலியை ப‌ற்றி பேசினால்
      முத்துக்குமாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதே!//

      நீங்கள் புலிகளை மதிக்கிறேன் என்பீர்கள், பின்பு அதை பற்றி கேள்வி எழுப்பினால் ச்சும்மா தமாசு என்பீர்கள், இதுதான் உங்கள் நேர்மை, இந்த லட்சனத்தில் வாங்க விவாதிகலாம், வாங்க விவாதிக்கலாம்னு கூவிக் கொண்டு திரிகிறீர்கள்.

      //உங்களைப் போன்ற தின்னைப்பேச்சு வீரர்களை//

      ஆரம்பித்துவிட்டீர்களா, உங்கள் முத்திரை குத்தும் பணியை, கொஞ்சம் பொறுங்கள், எங்கள் மக்கள் படும் வேதனைகள் எழுத்திலடங்காதது, அவர்களை மந்தைகளாக்கி முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது சிங்கள பேரினவாத அரசு, இப்படியொரு கொடூரமான சூழலில் ‘பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கும் மயிரளவும் இல்லை, . புலி ஆதரவாளர்கள் கூட பிரபாவின் இருப்பை பற்றி பேசுவதை விட இந்த புலி எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்களே அவர்கள்தான் சதா எந்நேரமும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று விடாமல் பினாத்திக் கொண்டிருக்கிறார்களே அந்த அருவெறுப்புதான் தாங்கவில்லை. இவ்வளவு ஏன், உங்களுடைய புதிய ஜனநாயகம் கட்டுரையில் கூட சிவசேகரத்தின் நேர்காணலோடு பிரபாகரன் உடலம்(சிங்களம் வெளியிட்ட படம்) கொண்ட புகைப்படத்தைதானே பிரசுரித்தீர்கள், மக்களுடைய துயரத்தை வெளியிடும் முன்னமேயே உங்கள் இதழ் ‘புலித்தலைமை படுகொலை கட்டுரையை’ வெளியிட்டதே. மக்களை முள்வேலி முகாம்களிலிருந்து விடுவிப்பதை காட்டிலும் உங்கள் தோழர்களுக்கு இணையத்தில் பிரபாகரன் மரணம்தானே பேசு பொருளாக இருக்கிறது.

 13. சுப்பர் லிங்க்ஸ்,
  உங்களுடைய கருத்துக்களின் இடையே மற்றய இணையத் தளங்களின் நீண்ட இணைப்புக்கள் இருந்ததால் அவை “ஸ்பாம்” பகுதிக்குள் சென்றுவிட்டன. ஒருவாறு தேடிப்பிடித்துப் பிரசுரிப்பதில் இன்றாகிவிட்டது.

 14. நல்லது,
  நேபாள தோழர்களைப் பற்றி பேசுவதும் விமர்சிப்பது
  இருக்கட்டும், அதற்கு முன்னர் உங்களைப் பற்றியும்
  உங்களுடைய நடைமுறையை பற்றியும் தான்
  தற்போது பேச வேண்டியுள்ளது.

  ஒவ்வொன்றாக பேசலாமா ?

  முதலில் எமது சட்டவாத,வலது சந்தர்ப்பவாதம் பற்றி.

  நாங்கள் சட்டவாத நடைமுறையில் இருக்கிறோமாம், அதன்
  காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக‌ வலது சந்தர்ப்பவாதத்தை
  நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமாம். கடைசியில் தேசிய
  நீரோட்டம் என்கிற ஓட்டுப்பொறுக்கி பாதைக்குச் சென்று
  விடுவோமாம், எனவே மாவோயிஸ்ட் தோழர்கள் எங்களை
  “சட்டவாத நடைமுறையில் இருக்கும் வலது சந்தர்ப்பவாதிகள்”
  என்று விமர்சித்து “சரியான புரட்சிகர பாதை” க்கு அழைத்துவர‌
  பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள்.

  இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் தேர்தல் பாதைக்கு போய்
  விடுவோம், போய் விடுவோம் என்று இவர்கள் எங்களைப்
  பார்த்து பல ஆண்டுகளாக ஆருடம் கூறி வருகிறார்கள்,
  ஆனால் அது பலிக்கத்தான் மட்டேன் என்கிறது.

  இவர்களின் “புரட்சிகர நடவடிக்கைகள்” மட்டுமல்ல, கட்சியின்
  அதிகாரப்பூர்வமான செய்தி அறிவிப்புகளையும், தலைமைக்குழு
  உறுப்பினரின் பேட்டி, பொதுச்செயலாளரின் அறிக்கைகள்
  அனைத்தையும் தாங்கி வரும் “பீப்பிள்ஸ் மார்ச்” சட்டப்பூவமாகத்தானே
  பதிவு செய்யப்பட்டுள்ளது ? அது என்ன வகை நடை முறை ?
  ஆந்திராவில் உங்கள் கட்சியின் கவிஞர்களும், எழுத்தாளர்களும்
  இருக்கிறார்களே, அது என்ன வகையான‌ நடைமுறை ?

  ஒரு மார்க்சிய லெனினிய அமைப்பில், கொரில்லா குழுவில்
  இருப்பவர்களும்தலை மறைவு வாழ்க்கை வாழ்பவர்களும்
  மட்டும் தான் புரட்சிகர நடைமுறையில் இருப்பவர்களா ? வெளிப்படையாகவும், சட்டப்பூர்வமாகவும், மக்கள் மத்தியிலும்
  வேலை செய்பவர்கள் சட்டவாத நடைமுறையில் இருபவர்களா ?

  இந்த சட்டவாதம், வலது சந்தர்ப்பவாதம் என்கிற வார்த்தைகளை
  மாவோயிஸ்டுகள் எம்மை நோக்கி ஒரு பல ஆயிரம் முறையாவது
  சொல்லியிருப்பார்கள். ஆனால் அதற்கு பொருள் அறிந்து தான்
  சொன்னார்களா என்றால் இல்லை.

  சரி, சட்டவாத நடைமுறை என்றால் என்ன ? இவர்கள் இதை
  எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் ?

  “சட்ட வரம்பிற்குட்பட்ட வெளிப்படையான போரட்டங்கள் மற்றும்
  அமைப்பு வடிவங்களை மட்டுமே கொண்டிருக்கிறார்கள், சட்டவிரோத‌
  இயக்கங்களையும், ஆயுதப் போராட்டங்களையும் திட்டமிட்டு
  உணர்வுப் பூர்வமாகவே நடத்துவதே இல்லை”
  என்பதைத்தான் சட்டவாத நடைமுறை என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
  பாமரத்தனமான இந்த புரிதலைக்கொண்டு,பாமரத்தனமாகவே
  வைக்கப்பட்டிருக்கும் தமது அணிகளையும், நாங்கள் சட்டவாத
  நடைமுறையில் இருப்பதாகவும் வலது சந்தர்ப்பவாத நடைமுறையில்
  இருப்பதாகவும் நம்ப வைக்கிறார்கள்.

  சட்டப்பூர்வமானவை அல்லது சட்டவிரோதமானவை,
  வெளிப்படையானவை அல்லது இரகசியமானவை,
  ஆயுதந்தாங்கியவை அல்லது ஆயுதந்தாங்காதவை,
  ஆகிய இயக்கங்கள்‍ – போராட்டங்கள் மற்றும் அமைப்புகள் –
  இவற்றில் எதை, எந்த அளவு, எந்தச் சமயங்களில்
  மேற்கொள்வது என்பதை தீர்மானிக்கும் காரணிகள் எவை ?
  இவற்றை வகுத்து வரையறுத்து தருவது எந்த அடிப்படையில் ?

  மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின்படி பருண்மையான‌
  அரசியல் – பொருளாதார நிலை, எதிரிகள் மற்றும் புரட்சிகர‌
  சக்திகளின் நிலை, நாடு தழுவிய அளவிலான வர்க்க சக்திகளின்
  அணி சேர்க்கை, முக்கியமாக புரட்சி அலை ஓங்குகிறதா – ஓய்கிறதா ?
  புரட்சி வெள்ளம் பெருகுகிறதா – வடிகிறதா ? ஆளும்
  வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் பிளவுகளும்
  கூர்மை அடைந்துள்ளனவா இல்லையா ? – இவை போன்ற
  பருண்மையான நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு
  திட்டம் என்கிற வகையில் வகுக்கப்படும் “செயல்தந்திரம்” தான் மேறண்டவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள்‍ – அடிப்படைகள்.

  ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
  இவ்வாறு மா.லெ.மா அடிப்படையில் ஆய்வு செய்து
  அதனடிப்படையில் செயல் தந்திரம் வகுக்கிறீர்களா ?
  இல்லை, மாறாக நிகழ்ச்சிப்போக்கில் கைக்கொள்ளப்படும்
  வெறும் தந்திரம். எந்த ஒரு இயக்கத்தையும், போராட்டத்தையும்,நடவடிக்கையையும்
  (மேற்கூறிய‌நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல்)
  உணர்வுப்பூர்வமாகவே சட்டத்தின் எல்லையைத்தாண்டி
  இட்டுச்செல்வது, அவற்றை ஆயுதந்தாங்கிய வன்முறைக்கு
  வளர்த்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்டவை மட்டும் தான்
  புரட்சிகரமானவை. சட்டத்திற்கு உட்பட்டு, புரட்சிகர வன்முறை
  இல்லாமல் நடத்தும் அனைத்தும் திரிபுவாதம், வலது
  சந்தர்ப்பவாதம் இது தான் உங்கள் மார்க்சிய புரிதல்.

  இவ்வளவு தாழ் நிலையில் தமது சித்தாந்த அறிவை
  வைத்துக்கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் தான் எமக்கு சித்தாந்த‌
  போராட்டத்தின் அவசியத்தையும், புரட்சிகர‌ பாதை பற்றியும்
  உபதேசிக்கிறார்கள்!!

  1. நேபாளம் பற்றிய விவாதத்தில் தோழர். மக்கள் கருத்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், விவாதத்தை மீண்டும் வேறொரு புள்ளியில் தொடர முயலும் சூப்பர்லிங்க்ஸ்ன் அனுகுமுறை அவர்களுடைய பலவீனத்தையும், திறந்த விவாதத்துக்கு இவர்கள் தகுதி இல்லாதவர் என்பதையுமே காட்டுகிறது. இது போன்று வேறு யாராவது நடந்து கொண்டிருந்தால் அவர்களை எப்படி ……….தோழர்கள் கட்டம் கட்டியிருப்பார்கள் என்பது ஊருக்கே தெரியும்.

   1. ஈழ முத்துக்குமரன்,
    நேபாள தோழர்கள் குறித்து எமக்கும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிடமும் ‌உண்மையில் பல்வேறு தவறுகளும் இருக்கின்றன. நாங்களும் அவர்களை அப்படியே விமர்சனமின்றி ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. எனினும், இன்றைய ஏகாதிபத்திய சூழ‌லில், கம்யூனிசம் தோற்றுபோய் விட்டது என்கிற முதலாளித்துவ அவதூறுகள் பெரும்பகுதி மக்களால் உண்மை என நம்பப்படுகின்ற சூழலில், மாற்றை இன்னதென்று மக்கள் அறிய வழியில்லாமல் தத்தளிக்கும் சூழலில் கம்யூனிசம் மட்டுமே மாற்று என்பதையும், கம்யூனிசம் தோற்காது என்பதையும் உலகுக்கு அறிவிக்கும் தளமாக இன்று நேபாளம் மாறி இருக்கிறது. இதை உலகம் முழுவதுமுள்ள புரட்சிகர சக்திகள் உற்சாகத்துட்ன் வரவேற்க வேண்டும். நேபாள புரட்சியை ஆதரிப்பது ஒவ்வொரு நாட்டினுடைய பாட்டாளி வர்க்கத்தின் கடமை. அதை உயர்த்திப்பிடிப்பது மட்டுமல்ல,‌ அத்துடன் அவர்களின் தவறுகளை விமர்சனம் செய்வதும் கூட அவர்களின் கடமை தான்.

    உங்களுக்கு நான் முன்னர் கூறிய கீழ்கண்ட இந்த வார்த்தைகளைத் தான் மீண்டும் கூறுகிறேன்.‌‌

    /////////////நேபாள தோழர்களிடம் பல்வேறு தவறுகள் இருக்கின்றன ஆனால் அவற்றையெல்லாம் மக்களை சார்ந்து நின்று புரட்சியை முன்னெடுக்கும் தமது நடைமுறையினூடாக அவர்கள் களைந்து கொள்வார்கள். ஆனால் உங்களிடம் சில சரியான வரையறைகள், முடிவுகள் இருக்கலாம் ஆனால் அவை மக்களிடமிருந்து விலகி நிற்கும் உங்கள் நடைமுறையின் விளைவாக தவறுகளின் பக்கம் சாயலாம், உங்களுடைய‌ சரியான முடிவுகளை கூட நீங்கள் கைவிடக்கூடும். அப்போதும் அவற்றை நீங்கள் சரி என்று கருதலாம்.///////////////////

    தமது நாட்டில், தமது புரட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பது நேபாள தோழர்களுக்கும் மக்களுக்கும் தெரியும், அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இந்தியாவில் புரட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதும், அதற்கு என்ன‌ வழி முறையை மேற்கொள்வது என்பது குறித்தும், எது சரி, எது தவறு என்பது குறித்தும் விவாதிப்பது தான் எமக்கு தற்போது முக்கியமான வேலை.

 15. who are stopping superlinks to carry revolution. maoist or themself or people! I think what eelammuthukumaran said is correct!

 16. மார்க்சும் லெனினும் தத்துவார்த்தத் தளத்தில் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்பு எல்லைகளற்றது. இவர்களிடம் சமூகத்தை அதன் குறித்த சூழலிற்கு ஏற்ப எவ்வாறு பொருள்முதல்வாத அடிப்படையிலான மதிப்பீட்டைச் செய்வது என்பது குறித்தும் அதன் இயங்கியல் ரீதியான வளர்ச்சி குறித்தும் தெளிவான பார்வை இருந்தது. மார்க்ஸ் கவுத்ஸ்கிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்தியா காலனியாதிக்கத்தின் பின்னர் முதலாளித்துவ கட்டத்திற்குச் செல்லுமா என்பது தெளிவற்றதாக இருக்கிறது என்கிறார். ஆக, காலனி ஆதிக்கம் இந்தியாவில் ஏற்படுத்திய சமூக அமைப்பு முறை, உலக மயமாதலின் பின்னான சமூக அமைப்பு முறை, ஏகாதிபத்திய நாடுகளில் நிலவும் உற்பத்தி உறவுகள் எல்லாம் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதிலிருந்தே புரட்சிகர அமைப்புக்களின் மூலோபாயங்கள் வகுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்திய மாவோயிஸ்டுக்கள் இந்த வகையில் சுயவிமர்சன அடிப்படையில் தமக்கெதிரான விமர்சனத்தை எதிர்கொள்ள வெண்டும். மாவோவின் முரண்பாடுகள் தத்துவம் கூட புதிய ஆய்வுகளுக்கான வழிமுறைகள் குறித்து நிறையப் பேசுகின்றதே. ஆக, கோவிந்தன் குட்டி இவ்விமர்சனங்களை ஆரோக்கியமான சமூக அக்கறையுடனான கருத்துக்களாக உள்வாங்கிக்கொண்டு ஏன் பரிசீலிக்கக் கூடாது?

 17. ///////////////////////////////நீங்கள் புலிகளை மதிக்கிறேன் என்பீர்கள், பின்பு அதை பற்றி கேள்வி எழுப்பினால் ச்சும்மா தமாசு என்பீர்கள், இதுதான் உங்கள் நேர்மை, இந்த லட்சனத்தில் வாங்க விவாதிகலாம், வாங்க விவாதிக்கலாம்னு கூவிக் கொண்டு திரிகிறீர்கள்.

  ஆரம்பித்துவிட்டீர்களா, உங்கள் முத்திரை குத்தும் பணியை, கொஞ்சம் பொறுங்கள், எங்கள் மக்கள் படும் வேதனைகள் எழுத்திலடங்காதது, அவர்களை மந்தைகளாக்கி முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது சிங்கள பேரினவாத அரசு, இப்படியொரு கொடூரமான சூழலில் ‘பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கும் மயிரளவும் இல்லை, . புலி ஆதரவாளர்கள் கூட பிரபாவின் இருப்பை பற்றி பேசுவதை விட இந்த புலி எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்களே அவர்கள்தான் சதா எந்நேரமும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று விடாமல் பினாத்திக் கொண்டிருக்கிறார்களே அந்த அருவெறுப்புதான் தாங்கவில்லை. இவ்வளவு ஏன், உங்களுடைய புதிய ஜனநாயகம் கட்டுரையில் கூட சிவசேகரத்தின் நேர்காணலோடு பிரபாகரன் உடலம்(சிங்களம் வெளியிட்ட படம்) கொண்ட புகைப்படத்தைதானே பிரசுரித்தீர்கள், மக்களுடைய துயரத்தை வெளியிடும் முன்னமேயே உங்கள் இதழ் ‘புலித்தலைமை படுகொலை கட்டுரையை’ வெளியிட்டதே. மக்களை முள்வேலி முகாம்களிலிருந்து விடுவிப்பதை காட்டிலும் உங்கள் தோழர்களுக்கு இணையத்தில் பிரபாகரன் மரணம்தானே பேசு பொருளாக இருக்கிறது.//////////////////////////////////

  வெறுமனே புலம்ப்பித்தீர்க்காதீர்கள் முத்துக்குமார். நாங்கள் என்றைக்கும் பிரபாகரனை தமிழ் மக்களின் மீட்பராக கருதியதே இல்லை. சக தோழர்களையும், பல நேரங்களில் பதிலடியாக சிங்கள மக்களையும், இறுதியில் தமிழ் மக்களையும் தன‌க்கு கேட‌யமாக பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உயிரை பலிகொடுத்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டு தப்பிப்பிழைக்கலாம் என்று எண்ணி எதிரியிடம் சரணடைந்த புலி பாசிச தலைமை படுகொலை என்று எழுதியது எமது தவறு தான், அதற்கு பதிலாக புலித்தலைமை கோழைத்தனமாக சரணடைவு என்று எழுதியிருக்க வேண்டும்.

  தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை போருக்கும், தமிழ் மக்களின் இன்றைய‌ அவல நிலைக்கும், பாசிச‌ சிங்கள இனவெறி அரசு மட்டும் தான் காரணம் என்று வாய்பாடு போல அவ்வளவு எளிமையாக சொல்லி விட முடியாது முத்துக்குமார். இதில் புலிகளுக்கும் பங்கு உண்டு. வரலாற்றில் நடந்துவிட்ட உண்மைகளை மறைக்கச்சொல்கிறீர்களா ? அதை மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு ஈழம் பற்றியும், போரின் இறுதி நாட்கள் பற்றியும் பேசச்சொல்கிறீர்களா ? அது போன்ற காரியத்தை தமிழ்தேசியம் பேசும் உங்களைப் போன்ற வரலாற்றுப் புரட்டர்கள் தான் செய்வார்கள் !

  நீங்கள் இப்போது என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ? புலிகளை விமர்சிப்பதால் ம.க.இ.க ஈழ மக்களுக்கு எதிரானது, தமிழின துரோக கும்பல் என்கிறீர்களா ?

  முதலில் அதைச் சொல்லுங்கள் அதன் பிறகு மேற்கொண்டு பேசலாம்.

  1. //வெறுமனே புலம்ப்பித்தீர்க்காதீர்கள் முத்துக்குமார். நாங்கள் என்றைக்கும் பிரபாகரனை தமிழ் மக்களின் மீட்பராக கருதியதே இல்லை. சக தோழர்களையும், பல நேரங்களில் பதிலடியாக சிங்கள மக்களையும், இறுதியில் தமிழ் மக்களையும் தனக்கு கேடயமாக பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உயிரை பலிகொடுத்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டு தப்பிப்பிழைக்கலாம் என்று எண்ணி எதிரியிடம் சரணடைந்த புலி பாசிச தலைமை படுகொலை என்று எழுதியது எமது தவறு தான், அதற்கு பதிலாக புலித்தலைமை கோழைத்தனமாக சரணடைவு என்று எழுதியிருக்க வேண்டும்.//

   இந்த செய்திகளுக்கெல்லாம் ஆதாரம் யார், புனிதர் இந்து ராமா? ஸ்டாலின் பற்றி பத்திரிக்கைகளும், மேற்கத்திய ஊடகங்களும் எழுதினால் அது முதலாளித்துவ அவதூறு, ஏகாதிபத்திய கூச்சல். ஆனால் ஏழுக்கும் மேற்பட்ட ஏகாதிபத்தியங்கள், பேரழிவு ஆயுதங்களாலும் கோழைத்தனமான சதிகளாலும் வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளை பற்றி அவ்வூடகங்கள் எழுதினால் அது உங்களுக்கு ஆதாரம் தரவு, போதாக்குறைக்கு தோழர்கள் கொடுத்துவைத்த பணத்தை களவாடிய ‘களவானிகள்’ கூறும் சாட்சிகளை இணைய முகவரியோடு பிரசுரிக்கும் உங்கள் பத்திரிக்கை. வல்லான் வகுத்ததே நியதி என்ற நிலை இருக்கிறது இன்று, அதை தம் சொந்த வெறுபபுக்காக வழிமொழியும் கூட்டம் வெறிக் கூச்சல் கிளப்பி ஆராவரித்து வரவேற்கிறது, இருக்கட்டும் இவற்றுக்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

   // தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை போருக்கும், தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கும், பாசிச சிங்கள இனவெறி அரசு மட்டும் தான் காரணம் என்று வாய்பாடு போல அவ்வளவு எளிமையாக சொல்லி விட முடியாது முத்துக்குமார்.//

   புலிகள் மீதும் தவறுகள் இருக்கிறது, அது எப்படிப்பட்ட தவறுகள் எனில் நடைமுறையின் போக்கில் ஏற்பட்ட தவறுகள், அதனை மதிப்பிடுவதோ, விமர்சிப்பதோ தவறில்லை.. ஆனால் நீங்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் மதிப்பீடுகளோ விமர்சனங்களோ அல்ல அவதூறுகள், வன்மம், கேலி. ‘ஆனால் தற்போது புலிகளே இல்லை’ என்று நீங்கள் முதல் பின்னூட்டத்தில் எழுதினீர்களே அந்த வார்த்தைகளின் தொக்கி நின்ற மகிழ்ச்சி இருக்கிறதே அதனை மகிந்த வானுர்தி நிலையத்தில் இறங்கி ஆணவச் சிரிப்போடு கைகளை உயர்த்தினானே அப்போது அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது உம் மகிழ்ச்சி. இப்படி உள்ளூர குரூரமாக மகிழ்ந்து கொண்டு ஒரு புறம் புலிகளை மதிக்கிறேன் என்கிறீர்கள், இந்த திண்னை பேச்சு வீரகளுக்கு புலிகள் தேவலாம் என்கிறீர்கள், கேள்வி எழுப்பினால் ‘ச்சும்மா தாமாசுக்கு பேசுனேன் பாஸ்’ என்று தலையை சொறிகிறீர்கள் மேலும் கேள்வி எழுப்பினால் புலம்பி திரியாதே என்று எனக்கு அறிவுரை சொல்கிறீர்கள். ஆனால் ஒன்று, வாக்கிங் போன தா.கியை போட்டு தள்ளியவயவர்களெல்லாம் இன்று புலிகள் செய்த சகோதரப் படுகொலையை பற்றி பேசும் போது, கவிதை எழுதியவனை வீடு தேடி உதைத்து அவனது குடும்பத்தை மிரட்டிய நீங்கள் புலிகளின் ஜனநாயக மறுப்பு பற்றி பேசக்கூடதா என்ன? எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு புலிகளை பற்றி பேசுங்கள் , ஏசுங்கள்.
   //நீங்கள் இப்போது என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ? புலிகளை விமர்சிப்பதால் ம.க.இ.க ஈழ மக்களுக்கு எதிரானது, தமிழின துரோக கும்பல் என்கிறீர்களா ?//

   இந்த கேள்விக்கு ம.க.இ.க தோழரொருவர் ஒருமுறை கூறிய உதாரணத்தையே இங்கு சொல்ல விரும்புகிறேன். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மரத்தை அழிக்க வேண்டுமெனில் அதனை கோடாரி கொண்டுதான் பிளக்க வேண்டுமென்று இல்லை மாறாக மெதுமெதுவாக அதன் பட்டையை உரித்தாலே அந்த மரம் பட்டுப்போய் விடும், அப்படி பட்டை உரிக்கும் வேலையைதான் தமிழ் தேசிய இயக்கங்கள் ம.க.இ.க மேற்கொள்ளும் போராட்டங்களில் செய்கின்றன என்று அத்தோழர் கூறினார். ஆனால் உண்மையில், இது போன்று பட்டை உரிக்கும் வேலையைதான் ஈழப் போராட்டத்தை பொறுத்த அளவில ம.க.இ.க செய்கிறதென்பது என் கருத்து.

 18. //////////////இந்த செய்திகளுக்கெல்லாம் ஆதாரம் யார், புனிதர் இந்து ராமா? ஸ்டாலின் பற்றி பத்திரிக்கைகளும், மேற்கத்திய ஊடகங்களும் எழுதினால் அது முதலாளித்துவ அவதூறு, ஏகாதிபத்திய கூச்சல். ஆனால் ஏழுக்கும் மேற்பட்ட ஏகாதிபத்தியங்கள், பேரழிவு ஆயுதங்களாலும் கோழைத்தனமான சதிகளாலும் வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளை பற்றி அவ்வூடகங்கள் எழுதினால் அது உங்களுக்கு ஆதாரம் தரவு, போதாக்குறைக்கு தோழர்கள் கொடுத்துவைத்த பணத்தை களவாடிய ‘களவானிகள்’ கூறும் சாட்சிகளை இணைய முகவரியோடு பிரசுரிக்கும் உங்கள் பத்திரிக்கை. வல்லான் வகுத்ததே நியதி என்ற நிலை இருக்கிறது இன்று, அதை தம் சொந்த வெறுபபுக்காக வழிமொழியும் கூட்டம் வெறிக் கூச்சல் கிளப்பி ஆராவரித்து வரவேற்கிறது, இருக்கட்டும் இவற்றுக்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும்./////////////

  காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் தான், ஆனால் காலத்தின் மீது பொய்யான வரலாற்றை எழுதும் போது காலத்தில் பதில் எப்படி இருக்கும் ?
  காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் என்று விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் உங்களைப் போன்ற வரலாற்றுப்புரட்டர்கள் பிரபாகரனை புரட்சிக்காரன் என்று கூறி வரலாற்றின் மீது ஏற்றிவிடுவார்கள்! வரலாற்றை மக்கள் அறிய வேண்டும், உண்மைகளையும் பொய்களையும் மக்களுக்கு அறியச் செய்ய வேண்டும். ஏனென்றால் மக்கள் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அதற்காக நாங்கள் உண்மைகளை பேசுகிறோம். ம.க.இ.க ஒன்றும் கற்பனையாக‌ திரைக்கதை எழுதிக்கொண்டிருக்க‌வில்லை.

  சரி நாங்கள் சொல்வது தான் அவதூறு, நீங்கள் சொல்லுங்களேன் பிரபாகரன் என்ன ஆனார் ? இறுதி நாட்களில் என்ன நடந்தது ?

  /////////////////////புலிகள் மீதும் தவறுகள் இருக்கிறது, அது எப்படிப்பட்ட தவறுகள் எனில் நடைமுறையின் போக்கில் ஏற்பட்ட தவறுகள், அதனை மதிப்பிடுவதோ, விமர்சிப்பதோ தவறில்லை.. ஆனால் நீங்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் மதிப்பீடுகளோ விமர்சனங்களோ அல்ல அவதூறுகள், வன்மம், கேலி. ‘ஆனால் தற்போது புலிகளே இல்லை’ என்று நீங்கள் முதல் பின்னூட்டத்தில் எழுதினீர்களே அந்த வார்த்தைகளின் தொக்கி நின்ற மகிழ்ச்சி இருக்கிறதே அதனை மகிந்த வானுர்தி நிலையத்தில் இறங்கி ஆணவச் சிரிப்போடு கைகளை உயர்த்தினானே அப்போது அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது உம் மகிழ்ச்சி. இப்படி உள்ளூர குரூரமாக மகிழ்ந்து கொண்டு ஒரு புறம் புலிகளை மதிக்கிறேன் என்கிறீர்கள், இந்த திண்னை பேச்சு வீரகளுக்கு புலிகள் தேவலாம் என்கிறீர்கள், கேள்வி எழுப்பினால் ‘ச்சும்மா தாமாசுக்கு பேசுனேன் பாஸ்’ என்று தலையை சொறிகிறீர்கள் மேலும் கேள்வி எழுப்பினால் புலம்பி திரியாதே என்று எனக்கு அறிவுரை சொல்கிறீர்கள். ஆனால் ஒன்று, வாக்கிங் போன தா.கியை போட்டு தள்ளியவயவர்களெல்லாம் இன்று புலிகள் செய்த சகோதரப் படுகொலையை பற்றி பேசும் போது, கவிதை எழுதியவனை வீடு தேடி உதைத்து அவனது குடும்பத்தை மிரட்டிய நீங்கள் புலிகளின் ஜனநாயக மறுப்பு பற்றி பேசக்கூடதா என்ன? எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு புலிகளை பற்றி பேசுங்கள் , ஏசுங்கள்.//////////////////////

  புலிகள் மீதும் தவறுகள் இருக்கிறது என்கிறீர்கள், சரி, அந்த தவறுகளை நீங்கள் எப்போதாவது விமர்சித்திருக்கிரீர்களா ? அவை என்ன வகை தவறுகள் என்பதை எப்போதாவது கூறியிருக்கிறீர்களா ?

  இன்றைக்கு, சிறுவர்கள் முதல் முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் நேரடியாக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக களத்தில் நின்று போரிடும் ஒரே நாடு ஈராக் மட்டும் தான். அவ்வாறு போராடும் ஈராக் பெண்களையும் முதியவர்களையும், போராட்டம் பற்றியோ, போரின் வலி பற்றியோ என்ன என்றே தெரியாத விக்கிரமாதித்யன், லக்க்ஷ்மி மணிவண்னன் போன்ற குடிகார இழி பிறவிகள் இழிவுபடுத்தி கூட்டுக்கவிதை எழுதியதை ம.க.இ.க தட்டிக்கேட்டது, இது தவறா ? பாக்தாத் பற்றி எழுதினால், தமிழ்நாட்டில் கேட்க எவன் இருக்கான் என்கிற‌ திமிரில் ஈராக் பெண்களை பாலியல் ரீதியாக இழுவுபடுத்தி எழுதிய இந்த லும்பன்களின் சட்டையை பிடித்து, அவ்வாறு எழுதியதற்கு மண்னிப்பு கேட்க வைத்தது தவறா ? இதில் என்ன தவறையும், புலிகளிடமுள்ள‌ ஜனநாயக விரோத தன்மையையும் கண்டுவிட்டீர்கள் முத்துக்குமார் ??

  ////////////////////////////இந்த கேள்விக்கு ம.க.இ.க தோழரொருவர் ஒருமுறை கூறிய உதாரணத்தையே இங்கு சொல்ல விரும்புகிறேன். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மரத்தை அழிக்க வேண்டுமெனில் அதனை கோடாரி கொண்டுதான் பிளக்க வேண்டுமென்று இல்லை மாறாக மெதுமெதுவாக அதன் பட்டையை உரித்தாலே அந்த மரம் பட்டுப்போய் விடும், அப்படி பட்டை உரிக்கும் வேலையைதான் தமிழ் தேசிய இயக்கங்கள் ம.க.இ.க மேற்கொள்ளும் போராட்டங்களில் செய்கின்றன என்று அத்தோழர் கூறினார். ஆனால் உண்மையில், இது போன்று பட்டை உரிக்கும் வேலையைதான் ஈழப் போராட்டத்தை பொறுத்த அளவில ம.க.இ.க செய்கிறதென்பது என் கருத்து.///////////////////////////

  நீங்கள் மேற்கூறியவாறு தமிழ் மக்களுக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் ம.க.இ.க தொடர்ச்சியாக செயல்படவும், புலிகள் அழிந்த போது ராஜபக்சே அடைந்த‌ அளவிற்கு ம.க.இ.க வும் குரூரமாக மகிழ்ச்சி அடைந்த‌தற்கும் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ??

 19. சூப்பர் லிங்க்ஸ், முதலில் விவாதத்தை மாவோயிஸ்ட்களிடம் – இடது போக்கை குறித்து விமர்சித்தீர்கள். உங்கள் விமர்சனம் நட்பு ரீதியாக இல்லை, எதிரியை விமர்சிப்பதைப்போல் விமர்சிக்கிறீர்கள்.”மக்கள் கருத்து” கூறியதைப் போல் இடது போக்கு போராடும் மக்களை அணிதிரட்ட தடையாக இருக்கும் – அது மாவோயிஸ்டுகள் தங்கள் புரட்சிகர யுத்தப் படிபினையை வைத்துக் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் நீங்கள் நேபாள மாவோயிஸ்டுகளை உங்கள சகோதர குழுவாக நினைக்கிறீர்கள். அவர்களோ மன்னராட்சி அகற்ற நடந்த கடைசி போராட்ட வருடங்கள் வரை புரட்சிகர குழுக்களாகவும், புரட்சிகரத் தத்துவத்தை ஏந்தியவர்களாகவும் இருந்தனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் மன்னராட்சி கவிழும் அந்த கடைசி ஆண்டுகளுக்கு, குறிப்பாக மன்னராட்சி வீழ்ந்தப் பிறகு அவர்கள் தலைமையேற்று நடத்திய புரட்சிகர யுத்தத்தையும், புரட்சிகரத் தத்துவத்தையும், பொருள்முதல்வாத அடிப்படையிலான மார்கிசியத்தையும் தூக்கியெறிந்து முற்றிலும் சரணாகதி பாதையின் கடைக்கோடிக்குப் போனப்பிறகுத் தான் நீங்கள் அவர்களை உங்கள் பத்திரிக்கைகளிலும்,  இதுப்போன்ற விமர்சனங்களிலும் தூக்கிவைத்து பேசுகிறீர்கள், எழுதுகிறீர்கள். அவர்களின் வலது போக்கை “மக்கள் கருத்து” ஓரளவு கோடு போட்டு விட்டார். இது போதாது என்றால் மேலும் கூட  அவர்கள் எப்படி அடிப்படை மார்க்சியத்திலிருந்த முற்றிலும் விலகி ஓடுகின்றனர் என்று விவாதிக்கலாம்.
  இரண்டாவது “மக்கள் கருத்து” அரசியல் ரீதியான மிக சரியான விவாதத்தைத் துவங்கினர். ஆனால் அதற்கு அரசியல் ரீதியாக பதில் சொல்லாமல், எங்களுக்கும் சில கருத்து மாறுபாடு உள்ளது என்று பொதுவாக பேசி அவரின் அரசியல் ரீதியான எந்த வாதத்திற்கும் பதில் சொல்லவில்லை. இந்த விமர்சனத்துக்கு பாராட்டு தெரிவித்த ஈழமுத்துக்குமரின் மீது ஆத்திரத்தை கக்குகிறீர்கள். நீங்களும் ஆயுதத்தைத் தூக்கி காட்டுக்குள் போங்கள் என்று சொல்லுகிறீர்கள். அவர் அரசியல் கருத்துக்கு மட்டுமே பாராட்டு தெரிவித்ததைப் போல் தான் தெரிந்தது. ஆனாலும் கடுமையாக சாடுகிறீர்கள். நீங்கள்  அரசியல் ரீதியாக விவாதிக்க இவ்விவாதம் முழுவதும் தயாரில்லை என்பதுப்போலே காட்டுகிறீர்கள். நாம் விவாவதம் நடத்துவது ஆரோக்கியமான அரசியலை வளர்த்தெடுப்பதற்குதான். அதில் “மக்கள் கருத்து” போன்று அரசியல் இருக்க வேண்டுமேயன்றி (அக்கருத்துக்கு உங்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் – அக்கருத்தை மறுத்து அரசியல் ரீதியாக  குறிப்பாக பாட்டாளி வர்க்க அரசியலை மற்றவர்களுக்கு உரமாக பாச்சும் அளவுக்கு நாம் விவவாதம் நடத்த வேண்டும் என்றே நினைக்கிறேன். அவ்வகையிலே தொடருவோம்… இதற்கு ஒரு வேலை பதிலளித்தால் அதவும் அரசியல் ரீதியாகவே இருக்கட்டும். நன்றி.

  1. பொதுவுடமை சீமான் அவர்களே,
   நான் ஏற்கெனவே கூறியது போல நேபாள புதிய ஜனநாயகப் புரட்சியில் எதிர்கொள்ளும் இடர்களை நேபாள தோழர்களே சரி செய்து கொள்ளுவார்கள். அவர்கள் மீதான நமது விமர்சனம் என்ன என்பதை சொல்ல்வது மட்டும் தான் நமது வேலை. அவர்கள் மீதான‌ எமது விமர்சனம் என்ன என்பதை நாம் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம், மேலும் ஒரு நாட்டிலிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி இன்னொரு நாட்டிற்குள் நடக்கும் புரட்சியை வழி நடத்த முடியாது, அவ்வாறு வழி நடத்த இன்னொரு நாட்டு கட்சிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால் அது போன்ற ஒரு பெரியண்ணன் வேலையை தான் இந்திய மாவோயிஸ்டுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, நேபாள தோழர்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது தான் இவர்களுக்கு இப்போது பிரச்சனை. ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது இவர்களின் ‘விருப்பம்’ இவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நாட்டில் புரட்சியை நடத்த முடியாது என்பதைக் கூட இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

   தற்போது நேபாள மவோயிஸ்ட் தோழர்கள் சிக்கல் மிகுந்த ஓர் அரசியல் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக ஆயுதப்போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள், ஆனால் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிடவில்லை. ஆயுதத்தை தூக்கினால் தான் புரட்சியாளர்கள், ஆயுதப் போராட்டம் நின்று விட்டால் சரனடைவு! சாரு மஜீம்தாரின் குட்டி முதலாளித்துவ மார்க்சியத்தின் படி எதிரியின் குடலை உருவி இரத்தத்தில் கையை நனைத்தால் தான் புரட்சிகரமானது, இல்லையென்றால் வலது சந்தர்ப்பவாதம், இது தான் இவர்களின் மார்க்சியப் பார்வை.

   எனவே,
   தற்போது நாம் விவாதிக்க வேண்டியது நேபாள மாவோயிஸ்ட் தோழர்களைப் பற்றி அல்ல, இந்திய நேபாள மாவோயிஸ்ட் தோழர்களைப் பற்றி தான்.

 20. சூப்பர் லிங்ஸ் கருத்திற்கு

  //புலிகள் மீதும் தவறுகள் இருக்கிறது என்கிறீர்கள், சரி, அந்த தவறுகளை நீங்கள் எப்போதாவது விமர்சித்திருக்கிரீர்களா ? அவை என்ன வகை தவறுகள் என்பதை எப்போதாவது கூறியிருக்கிறீர்களா ?//

  //நேபாள தோழர்கள் குறித்து எமக்கும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிடமும் ‌உண்மையில் பல்வேறு தவறுகளும் இருக்கின்றன. நாங்களும் அவர்களை அப்படியே விமர்சனமின்றி ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல.//

  இவை நீங்கள் எழுதியது. இவற்றுக்குள்ள ஒற்றுமையை உங்களுக்கு உணர்த்தவேண்டுமா.

  புலிகளைப் பற்றி எந்த விமர்சனமாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறீர்கள். நீங்கள் நேபாளைப் பற்றி எந்த விமர்சனமாவது எழுதியிருக்கிறீர்களா. அதை முதலில் நேர்மையுடன் பரிசீலியுங்கள். கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறியும் மடமையை இப்பொழுதுதான் பார்க்கிறேன். ஈழமுத்துக்குமாரருக்கு நீங்கள் கேள்வி கேட்கும் முன் நேபாளத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று முதலில் கேட்டுக்கொள்ளுங்கள், பதில் கூறுங்கள்.

  அடுத்தது மாவோயிஸ்டுகள் உங்களை தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ளும் வலது திரிபுவாதிகள் என்று விமர்சனம் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள். அந்த விவாதம் இருக்கட்டும். தரகுமுதலாளிகளோடு, நிலப்பிரபுத்துவத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு நேபாள் கட்சி தேர்தலில் பங்குகொண்டு எதை மாற்றப்போகிறார்கள் என்பதை சூப்பர் லிங்க்ஸ் என்ற கடவுளே அறிவார்.

  புலிகளைப் பற்றி எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புல்லரிக்கிறது. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………கருணாநிதி பிணத்தைக் காட்டி ஓட்டு கேட்பதில் வல்லவர் என்பது உலகறிந்த உண்மை. நீங்கள் ஈழப்பிணத்தைக் காட்டி புரட்சிவாதிபோல் வேடமிடுவதில் வல்லவர் என்பதில் காட்டிக்கொண்டதற்கு பாராட்டுக்கள்.

  ஒருபடி மேலேயே போய் ஈழப் படுகொலைக்கு காரணம் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும்தான் என்று ஒரு அறிய கண்டுபிடிப்பை …………..தொடர்பால் வந்த கண்டுபிடிப்பை பாராட்டித்தான் ஆகவேண்டும். ……………………………………………….என்று உங்கள் ஆதரவுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உங்களின் நோக்கம் ஈழ விடுதலை இல்லை என்பது மனநலம் குன்றியவனுக்குக் கூட தெரியும். இது வரை நான் வைத்த விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல் மற்ற பதிலுக்குத் தாவும் உங்கள் நேர்மையை, உங்கள் சாமர்த்தியத்தை மெச்சத்தான் வேண்டும். கலைஞர் கூட உங்கள் பள்ளியில் பயில வேண்டியது எவ்வளவோ.

  1. ////////இவை நீங்கள் எழுதியது. இவற்றுக்குள்ள ஒற்றுமையை உங்களுக்கு உணர்த்தவேண்டுமா.புலிகளைப் பற்றி எந்த விமர்சனமாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறீர்கள். நீங்கள் நேபாளைப் பற்றி எந்த விமர்சனமாவது எழுதியிருக்கிறீர்களா. அதை முதலில் நேர்மையுடன் பரிசீலியுங்கள். கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறியும் மடமையை இப்பொழுதுதான் பார்க்கிறேன். ஈழமுத்துக்குமாரருக்கு நீங்கள் கேள்வி கேட்கும் முன் நேபாளத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று முதலில் கேட்டுக்கொள்ளுங்கள், பதில் கூறுங்கள்.////////////////

   லட்சக்கணக்கான மக்களுடன் நின்று போராடும் மாவோயிஸ்டுகள் எங்கே இறுதி நேரத்தில் மக்களை கேடயமாக்கி காவு கொடுத்த புலிகள் எங்கே ? பல்வேறு ஜனநாயக சக்திகளையும் தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளும் மாவோயிஸ்டுகள் எங்கே அனைத்து தோழமை சக்திகளையும் கொன்றொழித்த புலிகள் ?

   பாசிஸ்டுகளாக சீரழிந்துவிட்ட விட்ட புலிகளையும், கம்யூனிஸ்டுகளான நேபாள தோழர்களையும் சமமாக வைத்து ஒப்பிடும் உங்கள் ஓப்பீடே முதலில் ஆபாசமானது! நேபாள தோழர்கள் மீதான விமர்சனங்களை அவர்கள் தனிப்பட்ட முறையில் தான் சொல்ல வேண்டும், ஏனென்றால் அவர்கள் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள், விமர்சனம் சுயவிமர்சனம் பற்றி அறிந்தவர்கள். அவர்கள் தமது அழிவை நோக்கியோ மக்களின் அழிவை நோக்கியோ போய்விடவில்லை. அதே போல மக்களிடமிருந்து அந்நியப்பட்டு மக்களுக்கே எதிராகிவிட்ட, ஈழப்போராட்டத்திற்கே இடையூறாகிவிட்ட புலிகளைப் பற்றி வெளிப்படையாக தான் விமர்சிக்க வேண்டும். அவர்களை மக்களி மத்தியில் விமர்சித்து தான் அம்பலப்படுத்த வேண்டும்.

   புலிகளை நீங்கள் வெளிப்படையாக கூட‌ விமர்சிக்க வேன்டாம், புலித்தலைமையிடமாவது உங்களுடைய விமர்சனங்களை சொல்ல முடியுமா ? இதுவரை நீங்கள் சொல்லியிருக்கிறீர்களா ?
   அவர்களிடம் அந்தளவிற்கு ஜனநாயக உணர்வு இருந்திருந்தால் புலிகளை மக்களே காப்பாற்றியிருப்பார்கள்!

   //////////அடுத்தது மாவோயிஸ்டுகள் உங்களை தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ளும் வலது திரிபுவாதிகள் என்று விமர்சனம் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள். அந்த விவாதம் இருக்கட்டும். தரகுமுதலாளிகளோடு, நிலப்பிரபுத்துவத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு நேபாள் கட்சி தேர்தலில் பங்குகொண்டு எதை மாற்றப்போகிறார்கள் என்பதை சூப்பர் லிங்க்ஸ் என்ற கடவுளே அறிவார்.////////////

   நேபாளம் குறித்து நான் ஏற்கெனவே பொதுவுடைமை சீமானுக்கு கூறிய பதில் தான் உங்களுக்கும். அவர்கள் தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்களோடு கைகோர்க்கிறார்கள் என்றால் அதை விமர்சனம் செய்துவிட்டு உங்களுடைய அடுத்த வேலையை பாருங்கள். மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்யுங்கள். அவர்களுடைய நிலைப்பாடு தவறு என்பதை உணர்த்த தொடர்ச்சியாக போராடுங்கள், சரியான தன்மையை கருத்து ரீதியாக எடுத்துக்காட்டுங்கள். அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை அதை விடுத்து ஆயுதத்தை தூக்குங்கள் என்று அவர்களுக்கு கட்டளை போட நீங்கள் யார் ?

   //////////////ஒருபடி மேலேயே போய் ஈழப் படுகொலைக்கு காரணம் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும்தான் என்று ஒரு அறிய கண்டுபிடிப்பை தொடர்பால் வந்த கண்டுபிடிப்பை பாராட்டித்தான் ஆகவேண்டும். என்று உங்கள் ஆதரவுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உங்களின் நோக்கம் ஈழ விடுதலை இல்லை என்பது மனநலம் குன்றியவனுக்குக் கூட தெரியும். இது வரை நான் வைத்த விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல் மற்ற பதிலுக்குத் தாவும் உங்கள் நேர்மையை, உங்கள் சாமர்த்தியத்தை மெச்சத்தான் வேண்டும். கலைஞர் கூட உங்கள் பள்ளியில் பயில வேண்டியது எவ்வளவோ.////////////////

   த‌மிழகத்திலுள்ள‌ தமிழ்தேசியவாத அணிகள் மத்தியிலிருக்கும் ஒரு புலி ரசிகர் மனப்பாண்மையை ஒத்திருக்கும் உங்களை அதிலிருந்து மீட்பது சற்று கடினம் என்று தான் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் இன்னும் உங்களை மாவோயிஸ்ட், புரட்சியாளர் என்றெல்லாம் சொல்லிக்கொள்வது தான் எமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சரி பரவாயில்லை, கொள்ளைக்காரன் வீரப்பனையே ஆதரித்தவர்களாயிற்றே நீங்கள் ! வீரப்பனையே நீங்கள் ஆதரிக்கிற போது புலிகள் நிச்சயமாக புரட்சியாளர்கள் தான்!!

 21. சூப்பர் லிங்க்ஸ்க்கு சில அரசியல் கேள்விகள்?

  நீங்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா?
  இல்லாவிட்டால்
  சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறீர்களா (பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய உரிமை)?

  இதிலிருந்துதான் உங்கள் வன்மம் முளைக்கிறது. இதை மறுத்துவிட்டு புலிகள் பாசிஸ்டுகள் என்று கூறுவது என்பது உங்கள் கருத்தை ஏற்காதவர்கள் எல்லாம் பாசிஸ்டுகள் என்பது. இங்கு புலிகள் சரணடைந்ததாக எழுதியிருக்கிறீர்கள். அனைவருக்கும் (குறிப்பாக உங்களுக்கு) துரோகியாக அம்பலப்பட்டவர் ஜெகத் கஸ்பரின் வாயிலிருந்து உண்மையை அறிந்து கொள்ள முயற்சிப்போமே. அவர் அளித்த பேட்டி ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கையில் எழுதியது. புலிகள் மற்றவர்கள் வைத்த நிபந்தனையை ஏற்கவில்லை. ஆயுதத்தை ஒப்படைப்பதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த தவறால் தான் எல்லா அசாம்பாவிதமும் நடந்தது. என்று அவர் பேடியில் கூறியிருக்கிறார். அதை நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு அவர்கள் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது அதை ஏற்று அரசியல் சரணடைந்திருந்தால் இந்த நிலமை இல்லை என்பது பேட்டியின் சாரம். ஜெகத் கஸ்பரும் புலிகளை பாராட்டுவது போல் போட்டுத்தள்ளுவதும். நீங்களும் புலிகளின் தியாகத்தை மெச்சிக்கொண்டு மிதிப்பதும் ஒரே கோட்டில் இணைவதுதான் சிறப்பம்சம்.

  அவர்கள் கடைசி கையறு நிலையில் அமெரிக்காவை நம்பியிருந்தார்கள். இந்தியாவின் ஆட்சி மாற்றத்தை நம்பினார்கள். இருக்கட்டும். அது பிழைதான். விமர்சனம் தான் இருக்கட்டும். ஆனால் நேபாள் போல் புலியும் போர் தொடங்குவதற்கு வாய்பிருப்பதாக நினைத்தவுடனேயே, நவம்பர் 2008க்கு முன்பே இராஜபக்சேயினை தூக்கியெறிய ரனிலோடும், சந்திரிக்காவுடனும், ஜேவிபியுடனும், …………………………, ஒரு 7 கட்சி கூட்டணி ஏற்படுத்தி நாங்கள் தனி ஈழக் கோரிக்கையை கைவிடுகிறோம், எங்கள் இராணுவத்தை கலைக்கிறோம், சிங்களப் பேரினவாத பொன்சேகா தலைமையிலான அன்பை ஒன்றையே புத்தர் போல் போதிக்கும் இராணுவத்துடன் இணைத்து எங்கள் இராணுவத்தை கட்டுகிறோம், மொத்ததில் 20% இருக்கும் நாங்கள் தேர்தலில் பங்கேற்று இலங்கையின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெற்று புதிய அரசியலமைப்பிற்கான வரைவை கொண்டுவர போராடுகிறோம், அநியாயமாக எங்களால் பிடிக்கப்பட்ட தளங்களை நிலங்களை நாங்கள் திருப்பி ஒப்படைக்கிறோம், இன்றைய உலகமயமாக்க சூழலில் எங்கள் தேவையை பொறுத்து அந்நிய மூலதனத்தை உற்பத்தியில் (ஊக முதலீட்டில் இருந்து வடிகட்டி) வரவேற்போம், இனி அமெரிக்காதான் உலகத்தின் ஒரே சூத்திரதாரி, நாங்கள் (ஈழம்) சிறிய நாடு எங்களை சுற்றி இந்தியா இருக்கிறது சீனா இருக்கிறது கடல் இருக்கிறது ஆகையால் இன்றுள்ள சூழ்நிலையில் இந்த சிறிய நாட்டில் மட்டும் எந்த புரட்சியும் சாத்தியமில்லை, ஆகையால் நாங்கள் அரசியலமைப்பு வரையரை செய்து மிகப் பெரிய சமூகப் புரட்சியை நிகழ்த்த திட்டமிட்டுள்ளோம், நாங்கள் (புலிகள்) மார்க்சியத்தின், மாவோவின் பெயரில் கட்சி இல்லாததால், இன்று மார்க்சியம் பொருந்தாது, லெனினியம் பொருந்தாது என்று கூறவேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானாலும் இத்தனை வருடம் கழித்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருந்தது, எங்களுக்கு (புலிகளுக்கு) முன்னமேயே தெரியும் ஆகையால் நாங்கள் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து ஒரு புதிய முன்மாதிரியை ஏற்கிறோம் என்று அவர்கள் (புலிகள்) கூறியிருந்தார்கள் என்றால் அவர்கள் ம.க.இ.க விற்கு உலக முன்மாதிரியாக மாறியிருப்பார்கள் நேபாள் போல்.

  பாவம் இவர்கள் நாங்கள் பின் வாங்குகிறோம் என்று சரியாக அறிவித்தார்கள். ஆனால் செயல்படுத்தவில்லை. மக்கள் இவர்கள் பின்னால் வந்தபோது மடத்தனமாக அவர்களுக்கு அரண் காத்தார்கள். சூப்பர் லிங்ஸ் ஒன்றை சொல்ல மறந்துவிட்டார். வெறும் 2000 பேர்கூட இல்லாத விடுதலைப் புலிகள் 4 லட்சம் பேரை மிரட்டி தன் பக்கம் இழுத்துச் சென்றார்கள். அதுதான் இந்தப் படுகொலைக்கு காரணம் என்று அவர்கள் விளக்கமாக எழுதவில்லை. (ஒரு வேளை எழுதியிருந்தால் இதுவரை நான் கவனிக்கவில்லை).
  மக்களை விட்டு அவர்கள் பின்வாங்கியிருக்க வேண்டும். அது அவர்கள் செய்த அரசியல் பிழை என்பது என் கருத்து. மீண்டும் கொரிலா யுத்ததிற்கு போயிருக்க வேண்டும். இதை விடுத்து கடைசி வரையில் மக்களோடு நின்று மரபுயுத்தம் நடத்தியது மிகப்பெரிய தவறு. இல்லை என்றால் சூப்பர்லிங்க்ஸ் அவர்களை திருப்தி படுத்தாவது நேபாளம் போல் அரசியல் சரண்டர் செய்திருக்கவேண்டும். அதை விடுத்து கடைசி வரை சரணடையாமல் இறுதியில் இராணுவ ரீதியாக சரண்டர் ஆனது யாருக்குத்தான் கோபம் வராது. சூப்பிர் லிங்க்சின் கோபம் ஞாயமானது. நான் புரிந்துகொண்டேன் நண்பா வருத்தப்படாதே. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இரயாகரன் போல் நாடு விட்டு ஓடவாவது தெரியவேண்டும், இல்லை கலையரசன் போல் இலங்கையின் நிதியில் வாழும் என்.ஜி.ஓவில் போய் அங்கே வாய்புரட்சி செய்து பிழைப்பதற்காவது முயற்சிசெய்ய வேண்டும். இதைப் போல் எந்த செயல் தந்திரமும் தெரியாத இவர்களை எப்படி சூப்பர்லிங்க்ஸ் புரட்சிக்காரனாக ஏற்றுக்கொள்வார். இதில் உள்ள உண்மைகளைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா நீங்கள். சூப்பர்லிங்க்சிடம் பாடம் கற்றுக்கொள்ள நேரம் கேளுங்கள். நமக்கு புதிய மார்க்சிய லெனினியத்தை கற்றுக்கொடுப்பார்.

  நான் ஏதோ என் அறிவுக்கு ஏற்றதுபோல் சில விசயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன். அதிலிருந்து எனக்கும் சில விமர்சனங்கள் புலிகளின் மீது உண்டு. அது அமெரிக்காவை கடைசியில் நம்பியது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்பியது. இவையெல்லாம் வற்றையும் விட ஆரம்பத்திலேயே அவர்கள் அறிவித்தார்களே நாங்கள் மீண்டும் தளத்தை கவைவிட்டு பின்வாங்குகிறோம் என்று அதை செயல்படுத்தாதது பிழையாக பார்க்கிறோம். மீண்டும் சர்வதேச அரங்கில் சாதகமான சூழ்நிலைவரையில் காத்திருப்பார்கள் என்று நினைத்தேன். இங்கேயுள்ள புரட்சிவாதிப்போல் இனி அமெரிக்காதான் ஒரு எஜமானன் எல்லாம் இவன் கீழே இனி மாற்றம் என்பதே இல்லை என்ற மாறாநிலை கண்ணோட்டத்தை இவர்கள் கடைசியில் ஏற்றுவிட்டார்களோ. அதனால்தான் பின்வாங்கவும் நினைக்காமல் நேபாள் போல் அரசியல் சரண்டராகவும் நினைக்காமல் மரபு யுத்தம் வீழும் வரை நடத்தினார்களோ என்று விமர்சிக்கிறேன்.

  இதில் எல்லாவற்றிலேயும் இவர்கள் தனி ஈழத்தை வெற்றிபெறுவதில் தோல்வி அடைந்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தினால் வந்த விமர்சனம். உங்களுடைய விமர்சனமோ புலிகளை வீழ்த்த காத்திருந்த நரிகளின் விமர்சனம் போல்தான் இருக்கிறது. புலிகள் ஒன்றும் அமைப்பை ஏற்படுத்தியவுடனேயே பலம் பெற்ற அமைப்பு இல்லை. அவர்கள் எந்தளவுக்கு தனி ஈழத்தை சமரசிமில்லாமல் தூக்கிப் பிடித்தார்களோ அந்தளவுக்கு செல்வாக்கு பெற்றவர்கள். அதை மறுத்து விட்டு ஏதோ அர்சியலே இல்லாத தாதாக்கள் போல் இருக்கிறது உங்கள் விமர்சனம். தனி ஈழம் தான் இங்கு அரசியல் இதிலிருந்துதான் உங்கள் அனைத்து காய்களும் (விமர்சனமும்) நகர்கிறது. இதை மூடி மறைத்துவிட்டு பிணத்திலிருந்து அரசியலை துவக்கும் கலைஞரின் அரசியலை பின் தொடராதீர்கள்.

  விமர்சனம் முதலில் அரசியலை மையப்படுத்துங்கள். பிறகு அவர்கள் செயலை விமர்சியுங்கள். இல்லையென்றால் வேண்டாத மருமகள் செய்ததெல்லாம் குற்றம் என்ற சொல்வடைதான்.

  //புலிகள் அழிந்த போது ராஜபக்சே அடைந்த‌ அளவிற்கு ம.க.இ.க வும் குரூரமாக மகிழ்ச்சி அடைந்த‌தற்கும் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ??//
  உங்கள் குரூரமான மகிழ்ச்சியை ஒப்புதலாக கொடுத்ததற்கு நன்றி. ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல.

  அதற்கான காரணத்தை நான் சொல்லட்டுமா. நேபாள் வர்க்கப் போராட்டத்தை எடுத்தபோது நீங்கள் அங்கு சாதியப் போராட்டத்தைப் பேசினீர்களே. அதுபோல் இலங்கையில் இனப்போராட்டம் வெடித்தபோது பார்ப்பனியப் போராட்டம் பேச வாய்ப்பில்லாமல் செய்துவிட்டார்கள் அதனால் உங்களுக்கு இந்த குரூரம். உலகத்தின் விடிவெள்ளியாய் நேபாளின் புரட்சி வளர்ந்துகொண்டிருந்தபோது காயடித்த காளையாய் மாற்றி ஆனானப்பட்ட மாவோயிஸ்ட் புரட்சியாளர்களே சரணடைந்தப் பிறகு இவர்கள் சுண்டக்காய் குட்டிமுதலாளியப் பயங்கரவாதிகள் இவர்கள் தனி ஈழத்தை விடத் தயாராக இல்லையே, உங்களால் எப்படி இலங்கையின் உள்ளே நுழைவது என்ற ஏக்கத்தால் வந்த குரூரம். பிரபாகரன் இறந்தார் அதனால் ஈழம் என்பது இறந்து விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தீர்கள் ஆகையால் இனி தனி ஈழம் என்பது இல்லை இலங்கை ஈழம் என்பதுதான் சரியென நினைத்துகொண்டிருந்தேன் அதை மற்றவர்கள் கேள்வி எழுப்பும்போது வந்த குரூரம். நேபாளில் அரசியல் நிர்ணயசபை வரையரையின் மூலமே மாவோயிஸ்டுகள் நிலபிரபுத்துவத்தை வீழ்த்திவிட்டார்கள் அதுபோல் புலிகளும், அங்கு அரசியல் நிர்ணய சபைக்காக எதிர்கட்சிகளுடன் இணைந்து இனவாதத்தை வீழ்த்த துப்பில்லாத புலிகளைப் பார்த்ததால் வந்த குரூரம். இப்படி குரூரம் வருவதற்கு அரசியல் காரணங்களை ஏராளம் சுட்டிக் காட்டமுடியும்.

  இதையெல்லாம் மீறி இன்றும் தனி ஈழத்திற்கான சூழ்நிலை இருக்கிறதா இல்லையா? என்பதைப் பற்றி விவாதம் நடுத்துங்கள். இதற்கு முன் புலிகள் காரணம் என்றீர்கள். இப்பொழுது நீங்கள் தப்பிப்பதற்கு உங்கள் லிஸ்டில் புலிகள் இல்லை. இனி யாரைத் தேடப் போகிறீர்கள்.

  1. /////////நீங்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா?
   இல்லாவிட்டால் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறீர்களா
   (பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய உரிமை)? ///////////////

   நிச்சயமாக அதிலென்ன சந்தேகம் ? நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்கிற முறையில், பாட்டாளி வர்கத்தின் தேசிய இனக்கோட்பாட்டின்படி அனைத்து தேசிய இனங்களுக்கும் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை” ஆதரிக்கிறோம். தமிழ்தேசிய இனத்திற்கு மட்டும் அது விதிவிலக்கு அல்ல! அதே நேரத்தில் தனி ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பதை தமிழ் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியும் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ம.க.இ.க வோ மாவோயிஸ்டுகளோ முடிவு செய்ய முடியாது ?

   சரி, இதில் உங்கள் நிலைப்பாடு என்ன ?

   இந்த ஒரு கேள்விக்கு பிறகு உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் கூறியிருக்கும் குரூரம்,ராஜபக்சே,பார்ப்பனியம் என்கிற‌ அனைத்தும் உளரல்கள்.

   அதன் பிற‌கு கோக்ஷ்ட்டி சேர்க்கும் விதமாக இரயாகரனையும் கலயரசனையும் கூட இந்த விவாதத்திற்குள் இழுத்துவிட்டிருக்கிறீர்கள். இரயாகரனை நாங்கள் புரட்சிக்காரர் என்று சொன்னோமா ? ஒரு புலம் பெயர்ந்த அகதி தமிழர் என்கிற வகையிலும், மார்க்சியத்தை ஏற்கிறார் என்கிற‌ வகையிலும் அவருடனான தொடர்பை பேனினோம். இறுதியாக அவருடைய வறட்டுவாத போக்கை கண்டித்து விமர்சனமும் செய்திருக்கிறோம். ( சுட்டி அறிவிப்பு: “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!! http://www.vinavu.com/2009/08/27/raya2/
   தற்போது அவர் மீது அசோக் கூறியிருக்கும் விமர்சனங்களுக்கும் கருத்து கூறுவோம்.

   இரண்டாவதாக‌ கலையரசன்,
   தோழர் கலையரசன் தனது நிலைப்பாட்டை விளக்கி கட்டுரையே எழுதி விட்டார். தனக்கும் அந்த என்.ஜி.ஓ வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களுடைய‌ அந்த கூட்டத்தில் கூட அவர்களை விமர்சனம் செய்து தான் பேசினேன் என்றும் கூறிவிட்டார். அதன் பிறகும் அவரை இழிவுபடுத்துகிறீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன ?

   ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பான‌ WSF மும்பையில் நடத்திய‌ மாநாட்டில் கலந்து கொண்டு அதிலுள்ள “ஜனநாயக,முற்போக்கு,புரட்சிகர” சக்திகளை வெண்றெடுக்க கிளம்பிய புரட்சியாளர்களான நீங்கள் கலையரசனை குற்றம்
   சாட்டுவது தான் நல்ல‌ கேலிக்கூத்து. கலையரசன் கூட அந்த என்.ஜி.ஓ கூட்டத்தில் போய் அவர்களையே விமர்சனம் செய்து தான் பேசியிருக்கிறார். ம.க.இ.க வும் அப்போது WSF ஐ அவர்களுடைய மேடையிலேயே வைத்து அம்பலப்படுத்துகிற‌ வேலையை தான் செய்தது. அதற்கு மாற்றாக அதே மும்பையில் அவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே‌ இன்னொரு மாநாட்டையும் நடத்தியது. ஆனால் அவர்களையே வெண்றெடுக்கிற புரட்சிகர பணியை செய்தது நீங்கள் தான். நீங்கள் கலையரசனை அவதூறு செய்கிறீர்கள்!!

   1. //நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்கிற முறையில், பாட்டாளி வர்கத்தின் தேசிய இனக்கோட்பாட்டின்படி அனைத்து தேசிய இனங்களுக்கும் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை” ஆதரிக்கிறோம். தமிழ்தேசிய இனத்திற்கு மட்டும் அது விதிவிலக்கு அல்ல! அதே நேரத்தில் தனி ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பதை தமிழ் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியும் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ம.க.இ.க வோ மாவோயிஸ்டுகளோ முடிவு செய்ய முடியாது ?//

    தனி ஈழத்தை ஆதரிக்க்கவில்லை என்பதை மறுத்திருக்கிறீர்கள். நீங்கள் சுயநிர்ணய உரிமையை மட்டும் ஆதரித்திருக்கிறோம் என்ற பொதுக்கோட்பாட்டை சொல்லியிருக்கிறீர்கள். நன்று. சரி பாட்டாளி வர்க்க கோட்பாடு பொதுவான விதியைமட்டும்தான் சொல்லும் என்று கூறுகிறார்களா. குறிப்பான சூழ்நிலையில் அங்கு தனி ஈழம் என்று சொல்வதற்கு பாட்டாளி வர்க்க கட்சி கூறக்கூடாதா.

    இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவதை மார்க்ஸ் ஆதரித்தார். அப்பிரிவினையை ஆதரித்ததற்கு மார்க்ஸ் அளித்த விளக்கத்தைப் பார்ப்போம்.
    “…….இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவது சாத்தியமில்லை என்று முன்பு நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுபிரிவது தவிர்க்க முடியாதது என இப்பொழுது நினைக்கிறேன். ஆனால் ஒரு வேளை அப்பிரிவுக்குப் பிறகு ஒரு கூட்டாட்சி அமைந்தாலும் அமையலாம்”. இது 1867 நவம்பர் 5ம் தேதி மார்க்ஸ் எங்கல்சுக்கு எழுதியது. மேலும் மற்றொரு கடிதத்தில் அப்பிரச்சனைக்கு அவர் அளித்த தீர்வு “…. ஐரிஷ் மக்களுக்கு வேண்டியதாவது, சுயாட்சியும் இங்கிலாந்தின் பிடிப்பிலிருந்து விடுதலையும்”

    “ஒரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது இன்னொரு தேசிய இனத்துக்கு எவ்வளவு துர்பாக்கியம்” அயர்லாந்து இங்கிலாந்தின் தளையிலிருந்து விடுபடும் வரை ஆங்கிலேய தொழிலாளிவர்க்கம் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. அயர்லாந்தை இங்கிலாந்து அடிமைப்படுத்தியதால் இங்கிலாந்தில் பிற்போக்கு வலுப்பெற்று ஊட்டம் பெற்று விட்டது. (பல தேசிய இனங்களை ரஷ்யா அடிமைப் படுத்தியதால் அங்கு எவ்வாறு பிற்போக்கு ஊட்டம் பெற்றிருக்கிறதோ அதே போல் தான்)” (பக்கம்-79,80, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-லெனின்).

    அந்த நாட்டில் நிலவும் அரசமைப்பு முறை (ஒடுக்கப்பட்ட இனத்தவர்) வர்க்கப் போராட்டம் தடையின்றி நடத்துவதற்கு வகை செய்கிறதா? என்பதை பொறுத்துத்தான் அது பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்யமுடியும்.

    இது லெனினியம், பாட்டாளிவர்க்க பார்வை. ஈழத்திற்கு வருவோம். அங்கு பெரும்பான்மையான மக்கள் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை என்று உங்களுக்கு யாராவது கூறினார்களா. நீங்கள் ஏதாவது இரகசிய வாக்கெடுப்பு நடத்தினீர்களா. கொஞ்சம் வெளியிடுங்களேன். நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.

    நான் அறிந்த வரையில் உங்களால் அப்படியொரு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதை அறிகிறேன். அப்படியொரு வாக்கெடுப்பை நடத்துவதற்கு மக்கள் கருத்தை அறிவதற்கு அந்த அரசு ஒன்றும் ஜனநாயக அரசு இல்லை. உங்களுக்கு அது ஜனநாயக அரசாகத் தெரிகிறதா என்று தெரியவில்லை. இப்படி இருக்கும்போது அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நயவஞ்சகமாக கூறுவதும், பாட்டாளி வர்க்க கடமையாக குறிப்பான நாட்டின் குறிப்பான சூழலிலிருந்து அது தனியாக போக வேண்டுமா இல்லை சேர்ந்தே இருக்கவேண்டுமா என்று கருத்துருவாக்கி எதை ஆதரிப்பது என்பதை முடிவுசெய்வதையே தவறு என்கிறீர்கள். மறைமுகமாக இப்படி முடிவு செய்து கூறிய மார்க்சையும், லெனினையும் கேலி செய்கிறீர்கள்.

    சரி இப்பொழுது தனி ஈழத்திற்கு போராடுபவர்களை ஆதரிப்பது தவறு அது அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று புதிய ஜனநாயகம் பேசுகிறீர்களே, அவர்கள் எப்போது உங்களிடம் தனியாக போகக் கூடாது என்று கூறினார்கள். ஒன்றாக சேர்ந்து இருக்கவேண்டும் என்று உங்களிடம் கூறினார்கள். அதை கொஞ்சம் விளக்குங்களேன். நீங்களாகவே தனி ஈழம் கூடாது என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள். மீண்டும் கேட்கிறேன். நீங்கள் அந்த ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு ஏதாவது எடுத்தீர்களா. அப்படி எடுக்காமல் நீங்கள் மட்டும் தனி ஈழம் கூடாது என்று எப்படி முடிவு செய்தீர்கள்.

    ஆமாம் என் நிலைப்பாடு தனி ஈழம் தான். அதை எப்படி என்று வேண்டுமானால் மார்க்சிய ரீதியாக விவாதிக்க நான் ரெடி நீங்க ரெடியா. ஒன்றை அழுத்திக் கூறுகிறேன். நான் மாவோயிஸ்ட் என்று நீங்களாகவே ஒரு ரெடிமேட் முத்திரை குத்தி என்னை அதில் அடைத்து விமர்சனம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

    மாவோயிஸ்டுகள் தேசிய இனப் பிரச்சனையை என்றுமே ஒழுங்காக புரிந்துகொள்ளவில்லை. இதை ஏன் குறிப்பிட விரும்புகிறேன் என்றால் தெலுங்கானவை தனியாக பிரிக்க வேண்டும் என்று எந்த மார்க்சிய வரையரை அவர்களுக்கு கத்துக்கொடுத்தது என்று எனக்கு தெரியாது. உங்களை போன்றவர்களுக்கு அங்கே பெரும்பாண்மை மக்கள் இன்றுள்ள ஏதோ ஒரு நிலையில் தெலுங்காவினை ஆதரித்து பெரும்பாண்மை பெறலாம். ஆனால் அதை சரியென்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று தேசிய இனத்தினை இரண்டாக உடைத்து அங்கு ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யப் போகிறீர்களா. ஏனென்றால் நீங்கள் மக்கள் பின்னாலே போகத்தான் லாயிக்கி. அவர்களுக்கு எது சரியானது என்பதை புரியவைத்து அணிதிரட்டி அவர்களை உங்கள் கருத்துக்கு பெரும்பாண்மை பெற முயற்சிக்க மாட்டீர்கள். நீங்கள் வால்தான் என்றும் தலையாக வாய்ப்பே இல்லை. ஏனென்றால் உங்களைப் பொருத்தவரையில் மார்க்சிய அடிப்படையில் ஒரு சுயமான கருத்தை உருவாக்கிக் கொள்வதே தவறு என்று பார்க்கிறீர்கள். இப்படி எனக்கு விமர்சனம் இரண்டு பேரின் மீதும் இருக்கிறது. என்னை முத்திரை குத்தி உங்களை ஞாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள். குழாயடிச் சண்டையில் நீ பத்தினியா என்று ஒருவர் கேட்டால் நீ மட்டும் என்ன பத்தினியா என்று திருப்பிக் கேட்பது போல் இருக்கிறது உங்களுடைய வாதம். ஒரு மோசமான மனிதன்கூட அடுத்தவனைப் பார்த்து நான் தான் கெட்டுப்போயிட்டேன், நீயாவது ஒழுங்குக்கு வா என்று சொல்வான். அந்த அக்கரை கூட மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்ளும் உங்களிடம் அந்த நாகரீகம் இல்லை. நேர்மை இல்லை.

    1. இது மார்க்சியம் இது லெனினியம் என்று நன்றாகத்தான் மார்க்சிய வகுப்பு எடுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது இருபத்தியோராம் நூற்றாண்டில் என்பதை மறந்து விட்டு மார்க்சியம் என்று ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். மார்க்ஸ் அயர்லாந்து பிரச்சனையை பற்றி சொன்னது ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்னர், ஆனால் இன்றும் அதையே கெட்டியாகக் கட்டித்தழுவிக்கொண்டு இதோ பார் மார்க்சிய ஆதாரம் என்கீறீர்கள். நல்ல காமெடி தான் உங்களோடு. மார்க்ஸ் உலகப்புரட்சியை பற்றி கூடத்தான் சொல்லியிருக்கிறார் அதனால் உலகம் முழுவதும் புரட்சி நடந்துவிட்டதா என்ன ?

     மீண்டும் சொல்கிறேன் தனி ஈழம் தான் தீர்வு என்கிற‌ உங்களுடைய விருப்பத்தை, வேறு ஒரு நாட்டைச் சேர்ந்த உங்களுடைய விருப்பத்தை இன்னொரு நாட்டு மக்கள் மீது தினிக்க‌ உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் இனவிடுதலைக்காக‌ குரல் கொடுக்கிறீர்கள் என்றால் முதலில் உங்களுடைய த‌மிழ் நாட்டை தனி நாடாகப்பிரிக்க போராடுங்கள், காக்ஷ்மீரை தனி நாடாக்க போராடுங்கள்.அதற்கு பிறகு ஈழ‌த்தை பற்றி சவடால் அடியுங்கள். இன்னொரு நாட்டில் நடக்கும் ஒரு இனப்பிரச்சனைக்கு இவ்வளவு வரிந்து வரிந்து எழுதும் நீங்கள் இந்த நாட்டிற்குள்ளேயே காக்ஷ்மீர் என்கிற ஒரு தேசம், அறுபது ஆண்டுகளாக நயவஞ்சகமான முறையில் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று வரை முழு நாடுமே சிறைச்சாலையாக்கப்பட்டிருப்பது குறித்து இதுவரை பேசியிருக்கிறீர்களா ? எழுதியிருக்கிறீர்களா ? போராடியிருக்கிறீர்களா ?

     ஈழ மக்களுக்கு மட்டும் அல்ல, காக்ஷ்மீரிகளுக்கும் நாங்கள் அதையே தான் சொல்கிறோம், அவர்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுடைய நோக்கம் ஒன்று தான், ம.க.இ.க தனி ஈழத்திற்கு எதிரான அமைப்பு என்பதை நிறுவுவது மட்டும் தான் உங்களுடைய நோக்கம் என்பது நன்றாகப் புரிகிறது. ஆக இறுதியாக‌ நீங்கள் மாவோயிஸ்ட் தோழரும் இல்லை, ஆனால் அதை இவ்வளவு நாட்களாக சொல்லாமல், உங்களுடைய அமைப்பு எது என்பதைக் கூட‌ அடையாளம் காட்டிக்கொள்ளாமல் விவாதித்ததற்கு என்ன காரணம் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா ? விவாதிக்க அது எதற்கு என்கிறீர்களா, தமிழகத்தில் தமிழின‌வாதிகள் தான் தற்போது எம் மீது கொலைவெறியோடு இருக்கிறார்கள், அந்த இனவாத கும்பலில் நீங்கள் எந்த முகாமைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்டால் உங்களுடன் விவாதிக்க எனக்கு இன்னும் வசதியாக இருக்கும்.

    2. சூப்பர்லிங்க்ஸ், மார்சியம் இப்படி சொல்லியிருக்கிறது என்ற சொன்னவுடனேயே கோபம் வருகிறது. மார்க்சியத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா.
     மார்க்சியம் பற்றி கோடிட்டு காட்டியதற்கே வெறுப்பெதற்கு. இது போன்ற இணையதளம் என்பது மார்க்சிய விவாதத்திற்கு ஏற்றதல்ல மார்க்சியம் என்பது இரகசியமாக நமக்குள் பேசிக்கொள்ளும் விசயம் என்று சொல்லியிருந்தால், நான் அதை கோடிட்டே காண்பித்திருக்கமாட்டேன்.

     நீங்கள் 21ம் நூற்றாண்டு சொல்லியபிறகுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
     மார்க்சியம் என்பது இந்த நூற்றாண்டில் ஏதோ ஒன்று என்று எழுதியிருக்கிறீர்கள்.

     நீங்கள் எவ்வளவுதான் கோபப்பட்டாலும் நான் அரசியல் விவாதமாகவே எடுத்துசெல்ல முயல்கிறேன்.

     21ம் நூற்றாண்டில் அடிப்படை மார்க்சியம் என்பது மாறிவிட்டதாக கருதுகிறீர்களா?
     ஏகாதிபத்தியம் லெனினியம் வரையறுத்தது
     ——————————————————————–
     ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனம் இல்லாமல் மற்ற நாடுகள் இல்லாமல் முன்னேற முடியும் என்பது காலாவதியாகிவிட்ட ஏகாதிபத்தியம் மரணப்படுக்கையில் உள்ள ஏகாதிபத்தியம் என்பது இப்பொழுது தவிர்க்க முடியாத பாத்திரத்தை வகிக்கிறதா?
     ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பன்னாட்டு முதலாளிகள் பொருளாதார ரீதியாக பங்கிட்டுக்கொள்கிறார்கள் என்றது இன்று மறைந்து விட்டதா?
     ஏகாதிபத்தியம் தங்களுக்குள் உலகை பங்கிட்டுக்கொள்வது இன்று இல்லாமல் போய்விட்டதா?
     இதில் எது 21 நூற்றாண்டுக்கு பொருந்தாமல் போய்விட்டது.

     தேசிய இனப் பிரச்சனை குறித்து:
     —————————————————
     தேசிய இனப்பிரச்சனை என்பது வர்க்க சாராம்சத்தை இழந்துவிட்டதா. அதாவது ஒரு முதலாளித்துவக் கட்டத்தின் வளர்ச்சிதான் இனம் என்பதை மறுக்கிறீர்களா?
     ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தில் முதலாளித்துவக் கோரிக்கையாக இருந்த தேசிய இனப் பிரச்சனை இன்று பாட்டாளிவர்க்க கோரிக்கையாக இவர்களின் தோளில் சுமத்தப்பட்டுவிட்டது மாறிவிட்டது என்ற லெனினிய வரையரையை நீங்கள் 21ம் நூற்றாண்டில் ஒழிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?
     தேசிய இனப் பிரச்சனையை பிரிந்து வாழவேண்டுமா? சேர்ந்து வாழவேண்டுமா? என்பதை குறிப்பான அந்த நாட்டின் சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவு செய்யவேண்டும் என்ற லெனினிய வரையரையை 21ம் நூற்றாண்டு இல்லாமல் செய்துவிட்டதா?

     பாசிசம் குறித்து:
     ————————–
     பாசிசம் என்பது வர்க்கம் சார்ப்பானது என்ற லெனினிய வரையரையை நீங்கள் மறுக்கிறீர்களா?
     இவையெல்லாம் தானாக ஒழிந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை அதற்கான காரணிகளை நாம் ஒழித்துக்கட்டும்போதுதான் மாறுகிறதா?

     இவையெல்லாம் 20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் வரையரை செய்யப்பட்ட அடிப்படையான முடிபுகள். இவையெல்லாம் 21ம் நூற்றாண்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் இல்லையா. இல்லை அந்த முடிபுகள் தான் மாறிவிட்டதா. இதையெல்லாம் மறந்துவிட்டு நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்ற பதில் சொல்வது குதர்க்கவாதம். இப்பொழுது இந்தப் பிரச்சனைகள் எல்லாம் மிக மிக உச்சநிலையை அடைந்திருக்கிறது. இன்னும் சரியாக சொல்லப்போனால் சாகும் தருவாயில் மரணப்படுக்கையில் இருக்கிறது. ஆனால் அதை மாற்றுவதற்கான சக்தி பலம் பெறாத வரையில் அது எவ்வளவு பிற்போக்கான சமூகமாக இருந்தாலும் தன்னை அழித்துக்கொள்ளாது. அந்த மாற்றத்தை நாம் தான் செய்யவேண்டிய பணியாக இருக்கிறது. இது நீங்கள் அறிந்த ஒன்றாக இருக்கும். இருந்தாலும் நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இதையெல்லாம் ஏதோ இருபதாம் நூற்றாண்டிலே ஒழிக்கப்பட்டதாகவும், ஆகையால் 20 நூற்றாண்டில் சொல்லப்பட்ட இந்த மார்க்சிய லெனினிய வரையரை எல்லாம் இன்று மாறிவிட்டது என்ற அடைப்படையிலும் வாதம் செய்வது சரியானது அல்ல. இவையெல்லாம் அளவு மாற்றம் தான் பண்பு மாற்றம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. அதற்கான கூறுகள் இன்றும் இருக்கிறது. இதிலிருந்தே நான் மேற்கண்டதை கூறுகிறேன். இது வகுப்பு போல் உங்களுக்கு தோன்றினாலும் தவிர்க்கமுடியவில்லை. ஏனென்றால் குற்றம் சொல்வது ஒரு வரியில் முடியும். சரியானது என்று சொல்வது ஒரு வரியில் முடியாது.

    3. மார்க்ஸ் உலகப் புரட்சி வரும் என்று சொன்னார் என்று சொல்கிறீர்கள். அவர் மார்க்சியத்தை முதன் முதலில் உருவாக்கும்போது தனது அனுபவத்தையும் அறிவியையும் வளர்துகொண்டே வந்தார். அவர்தான் அனைத்துயும் ஒரு சரியான வரலாற்று பொருள்முதல்வாத நிலையிலிருந்து கற்றுக்கொண்டுவந்தார், நமக்கெல்லாம் கற்றும் கொடுத்தார். சரியானதை அவர் ஏற்றுகொண்டு மாற்றிக்கொள்ள அவர் என்றும் மறுத்ததில்லை. மாறாநிலைவாததில் அவர் என்றும் இருந்ததில்லை.

     பிரான்சு புரட்சியை அவர்தான் தத்துவ வழிக்காட்டியாக இருந்தார். அது ஒரு நாட்டினுடைய புரட்சி. உலகப் புரட்சி என்று முடிவு செய்துவிட்டார் என்று சொல்லி அவர் மாற்றிகொள்ளாமல் இருக்கவில்லை. அதேபோல் அயர்லாந்து பிரச்சனையையும் முதலில் பிரிவது சரியானதாக இருக்காது என்று நினைத்தார். ஆனால் மீண்டும் அதை குறிப்பாக ஆய்வுசெய்துதான் அயர்லாந்தை விட்டொழிக்காதவரையில் அயர்லாந்தில் மட்டுமல்ல பிரிட்டனிலும் வர்க்கப் புரட்சி சாத்தியமில்லை என்றார். ஏனென்றால் பிரிட்டனின் பாட்டாளி வர்க்கம் மிகவும் பிற்போக்காக மாறிவிட்டது. ஆகையால் பிரிட்டனிலிருந்து அயர்லாந்து பிரிந்து போவது தவிர்க்க முடியாது என்று நினைத்தார்.
     உங்களைப் போல் அவர் மாயாநிலைவாதம் பேசவில்லை. அந்த பொருள் தன் இருப்பை வைத்துக்கொண்டிருக்கும் வரையில் அதனுடைய முரணும் மாறுவதில்லை. குதர்க்கவாதம் வேண்டாம். இன்னொன்று ஆசான்களிடம் கற்றுக்கொள்ளும் போது தன்னடக்கம் வேண்டும். அது இல்லை என்றால் எதையும் கற்கவும் முடியாது அழிந்து போவோம். நிச்சயாமாக அது உங்களிடம் இலலை. இது உங்களை குற்றம் சொல்வதற்காக எழுதப்பட்டது இல்லை. அவர்களை கோடிட்டுக் காட்டியவுடனேயே உங்களுக்கு அளவிலா கோபம் வந்தது. அது சரியானது இல்லை. வகுப்பு என்பது ஒன்றும் நமக்கு எதிரியான விசயமில்லை. நீங்களும் வகுப்பெடுங்கள். மார்க்சிய, லெனினிய வகுப்பெடுங்கள். அதைவிடுத்து நான் தான் அறிவாளி அவர்கள் எல்லாம் ஏதோ பழைய சரக்கு என்ற பாணியில் பதில் அளிக்காதீர்கள். அது உங்களையும் அழித்துவிடும் உங்களைப் போன்றவர்களால் அமைப்பையும் அழித்துவிடும்.
     மாவோவின் வார்த்தையில் சொல்வதென்றால், மாணவனாகவும் (முதலில் – அழுத்தம் என்னுடையது), ஆசிரியனாகவும் இருங்கள் என்றுதான் கூறியிருக்கிறார். எனக்கு நீங்கள் மார்க்சிய விவாதம் நடத்துவதால் ஈகோ எல்லாம் கிடையாது. சமூக பிரச்சனையின் விடிவுகளை தேடிப் போக வேண்டும் ஆரோகியமாக சரியாக.

    4. //காக்ஷ்மீர் என்கிற ஒரு தேசம், அறுபது ஆண்டுகளாக நயவஞ்சகமான முறையில் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று வரை முழு நாடுமே சிறைச்சாலையாக்கப்பட்டிருப்பது குறித்து இதுவரை பேசியிருக்கிறீர்களா ?//

     மிகச் சுருக்கமாகவே எனது கருத்தை பேசுகிறேன். காஷ்மீர் இனம் இரண்டு துண்டாக உடைக்கப்பட்டது. ஒரு பகுதியை பாக்கிஸ்தான் பங்குபோட்டுக்கொண்டது. அது ஆஜாத் காஷ்மீர். ஒரு பகுதி இந்தியா பங்குபோட்டுக் கொண்டது. அது ஜம்மு காஷ்மீர். அந்த இனத்தை வைத்து இரண்டு நாடுகள் ஆப்பம் தின்ற குரங்காக தமக்குள் சண்டை இட்டுக்கொள்கிறது யார் மொத்தத்தையும் விழுங்குவது என்று.

     அது ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. காஷ்மீரி மன்னரால். மக்களால் அல்ல. அந்த இனத்தின் உரிமை (இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனத்தின் உரிமையும் கூட) இந்தியாவில் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வித்தியாசம் காஷ்மீர் இனத்தின் முரண் பிரதன முரணாக நிற்கிறது காஷ்மீர் மக்களுக்கு. பாகிஸ்தானாகட்டும், இந்தியாவாகட்டும் இதை மதப் பிரச்சனையாக இவர்களாகவே மாற்றி திசைதிருப்பி ஒடுக்க நினைக்கிறார்கள். ஆனால் அது முழுமையான இனப் பிரச்சனை. ஒடுக்கப்படும் நாடுகளின் அனைத்து இனங்களுக்கும் இரண்டு வகையான ஒடுக்குமுறையுள்ளது. ஒன்று அந்த அரசுனுடைய ஒடுக்குமுறை, உதாரணமாக சொல்லவேண்டுமானால் இந்தியாவினுடையதும், பாகிஸ்தானுடையதுமான ஒடுக்குமுறை, இன்னொன்று ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறை என்ற இரண்டு ஒடுக்குமுறை நிலவுகிறது. ஆகையால் அது இரண்டையும் எதிர்க்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

     மற்ற மாநிலங்களில் இல்லாதது, அதன் முரண் ஒன்று சேர்ந்து வாழமுடியாத சூழ்நிலையின் அளவுக்கு முரண் முற்றிபோய்விட்டதுதான். அதை முற்றிலும் இராணுவ முற்றுகையிலேயே வைத்துக்கொண்டு ஒரு சர்வாதிகார ஆட்சி செய்துகொண்டிருப்பதுதான். ஒரு ஜனநாயக ஆட்சியின் கீழ்தான் சுயநிர்ணய உரிமை கோரமுடியும். அதுவுமில்லாமல் அந்த மக்களுக்கு மற்ற பகுதிகளோடு வாழ்வதற்கான அனைத்தும் ஜனநாயகமற்ற முறையில் மறுக்கப்படுகிறது.

     இதை ஜனநாயக ரீதியில் தீர்க்கவேண்டுமானால், தேசிய சுயநிர்ணய உரிமை அடிப்படையில், அமைதி வழியில் தீர்க்கவேண்டுமானால், உண்மையில் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்றால் அவர்கள் அந்த இனம் ஒன்று சேர்ந்து இருப்பதா, இல்லை பிரிந்து தனித்திருப்பதா என்று இந்தியா மட்டுமில்லை பாகிஸ்தானும் ஆஜாத் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். இதுதான் ஜனநாயக முறைப்படி தீர்க்கபடவேண்டிய உலகநாடுகளின் முறை. இராணுவ முறைப்படி தீர்க்கவேண்டுமானால், வன்முறையின் அடிப்படையில் ஆளும் கும்பல் தீர்க்கநினைத்தால் அது தனிநாடாக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. அங்கு வர்க்கப் போராட்டத்திற்கு தடையாக இருப்பது இனப்பிரச்சனையே. ஆகையால் அதை விடொழிக்காதவரையில் நமக்கே ஒரு ஜனநாயகத் தீர்வு கிடையாது.

     காஷ்மீரை இரண்டு பங்காக பிர்த்து ஆளுவது எக்காலத்திலும் ஏற்புடையது அல்ல. நாம் பிரித்தால் பாகிஸ்தான் பிடித்துக்கொள்ளும் என்று சொல்வதும். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து பிரித்தால் இந்தியா பிரித்துக்கொள்ளும் என்று சொல்வதும் கபட நாடகமே. நம் அறியாமைக்கு ஒரு பதில் எந்த குழந்தையும் எழுந்து நடக்கும் போது பலமுறை விழுகிறது, அடிப்படுகிறது, ஏன் ஒரு சில நேரங்களில் மரணம் கூட நிகழ்கிறது. அதற்காக எவராவது அதை சுயமாக நடக்கப் பழகுவதில்லையா. அடுத்தவர்கள் பிடித்துக்கொள்கிறார்கள் என்று ஏமாற்று மொழி பேசி அவர்களை அடக்குவது ஞாயமா. சரியான முறையில் ஒரு ஜனநாயக முறையில் இந்தியா நடத்தினால் ஆஜாத் காஷ்மீர் மக்கள் கூட இந்தியாவோடு இணைய நினைக்குமே. இவர்களே இந்தியாவை சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயராலும், இது போன்ற பல்வேறு பெயராலும் நம் நாட்டியையே கிழக்கிந்திய கம்பெனிக்கு தாரை வார்ப்பது போல் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறார்களே, எத்தனையோ விளை நிலங்களை பகுதிகளை ஏகாதிபத்தியங்களுக்கு தாரை வார்துக்கொண்டிருக்கிறார்களே இவர்கள் தேசபக்தியை பேசுவது, ஒரு இன்ச் (inch) கூட அடுத்தவனுக்கு விட்டுத்தரமாட்டேன் என்று வீரவசனம் பேசுகிறார்களே இன்னுமா நாம் ஏமாளிகளாக இருக்கிறோம். நம் நாட்டை காப்பாற்ற வேண்டும், ஜனநாயகத்தோடு, சுதந்திரத்தோடு, அடிமையாக அல்ல.

     குறிப்பாக நம் தமிழ்நாட்டைப் பொருத்தவரையிலும், பெரும்பாலும், இன முரண்பாடு பகைமுரண்பாடாக மாறவில்லை, ஆகையால் இதை சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜனநாயகப் படுத்தமுடியும். அதற்கு இந்த ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடினால், இந்த ஜனநாயக மற்ற ஆட்சியை எதிர்த்து ஒரு சோசலிச ஆட்சியை அமைக்கப் போராடினால் நிச்சயமாக மாற்ற முடியும். அதற்கு நமக்குத் தேவை.
     இவையெல்லாம் ஏதோ நான் தான் இபோழுது புதுசாக சொல்லவில்லை. பெரும்பாண்மையாக உள்ள கம்யுனிஸ்ட் கட்சிகள் கூறிவிட்டது. புரட்சிகர கட்சிகளினுடைய நிலை இதுதான். அவர்களுடைய கருத்து எனக்கு ஏற்புடையதாக இருப்பதால் இதை வழிமொழிகிறேன். அவ்வளவே.

     //ம.க.இ.க தனி ஈழத்திற்கு எதிரான அமைப்பு என்பதை நிறுவுவது மட்டும் தான் உங்களுடைய நோக்கம் என்பது நன்றாகப் புரிகிறது. //

     ம.க.இ.க. தனி ஈழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஊரறிந்த விஷயம்தான் இதை ஏன் நான் நிரூபிக்கவேண்டும். அதை அவர்களும் மறுக்கவில்லையே. நீங்கள் ம.க.இ.க.வா என்பதுதான் சந்தேகமே. ஏன் என்றால் அவர்கள் ஏற்கெனவே இதுதான் எங்கள் கருத்து என்று தெளிவாக சொல்லிய விஷயத்தை நான் நிரூபிக்க நேரத்தை விரயம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால் அதுதான் மற்றவர்களுடனான எல்லா தத்துவ முரணுக்கும் அடிப்படை என்பதை கூறுகிறேன். அதை மறுத்து ஏதோ புலிகளால்தான் முரணே மற்றவர்களுடன் முளைத்ததாக நீங்கள் எழுதுவதுதான் வேதனை சந்தர்ப்பவாதம். இந்த அரசியல் முரண்பாட்டினாலேயே, அதற்காக போராடும் அமைப்புகளை ஆதரிப்பதா வேண்டாமா என்ற சிக்கல் தீர்க்கப்படுகிறது. இதை விடுத்து சுற்றி சுற்றி உங்கள் சந்தர்ப்பவாத விவாதம் வேண்டாம். அதனால் எந்த கருத்தையும் மக்கள் முன் நிலைநாட்டமுடியாது. அது திராவிட கட்சிகள் அளவுக்கு மலிந்துபோனதாக மாறிவிடும். தெளிவாக உங்கள் நிலையிலிருந்து விவாதியுங்கள். கூறுவதற்கு வேறொன்றும் இல்லை.

   2. //இரண்டாவதாக‌ கலையரசன்,
    தோழர் கலையரசன் தனது நிலைப்பாட்டை விளக்கி கட்டுரையே எழுதி விட்டார். தனக்கும் அந்த என்.ஜி.ஓ வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களுடைய‌ அந்த கூட்டத்தில் கூட அவர்களை விமர்சனம் செய்து தான் பேசினேன் என்றும் கூறிவிட்டார். அதன் பிறகும் அவரை இழிவுபடுத்துகிறீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன ?//

    எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் அங்கு விமர்சனம் செய்துதான் பேசினார் என்று உறவையும் கூறியிருக்கிறீர்கள். இந்த சுய முரண்பாடு ஏன்?

    என்.ஜி.ஓ அமைப்பில் அவர்களை எதிர்த்து பேச கலந்து கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளலாமா. இதுதான் ம.க.இ.கவின் கொள்கை என்று எடுத்துக்கொள்ளலாமா. ஆகையால் என்.ஜி.ஓ.வின் கூட்டத்தில் கலந்து கொள்வது சரியா தவறா என்பது அவர் அங்கு ஆதரித்து பேசுகிறாரா? எதிர்த்துப் பேசுகிறாரா? என்பதை வைத்துத்தான் முடிவு செய்யவேண்டும். இது தான் உங்கள் இறுதி கருத்தாக வந்தடைவது. நீ மட்டும் பத்தினியா என்று எதிர் கேள்வி வேண்டாம்? நான் பத்தினி இல்லை என்றால் நீ பத்தினியாக இருக்க விரும்பவில்லை என்றுதான் பொருள். என்னைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைத்தல் என்பது போல் நானும் சரியாக இருக்கவேண்டும், மற்றவர்களும் சரியாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவேன். நான் சோரம்போய் விடதாலேயே அடுத்தவனும் சோரம் போகவேண்டும் என்று நினைப்பேனா? நல்ல விளக்கம்.

    இன்னொரு விளக்கம். உங்கள் மேடையில் எதிர்கருத்தை பேசும் ஆர்.எஸ்.எஸ். காரரையோ, இல்லை தி.மு.க., அ.தி.மு.க. காரரையோ பேச அனுமதிப்பீர்களா? தி.மு.க. அல்லது ஆர்.எஸ்.எஸ் மேடையில் உங்களை அழைத்து பேசவைப்பார்களா. குழந்தைக்கு கூட தெரியும் பதில். ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு ஆதரவான ஒரு அரசியலை நீங்கள் முன்மொழிபவராக இருந்தால் மட்டுமே அவர்கள் மேடையை உங்களுக்கு விட்டுத் தர சம்மதிப்பார்கள். எடுத்துக்காட்டாக பெரியார்தாசனை உங்கள் மேடையில் ஏற்றுவது போல். எவரும் நேரெதிரானவர்களை ஏற்றமாட்டார்கள். அதிலும் INSD Members Blog என்று உறுப்பினர் அந்தஸ்தை அவர்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

    இதையெல்லாம் கூறுவதின் என் நோக்கம் தெளிவானது. ஏதோ ஒரு வகையில் நீங்கள் INSDக்கு அதன் அரசியலுக்கு இலங்கை அரசுக்கு ஒரு நன்மையை மேடை ஏறி செய்யப்போகிறீர்கள் என்று கருதலாம். அப்படி இல்லை என்றால் அதை வைத்து நீங்கள் ஏதோ பயனடையப் போகிறீர்கள் என்று கருதலாம். ஆதவன் தீட்சன்யாவை, எஸ்.வி.ராஜதுரையை பயன்படுத்திய அதே மேடையை வேறொரு இடத்தில் உங்கள் கலையரசனுக்கு கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக புலிகளின் எதிர்த்து அரசியலை பேச நீங்கள் தயாராயிருக்கலாம், இல்லை தனி ஈழத்தை எதிர்த்து அரசியல் பேச நீங்கள் தயாராக இருக்கலாம். இந்த இரண்டும் சிங்களப் பேரினவாதத்திற்கு ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவசியமான விசயமாக இருக்கிறது. ஆகையால்தான் சொல்கிறேன். என் நோக்கம் மக்கள் துரோகிகளை அம்பலப்படுத்துவது, சந்தர்ப்பவாதிகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டுவது. என் நோக்கம் தவறு என்றால் அது உங்கள் நோக்கம் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதுதான்.

    இறுதியாக WSF பற்றி எழுதியிருக்கிறீர்கள். நான் WSFக்கும் எதிரி அதை எவன் பயன்படுத்தினாலும் அவன் துரோகி. எம்.ஆர். 2000 என்று நடத்தியவர்களாகட்டும், அங்கு மூன்றாவதாக ஒரு அணி ஆகட்டும் அனைத்தையும் நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அதில் வெளியேற்றியவர்களை இன்னொருவர் சேர்த்துக்கொள்கிறார். மாவோயிஸ்டுகளுக்கு என்.ஜி.ஓ.வைப் பயன்படுத்த முடியும் என்று வைத்திருக்கிறார்கள். அதனால் நிறைய இழந்தார்கள். நீங்களும் அதுபோல் இழக்க ரெடியாகிவிட்டதையா கூறுகிறீர்கள். தற்கொலைக்கு தயாராகிவிட்டது நன்கு தெரிகிற்து.

    1. ம.க.இ.க வை எந்த வகையிலுமே குற்றம் சுமத்த முடியவில்லையே என்ன செய்வது என்று கக்கூசில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது கூட இதை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும் மக்கள் கருத்து போன்ற சில ஜீவிகளுக்கு இப்போது கலையரசன் கிடைத்துவிட்டார்.

     மேலும் கலையரசன் குறித்து இதற்கு மேலும் நான் சொல்வ‌தற்கு ஒன்றுமில்லை. அதை மீண்டும் பிரச்சனைக்குள்ளாக்குவத‌ன் மூலம் இந்த மக்கள் கருத்து என்கிற நபர் கேவலமான முறையில் இன்பம் கான முயலுகிறார். அதற்கு நாம் தயாராக இல்லை. இன்று கலையரசன் கூறுவதை நாங்கள் ஏற்கிறோம் அவ்வளவு தான். இவரின் கூற்றுப்படியே கலையரசன் என்.ஜீ.ஓ வில் இருக்கிறார், ஆனால் அதை மறைக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் கூட கலையரசன் அதை எத்தனை நாட்களுக்குத்தான் எங்களிடமிருந்து மறைக்க முடியும் ? இதை நான் ஒரு உதாரணத்திற்காகத்தான் சொல்கிறேன் தோழர் கலை இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

     இந்த மனிதர் கலையரசனை சொல்லி, மாவோயிஸ்டுகளை சொல்லி கடைசியாக எம்மையும், சில வார்த்தைகளில் விளையாடுவதன் மூலம் நேர்மையற்ற‌ முறையில் என்.ஜீ.ஓ வுடன் தொடர்புபடுத்த முயலுகிறார். ம.க.இ.க வின் நேர்மை என்ன என்பதை தமிழகத்திலுள்ள ஓட்டுப்பொறுக்கிகளிடம் போய் கேட்டுக்கொளுங்கள், உழைக்கும் மக்களிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள்.

     ம.க.இ.க வை பற்றி அவதூறு பேசுவதற்கு முன்னால், தமிழகத்திலிருக்கும் மக்கள் கருத்து என்கிற‌ இந்த விவாதப் ‘புலி’ யார் என்பதை இங்கே சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடர்ந்தால் நன்றாக இருக்கும். யார் என்று நாம் கேட்பது இவருடைய அரசியல் அடையாளம் என்ன, எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்பதைத் தான்.

     1. உங்களைவிட இன்னும் கீழான நிலைக்கு இறங்கி விமர்சனம் செய்ய ஆசைப்படுகிறீர்கள்.

      இதில் எதுவும் அரசியல் விமர்சனம் மீறி எதுவும் வைக்கப்படவில்லை.

      நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி வைத்த விமர்சனத்தை எதற்கும் பதில் அளிக்கவில்லை.

      நீங்கள் வைத்த இலங்கைப் பிரச்சனை பற்றி எனது பதிலுக்கு எந்த பதிலும் வைக்கவில்லை.

      மாவோயிஸ்ட் மீது ஒரு விமர்சனம் தான் அதுவும் தெலுன்க்கான தேசியின பிரச்சனை இல்லை என்பதை வைத்தேன். வேறெதுவும் வைக்கவில்லை.

      ஆனால் இதற்கு எதுவுக்கும் பதில் அளிக்காமல் (எதிர்ப்பார்க்கவில்லை) வெறும் கலையரசனின் மூலம் உங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ள முயற்சிப்பது அரசியல் நேர்மையின்மையையே காட்டுகிறது.

      எல்லோரும் எல்லாவற்றையும் கற்றறிந்துவிட்டு வந்துவிடவில்லை. ஆனால் அதே சமயம் எல்லாம் கற்றுவிட்டுதான் விவாதம் என்றும் சொல்லவில்லை. பொறுப்புணர்வுடனும், அரசியல் அடிப்படையிலும் விவாதம் நடத்தாமல் நீங்களாகவே நான் ம.க.இ.க என்று சொல்லி குறைப்பட்டதாக கூறியிருக்கிறீர்கள். எந்த இடத்திலேயும் நான் அமைப்பு பேரை பயன்படுத்தவில்லை. நான் நடத்தியது கருத்து விவாதம், அமைப்புக்கிடையிலான விவாதம் அல்ல. நீங்கள் சொன்ன கருத்துக்கு நான் பதில் சொல்கிறேன். அவ்வளவே. நீங்களாகவே உங்களைப் போல் ஒரு அமைப்பை பிரதிநிததுவப்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வழக்கம் போல் முத்திரை குத்தி விமர்சனம் செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு முறை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய கருத்துக்கு விமர்சனம் வைத்தால் அது சரியா தவறா மார்க்சிய அடிப்படையிலிருந்து வந்ததா என்பதை விளக்காமல் நீ என்ன யோக்கியமா என்ற கேள்வியை என் மீது எழுப்பி தப்பித்துக்கொள்வது அரசியல் விவாதம் அல்ல, குழையடிச் சண்டை. முதலில் மாவோயிஸ்ட் அமைப்பு என்று நினைத்துக்கொண்டு பதில் கூறுகிறீர்கள். அப்படி இல்லை என்பதாலேயே மீண்டும் என்ன அடையாளத்தை வைத்து மீண்டும் வசவுபாடலாம் என்று புரியவில்லை அந்த விரக்தியில் என் மீது பாய்கிறீர்கள். தயவு செய்து நீங்கள் எடுக்கும் நிலைப்பாடு எப்படி மார்க்சிய ரீதியானது என்று விளக்குங்கள். மற்றவர்களுக்காவது ஒரு பயனுள்ள விவாதமாக இருக்கும். அடுத்தவர்களை குறைசொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுடைய விளக்கத்தை விட்டுவிடுவீர்கள் போல. அரசியல் விவ்வாதம் என்றால் ஆரோகியமாக விவாதம் நடத்துங்கள், இதில் நம்பிக்கை, எனக்குத் அவரை நன்றாக தெரியும் என்றவிவாதமெல்லாம் விட்டுவிட்டு சரியா தவறா சரியான முன்னுதரணமா என்ற வகையில் விவாதம் நடத்துங்கள், இல்லையென்றால் இது போன்ற பொது ஊடகங்களை தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர்களை கோபமூட்டி உணர்ச்சி பட வைத்து உங்களைப் போல் குழயடிச்சண்டைக்கு அழைக்காதீர்கள். இது சரியான அரசியல் முறை இல்லை.

 22. /////தோழர் கலையரசன் தனது நிலைப்பாட்டை விளக்கி கட்டுரையே எழுதி விட்டார். தனக்கும் அந்த என்.ஜி.ஓ வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களுடைய‌ அந்த கூட்டத்தில் கூட அவர்களை விமர்சனம் செய்து தான் பேசினேன் என்றும் கூறிவிட்டார்////. Superlinks

  // /////அன்புடன் கலையரசன் ,

  உங்களுடைய “இனியொரு சதி செய்வோம்” கட்டுரை படித்தேன். இதற்கான என் பதில் நீண்டதாக இருக்கும். பின்னர் நிச்சயம் எழுதுவேன். தற்போது என் சில கருத்துக்கள். ஐஎன்எஸ்டி கருத்தரங்கில் நீங்கள் கலந்துகொணடது தொடாபான பிரச்சனையல்ல, இப்போது பேசப்படுவது. நீங்கள் ஐஎன்எஸ்டி என்ற தன்னார்வ நிதி நிறுவனத்தில் உறுப்பினர் என்ற சர்ச்சை தொடர்பாகவே. நீங்கள் ஐஎன்எஸ்டி யில் உறுப்பினர் என்பது ஐஎன்எஸ்டி யின் உத்தியோக பூர்வ இணையத்தளம் மூலம் நிரூபிக்கப்பட்டடுள்ளது. உங்களது கட்டுரையில் ஆதாரப்பிரச்சனையான இதனை நீங்கள் தவிர்த்துள்ளீர்கள். ஐஎன்எஸ்டி யின் நீங்கள் உறுப்பினர் இல்லயையெனில் அவர்களின் இணையத்தளத்தில் எப்படி நீங்கள் உறுப்பினர் என்று போடமுடியும்.? இது தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?. ஐஎன்எஸ்டி இணையத்தளம் என்பது சாதாரண இணையவலைத்தளம் அல்ல. உங்கள் பெயரை சும்மா இணைப்பதற்கு.

  கலையரசன் தயவு செய்து உண்மைகளைப் பேச பழகிக்கொள்ளுங்கள். நாங்கள் இந்த ஐரோப்பிய சூழலில் நுர்றுவீதம் சரியான நபர்களாக இருக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் நாம்பேசுகின்ற எழுதுகின்ற விடயங்களுக்கு நேர்மையாக உண்மையாக நடைமுறைவாழ்வில் வாழ முயலவேண்டும்.///// Ashok

  ////கலையரசன் விடயம் அதிர்ச்சியாகவும் சகிக்க முடியாததாகவும் இருக்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்டுரைகளை எழுதிக் கொண்டு மறுபுறம் ஏகாதிபத்திய தன்னார்வ அமைப்பில் அங்கத்தவராகவும் இருக்கும் கயமைத்தனத்தை வேறு என்னவென்று அழைப்பது?. பேர்லீன் சுசீந்திரன் ஐஎன்எஸ்டி யில் அங்கம்வகித்தால் அவர் பிற்போக்குவாதி என்கிறது சரி. அவரை அம்பலப்படுத்துவதும் சரியானது. அதே அரசியல் அயோக்கித்தனத்தை செய்யும் கலையரசன் முற்போக்குவாதி!. இந்தச் சூத்திரம் எமக்கு புரியவேயில்லை. இதை யாராவது விளங்கப்படுத்துவீர்களா? தங்களுக்கு வேண்டியவர்கள் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அவர்களை காப்பாற்றுவதும் தமக்கு வேண்டாதவர்கள் சிறு தவறு செய்தாலும் அவர்களை குற்றவாளிகளாக்கி “மண்டையில்போடும்” அதே பாசிச புலி பாணி அரசியலே புகலிடத்திலும் இந்த முற்போக்கு பேசும் சந்தர்ப்பவாதிகளின் அரசியலாக தொடர்கிறது.”தமக்கு வேண்டியவர்கள் என்ன அயோக்கியத்தனமும் செய்துவிட்டுப்போகட்டும்” இதென்ன அரசியல்? அவரைக்காப்பாற்ற ஆயிரம் நியாயங்கள் சொல்ல இணையத்தளங்கள் வேறு. புகலிட அரசியல் மிக கேவலமாக மாறிக்கொண்டிருக்கிறது. மக்களைப்பற்றி பேசுவதாக புலுடாவிடும் இந்த அதிகார ஆசை கொண்ட போலி முகங்களின் முகமூடிகள் கிழிக்கப்படவேண்டும்////TRUTH

  http://inioru.com/?p=7440

 23. மின்னஞ்சலில் நடக்கவேண்டிய விவாதமெல்லாம் இங்கே குழாயடிச் சண்டை மாதிரி நடக்கிறது.
  இதனால் யாருக்கு நன்மை?

  இதைப் பார்த்துப் பொது எதிரி விலாப்புடைக்கச் சிரித்துக்கொண்டிருக்கிறான்.

  1. ஒரு சில விசயங்களை நான் பகிரங்கமாக விவாதிகக் கூடாது அதாவது அமைப்பின் பெயரால் பகிரங்கமாக வெளியிடப்படாத கருத்துக்களை பற்றி. அது தவறு, அப்படியிருந்தால் மாற்றிக்கொள்கிறேன். ஆனால் அந்தக் கருத்தையே, அரசியலையே விமர்சிக்காமல் இருக்கமுடியாது.
   அ.மார்க்ஸ் லால்கர் பிரச்சனையை எப்படி எழுதினார் தெரியுமா, மக்கள் அரசு பயங்கரவாதத்திற்கு இடையிலும், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு இடையில் மாட்டிக்கொண்டு பாதிக்கப்படுகிறார்கள் என்று எழுதுகிறார். ஒடுக்குபவரையும், ஒடுக்கப்படுபவனையும் ஒன்றுபடுத்தி மூளியாக மாற்ற கூலி எழுத்தை எழுதுகிறார். இவரை யார் பயன்படுத்தினாலும் விமர்சித்துத்தான் ஆகவேண்டும். பகிரங்கமாக விமர்சித்துத்தான் ஆகவேண்டும்.
   NGOவின் செல்வாக்கையும், ஊடுருவலையும் பற்றி விவாதிப்பது இரகசியமாக நடக்க வேண்டிய விசயம் என்று சொல்லும் அளவிற்கு உங்கள் அரசியல் இருக்கிறது. பொது எதிரி என்று யாரைச் சொல்கிறீர்கள். NGO பொது எதிரியின் கூலிப்படை. அது எப்படி புரட்சிகர கட்சிகளுக்குள் ஊடுருவ முயற்சிக்கிறது என்று எச்சரிப்பதிலும் அவர்களுடைய அரசியல் கலைப்புகளை எப்படி மக்களுக்கு எதிரானது என்று விவாதிப்பதும் அம்பலப்படுத்துவதும் உங்களுக்கு காமெடியான விசயமாக இருப்பதாக சொல்கிறீர்கள். மேற்கண்ட விவாதத்தால் நீங்கள் கண்டிப்பாக உங்கள் எலும்பு நொறுங்க அழுதுகொண்டிருக்கிறீர்கள். ஏன் என்றால் பொது எதிரி எதிர்பார்க்கும் அரசியல், அதன் கூலிப்படை NGO நொறுக்கப்படுகிறது.

   எஸ்.வி.ஆர். இங்கு என்ன கம்யூனிஸ்ட்டா. அவர் தெளிவாக மார்க்சிய லெனினியத்தை தூக்கி எறிந்தவர். ஆட்டோபவ்வரையும், கிராம்சியையும் அவர்களின் வகையராக்களையும் தூக்கிபிடித்துக்கொண்டு இருத்தலியல், மாயாவாதம், கட்டுடைத்தல் போன்றவற்றின் மூலம் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்துக்கொண்டிருப்பவர். INSD நிறுவனத்தோடு தொடர்பு வைத்துக்கொண்டு ஜெர்மனியின் கைக்கூலியாக செயல்படுபவர்கள் ஏதோ ஒரு வகையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு சேவை செய்பவர்கள். ஆன்மீக மார்க்சியம் பேசும் சிவ சேகரன் போன்றவர்கள் ஏன் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு அடுத்த ஏகாதிபத்தியத்திற்கு ஐரோப்பியாவில் உள்ள ஏகாதிபத்தியமோ, ரஷ்ய ஏகாதிபத்தியமோ, இவர்களுக்கு மாமா வேலை பார்ப்பவர்கூட உண்டு. இதை எச்சரிக்கை செய்வதையே எதிரிகள் சிரிப்பார்கள் என்கிறீர்கள். ஒரு வேளை அது அம்பலமாவதால் உங்கள் கடை சரக்கை விற்கமுடியாமல் போய்விடும் என்று அஞ்சுகிறீர்களோ.

   இங்கு நடத்தப்படும் விவாதம் எல்லாம் அரசியல் விவாதம்தான், தனி நபர்களின் அந்தரங்க விஷயங்களை அல்ல. அவர்கள் எந்த அரசியலை பிரதிநிததுவப்படுத்துகிறார்கள். அப்படி என்றால் ஊரறிந்த களவளியை அமெரிக்க ஏஜெண்ட்டை, ரா ஏஜெண்ட்டை ஜெகத் கஸ்பரை அம்பலப்படுத்தி வினவு கட்டுரை எழுதவேண்டிய அவசியம் இல்லை. இதையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலமாக்கப்பட வேண்டும். அதே அளவு மற்றவர்கள் அந்த கருத்துக்கு ஆட்பட்டிருந்தால் அதை எதிர்த்துப் போராட கற்றுத் தர வேண்டும். ஒரு வேளை அதில் உள்ள ஒருவராகவோ, ஏகாதிபத்தியவாதிகளின் கருத்துக்களை மக்களின் மத்தியில் விதைக்கும் விதை எந்திரமாகவோ நீங்கள் இருந்தல் உங்களுக்கு அடி வயிறு கலங்கத்தான் செய்யும்.

   வலைத்தளத்திற்கு முன் இப்படி ஒருவருக்கு தெரிந்த இந்த மோசமான இரகசியம் மற்றவர்களுக்கு தெரியாமல்தான் இருந்தது. அவர்களும் ஊடுருவ வசதியாகத்தான் இருந்தது. திருவனந்தபுரத்தில் நடத்தின் எஸ்.வி.ஆர் கலந்து கொண்ட இந்த மாபெரும் மக்கள் கழுத்தருப்பு கூட்டதினை, INSDயில் கலையரசன் கலந்து கொண்டு வாய்வீச்சு நடத்தியதான நாடகத்தை, வலைதளம் இல்லையென்றால், அது எளிதாக அவர்களின் ஊடுருவலை அனைவரும் தெரிந்து கொள்ள முடிநிதிருக்காது. ஈழம் வீழ்ந்த சமயத்தில் ஒருவர் ‘ஒரு புலனாய்வாளரின் கடிதம்’ என்று ஒன்றை எழுதியிருந்தார். எப்படி சுனாமியைப் பயன்படுத்தி, ஈழத்தில் பேச்சுவார்த்தையை பயன்படுத்தி ஊடுருவினார்கள், எப்படி போர்களத்தில் அவர்கள் செயல்பட்டார்கள், யாருக்காக செயல்பட்டார்கள் என்பதை எழுதியிருந்தார். அபோதுதான் அந்த ஆபத்தை உணர முடியும். ஆகையால் அரசியலை விவாதப் படுத்துவது தவறில்லை.

   பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அடிப்படை மார்க்சியத்தை தூக்கிப் பிடிக்கும் வரை, மார்க்சியம் பொருந்தாது என்று சொல்லும்வரை, அந்த அமைப்புகளை விமர்சனம் செய்யாமல் அரசியலை விமர்சனம் செய்யலாம். அதற்கு வேண்டுமானால் உடன்படுகிறேன். மீறியிருந்தால் மாற்றிக் கொள்கிறேன். அதற்காக அவர்கள் ஆதரிக்கும் நபர்களையெல்லாம் விமர்சனம் செய்யக் கூடாது என்று கூறுவதை ஏற்கமுடியாது, எஸ்.வி.ஆர். போல், கலையரசன் போல், இரயாகரன்போல். திராவிடம், தலித்தியம் என்று என்.ஜி.ஓவின் அரசியலையோ, அவர்களின் தொடர்புகளையோ ஈவிரக்கமில்லாமல் நான் அம்பலப்படுத்தத்தான் செய்வேன்.

 24. Let Superlinks and Makkal Karuthu discuss politic and not labelling others(particularly Superlinks) to enrich our knowledge more on Eelam.I also like to know which is dominating trend in INDIAN COMMUNIST MOVEMENT where Left adventurism or Right deviation !

 25. அட பார்ரா
  அதுக்கிடையில வந்திட்டுது வெளியில…

  ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
  இலங்கை கட்டுமான பணியில் 25 ஆயிரம் சீன தொழிலாளர்கள்

  டிசம்பர் 07இ2009இ00:00 ஐளுவுள்;குற

  கொழும்பு:இலங்கையில் ரயில்வே பாதை அமைப்பது போன்ற பணிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான சீன தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை ஓய்ந்த பின்இ தமிழர்கள் வாழும் பகுதியில் ரயில் பாதைஇ சாலை அமைப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்பணிகளில் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  யாழ்ப்பாணத்தில் பலாலிக்கும் காங்கேசன் துறைக்கும் இடையே 56 கி.மீ.இ நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 1இ200 கோடி ரூபாய் கடனுதவி திட்டத்தில் நடக்கும் இப்பணியை சீன தொழிலாளர்கள் செய்ய உள்ளனர்.இதே போல வன்னி பகுதியில் உள்ள ஓமந்தை பகுதியிலும் 900 கோடி ரூபாய் செலவில் தண்டவாளம் அமைக்கும் பணி துவங்க உள்ளது. இதையும் சீன தொழிலாளர்கள் தான் செய்ய உள்ளனர்.பணிகள் துவங்கிய பின் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் 25 ஆயிரம் சீன வீரர்கள் ஈடுபடுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
  ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

  என்த்த சொல்ல மாவோயியிசம்h அது என்ன
  சீனச் சார்புக் கட்சி என்றால் அது இத தானா?

  லங்கையில தொழிலாழர் பற்றாக்குதைhனே நிலவுது!

  1. உளறுவதற்கு எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு கரவேலரே.

   சீனா இன்னொரு முதலாளிய நாடாகி வருகிறது என்பதே மார்க்சிய லெனினிய நிலைப்பாடு.
   அதைத் தெரிந்து எழுதுகிறீர்களா? தெரியாமல் எழுதுகிறீர்களா?

   சீனா இப் பணிகளை முற்றிலும் வணிக அடிப்படையிலேயே மேற்கொள்கிறது.
   “பணிகள் துவங்கிய பின் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் 25 ஆயிரம் சீன வீரர்கள் ஈடுபடுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.” என்று யார் சொன்னார்கள்? பி. ராமனா? அவருக்கே இவ்வளவு கற்பனை வளம் இல்லை.

 26. மக்கள் கருத்துக்கு:
  குழாயடிச் சண்டையிற் கூடப் பயனுள்ள தகவல்கள் கிடைக்கலாம்.

  எனது அக்கறை சினேக முரண்பாடுகளையெல்லாம் பகை முரண்பாடாக்குகிற காரியம் நடப்பதைப் பற்றியது தான்.
  தவறுகளை விமர்சிக்கும் போது அந்தரங்க மட்டத்திற் தொடங்கித் தீர்க்க முயல்வதும் அப்படி இயலாத ஒரு சூழ்நிலையிலே அவை பொதுத் தளத்துக்கு வருவதும் ஆரோக்கியமானது. அதையே எனது 11.25.2009 இடுகையில் எடுத்துரைத்தேன்.
  இங்கு நடப்பது என்னவோ தலைகீழாக உள்ளது.

  இவ் விவாதத்தையும் வேண்டுமானால் இன்னொரு குழாயடிச் சண்டையாக்கலாம்.

  ஒவ்வொருவரும் அவரது அறிவுக்கும் அனுபவத்துக்கும் அமைய.

  இதற்கு மேல் நான் சொல்ல அதிகமில்லை.

  1. siva அவர்களுக்கு,

   //தவறுகளை விமர்சிக்கும் போது அந்தரங்க மட்டத்திற் தொடங்கித் தீர்க்க முயல்வதும் அப்படி இயலாத ஒரு சூழ்நிலையிலே அவை பொதுத் தளத்துக்கு வருவதும் ஆரோக்கியமானது.//

   அரசியல் பரப்புரை என்பதே இரகசியமானது என்கிறீர்களா. அதில் ஒருவர் ஒரு அரசியலை பரப்புகிறார் என்றால் அதை அப்படியே அனுமதிக்கலாம் என்று கூறுகிறார்களா.
   //பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அடிப்படை மார்க்சியத்தை தூக்கிப் பிடிக்கும் வரை, மார்க்சியம் பொருந்தாது என்று சொல்லும்வரை, அந்த அமைப்புகளை விமர்சனம் செய்யாமல் அரசியலை விமர்சனம் செய்யலாம். அதற்கு வேண்டுமானால் உடன்படுகிறேன். மீறியிருந்தால் மாற்றிக் கொள்கிறேன். அதற்காக அவர்கள் ஆதரிக்கும் நபர்களையெல்லாம் விமர்சனம் செய்யக் கூடாது என்று கூறுவதை ஏற்கமுடியாது,//
   இந்த வாசகத்தை படிக்காமல் கருத்து சொல்வது, கருத்து விவாதமே கூடாது, என்று குறுகிறீர்களே. அது சரியானதா. எல்லா கருத்தையும் கலந்து எந்த மார்க்சியத்தை கட்டியமைக்கப் போகிறோம். போராடுகிற அமைப்பை எப்படி வேண்டுமானாலும் யூகத்தின் அடிப்படையிலேயே விமர்சிக்கலாம் என்னும்போது அதற்கு பதிலளிக்க நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பொதுவாக நான் இணைய தளத்தில் ஒரு படிப்பாளனாக மட்டுமே இருக்கிறேன். இதில் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது. நமது அண்டைய நாடுகளில் நடந்த இரண்டு போராட்டம் ஈழம், நேபாளம் ஆகியவை. இதில் இரண்டும். இதில் புலிகள் ஏன் தோற்றார்கள் என்பது பற்றியது. இதில் ஏன் தோற்றார்கள் என்பது பற்றி வெளிப்படையாக கருத்தை வைக்க நீங்கள் தயாரில்லை. ஆனால் அவர்கள் மீது பொதுவான குற்றமாக இவர்கள் மோசம் என்று மட்டும் கூறிவிட்டு நழுவிவிடுவது சரியானது இல்லை.

   பயனுள்ள தகவல் என்பது ஒரு தகவல் களைஞ்சியமாக இருக்கலாம், ஆனால் அரசியல் பேசக் கூடாது என்கிறீர்களா.

 27. L.G.S. or L.G.GOVINDASAMY died in MADRAS on 07/12/09 early morning. SAMARAM M.L PARTY MAGAzINE EDITOR OF EARLY EIGTHTEITEES 80″S .

 28. தோழர் கோவிந்தன்குட்டி:
  உங்கள் கட்சியைப் பற்றிய பொது விவாதத்துக்கு இணையத்தளம் ஏற்றதல்ல என்பதே என் எண்ணம்.
  உங்களது கட்சி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை இதுவரை நீங்கள் ஏற்றதோ சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளைத் திருத்தியதோ இல்லை என்றால் உங்களது கட்சி தவறுகளே செய்யாத ஒரு அசாதாரண அமைப்பாகவே இருக்க வேண்டும்.

  சாதாரண மனிதரான மாஓ தவறுகளிலிருந்து கற்பதைப் பற்றப் பெருமைப்பட்டவர்.

  என்னுடைய கவலையெல்லாம் எந்தெந்த விமர்சனங்களிலும் விவாதங்களிலும் அமைப்புக்கட்கும் தனி மனிதர்கட்கும் இடையிலானவை எவை பொதுப் பார்வைக்குரியவை எவை என்பதில் நிதானமின்றிப் போவது பற்றியது தான்.

  நிற்க.
  “மாஓவாதிகள் புலிகளைப் பற்றி வைத்திருந்த தவறான மதிப்பீட்டுக்கு ஈழத்திலிருந்து வந்த சில தொடர்புகளும் காரணமென ஊகிக்கிறேன்.” என எழுதினேன்.
  விளக்கங் கேட்டீர்கள்.
  “நிச்சயமாகச் சரியான தகவல்கள் கிடைத்திருப்பின் விடுதலைப் புலிகள் பற்றிய நிலைப்பாடு கூடியளவு விமர்சனப்பாங்காக அமைந்திருக்கும் என்பது எனது மதிப்பீடு.
  மாஓவாதிகள் ஈழத்திலிருந்து வந்த தகவல்களை வைத்தே தமது முடிபுகட்கு வந்திருக்க முடியும் என்ற ஊகம் தவறாயின் ஏற்றுக் கொள்கிறேன். மாஓவாதிகளின் மதிப்பீட்டுக்கான அடிப்படையை அறிய விரும்புகிறேன்” என எழுதினேன்.
  நான் கேட்டது எனது ஊகம் தவறாயின் புலிகள் பற்றிய மாஓவாதிகளின் முன்னைய மதிப்பீடு என்ன அடிப்படையிலானது என்பதே. அக் கேள்வியையே நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டாற் போலத் தெரிகிறது.

  30 ஆண்டுகட்கு மேலாகத் தமிழர் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் தவறான போக்குக்கள் பற்றித் திரும்பத் திரும்ப இலங்கை மா-லெ. வாதிகள் எழுதியது இப்போது தான் இந்திய மா-லெ. வாதிகள் சிலருக்குக் கேட்கிறது. வேறு சிலர் வேளைக்கே ஏற்றுக்கொண்டார்கள். இப்படி ஏன் நடக்கிறது?

  தகவல் பரிமாற்றமும் கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடக்க வேண்டிய இடங்களில் நடக்க வேண்டிய முறைகளில் நடவாததாலேயே என்பது என் மதிப்பீடு. அது தவறாக இருக்கலாம். ஆனாற் கவனிக்கத்தக்க ஒரு கேள்வி அதில் உள்ளது.

  இவ்வாறான இடங்களில் சிலவாறான விவாதங்கள் நடப்பதன் பயனின்மையை ஏலவே 7.12 அன்று எழுதினேன்.

  மாஓவின் முரண்பாடுகளைச் சரியாகக் கையாளுவது பற்றிய கட்டுரையை நாமெல்லோரும் மீளவும் ஊன்றி வாசிப்பது நல்லது.

  1. Thozhare,

   மாஓவாதிகளைப் பிற மார்க்ஸிய லெனினியவாதிகள் நியாயமான பல்வேறு காரணங்கட்காக விமர்சிக்கிறார்கள்.

   Nyayamana palveru karanangadkaga vimarsikkirargal endru podhu medayil neengal ezhudhalam. adhe podumedayil nyayamana palveru karanangal yavai endru kettal adhai patri ingu vimarsikka virumbavillai endru pathil kooralam. nangalum adhai patri ketkakoodadhu. maovadhigalai patri ularum ungalai kuzhappavadhi endru ninaithu  en pechchai niruthikkolgiren.

   P.Govindan kutty

  2. தோழர் கோவிந்தன்குட்டி:
   நான் கேட்ட மிக எளிய ஒருகேள்விக்கான பதிலையே தவிர்க்கிறீர்கள்.
   அதை இங்கு திரும்பக் கூறிப் பதில் சொல்லுமாறு கூட நான் உங்களை வற்புறுத்தவில்லை.
   ஏனெனில் இணையத்தளங்கள் இவ்வாறான விவாதங்கட்கு உரிய இடங்களல்ல.
   அதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை.

   எனவே தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள்.
   பிறருடைய காரணங்களையும் விளங்கிக் கொள்வது புரட்சிக்கு நல்லது.

   உங்கள் கேள்விக்கான பதில் “உங்களது கட்சி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை இதுவரை நீங்கள் ஏற்றதோ சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளைத் திருத்தியதோ இல்லை என்றால் உங்களது கட்சி தவறுகளே செய்யாத ஒரு அசாதாரண அமைப்பாகவே இருக்க வேண்டும்” என்ற முன்னைய கூற்றிலேயே பொதிந்துள்ளது.
   அதை நான் விரிவுபடுத்தாமலே விளங்கும் ஆற்றல் உங்கட்குண்டு என நினைத்தேன். தவறானால் வருந்துகிறேன்.

   இதுவரை உங்கள் அமைப்பின் மீது பிற அமைப்புக்கள் வைத்துவந்த விமர்சனங்கள் எல்லாமே அல்லது ஏகப் பெரும்பான்மையானவை தவறானவை என நீங்கள் நிச்சயமாயிருந்தால் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
   உங்களது அமைப்பின் மீதான மதிப்பால் ; அவற்றிற் கணிசமானவற்றை உங்கள் கட்சி பகுதியேனும் ஏற்றுத் தன்னைத் திருத்தியுள்ளது என்ற என் எண்ணம் தவறானால் அதற்கும் வருந்துகிறேன்.
   ஏன் என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன்.

   தவறுகள் பாவச் செயல்களல்ல ; விமர்சனங்கள் பகையானவையாக இருக்க வேண்டியதுமில்லை என்பது எனது கருத்து.
   எனவே உங்கள் அன்பான ஆலோசனைகளைக் கருத்திற் கொள்ள என்றும் சித்ததமாகவேயுள்ளேன்.

   எதற்கும்; தயவு செய்து நிந்தனையான சொற்களைத் தவிர்ப்பது நல்லது.
   அது பலவீனத்தின் அறிகுறி என்பது என் எண்ணம்.
   ஒருவேளை அதுவும் தவறாக இருக்கலாம்.

 29. அன்புள்ள தோழர் சிவாவுக்கு,விவாதங்கள் தொடர்ந்து நன்றாக போய்கொண்டிருப்பதாகவே நானும் கருதுகிறேன். விவாதங்கள் எந்த தனி கட்சியின் அந்தரங்க விசயங்களைப் பற்றியோ அல்லது அக்கட்சியின் தனி நபரின் சொந்த பிரச்சனைகளைப் பற்றியோ அல்ல. இங்கு முற்றிலும் நடந்து கொண்டிருப்பது அரசியல் ரீதியிலான பிரச்சனைகளைப் பற்றி. நண்பன் என்பதாலேயே நாம் அவர்களின் குற்றங்களையும், குறைகளையும் சொல்லாமல் இருக்கமுடியாது. புரட்சிகர கட்சியின் அடிப்படை விதிகளை வைத்திருக்கும்வரை புரட்சிகர கட்சிகள் என்பதால், மற்ற இடது, வலது போக்குகளை விமர்சிக்காமல் இருக்க முடியாது. இங்கு நடந்துக்கொண்டிருக்கும் விவாத்தத்தின் அரசியல் ஏதோ தனி ஒரு நாட்டின் பிரச்சனை மட்டும் இல்லை. உலக முழுக்க இருக்கு மா-லெ குழுக்களிடம் இருக்கும் பிரச்சினை இதுவே. அப்படி நினைத்து நாம் அரசியல் கற்க முயற்சியுங்கள்.1. சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம் என்று சொல்வதால் மட்டும் அவர்கள் மார்க்சியவாதிகளாக மாட்டார்கள். இதை வெறும் சிபிஎம் போன்றோர்களே அங்கீகரித்தார்கள். ஆனால் எங்கு நடக்கும் போராட்ட்த்தையும் அவர்கள் ஆதரித்ததில்லை. அதுபோல்தான் சூப்பர்லிங்க்ஸ் பேசுவது, சுய நிர்ணய உரிமைக்காக போராடுபவரை மார்க்சியவாதிகள் அங்கீகரித்தே தீர வேண்டும் என்று சொல்லி, தனி ஈழத்தை அங்கீகரிப்பதன் கடமையிலிருந்து தவறுகிறார்கள். மக்கள்தான் தீர்மானிப்பார்களாம். மார்க்சிய கட்சி மக்கள் பின் (மக்கள் கருத்தின் பின்) செல்பவர்களுக்கு ஸ்பான்டேனிட்டி என்று பொருள்படும். இதை கடுமையாக லெனின் விமர்சித்தார். இவர்களுக்கு திட்டம் ஒன்றும் இல்லை. ஈழ மக்கள் ஏதோ இன்று தீர்மானிக்கும் போராட்டத்தை நடத்தாதைப்போல், மக்கள் தனி ஈழம்  வேண்டும் என்றால் அதை மக்களே முடிவு செய்யட்டும் என்றும் ஏதோ இப்பொழுது முடிவு செய்வதற்கு உகந்த சூழ் நிலை இல்லை என்பதைப்போல் கருத்து சொல்கிறார்கள். நாம் தமிழ்நாடு தனியாக செல்ல வேண்டுமா என்பதை கேட்கவில்லை. ஏனென்றால் இன்னும் அதற்கான கருத்தே இங்கு உதிக்கவில்லை அதனால் அவர்கள் பொதுவாக மக்கள் புரட்சியில் தீர்மானிப்பார்கள் என்று சொல்லுவதற்கு. 30 வருட மிகவும் வலிமை வாய்ந்த போராட்டத்தை ஈழ மக்கள் தொடர்ந்து நட்த்திக்கொண்டிருக்கும்போது, இந்தவிதமான பதில் சொல்வது சுத்த அரசியல் சந்தர்ப்பவாதம். அதனால் இவ்விவாதம் அவசியம் நடத்தப்பட வேண்டும்.2. நேபாளத்தைப் பற்றி விவாதம் ஏன் தேவை என்றால், ஒரு நாட்டின் புரட்சியை அவர்கள் காட்டிக்கொடுத்த பிறகு, இன்னும் அவர்கள் நமது சகோதர அமைப்பு என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா. லெனினியத்தின் ஐந்தாவது விதியை மறுத்து, காவுட்ஸ்கி வாதத்தை தூக்கி பிடித்து, ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று கூறும் ட்ராட்ஸ்கி நிலைக்கு சென்ற பின்னர் அவர்களிடம் தோழமை கட்சிப் போல் உள்ளுக்குள் பேசிக்கொண்டிருந்தால், அவர்கள் அதற்குள் உலக முழுக்க சென்று அவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடிப்பர். மா-லெ அடிப்படை மார்க்சியத்தை தூக்கியெறிந்த யாருடனும் நாம் அந்தரங்க விவாதம் நடத்தவே கூடாது. அது பகிரங்கமாக நடக்க வேண்டும். அதை ஆதரிக்கும் கட்சிகளையும் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இங்கு இருக்கும் இன்றைய நேபாள கட்சியைவிட நூறு மடங்கு சிறந்த கட்சிகளை சூப்பர் லிங்க்ஸ் என்றும் ஒரு பேச்சுக்கூட காப்பாற்றியது கிடையாது, ஆனால் அக்கட்சியைக் காப்பாற்ற நினைக்கும் போது அதில் உள்ள அபாயத்தை நீங்கள் புரிந்தக்கொள்ள வேண்டாமா? 3. இந்நாட்டில் பலம் வாய்ந்த புரட்சிகர கட்சிகளாக இருந்து, பின்னர் சிறு சிறு குழுக்களாக இன்று புரட்சிகர கட்சிகள் பிளவுண்டு இருப்பதற்கான முக்கிய காரணம், ண்Gஓவை எதிர்த்து செயல் ரீதியாக அல்லாமல் நாம் தத்துவ ரீதியாக மட்டும் நட்த்திய போராட்டம்தான். அனைவரும் தத்துவ ரீதியாக ண்Gஓவை எதிர்ப்பது என்று வைத்துக்கொண்டு, இப்படி மேடையைப் பயன்படுத்துகிறோம், அவர்களை வென்றெடுக்கிறோம் என்று கூறி ண்Gஓ வோக்களுக்கு இப்புரட்சிகரக் கட்சிகளே இறையாக ஆனதுதான் வரலாறு. கலையரசன் ஐஎனெஸ்டி  உறுப்பினராக இருப்பதை ஐஎனெஸ்டியின் அவ்வளைத்தளங்களே நிறூபிக்கும்போது, அவருக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கும் இக்கட்சிகளை நீங்கள் விமர்சிக்கா விட்டால், நாளை புரட்சிகர கட்சி என்று நினைப்பதற்கு அக்கட்சியே புரட்சிகர நிலைப்பாடை தூக்கியெறிந்து சிபிஎம் நிலைக்கு சரிந்து விழுவதுதான் நமது வரலாறு. அப்போது விமர்சனம் செய்வதால் என்ன பயன்?? கலையரசன் என்ற  தனிமனிதர் (ம.க.இ.க கட்சியை சேர்ந்தவர் அல்ல என்றே நினைக்கிறேன்) ஒருவரை காப்பாற்ற அவர்கள் எடுக்கும் சிரத்தையை நீங்கள் கவனிக்கும்போதே அதில் உள்ள அபாயம் புரியவில்லையா உங்களுக்கு??  

  ———இதனால் இவ்விவாதம் நடப்பது மிகவும் நல்லதே ஒழிய, இதை மறைத்தால் அத்தனை எதிர் கருத்தும் நாம் மதிக்கும் இப்புரட்சிகர கட்சிக்குள்தான் நிலைத்து செழிப்பாக வளரவே வாய்ப்பளிக்கும். இது எனது கருத்து. சரியானதே என்று நினைக்கிறேன்!!!

  1. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள்.

   1. மிக சிறந்த மார்க்சியவாதியாக இருந்த காவுட்ஸ்கி, வலது இடது போக்குகளை ஈவிரக்கமின்றி லெனின் விமர்சித்தும், கட்டுரை எழுதியும் வந்த காலத்தில், ஒற்றுமையை பேணவேண்டும் என்ற காரணத்தால், பெரும்பாலும் மென்ஸ்விக் பக்கமே இருந்தார். பின்னாலில் மென்சுவிக்காகவே மாறிப்போனார். நீங்கள் அதேப்போல் வலதுப்போக்கை விமர்சித்து வரும் இந்நேரத்தில் ஒற்றுமை என்று கூறி எல்லாப் போக்குகளை ஒன்று சேர்க்க பார்க்கிறீர்கள். நாம் ஒற்றுமை கட்சிகளுடன்தான் பேணவேண்டும். ஆனால் கட்சி என்பது அதன் தத்துவத்தை அடிப்படையாக கொண்டதே. தத்துவம் எந்த அளவுக்கு மாறிப்போகிறதோ அந்த அளவு புரட்சிகர தன்மையில் இருந்து மாறுகிறார்கள். கூத்தாடித்தான் இதில் ஆட்டுவைப்பவன். அவனின்றி இப்போக்குகள் வருவதே இல்லை. அதற்கு அவன் நேரடியாக இதில் பங்குகொள்கிறான் என்று மட்டும் நினைக்க வேண்டாம். அவன் இப்போக்குகளுக்கு மறைமுக ஆதரவு என்றும் புரிகிறான். உங்களுக்கு இப்போக்குகள் குறித்து தெரிகிறதோ இல்லையோ, கூத்தாடிக்கு ஏற்கெனவே இப்போக்குகளை குறித்த விரிவான அளவிற்கு தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் யார் யாருக்கு எப்படிப்பட்ட பிரச்சாரத்தை கிளப்புவது என்று நன்றாக செய்கிறான். நீங்கள்தான் அப்பாவியாக இதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். 
    லெனினின் கூற்றுப்படி, தத்துவத்தில் என்றும் சமரசம் இல்லை. கட்சியின் அடிப்படை கோட்பாடுகள் மாறாதவரை நடைமுறையில் வேண்டுமானால் விட்டுக்கொடுக்கலாம்.
    புரட்சிகர கட்சியில் உள்ள மார்க்சியம் – மார்க்சியமல்லாத போக்கு என தத்துவம் இரண்டுப்பட்டாலும் என்னைப்போன்ற பொதுவுடமை விரும்பிகளுக்கும் கொண்டாட்டம்தான்.
    என்னைப்போன்று பொதுவுடமை ஆதரவு தெரிவிப்பவர்கள், எங்கேதான் இவர்கள் நிலையை விமர்சித்து, அவர்களுக்கு எடுத்துக்கூறுவது. நேரடியாகக் கூறும்பட்சத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளுவதுமில்லை, பரிசீலிப்பதுமில்லை. இதைப்போன்று ஓபன் டிஸ்கஷன் மூலம் அவர்கள் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் பதில் சொல்லவில்லையென்றாலும் அதை படிக்கும் வாசகர்கள் அவர்களின் போக்கை புரிந்துகொண்டு சரியான மார்க்சியத்தை கற்பார்கள். அதனால்தான் அரசியல் ரீதியான விவாதத்தை மட்டும் நடத்த வேண்டும் என்று நானும் வளியுறுத்திக் கூறி வந்தேன். அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே எனது ஆதரவும் தெரிவித்தேன். அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் சூப்பர்லிங்க்ஸ் இதைப் பற்றிக் கவலைப்படாமல் தனி நபர்களை தாக்குவதாகவே நினைக்கிறேன். அதனால் கோபம்முற்றவர்கள் இன்னும் அதிகமாக அவர்களை அரசியலையும், நடைமுறையையும் விமர்சிக்கிறார்கள். தனி நபர்களுக்கு நாம் விவாத முறை இப்படி இருக்க வேண்டும் என்று ஒழுங்குப்படுத்த நினைக்கும்போது, ஒரு அமைப்பு எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்ற அளவுகோள்கூட இன்னும் கற்றுக்கொள்ளாது இருக்கிறார்கள். அப்போதும் அவ்வமைப்பை எதிர்த்து யாரும் அரசியலல்லாத கருத்தை தெரிவிக்கவேயில்லை என்றே கருதுகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில், நீங்கள் இவ்விவாத முறையை தொடர்ந்து எதிர்த்து வருகிறீர்கள் – இதன் பொருள் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது— இதன் பொருள் நீங்கள் எதிரி என்பது அல்ல – உங்களிடம் தவறான சித்தாந்தம் ஊறி கிடக்கிறது. இது நம்முடைய கூத்தாடிக்கே சாதகமாக அமையும். 
    நன்றி.

   2. சிவா,
    லெனின் காவுத்ஸ்கியையும், பிளக்கனோவையும், ஏன் டிராட்சிகியையும், ரோசா லுக்சம்பர்கையும், ஆட்டோபவ்வரையும், எதிர்த்துபோராடினார் மார்க்சியத்தை கட்டியெழுப்பி லெனினிசத்தை உருவாக்கினார். இவர்களை எல்லோர் கருத்தையும் சேத்து கூட்டு வைக்கவில்லை. இரண்டுபட்டுவிடுமே என்று அச்சம் கொள்ளவில்லை. இயக்கவியல் அடிப்படையையே எப்படிப்புரிந்துகொண்டிருக்கிறீர்களை என்று புரியவில்லை.
    தெளிவாக புரிந்துகொள்ளவில்லை, ஒற்றுமை என்பது தற்காலிகமானது, போராட்டம் என்பதே சாசுவதமானது. ஒரு பொருளுனுடைய இருப்பும் மாறுதலும் இதுதான். முரண்பாட்டைக் கண்டு அஞ்சுவதும், போராட்டத்தை கண்டு அஞ்சுவதும் பேதமை. சரியானதை எப்படி மாற்றியமைக்கப் போகிறீர்கள். உங்கள் அறியாமையை கண்டு வருத்தப்படுகிறேன்.
    இயங்கியலின் எடுத்துக்காட்டுகள்
    Examples of Dialectics (Vol. 8 MSW) மாவோவினுடைய கட்டுரையை தயவு செய்து படிக்கவும்.
    உங்கள் கருத்தை மட்டுமாவது விவாதிக்கவும். வெறுமனே சின்னக் குழந்தைப் போல் சண்டைபோடாதீர்கள் என்று கூறுகிறீர்களே. இவர்களென்ன பங்காளி சண்டையா போடுகிறார்கள். இது ஒரு கருத்து விவாதம். இதை கூட எதிர்க்கொள்ள என்ன பிரச்சனை உங்களுக்கு. ஒழுங்குப்படுத்துங்கள். முடக்காதீர்கள்.

    1. கருத்து விவாதங்களை மார்க்சியர் நடத்த ஏற்ற களங்கள் உள்ளன. நடத்தும் முறைகள் உள்ளன.
     என் கருத்தில் இந்தக் குழாயடி பயனுள்ள விவாதத்துக்கான இடமல்ல.

     நல்ல சில நடைமுறைகள் பற்றியே சொன்னேன். எனது நோக்கம் எதையும் முடக்குவது என யாரும் நினைத்தால் அது அவரது கருத்துச் சுதந்திரம்.

     எந்தக் குழாயடிச் சண்டையும் தானாகவே தான் நிற்கும்.
     எனவே நான் ஓதுங்கிக் கொள்கிறேன்.

     1.  நீங்கள் அரசியலற்று பேசுபவரையும், அரசியல் ரீதியாக பேசுபவரையும் ஒன்று சேர்த்து குழாயடிச் சண்டை என்று பொத்தாம்பசலித் தனமாக கல் எறிகிறீர்கள்.  நீங்கள் இப்படிச் சொல்வதால் அனைவரும் இங்கே சமமாக ஆகிறார்கள். அரசியலற்ற விமர்சனமாகவே உங்கள் விமர்சனம் இருக்கிறது. நன்று. இதற்குமேல் நீங்கள் இவ்விவாதத்திலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. என்றும் இம்மாதிரியான விவாதங்களில் பார்வையாளராகவே இருங்கள்.  நீங்களாகவே ஒதுங்கிக்கொண்டமைக்கு நன்றி.

 30. சூப்பர் லிங்க்ஸுக்கு,

  கலையரசனை காப்பாற்ற உங்களுக்கு என்ன இவ்வளவு ஆர்வம். அவர் ஐ.என்.எஸ்.டி யுடன் தொடர்புடையவர் என்று அந்த வளைத்தளமே சொல்லும்பொழுது இவ்வளவு தூரம் உங்களால் எப்படி நியாயப்படுத்த முடிகிறது. சரியானதை எடுத்துக்கொள்ள இவ்வளவு கடினமாக இருந்தால் நாம் எப்படி மக்களிடம் இருந்த கற்க போகிறோம். அவரின் உற்பினர் அந்தஸ்தை புரிந்துக்கொள்ள 
  http://srilankandiasporablog.wordpress.com/insd/

  மக்கள் கருத்து விவாதம் செய்து வந்தார், நீங்கள் பதில் கொடுத்து வந்தீர்கள், அவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்று கேட்கிறீர்கள்.. சரி ஒரு புரட்சியாளராக இருந்தால், எப்படி உங்களிடம் வெளிப்படுத்திக் கொள்வது. கருத்தை வைத்து விவாதம் செய்யும் போது, அவர் அடையாளத்தை வேறு எங்கு காண்கிறீர்கள். கருத்துத்தான் அடையாளம், அதைக்கூட புரிந்துக்கொள்ள  புரட்சிகர அரசியலில் கொட்டைப்போட்டதாகக் கூறிக்கொள்ளும் உங்களுக்கு சொல்லவா வேண்டும்? 
  உங்களது நடைமுறை தொடர்ந்து கவனித்து வருகிறேன், முதலில் யார் என்பதை தெரிந்துக்கொள்ள முனைவது, பின்பு ஆளைப்பார்த்து  லேபிள் குத்துவது. கருத்தைப் பார்த்து, ஆள் யார் என்று புரிந்துக்கொள்வதுதான் புரட்சிகர நடைமுறை…. அப்போதுதான் புரட்சிகர அமைப்பிற்குள் இருக்கும்  வலது இடது போக்குகளை புரிந்துக்கொள்வதுகூட முடியும். அதைவிட்டு, ஆள் யார் என்று பார்த்தால், பின்பு சரியானவர்கள்கூட பிழை செய்யும் போது உங்களால் கணிக்க முடியாது. 

  மக்கள் கருத்துக்கு,
  காஷ்மீர் சுய நிர்ணய பிரச்சனைப்பற்றியும், மற்ற மாநில சுய நிர்ணய பிரச்சனைக் குறித்த சூப்பர்லிங்ஸுக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. நீங்கள் அதை தரும் பட்சத்தில் நீங்கள் யார் என்பதை என்னால் ஊகிக்க முடியும்.

  விவாதம் நடத்தும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்,
  விவாதத்தில் லேபிள் குத்துவதை நிறுத்தி, அதன் செயல்பாடுகளையும், அரசியலை மட்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமானதாக இருக்கும், படிப்பவர்களுக்கு  நெருடல் ஏற்படுத்தாத வண்ணமும், அரசியலை ஊடறுத்து பார்க்கும் தன்மையும் வளரும்.

  நன்றி.

 31. தம்மையும், தாம் சார்ந்திருக்கும் அமைப்பையும், நோக்கி எழுப்பப்பட்ட அரசியல் ரீதியான கேள்விகளையும், விமர்சணங்களையும் சூப்பர்லிங்க்ஸ் எவ்வளவு லாவகமாக உதைத்து தள்ளிவிட்டு தாவிச் செல்கிறார் என்பது இங்கு நடந்திருக்கும் விவாதத்தை முழுமையாக வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளமுடியும். இப்பொழுது மக்கள் கருத்து முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் விவாதத்தை முடித்துவிட வேண்டிய தேவை சூப்பர்லிங்க்சுக்கு வந்திருக்கிறது. அதாவது சிக்கல் அதிகமாகும் போது நூலை அறுத்துவிடுகிற டெக்னிக் இது. அதனால்தான் ‘ம.க.இ.கவை எந்த வகையில் குறை சொல்லமுடியாதாதால் நீங்கள் கக்கூசில் உட்காரும் போது கூட யோசிக்கிறீர்கள்’ என்பது போன்ற பிரமாதமான அரசியல் வாதங்களையெல்லாம் முன் வைக்க தொடங்கியிருக்கிறார்

  அடுத்து நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் என்று அவர் அழ தொடங்கியிருப்பது. இது ம.க.இ.கவினரின் பொதுவான விமர்சனப் பாணிதான் அதாவது அவர்கள் சில அமைப்புகளுக்கு எதிராக டீபால்டாக சில ‘விமர்சணங்களை(?)’ கையில் வைத்திருக்கிறார்கள், நீங்கள் எந்த அமைப்பு என்று சொல்லும் பொழுது அந்த விமர்சணத்திலிருந்து(கேலி) பேச தொடங்குவார்கள். உதாரணமாக த.தே.பொ.க என்றால் மணியரசன் பணம் கையாடல் செய்தார், ராசோ இதை அம்பலப்படுத்தினார் என்பதிலிருந்து அரசியல் விவாதம் தொடங்கும், அல்லது நீங்கள் த.நா.மா.லெ.க எனும் போது ‘ஓடுகாலிகளே’ என விளித்து அரசியல் விவாதம் தொடங்கும், அல்லது பின்னவீனத்துவம் பேசுபவர்களாக இருக்கும் பட்சத்தில் ‘ஏகாதிபத்திய கைக்கூலிகள்’ என்பதிலிருந்து அவ்வரசியல் விவாதம் தொடங்கலாம், ஓட்டு கட்சியாக இருப்பின் ‘ஓட்டு பொறுக்கி’ என்பதிலிருந்து தொடங்கும், ஒருவேளை நீங்கள் எந்த அமைப்பிலுமே இல்லாதிருக்கும் பட்சத்தில் ‘நடைமுறையிலில்லாத பிழைப்புவாதிகளுக்கு’ எம்மை நோக்கி கேள்வி எழுப்ப என்ன தகுதி என்பதிலிருந்து தொடங்கும். இப்படி ‘அரசியல்’ விவாதத்தை தொடங்குவதற்கு தோதகத்தான், ‘நீ எந்த அமைப்பென்பதை முதலில் சொல்லு’ என்று கதறுகிறார்கள். இது உண்மை, இணையத்தில் ம.க.இ.கவின் விவாதிக்கும் எல்லா இடங்களிலும் போய் பாருங்கள் பின்பு புரிந்து கொள்வீர்கள்.

  ‘மக்கள் கருத்தை’ பொருத்தமட்டில் மார்ச்சிய கோட்பாடுகளை முன்வைத்து அவர் விவாதித்த பாங்கும், அவர் நேபாளுக்கு எதிராக முன்வைத்த வாதங்களையும் பார்த்து அவர் ஒரு ‘மாவோயிஸ்டாக’ இருக்கக்கூடும் என்ற புள்ளியில் தன்னுடைய விவாதத்தை தொடங்கியனார் சூப்பர்லிங்க்ஸ் அந்த அடிப்படியில் ‘மாவோயிஸ்ட்களுக்கு’ எதிரான டீபால்டான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது, ஆனால் ‘மக்கள் கருத்து’ தனி ஈழத்திற்கு ஆதரவாகவும், புலிகளை பற்றி நேர்மையாகவும் கருத்துக்களை முன் வைத்து விவாதிக்கும் பொழுது இவர் என்ன அமைப்பாக இருப்பார் என்பதில் சூப்பர் லிங்க்ஸூக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது, இருப்பினும் மார்க்சியம் நன்கறிந்த ஒருவராக இருக்கக்கூடும் என்ற எண்ணமே அவருக்கிருந்தது, இறுதியில் மாவோயிஸ்ட்கள் மீது தமக்கு விமர்சணம் இருப்பதாக மக்கள் கருத்து கூறியவுடன், இவர் மாவோயிஸ்ட் அல்ல அப்படியெனில் இவருக்கு நம்மை விட அதிகமாக மார்க்சியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற அதிமேதாவித்தனமான‌ கருத்தோட்டத்திற்கு இறுதியில் சூப்பர்லிங்க்ஸ் வந்துவிட்டார் எனவேதான் ‘இது மார்க்சியம் இது லெனினியம் என்று நன்றாகத்தான் மார்க்சிய வகுப்பு எடுக்கிறீர்கள்…’ என்ற கேலிபேச்சிலிருந்து தம்முடைய ‘மேன்மையான’ அரசியல் விவாதத்தை தொடங்கியிருக்கிறார், மேலும் புலிகளை ஆதரித்து எழுதிய காரணத்தால் அவர் ஒரு தமிழ் தேசிய அமைப்பில் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்பதும் சூப்பர்லிங்க்சின் அனுமானம், அதனை தெரிந்து கொண்டால் தம்முடைய பாணியில் ‘விவாதத்தை’ தொடங்கலாமே என்பது அவருடைய எண்ணம்.

  இந்த பிண்ணனியில் சூப்பர்லிங்க்சை நோக்கி மக்கள் கருத்து கூறிய உதாரணத்தை பொருத்திப்பாருங்கள், அது எவ்வளவு உண்மை என்று புரியும்.

  இதோ அந்த உதாரணம் ‘குழாயடிச் சண்டையில் நீ பத்தினியா என்று ஒருவர் கேட்டால் நீ மட்டும் என்ன பத்தினியா என்று திருப்பிக் கேட்பது போல் இருக்கிறது உங்களுடைய வாதம். ஒரு மோசமான மனிதன்கூட அடுத்தவனைப் பார்த்து நான் தான் கெட்டுப்போயிட்டேன், நீயாவது ஒழுங்குக்கு வா என்று சொல்வான். அந்த அக்கரை கூட மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்ளும் உங்களிடம் அந்த நாகரீகம் இல்லை. நேர்மை இல்லை.’

  பின்குறிப்பு: என்னை நோக்கி தான் எழுப்பிய கேள்விகளுக்கு விடை எங்கே என‌ சூப்பர்லிங்க்ஸ் வினவுவார், மக்கள் கருத்து அவற்றில் சிலவற்றுக்கு பதில் கொடுத்திருக்கிறார் எனினும் என்னுடைய அனுபவமில்லாத விவாதம் மக்கள் கருத்து காத்திரமாக முன்வைத்துவரும் கருத்துக்களுக்கு குறுக்கீடாக அமைந்துவிடக்கூடாது என்பதால் நான் அமைதியாக விலகியிருந்து இவ்விவாதத்தினை உற்று கவனித்து தற்போது கற்றுக்கொள்ளவே முனைகிறேன்.

  மேலே உள்ள பின்னூட்டங்களில் மக்கள் கருத்து எழுப்பியிருக்கும் அரசியல் ரீதியான கேள்விகள் பதிலளிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. இந்த நிலையில் இவ்விவாதத்தை முடிக்க துடிக்கும் சூப்பர்லிங்க்ஸ் இந்த பின்னூட்டத்தையே சாட்டாக கொண்டு என்னிடம் பாயலாம், இதன் மூலம் அரசியலற்ற புள்ளியில் இங்கிருந்து விவாதத்தை தொடங்கி ஒட்டுமொத்த விவாதத்தையுமே சீர்குலைக்க நினைக்கலாம். எனவே இந்த பின்னூட்டத்திற்கு பதிலாக சூப்பர்லிங்க்ஸ் எவ்வளவு பெரிய ‘கக்கூஸ் புராணத்தை’ வாசித்தாலும், அந்த நாற்றத்தை பொறுத்து கொண்டு மூக்கை பொத்திக் கொண்டு அமைதியாக இருப்பதென நான் முடிவு செய்திருக்கிறேன்.

 32. People’s March is an interesting and informative publication about the Maoist revolutionary movement in India. It has (or has had) web sites at http://peoplesmarch.googlepages.com and http://peoples-march.blogspot.com. During 2007 the Indian government banned the online version of the magazine and has tried to close down or sabotage these and other web sites associated with People’s March as well as other web sites reporting on Maoist ideas or activities in India. Then, on December 19, 2007, this suppression campaign was carried a step further with the arrest of the editor and publisher of People’s March, P. Govindan Kutty. See the statement demanding the release of Govindan Kutty by the Revolutionary Democratic Front in India for further information. Finally, after much outrage about this arrest both in India and internationally, Govindan Kutty was released on Feb. 24, 2008, and made a statement at that time. Unfortunately the charges were still pending against him and he was not able to resume publication of People’s March for over a year and a half.

  We were completely opposed to these blatantly fascist measures which attempt to forcibly suppress progressive ideas and which are in gross violation of freedom of speech and freedom of the press. Consequently we are also making copies of People’s March available here and urge others who value freedom of thought to do the same.

  We also have been able to post all the earlier issues of People’s March in this Complete Archive, which also contains much other information from the suppressed People’s March web site. (Some of this information is still being organized for systematic presentation on BANNEDTHOUGHT.NET.)

  We now also have a Subject Index available for the issues through 2005
  The Return of People’s March!
  In August 2009 we heard from Govindan Kutty that after a long appeal process the order suppressing People’s March had been lifted. This is great news! Here, in MS Word format, is Kutty’s letter with this announcement. The first issue of the post-suppression magazine, labeled vol. 10, #10, and dated October 2009, is now available below. While the magazine will no longer be officially banned, it will very likely still be quite difficult for many in India and elsewhere to obtain. For that reason the magazine will continue to be made available here on this web site.

  The recent issues are in PDF format unless otherwise stated, and the most recently published issue is at the top of the list.

  http://indianvanguard.wordpress.com/2009/09/12/indiaban-on-maoist-magazine-lifted-peoples-march-august-2009-issue-released/

  1. Dear Editors
   What has this to do with the current discussions?
   It would have been useful if it was provided at an early stage when people were reading the interview.
   Now only a few are involved in the discussion.

 33. மக்க‌ள் கருத்து வணக்கம்.
  உங்களுடனான விவாதத்தை மேற்கொண்டு தொடரலாமா அல்லது இத்துடன் நிறுத்திக்கொள்ளலாமா என்று பரிசீலித்த போது என்னால் தொடரலாம் என்றோ அல்லது இத்துடன் முடித்துக்கொள்ள‌லாம் என்றோ எந்த தீர்க்கமான முடிவுக்கும் உடனடியாக வர முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு, ஒன்று உங்களுடன் விவாதிப்பதன் மூலம் எங்களைப் பற்றி உங்களிடம் இருக்கும் தவறான புரிதலை, கண்ணோட்டத்தை களையலாம், உங்களை எங்களுடைய‌ கருத்துக்கும் வென்றெடுக்கலாம் என்பது ஒன்று. இதன் காரணமாக உங்களுடன் தொடர்ந்து விவாதிக்கலாம் என்கிற கருத்து பல நேரங்களில் மேலோங்கியிருந்தது.

  இரண்டாவது, நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்று கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள், நான் எந்த அமைப்பையும் சாராத தனி நபர் என்று கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் இருக்கும் போது அதில் நீங்கள் எந்த அமைப்பிலும் இணைந்து செயல்படாமலிருக்கிறீர்கள், நாங்கள் தான் புலிகளை எதிர்க்கிறோம், ஆனால் இங்கு நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது அமைப்புகள் உங்களுடன் கருத்தொற்றுமையுடைய, புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் தான், ஆனால் அவர்களுடன் கூட இணைந்து செயல்படாமல் வெறுமனே தனி நபராக‌ இருக்கும் ஒருவர், ம.க.இ.க வை மட்டுமல்ல எந்த‌ பெயர்பலகை அமைப்புகளையும் கூட விமர்சனம் செய்யும் இடத்தை பெறவில்லை என்பது ஒன்று, இரண்டாவது இதன் தொடர்ச்சியாக நடைமுறையில் இல்லாத‌ இது போன்ற தனிநபர்களுடன் மல்லுக்கட்டுவதால் எனக்கோ அல்லது எனது அமைப்புக்கோ ஆகப்போவது என்ன, அதனால் என்ன‌ பயன் ? ஒன்றுமில்லை.

  ஆயிரம் பிரச்சனைகள், போராட்டங்களுடன் நடைமுறையில் இருக்கும் ஒரு அமைப்பை (அது த.தே.பொ.க ஆயினும் சரி எந்த அமைப்பாயினும் சரி) பற்றி வெறுமனே கணிப்பொறி முன்னால் உட்கார்ந்து கொண்டு “விமர்சனம்” செய்வதனூடாக விவாதிக்கத்தொடங்கி “வீனே” உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள அல்லது காட்டிக்கொள்ள இதை ஒரு களமாக பயன்படுத்திக்கொள்வது எமக்கு ஏற்புடையது அல்ல. சரி எப்படி இருந்தால் ஏற்புடையது என்கிறீர்களா, உங்களுக்கு பல கருத்துக்கள் இருக்கின்றன, அதை மார்க்சியம் என்று கூட சொல்கிறீர்கள்! ஆனால் நீங்கள் எந்த‌ அமைப்பிலும் இல்லை என்கிறீர்கள். நீங்கள் எந்த அமைப்பிலும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் கருத்து ரீதியாக ஏதோ ஒரு அமைப்பின் ஆதரவாள‌ராகத் தான் இருக்க முடியும். குறிப்பிட்ட அந்த அமைப்பின் கருத்தை ஏற்கக்கூடியவராகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும் போது ‘மக்கள் கருத்து’ என்கிற பெயரில் எதற்கு மறைய வேண்டும் ? உங்களுடைய உண்மையான அரசியல் அடையாளம் என்ன என்பதை (அப்படி இருந்தால் மட்டும்) துணிவுடன் காட்ட வேண்டும் என்கிறேன். இல்லை நான் எந்த அமைப்பிலும் இல்லை என்பதையே மீண்டும் சொல்கிறீர்கள் என்றால் அதன் பொருள், உங்களுக்கு தமிழகத்தில் யாரும் ஏற்புடையவர்களாக இல்லை. அதாவது தமிழ்நாட்டில் எந்த‌ அமைப்பும் சரியான அரசியல் கண்ணோடமுடைய‌ அமைப்பு இல்லை என்றாகிறது. ஒருவர் இந்த முடிவில் இருந்தால் மட்டும் தான், கருத்து ரீதியாகக்கூட ‘நான் யாரையும் ஆதரிக்கவில்லை’ என்று கூறமுடியும். அப்படி எதுவும் சரி இல்லை என்றால் மாற்று அரசியல் அமைப்பை நீங்கள் தான் கட்டியமைக்க வேண்டும்.

  எனவே எந்த அரசியல் அமைப்புகளிலும் பங்குபெறாத, நடைமுறையில் இல்லாத (நடைமுறையில் இருப்பதால் தான் நாங்கள் போலிக்கம்யூனிஸ்டுகளையும், தி.க காரர்களையும் கூட மதித்து விவாதிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்) உங்களுடன் எதற்கு நேரம் செலவு செய்து விவாதிக்க வேண்டும் என்கிற கருத்தும் என்னிடம் பலமானதாக இருந்தது. எனினும் இவற்றில் எதையும் நான் ஒரு முடிவாக எடுத்துவிடவில்லை.

  எனவே தற்போது ஒரு முடிவுக்கு வருவோம், அதாவது ஒரு உடன்பாட்டுக்கு. உங்களுடன் நான் விவாதிக்கத்தயார், இந்த ஒரு விசயம் பற்றி மட்டுமல்ல, அனைத்தை பற்றியும். அனைத்திலும் எமது நிலப்பாடு சரி என்பதை விவாதத்தின் மூலம் உங்களிடம் நிறுவுகிறேன். அவ்வாறு எமது விளக்கத்தை, நிலப்பாட்டை நீங்கள் ஏற்கும் பட்சத்தில் நீங்கள் எமது அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தான் எனது நிபந்தனை. இந்த விவாதத்தை இணையத்தில் தொடருவதற்கு என‌து தரப்பில் சில சிரமங்கள் உண்டு, அவ்வளவு நேரங்கள் இணையத்தில் செலவிட முடியாது என்பதால் இதை நேரில் வைத்துக்கொள்ளலாம். உங்கள் கருத்தை கூறவும்.

  இறுதியாக,
  நீங்கள் கடைசியாக இட்டிருந்த பின்னூட்டத்திற்கு சில விளக்கங்களும் எமது நிலைப்பாடும் கீழே.

  ஈழம் குறித்து:
  உங்க‌ளுக்கு முன்பு என்ன கூறினேனோ அதையே தான் இப்போது சற்று விளக்கமாக கூறுகிறேன்.

  தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை இல‌ங்கையில் உள்ள தமிழ் மக்கள் தான் முடிவு செய்ய முடியும். அவர்களுக்குத்தான் அந்த முழு உரிமையும் உண்டு. பெரும்பாண்மை மக்களின் முடிவு தனியாக பிரிந்து செல்வது தான் என்றால் நாங்கள் அதை எதிர்க்கவில்லை. அல்லது சிங்கள மக்களுடனே கூடி வாழ்வதாக முடிவெடுத்தாலும் நாங்கள் அதை எதிர்க்கவில்லை. அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறோம், அவர்கள் சார்பாக தமிழ் நாட்டிலுள்ள தமிழினவாதிகளோ, புலம்பெயர்ந்த‌வர்களோ முடிவெடுக்க முடியாது என்கிறோம்‌. அவர்கள் பிரிந்து செல்வதாக‌ இருந்தாலும் கூடி வாழ்வதாக இருந்தாலும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்கிறோம். அதை எப்படி ஒடுக்குகிற‌ சிங்கள அரசே வழங்கும் ? சிங்கள அரசு வழங்காது, தமிழ் மக்களுக்காக சிங்கள இனத்திலுள்ள முற்போக்கு, ஜனநாய சக்திகள் தான் குரல்கொடுக்க வேண்டும் என்கிறோம். குறிப்பாக ஒடுக்கும் இனத்தின் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும்.

  இரண்டாவதாக,மார்க்ஸ் ஐரிக்ஷ் பிரச்சனையில் கூறியது பழைய கதை என்றதும், நீங்கள் அப்படியென்றால் மார்க்சியத்தின் அடிப்படையே மாறிவிட்டதா, அது மாறிவிட்டதா, இது மாறிவிட்டதா என்று கேட்கிறீர்கள். அனைத்தும் மாற வேண்டிய அவசியமில்லை. எந்த மாற்ற‌ங்களும் இல்லாமல் பைபிள் மாதிரி அப்படியே இருந்தால் அது மார்க்சியமும் இல்லை. அயர்லாந்து குறித்து மார்க்ஸ் கூறிய‌ அந்த‌ நிலை இன்று முற்றிலும் மாறியுள்ளது. இன்றைக்கு அமெரிக்கா என்கிற மேல் நிலை வல்லரசும், உலகைச் சுற்றிலும் பல்வேறு ஏகாதிபத்தியங்களும் சூழ்ந்திருக்கும் நிலையில், தங்களுக்கிடையில் உலகை பங்கீடு, மறுபங்கீடு போட்டுக்கொள்ளுகிற பழைய‌ நிலைமை மாறி உலகம் புதிய தன்மையில் உள்ள இன்றையச் சூழலில், உலகின் ஒரு மூலையிலுள்ள‌ ஒரு தனி தேசிய இனம் மட்டும் தனியாக பிரிந்து செல்வது நடவாத காரியம். இக்காலகட்டத்தில் ஒரு தேசிய‌ இனத்தின் போராட்டம் வர்க்கக்கண்ணோட்டமின்றி வெறும் தேசியவாதத்தால் மட்டுமே வழி நடத்தப்படுவதும் சாத்தியம் இல்லை. அவ்வாறு ஒரு தேசிய இனத்தின் போராட்டம் வர்க்கப்பார்வையுடன் நடத்தபடுகையில் தனி ஒரு தேசிய இனம் மட்டும் பிரிந்து செல்வதிலுள்ள சாத்தியமற்ற‌ தன்மைகளையும், அபாயங்களையும், தேசிய அகநிலை விருப்பங்களிலிருந்து முடிவுகளை எடுக்காமல், சர்வதேச புறநிலை எதார்த்தங்களிருந்தும், தேசிய‌ கண்ணோட்டத்திலிருந்து எடுக்காமல் வர்க்க கண்ணோட்டத்திலிருந்தும் அனைத்தும் பகுத்துப்பார்க்கப்பட்டு முடிவெடுக்கப்ப‌டும்.

  மேற்கூறிய இந்த புதிய நிலைமைகளின் கீழ் ஒரு தேசிய எழுச்சியை நடத்தி விடுதலை அடைந்த தேசம் என்று ஒன்றையாவது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா ? அவ்வாறு ஏதேனும் சில சிறிய சிறிய நாடுகள் தனியே பிரிந்து போயிருப்பின் அவை சுதந்திரக்காற்றை சுவாசிப்பவையாக இருக்க முடியாது, மாறாக‌ ஏகாதிபத்தியங்களின் அடிமை தேசங்களாகவே இருக்கும். (உதாரணம். கிழக்கு திமோர்,செர்பியா, செசன்யா,ஜார்ஜியா இன்ன பிற..) அவ்வாறின்றி ஏகாதிபத்தியங்களின் நலன்கள் இல்லாமல், அதனுடைய‌ ஆதரவில்லாமல் ஒரு தேசிய இனம் பிரிந்து செல்வது, இந்த ஒடுக்குமுறை சுரண்டல் அமைப்பு முறையின் கீழ் என்றைக்குமே சாத்தியம் இல்லை. அந்த தேசிய இனங்கள் பல பத்தாண்டுகளாக போராடினாலும், கடைசி வரை போரடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். இந்த அமைப்பு முறையை ஒழிக்காமல் அந்த குறிப்பிட்ட தேசத்துக்கு விடுதலையே கிடைக்காது.

  போராடிக்கொண்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களே இதற்கு சான்றுகளாகும். குறிப்பாக காக்ஷ்மீரை எடுத்துக்கொள்வோம். காக்ஷ்மீர் மக்கள் தனி நாடாக‌ செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள், அவர்களுடைய கோரிக்கை நியாயமானது, அதை நாங்கள் முற்றிலுமாக ஏற்கிறோம். அதற்காக நாங்கள் பல போராட்டங்களையும் கூட நடத்தியிருக்கிறோம். “காக்ஷ்மீர் யாருக்குச் சொந்தம்” என்கிற சிறு வெளியீடை பல்லாயிரக்கணக்கில், பல முறை அச்சிட்டு தமிழக மக்கள் மத்தியில் காக்ஷ்மீரி மக்களின் போராட்டத்திலுள்ள நியாயத்தை பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம். இன்றுவரை தொடர்ந்து எமது இழ்களில் அவர்களுக்கு ஆதரவாகவே எழுதியும் வருகிறோம். ஆனால் காக்ஷ்மீர் எத்தனை ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறது, மணிப்பூரி,நாகாலாந்து வடகிழக்கு மக்கள் எவ்வள‌வு ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் ? ஆனால் ஏன் விடுதலை அடையமுடியவில்லை ? மேற்கூறிய புதிய அர்சியல் நிலைமைகள் தான் காரணம். இந்த மக்களின் தேசிய இனப்போராட்டம் இந்தியாவில் ஒரு புரட்சி நடக்கும் வரை கூட தொடர்ந்து நடக்கலாம், அல்லது ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க இந்திய அரசின் திடீர் ‘ந‌லன்கள்’ காரணமாக பிரிந்தும் போகலாம். ஆனால் அவை சுதந்திர தேசிய அரசுகளாக மட்டும் இருக்க முடியாது. இவை தான் தேசிய இனப்பிரச்சனை குறித்த ( இதில் இன்னும் நிறைய விளக்கப்படாமல் விடுபட்டுள்ளன,அவசியமானதை மட்டுமே இங்கு கூறியுள்ளேன்) எமது நிலைப்பாடு. ஈழத்திற்கும் நாங்கள் இதை தான் சொல்கிறோம். காக்ஷ்மீர் பிரிந்து செல்வதற்கு நாங்கள் என்ன எதிரிகளா ? அப்படியென்றால் காக்ஷ்மீர் தனிநாடு என்று நாங்கள் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும் ? அதே போலத்தான் ஈழம் குறித்த எமது நிலையும். எனவே, இதுவரை விளக்கியதிலிருந்து ஈழம் குறித்த எமது நிலை என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  1. இந்த கட்டுரையில் வந்த விமர்சனப்பகுதி முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து மற்ற விசயங்களை படிப்பதற்கும், உலவுவதற்கும் சென்றுவிட்டேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கட்டுரைக்கு வந்தபோது அதில் நீங்கள் நெடிய கட்டுரையை வரைந்திருகிறீர்கள். இப்பொழுது இந்த கட்டுரையும் மாத அட்டவணையில் போய்விட்டதால் அதில் விவாதமும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆகையால் இது குறித்து விவாதிக்க நான் வேறொரு சந்தர்ப்பத்தில் தேசிய இனப் பிரச்சனை சம்பந்தமான கட்டுரை வரும் போது விவாதிப்போம்.
   நீங்கள் பொது தளத்தில் கருத்துக்களை இடுகிறீர்கள். பிறகு தனியாக பதில் சொல்வதாக கூறியிருக்கிறீர்கள். பொதுவாக தவறான கருத்துக்களை இடும்போது அதை மறுக்க நானும் பொதுவான தளத்தையே பயன்படுத்தவேண்டியிருக்கும். ஆகையால் பொதுதளத்தில் நேரம் ஒதுக்குவது வீணாகாது என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த கட்டுரை வந்து நீண்ட நாட்கள் ஆனதால் இதில் தொடரும் போது எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. ஆனால் சில விசயங்களை மட்டும் நினைவுபடுத்திவிட்டு முடித்துவிடுகிறேன்.
   நான் ஏற்கெனவே கேட்ட பல கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. அது நேபாளப் பிரச்சனையாக இருந்தாலும், ஈழப் பிரச்சனையாக இருந்தாலும் அதில் அடிப்படையாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. நீங்கள் மார்க்சியத்தின் லெனினியத்தின் அடிப்படையில் விளக்குவதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்பவராக இருந்தால் அதனடிப்படையில் விளக்கவும். இல்லை உங்கள் சொந்த கண்டுபிடிப்பாக இருந்தால் அதனடிப்படையில் விளக்கவும். உங்கள் சொந்த சரக்கை லெனினியம் என்றும் மார்க்சியம் என்றும் கலப்பது சரியான கலப்படம் இல்லை.
   ஒரு வாக்கியத்தில் அது அந்த காலம் இது இந்த காலம் என்று பேசுவதை விட்டுவிட்டு மார்க்ஸ், லெனின் ஆகியோர் எப்படி எந்த சூழ்நிலையில் ஒரு முடிவை எடுத்தனர். இன்று அந்த சூழ்நிலை எந்த வடிவில் மாறி இருக்கிறது, ஆகியவை பற்றி எந்த விளக்கமும் தராமல் உங்கள் கருத்தை 21ம் நூற்றாண்டின் மார்க்சியம் லெனினியம் என்று கூறுவது அதை குழிதோண்டி புதைக்கும் முயற்சிதான். இதில் நேரப்பிரச்சனை எங்கே வந்தது. வேறொரு கட்டுரையில் வேண்டுமானால் தொடரலாம்.

 34. Superlinks! still we are not able to understand your stand about eelam.Your are supporting kashmir nation, but you are not on eelam. Lot of confussion. Also you are not on principle or ideaology, everythin g .Your action depends upon on usuage.! This will so you can utulise anybody , if not you can thrown away. This is more danger than any thing. PAYANPATTUWATHAM is danger trend !

 35. knr:
  Could you kindly explain the basis on which you consider that a separate state of ‘Eelam’ is THE SOLUTION to the Sri Lankan national question?
  Is the Sri Lankan national question merely a “Tamils v. Sinhalese” issue?
  I fear that most non-Sri Lankan supporters of the Eelam cause (and many Sri Lankan Tamils too) have not the faintest idea of the problem or its history, except for a distorted version of it.
  The answer to national questions everywhere is the establishment of the right to self determination of all nationalities and the extension of that right to national minorities to ensure maximum autonomy.
  Eelam is not an end in itself.

 36. Eeam is not an end in itself.. Eventhhough I am not fuly maoist supporter. . Take the account of critisism. PLFT , NLFT,PLA AND MANY OTHERS must LEARN LESSON FROM THESE WAR and WORLD SUTITION… LET WE ALL TOGETHER ANYLALSE SUTITION. Take lesson from past.. TAKE THE EELAM QUESTION IN POSTIVITE ANGLE.. Still i was remember of deported forcefull eelam tamils from Madurai jail.where i was one among them. in jail.in late 80″s.

  1. Dear friends,

   Those who refuse to learn from history are condemned to repeat the same mistakes. We have people who say Socratis has made a blunder in rebelling against slavery before educating and organizing slaves. They say that Socretis should have organised the slaves before going for rebellion. Their argument is thousands and thousands of slaves were killed and crucified in the rebellion. Maoists complements will always be there for the organizing works done by superlinks. In many ways super links helps revolution by organizing people and giving them to Maoist party.
   Thank you. Let us not waste our energy on discussion.

   P.Govindan kutty 

  2. P.Govindan kutty, thanks.
   If “super links helps revolution by organizing people and giving them to Maoist party”, what is ther point in all the bitter arguments that went on? You could have said this very early.
   I said that some matters need to be dealt with at one-to-one level before becoming public debates.
   But I was pounced upon.
   “Let us not waste our energy on discussion. ” is not a good thing to say.
   Discussion is essential to democracy, especially people’s democracy.
   What is a waste of time is the kind of petty polemic that ultimately transforms friendly contradictions into hostile contradictions.

   1. Dear Siva,

    மாஓவாதிகளைப் பிற மார்க்ஸிய லெனினியவாதிகள் நியாயமான பல்வேறு காரணங்கட்காக விமர்சிக்கிறார்கள்.
    Nyayamana palveru karanangalai cholli tholaikka ungalukka enna bhayam.

    Ivvaru ezhudhi kuzhappangalai than ookuvikkireergal.

    So long as you do not wish to expose your above stand in true spirits I consider you as either Confucius or opportunist and does not wish to enter into any dialog or discussion with you. 

    P.Govindan kutty

   2. Dear Govindankutty
    If you cannot understand what I have said several times already, I see no point in repeating myself until one of us falls off the chair.
    I asked a simple question, which you have ducked, but are demanding explanations from me.

   3. GK.
    A foot note:
    All of us can do well with out provocative name calling.
    Such conduct reflects more on the character of the person who resorts to abuse and not the abused.
    If you think that you are perfect please ignore my suggestion.

 37. *”PLFT , NLFT,PLA AND MANY OTHERS must LEARN” . Who is PLA?
  Why have you left out the most important of names?
  Is it because they will never learn?

Comments are closed.