புலிகள் இயக்கத்தால் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 19 ஆண்டுகள்

muslimsவடக்கிலிருந்து முஸ்லீம்கள் இரண்டு மணிநேர அவகாசத்தில் தமது  சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு  இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகிறது.
வடக்கிலிருந்து  பலவந்தமாக  வெளியேற்றப்பட்ட  தமிழ் பேசும்  முஸ்லீம்கள்  புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும்.

இத்தினத்தை நினைவு கூறும் வகையில் முஸ்லிம்; சமாதான பேரவையின் புத்தளம்; கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.

சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில்,பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அவை வருமாறு :

1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து.ஆராய்ந்து,தேவையான பரிந்துரைகளுடன்,அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு.இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும்,வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டயீடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம்,தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4) மீள்குடியேற்றத்தின் போது ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூராம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு,முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு ,PRESCRIPTION ORDINANCE எக்காரணம்; கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும்; கையளிக்கப்பட வேண்டும்.

7) 1990 ல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்தள்ளது.எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாக காணிகள்; வழங்கப்பட வேண்டும்.

8) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம்; ஆண்டு முதல் கொடுக்கப்பட்டுவரும்,நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்துவருகின்றது.சுமார் 19 வருடகாலப் பகுதியில்,ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு,வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிலாரயத்; தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9) அரச நியமனங்கள்,வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக,நிரப்பமாக வழங்கப்பட வேண்டும்.

10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரைக்கும் தகவல் இல்லாத முஸ்லிம்களின்,குடும்பங்களுக்கு துரிதமாக நட:டுயீடு வழங்கப்படுவதுடன்,மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம்; பிரதேசத்தில் வாழ்ந்து வரகின்றனர்.இதன்; நிமித்தம் புத்தளம் பிரதேச ப+ர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு,கல்வி,அரச நியமனங்கள்,தொழில்வாய்ப்பு சுகாதாரம்,பல்கலைக்கழ அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான,இழப்புகளும அவசரமாக உரிய முறையில் ஈடுசெய்யப்பட வேண்டும். இக்கோரிக்கைகள் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது