புலிகளை ஆதரிக்கக் கூடாது : ஒபாமா அரசு

obamaவிடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ் தொழிற் கட்சி ஆகிய தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என ஒபாமா அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

குறித்த இரண்டு அமைப்புக்களுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென லொஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்க நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளன.

எனினும், இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், 2010ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த வழக்கு விசாரணைகள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவோருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுட் காலம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானதென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், குறித்த இரண்டு அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவதைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்குமாறு அமெரிக்க மனித உரிமை நிறுவனம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்ட அங்கீகாரம் வழங்குமாறு தெரிவித்து குறித்த நிறுவனம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

2 thoughts on “புலிகளை ஆதரிக்கக் கூடாது : ஒபாமா அரசு”

  1. BLACK PEOPLE ONLY CONCERN ABOUT BLACK PEOPLE AND IN THEIR THINKING ALWAYS BASED ON RASIST WAY.OBAMA FAMILY ALSO SAME.WE NEED MRS HILARY CLINTON SPEAK FOR US.I AM SUPPORTER OF HILLARY BUT OUR UNFORTUNATE THIS GUY ON POWER.ITS SAD.

Comments are closed.