புலிகளுக்கெதிரான போரில் 14,000 இராணுவச் சிப்பாய்கள் கால்களை இழந்துள்ளனர்.

 
 
 
  விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 25 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட போரினால் 14,000 இராணுவச் சிப்பாய்கள் கால்களை இழந்துள்ளதாக செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் அவாஸ் இன்டர்நெஸனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒரு காலை இழந்தவர்களும் சிலர் தமது இரண்டு கால்களையும் இழந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

படையினருக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் பணிகளை எதிர்வரும் 03ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
 
 
 இதுகுறித்து இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, இந்த எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.