புலிகளுகெதிரான யுத்ததை இந்தியாநிறுத்தக் கோரவில்லை: இலங்கை ஊடகத்துறை அமைச்சர்

இந்தியா புலிகளுக்கெதிரான  யுத்தத்தை நிறுத்தக் கோரி எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப  அபயவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அயல் நாடென்ற அடிப்படையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு  வேண்டுகோள் விடுத்ததாகவும் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுடன் அயல் நாடென்ற அடிப்படையில் இருவழிநட்பு  எப்போதுமே அமைந்திருப்பதாகவும் இந்தியாவின் பக்கத்திலிருந்து எந்த அழுத்தங்களும்  இல்லை எனவும் மறுப்புத் தெரிவித்தார்.
சிவனேசதுரை  சந்திரகாந்தன்(பிள்ளையான்) முதலமைச்சராக நியமிக்கப் பட்டதென்பது இந்தியாவின் அழுத்தங்களின் அடிப்படையில் என்ற ஜே.வி.பி  இன் குற்றச்சாட்டையும் மறுத்தார்.

ஆதாரம்: PTI