புலிகளின் முக்கிய தலைவர் சென்னையில் கைது

சென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை வளசரவாக்கம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே இவர் கைது செய்யப்பட்டதாக தமிழகத்தின் ஞ பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் அகமதாபாத் மற்றும் பெங்களுர் நகரங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து தமிழகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டு காவற்துறையினர் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக காவற் துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் நடத்த பட்ட தீடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய தம்பி அண்ணா எனும் டானியல் என்பவர் என்றும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதான சந்தேக நபர் ரகசியமான இடத்தில் தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்முதல் பிரிவின் தலைவராக இவர் செயற்பட்;டு வந்ததாகவும் ‘கியூ’ காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.