புலிகளின் பிடியிலிருந்து மீட்கப் பட்ட இந்தியர்!

கொழும்பு, ஜூலை 18: விடுதலைப்புலிகளால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த  இந்தியர் ஒருவரை நேற்று அவர்களி டமிருந்து மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு 28 வயது கொண்ட இந்தியர் ஒருவர் மேலும் 3 இந்தியர்களுடன் சேர்ந்து முறையான பயண ஆவணங்களுடன் இலங்கை சென்றுள்ளார்.
.
பின்னர் அவர் தன்னுடைய உறவினர் களைப்பார்ப்பதற்காக வடபகுதியில் உள்ள கிலிநொச்சிக்கு சென்றுள் ளார். அங்கு அவரை விடுதலைப் புலிகள் சிறைபிடித்ததாக  கூறப்படு கிறது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக புலிகளின் பிடியிலிருந்த அவரை நேற்று தாங்கள் மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

புலிகளின் பிடியிலிருந்தபோது, அவர் சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டதாகவும்,  கடுமையான வேலை கள் கொடுத்து துன்புறுத்தப் பட்டதாகவும், இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
புலிகளின் பிடியிலிருந்து மீட்கப் பட்ட இந்தியர் குறித்து  தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக இந்திய அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்