புலிகளின் தலைவர் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் :விமானப் படைத் தளபதி

எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின் மீது சிறீலங்கா விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

அவர் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய நேயர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமானப் படைத்தளபதி மேலும் கூறியுள்ளதாவது:

தரைப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத்தாக்குதல்கள் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகப் விடுதலைப் புலிகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். ஆனால், பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்படாமல் விமானப் படையினர் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

எமது விமானப் படைக்குப் பலமான பாதுகாப்பு வலையமைப்பு இருக்கிறது. புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்குப் போதுமான பலமும் விமானப் படையினரிடம் இருக்கிறது. புதிய யுத்த ஜெட் விமானங்களை உபயோகிக்கவும் விமானப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அநுராதபுர விமானப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரனைகளை மேற்றொண்டு வருவதாகவும் விமானப் படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளர்.