புலிகளின் “ஜீவன் பேஸ்” முக்கிய தளத்தை இராணுவம் கைபற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தகவல்.

17.08.2008.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஜீவன் பேஸ் எனப்படும் முக்கிய தளம் ஒன்றை இராணுவத்தினர் 59 ஆம் படைப்பிரிவு நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது,

நாயாறு குடாக்கடலுக்குத் தெற்கே உள்ள ஆண்டான்குளம் பகுதியில் இந்தத் தளம் அமைந்திருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் பிரசித்தி பெற்ற தளமாகிய வன்போர் பேஸ் எனப்படும் முகாமின் முக்கிய பகுதிகளில் ஜீவன் பேஸ{ம் ஒன்று என இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள இந்த தளத்தில் 1250 சதுர பரப்பளவு கொண்ட நான்கு கட்டிடங்களும், 100 பதுங்கு குழிகளும், 35 கழிப்பறைகளும் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் 69 பேரின் கல்லறைகள் காணப்பட்டதாகவும், வெற்று பரல்கள் ஒரு தொகுதி உட்பட பல பொருட்களையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.