புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) : ஐயர்

கடத்தல் படகில் இலங்கை வந்து இறங்கியதும், உடனடியாகவே இயக்கவேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரு நாட்கள் நிலைமைகளை அவதானித்த பின்னர், எமது பண்ணைக்குச் செல்கிறேன். நான் இந்தியாவில் இருந்த வேளையில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் ஒரு பண்ணை 50 ஆயிரம் ரூபாய்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இது இந்தப் பண்ணை புளியங்குளத்திலிருந்து அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை. அந்தப் பண்ணையிக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, அதனைத் தேடிச் செல்கிறேன். அங்கே சென்று எமது உறுப்பினர்களுடன் கள நிலைமைகள் குறித்தும், புதிய தொடர்புகள் குறித்தும் உரையாடுகிறேன்.

இரண்டு பண்ணைகளிலுமாக ஏறக்குறைய எட்டு உறுப்பினர்கள் விவசாயம் செய்துகொண்டு முழு நேர உறுப்பினர்களாக வாழ்கிறார்கள். முன்னமே குறிப்பிட்டது போல பண்ணையிலிருப்பவர்கள் இயக்கத்திற்குள் உள்வாங்கப் படுவதற்கான முதல் நிலை உறுப்பினர்களாகவே கருதப்பட்டார்கள். இவர்களைச் சில காலங்களுக்கு பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதன் பின்னதாகவே இயக்க உறுப்பினர் மட்டத்தில் இணைத்துக்கொள்வது என்பதே எமது திட்டமாகச் செயற்படுத்தி வந்தோம்.

நான் இந்தியாவிற்கு செல்லும் வேளையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பண்ணையிலிருந்தனர். ஞானம், சற்குணா, கறுப்பி என்ற நிர்மலன், செல்லக்கிளி ஆகிய நால்வருமே அங்கிருந்தனர். புதிய பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். குமணன், சாந்தன், மதி, பண்டிதர் போன்றோர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

பண்ணை என்பது எமது இயக்கத்தின் சட்டரீதியான முன்முகமாகவே அமைந்திருந்தது. தேடப்படுக்கிற உறுப்பினர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதில்லை. செல்லக்கிளி தேடப்படுகின்ற ஒருவர் என்பதால் பண்ணையில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை.

இந்தப் புதிய உறுப்பினர்களையும், ஒடுக்கு முறைக்கு எதிரான அவர்களது உணர்வுகளையும் நான் கண்டபோது, என்னுள் என்னையறியாத உத்வேகமும் உற்சாகமும் பிறக்கிறது. தனித் தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம் தவழ்ந்து எழுந்து நடை போடுவதான உணர்வு என்னுள் பிரவகித்த்து. இரண்டு மூன்று தனி மனிதர்களைக் கொண்ட எமது குழு ஒரு இயக்கமாக மாற்றம் பெறுவதைக் கண்முன்னாலேயே காண்பது போலிருந்தது.

நானும் பிரபாகரனும் இல்லாத வேளைகளில் இப்பண்ணை ஏனைய மத்திய குழு உறுப்பினர்களான நாகராஜா, கணேஸ் வாத்தி, , தங்கா, விச்சு போன்ற உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. இவர்கள் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்த போதும், முழு நேர இயக்க உறுப்பினர்களாக இருக்கவில்லை. இந்த மத்திய குழு உறுப்பினர்களிடமே பண்ணைகளின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வார இறுதிப்பகுதிகளிலேயே இவர்கள் பண்ணைக்குச் சென்று இயக்க நிர்வாக வேலைகளை கவனித்துக் கொள்வது வழமை.

காடு சார்ந்த வசதி குறைந்த பகுதிகளிலேயே பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் விஷ ஜந்துக்கள், கொசுத் தொல்லை என்பன அதிகமாகக் காணப்பட்டன. இதனால் பண்ணையில் வாழ்ந்த உறுப்பினர்கள் மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வாடும் துன்பியல் சம்பவங்கள் வழமையாகியிருந்தது. இவ்வாறான நோய்களுக்கான மருத்துவ வசதி கூட எம்மிடம் இருந்ததில்லை. மத்திய குழு உறுப்பினர்களே இவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்தனர்.

மத்திய குழு உறுப்பினர்கள் வார இறுதியிலேயே அங்கு செல்லும் வாய்ப்பு இருந்தமையால் பண்ணை உறுப்பினர்களின் நலன்களை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது. இதனால் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் பண்ணை உறுப்பினர்களுக்கும் இடையேயான முரண்பாடு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. நாடு திரும்பியதும் எனது உடனடியான பிரச்சனையாக இதுதான் அமைந்திருந்தது.

ஆக, பூந்தோட்டம் பண்ணையில்ருந்தவர்களதும், பன்றிக்கெய்தகுளம் பண்ணைகளுக்கிடையே பயணிப்பதும், அவர்களுடைய நலன்களைக் கவனிப்பதும், மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளைக் களைவதும் தான் எனது சுமை நிறைந்த வேலையாக அமைந்திருந்தது. மாவை சேனாதிராஜாவின் தம்பியான தங்காவின் மீதான தப்பபிப்பிராயம் ஏனையோரிலும் அதிகமானதாகவே அமைந்திருந்தது. சில மத்திய குழு உறுப்பினர்களின் பிரமுகத்தனமான மனோபாவம் பண்ணையில்ருந்தவர்கள் மத்தியில் விரக்தி மனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது. சில மாதங்களில் பண்ணைகள் ஒழுங்கிற்கு வருகின்றன. மறுபடி உற்சாகத்துடன் வேலைகள் தொடர்கின்றன.

இந்த வேளையில் சுமார் 3 மாதங்களின் பின்னர் பிரபாகரனும் இந்தியாவிலிருந்து திரும்புகிறார். இவரோடு கூடவே பேபி சுப்பிரமணியம், ராகவன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.

நான் இந்தியாவில் இருந்த வேளையில் பேபி சுப்பரமணியம் ஊடாக, கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான , நில அளவையாளருமான உமா மகேஸ்வரனின் தொடர்பு எமக்கு ஏற்படுகிறது.

கொழும்பிலிருந்து வந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது. உமா மகேஸ்வரன் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறார். நான் இலங்கைக்கு வந்தபின்னர் பண்ணையில் என்னோடும் ஏனைய உறுப்பினர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.

சில நாட்களிலேயே, எமது மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சந்திக்க ஏற்பாடாகிறது. இச் சந்திப்பை அமிர்தலிங்கம் வீட்டிலேயே ஏற்பாடுசெய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தச் சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும் நான் மத்திய குழுவோடு இணைந்து ஒரு தடவைதான் அவர்களைச் சந்த்தித்திருந்தேன்.

நான் இந்தியாவில் தங்கியிருந்த வேளையில் இந்தத் தொடர்புகளும் சந்திப்புக்களும் பிரபாகரனோடு பலதடவைகள் நிகழ்ந்திருந்ததால், திட்டமிடலுக்கான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என்பதை விட நட்பு அடிப்படையிலான சந்திப்பாகவே எனது அமிர்தலிங்கத்துடனான முதலாவதும் இறுதியானதுமான சந்திப்பு அமைந்திருந்தது.

பிரபாகரன், பேபி சுப்ரமணியம், குலம் போன்றோருடன் தான் இந்தத் தொடர்புகள் அதிகமாக அமைந்திருந்தன. எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி எமது பிரதான நட்பு சக்தி என்பதற்கும் மேலாக அரசியல் வழிகாட்டிகள் என்பது வரை எமது அனைவரதும் உணர்வுகள் அமைந்திருந்தன. பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை.

ஒரு வகையில் ஒரே அரசியலுக்கான வேறுபட்ட வழிமுறைகளையே நாம் முன்னெடுத்தோம். சிறுகச் சிறுக தொடர்ச்சியாக, 80 களின் இறுதி வரை முளைவிட்ட அனைத்து அமைப்புக்களுமே தமது உள்ளகக் கட்டமைப்புகளில் ஜனநாயகத்தையும், வெளியமைப்பில் புதிய அரசியலுக்கான தேடலிலும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவான அரசியல் புலிகள் போன்று ஒரே வகையானதாகவே அமைந்திருந்தது என்பதை இன்று மதிப்பீட்டுக்கு உட்படுத்தக் கூடியதாக உள்ளது.

இதே வேளை உமா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து வந்து எம்முடன் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்கிறார். இவரது போராட்ட உணர்வும், துடிப்பும், உத்வேகமும் எம்மைக் கவர்ந்திருந்தன. 1977 இன் இறுதிகளில் உமா மகேஸ்வரனையும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற முன் மொழிவைப் பிரபாகரன் முன்வைக்கிறார். நாம் யாரும் இதில் முரண்படவில்லை. உமா மகேஸ்வரனும் முகுந்தன் என்ற இயக்கப் புனை பெயரோடு தமிழீழ விடுதலை புலிகளில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இதே வேளையில் உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.

1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ஜெயவர்த்தனா அரசு, புதிய குடியரசு அரசியல் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. புதிய அரசியல் சட்டம் ஈழத் தமிழினத்தின் அடிமை சாசனம் என்று தமிழர்கள் குரல் கொடுத்தார்கள்.இதே நாளில் நாங்கள் ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று எமது மத்திய குழுவில் முடிவெடுக்கிறோம்.

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர்  மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவது வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

 இந்த வேளையில் விமானமொன்றைக் குண்டுவத்துத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து எம்மில் பலரால் முன்வைக்கப்படுகிறது.

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

இந்த முடிபுகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடுகிறோம். அந்த வேளையில் சிங்கள மக்கள் அதிகமாகப் பிரயாணம் செய்யும் இந்த விமானத்தில் அவர்கள் விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்னர் குண்டை வெடிக்கவைத்தால் அப்பாவிகள் அனியாயமாக இறந்துபோவார்கள் என்பது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. இவ்வேளையில் தான் ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன். சாந்தனும் எமது கருத்தோடு உடன்படுகிறார். பொதுவாக அங்கிருந்த மற்றவர்கள், சிங்கள மக்கள் கொல்லப்பட்டால் வருத்தப்படத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இறுதியில் நானும் ராகவனும் உறுதியாக வாதிட்டதில், அப்பாவிப் பொதுமக்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மட்டுமே நேரக்குண்டை வெடிக்க வைப்பது என முடிவாகிறது.

(இன்னும் வரும்…)

 

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

37 thoughts on “புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) : ஐயர்”

 1. வணக்கம் ஜ்யர்..தொடரட்டும் உங்கள் எழுத்துபணி… ஈழத்தின் பிந்தைய வரலாறை , யார் யாரோ எல்லாம் எழுதி இருக்கிறார்கள். ஆனாலும் அதில் எழுதப்படாத பல பக்கங்களை நீங்கள் சொல்லி வருகிறீர்கள். இது வரை உங்கள் எழுத்தின் மூலம்…முக்கியமாக…தலைவர் பிரபாகரனின் மீதும் ,புலிகள் மீதும் இருந்த கறைகள், தப்பு அபிப்பிறாயங்கள் , சந்தேகங்கள களுவப்பட்டிருக்கின்றன… நீக்கப்பட்டுவிட்டன…உண்மையை அறிய தருகின்றமைக்கு எனதுநன்றிகள். வலியது வாழும்……..எளியது வீழும்…. நாம் தமிழர் எல்லாம் குறை குற்றம் கண்டு பிடிக்காது. ஒன்றாய் .போராடி ஜெயிக்கப்போறோமா…இல்லை ..அழிந்து போகப் போறோமா… தலைவர் பிரபாகரன் மீது தப்பு சொல்லுபவர்கள்………………. தவறு செய்யாத மனிதர்கள் மட்டும் அந்த பெண் ( விபச்சார) மீது கல் எறியுங்கள் எண்ட வாசகத்தைநினைவில் வையுங்கள் நண்பர்களே

  1. ராசா அவசரப் படாத இனிதான் அய்யர் ஆப்படிக்க போறார்.

 2. ஜய்யா எப்படி இருக்கின்றீர்கள். என்.எல்.எவ்.ரி இல் இருந்துநீங்கள் விலகியபின்பு உயிருடன் இருக்கின்றீர்களா இல்லையா என்று பலருக்கு தெரியாமல் இருந்தது.. இனியொரு என்ற இணையத்தளத்தில் நீங்கள் எழுதுவதாக எனக்கு நண்பன் ஒருவன் சொன்னான். என்னால் நம்ப முடியவில்லை,ஆனால் நடந்த சம்பவங்களை எழுதும் போது அது நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்துகொண்டேன். .உண்மைகளைத் துணிச்சலுடன் எழுதுவதற்கு எனது பாராட்டுக்கள்.நான் உங்களது பக்கத்து ஊரான குப்பிளானைச் சேர்ந்தனான்.ஒபரோய் தேவனின் உறவினன். ராகவன் என்ற சிவகுமாருடன் ஜவ்னா சென்றல் கொலிஜ்ச்சில் ஒன்றாகப் படித்தனான்.கோவிலில் தீக்குளிப்பு நடந்து கொண்டிருந்தபோது கடவுள் இல்லை என்று சொல்லி விவாதிக்க பக்கத்தில் நின்ற பெரியவர் தம்பி அப்ப நீர் சாமியாடாமல் தீக்குளியும் பார்ப்போமென்றவுடன் இரண்டு தரம் தீக்குளித்துவிட்டு மூன்றாம் தடவையும் ராகவன் முயற்ச்சிக்க நான் தான் அவரைத் தடுத்தனான்.

 3. ஒரு உரையில் இன்னொரு போர்வாள் இன்னொரு கதானாயகர் வருகிறார் இனியொரு விதி செய்ய.இங்குதான் போராட்டத்தின் புயல் மையம் கொள்கிறது.உணர்வுக்கும் அறீவுக்குமான சந்திப்பு.கொந்தளீப்புநிரைந்த கடலில் படகோட்டியும் படகில் பயணம் செய்பவரும் கரையைத் தொடுவதற்குள் தமக்குள் சண்டையிட்டால் என்னாகும்.

  1. பிரபாகரன் ஒரு அப்பழுக்கற்ற தலைவர். இந்த தொடர் முடிவடையும் போது தலைவர் எத்தகைய மாமேதை என்பது உலகுக்குப் புரியும். வாழ்க தலைவர்.

   1. பிரபாகரன் தன் குடும்பத்திற்குத்தலைவரா அல்லது
    புலிகளின் இயக்கத்திற்குத்தலைவரா?
    தனது சமூகத்தின் தலைவரா?

    ஈழத்தமிழர்களிற்கு அவர் தலைவரானால் அவர் தமிழர்களிர்குக்
    காட்டிய வழியென்ன? அதன் விளைவுகளென்ன?

    அவரின் பின் அவர் வழிசெல்வோர் எத்தனை பேர் இலங்கையில் உள்ளார்கள்.
    துரை

    1. சும்மா பிழை கண்டு பிடிக்கிறதிலேயே உங்கள்நேரத்தை வீணடிக்காதீர்கள். வெற்றிபெற முயலுபவர்கள் எல்லோரும் சிறு சிறு பிழ்கைளை விட்டவர்கள்தான்.

     1. துரை கேட்டதில் ஒரு பிழையும் இல்லை… இனி பிரபாவின் வழியில்நடக்க முடியுமா? பிரபாவின் வழி என்ன? தனக்கு பிடிக்காட்கவரை எல்லாம் கொன்றது…இன்று அது தான் முழுதமிழருக்கும் எமனாகியது…
      பிரபாவின் குண்டர்களை யார் கேள்வி கேட்பது? கேட்டாள் நாளை நாமும் அதே போல் “துரோகியாக” கொல்ல படலாம் என்று..எல்லோரும் பயந்து இருந்ததாலயே ..அவன் இவ்வளவு ஆட்டம் போட்டான்… இல்லையா??

    2. பிரபாகரனோ அல்லது அவருடைய ‘குண்டர்களோ’ உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள் நண்பர்களே. உங்கள் வீடுகளைக் கொள்ளை அடித்தார்களா? இல்லை உங்கள் வீட்டுப் பெண்களைக் கற்பழித்தார்களா? அவர்கள் உங்களிடம் கோபமாகப் பேசி விட்டார்கள். அத்தானே உங்கள் குற்றச்சாட்டு. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலர்கள் எப்படி அய்யா எப்போதும் சாந்தமாகவே பேசிக்கொண்டு இருக்க முடியும். அவர்களும் மனிதர்கள்தானே? இயந்திரங்கள் அல்லவே?நீங்கள் எல்லாம் சிங்களர்கள் உங்களைக் கொன்றால் கூட ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் ஒரு சக தமிழன் உங்களை அதிகாரம் செய்வதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். இதுதானே அய்யா உங்கள்நிலைப்பாடு. இதுநியாயமானநிலைப்பாடுதானா அய்யா? சற்று சிந்தியுங்கள். 

     1. தன் குடும்பத்தை சீரும் சிற்பபுமாக வைத்திருப்ப்பவன்

      சிறந்த குடும்பத்தலைவன்.

      தன் இனத்தை சரியாக வழிநடத்துபவனும், அழிவிலிருந்து
      காப்பவனுமே அந்த இனத்தின் தலைவனாவன்.

      தமிழ் மொழி வெறியூட்டி

      ஈழத்தில் தமிழரை சிஙகளவ்ர்களிற்கு, பலிகொடுத்தும், புலத்தில் வாழும்
      தமிழரின் பணங்களைப்
      பறித்தும்
      வாழும் அமைப்பிற்கும்

      தமிழரின் உருமைகளிற்கும்
      விடுதலைக்கும் சமப்ந்த்மில்லை.

      துரை

     2. //பிரபாகரனோ அல்லது அவருடைய ‘குண்டர்களோ’ உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள் நண்பர்களே. உங்கள் வீடுகளைக் கொள்ளை அடித்தார்களா?
      //
      1995 ல் சகல மக்களையம் வெளியேறச் சொல்லி விட்டு வீடுகளில் கொள்ளையிட்டது தெரியாதோ?

    3. துரை.. எம் தலைவனைநம்பி 35000 வீரர்கள், மாவீரர்களாகியும்,முப்பது இலட்சம் மக்கழும் அவெர் துணைநின்றார்கள்,இன்றும்நிக்கிறார்கள், ஆமாம் திரு.பிரபாகரன் எம் இனத்திற்கு சிறந்த தலைவான் தான்.துரை உமக்கு, கருணானிதியும், மகிந்தவும் தலைவனாய் இருக்கும்போது,நிச்சயம் ,எம் தலைவன் உமக்கெல்லம் தலைவனாய் இருக்க மாட்டார்.ஏகபத்தினி விரதனாய் இருந்து,2 பிள்ளைகளைநாட்டுக்கும்,ஒன்றை சிங்களப்பயங்கரவாதத்திற்கும் கொடுத்த திரு.பிரபாகரனும் சிறந்த தமிழ் குடும்பத்தலைவர்தான்.எம் தலைவனை யார் எண்டு கேட்டு மார்க்ஸ் கேக்கும்நீர்,முதல்ல உமக்கு முதலாம் வகுப்பில் ,ரீச்சர் உமக்கு போட்ட மார்க்சை கொப்பி எடுத்துப்பாரும். எவென் ஒருவன் தன் சொந்த இனத்தின் அடையாளத்தை தொலைத்து விட்டுநிக்கிறானோ,அவென் அந்த இனமே இல்லை. இன்னும் எத்தனைநாளைக்கு வைக்கல் பட்டறைநாய் போல் குலைத்துக் கொண்டு இருப்பீர்கள்.4 பேரைச் சேர்த்தால்நீங்கள் எல்லாம் தமிழரிற்கு தலைவரா…200 வருசம் அடிமையாய் கிடந்து, சாதிச் சண்டை, வேலிச் சண்டை,வர்க்கச் சண்டை,குழுச் சண்டை,ஊர்ச்சண்டை எண்டு கிடந்த எம் இனத்தை,ஒன்றாக்கி, தரைப்படை,கடல் படை,விமானப்படை எல்லாம் அமைத்து,காட்டிக் கொடுத்தும்,பிரிந்தும்,கிடந்த எம் இனட்தை ஒன்றாக்கி வழிநடத்தினானே,திரு.பிரபாகரனை விட வேறு யார் சிறந்த தலைவன் தமிழறிற்கு..? உன்னால் இனம் காட்ட முடியுமா?

     1. ||| எம் தலைவனைநம்பி 35000 வீரர்களை மாவீரர்களாக்கி||| பின் இறதியுத்தத்தின்போது தன்னைப்பாதுகாக்க வெள்ளைக் கொடியோடு போனானே அவன் எங்கள் தலைவன். ஒரு ஓட்டைப் பிளேனை வைத்துக் கொண்டு மிகப்பெரும் விமானப்டையையே உருவாக்கினானே அவன் எம் தலைவன். வன்னி மக்களை யுத்தக்கேடயங்களாக பயன் படுத்தி யுத்தம் செய்தானே அவன் எம் தலைவன். வன்னிப்பிள்ளைகளை கதறக் கதறபுடித்துக்கொண்டு யுத்தத்தில் சாகடித்தானே அவன் எம் தலைவன். தன்னுடைய சொகுசு வாழ்க்கைக்கு முல்லைத்தீவில் நீர்த்தடாகங்களையும் பங்கர் மாழிகைகளையும் கட்டினானே அவன் எம் தலைவன். தமிழீழம் பெற்றுத்தருவதாக கூறி கல்விமான்களையும் மிதவாதிகளையும் துரோகிகளாக்கி கொலைசெய்தானே அவன் எம் தலைவன். புலம்பெயர்வாழ் மக்களிடம் சேர்த்த நிதிகளையெல்லாம் ஏன் எதுக்கென்றே தெரியாமல் கரியாக்கினானே அவன் எம் தலைவன். இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு எம்தலைவனை அடையாளம் காட்ட?.

     2. இது போதும் இதற்கும் மேலே போனால் போட்டுத்தள்ளூவோம் என்ற எம் கலாச்சாரத்தின் காயங்கள் வலிக்கும்.அனாதையான் வன்னி மண்ணூம், அவலங்கள் சுமக்கும் வன்னி மக்களூம் கண்காட்சிப் பொருளான சோகம் நென்சை பிழியும்.எம் தலைவன் தான் ஊகித்திருந்த போரின் போக்கை சொல்லாமல் விட்ட ஏமாற்றம், இத்தனை பிள்லைகலையும் எதிரியிடம் ஒப்படைத்த கோபம்.இலங்கை இராணூம் ஒவ்வொரு போராளீயையும் கொன்றபோது போராளீக்ளூம் தன் தலைவ்ன் துரொக்ம் செய்ததை நினைத்து பொங்கி இருக்க்லம்.

 4. கூட்டணியினரின் ஆயுத அமைப்பாக ஆரம்பமானதை, செயற்பட்டதை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.சேறு படாத கால்கள் மத்திய குழுவாகப் பரிணமித்தது,ஆரம்பமே தவறானது என்பதை மறுபடியும் சுட்டி நிற்கிறது.

  என் கேள்விகள்.

  உமா எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தார்?

  ‘அவரோ’ தாக்குதல் சிந்தனை யாரால் முன்மொழியப்பட்டது?

  ‘அவரோ’ பயணிகளுடன் சிதைக்க தற்கொலைதாரி தயாராக இருந்தாரா?
  தாக்குதல் பற்றி அனைத்து உறுப்பினர்களுடன் அலசும் உயர் ஜனநாயகப் பாரம்பரியம் அப்போது புலிகளிடம் இருந்ததா?

  அப்பாவி மக்கள் இழப்பு என்கிற கண்ணீர் ராகவனிடம்(படத்துடன்,தடித்த எழுத்துகளில் கட்டுரையில் )வடிய நீங்கள் உங்கள் கன்னத்தை துடைத்ததாக சொல்ல முயல்வது,நீங்களும் அந்த அணியா?

  “சாந்தனும் எமது கருத்தோடு உடன்படுகிறார்.”என்றதில் சாந்தனின் உயர் நிலை என்ன?

  “நானும் ராகவனும் உறுதியாக வாதிட்டதில்” என்றதின் தற்கீகம் என்ன?

  உங்களது எதிர்கால மார்க்கத்துக்கான தயார் நிலையில்தான் இந்த வரைவு தொடங்கப்பட்டதா?

 5. ஐயரை குழப்புவதை விடுத்து புன்னாலைக் கட்டுவன் ,குப்பிழான்,என்ற ஊர்களே இல்லாமற் ப்றே அன்ரைக்கு அது எப்படி இருந்தது என்றூ கேலுங்கள் அய்யர் எழுதும் வரலாற்றீற்கு அது அதை விடுத்து குருக்களீன் தம்பிதானே என்றால் அவர் இல்லை என்றா சொல்லப் போகிறார்.

 6. ஐ. நாவில் வைகுந்தவாசன் ஒலித்த கீதம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை, இப்படியே தொடர்கிறது…………இணையத்தை, இணையத்தின் தொடர்புகளை புரட்டி, புரட்டி வாசியுங்கள், அலசுங்கள், ஆராயுங்கள், நல்லவற்றை எடுங்கள், பிழையானவற்றிக்குக்கான காரணங்களை தேடுங்கள்……..புதியதோர் சமுதாயத்தை உருவாக்குங்கள்.

  நன்றி!

  தோழமையுடன்,

  அலெக்ஸ் இரவி.

 7. எதிர்வு அவர்களே! பெயருக்கேற்ற மாதிரி எல்லாவற்றையும் எதிர்க்காதையுங்கோ இந்தியாவை நட்புநாடாக வைத்திருங்கள் . சோனக மக்களுடன் சமாதானமாக வாழுங்கள் என்று எல்லாம் கூக்குரலிடுகின்றீர்கள் ஆனால், பிரபாகரன் கூட்டணியருடன் கூட்டு வைத்ததை ஏன் குறை சொல்லுகின்றீர்கள் அதில் என்ன தவறைக் கண்டீர்கள்.கொலைபண்ணினால் கொள்கைமாறினால்த்தான் கேள்விகள் கேட் கப்படவேண்டும்.

  தாக்குதல் பற்றி “அனைத்து” உறுப்பினர்களுடன் அலசும் உயர் ஜனநாயகப் பாரம்பரியம் பாதுகாப்புக் காரணங்களுக்காக கெரில்லா அமைப்பான புலிகளிடம்
  இருந்திருக்கத்தேவையில்லை என்றே நான் கருதுகின்றேன். தாக்குதல்நடத்தும் உறுப்பினர்களுடன் மட்டுமே கலந்தோசித்தால் அது போதுமானதே.
  உமா எங்கு படித்தாலும் நமக்கென்ன அவ்ர் நாட்டிற்க்கு என்ன செய்தார் என்றே கேட் க்கப்படவேண்டும். தனது நில அளவையாளர் பதவியை விடுத்து விடுதலைக்காக போராட விரைந்தார் ஆனால் வ்ழிதான் அவருக்கு வினையாகிவிட்டது.

  அப்பாவி மக்களின் இழப்பு பற்றி ராகவன்,ஐயர் விவாதித்தார்களா என்று ஆச்சரியப்படுவதாக தெரிகின்றது.ஐயரைப்பற்றி,அவரின்நேர்மையப்பற்றி புலி,புளட்,என்.எவ்.எல்.ரி இல் இருந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் தெரியும்

  ராகவன் மூன்று தடவை அதிர்ப்தியான சில சம்பவங்களினால் இயக்கத்தில் இருந்து விலகியதாக கனடிய தமிழ் வானொலியொன்றிற்க்குப் பேட்டிகொடுத்திருந்தார்.அதில் பாண்டிபஜார் சம்பவமும் தன்னைப்பாதித்ததால் இயக்கத்தை விட்டு விலகியதாகவும் 1983 இனக்கலவரத்தின் தாக்கம்(அப்பாவி மக்களின் இழப்பு) மீண்டும் தன்னை இயக்கத்தில் இணையவைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்., (புலி இயக்கம் பிளவுபடக்காரணம் ஐயரும்,நாகராஜாவும் எனவும் அவர்களைச்சித்திரவதை செய்து இயக்கத்தின் கொள்கைக்கிணங்க பிரபாகரன் கொல்லத் துடித்ததாகவும் ராகவன் தான் ஈ.பீ.ஆர்.எல்.பத்மனாபாவுடன் கதைத்து அவ்ர்களைக்காப்பாற்றியதாக கதைகள் உலாவியது இதனை ஐயர்தான் உறுதிப்படுத்தவேண்டும்.)

  ஆரம்பகால உறுப்பினர்களில் ராம் என்று கூறப்படும் இன்னுமொரு ஐயரும் .அத்துடன் விச்சுவும்,சோட் பாலாவும் வெளினாட்டில்த்தான் இருக்கின்றார்கள்.பட்டண்ணா உயிருடன் இருப்பதாக எழுதியிருந்தேன் .ஆனால் பாவம் அவர் எப்போதோ மனமுடைந்து இந்தியாவில் தற்க்கொலை செய்து கொண்டாராம் .குமணன் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார்.தமிழரங்கம் ரயாகரனுடன் குமணனும் புலிகளின் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்ததாக ரயாவின் இணத்தளத்தில் இருக்கின்றது.

  1. ஐயரை எழுதவிடுங்கோ எதிர்வின் திண்ணைப்பேச்சுக்கு பதில் சொல்னதைவிடுத்து

 8. என் கேள்விகள் எழுதினரை நோக்கியது.அதில் வருகின்ற முரண்களை,மெய்ப்பாடுகளை பற்றியது.அயலாவனாக இருக்கிற ஒரே காரணத்திற்காக என் காதை குடைய முனைகிறிர்கள்.தெரியாத விடயங்களில் மூக்கை நுழைக்கிறதை தவிர்ப்பது நல்லது.மேலும் யாரு யாருக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்குவது,யாராவது கேட்டார்களா? அத்துடன் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று விழுந்தடித்து சொல்கிறிர்கள்.தமிழ் உங்கள் தலை முறையை சிந்திக்க தடுக்கிறதா? எதிர்ப்பும் எதிர்வும் ஒரே அர்த்தப்பட்டதான உங்கள் அறிவும் கேள்விச் செவிதானா?மீண்டும் சொல்கிறேன். அயலாவனாக இருத்தல்,என் அடுக்களைக்குள் வருவதற்கல்ல.
  நன்றி.

  1. எதிர்வு அவர்களே உங்கள் கேள்விகள் எழுதியவரிடம் கேட்கப்பபட்டதுதான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.ஆனால் அதில் வரும் முரண்களுக்குள் மூக்கை நுழைக்கிற உரிமை எனக்கு இல்லையா? சாம் 65 என்பதால்த்தான் என்னுடன் நெருப்பாக இருக்கின்றீர்கள் போல்த்தெரிகின்றது.

   ஆரம்பகால இயக்க உறுப்பினர்களில் பலர் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றனர்.ஆனால் அவர்கள் இயக்கத்தில் நடந்த சம்பவங்களைச்சொல்லுவதற்கோ அல்லது அதனை எழுதுவத்ற்கோ துணியவில்லை.இப்போது தான் ராகவனும்,ஐயரும் தொடங்கியிருக்கின்றார்கள்.அதனை அவமதித்ததால்த்தான் நான் ஆதங்கப்படுகின்றேன்.உண்மைகள்க் கூறவோ,எழுதவோ முனைந்தவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் அவர்களை அவமதிக்கக்கூடாது என்பதே எனது எண்ணம்.கேள்விகள் கட்டாயம் கேட்கப்படவேண்டும்.கேலிக்கிடமாக்குவதைத் தவிர்த்து அவை நியாயமானதாக,மற்றவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் இருப்பதுதான் நல்லது என்பது எனது கருத்து.எமதுபோராட்ட வரலாற்றில் உண்மைகளை எழுதிய,எழுதமுனைந்த புஸ்பராசாவைத் தவிர்ந்த
   (குறிப்பாக சிவசண்முகமூர்த்தி என்ற சுந்தரம்,சபாலிங்கம்,தினமுரசு அற்புதன்,புதியதோர் உலகம் கோவிந்தன் என்ற கேசவன்,சிவராம் என்ற தாரக்கி) யாவரும் கொலைசெய்யப்பட்ட கோரங்களாகவேயிருக்கின்றன.சபாலிங்கத்தின் கொலைக்குப் பிற்ப்பாடு தாயகம் இதழுக்கு தாரக்கியென்ற சிவராம் எழுதிய செவ்வியில் ஐயரையும் ராகவனையும் மவுனம் காப்பதாகக் குறைப்பட்டிருந்தார் அவரின் ஆத்மா சாந்தியடையவாவது எழுத விடுங்கள.( http://www.thenee.com/html/010509-4.html
   )

   தலைவன் என்றால் அவனுக்கு சில கடைமைகள் இருக்கின்றன அதுவும் ஒருநாட்ட்ற்க்கோ அல்லது இனத்திற்கோ தலைவன் என்றால் பல தியாகங்கள் செய்யவேண்டிய பண்பு அவர்களிடம் இருக்கவேண்டும்.ஆனால் அவர்கள் இறந்துவிட்டால் அவர் விட்ட தவறுகளை ஆராயலாம் கேவலப்படுத்துவதும் கிண்டல்செய்வதும் தேவையற்ற விடயம் பாவம் அவர்களை விட்டுவிடுங்கள்.. …..

   ஐயரின் ஐந்தாவது பாகத்தில் எஸ்.தமிழவன் என்பவர் நண்பர்களே! எதிர்காலத்தைப் திட்டமிட்டுக் கொள்வட்கற்கான நிகழ்கால உரையாடலை கையாளும் வகையிலான அரசியல் விவாதங்களில் ஈடுபடலாமே?
   என எனது புனைபெயரையும் பதிந்திருந்தார் அதனால்த்தான் எதிர்வைத் தெரிவுசெய்தேன் தப்பாகிவிட்டது.சூதும் வாதும் வேதனைதரும் எனவே எதிர்வு அவர்களே இனிநான் உங்கள் அடுப்படியென்ன முற்றத்திலும் மிதிக்கமாட்டேன் .அன்புடன் அயலவன்.

 9. அந்க ஆளை முழுசா எழுத விடுங்கோப்பா.

  தயவு செய்து பெயர்களுடன் மட்டுமல்லாமல் எல்லோரையும் பற்றிய ஒரு பின்ணணியையும் எதிர்பார்க்கின்றோம்.(ஊர்,படித்த பள்ளிக்கூடம் போன்றவை)

 10. கருத்தும் எதிர்கருத்தும் இயல்பானதுதான் ஒருவரை ஒருவர் காயப்ப்டுத்தாது கருத்துக்கலை வாயுங்கள்.

 11. தமிழன் தமிழனை அதிகாரம் செய்வதை ஒத்துக் கொள்ள மாட்டோம் உண்மைதான் விஜய்.மலேசியாவில் தமிழ்சங்கங்கள் இருக்கும் அதன் அதிகாரம் மலையாளீகள் தெலுங்கரிடம் இருக்கும்.தமிழ்ச் சினிமாவில் கோலோச்சுபர்கள் எல்லோருமே பிற மொழியாழர்கலே..கமல் தன் அம்பதாவது திரை வாழ்வை கொண்டாடினார் கூடநின்றவர்கள் தமிழ்ரே இல்லை.

 12. இங்கே நான் வாதத்திற்கோ,விவாதத்திற்கோ வரவில்லை.
  வாசிக்கின்ற போது,வருகின்ற ஐயங்களை வினாக்களாகவும்,விபரங்களை வெளிவரப் பண்ணுகிற முறையில்தான் என் கருத்துகள் அமைந்தன.
  முதற் பாகத்தில் குலத்தின் படம் விடுபட்டத்தின் நோக்கம் என்ன என்பதை எழுதுனரோ,இணைய்க்காரரோ இன்றுவரை தெளிவுபடுத்தவில்லை.
  ஆமாஞ் சாமிகளாக இருக்கிற கருத்தாடல்காரர்களும்,தனிமனித துதி பாடுகிற சொல்லாடல்காரர்களும் சமூக எதிரிகளாக இலகுவில் மாறிப் போகிறது ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டே போகிறது.மற்றும் தவறான தரவுகள் மேல் எழுதப்படும் கட்டுரையின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக்குவது என்கிற நடைமுறை ஒரு நல்ல வாசகனுக்கு உரியதே.திருட்டுச் செய்திகள் கொட்டும் பேராசிரியராகவோ,வதந்திகளில் வாழ்வு நடத்தும் அயலவனாகவோ நானில்லை.ஐயரின் கட்டை விரலை கேட்டு நான் கருத்தெழுதவில்லை என்பதையும், திண்ணைப் பேச்சு என்னது அல்லதையும் ‘எழுதவிடுங்கோக்கள் புரிந்து கொள்ளட்டும்.

 13. என் கேள்வி கலாவதியின் படம் ஏன் போடப்படவில்லை.நான் தனிநபர் துதி பாடுபவன் என்று நினைக்கவேண்டாம். ஏனெண்டால் கலாவதி குடும்பம் குட்டியோடை இருக்கிறார்.அப்ப அவர் தனியாள் இல்லைத்தானே.

 14. குலம் னொந்து நூலா இரிக்கிரார்.வேலை தேடி அலையிரார் .னான் எழுதுகிர தமிழ் மொழியும் திருடியது தான்.கீழே உள்ளதும் திருடியதுதான்.குலம் அவர்கள் தலைவர் இல்லையென்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை விரும்பினார். தான் நேசித்த தமிழினம் நேசித்த தலைவன் இல்லையென்பதை உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு தமிழினம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்பதை விரும்பினார். அதனால் நெடியவன் குழுவினரால் தாக்கப்பட்டு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு துரோகியாக்கப்பட்டார். தமிழீழவிடுதலைப்போராட்டத்தப்ர் /> ?
  �ற்காக தன்னை தனது வாழ்வை குலம் அவர்கள் இழந்தது மட்டுமன்றி குடும்பத்தைக்கூட விரும்பாது தமிழீழம் என்ற தேச உருவாக்கத்துக்கு உழைத்த உன்னதமானவர்களுள் குலம் அவர்களும் ஒருவர். ஆனால் வியாபாரிகள் அவரைக் கடன்காரனாக்கிவிட்டு பதவிகளை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளது.http://live.athirady.org/wp-content/uploads/2007/05/ltteswisskulam.jpg

 15. இன்னும்நாங்கள் குழந்ததைப் பிள்லை போலவே இருக்கிறம்.கொமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிற வயதாநமக்கு? அம்புலிமாமா தேடுவதற்குநேரம் இங்குநமக்கு கிடைக்கிறதா என்ன?எல்லாம் குழந்தைப் பிள்லைத்தனமாய் கிடக்கிறது வாசன்.

 16. னானில்லைநெஜ்சை தொட்டு விட்டீர்கள்.

 17. இது ஐயருக்கான தனிமடல் இதனை இணையத்தில் பதிவிடத்தேவையில்லை. இதனை ஐயரின் கவனத்திற்கு கொண்டுவந்தால் சரி நன்றி

  ஐயர் அவர்களுக்கு வணக்கம்
  நீங்கள் வரலாறு எழுதுகின்றீர்கள் நல்ல. சில விடயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 1975களில் லுப்தான்சா விமானக்கடத்தலில் சம்பந்தப் பட்ட பெண் அந்திரோயா சுகைலா என்ற போராளி நோர்வே நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது அவருடைய அடையாளத்தை அறிந்து அவர்மீது வழக்குத் தொடரப்பட்டு ஜேர்மன் சிறையில் தண்டனையை அனுபவித்தார்.
  இனி விடயத்திற்கு வருகின்றேன் வரலாறு எழுதுகின்ற போது உயிருடன் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் சட்டப்பிரச்சனையை கவனத்தில் கொள்கின்றீர்களா? ஒன்றைக் கவனியுங்கள் எதிரி விளிப்புடன் இருக்கின்றான். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றான். உங்கள் எழுத்து பேபி சுப்பிரமணியம் போன்ற போராளிகளுக்கு அவர்களின் கடந்தகாலச் செயற்பாட்டினால் இன்றும் சிக்க்களை ( கடைசிவரையில் புலிகளில் இருந்தார் என்பது இவர்மட்டில் நிலைமாறுகின்றது) ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பேபியைப் போல பலர் உயிருடன் பலர் உள்ளாத அறிய முடிகின்ற வேளையில் எந்தக் காலத்தில் உங்கள் வாக்குடமூலத்தை அவர்கள் ஒவ்வொருவருக்கு எதிராக பயன்டுத்துவான் என்பது வரலாறுதான் தீர்மானிக்கும். இவை போராட்ட செயற்பாடுகளுடன் சம்மபந்தப் பட்டதாகும். இந்தக் கருத்தை தங்கள் கவனத்திறகு கொண்டுவர நினைத்தேன் கொண்டுவந்தேன்.
  நன்றி

 18. அய்யர் ஒன்றும் விரல் சூப்புகிற நிலையில் இல்லை.தன்னை வெளி நாடு ஒன்றில் தக்க வைத்துக் கொண்டு,கதை எழுதுகிறார்.மஹிந்தாவோடை நிற்கிற ராகவனை மனிதாபிமானியாக வலிந்து காட்டுவது அய்யர் விஷயம் தெரிந்தவர் என்றே சொல்ல வேண்டும்.மற்றப்படி முரளி நுனிப்புல் மேய்ந்து ஆலோசனை வரையக் கூடாது.நீங்கள் என்ன சர்வதேச சட்ட வல்லுனரா? இதை அரங்கேற்றுகிற இனியொரு என்ன இளிச்ச வாயர்களா?

 19. எதிர்வு:
  ஐயர் முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகளை விளங்கிக் கொண்டு எழுதுவதாக நானும் நம்பவில்லை. சொல்வன எல்லாமே முழு உண்மைகளாக இருக்க வேன்டியதுமில்லை.
  பயனுள்ள குறுக்கீடுகள் மூலம் வரிகட்கிடையில் புதைந்துள்ள உண்மைகள் வெளி வராமலா போகும்.

  முரளி சொல்லும் ஒன்று கவனத்துக்குரியது. பாதிப்புக்குட்படக் கூடியோர் அல்லது நெருங்கியவர்கள் இருப்பின் அவர்களை அடையாளம் காட்டுவது பற்றி எச்சரிக்கை ஐயருக்கு அவசியம்.
  வேறு சிலர் இவ்வாறான விடயங்களில் பொறுப்பற்று நடந்து கொண்டிருந்ததை அறிந்ததாலேயே இதை இனியொரு அவருக்கு எடுத்துரைக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
  அதே வேளை காட்டிக் கொடுத்தல் என்பது முரளி சொல்லுகிற எதிரிக்கு மட்டுமாக இருக்கத் தேவையில்லை என்பதையும் மறக்கக் கூடாது.

 20. ஐயோ என் இனம் அழிந்து போகப் போகிறதே என்று சிந்தித்தால் போராட்டமே ஆரம்பித்திருக்கக் கூடாது.அவனையும்,இவனையும் நினைத்துக் கொண்டிருந்தால் எழுத்தை தொடங்கியிருக்க முடியாது. ஆலோசனை என்ற பேரில் முப்பது வருட மௌனங்களை முளையில் கருக்கலாகுமா? .இலங்கையின் சட்ட அளவு கோல்,நீட்டிய இடம் எல்லாம் பாயக் கூடியதல்ல.பேபியின் நிலை மீட்சி தரக் கூடியதல்ல.குலம் ‘நூலாகிப்’ போனார்.வெளி நாட்டுப் புலிகளே குலம்,பேபியை கை விட்டு விட்டார்கள். ராகவன் பரமசிவன் கழுத்தில்.அய்யர் எழுதட்டும்.அவரும் நூலாகட்டும்.ஒளிந்து கிடந்தவைகள் வெளி வரட்டும்.இனிஒரு விதி செய்ய இறந்தவைகளை உயிர்ப்பு செய்வோம்.ஆயிரம் மலர்கள் மலரட்டும்.ஒன்றிரண்டாவது மணம் பரப்பட்டும்.

 21. அடுத்த பாகம் இன்னும் வரக் காணோம்.நாழிகைகள் கடந்து கொண்டிருக்கின்றன. எம்மைநாற்காலியின் விளீம்பில் வைத்து விட்டு அய்யர் போய்விட்டாரோ. .ஏசுவார்கள் எரிப்பார்கள் என்ற யோகர் சுவாமிகளீன் ஆசீர்வாதமே ஈழ்னாடுநாளீதழை எரித்ததோ எனும் அச்சம் போல் பின்னோட்டங்கள் அய்யாவை குழப்பி விட்டதோ.

 22. வணக்கம் ஐயர் அவர்களே….உங்கள் ஆக்கங்கள் என்னை அந்தகாலங்களுக்கே அழைத்து செல்கிறது …..தயவுசெய்து விரைவாக உங்கள் பதிவுகளை தாருங்கள் என்று பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்!!!

 23. ஐயரின் முமுமையான பதிவுகளின் பின் விமர்சனங்களை முன்வைப்போம். போராட்டம் என்பது ஈழத்தில் மக்கள் விடுதலைக்காகவே முன்னெடுக்கப்பட்டு பின் அது தலைமையின் வாழ்விருப்புக்காக மக்கள் மீது திணிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வைத்துப் பிழைப்பு நடாத்துபவர்கள் புலிகளுக்குள்ளும் வெளியேயும் உள்ளனர்.

Comments are closed.