புலம் பெயரும் இலங்கை அரசின் நச்சு வேர்கள் – உளவாளிகளின் உளவியல் யுத்தம் : சபா நாவலன்

வருடத்திற்கு 20 மில்லியன் டொலர்களைச் சன்மானமாகப் பெறிவதற்கான ஒப்பந்தம் ஒன்றை லிங்கொல்ன் (Lincoln group) குறூப் என்ற அமரிக்க நிறுவனம் அமரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்துடன் கைச்சாத்திடுகிறது. 2005ம் ஆண்டு ஆரம்பத்தில் கைச்சாத்தான இந்த ஒப்பந்ததின் அடிப்படையில் இந்த நிறுவனம் 100 மில்லியன் டொலர்களை ஐந்து வருடங்களுக்குமான நிகரக் கொடுப்பனவாகப் பெற்றுக்கொண்டது.

அமரிக்கா குறித்துச் சாதகமான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதுதான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணி. அதிலும் மிகக் குறிப்பாக ஈராக்கில் அமரிக்கா தொடர்பான சாதகமான நிலையையும், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த நேர்மறையான சிந்தனையைத் தோற்றுவிப்பது தான் அவர்கள் முன்னெடுக்க வேண்டிய வேலை முறையாக அமைந்திருந்தது.

அமரிக்க சார்புப் பிரச்சாரங்களையும், “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ” என்ற சுலோகத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களையும் ஈராக்கிய ஊடகங்களில் மேற்கொள்வதென்பது அவர்களுக்கு மிகக் குறிப்பாக வழங்கப்பட்ட பணியாக அமைந்தது.

ஈராக்கிய செய்திப்பத்திரிகைகளில் அமரிக்க சார்புக் கட்டுரைகளை எழுதுவோருக்கும், தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அமரிக்க சார்புப் பிரசாரங்களை மேற்கொள்வோருக்கும், சன்மானம் அல்லது லஞ்சம் வழங்குவதனூடாக தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அறிவுறுத்தப்பட்டது.

2005 நடுப்பகுதியில் ஈராக்கில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த லிங்கோல்ன் நிறுவனம் அமரிக்காவிற்கு எதிரான அமைப்புக்கள் குறித்து அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும், பொய்ச் செய்திகளைத் தயாரித்து வெளியிடுவோருக்குப் பண வசதி வழங்குவதிலும், செய்திகளை இருட்டடிப்புச் செய்வதற்கு உள்ளூர் ஊடகங்களை விலைக்கு வாங்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தியது.

அபிவிருத்தி ஆலோசனை நிறுவனம் என்ற தலையங்கத்தில் அழிவுச் செயற்பாடுகளில் ஈடுபடும் லிங்கோல்ன் நிறுவனத்திற்கும், அமரிக்க இரணுவத்திற்கும் இடையேயான தொடர்பை வெளியிடுவதில்லை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் ஒன்றாகும்.
மார்ச் மாதம் 2006ம் ஆண்டு O’Dwyer’s PR Daily என்ற செய்திப் ஊடகம் வெளியிட்ட செய்தியில் லிங்கோல்ன் நிறுவனம் பாகிஸ்தானை அபிவிருத்தியடையச் செய்வதற்காக அந்த நாட்டில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. அதுவும் அமரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியான கரோல் பிலேமிங் உடன் இணைந்து பாகிஸ்தானில் ஆடை உற்பத்தி, எரிபொருள், தொழிநுட்பன், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்குச் செயலாற்றுவதாக மேலும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிறுவனம் அமரிக்க சார்புப் பிரசாரங்களைப் பாகிஸ்தானில் ஊக்குவிப்பதற்காகவும் பல ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் பின்னதாகப் பல தகவல்கள் வெளியாகின.

லிங்கோல்ன் நிறுவனத்துடனான அமரிக்க இராணுவத் தலைமையகத்தின் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் மேலும் இரு நிறுவனங்களுடனும் இதே வகையான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. சர்வதேச ரீதியான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் கைச்சாத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிச் சேவைகள் ஆகிய ஊடகங்களுக்குப் பண வசதி செய்து கொடுப்பதன் ஊடாக அமரிக்க சார்புப் பிரசாரங்களை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

னைய இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 100 மில்லியன் டொலர்கள் வீதம் முழுவதுமாக 300 மில்லியன் டொலர்கள் இந்தக் குறித்த நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பிரயோகிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், ஏனைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பகுதிகளிலும் இது போன்ற நிறுவனங்கள் ஒரு பொதுவான பிரசாரத் தந்திரோபாயத்தை முன்வைத்தன.

(a)அபிவிருத்தி, மனிதாபிமானம் என்பவற்றை உரிமை குரலுக்கு எதிராக முன்வைத்தல் என்பது முதன்மையான தந்திரோபயமாகப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டது. உரிமை குறித்துப் பேசுவோர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்ற சிந்தனை முறை வளர்த்தெடுக்கப்பட்டது.

(b)தவிர உரிமைக் குரலெழுப்பும் குழுக்களையும் தனி நபர்களையும் குறித்த அடையாளததிற்கு உட்படுத்தி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி அழித்தல் என்பது மற்றொரு தந்திரோபாயமாகப் மேற்கொள்ளப்பட்டது.

அமரிக்க அரசும் அது சார்ந்த அணிகளும் நடத்திய உளவியல் யுத்ததின் அனைத்துத் தந்திரோபாயங்களையும் இலங்கை-இந்திய அரசுகள் அவற்றின் எதிரிகள் மீது பயன்படுத்துகின்றன. அதிகார சக்திகள் பயன்படுத்தும் வழிமுறைகளில் ஒரே வகையான தந்திரோபய முறைமகள் காணலாம்.

பி.பி.சி ஆங்கில சேவை 22 ஒக்ரோபர் 2010 இல் வெளியான செய்தியில் Bell Pottinger Group என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு 3 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ் பணத்தை வருடம் ஒன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளதாகதாகத் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்ததின் அடிப்படையில் போருக்குப் பின்னான இலங்கை அரசு குறித்த நேர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதே இந்த நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியிருந்த பணியாகும்.

இவ்வாறான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது என்பதை குறித்த நிறுவனமும் இலங்கை அரசும் முற்றாக மறுத்திருந்தன.

பிரித்தானியாவின் உள்ளே இலங்கை அரசிற்கு எதிரான “புலிசார்” அமைப்புக்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது இந்த நிறுவனத்தின் பணியாக அமைந்துள்ளது. தவிர, ஜீ.எல்.பீரிஸ், International Institute of Strategic Studies என்ற சர்வதேசக் கற்கை அமைப்பில் பேசுவதற்கான் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுப்பதிலும் இந்த நிறுவனம் உதவி புரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுனர், இவ்வாறான சில நிறுவனங்களைத் தாம் பணிக்கு அமர்த்தியுள்ளதாக பி.பி.சி செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்திய போதிலும் அவை தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

வன்னியில் தமது மண்ணை நம்பி வாழ்ந்த மக்களை இரசாயனக் குண்டுகள் போட்டு அழித்தூவிட்டு எஞ்சியிருந்த மக்களை தெருவிலே அனாதைகளாக அலைய விட்டிருக்கும் இலங்கை அரசு அன்னிய நிறுவனங்களுக்கு மில்லியன்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறது.

அமரிக்காவில் ஆங்கில மொழியில் எழுதப்படுகின்ற செய்திகளும் கட்டுரைகளும் ஈராக்கியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்கிறது சவுத் வாச் என்ற அமைப்பு.

இலங்கை அரசிற்கு அந்த வகையான தேவைகூட இருக்காது. அவர்கள் பிரசாரம் செய்ய வேண்டியதும், அதன் வழியேயான உளவியல் யுத்ததைக் நிகழ்த்துவதும் தமிழ் மொழியூடாகத் தான். அதிலும் தமிழர்கள் ஊடாகத் தான்.

14.செப்டெம்பர்.2009 அன்று நடைபெற்ற இந்தியக் காவற்துறை மற்றும் இராணுவ உயர் மட்ட அதிகாரிகளின் மாநாட்டில் பேசிய முன்னை நாள் இந்திய அரச பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே,நாராயணன் இவ்வாறான உளவியல் யுத்தம் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டும் என்பதை முன்னறிவிபுச் செய்திருந்தார்.
புலம் பெயர் நாடுகளில் புலிகளின் கட்டமைப்பு முற்றாக அழிக்கப்படவில்லை என்பதையும் அது குறித்த கவனம் தேவையென்றும் அறிவுறுத்தியிருந்தார்.

இதையொட்டிய காலப்பகுதிகளில் புலம்பெயர் நாடுகளிலிருந்து பல புலியெதிர்ப்பு நபர்கள் இலங்கையை நோக்கிப் படையெடுத்தனர். இவர்கள் இலங்கை அரசு தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுகிறது என்ற கருத்துக்களை புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று முன்வைத்தனர்.
ஈழத் தமிழர்கள் மரணத்துள் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்துகொள்ளும் புலம்பெயர் தேசிய உணர்வார்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இக்கருத்துக்கள் எதிர்பார்த்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன் பின்னதாக தமிழ் நாட்டில் இலங்கை அரசு சார்பான பிரச்சார நடவடிக்கைகளில் வெற்றிகண்ட ஹம்சா என்ற இந்தியத் துணைத் தூதர் பிரித்தானியாவிற்கு மாற்றல் செய்யப்படுகிறார். இலங்கை அரச உளவாளி எனச் சந்தேகிக்கப்பட்ட கே.பி தன்னை வெளிப்படையாக அரசுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார். எம்.கே.நாராயணன் முன்மொழிந்த உளவியல் யுத்தம் புதிய யுக்திகளுடன் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

மக்கள் தலைமகளும் வெகுஜன அமைப்புக்களும் யுத்ததின் முன்பிருந்தே அழிக்கப்பட்ட நிலையில் இலங்கை மக்கள் அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை சிறிய அளவிலேனும் நடத்த முடியாத சூழலிலிருந்தனர். அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நேரடியான யுத்ததிற்கு அவர்கள் மிரண்டு போயிருந்தனர். அவர்க உளவியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு இனச் சுத்திகரிப்புக்கும், தொடர்ச்சியான பேரினவாத அரசின் இன அழிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டனர்.

உலகளாவிய முற்போக்கு மற்றும் போராடும் முகாமிலிருந்து புலிகளின் தவறான வழிமுறைகளால் தமிழ்ப் பேசும் மக்கள் அன்னியப்படுத்தப்படிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் எழக்கூடிய எதிர்ப்புப் போராட்டங்களும் புலம் பெயர் நாடுகளில் உருவாகவல்ல உரிமைப் போராட்டங்களுமே இலங்கை இந்திய அரசுகளின் குறியாக அமைந்தது.

புலம் பெயர் ஊடகங்களின் வழியாக இவற்றிற்கு எதிரான பிரச்சாரங்கள் ஒரு குறித்த படிமுறையில் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

1. தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் எழும் உரிமைக் குரல் என்பது முன்னர் அழிவுகளையே ஏற்படுத்தியிருந்தது, இன்னும் அழிவுகளுக்கே வழி வகுக்கும்.

2. தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை இந்திய அரசுடன் இணைந்தே முன்னெடுக்க வேண்டும்.

3. தமிழ்ப் பிரதேசங்கள் போரிலிருந்து மீண்டு அபிவிருத்தியடைகின்றன. மீண்டும் உரிமை குறித்துப் பேசுவது அழிவிற்கே வழிவகுக்கும்.

4. மக்கள் மிகப்பெரும் மனித அவலத்துள் வாழ்கின்றனர். இவர்களின் மறுவாழ்வும், மனிதாபிமான உதவியுமே இன்றைய தேவை. இது தவிர அரசிற்கு எதிரான கருத்தை முன்வைப்போர் சந்தர்ப்பவாதிகளும் அழிக்கப்பட வேண்டியோருமே.

5. இலங்கை அரசு சரியானது அல்லது தவறானது என்ற விவாதங்களுக்கு அப்பால் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவிற்கு உதவுவதானால் இலங்கை அரசினூடாகவே அணுகுதல் சாத்தியமானது. ஆக, இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரலெழுப்புவது மக்களுக்கு வழங்கப்படக் கூடிய உதவிகளுக்கு எதிரானது; எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது.

6. தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையேயான பிளவை ஏற்படுத்தும் வகையில் செயற்படல்.

7. அமரிக்காவிற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் அல்கயிடா என்ற அடையாளத்துள் உட்படுத்தியது போலவே இலங்கை அரசிற்கு எதிரான குரல்கள அனைத்தையும் புலி அல்லது புலி ஆதரவாளர்கள் என்ற அடையாளத்தை உருவாக்க முற்படுதல்.

மேற்குறித்த நோக்கங்களை அடைவதற்கான பிரசார வழிமுறை என்பது செய்திகள், கட்டுரைகள், கருத்தரங்குகள் போன்ற வெகுஜன சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. வன்னி யுத்தத காலப்பகுதியிலிருந்து மேற்கு நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இணையங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துபவையாக அமைந்தன. இணையங்கள் வழியாக இலங்கை இந்திய அரச ஆதரவுப் பிரச்சாரங்கள் இன்று தீவிரமடைய ஆரம்பித்துள்ளன.

1. ஒருதலைப்பட்சமான இலங்கை இந்திய அரசுகள் சார்பான செய்திகளை வெளியிடல்.

2. ஒவ்வொரு நோக்கங்களுக்காகவும் கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் வெளியிடுதல்.

3. அரசை எதிர்ர்கும் தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீதான திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளல்.

போன்ற வழிமுறைகள் பிரதானமானவையாக அமைகின்றன.

அவதூறுகளுக்கு உட்படுத்தப்படும், புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பெரும் பகுதியினர், இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல புலிகளின் சிந்தனை முறையை எதிர்ப்பவர்களுமாகும்.

 ஈராக்கிலும் ஆப்கானிலும் என்று அவதூறுப் பிரச்சரங்களூடாக அழிக்கப்பட்டவர்களில் பலரும் , அல்கையிதா என்று அடையாளப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டவர்களில் பலரும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை எதிர்த்தவர்களே.

ஏகபோக அரசுகளினால் பயன்படுத்தப்பட்ட அதே வகையான வழிமுறைகள் அவர்கள் கொண்டிருந்த அதே நோக்கங்களுக்காக இன்று இலங்கை இந்திய அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றன. பி.பிசி தனது செய்தியில் குறிப்பிடும் பல் தேசிய நிறுவனத்தைப் போன்ற அமைப்புக்களைத் தவிர இலங்கை அரசு நேரடியாகவே புலம் பெயர் நாடுகளில் பணத்தை வாரியிறைக்கிறது என்பதற்கான ஆதரங்கள் வெளியாகின்றன.

புலம் பெயர் தமிழர்களை எதிர்கொள்ளும் பணி 3 மில்லியன் பவுண்ஸ் சன்மானமாகப் பெறும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தால் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிடும் மேலும் சில நிறுவனங்கள் தமிழர்களாகக் கூட இருக்க வாய்ப்புண்டு.

யார் எங்கே எப்படி செயற்படுகிறார்கள் என்ற புலனாய்வு – அவதூறுச் சகதிக்குள் கால்வைக்க இது தருணமல்ல. எது எவ்வாறாயினும் இவர்களை அடையாளம் காண்பது கடினாமான ஒன்றுமல்ல.

அமரிக்க எதிர்ப்பாளர்களான மொகமட் ஒத்மான்(குர்தீஸ் சட்டவல்லுனர்) போன்ற பலர் தமது அதிதீவிர இஸ்லாமிய எதிர்ப்பை முன்வைத்து சீரழிவு வாதிகளாக அமரிக்க ஆதரவு நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலம்பெயர் நாடுகளையும் தமிழ் நாட்டையும் இவர்களோடு ஒப்பு நோக்கும் போது, பல சீழவு வாதிகளும் லும்பன்களும் அரச உளவாளிகளோடு பல சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகிறார்கள்.

அனைத்துமே மறுபடி வேறு நிறத்தில், வேறு தளத்தில், வேறு நாட்டில் அரங்கேற்றப்படுகிறது. அதிகாரங்களின் பணபலத்தின் முன்னால் அதற்கு எதிரான போரை ஆரம்பிக்க வேண்டிய கடமை சமூகப்பற்றுள்ள, மக்கள் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவசரக் கடமை.

________________________________________________________

Psychological Warfare Techniques: Psychological Warfare, Information Warfare, Disinformation, False Flag, Strategy of Tension (Bool Llc :2010)
http://www.usatoday.com/news/washington/2005-12-13-propaganda-inside-usat_x.htm
O’Dwyer’s PR Daily

87 thoughts on “புலம் பெயரும் இலங்கை அரசின் நச்சு வேர்கள் – உளவாளிகளின் உளவியல் யுத்தம் : சபா நாவலன்”

 1. நாவலன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. அவரது கருத்தே இன்றைய பெரும்பான்மைத் தமிழர்களின் கருத்தும் யதார்த்தமும் ஆகும். எமக்குள் நாமே பிழைகளை மட்டும் பார்த்தபடி காலத்தை ஓட்டாது ஒற்றுமையை வளர்க்க வேண்டும். இலங்கை அரசின் பணத்தில் வேலைசெய்பவர்கள் தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள். இதில் தமிழ்த் தேசியத்துக்கு அதீத விசுவாசம் காட்டும் பலரும் உள்ளடக்கம் என்பது வேதனையானது. தமிழரின் நல்வாழ்வுக்கு ஓர்வழிதான் உண்டு. அதில் பயணிப்பவர் மட்டுமே தமிழ் அபிமானிகள் மற்றவரெல்லாம் துரோகிகள் எனப் பார்க்கும் பார்வைக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும். அனைவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் தமிழர்களுக்காக உழைக்க வேண்டும். ஆர்குற்றியாவது அரிசியானால் சரிதானே?
  நாவலன் அவர்களே தங்களிடம் ஒரு கேள்வி
  இப்படி எத்தனை நாளுக்குத்தான் எழுதிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்? அனைத்துத் தரப்பினரையும் அழைத்து பொது விவாதம் நடத்த முன்வருவீர்களா? புலம்பெயர் தமிழர்கள் நாம் முதலில் ஒற்றுமையைக் காட்டுவோம். அதனூடு தாயகத் தமிழருக்கும் ஒரு சேதியைக் கூறுவோம். முன்வருவீர்களா? தங்கள் கருத்தைக் கொண்ட பலர் காத்திருக்கின்றனர்.

  1. அனைத்து தரப்பையும் அழைத்தொரு விவாதமா? வேறூ வினையே வேண்டாம்.நம்மிடம் இல்லாத ஒன்ற இருக்கச் செய்யும் தமிழர் இயற்கைக்கு மாறான எதுவும் எமக்கு ஆணீ அடித்து விடும்.

   1. உலகம் மாறுகிறது. மாறுபாடான கருத்துள்ள நாடுகளனைத்துடனும் நட்பினைப்பேணும் ராஜதந்திரத்தில் சிங்களவர்கள் சிறந்து விளங்குகின்றனர். தமிழர்கள் மட்டும் ஒற்றுமையாக இருக்கப் பழக முடியாதா?
    தாயகத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளுடன் சம்பந்தர் இன்று கலந்துரையாடியதாகத் தற்போது செய்திகள் வருகின்றன. இங்கிருக்கும் நாம் மட்டும் மாறமுடியாதா? அப்பாவித் தாயக உறவுகளினைவிட எமது சுயகெளரவங்கள் பெரிதா?

    1. உலகம் மாறூகிறது தமிழன் மாற மறூக்கிறானே, மாவீரர் நாளூக்கு தலைவர் வருவாரா என மடைத்தனமாக கேட் கிறானே?ஒன்றாய்க் கூடிக் கதைக்கலாம் கேட் க மாட்டானே தான் சொல்வதைக் கேளூங்கள் என சத்தம் அல்லவா போட்டுக் கொண்டிருப்பான்? ஆனாலும் நம்பிக்கைகள் இருக்கின்றன சம்பந்தர் அய்யா திசைகள தீர்மானிக்கும் காலமும் வரும்.தமிழன் எல்லா உலகிலும் ஒருக்கிறான் ஒருவரை ஒருவர் பிடித்து தின்றூ கொண்டு

  2. ஆம் பல கருத்துடையோரின் விவாத மேடையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

   சார்பு அரசியல்நிலைப்பாடு உடையோர் கூட இங்கு அழைக்கபடலாம்.

   தீவிர புலி ஆதரவாளர்
   விமர்சனத்துடனான புலி ஆதரவாளர்
   தீவிர புலி எதிர்பாளர்
   கொள்கை ரீதியாகாக புலிகளை எதிர்ப்பவர்
   அரச ஆதரவாளர்
   இந்திய ஆதரவாளர்
   மற்றும் அனைத்து அமைப்புகளிலுமிருந்து பிரதிநிதிகள் கூடி விவாதிக்கும் போதுதான் யார் மக்களுக்கு தேவையானவர்கள் என்பதை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இப்போ எல்லோரும் ஏதோ ஒரு வகை முக மூடிக்குள் ஒளிந்திருப்பதால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

   1. பொது விவாதங்களுக்கு வர தயங்கும் முன்னால் போராளி அமைப்புகள் தாங்களாகவே தங்களை யார் என்று காட்டி கொள்வார்கள்.

 2. நிச்சயமாக நாம் எந்தசந்தா்ப்பத்திலும் விலைபோகாது நம் இலட்சியத்தை அடைய ஒன்றிணைவோம் நம் இனம் இனியும் ஏமாந்த மடையா்களாக இருக்கமுடியாது.

  1. நாம் மடையராக இருக்க வேண்டாம் மடையராக நடிப்போம்.எந்த நாட்டு யூதனும் தன்னை யூதன் என்றே சொல்கிறான் ஆனால் தமிழன் மட்டும் தன்னை தராதரப்படுத்துகிறான்.நாம் எல்லைகள் தாண்டியும் தமிழராய் இணந்தால் மட்டுமே தடைகள உடைக்க முடியும்.தமிழராக மாறல் நமது சாத்தியமான இலக்காக அமையட்டும்.

 3. மதிப்பிற்குரிய நாவலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தது போன்று அந்த நிறுவனம் மட்டுமல்ல லெக்சிகோன் நிறுவனமும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெறும் நிறுவனமாகும்.

  அதற்கு மேலதிகமாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் உரிமைக்காய் குரல் கொடுப்போராய் முன்னணியில் நிற்கும் பலரும் ஊடகவியலாளர்களாக தங்களை இனம் காட்டிக் கொள்ளும் சிலரும் இலங்கை அரசாங்கத்தின் வெகுமதியைப்பெற்று வருகின்றார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார்கள்.

  அதே நேரம் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளாக இருந்த பலர் இன்றைக்கு அரசாங்கத்தின் போக்குகளில் அதிருப்தி கொண்டு விலகத் தொடங்கியுள்ளனர்.

  புலிகளுடனான இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஐந்து இராணுவ அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் தம் வசம் இருந்த அரசாங்கத்துக்கு எதிரான ஆவணங்களுடன் எப்படியோ சுவிட்சர்லாந்துக்குத் தப்பிப் போய் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டனர். அரசாங்கத்தை இக்கட்டுக்குள்ளாக்கும் பல புகைப்பட மற்றும் ஒளி நாடாக்கள் அவர்கள் வசம் இருந்தன. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா? சுவிட்சர்லாந்தில் தமிழ் மக்கள் அவர்களுடன் நடந்து கொண்ட முறை காரணமாக அதிருப்தியுற்று அனைத்து ஆவணங்களையும் அழித்து விட்டு மெளனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

  இப்படித் தான் நாம் நமது வாய்ப்புகளைத் தொலைத்துவிட்டு நமக்கிடையே புல்லுருவிகள் வளர வாய்ப்பளிக்கின்றோம்.

  இன்றைக்கும் கூட என்னைப் போல எத்தனையோ பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறி வரத் தயாராகவே இருக்கின்றார்கள். அவர்களில் பலரிடம் பெறுமதியான ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால் யார் அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுக்கப் போகின்றனர்? இருப்பதையும் இழந்து பிச்சையெடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதற்கு மேலாக யாருடைய ஆதரவும் இன்றி அரசாங்கத்தை விட்டு வெளியே வரவும் அவர்கள் தயாராக இல்லை.அவர்கள் வசமிருக்கும் ஆதாரங்கள் வெளிவரும் பட்சத்தில் அம்சா உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வக்காலத்து வாங்கி வருவோர் ஓடியொளிய இடமிருக்காது.

  1. தமிழர்கள குற சொல்வதை தமிழர் விடவேண்டும் ஏனெனில் எம்மில் இருக்கும் இந்த பாக் ஸ்டேப்பிங் கலாச்சாரம் நம்மை எல்லோரிடமும் தலை குனிய வைக்கும்.நாம் நம்மையே நமக்கு விற்பவராக இருப்பது நாசமாகப் போகும் வழி.அரசு என்பது நினைத்தால் எதையும் செய்யும் அரசுகளூம் கருத்தைப் பரிமாறூம் நாமே நம்மை அறீந்து செயற்பட வேண்டும்.நம்மை நேசிக்க வேண்டும்.ஒருவரை ஒருவரிடம் குற கூறீக் கொண்டிருந்தால் இடையே யாரும் நுழயலாம் நமது கழுத்தை நமது கையைக் கொண்டு நெரிக்கலாம்.ஒற்றூமையாய் இருந்து ஒவ்வொரு அசைவையும் அவதானிப்போம்.தமிழராய் இருப்போம்.தமிழராய் உணர்வோம்.தமிழராய் வாழ்வோம்.

   1. மனிதனாய் உணர்வோம், மனிதராய் வாழமுயற்சிப்போம்.

 4. நாவலன் இது முக்கியமான பிரச்சனை.
  இலங்கை அரசின் முகவர்கள் பல வேடங்களிலும் காட்சி தருவார்கள். புலிகளை மிஞ்சிய புலிகளாகக் கூட அவர்களால் காட்சி தர இயலும். பலவாறான் இடதுசாரி முகங்களையும் இணையத்தளத்தில் அவர்களால் காட்ட முடிகிறது.
  ஏச்சரிக்கைகள் சில ஸ்தாபன மட்டங்களிலும், சில பொதுத் தளத்திலும் அவசியம்.
  எச்சரிக்கைகளைச் சேறடிப்புக்களாக்கிப் பயனற்றுப் போகச் செய்யவும் அவர்கட்கு இயலும்.
  அரசாங்க ஆதரவாளர்களகத் தெரிகிறவர்களை விடத் தலைமறைவாக இயங்குவோர் ஆபத்தானவர்கள் என்பதே என் அச்சம். அவர்களை வெளிப்படுத்துவது கத்தி மீது நடப்பது போன்றது.

 5. //இலங்கை அரசு இன்று உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களோடும் எதிர்ப்பியக்கங்கள் மீதும் ஒரு உளவியல் போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய ஊடக அமைப்புகள், புரட்சி அமைப்புகள் எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. // – அருள் எழிலன் http://www.athirai.blogspot.com/

  //அவதூறுகளுக்கு உட்படுத்தப்படும், புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பெரும் பகுதியினர், இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல புலிகளின் சிந்தனை முறையை எதிர்ப்பவர்களுமாகும்//சபா நாவலன்

 6. கரியவன் என்பவர் கூறியிருப்பதைப் போல இந்தக் கட்டுரையை வாசித்தபோது எனக்கு அருள் எழிலன் எழுதியிருந்த கட்டுரை அன்றேல் சுயவிளக்கம் ஞாபகத்தில் வந்தது. ஈழத்தமிழர்களின் அவலங்களை முன்னிறுத்திப் பேசுவோர் மீது அவதுாறுகளை வாரியிறைத்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கி பின்தள்ளும் கைங்கரியத்தைச் சிலர் தொடர்ந்து செய்துவருகிறார்கள். அருள் எழிலனின் முகநுாலில் (face book) அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை வாசிக்கலாம்.

 7. ஷோபாசக்தி நான் லண்டனில் பேசியதை எங்கே எப்போது மறுத்தேன் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா? தோழர் சேனன் அவர்களுக்கும் நான் இதைத்தான் சொல்கிறேன். ஆனால் நான் லண்டனில் பேசியதாக ஷோபா இப்படிச் சொல்கிறார். “மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே” உண்மையில் நான் பேசியது இதுதான் “புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியான கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்” என்று பேசியதையும், எழுதியதையும் ’’மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே” என்று தந்திரமாக திரிக்கும் எழுத்துச் சித்தர் ஷோபா. மறைமுகமாக மக்களை புலிகள் பிடித்து வைத்திருந்ததாக நான் ஒத்துக் கொண்ட தோற்றத்தை என் மீது உருவாக்குகிறார். புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதே சிக்கலான விஷயம். இரண்டு படுபாதக அரசுகளும் இதையே சொல்லும் போது நானும் அதைச் சொல்ல முடியாது. இது தொடர்பாக பலரையும் சந்தித்த போது ஷோபா சொல்வது போன்றோ, அல்லது புலி ஆதரவாளர்கள் சொல்வது போன்றோ அல்ல இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன. இப்போது அயோக்கியர்கள் கடைசியில் செய்யும் தகிடு தத்தத்திற்கும் வந்து விட்டார். ஒலிநாடாவை எடிட் செய்து விட்டதாகச் பேசத் துவங்குகிறார். எந்தக் கேவலமான தரத்திற்கும் நீங்கள் செல்வீர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும்.
  அடுத்து,
  //இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் மக்கள் புலிகளிடம் பட்ட கற்பனைக்கும் எட்டாத துயரங்களையும் புலிகளின் மிருகத்தனமான கொடூரங்களையும் குறித்து நிறையப் பேர்கள் சாட்சியமளித்துவிட்டார்கள். ஆனால் அவற்றையெல்லாம் எழிலன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. களத்திலிருந்து கருணாகரனும், நிலாந்தனும், யோ. கர்ணனும் சொன்னார்கள். தமிழகத்திலிருந்து த. அகிலன் சொன்னார். புலம் பெயர் நாடுகளிலிருந்து நாங்கள் சொன்னோம். எதையும் எழிலன் நம்ப மறுக்கிறார். தனது வழக்கப்படி இவ்வாறு சொல்பவர்களை ‘அம்சாவின் அடிவருடிகள்’ என்று அழைக்கவும் அவர் தயங்கமாட்டார்.//
  உண்மைதான் நீங்கள் பட்டியலிட்ட நபர்கள் எல்லோரும் புலிகளுக்கு எதிராக மட்டுமே என் காதில் ஓதினார்கள் அதுதான் பிரச்சனைய, ஆனால் இனியொரு தோழர் நாவலனோ, புலிகளுக்கு எதிராக இருந்து போரின் பின்னர் இலங்கைக்கு அரசுக்கு எதிராக நிற்கும் தோழர்களோ புலிகள் செய்த தவறுகளையும் சொன்னார்கள். அதை விட இலங்கை அரசு செய்த பச்சைப் படுகொலைகளையும் செய்தார்கள். இரண்டையும் சொல்லி விட்டு இலங்கை அரசுக்கு எதிராக அரசியல் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை கொடுத்தார்கள். அதுதான் அரசியல் ரீதியாக சரி என நினைக்கிறேன். சரி நீங்கள் எனக்கு தகவல் சொன்னதாகக் குறிப்பிடும் இவர்கள் இப்போது என்ன அரசியல் நிலைப்பாடுகளோடு இலங்கைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஷோபா எனக்கு நீங்கள் சொல்ல முடியுமா?

  1. இவ் எதிர்வினை எதற்கானது என்று எனக்கு விளங்கவீலை.
   ஷோபா சக்தியுடனான விவாத்தத்தை இங்கே எப்படிநடத்த இயலும் என்றும் விளங்கவில்லை.
   ஷோபா சக்தி இங்கு எழுதுபவரல்ல அவர் இங்கே பதில் சொல்ல்லுவார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
   எனவே இதனாலான பயன் என்னவென்று விளங்கவில்லை.

   ஷோபா சக்தியின் அரசியல் பற்றியும் சமகால நடவடிக்கைகள் பற்றியும் பலருக்கும் மிகுந்த ஐயங்கள் இருக்க நியாயமுண்டு. ஆதனால் அவர் முன்வைத்த குற்றச் சாட்டுகள் எல்லாமே செல்லாமலாகி விடாது. அவரது குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசின் எடுபிடிகள் பயன்படுத்துவது மட்டுமே அவற்றை நிராகரிக்கப் போதிய நியாயங்களல்ல.

   கருணாகரனும் நிலாந்தனும் கர்ணனும் அகிலனும் புலிகளை விமர்சிப்பதை மட்டுமே செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் சொன்னவை அக் காரணத்தல் மட்டுமே பெறுமதியற்றவையாகி விடா.
   உண்மைகள் “பக்கச் சார்பற்றவர்களிடமிருந்து” மட்டுமே வரமுடியும் என்றில்லை. மிகவும் பக்கச் சார்பானவர்களும் உண்மைகளைக் கூறுவர். அவர்களது வியாக்கியானங்களையும் உண்மைக்குப் புறம்பான கூற்றுக்களையும் விலக்கி உண்மைகளக் கண்டறிய இயலாவிடின், நாம் என்றுமே முழு உண்மையையும் அறிய மாட்டோம்.

 8. பெற்றோல் பம்ப்புகளீல் நின்றூ தும்பு அடிப்பவனும் இந்தியாவுக்குப் போக கடன் வாங்கித்தான் போக வேண்டி இருக்கிறது ஆனால் இந்த சேகுவரா ஆண்டிற்கு இரண்டு முற போகிறார் என்றால் இவருக்கு பைனான்ஸ் செய்பவர் யார்? இணய தளம் நடத்தும் தொழிலாளீயும் இவர்தான்.தனக்குள் இன்னும் எரிமலை இருப்பதால் இலங்கை மண்ணீற்கு போக முடியவில்லையாம் புரூடாவாகவே இருக்கிறார்.இவரது பம்மாத்துக்கள படமாக எடுத்தால் எந்திரன் வசூலையும் முறீயடிக்கலாம்.தான் தண்ணீ போட்டு விட்டு அடித்த சக நண்பனை சாதி சொல்லித் திட்டுகிறார்.இடையே தலித் எனும் ட்ராமா வேற.இவரால் ஏன் பிரான்ஸ் மண்ணோடு ஒட்ட முடியவில்லை என்பதற்கு பட்டி மன்றம் தேவையிலை இவரது பம்மாத்துக்களே போதும்.திட்டுவதைத் தவிர வேறூ தெரியாத இவரோடு முட்டுவது தண்ணீர் லாரி கத தான்…தமிழ்மாறன்.

 9. புலியாகவிருந்து தப்பித்து வந்த சுளுவான இந்தப்பாலகப் போராளி சோபா,  தஞ்சமடைந்த நாட்டில்  தன்னை வளர்த்த புலியை கேலியாக்கியும், கேள்வியாக்கியும் அதனையே பிறகு புத்தகமாக்கியும் பிரபலமானவர்.அவர் புலியைக் கேலியாக்கி போனால் போகட்டும். ஆனால் தமிழருக்கும் தமிழுக்கும் காலணா கூட நன்மை பயக்காத இவரது எழுத்துக்களை ஏழுலகமும் போற்றுவதாக  இவரே தகிடுதத்தம் விட்டவர். இப்போ காற்று இவர் பக்கம் வீசுகிறது. தமிழரைத் துடைதெறிந்த அரசிற்குச் சோரம் போகிறார். இது தான் இவரது நடைமுறை. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.///// களத்திலிருந்து கருணாகரனும், நிலாந்தனும், யோ. கர்ணனும் சொன்னார்கள்./////எதைச் சொன்னார்கள்?????ஊரை உறவுகளை,இனத்தை ஏமாற்றி செங்கடலுக்கப்பால் சிரித்திரு என்று சொன்னார்களா???????? மக்கள் புலிகளை விடவேயில்லை என்று கொக்கரித்துப் பட்டிமன்றம் நடாத்த திருவனந்தபுரம்வரை போன இந்த எடுபிடிகள் அரசபகுதிகளுக்குள் போன  மக்களை முகாம்களிலும் சித்திரவதைக்கூடங்களிலும் அரசு வைத்திருக்கிற கொடுமைகளை அக்கறையோடு எழுதுகின்றார்களா??யாரைச் சாட்டியும் இவர்களின்எழுத்தும்  புத்தகமும் விலைப்பட்டால்ச் சரி 

  1. களத்தில் இருந்த கருணாகரனும் நிலாந்தனும் யோ. கர்ணனும் யோக்கியவான் களாக இருந்திருந்தால் மே 19க்கு முன்பே ‘உண்மை”களைச் சொல்லியிருக்க வேண்டியதுதானே. தமிழ்நாட்டில் இருந்து த. அகிலன் சொக்கத்தங்கம்! தன் தம்பியை ‘புலிகள் இழுத்துக்கொண்டு போய் சாகடித்தார்கள்’ என்றவுடந்தான் தெரிகிறதா, பிள்ளைபிடிப்பு!—— புலிகள் களத்தில் இருக்கும்போது அவர்களின் ஆசியோடு ஈழத்தில் உலாவந்துவிட்டு, இப்போது அவர்களை நாராசமாகத் தூற்றுவதற்கு இவர்காள் வெட் கப்படவே இல்லை, என்ன மனிதர்கள் இவர்கள்! —

   அப்படியென்ன உயிர்ப்பயம் உங்களுக்கு. இதே மண்ணில் புலியிடம் ஜனநாயகம் பேசி சுட்டுப்பட்ட தமிழச்சி, சிங்களச்சிகள் பற்றி உங்களுக்குத் தெரியாது? — மொத்த இனமே அழிந்துவிட்ட பின்பும் எதிரியிடம் யாசகம் பெற்று, உயிர்க்கொடை தந்தவர்களைப் பழிக்கும் நீங்கள் ஈழ மண்ணுக்கு மயிர் அளவாவது தியாகம் செய்திருக்கிறீர்களா? மனதைத் தொட்டு சொல்லுங்கள், பார்ப்போம்.

  2. தமிழ்த் தேசியச் சூழலுக்குள் இருந்து துரோகிப் பட்டம் வாங்காமல் புலிகளை விமர்சிப்பது பலருக்கும் எளிதாக இருக்கவில்லை. அதை விடப் புலிகள் சரிவை எதிர்நோக்கிய 2006க்குப் பிற்பட்ட காலத்தில் அவர்களை நேர்மையாக விமர்சித்து வந்த பலரும் கொஞ்சம் அடக்கியே வாசித்தனர். அதற்குக் காரணம் அவர்களது விமர்சனங்கள் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு வலுச் சேர்ப்பதாகி விடும் என்பதாகவே தெரிந்தது.

   புலியை ஆதரித்தால் புத்தகம் விற்பது இன்றைக்கும் எளிது என்று நீங்கள் அறிய மாட்டீர்களா? சும்மா எல்லாவற்றுக்கும் வலிந்து நோக்கம் கண்டு பிடிப்பது நல்லதல்ல.

   ஊர் உறவுகளை ஏய்த்தோர் யார்?
   தமிழீழத்தின் பேரால் தானே எய்ப்பு இன்னமும் தொடர்கிறது!

 10. புலிகளை துரோகி என்றேன்.
  அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள்.
  ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன்.
  பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள்.
  பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,
  நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன்.
  எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள்.
  போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன்.
  சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன்.
  என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.
  வெளிப்படையாக வரவா என்றேன்.
  இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான்
  எங்களுக்கு வசதி என்றார்கள்.
  இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன்.
  அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும்
  வீசப்பட்ட மக்களைக் காட்டினார்கள்;
  கூடவே எலும்புக் கூடுகளையும்.
  இப்போது நான் சொன்னேன்
  அவர்களே அவர்களை அழித்துக் கொண்டார்கள் என்று.
  இனி எனது நூல்கள்
  ஜெர்மன், டேனிஷ், பிரெஞ்ச், மொழிகளிலும் வரும்….
  நானும் மாற்றுக்கருத்துப் பாரம்பரியத்தில் வந்த ஒருவனாவேன்.

  – யாழினி

 11. “ashroffali – இன்றைக்கும் கூட என்னைப் போல எத்தனையோ பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறி வரத் தயாராகவே இருக்கின்றார்கள். அவர்களில் பலரிடம் பெறுமதியான ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால் யார் அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுக்கப் போகின்றனர்?”

  ஆக நீங்கள் அரசாங்கத்தோடு இருக்கின்றீர்கள்! அரசை விட்டு வெளியேற துடிக்கிறீர்கள்!! உங்களிடம் பெறுமதியான ஆவணங்கள் இருக்கின்றன!!! உங்களுக்கு ஆதரவு கரம் வேறு தேவையாகவும் இருகின்றது!!!!. யோசிப்போம்!?………..

  நீங்கள் அரசோடு சேர்ந்து இருப்பதன் மர்மம் என்ன (அல்லது சேர்ந்ததன் மர்மம் என்ன)?
  அரசை விட்டு ஏன் வெளியேற துடிக்கிறீர்கள்?
  பெறுமதியான ஆவணங்கள் உங்களிடம் இருக்கின்றது என்பதை எந்த நம்பிக்கையில் இந்த வெளியில் பகிரங்கமாக சொல்லுகிறீர்கள்?.
  தங்களுக்கு எந்த வகையான ஆதரவு கரம் தேவை படுகிறது?
  அம்சாவை ஏன் இந்த வெளியில் இழுக்கிறீர்கள்? (அம்சா ஓடி ஒழியவேண்டியதில்லை அவர் தமது பணியை சிறப்பாக செய்கின்றார் காத்தான்குடியை சேர்ந்த அம்சாவை எனக்கு நன்றாகவே தெரியும் அவர் எனது தகப்பனாரின் மாணவர்)

  நவீன புலனாய்வு அரசியலில் சிக்குண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் சிதறுண்டு போய்விட்டதே……… நவீன புலனாய்வு அரசியல் பற்றிய தெளிவு புலிகளிடம் இருந்திருக்கவில்லை அதனால் அவர்கள் அழிந்தார்கள். தமிழில் ஒரு கதையுண்டு இறால் போட்டு சுறா பிடித்தல் என்பது அதுவும் ஒருவகை நவீன புலனாய்வு அரசியல் தான் போங்கள் ashroffali .

  அதிகம் அதிகம் எம்மக்களைப் பற்றியும் நாம் இப்படிச் செயற் படுவோம் அப்படிச் செயற்படுவோம், விடுதலையை அப்படிப் பெறுவோம் இப்படி பெறுவோம் எனக் கூறும் நான் கூட நவீன புலனாய்வு அரசியலின் புலனாய்வாளனாக இருக்கக் கூடும். எனவே பல்வேறு இன்னல் களை பட்ட எமது சமூகம் சிந்தித்து செயற்படும் திறன் உள்ளதாக இருக்கும் என நம்புவோமாக.

  தென்றல் காற்று கூட என்னை இதமாய் வருடிச் செல்கையில் ……

  சொல்வதாய் …….. சொல்ல மறுப்பதாய் ஒரு கேள்வி என்னுள்…….

  சூறை காற்றுக்கு என்னை இரையாய் கொடுப்பதை…. நீ நினைப்பதாய் ……

  நண்பர்களே!

  மானுட தர்மத்தை துலைத்தவர்களாய் ……

  நாம் இருந்தும்

  அதனை தேடுவோர்களாக பாசாங்கு செய்வோமெனில்……

  ஆத்மாக்களை தொடர்ந்தும் அகாலங்களில் தள்ளும்

  மானிடராய்……… நாம் தொடர்ந்தும்………. நாம் தொடர்ந்தும் ……….

  S .G .Ragavan

 12. வீரத்தால் எழுந்தோம்….. :@ துரோகத்தால் வீழ்ந்தோம்……. வீரத்தால் எழுந்தோம்….துரோகத்தால் வீழ்ந்தோம். திராவிடர்களும் , ஆரியர்களும் கலந்து எப்படி மலையாளிகள் , கன்னடர்கள், தெலுங்கர்கள் உருவானார்களோ..இனி வடக்கில் , சிங்களவர்களும் , தமிழர்களும் கலந்து ஒரு புது இனம் உருவாகப்போகிறது. அதுக்கு முன்னோட்டமாய் ஈழத்திலும் , புலத்திலும் சில பேர்கள் உருவாகி விட்டினம். அதற்குத்தான் பாடு பட்டு புலிகளை அழிக்க, உள்ளும் , வெளியும் இருந்து துணை போய் விட்டினம். அந்த புதிய இனத்திலாவது துரோகிகள் இல்லாமல் பாத்துக்கொள் ஆண் டவா…..

  1. புதிய இனம் உருவாகாது. சிங்கள இனமாகத்தான் அது இருக்கும். நீர்கொழும்பு போன்ற இடங்களைப் பார்த்தால் புரியும். பணத்துக்காகவும்> புகழுக்காகவும் தம் சொந்த உறவுகளையே அழித்திடத் துணைபோகும் தமிழராய் இருப்பதை விட தம் இனத்துக்காய் ஒன்றுபட்டு உழைக்கும் சிங்களவராய் மாறி நன்றாய் வாழட்டும்.

  2. வன்னியன்
   தமிழனும், திராவிடர்களும் ஆரியர்களும் பிறரும் கலந்து தான் உருவானான். தூய இனமென்று உலகில் ஒன்றும் இல்லை.
   கலப்பினங்களான சீனர், மொங்கோலியர் போன்றோர் நடுவில் உள்ள உருவ ஒற்றுமை கூட நம்மிடை இல்லை

   துரோகம் என்பது தூர இருந்து கல்லெறிகிறவர்கள் கொஞ்சம் யோசித்துப் பாவிக்க வேன்டிய ஒரு சொல்.

 13. அம்சா ஓடி ஒழியவேண்டியதில்லை அவர் தனது பணியினை இலங்கைக்காக வெளிப்படையாகவே செய்கின்றார். தற்போது உள்ள பிரச்சினை முளுவதுவுமே பாதிரி கஸ்பார் போன்றவர்கள் குறித்த எச்சரிக்கை உணர்வுதான். Ashroffalli தங்களிடம் உள்ள போர்குற்ற ஆவணங்களை நேரடியாக ஐ.நா, சர்வதேச மன்னிப்புச்சபை, மற்றும் வெளி நாட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கலாம்

 14. வீரம் மாத்திரம் போதாது வன்னியான் விவேகமும் வேண்டும் இங்கு இடுகை எழுதும் பலரும் விவேகமின்மையாலும் எமது விடுதலைப்போராட்டம் தோற்றதாகவே கூறுகின்றனர். எனவே வாய்சவாடல்களை விட்டு விட்டு ஏதாவது விவேகமாக சிந்தியுங்கள். சிங்கள அரசு புலிகளையும் தமிழரையும் வீழ்த்தியது விவேகத்தால் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  1. சிங்கள அரசு புலிகளையும் தமிழரையும் வீழ்த்தியது விவேகத்தால் அல்ல, இந்திய வெறியரின் சூழ்சியால்! உலகெங்கும் புலிகளுக்கு எதிராக திரை மறைவில் பிரச்சாரம் செய்தவர்கள் இந்திய இனவெறியரே. புலிகளை தனித்துநின்று எதிர்க்க முடியாத சிங்கள இராணுவம் ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளின் உதவியுடன் நாப்பால்ம் குண்டுகளைப் பாவித்து புலிகலியும் தமிழரையும் அழித்தார்கள். புலிகளின் தோல்விக்கு தமிழருக்குள் இருந்த காட்டிக்கொடுப்போர்தான் முக்கிய காரணம். 
   இன்றும் தமிழர் ஒற்றுமையாக எந்தஒரு விடயத்தையும் முன்னெடுக்க முடியாது இருப்பதற்கு எம்மிடயேயுள்ள எலும்புத்துன்டுகளுக்கு சண்டை பிடிக்கும் வல்லூறுகள்தான் காரணம். ராஜபக்சவின் கூட்டம் பணத்தால் எதையும் சாதிக்கலாமென்ற இன்றய நிலை இருக்கும்போது துன்புறும் மானிடருக்காக போர்புரிய எங்குபோய் மனச்சாட்சியுள்ள மனிதனைத் தேடுவது?

   1. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என கதறமுடியாது. அழிவிலிருந்து நாம் கற்றது ஏதுமில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இந்திய உபகண்டத்தில் சிறுதீவாக தனித்தேசமாக வாழுகின்ற சுமார் இரண்டாயிரம் வருட ராஜதந்திரவரலாறு சிறீலங்கா ஆளும்வர்க்கதிற்கு இருக்கின்றது என்பதனை தற்பெருமை பேசி சுயதம்பட்டம் அடித்து வளர்ந்த நாம் வசதியாக மறந்துவிடுகின்றோம். இந்திய மேலதிக்க அரசு தனக்கு அருகில் எததனை சிறுதேசங்களை (காஷ்மீர் உட்பட) வலுக்கட்டாயமாக இணைத்துக்கொண்டுள்ளது. தெலுங்கானா உட்பட எத்தனை போராட்டங்களை அழித்திருக்கின்றது. காஷ்மீர் இன்று உலகிலேயே இராணுவமயப்பட்ட பூமியாகவிருக்கின்றது. ஈராக்கில் 150,000 அமெரிக்கப்படைகளே ஆக்கிரமிப்பின் உச்சகட்டத்தில் நிலைகொண்டிருந்தனர். காஷ்மீரில் 500,000 இந்திய படைகள் நிலைகொண்டுள்ளன.மேலும் அய்.நா வில் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்தாமல் வன்முறையின் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட மேலாதிக்க இந்தியாவிற்கு அருகில் வெறும் பதினெட்டு கடல்மைல் தொலைவில் தனித்தேசமாக சீறிலங்கா இருக்கின்றதென்றால் சிங்கள ஆளும்வர்க்கத்தின் ராஜதந்திர முறையின் வளர்ச்சியும்,தேர்ச்சியும் இன்றி சாத்தியப்பட்டிருக்காது. காட்டிக்கொடுப்பு, காட்டிக்கொடுப்பு என்று புலம்புபவர்கள் காட்டிக்கொடுப்பதற்கு புலிகளிடம் என்ன இருந்தது காட்டிகொடுக்க என்பதனை கூறமறுக்கின்றார்கள். மரபுப்படையணி என்று மண் அணைகளுக்கு பின்னால்நின்றால் இன்றைய பின்நவீனத்துவ போரியல் ஒழுங்கில் என்னாகும் என்பதனைத்தானே கண்டோம். ஈராக்கிய இராணுவம் ஒருகாலத்தில் உலகத்தில் நாலாவது பெரியது என்று கூறப்பட்டதில்லையா? தலைநகருக்குள் அமெரிக்கராணுவம் உள்நுழைந்தபோது மிகப்பயிற்சிபெற்ற குடியரசுப்படைகள் உள்ளாடைகளுடன் தலைதெறிக்க ஓட வேண்டிவந்ததனை காண்வில்லையா? ப்க்தாத்தை சுற்றி வளையம், வ்ளையமாக நிறுத்தப்பட்ட படைகளுக்கு என்ன நடந்த்தது? குடாரப்பு தரையிறக்கம், அது, இது என்று எல்லாவற்ரையும்பற்றித்தான் எழுதி காட்சிப்படுத்தி பணம் சேர்த்தாயிற்றே, புலிகளின் இராணுவ தந்திரோபாயங்கள் தொடர்பாக ராணுவநிபுணர்கள்(சிவராம் அல்ல) சரியாகவே அலசிமுடிவெடுத்திருப்பார்கள். புலிகளின் இராணுவபுலனாய்வு அமைப்புக்குள் அரச உள்வாளிகள் புகுந்து பிழையான தகவல்களை கொடுத்து அழிவிற்கு கொண்டுசென்றார்கள். புலிகள் முதலில் எதிரிக்கு இவ்வகை அதிர்ச்சிவைத்தியம் கொடுத்திருந்தனர். அதனையே அரசு திருப்பிசெய்தது. கருணா புலிகளின் தலைவருடன் இருந்திருந்தாலும் பு.தலைவரின் முடிவை சில மாதங்கள் தள்ளிப்போட்டிருக்கமுடியும் அவ்வளவுதான். எந்த மக்களுக்காக போராடுவதாக புலிகள் கூறிக்கொண்டார்களோ அந்த தமிழ்மக்களே(புலிகளே மக்கள் என்ற வாதம் வேறு) புலிகளை பிரச்சனையின் ஒரு பகுதியாக( தீர்வின் அங்கமாக அல்ல) பார்க்க தொடங்கியதன் பின்னர் அவர்களின் முடிவு தவிர்க்கமுடியாததாகியது. புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்று தங்களே செய்து வந்த பிரச்சாரத்தை தாங்களே நம்பத்தொடங்கினார்கள். இதில் காட்டிக்கொடுக்க என்ன ராசா இருக்கு?

  2. துப்பாக்கி முனையிலிருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறதென்றார்கள். ஆனால் துப்பாக்கியை எப்போ அழுத்த வேண்டும் எப்போ மெளனிக்க வேண்டுமென்று முடிவெடுப்பதில்தான் இராணுவ தந்திரமும் அரசியல் சாணக்கியமும் புதைந்து கிடக்கிறது. பீரங்கிகளிலிருந்து சுடப்படும் பல குண்டுகளை விட கைத்துப்பாக்கியிலிருந்து சுடப்படும் ஒரு குண்டு பல மக்களின் அரசியல் விதியை தீர்மானித்து விடும்.

 15. சூர்யா இந்தியா நமக்கு எதிராக பலவிடயங்களை செய்துள்ளது, அதனை இலங்கை நன்றாக பயன்படுத்தியுள்ளது. நாம் தான் யாரையும் கணக்கு எடுக்காமல் விட்டு விட்டோம். நாம் எமது இனம் குறித்த அதீதமான நம்பிகைஜீனங்களை கொண்டிருத்தல் கூடாது. இது அதிக எதிர்பார்ப்பால் வரும் சலிப்புத்தனம்.

 16. சிங்கள அரசு புலிகளை அளிப்பதற்கு மட்டும் இந்தியாவின் உதவியை நாடவில்லை முன்பு JVP ஐ அளிப்பதற்கும் இந்திய உதவியை நாடியது என்பதை நாம் மறக்கமுடியாது.இங்கே நாம் மார்பில் அடித்து அழுவதற்கு முன்பு சில விடயங்களை மனதில் என்றும் நிறுத்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்,அதாவது வல்லரசுகள் இந்தப்பூமியில் எப்படி தங்கள் காய்களை நகா்த்தும் அப்படி நகா்த்துகின்றபோது எந்தவித அடிப்படை பொருளாதார கனிவளங்களை கொண்டிராத பூமிகளில் வாழும் மக்கள் கூட்டங்களின் விடுதலைபோராட்டங்கள் எப்படி கவனத்தில் கொள்ளப்படும் என்பதை 30 வருட காலத்தில் புலிகளால் புரிந்துகொள்ளமுடியாமல் போனதே மிகப்பெரிய கேவலம்,கொத்துக்குண்டென்ன அணுகுண்டையும் இந்தியா நினைத்தால் பாவிக்கலாம் என்ற ஸ்தானத்திலேயே அது இன்று உள்ளது.
  நமக்காக யாரும் கேட்க வருவார்கள் என்று நம்புவது மடத்தனம் பலமுள்ளவனுடன் நடித்து காரியத்தை சாதிப்பதே இன்றய நிலையில் சாணக்கியமானது இந்தியாவை அடித்தோம் என்று புலம்பித்திரிந்தோம் இந்தியா என்ன அழிந்தாபோய்விட்டது மாறாக நாம்தான் அழிந்துபோனோம் சில வேளை மாத்தையா போன்றவா்கள் எடுத்தமுடிவு சரியானதோ என்று எண்ணத்தோன்றுகிறது,ஆனால் அவருக்கு துரோகிப்பட்டம் கொடுத்துவிட்டார்கள்.

  1. இங்கு ஒருவரும் மார்பில் அடித்து கொண்டு அழவில்லை, நமக்காக யாரும் கேட்த வருவார்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கவுமில்லை. இனி எம்மால் சொந்தக்காலில் நின்று என்ன செய்ய முடியும் என்றுதான் இங்கு விவாதிக்கிறோம். நான் அறிவாளி, நீ மடயன் என்று தராதரம் பிரிக்கவும் இங்கு ஒருவரும் வரவுமில்லை. 
   புலிகளை அழிக்க அன்று இந்தியா மாத்தையா மூலம் முயன்றது. இன்று ஒட்டுமொத்தமாக தமிழரையே அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டுநிற்கிறது. தமிழரின் விடுதலைக்காக வெளிக்கிட்ட பலர் பலவிதமாக அன்று முடிவெடுத்து இன்று மகிந்தவின் எச்சிலிலைக்காக சண்டை போடுகிறார்கள்.

   1. நமது கால்கள் பலமற்றவை அல்ல ஆனால் சிறீய இனமான நாம் இந்தியாவைப் பகைத்தால் இல்லாமற் போவோம் என சொன்னவர் பேச்சை நாம் கேட் கவே இல்லை.வீட்டு விறாந்தையில் விழல் கதை பேசி வீணாய்ப் போனோம்,இன்னும் இப்படியே மத்தளம் அடிக்காமல் யோசிப்போமா?

  2. எதையும் தீர்க்கதரிசனமாக சிந்திக்கத் தெரியாமல் திசை மாறீனோம் எனக் குமார் சொல்வதே சரியானது.

 17. ஈழத்தமிழரை பொறுத்த வரை குமாரின் கருத்துகளுக்கு முற்றுமுழுதாக உடன் படுகிறோம்.வரலாற்று ரீதியாக தமிழ் இனம் மிகவும் சுயநலமிக்கது.விருந்தோம்பல் போன்றவற்றில் பெயர் பெற்ற போதும்.அதுவும் யாழ்பாணத் தமிழனாக இருந்தால் அதில்
  கொஞ்சம் விசேஷத் தன்மை இருக்கும்.ஒன்பது தமிழன் இருந்தால் பத்தாவது தமிழன் தான் உயர்ந்தது என்பதை காட்டிக் கொள்ள முயற்சிப்பான்.முயற்சிப்பது மட்டுமல்ல தொண்டை குழிமுடிச்சை அறுப்பதற்கும் தயங்கமாட்டான்.
  இந்த கேவலம்கெட்ட தமிழினம் தான் முப்பது வருடங்கள்ளாக விடுதலை என்ற பெயரில்
  அடக்கப் பட்டமக்களை களப்பலி ஆக்கிற்று. இதுவே வேதனையான துயரமான சம்வங்கள்.
  இதற்கு நல்ல உதாரணம். நான்கில் ஒரு பகுதியாக மாறிப்போன புலம்பெயர் தமிழர்களே.
  இவாகள் இல்லாவிட்டால் புலிகளை யாரும் கற்பனை செய்து பார்த்திருப்பீர்களா?
  வங்கிகொள்ளை கொலைகாரர்கள் என்கிற பெயருடன் ஒருசிலவருடங்களில் புலிகள்
  அழித்தொழிக்கப் பட்டிருப்பார்கள்.
  இதைநான் ஏன் சொல்லுகிறேன் என்றால்.பொருளாதரபலம் மிகவும் சக்திவாய்ந்தது.
  அது மானிடசிந்தனையே மிருகமாக மாற்றக்கூடிய சக்தியை குறிப்பிட்டகாலங்களுக்கு
  தன் ஆதிக்கத்திற்ககுள் வைத்திருக்க கூடிய வலிமையைப் பெறும்.இறுதியில் வரலாற்றை முன்னெடுத்து செல்பவர்கள் மக்கள் உழைப்பாளிகள் என்பதை காணலாம்
  இதில் இனமோ மத அடையாளமோ அல்ல.புலிகள் முப்பதுவருட உள்நாட்டுயுத்தம் விட்டு போனது இந்த மகத்தான அனுபவத்தைத் தான்…….ஆகவே..வரலாற்று ரீதியாக
  கிழக்காசியா அதாவது சீனா இந்தியா எந்த நாட்டையும் அடிமையாக்கியதில்லை. சீனா
  முதாலித்துவப் புரட்சியை நிறைவுசெய்து சோசலிசபுரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.இந்தியாவோ நிலப்பிரத்துவ தன்மையில் இருந்து விடுபட முயற்சி
  -அல்லது பிரசவத்திற்காக காத்திருக்கிற முழுமாதக் கற்பணியாகவே இருக்கிறது.
  அதுவரை காத்திருக்கிற அவசியம் ஈழத்தமிழருக்கு தேவை.இல்லையேல் பயாப்பிர இனம் மாதிரி சுவடில்லாமலே அழிந்துவிடும்.
  சர்வதேசியரீதியில் உலகத்தொழிலாளவர்க்கம் பலம் பெறும்வரை இந்ததேசியமுதாலி
  வர்க்கத்துடன் ஒரு இணக்கப்போக்கு அரசியலுக்கே எமது இனம் நிர்பந்திக்கிறது.அதற்காக இந்திய தேசியமுதாலித்தவம் பழம்குடிமக்களுக்கு எதிராக
  தொடுகிற போராட்டத்தையோ மகிந்தாவுடன் ஒட்டிய சகபாடிகள் செய்கிற தில்லுமுள்ளுகள் ஊழல்கள் கொலைகளை கண்டும் கானமலும் கண்மூடிக் கொண்டிருப்போம் என்றும் அர்த்தமல்ல.
  இன்று இலங்கை உழைப்பாளிக்கு-தமிழ்மக்களுக்கு ஆயிரம் வெடிகுண்டுகளால் சாதிக்க
  முடியாதஒரு காரியத்தை சாதிக்ககூடிய தொழில்சங்க அமைப்புகளே!தேவை.அதற்கே வருகிற
  வரலாறு முன்னுரிமை கொடுத்திருக்கிறது.இதுவோ மாக்ஸியம் எமக்குணர்த்தும் பாடம்.எதையும வர்க்கப்போராட்டம் என்கிற பார்வையில் சிந்திப்போம்.இதுவோ மானிடச்சிந்தனை.

  1. தமிழனின் குணம் என்று யாழ் மேட்டுகுடிச்சிந்தனையைதான் பலரும் குறிப்பிடுகின்றார்கள். யாழ் மத்தியதர வர்க்க இளைஞர்கள் ஒருகால்சட்டை பைக்கற்றில் கடவுச்சீட்டுடனும், ஒரு பைக்கற்றில் கைத்துப்பாக்கியுடனும்தான் போராட்ட களத்தில் இருந்தார்கள் என்பது உண்மைதான். இந்தவாய்ப்புகளற்ற கிழக்குமாகாணத்து இளையோரும், வடக்கின் ஒடுக்கப்பட்ட ,பொருளாதாரரீதியில் ந்லிவடைந்த பிரிவினர் களத்தில் அரபடைகளுடன் மோதி யாழ் மேட்டுக்குடிச்சிந்தனைக்காக மடிந்தனர் என்பதும் உண்மைதான். மிகமோசமான இனசுத்திகரிப்பு, இனப்படுகொலைகளையும் பலதசாப்தங்களாக முகம் கொடுக்கின்ற கிழக்கின் கிராமத்து இளையோர் பேரினவாத அரசுக்கெதிராக மூர்க்கமாக போராடியதில் ஆச்சரியமொன்றுமில்லை. கிழக்கில் இருந்து போராட்ட அமைப்பில் இணைந்தால் ஒன்று போராடிமடியவேண்டும்,.அன்றேல் முரண்பட்டால் துணை இராணுவப்படையில் இணையவேண்டும் அதைவிட வேறு தெரிவுகள் கிடையாது. பேரினவாத ஒடுக்குமுறையும் யாழ் மேட்டுக்குடி சிந்தனையும் வேறுதெரிவுகளை அவர்களுக்கு விட்டுவைக்கவில்லை. இந்த விமர்சனங்கள் எல்லாம் சரிதான். ஆனால் யாழ் மேட்டுக்குடி சிந்தனை குறுந்தேசியவாதிகளிடம் மட்டும்தான் இருந்ததா? மாக்சியர்களிடமும், இடதுசாரிகளிடமும்(யாழ் நகர) இச்சிந்தனை இருக்கவில்லையா? நிலவிலே பேசுவோம் என்று ஒடுக்கப்பட்ட சாதியினரை வீட்டுக்கு வெளியில் வைத்து சாமர்த்தியமாக பேசி அனுப்புவது, எவ்வகை சிந்தனை முறை. சாதியம் எல்லோரிடமும் இருக்கின்றது. சாதி ஒழிக என்று முற்போக்கு பேசுபவர்களிடமும், சாதியால் ஒடுக்கப்பட்ட பொருளாதாரரீதியில் முன்னேறிய பிரிவினரிடமும், சாதியம் இருக்கின்றது. சாதியத்தை எப்போதுமே துருப்புச்சீட்டாக பாவிக்கின்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் முன்னேறிய பிரிவினர் தம்துசாதிக்குள் இருக்கின்ற தொழிலாளர்கள் மீது காட்டுகின்ற இகழ்வு, தமக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற சாதியினர் மீது காட்டுகின்ற சாதியம் யாழ் செம்மண்ணின் நிலவுடமையாளர்கள் காட்டிய சாதிய (சிந்தனையில்) போக்கினைவிட குறைவானது அல்ல. யாழ்ப்பாணத்தில் கோயில்களில் கும்பாவிசேகம் செய்து மேட்டுக்குடி சிந்தனையை வெளிப்படுத்துவதில் ஒடுக்கப்பட்ட சாதியில் உள்ள முன்னேறியபிரிவினர் யாருக்கும் குறைவானவர்களல்ல. சீனாவில் மழைபெய்தால் யாழ்பாணத்தில் குடைபிடிப்பதால் என்னபயன். மேட்டிமை சிந்தனையும்,முத்திரைகுத்தல்களும்,வசைபாடல்களும்தானே பொதுவுடைமைவாதிகள் என்று தம்மை அழைத்துகொண்டோரிடம்( இது மாக்சிச வெறுப்பு அல்ல) மிகுந்த்திருந்தது. அறுபதுகளில் சாதியஎதிர்ப்பு போராட்டங்களில் வகித்த முற்போக்குபாத்திரத்தை இழந்து சீரழியவில்லையா? காமினி யாப்பா தலைமையிலான கீழைக்காற்று இயக்கம்தான் யாழ்ப்பாணத்தில் முதலில் வீட்டுக்கொள்ளையில் ஈடுபட்டது என்பது தெரியாதா? மகிந்த கும்பல் மொத்தநாட்டையும் சொந்த நிறுவனம் போலவே நிர்வகிக்கின்றனர். நீதிதுறை தன்னுடைய சுயாதீனத்தை இழந்துவிட்டது. பிரபாகரனின் நிழலுருவம் போல கோத்தபாய செயல்படுகின்றார். கிழக்கில் என்றுமில்லாத அளவில் இனச்சுத்திகரிப்பும், நிலப்பறிப்பும், வடக்கில் திட்டமிட்டகுடியேற்றங்களும் இடம்பெறுகின்றன. சொந்த குடும்பத்தை அரச அதிகாரங்களில் அமர்த்தி ஊடகத்துறையை பயமுறுத்தி,தாக்குதல் நடத்தி, கொலைசெய்து வழிக்குகொண்டுவருதல்,மாணவர்போராட்டங்களை வன்முறை மூலம் ஒடுக்குதல்,வன்னியில் அரசால் செய்யப்பட்ட படுகொலையை மூடிமறைத்தல், இவைதான் தேசிய முதலாளித்துவத்தின் அடையாளங்களா? சர்வதேச தொழிலாளர் புரட்சிக்குரிய பதில்கள் மகிந்தவின் வேட்டிமடிப்புக்குள் இருக்கின்றனவா? சீனா முதலாளித்துவ புரட்சியை நிறைவுசெய்து சோசலிசப்புரட்சிக்கு தயாராக இருப்பதாக மகிந்த மாமா கூறினாரா? ஆபிரிக்க நாடுகளிலே சீனா என்னசெய்துகொண்டிருக்கின்றது? ஆபிரிக்க தொழிலாளரை வெறும் துப்புரவு தொழிலாளர்களாக மட்டும் தமது நிறுவனங்களிலே கூலிக்கமர்த்தி அவர்களது மூலவளங்களை கொள்ளையடிக்கவில்லையா? பூனை கறுப்பாக இருந்தாலென்ன? சிவப்பாக இருந்தாலென்ன எலி பிடித்தால் சரி என்று டெங் சியாவோ பிங் காலத்தில் பாதைமாறிய பின்னுமா குடை பிடிப்பதை நிறுத்தவில்லை. மாக்சியம் உணர்த்தும் பாடம் பலமானவனை அண்டிபிழைத்துப்போவதா? இடத்திற்கு ஏற்றாற் போல் புரட்டுபேசுவது யாழ்மேட்டுக்குடி சிந்தனையில்லையா?

   1. ராமுவின் சிந்தனை எனக்கு விவேகானந்தரின் பொன்மொழியைப் படித்தது போலிருந்தது.கோயில்களீல் எல்லாம் மணலைக் கொட்டி நிலாவில் பேசுவோம் என பேய்க்காட்டி இருக்கிறார்கள் என்பது தத்துவம்.எல்லாத்தயும் கோணல் பார்வை பார்க்காது அறீவுப் பார்வை பார்க்க வழி காட்டிய ராம் ஒரு குரான் மாதிரி.நம்மிடையே ஜிகாத் தொடங்கட்டும் இதையே பைபிளூம் சொல்கிறது,பரமண்டலத்தில் இருக்கிற ராமு வாழ்க்…வாழ்க…

   2. ராமு நாம் இப்ப என்ன செய்ய வேண்டுமென தெளிவாக நாலுவரிகளில்
    சொல்லுங்கள். அதன் பிறகு அதற்கான விளக்கத்தை தருகிறேன். ஏனெனில் நான் சொன்னதை எல்லாவற்றையும் தாறுமாறகப் புரிந்து
    கொண்டது மாதிரியே கதைசொல்லிப் போகிறீர்கள். திரும்பவும் கேட்கிறேன்.ஒருசில வரிகளில் புரியவைக்க முடியுமா?தயவு செய்து.
    உதாரணத்திற்கு.புலிப்பாணி தொடர்ந்து நீடிக்க வேண்டுமா?
    கைகுண்டு வீச்சு கிளமோர்தாக்குதல் மரநிலலிலும் மணலில் படுக்கையிலும் மருத்தவமனைகளாக்கிய கொடுமைகள் நீளவேண்டுமா? அதுவெல்லாம் கண்முன்னே அகன்றுபோனது உங்களுக்கு கவலையளிப்பதால் மகிந்தாவை போர் குற்றவாளியாக்க
    முயற்சிக்கிறீர்களா? இல்லை இதைவிட வேறு காரணங்களை வைத்திருக்கிறீர்களா? தெளிவுபடுத்துங்கள். பிளீஸ்.

    1. நாலு வரிகளில் நான் எழுதினால் அதற்கு விளக்கம் தருவீர்களா? இந்த சட்டாம்பித்தனம் எதிலிருந்து பிறக்கின்றது. மாக்சிச புரட்சிகர சிந்தனையில் இருந்தா? அல்லது நீங்கள் திட்டிதீர்க்கின்ற மேட்டுக்குடி சிந்தனையின் தொடர்ச்சியிலிருந்தா ? நாலுவரியில் எழுதுவதா நாற்பது வரியில் எழுதுவதா என்பது எனது கருத்துச்சுதந்திரம். அதனை பிரசுரிப்பதா? இல்லையா? என்று முடிவெடுப்பது இனியொரு மட்டும்தான். புலிப்பாணி என்று குறிப்பிடுகின்ற சிந்தனைமுறை நிச்சயமாக தொடரக்கூடாது. அச்சிந்தனைமுறை புலிகளிடமும் அவர்களின் வியாபார பினாமிகளிடமும் மட்டும் தான் காணப்பட்டதொன்றல்லவே. முடிந்த முடிபுகளில் இருந்து தகவல்களை திரித்து புரட்டுபேசுவது என்று மகிந்த கும்பலுடன் இணைந்துள்ள புலிஎதிர்ப்பாளர்களிடமும் காணப்படுவது அதுதானே. “போர் என்றால் போர் சமாதானம் என்றால் ச்மாதானம்” என்று என்று மொத்த தமிழ்மக்கள்மீதும் பேரினவாதம் யுத்தத்தை பிரகடனம் செய்யவில்லையா? புலிகளையும், நாற்பதினாயிரம் மக்களை படுகொலைசெய்தும், அமைதியை வழங்கியுள்ளார் மகிந்த என்று வாதாடுபவர் சிலர், புலிகளின் காலத்தில் தனிமனித குற்றச்செயலகள் இடம்பெறவில்லை, கலாச்சார சீரழிவுகள் இடம் பெறவில்லை என்று கூறுவோர் சிலர் எனது பதில் நான் சுடுகாட்டு அமைதியை என்றுமே விரும்புபவனல்ல என்பதுதான். எவ்வித சாட்சியஙகள் இன்றி வன்னியில் பெருந்தொகை மக்களை கொன்று புதைத்துவிட்டு, மீதியான மக்களை முடமாக்கி அன்றாட உண்விற்கே அல்லல்பட வைத்துவிட்டு பல மில்லியன் டொலர் செலவில் தமது பிம்பத்தை கட்டமைக்கிறது மகிந்த கும்பல். பேரினவாதிகளாலும், புலிகளாலும் கொல்லப்பட்ட மனிதர்கள் முகமிழந்தவர்களாக வன்னியின் புதர்வெளியில் மறக்கடிக்கப்பட வேண்டியவர்களல்லவே. வன்னியில் நிகழ்த்தப்பட்ட போர்குற்றங்களை பாரபட்சமற்ற முறையில் விசாரிக்க்கோருவது மனிதகுல உயர்வை நோக்காக கொண்ட உங்கள் அரசியலுடன் எவ்வாறு முரண்படுகின்றது. அல்லது சுயநலம்மிக்க தமிழன் இவ்வாறு அழிந்து போவது வரலாற்றில் தவிர்க்கமுடியாதது என்று முடிவிற்கே வந்துவிட்டீர்களா? இன்றைய புதிய உலகஒழுங்கில் உருவாகிவரும் புதியவல்லரசுகளின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைதான் வன்னிபடுகொலை. இது சரியானமுறையில் நீதி கேடகப்படாதுவிட்டால் எமது பிராந்த்தியத்தில் உள்ள ஒடுக்கப்படுகின்ற பழங்குடிகளும், சிறு இனக்குழுக்களும் சாட்சியங்களின்றி அழித்தொழிக்கப்படுவார்கள். ஆனால் சீனா சோசலிசத்தையும், இந்தியா முதாளித்துவத்தையும் பிரசவிக்கபோவதாக முடிவுக்கு வந்துவிட்டீர்களே. இது செருப்பை தைத்துவிட்டு அதற்கு அள்வாக காலைவெட்டுவது போன்றதில்லையா? உஙகள் சிந்தனைக்கும் புலிகளின் சிந்தனை முறைக்கும் ஒரு ஆறு வித்தியாசங்கள் இருக்குமா?

     1. துப்பாக்கிமனிதர்கள் எந்த நாட்டில்
      இருந்தாலும் ஆபத்தானவர்கள்.
      ஒரு இனத்தில் தோன்றிய பயங்கர
      வாதத்திற்கு அந்த இனமே பொறுப்பேற்றிருக்க வேண்டும். முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.துப்பாக்கி மனிதர்களிடம்
      நெருங்க முடியாதவரை சொந்த இனத்திற்கு வலுவில்லாத வரை
      இலங்கைஅரசு நடந்த முறை சரியானதே!ராமு உம்முடைய அரசியலில் கெஞ்சி-காலில் விழுந்தா அவர்களை விடுவித்திருக்க முடியும்?.அப்படி
      நடந்தாலும் நடக்கக் கூடிய காரியமாக இருந்திருக்குமா?. இனிகாலங்களில் கொஞ்சம் நீட்டாகவே எழுதுங்கள்.

   3. “துப்பாக்கிமனிதர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஆபத்தானவர்கள்.” — C-Rஇன் பொன்/பித்தளை/பியூட்டர் மொழி

    “அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறக்கிறது” என்று சொன்ன மாவோ ஒரு பொல்லாத பேர்வழியாக இருக்க வேண்டும்.

    ராஜபக்சவின் படைகள் மக்களை அழிக்கத் துப்பாக்கிகளை தொடுவதேயில்லை. குண்டுகளைத் தானே வீசுகிறார்கள்!

  2. “இந்தியா எந்த நாட்டையும் அடிமையாக்கியதில்லை. ” — chandran .raja
   சிக்கிம் என்ற நாட்டைப் பற்றி அறிவீர்களா?
   பூட்டான் என்ற நாட்டைப் பற்றி அறிவீர்களா?
   நேபாளத்தில் என்ன நடந்து வந்துள்ளது என்று அறிவீர்களா?

   1. தேசிய முதாலித்துவ அரசில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தாலும்.
    நான் அதை அடிமைப்படுத்திய நாடாகக் கருதவில்லை.அப்படியென்றால்
    ஈராக் ஆப்கானிஸ்தான் அடுத்ததாக வரத்தயாராக இருக்கிற ஈரான்னை
    என்னவென்று சொல்லி அழைப்பது?.
    நேபாளத்தில் நடந்ததை எழுதுங்கள்.கேட்கிறோம்.

    1. இந்தியா என்பதே பல சமூகங்களை அடிமைபடுத்தி வைத்திருக்கும் கூட்டு இராச்சியம்.

   2. நேபாளத்தைப் பற்றி இந்த இணையத்தளத்திலேயே கட்டுரைகள் வந்துள்ளன. இங்கு நான் சொல்லித் தான் விளங்க வேன்டுமென்றல் இது அதற்கான இடமில்லை.நம்பகமான இணையத்தளங்களும் நூல்களும் உள்ளன.
    பூனை கண்ணை மூடிக் கொண்டால்…

    ட்ரொட்ஸ்கியம் எப்போது “தேசியவாதத்தை” நியாயப்படுத்தத் தொடங்கியது? இது கொலனித்துவத்துக்குப் பிந்திய காலம். பழைய வாய்ப்பாடுகள் திருத்தப்பட வேண்டும்.

    இந்தியா (ஏற்கெனவே ஒரு ஏகாதிபத்தியமாகியிராவிடின்) ஒரு ஏகாதிபத்தியமாகி வருகிறது. சீனாவின் கதையும் அதுவே: (ஒரு வேறுபாடு: சீனா அயல்நாடுகளில் தன் ஆயுதப் படைகளை இன்னமும் நிலைநிறுத்தவில்லை).

    1. தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் வித்தியாசம் தெரியாமலா? இவ்வளவு காலமும் கருத்து எழுதிக்
     கொண்டிருக்கிறீர்கள்.
     முதாலித்துவத்திற்கும் ஏகாதிபத்திற்கும் வித்தியாசங்களை முரண்பாடுகளை கண்டறியாதவன்
     மட்டுமே இப்பபடியான முட்டாள் தனமாக எழுதமுடியும்.

     1. விளக்கம் நாலு வரிகளுக்குமேல் போனால் விளங்காதாம். ஆனால் மற்றவர்களை முட்டாள் என்று தீர்ப்புகூற மாத்திரம் நல்ல அறிவு இருக்கு.

   3. சூர்யா
    சிரிக்க வேண்டிய இடத்தில் சினக்காதீர்கள்.
    மற்ற எவரையும் முட்டாள் என்று அழைக்க ஒரு தகுதி தேவை.
    அத் தகுதி படு முட்டாள்களுக்கே பெரும்பாலும் வாய்க்கிறது என்று நினைக்கிறேன்.
    வாதங்கள் பலவீனப்படுகையில் வசைமொழிகள் துணைக்கு வருகின்றன.
    ஒரு கொலைகார ஆட்சியை நியாயப்படுத்துகிற முயற்சி எவரெவரையோ எங்கேயெல்லாம் கொன்டு போகின்றது. என்ன செய்வோம்!

 18. எனது கருத்துகளில் இருக்கும் பிழைகளை திருத்தவும் 1.நாங்கள் எல்லோரும் எங்களுக்கு வசதியான சிந்தனை தளத்திலிருந்து எங்களுக்கு தெரிந்த, அறிந்த பாடமாக்கிய எங்கள் மேதாவித்தனத்தை கேட்டு அதாவது நாங்கள் கூறும் சொற்பதங்கலான மார்க்சிசம்,பாசிசம் முதலாளித்துவ ஜனநாயகம் , புரட்சிக்கர மக்கள் ஜனநாயகம்,புரட்சிக்கர மக்கள் சர்வாதிகாரம் ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டம், இன்னோரன சொற்பதங்களை கேட்டு அடிபணியக்கூடிய தெளிவில்லா மக்களை (சொற்பத அடிமை மக்களை) போராடக் கூப்பிடுவதற்குரிய ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டமானது , புலிகள் எப்படி ஆயுதத்தை மட்டும் நம்பினார்களோ, அது போல் சொற்பதங்களை மட்டும் நம்புவதும் நடைமுறைக்கு ஒவ்வாது , தீர்வை தராது

  2.ஒருத்தரும் தங்களுக்கு தெளிவான பாதையை இன்னும் கூறவில்லை .
  பொதுவாக ஓன்று பட்ட மக்கள் போராட்டம் தான் தீர்வு என்று சொல்வதோடு முடிக்கிறார்கள். 3.பரந்து பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தங்கள் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால் ஏனைய ஒடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்களா? தமிழினம் குடுக்குமா? அதற்குரிய வலிமை தான் உண்டா?
  4.ஓன்று பட்ட மக்கள் போரரட்டத்தில் நம்பிக்கையுள்ள சக்திகள் ஏன் எம் இனம் அழியும் போது குரல் கொடுக்கவில்லை ?
  நாம் அவர்களை அணுகவில்லை என்று கூறி தட்டிக்கழிக்க வேண்டாம். அல்லது
  புலிகளில் அவர்கட்கு உடன்பாடில்லை என்றால், ஆக குறைந்தது புலிகளிற்கு எதிராக மக்களை விடுவிக்க கோரியிருக்கலாம்

  5.அந்தந்த இடத்தில் நடக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் போரடங்களிட்கு பின்னால் ஆதரவாக நிற்கும் சக்திகள் முற்போக்கானவயா?

  6.மேற்க்கத்தய சிந்தனை முறையிலிருந்து(இன்று பரவலாக நாம் உச்சரிக்கும் ) உருவான சொற்பதங்கள்,போராட்ட முறைகள்,அவற்றிட்கு கிடைத்த ஆதரவு , பலன்கள்,
  அனுபவங்கள்,முடிவுகளை , கீழைதேச நாடுகளில் விதைக்க முடியாது .

  7.நமது கீழைதேச சிந்தனை முறை முற்றிலும் மாறுபட்டது, எமது வரலாறு,கலை பண்பாடு ,சமூக கட்டமைப்பு , பொருளாதார கட்டமைப்பு,போராடும் முறை கூட மேற்க்கத்தய முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

  எனது கருத்துகளில் இருக்கும் பிழைகளை திருத்தவும்

  1. இப்படிக் கேட்டால் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் தேவன்.வேலியால் போகிற ஓணானை யாரும் சேலைக்குள் பிடித்து விடுவார்களா?. இது தான் சரியானது என உங்களுக்கு தெரிகிற விஷயத்தை வைத்து இதில் ஒருவரை இழுத்து பிடித்து “குஸ்தி” போடுங்கள்…தொடர்ந்து விடாது போடுங்கள். சளைக்காமல் போடுங்கள். அப்படித் தான்
   நான் செய்கிறேன்.நோக்கம் மட்டும் சுயநலமில்லாததாக இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு என்னுடனேயே போடலாம் வெற்றி பெற்று விட்டீர்கள்களால்
   அடுத்தவரை பிடிக்கவேண்டியது தானே!.தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.இது என் ஆலோசனை மட்டுமே!.

  2. இனியொரு பொறுப்பாளருக்கு:
   c-r வேண்டும் இப்படிப்பட்ட குஸ்திகளுக்கு வேறக ஒரு கோதா அமைத்துக் கொடுத்துக் கட்டுரைகள் பற்றிய விவாதங்களிலிருந்து கவனம் திரும்ம்பாமலிருக்க உதவுவீர்களா?

   1. எக்ஸ்! நில்லுங்கள். கட்டுரையில் என்னதான் புதுகருத்தை கவர்ந்தீர்கள்.
    எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிவிட்டு போங்கள். சரியாகில் நாமும்
    எங்களக்கு பின்னே. புரியவைப்பது உங்கள் பொறுப்பு.

   2. நிற்கிறேன், போக்குவரத்துப் பொலிஸ்கார ஐயா!
    என்னுடைய கருத்து உங்களுடைய “குஸ்தி” ஆலோசனை பற்றியது.

    கட்டுரை எதைப் பற்றியது என்றும் அதில் “புதுகருத்தை” அ றியாமலும் தானா இவ்வளவு பின்னூட்டமிட்டீர்கள்.
    சாதனை தான்!
    பாராட்டுக்கள்!!

    1. எக்ஸ்சும் மசலாவும் ஒருவர் தானா? எனக்கு புரியாமல்
     போய்விட்டது;
     கட்டுரையில் உங்களுக்கு புரிந்ததை ஒருமுறை பொழிந்து விடுங்கள்.வாசகர்களுக்காக…

    2. கட்டுரை எதைப் பற்றியது என்று தெரியாமலே பின்னூட்டமிடும் பின்னூட்ட மன்னரே,
     கட்டுரை புரியாமல் அவதிப் படுபவராக நீங்கள் மட்டும் தான் உங்களை அறிவித்துள்ளீர்கள்.
     உங்களுக்குப் பொழிப்புரை எழுத வேறு யாரையாவது தேடிக் கொள்ளுங்கள்.

     ஒரு ஐடியா–
     இங்கே சங்கப் பாடலுக்கு விசித்திரமான பொழிப்புரை எழுதிய ஒருவர் இருக்கிறார், வேண்டுமானால் அவரைக் கேட்டுப் பாருங்கள்.

     1. எல்லாவற்றீற்கும் விடைகள் உண்டு ஆனால் உங்கள் இருவருக்குமான சண்டையின் இடையே சிக்குப்பட்டுள்ள பொடிலங்குவேஜ்காரர் யார்?

     2. கரம் மசலா எம்மை நினவில் கொண்டுள்ளமைக்கு நன்றி இந்த் கட்டுரையின் பொழிப்புரையுடன் எமது கருத்தினையும் அளித்துள்ளேன் காண்க

  3. “கட்டுரை எதைப் பற்றியது என்று தெரியாமலே பின்னூட்டமிடும் பின்னூட்ட மன்னரே” என்பது இவ்விடத்துத் தமிழ்மாறனைக் குறிக்கவில்லை. எனினும் தான் அலட்சியம் செய்யப்பட்டதாக அவர் வருந்த வேண்டியதில்லை.

   யாரும் இடையில் அகப்படவில்லை.
   c-r உதவி கேட்டார்.
   ஒரு ஆலோசனை சொன்னேன்.
   அவ்வளவுந்தான்.

   1. மசாலா கட்டுரையில் நான் ஒன்றையும் காணவில்லை. துள்ளுகிற மாடு
    பொதி சுமக்காது என்பது எமது பழமொழி. கூடுதலாக துள்ளாதீர்கள். இது
    தான் இன்றைய தேவையென்பதை அடித்துச் சொல்லுங்கள்
    புலமபெயர் தமிழருக்கு தமது கனவு பலிக்காது போனதும் அவர்களுக்கு
    தீராத மோகம் ஒன்று உள்ளது. எப்படியாகிலும் மகிந்தாராஜபக்சாவை
    போர்குற்றவாளி ஆக்கிவிட வேண்டுமென்பதே.
    இதே தொனிக்குட்பட்டதே இந்த கட்டுரை. இல்லை. இது வேறு விதமாக
    இந்த கட்டுரை அணுகிறது என்று நீங்கள் வாதிட்டால் புரியவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
    சும்மா. சும்மா.. கட்டுரையை தாண்டி பின்னோட்டம் போகிறது என கதை அளக்காதீர்கள்.என்ன செய்யவேண்டும் என உறுதியாக சொல்லுங்கள்.கட்டுரை…பின்னோட்டம்…வாயடிக்கிறது பலன் ஏதும் இல்லை. உங்களுக்கு புரிந்ததை வாசகர்களுக்கும் புரியவையுங்கள்.
    மசாலா தனமான குளறுபடி வித்தைகளை விட்டு நல்லகருத்தாளர்
    என்ற பெயருக்காக எழுதுங்கள்.இதுவும் எனது பணிவான வேண்டுகோள்.

  4. எனக்குத் துள்ளியும் பழக்கமில்லை; வாய்க்கு வந்தபடி திட்டியும் பழக்கமில்லை; எந்தக் கொலைகாரனையும் நியாயப்படுத்தியும் பழக்கமில்லை.
   நீங்கள் ராஜபக்சவுக்காகத் துடிக்கிறீர்கள்; ராஜபக்சவை எதிர்ப்போரை நிந்திக்கிறீர்கள்.
   அது உங்கள் பிரச்சனை.
   இந்தக் கட்டுரை உங்களை வாட்டினால் அதுவும் உங்கள் பிரச்சனை.
   அதில் உள்ள தகவல்களை முடிந்தால் மறுத்து ஆதாரங்களைத் தாருங்கள். மதிக்கலாம்.
   சும்மா கொதிக்காதீர்கள். அதற்குப் பெறுமதி இல்லை.

   40,000 பேரைக் குண்டெறிந்து கொலை செய்ததும் 20,000 பேரை முடமாக்கியதும் கைதானவர்களைச் சித்திரவதை செய்ததும் சரணடைந்தோரைச் சுட்டுக் கொன்றதும் எவ்வகையான குற்றங்கள் என்று என்னால் ஊகிக்க இயலும்.
   (சர்வதேசச் சட்டமும், மார்க்சியமும் உங்களுக்கு விளங்குகிற விதமாக எனக்கு விளங்காமலிருப்பது ஒரு பாக்கியமாகக் கூட இருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குச் சரி-பிழை விளங்குகிறது).

   மேற்குலக அரசு எதுவும் ராஜபக்சவைக் கைது செய்வதும் செய்யாததும் தமிழரின் நலன் சார்ந்த ஒரு முடிவல்ல என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
   யார் எந்தத் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் பண்ணியும் பண்ணாமலும் அதில் ஒன்றும் மாறாது என்பதிலும் ஐயமில்லை.
   இந்த அரசாங்கம் பாரிய போர்க் குற்றங்களை செய்துள்ளது என்பதிலும் அதை மூடிக்கட்ட முந்துவோரின் நோக்கங்கள் நல்லவை அல்ல என்பதிலும் ஐயமில்லை.

 19. சந்திரன் ராஜா கேடுகெட்ட தமிழனுக்காக ஏன் தான் மினக்கிட்டு இவ்வளவு பின்னூடங்களை இடுகிறீர்கள்? உங்களின் எங்கோ ஒரு மூலையில் நானும் தமிழன் என்கின்ற ஈரம் வற்றாமல் இருக்கின்ற படியால் தானே? இதனையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எங்கள் சமுகத்தில் நிகழ்ந்த (/நிகழ்ந்து கொண்டிருக்கின்ற) அருவருப்பான பக்கங்கள் உங்களை பாதித்திருக்கும் என நினைகின்றேன், அதற்காக எமது இனத்தையே வெறுக்கின்ற மாதிரி நீங்கள் எழுதுவது வருத்தத்திற்குரியது.
  யாழ் மேட்டுக்குடியினரின் சோஷலிச லும்பன்கள் நிலாவில் கூப்பிட்டு கதைத்து அனுப்பிவிடும் குறிப்பானது உண்மையில் வெறுக்கத்தக்க மானுட விழுமியங்களை கொண்ட இனமாக தமிழர் வாழ்ந்து கொண்டிருப்பதை குறிப்பதாக உள்ளது. இதனை இச்சூழலை எப்படி மாற்றலாம் மாற்ற வேண்டும் என்பதே எனது அவா.
  எங்களூரில் நடந்த ஒரு விடயம் பலரின் தெளிவுக்காக நான் இங்கு முன்வைக்கிறேன். மாலை சந்தை விநாயகர் எங்களது கோவில், சாதி திமிர் பிடித்தவர்கள் எங்கள் ஊர் காரர். தாழ்த்த பட்ட மக்களாக “சித்தரிக்கப் பட்ட” ஒரே மொழி ஒரே நிறம் கொண்ட எங்கள் தமிழர் எங்கள் கோவிலுக்குள் செல்ல தடை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க தடை. கோவில் விழாக்களில் மேடை ஏற தடை. இப்பவும் அப்படித்தான். எங்கள் அப்பா சமத்துவமாக சிந்திக்கக் கூடியவர் (சிலவேளைகளில்…../ஊரோடும் ஒத்து ஓடுவார், ஆனால் ஒருபோதும் நிலவில் கூப்பிட்டு கதைபதில்லை) எங்கள் ஊர் காரரிடம் ஒருநாள் கேட்டார் ஊர் நாய் எல்லாம் எங்கள் கொவிலுக்க போகுது ஏன் ஒரு மனுசனை கொவிலுக்க போகவிடுறியல் இல்லை எண்டு அதற்கு அவர் கேட்டாராம் அப்ப உண்ட பெட்டையை அவங்களுக்கு கட்டிக்கொடன் எண்டு. ஆனால் அதே கோவிலில் ஒரு அதிசயம்! நாட்டு கூத்து ஒன்றை போட்டனர் எங்கள் ஊர்காரர் அதில் நடித்தவர்கள் சிரட்டையில் தண்ணி குடிப்பதற்கு நிர்பந்திக்கப் பட்ட எமது சகோதர்கள் தான். ஊரில் ஒரே சலசலப்பு உவங்களுக்கு கூத்து போடா வேற ஆக்கள் கிடைகலையோ? ஆனால் எங்கள் ஊரில் உள்ளவர்களே அவர்களை அழைத்து பொன்னாடை போர்த்தி கௌவுரவப் படுத்தி நிகழ்ச்சியை நடாத்தினர். அவ்வாறு கௌவுரவ படுத்த காரணம் என்ன? அவர் ஒரு கல்விமான், விரிவுரையாளர், நல்ல கலையன், பொருளாதார ரீதியிலும் வலுவானவர். எனவே கல்வி பொருளாதாரம் என்பன அனைத்து வலுவிழந்த மக்களிடையேயும் முன்னேறுமானால் சாதியம் மேட்டு குடி சட்டாம்பித்தனம் தானாக அழிந்து விடும் என்பது எனது கணிப்பீடு ஆகும்.

  1. தமிழன் கேடு கெட்டவன் அல்ல, கோடுகள் நிறந்த அவன் வாழ்க்கையில் சில கேடுகள் இருந்தன் உங்கள் முப்பது வருடத்திற்கு முன்னான கதை மாற்றம் பெற்றூ வருடங்கள் கடந்து விட்டன் ராகவன்.கோயில்களூம் விழாக்களூம் கூட புதிய தோற்றம் பெற்றூ விட்டன்.மூச்சு விடக் கூட உரிமை அற்றூ தமிழன் ஏதோ வாழ்கிறான்.

  2. கல்வி,பொருளாதாரம் மட்டுமல்ல, மிக முக்கியமான விடயம் தாழ்வு மனப்பான்மை,முதலில் அதை தகா்க்கவேண்டும் சாதியம் காட்டிக்கொள்ள முற்படுபவனைவிட நான் தாழ்ந்தசாதி என்று நாமாகவே நமக்குள் பதியவைத்திருக்கும் அந்த கொடிய நினைவை கொல்லவேண்டும். 

 20. imagine. this Genocide is still being aggressively denied by certain self- proclaimed tamil Diaspora intellectuals. Some shamelessly act as PR-agents of Indian or srilankan Governments. Some are real paid agents. only money makes that part of the world go round.

 21. திரு ராகவன் தமிழன் யார்? என்கிற கேள்வி எப்பவும் என்னை உலுப்பிக்கொண்டே இருக்கிறது.தத்துவார்த்த ரீதியில் உங்கள் கருத்து சரியானதே..நடைமுறையில்-அரசியலில் இருநுறுவருடவரலாற்றைக் கொண்ட மலையக மக்களையோ சாதியால் ஒடுக்க
  பட்டமக்களையோ தமிழனாக ஏற்றுக்கொண்டு அரசியல் நடத்திய தமிழனைக் நான் காண
  வில்லை.
  இங்கு கண்எதிரே எதைக் கண்டுகொண்டிருக்கிறீர்கள்.வர்க்கத்தை பற்றி பேச முடிகிறதா?
  தொழிலாளர்களைப் பற்றி பேசமுடிகிறதா?? மனிதகுலத்தை விடுவிக்க்கூடிய ஒரேயொரு
  தத்துவமான மாக்சியத்தை பற்றி விவாதிக்க முடிகிறதா?? தாராளினி..தமிழினி..தியாகினி
  என எத்தனை விதமான எதிர் கருத்துக்கள்.
  இப்படிப்பட்ட தமிழரினன் கருத்துக்களுக்கு காத்திருந்து சல்லாரி அடிக்கிறதிற்கு ஒரு கூட்டம்.இதையெல்லாம் பார்க்கும் போது..!
  வாழவேண்டிய சிறுவனோ சிறுவனோ குண்டைக்கட்டிக்கொண்டு தற்கொலைப்போராளி
  யாகி போய்விட்டால்..நாங்களும் நாட்டில் இருந்தால் எங்கடை பிள்ளைகளையும் விடத்
  தானே! வேணும் என்று திருப்த்திப் பட்டுக்கொண்டிருக்கிற ஒரு சமூகத்தை என்ன பெயர்
  சொல்லி அழைப்பது? என்று! தமிழன் மற்றைய மனிதஉயிர்களை-உரிமைகளை உதாரணமாக ஏழைமுஸ்லீம்களை விரட்டி அடித்து சிங்களகிராமங்களுக்குள் புகுந்து
  ஏழை விவசாயிகளை படுகொலைசெய்தவர்களை ஆமோதித்து ஆதரவு கொடுத்தது
  தானே இந்த புலம்பெயர் தமிழர்கூட்டம்.என்னைப் பொறுத்தவரை இது சுயநலக்கூட்டம்.தனது வர்கத்கத் தன்மையே இழந்த லும்பன் கூட்டம் என்றும் சொல்ல
  லாம்.தத்துவார்த்த ரீதியில் உங்கள் கருத்துச் சரியானதே.அப்படியொரு விவாதம் ஆரோ
  க்கியமாக நடைபெறும் பொழுது என்தவற்றை சுயவிமர்சம் செய்வேன்.அதுபற்றி கவலை கொள்ளாதீர்கள்.

  1. யாழ்மேட்டுகுடி அரசியல் தலைமை, புலம்பெயர் தமிழர்களை பற்றிய விமர்சனங்களுக்கு பின்னால் உங்கள் சிந்தனையில் உள்ள ஓட்டையை மறைத்துக்கொள்ளவேண்டாம். குடும்பத்தோடு ஊரையே கொள்ளையடிக்கின்றது மகிந்த கும்பல். உங்களது மேட்டிமைபுரிதல்களையும் அறிவுஞானத்தையும், பகிர்ந்து கொள்ளக்கூடியதாக தமிழ்ச்சமூகம் வளரவில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டே யாழ் மேட்டுக்குடிசிந்தனைக்கு அடிப்படையாக இருக்கின்ற இந்தியபார்ப்பனியத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் ஆதரிப்பது முரண்நகையில்லையா? பெருமுதலாளிய நுகர்வுகலாச்சாரமும் அதுபோதிக்கின்ற “தனிமனித வெற்றி எல்லாவறையும்விட முக்கியமானது சமூகம் என்றஒன்றே இல்லை” என்பன புலம்பெயர்தமிழ்ச்சமூகத்தில் மாத்திரமல்ல மாவோ வளர்த்த செஞசீனத்திலும், ரூசிய குடியரசிலும் வியாபித்திருக்கின்ற நச்சுவிதைகள். இது மாற்றமடையாததென்பதல்ல. அதுதான் இன்றைய நிலை. விமர்சனங்களை உண்மை பேசுகின்ற அறத்தில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். ஆயிரக்கண்க்கான மக்களை கொன்று புதைத்து விட்டு மனிதாபிமான போர் என்று சாதிக்கின்ற, ,இலங்கை வரலாற்றிலேயே மோசமான ஜனநாயகவிரோத, பேரினவாத கும்பலுக்கு சாமரம் வீசுவது எவ்வகை முற்போக்குவாதம். புலிகளின் மக்கள்விரோத அரசியலுக்காக தமிழ்மக்கள் தண்டிக்கப்பட்டார்கள் என வாதிடுபவர்கள் அனைத்து அரசபயங்கரவாதங்களும், ஏகாதிபத்தியங்கள் மக்களை கொல்லுகின்றபோது சொல்லுகின்ற காரணங்களை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஏனெனில் அதையே இவர்களும் வாந்தியெடுக்கின்றார்கள். இவர்களின் மாக்சிச புரிதல், சமூக அக்கறை என்பன வெறும் வார்த்தை விளையாட்டு என்பது வெள்ளிடைமலை தவிர்க்க முடியாதபடி அவர்களே திட்டுகின்ற யாழ்மேட்டுக்குடிசிந்தனையின் மறுபக்கம்தான் புலிகளையும் துணைஇராணுவப்படை தமிழர்களை போல.

  2. இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அங்குமட்டும்தான் இந்தப்பிரிவுகள் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக உணா்ந்தேன் ஆனால் மேற்கத்தய உலகத்திற்கு வந்தபின்பே தெரிந்தது மனிதா்கள் அடிப்படையில் யாவரும் ஒன்றே வசதிகளை உருவாக்கி அதனுள் மறைந்துகொள்வதாலேயே இங்கு நிறய விடயங்கள் கண்ணுக்குத்தெரிவதில்லை என்பது.

   நாம் ஒவ்வொருவரும் நம்மை தெய்வப்பிறவிகளாக நம்பி அடுத்தவா்களை அல்லது நாம் சோ்ந்த இனத்தை மட்டமாகவோ தரக்குறைவாகவோ குறிப்பிடுடமுற்படுகிறோம் சில விடயங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது சமூகத்தில் திணிக்கப்பட்டவை ஒரே நாளில் அழித்துவிடமுடியாது அத்தோடு இறந்துபோன பொதுவுடமை புத்தகங்களை படித்துவிட்டு நடைமுறை வாழ்க்கைக்கு பரிகாரம் தேடமுற்படுவது முட்டாள்தனமாக தெரிகின்றது இனத்தின் குறைகளை களையமுற்படாமல் பழித்துக்கொண்டிருப்பது அழகல்ல நடந்த தவறுகளை எடுத்துரைப்பதற்கும் நையாண்டிசெய்வதற்கும் நிறை வித்தியாசங்கள் உண்டு. 

 22. கீழே விழுந்து போயிருக்கும் எமக்கு சந்திரன் ராயா, தேவன், குமார், ராமு, வன்னியான் எல்லோரும் கை கொடுங்கள் நீர்வேலியில் முற்றுகைக்குள் இருந்த கிட்டு அல்பேட் போன்ற புலிகளை மீட்க டெலோ வினர் ஊடறுத்து தாக்கி மீட்டனர் ஒன்றுமை வென்றது . ஆனால் கோப்பாயில் பதுங்கி இருந்த சபாரத்தினத்தை கொன்று போட்டோம் வேற்றுமை எம்மை முள்ளிவாய்க்கால் வரை கூட்டிச்சென்று கொன்று போட்டது.

  1. ஆ! ராகவன், உங்களால் ரஜபக்சவ்க்குச் சல்லாரி அடிக்க முடியவில்லையே!
   அது உங்களைச் சில “மர்க்ஸிய”வறிஞர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

 23. இடதுசாரிகளே !!

  இன்றுவரை கூடுதலான தேசியம் சார் புலி எதிர்ப்பாளர்களின் கருத்து

  பிராந்திய பூகோள அதிகார சக்திகள், தங்களின் நலன்களை மீறி முதலாளித்துவச் சர்வாதிகார போக்கோ (புலிகளின் அரசியல் இராணுவ போராட்டம்) அல்லது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார போக்கோ உடைய ஒரு தேசம் உருவாவதை விரும்பாது.

  பிராந்திய பூகோள அதிகார சக்திகளுடன் இணங்கி ஒரு தீர்வை எடுக்காததால் தான் புலிகள் அழிக்கப்பட்டார்கள் .

  புலிகள் தங்களுடைய அதிகாரத்திற்கு சேத மேற்ப்படும் என்ற காரணத்தினால் மட்டுமே ஏக பிரதிநிதித்துவத்தை முன்னிறுத்தினார்கள்

  புலிகளின் போராட்டம் மக்களின் நலன் சார்ந்தும் இருந்திருந்தால் பிராந்திய பூகோள அதிகார சக்திகளுடன் இணங்கி ஒரு தீர்வை எடுத்திருப்பார்கள்.

  ஆகவே தேசியம் சார் சக்திகள் தாங்கள் விரும்பும் அதிகாரப் பகிர்வை (தேசிய விடுதலை அல்ல) ஒரு இணக்க அரசியல் மூலம் தீர்வைப் பெற்று இன்று முனைப்படைந்திருக்கும் தேசியப் பிரட்சனைட்கு தீர்வு வந்தால் போதும்,பின்பு மக்கள் எதிர்கொள்ளப்போகும் பிரட்சனைகட்கு வரலாறு மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ளும் என்ற நிலையிலும் உள்ளார்கள் .

  அதேபோல் இன்றுவரை கூடுதலான இடது சார் புலி எதிர்ப்பாளர்களின் கருத்து
  புலிகளின் போராட்டம் மக்களின் நலன் சார்ந்து இருந்திருந்தால் பிராந்திய பூகோள அதிகார சக்திகள் தமிழ் மக்களின் போராட்டதிற்கு எதிராக இருந்தாலும் உலகளாவிய முற்போக்கு சக்திகளின் ஆதரவுடன் எமது தேசிய விடுதலையை அடைந்திருக்கலாம்.

  இந்த சிந்தனை முறை எந்த அளவு நடைமுறை சாத்தியம், படிமுறைகள் என்னென்ன, சந்திக்கப்போகும் சவால்கள் என்னென்ன, என்பது பற்றி தெளிவாக்குவது இடதுசாரிகளின் கடமை. நீங்களும் தெளிவில்லாமல் மக்களை தெளிவாக்கமலும் போராட மக்களை அழைப்பதுவும் தவறு.
  இடதுசாரிகளே !!
  தயவு செய்து எப்படி நிலப்பிரபுத்துவ, காலனித்துவ, குறுந்தேசிய எச்ச சொச்ச சிந்தனைகளில் மூழ்கியிருக்கும் மக்களை தயார் படுத்தப் போவதிலிருந்து உங்கள் பாதையை தெளிவுபடுத்துவது நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

  போகமுடியா ஊருக்கு வழி காட்டிய புலிகள் போல் இன்னுமொரு போகமுடியா ஊருக்கு வழி காட்டாதீர்கள்.

  யதார்த்ததிற்கு வாருங்கள், உங்கள் மார்க்சிய அறிவால் கிடைத்த பார்வையை ,இன்றைய உலக ஒழுங்கு, ஆசியா நோக்கிய பொருளாதார ஈர்ப்பு மைய நகர்வு, நடந்ததும் நடந்து கொண்டிருக்கும் மற்றைய, எங்கள் போராட்டங்களின் நிலை, மற்றும் தமிழ் தேசிய இன மக்களின் மனோ நிலை (ஏன் புலிகளின் அடக்குமுறையையும் தாங்கி பொறுத்து புலிகளின் பின் போனார்கள், இன்றும் ஏன் பிரபாகரனை பூசிக்கிறார்கள், இன்னோரன), போன்றவை ஊடாக பார்த்து ஒரு வழியை காட்டுங்கள் அத்தோடு நீங்கள் கூறும் மக்கள் போராட்டத்திற்கு எதிராக இருக்கப்போகும் எதிரியின் மனோ நிலை , பலம் , பலவீனம், எவ்வளவு தூரம் நாம் அவனோடு போராடலாம், எவ்வளவிற்கு நாம் எதிர் பார்க்கும் ஆதரவு சக்திகள் எம்முடன் நிற்ப்பார்கள், அவை எதிரியுடன் பேரம் பேச எம்மை துஸ்பிரயோகம் பண்ணமாட்டார்களா? போன்றவை பற்றி தெளிவாக்குவதும் இடதுசாரிகளின் கடமை. சுருங்க கூறின் ஒரு இனம் தன் பலம் பலவீனங்களை உணர்ந்து நடைமுறை சாத்தியமான, இருக்கும் பரிமானங்களிட்குள்(given parameters) அதன் முன் உள்ள முதன்மை பிரட்சனைட்கு ஒரு தீர்வை எதிர்பார்த்து நகர்வது மார்க்சிய சித்தாந்தத்திட்கு முரணானதா?

  அல்லது ஒரு இனத்தின் போராட்டமானது பரிணாம வளர்ட்சிகுட்படாது நேரடியாகவே முதிர்ச்சியடைந்த புரட்சிகர பாட்டாளி வர்க்க போரட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று மார்க்சிய சித்தாந்தம் கூறுகிறதா?

  போன்ற கேள்விகள், குழப்பங்களிட்கும் விளக்கங்களை எம் முன் வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கிறேன் இங்ஙனம் :
  மக்கள் போராட்டம் பற்றி நிறைய குழப்பமுடன் உள்ள உங்கள் தெளிவில்லாத் தோழன்.

  1. சவால் விடுவதை விட்டு விட்டு அக்கறையுடன் மார்க்சிய எழுத்துக்களையும் மார்க்சிய வரலாற்றையும் படியுங்கள்.
   உங்கள் முந்திய கேள்விகட்கு ஓரிருவர் சொன்ன பதில்களைக் கூட நீங்கள் கவனிப்பில் எடுத்ததாகத் தெரியவில்லை.

   ஒன்று மட்டும் உறுதி: மார்க்சியர்கள் மக்களை நம்பிப் போரிடுவோர். அவர்கள் மக்களைக் கேளாமல் எதையும் செய்பவர்களல்ல. தங்கள் போராட்ட முடிவுகளை மக்கள் மீது திணிப்போரும் அல்ல.

   1. //மார்க்சிய வரலாற்றையும் படியுங்கள்//

    அறுவது வருட தமிழ் தேசிய இனத்தின் வரலாறு சொல்லித்தராதது, அதில் இருந்து கற்றுக்கொள்ள முடியாதது எதுவும் சிவப்பு புத்தகத்தில் இருக்க வாய்ப்பில்லை. நன்றி உங்கள் அறிவுரைக்கு.

    //தங்கள் போராட்ட முடிவுகளை மக்கள் மீது திணிப்போரும் அல்ல.//

    நாம் இருவரும்
    மார்க்சியர்கள் பதில் சொல்லும் வரை பொறுத்திருப்போமா?.
    .

    1. //அவர்கள் மக்களைக் கேளாமல் எதையும் செய்பவர்களல்ல// உங்கள் கூற்று , மார்க்சிசர்களை விட மக்கள் தெளிவானவர்கள் எனப்படுவதால் தான் “பொறுத்திருப்போம் ” என வேண்டுகிறேன்

    2. உங்களுக்குப் படிக்கப் பொறுமை இல்லை என்றால் நான் என்ன செய்ய!

     சரி கருணாநிதி பாணியில்:
     “பொறுத்தது போதும் பொங்கியெழு மவனே!”

     முன்னுதாரணங்கட்கா குறைவில்லை?

 24. xxx – நீங்கள் குறிப்பிட்ட ராஜபக்சவுக்கு சல்லாரி அடிக்க முடியவில்லையே என்பது எனக்கு விள்ளங்கவில்லை. கார்ல் மார்க்ஸ் லெனின் குறித்த அறிவு என்னிடம் பூரணமாக இல்லை, இருப்பினும் சமுத்துவமான சமுதாயம் ஒன்றை கட்டி எழுப்புதல் குறித்து நாம் கார்ல் மார்க்சை பின்தொடரவேண்டியதில்லை எமது சமுதாயத்தை சமுக பொருளாதார நிலைமைகளில் வலுவுள்ளவர்களாக மாற்றினால் போதுமானது. அதற்காக மார்க்ஸ் எழுதிய புத்தகத்தை கொண்டு திரியவேண்டியதில்லை. புரட்சிகர சமூகத்தை எவ்வாறு கட்டி எழுப்புதல் என்பதே என்னுள் எழும் கேள்வியாகும்

  1. ராகவன்,
   தனிப்பட்ட தாக்குதல்கள் மிகுந்த இச் சூழலில் என் நக்கல் விளங்காமற் போனதில் வியப்பில்லை.
   நீங்கள் மனம் வருந்த நேரிட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.

   “ஆ! ராகவன், உங்களால் ராஜபக்சவுக்குச் சல்லாரி அடிக்க முடியவில்லையே!
   அது உங்களைச் சில “மர்க்ஸிய” வறிஞர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.” என்று நான் சொன்னது, ராஜபக்சவுக்குச் சல்லாரி அடிப்பதற்கு வசதியாக மார்க்சிச முகமூடி அணியும் சிலர் போல நீங்கள் இல்லை என்பதைத்தான்.
   சல்லாரிக் கதை இங்கே வேறொருவரால் எழுப்பப்பட்டது.

 25. raamu இப்படி எழுதுகிறார்……
  //இன்றைய புதிய உலகஒழுங்கில் உருவாகிவரும் புதியவல்லரசுகளின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைதான் வன்னிபடுகொலை. இது சரியானமுறையில் நீதி கேடகப்படாதுவிட்டால் எமது பிராந்த்தியத்தில் உள்ள ஒடுக்கப்படுகின்ற பழங்குடிகளும், சிறு இனக்குழுக்களும் சாட்சியங்களின்றி அழித்தொழிக்கப்படுவார்கள். //
  யாரை யாரிடம் நீதிகேட்கச் சொல்கின்றீர்கள். நீதிகேள், நீதிகேள் என்றால் எங்கே?? எப்படி?? புரியாத சொற்களால் புரியாத மாதிரி எழுதிப் புத்திசாலிபட்டம் வாங்கிவிடுவது எளிது. ஆனால் புரிந்து கொண்டு செயலாற்றுவது எப்படி?/?

 26. மக்கள் போராட்டம் :
  உலகில் மக்கள் இருக்கும்வரை மக்கள் போராட்டம் இருக்கத்தான் போகிறது.இது பொது விதி. முரண்பாடு இல்லா மனிதம்,குடும்பம் , சமூகம்,இனம்,தேசம், உலகம் என்பன சமூக இயங்கியலை நிறுத்திவிடும்.

  பொதுவாக மக்கள் போராட்டம் மூலம் தான் எம் பிரட்சனைகட்கு தீர்வு காண்பது என்று சொல்ல எமக்கு மார்க்சிய வாதிகள் தேவை இல்லை.

  எம் முன் உள்ள வரிசைப்படுத்தப்பட்ட பிரட்சனைகட்கு எதற்கு முன்னுரிமை கொடுத்து எவ்வாறு தீர்ப்பது தான் நம் முன் உள்ள விவாதம்.

 27. விளங்காத மொழியில் வில்லங்கமாக விவகாரமாக விநோதமாக கதைக்கும் பண்பு நம் தமிழரிடம் மிக அபரிதமானது நானும் கூட அவ்வாறு சிலவேளைகளில் கதைபதுண்டு பின்னர் தவறை உணர்ந்து கொண்டு செயற்படுவதுண்டு ஜெயபாலன் நீங்கள் யாருடனும் முரண் பட வேண்டும் என்பதர்த்க்காக பதிலிறுக்க வேண்டாம். முள்ளிவாய்க்கால் கொடுமைக்கு நீதி கேட்பதை நையாண்டி பண்ணமுடியாது. நீங்கள் யாரிடம் நீதி கேட்கப் போகிறீர்கள் என்பதில், உங்கள் உள்ளிருக்கும் நக்கல் மிக கொடியது யாரிடமும் கேட்க முடியாது என்பதே உங்களின் நக்கலின் தொனி போல் உள்ளது. தயவு செய்து அது தான் உங்களின் தொனியானால் அதனை மாற்றுங்கள்.

 28. தமிழர்கள் இப்போது 3வகைப்படுவர் 1 சீலனக்காவில் வசிப்பவர்கள் இதில் வட்க்கு கிழக்கு தெற்கு மலையக்த்தமிழர் , கொலழும்புவில் வாழும் தமிழகத்தமிழர் இசுலாமியத்தமிழர் அனைவரும் உண்டு
  2புலம் பெயர்ந்த தமிழர் இவர்களில் புலி எத்ரிப்பு ஆதரவு உயிருக்கு பய் ந்து ஓடியவர்கள் அனைவரும் உண்டு
  3 தமிழ்னாட்டு தமிழர்கள் 10 கோடிக்கும் மேற்பட்ட தொகையினர் ஆனால் இ ந்தியக் குடிமக்கள்
  இங்குள்ள கட்டுரைகளுக்கும் பின்னூட்டங்க்களுக்கும் எமது நாட்டில் உள்ள வலைப் பூக்களில் உள்ள வாதங்களுக்கும் வேறூபாடு அதிகம் . உண்மையில் மூன்று வகை த்தமிழரும் 3 வேறு உலகத்தில் வசிப்பவர் போல் தோன்று கிறது
  நிங்க்ள் அனைவரும் புலிகளின் போர் முடிந்த்து விட்டது போல் எழுதுகிறீர்கள் ஆனால் தமிழ் நட்டில் உருத்திரகுமாரன் நாடு கடந்த ஈழ அரசு அமைப்பதற்கு தமிழ் நட்டில் ஆட்களை தேர்வு செய்து கொண்டிருப்ப்தாக எழுதிகிறார்கல் [காண்க கீற்று .காம்} வை கோ , சீமான் நெடுமாறன் ,அகியோர் தலவர் த்லமையில் ஈழ விடுதலைப் போர் நடந்தே தீரும் உயிருடுடன் வருவாரென்று தினமும் பேட்டி அளித்துக் கொண்டிருக் கிண்றனர் இன்றைய் செய்திதாள்களில் தஞ்சைஅருகே உயிர் நீர்த்த தமிழர்களுக்கு மாபெரும் நினவுச்சின்னம் திறக்கப் பட்டுள்ளது. இல்லாத புலிகள் இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்று வாதாடுகிறார்கள் புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீட்டிப்பு செஉதுவிட்டது. கவிதாயினி தாமரை கனடா அமெரிக்க சென்றுவிட்டு முள்ளி வாய்க்கலிலிரு ந்து எப்படியோ தப்பித்தவர்களை சந்த்திது விட்டார் அதுமட்டுமல்ல அவர்கள் மூலம் தலவர் உயிருடன் இருப்பதையும்கண்டு கொண்டார் தலவர் கையில் தமிழ் ஈழத்தை ஒப்படைக்க ப் போராட்டத்திற்கு தமிழக இளைஞர்களை அறைகூவி அழைகின்றார் நாங்கள் என்ன செய்யே வேண்டும் என்று எதிபார்க்க் கிறிர்கள்?

  1. /// நாங்கள் என்ன செய்யே வேண்டும் என்று எதிபார்க்க் கிறிர்கள்?///

   நீங்கள் இவ்வளவு நாளும் புலி புகழ் பாடிகள் தந்து விழுங்கிய மயக்க மருந்தின் வீரியத்தை படிப்படியாக
   குறைத்து சாப்பாடிற்கு பின் ஒன்றாக எடுத்து வர தெளிவு வரும்.

 29. உங்கள் பொழிப்புரையின் செம்மையை மறக்க முடியுமா! உங்களுக்கும் மறக்க இயலாத அனுபவமல்லவா.
  இங்கும் முயன்றுள்ளீர்கள். அந்த உச்சத்தை எட்ட இயலவில்லை.
  என்றாலும் உங்கள் பணி ஆரம், மேதகு chandran.raja பக்ஷணத்துக்கு.
  வாழ்த்துக்கள்

 30. 4. வகைத் தமிழர் பலநூறு வருடங்களுக்குமுன் ஆபிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களுக்குச் சென்று குடியேறியவர்கள்.
  5. வகைத் தமிழர் தமது பெயரை மாற்றிக்கொண்டு சிங்களவனாகவும், வெள்ளையனாகவும் வாழ முயல்பவர்கள்.
  இப்படியே தமிழரில் பல வகை.நீங்கள் முதலில் செய்யவேண்டியதெல்லாம் தமிழரை வகை பிரிக்காது ஒற்றுமையாக்க முயலுங்கள். உங்கள் எழுத்தால் செயலால்!

 31. தமிழர் நாம் செய வேண்டியது என்னும் துரோகிகளை ஆக்க வேண்டாம். அவர்களையும்  தீயாகிகள் ஆக்குவதே எம் இன விடுதலைக்கு வளி சமைக்கும். அனகமான  துரோகிகள் தமிழானாலையே உருவானான் என்பது ஈழத்தில்  நிதர்சனம் . நாம் நமக்காக புதிய நடை முறைக்கு  ஊடக எம் இன விடுதலையை வென்றெடுப்போம்

 32. Garammasala – நீங்கள் யதார்த்தமாக பல விடயங்களை சுட்டி காட்டுகிறீர்கள் எனவே பல விடயங்களை மற்றவர்களும் ஏற்று கொள்ளக் கூடியதாக உங்களால் எம்மக்களின் விடிவுக்கான தீர்வுக்குரிய பாதைகள் குறித்து சிறப்பான கலந்துரையாடல்களை இத்தளத்தில் கையாள முடியும், உங்களை போல் பலரையும் இதற்காக இத்தளத்தில் கருத்துக்களை பகிருமாறு வேண்டுகிறேன்.

 33. “ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சுப் பொறுப்பு: புலிகள் வலையமைப்பின் முக்கிய தகவல்களை பெற உதவினாராம்” –
  இலத்திரனியல் ஊடகமொன்றில் கடமையாற்றிய காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஸ்ரீ ரங்கா, அதனை வைத்து வெளிநாட்டு புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் அரசாங்கத்துக்கு உதவியளித்துள்ளார்.

  ஆக தமிழீழ விடுதலை போராட்டம் உண்மையாக போராட வெளிகிட்டவர்களை அரவணைத்து செல்லாது அவர்களை துரோகியாக கொன்றொழித்து, அந்நியப்படுத்தி அவமானப் படுத்தி தூர விலக்கி வைத்தது ஆனால் துரோகியை தலையில் தூக்கி வைத்து விளம்பரம் தேடியது. இது அனைவருக்கும் சமர்ப்பணம்.

Comments are closed.