புலம்பெயர் தமிழர்கள் மீது குறிவைக்கும் இலங்கை அரசு

இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எந்த இடத்திலும் சுதந்திரமாக வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் அனுதாப அடிப்படையில் புகலிடம் வழங்கி வருவதாக மக்கள் அறிந்து கொண்டால், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டு விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜீ.எல்.பீரிஸ் தமிழர்கள் பொருளாதார அகதிகள் எனப் பிரச்சாரம் செய்துவருவது  தெரிந்ததே.

One thought on “புலம்பெயர் தமிழர்கள் மீது குறிவைக்கும் இலங்கை அரசு”

  1. உடைந்து நொருங்கி இடிந்து கிடக்கும் வீடாய் இலங்கை இங் கே கோத்தாபாயாக்கள்தான் கும்மாளம் போடுகிறார்கள்.

Comments are closed.