புலம்பெயர்ந்த தேசிய கீதம் -சேனன்.

(மட்டை போட்டாலும் லோணை
மஜிக் பாங்கில் எடுத்தாலும்
மல்ட்டி மில்லியர் ஆகாமல்
என் கட்டை வேகாது தோழா)
பொட்டயாய் பிறந்த அம்மா பாவம்
ஒற்றைச் சுவர் கொண்ட
சொத்தை வீடொண்றில்
வெற்றுப் பேயனுக்கு பெத்தால்
பெத்தால், பெத்தால் – ஐயோ
எங்கள் பறட்டை நாய்க்குட்டி பெறவில்லை பிழையாய்
வற்றிப் போனதடா, சொத்து – அன்பு – மீண்டும் மீண்டும் சொத்து (மட்டை)
என்னை அனுப்ப காசு எங்கிருந்து பெற்றால்
பொண்னை அரித்தோ?
பொய்க்கு பூமி விற்றோ?
பிள்ளை வாளுக்கு பகலை விற்றோ?  (மட்டை)
நானிங்கு வந்து தோடு குத்தித் திரிந்து
எண்ணிப் பதினெட்டு வருசம் தொலைத்தேன்.
வாழ்வை விட்டுத் தள்ளி
தோழ்வி ஒத்துக் கொண்டு
தண்ணியடித்து தலை கெட்டுத் திரிய தலைவிதியா எனக்கு?
எங்கள் குருட்டு மாமா* எம்
வாழ்வை இருட்டாக்க விடலாமா?
உயிரை மயிராய் பிடுங்க விடலாமா? (மட்டை)
சோத்துப் பருக்கைக்கு சுத்தித்திரிந்த
புறாவுக்கும் இடமில்லை*
வெற்றுப் பணத்துக்கு வேலை செய்ய
விசாவுக்கும் இடமில்லை.
காற்றுண்டா வாழ?
தூக்குக் கயிற்றிலா தொங்க? (மட்டை)
மாதம் மூண்றைம்பது எடுத்து
பாதம் பாதம் முட்ட போறனை வாழும்
என் சக ஏழைகள்
கனவுண்டு வாழ
நல்ல பாட்டுண்டு நல்ல படமுண்டு என்காதீர்
பனம் மிஞ்சிய-இந்தியப் பணக்காரரின் கழிவில் என் முச்சுவிட
இடைவேளை தரவேண்டாம்.
அங்கு என் தோழனுக்கு அதுகூட இல்லை. (மட்டை)
ஐக்கிய ராச்சியத்தில் பத்திரிகை ஆசிரியர் நெஞ்சம்
இன்று முதலாளி வாழும் மஞ்சம்
மேர்டொக்* சொடக்குப் போட்டால்
படக்கென்று Sun* மேற்கே உதிக்கும்
விடாக் கண்டனாக Times* உம்
எங்கள் விதியோடு விளையாடும். (மட்டை)
மரியாதை மண் பரப்பி
கண்ணியம் சுற்றிக் கிடக்க இராணியாக நீர்
எலிசபத்தோ விக்டோரியாவோ?
அதுக்குப் பிறந்த குஞ்சோ?
வேட்டை மறுத்து கோட்டை புகுந்திற்றில்லை*.  (மட்டை)
அகதிகளை அரைத்து
அவர்தம் உயிர்களை வறுத்து
காலம் கரையவில்லை
சனங்கள் குத்தி உமக்கு நாம்
தூக்கு காவடி எடுக்கிறோம்.
இரத்த வறை ஏப்பம் விடும்
ஏசுக்களே பிதாக்களே
பொல்லாத ஐனாதிபதிகளுக்குப் பிறக்கும்
பிள்ளைகளே*
நீங்கள் உண்ணி உண்ணி இழுக்க
என் தோல் கீழுpருக்கும் நரம்புதான் வலிக்கும்
உரம் கொண்ட உள்ளம் ஒருநாள் சத்தியமாய் வெடிக்கும் -அந்த
சரித்திரத்தில் சந்திப்போம்  (மட்டை)
குறிப்புகள்
ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டு அமைச்சர் டேவிட் பிளாங்கட் கண்ணுக்கு நியாயங்கள் மட்டுமல்ல நல்ல கலர் கலரான சீனறிகளும் கூட தெரிவதில்லை.
துன்பாட்டுக்கு ஆர்ம் தாறத திண்டு கொண்டு நின்ற புறாக் கூட்டங்களை ட்ரவால்கர் ஸகாயரில் இருந்து கலைத்து விட்டார்கள். புறாக்களுக்கு தீனி போட தடை வேறு. புறா எச்சம் லண்டன் ராஐ பரம்பரை சிலைகளை அசிங்கப் படுத்துகிறதாம்.
மேர்டொக் பத்திரிகை உலகில் செய்து வரும் மன்னராட்சி கொடுமையானது. இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி ஸ்கை, மற்றும் பத்திரிகைகள் சன், டைம்ஸ்,; பாலியல் புத்தகங்கள் மட்டுமின்றி, நியுயோர்க் டைம்ஸ் முதலான பல முன்னனி அமெரிக்க பத்திரிகைகள் மற்றும் ஆஸதிரேலிய முண்னனி பத்திரிகைகள் எல்லாம் அவன் கைவசமே உள்ளது. இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் உட்பட பெரும் பெரும் அரசியல் தலைகள் எல்லாம் உம்மென்றால் இருந்து இம்மென்றால் எழுந்து சொல்வழி கேட்டு அடிபணிந்து கிடக்கிறார்கள்.
வேட்டையாடும் உரிமைக்காக தவியாய் தவிக்கிறது அரச பரம்பரை. புhராளுமண்றம் வேட்டையாடுதலை தடைசெய்ய முயற்சியெடுத்த பொழுது நான் இனி வேறு நாட்டில் போய் வாழப் போகிறேன் என்று இளவரசர் சார்ள்ஸ் குத்தலாக அறிக்கை விட்டது ஞாபகமிருக்குமே.
முன்னால் அமெரிக்க ஐனாதிபதி புஸ்சின் மகன் புஸ் வரலாற்றின் எந்த சர்வாதிகாரிக்கும் குறைந்தவனில்லை.