புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஜன‍‍நாயகம் ஏற்பட வேண்டும் என்பதில் மிகுந்த‌ அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயற்பட்டவர்களில் மனோமாஸ்டர், அழகன், நந்தன், மாத்தையா,சுந்தரம் ஆகியோரைக் கோடிட்டுக் காட்டலாம் . இவர்கள் புலிகளின் உள்ளே ஜனனாயக வெளி ஒன்றை ஏற்படுத்துவதே முதலாவதும் முக்கியமானதுமான தேவை என்பதைக் குறித்துக் காட்டியவர்கள். மனோமாஸ்டர் ஓரளவு தெளிவான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஏனைய உறுப்பினர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதிலும், ஆர்வத்தை உருவாகுவதிலும் இவரின் பங்கு அளப்பரியயதாக அமைந்திருந்தது. மனோமாஸ்டர், புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பதாகவே இடதுசாரி அரசியலுடன் பரீட்சயமானவர் .

தனி நபர் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் மாற்றாக குறைந்தபட்ச அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைப்பதே போராட்டத்தின் வெற்றிக்கான திசை என்பதை உறுதியாக முன்வைத்தார்.

மனோமாஸ்ரரின் கருத்துக்களோடு பொதுவாக மாத்தையா உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். வறிய குடும்பத்திலிருந்து புலிகளில் இணைந்துகொண்ட மகேந்திரராஜா என்ற மாத்தையா இந்தக் காலப்பகுதியில் மிகுந்த தேடல் ஆர்வம் மிக்கவராகக் குறிப்பிடத்தக்கவர்.

மனோமாஸ்டருக்கும் நந்தனுக்கும் இடையே அடிக்கடி விவாதங்கள், கருத்து மோதல்கள் ஏற்படுவது வழமை. தெரிவு செய்கின்ற அரசியல் வழிமுறை குறித்தே அந்த முரண்கள் அமைந்திருக்கும்.

மனோ மாஸ்டர் ரொஸ்கியக் கருத்துக்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்தார். அகில இலங்கைப் புரட்சியின் ஒருபகுதியாகவே தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மனோமாஸ்டரின் பிரதான கருத்தாக அமைந்திருந்தது.

நந்தனைப் பொறுத்தவரை தமிழீழத்திற்கான புதிய ஜனநாயகப் புரட்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தார். இவ்வகையிலேயே இருவருக்கும் இடையேயான விவாதம் அமைந்திருக்கும்.
நந்தன், மனோமாஸ்டர் ஆகியோரிடையேயான முரண்பாடென்பது பல தடவைகள் தீவிர விவாதப் போராக முடிவதுண்டு.

உள் முரண்பாடுகளிடையே மனோமாஸ்டர், மாத்தையா, குமணன் போன்றோர் இயக்க வேலைகளில் அர்ப்பண உணர்வுடனேயே ஈடுபட்டுவந்தனர். நந்தன் ஆரம்பத்திலிருந்தே பண்ணை நடைமுறைகளிலும், இயக்கத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபாடற்றவராகவே காணப்பட்டார்.

எண்பதுகளின் பின்னர் தமிழீழ தேசிய விடுத்லை முன்னணியில்(NLFT) இணைந்து செயற்பட்ட நந்தன், அம்முன்னணியின் செயலாளராகவிருந்த விசுவானந்ததேவனின் பிரிவிற்குப் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.

இவ்வேளையில் பிரபாகரனை வெளியேற்றுவதே இயக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரே வழி என்பதையும், பிரபாகரன் அற்ற புலிகளை உருவாக்குவதே நோக்கம் என்பதையும் சுந்தரம் பிரச்சாரப்படுத்தினார். சுந்தரத்தின் இந்தக் கருத்தோடு நந்தன் மிகுந்த உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். பிரபாகரன் என்ற தனிநபரை முதன்மைப்படுத்திய அரசியலில் சுந்தரமும் நந்தனும் இணைந்து கொண்டனர்.

நான் முன்வைத்த “மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டும்” என்ற கருத்தோடு மனோமாஸ்டர் முழுமையாக ஒத்துழைத்தது மட்டுமன்றி நூல்களை வாசித்து தர்க்கரீதியான முடிபிற்கு வருவதற்கு ஏனைய போராளிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அன்றிருந்த சமூகப் புறச்சூழலில், பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக மட்டுமே புலிகள் என்ற அமைப்பை நோக்கி இணைந்திருந்தோம்.
இந்நிலையில், அழிவுகளை ஏற்படுத்த வல்ல தூய இராணுவ வழிமுறைக்கு மாற்றாக புதிய சிந்தனைப் போக்கு இயக்கத்தில் உருவாகியிருந்தது. நாம் வரித்துக்கொண்ட நோக்கத்தின் வெற்றிக்கான திசை என்பது குறித்தே எம் அனைவரினதும் கவனம் குவிந்திருந்தது.

பலரின் அர்ப்பணங்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் உருவாகிக்கொண்டிருந்த எமது இயக்கத்தை தவறான வழி முறைகளூடான அழிவுப் பாதையிலிருந்து மீட்ட்டெடுப்பதே எமது அனைவரதும் நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்பதை விட புலிகளின் தலைமையை மாற்றியமைத்தால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வை எட்டலாம என்பது சுந்தரத்தின் கருத்தாக அமைந்திருந்தது. அவரோடு நந்தன் போன்ற பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கில் அதிர்ப்தியடைந்திருந்த பலரும் உடன்பட்டிருந்தனர்.

என்னைப் பொறுத்த வரையில் நாம் பயணிக்கும் திசை தவறானது என்ற முடிபிற்கு வந்த பின்னர், புதிய அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன். பிரபாகரன் ஈறான அனைவரையும் புதிய அரசியல் வழிமுறைக்குள் இணைத்துக் கொள்வதனூடாக முன் நோக்கிச் செல்லலாம் என்ற கருத்தை இயக்க உறுப்பினர்கள் மத்தியில் முன்வைக்கிறேன்.

அவ்வாறான குறித்த வழிமுறை என்பது மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே ஆரம்பிக்கப்படலாம் என்ற கருத்தையும் முன்மொழிகிறேன்.

பதினேழு வயதில் போராட்டத்திற்காக அனைத்தையும் துறந்த போராளியான பிரபாகரன் அன்றிலிருந்து எந்த முற்போக்கு அரசியல் அணியாலும் அணுகப்படவில்லை. அப்போதிருந்த தூய இராணுவம் சார்ந்த சிந்தனை வட்டத்தினுள்ளேயே பிரபாகரன் முழுமையாக அமிழ்ந்து போயிருந்தார்.

தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அரசியல் ஆளுமைக்குள்ளேயே நாங்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரானவர்கள் எம்மளவில் துரோகிகளாகவே கருதப்பட்டனர். அவர்களின் பாராளுமன்ற அரசியலின் வன்முறை வடிவமாகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருந்தோம். கூட்டணியின் நேரடியான அரசியல் கட்டுப்பாடு இல்லாதிருந்தாலும் எமது சிந்தனைப் போக்கு அவ்வாறுதான் அமைந்திருந்தது.

பாரம்பரிய இடதுசாரிகள் என்று கூறிக்கொண்ட எவருமே எம்மை அணுகியதோ, நியாயமான போராட்டத்தை சரியான திசைவழி நோக்கி நகர்த்த வேண்டும் என்று எண்ணியதோ கிடையாது. தேசியப் போராட்டம் என்பது அவர்கள் மத்தியில் ‘தீண்டத்தகாத’ ஒன்றாகவே அமைந்திருந்தது.

மார்க்சிய நூல்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே நியாயமான வழிமுறைகள் குறித்த ஆரம்ப அறிவைப் பெற்றுக்கொண்டோம். ஒரு அரசியல் இயக்கத்தை வழி நடத்தும் தத்துவார்த்தக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சிந்தித்தது கிடையாது. கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் அரசியல் வழிமுறைகள் குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே பிரதான நோக்கங்களாகக் கொண்டிருந்தோம்.

நாம் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்கின்ற சிறிய அணியாக உருவாகியிருந்தோம்.

என்றுமில்லாதவாறு, குமரப்பா, மாத்தையா, ராகவன் சாந்தன், சுந்தரம், குமணன் போன்ற இன்னும் பல போராளிகள் அரசியல் தேடல்களிலும் விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பண்ணைகளில் தற்செயலாக சந்தித்த, சிந்திக்கத் தொடங்கிவிட்ட பலர் மார்க்சிய நூல்களும் கையுமாகத் தான் காணப்பட்டனர். அது ஒரு அலையாக ஆரம்பித்து இயக்கத்தின் குறித்த மட்டத்தில் வியாபித்திருந்தது. மக்கள் போராட்டம், ஜனனாயகம், மத்தியத்துவம், உட்கச்சிப் போராட்டம் என்று பல்வேறு தளங்களிலும் பரந்த அறிவுத் தேடலில் கணிக்கத்தக்க அளவானோர் ஈடுபட்டோம்.

எல்லாமே ஒரு சில மாத இடைவெளிக்குள் நடந்தவை தான். அரசியல் திட்டம் போன்றவற்றை முன்வைப்பதற்கு எம்மிடம் போதிய தெளிவு இருந்திருக்கவில்லை.

இவ்வேளைகளில் ஒரு இடதுசாரிக் கட்சியின் பின்பலம் இருந்திருக்குமானால், அவர்கள் எம்மை அணுகியிருப்பார்களானால் இன்று தெற்காசியாவின் தென்மூலையில் நிகழ்ந்த வெற்றிபெற்ற போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருப்போம்.

சுந்தரம் போன்றோர் முவைத்த தலைமைத்துவம் குறித்த முரண்பாடும், அரசியலை விட பிரபாகரன் என்ற தனி நபரின் நடவடிக்கைகள் குறித்த முதன்மைப்படுத்தலும் பல போராளிகளைக் கவர்ந்திருந்தது.

இப்போது முன்று வேறுபட்ட போக்குகள் உருவாகியிருந்தன.

1. சுந்தரம் சார்ந்தோர் முன்வைத்த கருத்தைக்கொண்ட பிரபாகரனுக்கு எதிரான குழுவினர்.

2. மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்று நான் முன்வைத்த கருத்து.

3. பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய உறுபினர்கள் பலரைக் கொண்ட குழு.

மனோமாஸ்டர், மாத்தையா, குமரப்பா போன்ற பலர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்தாலும், மக்கள் வேலைகளை முன்னெடுப்பதிலிருந்தே புலிகளில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தையே முன்வைத்தனர். இவை குறித்து பிரபாகரன் இலங்கைக்கு வருவதற்கு முன்பதாக நாம் விவாதிக்கிறோம்.

இறுதியாக நான் ஒரு சமரச முன்மொழிவை முன்வைக்கிறேன்.

1. இப்போதுள்ள மத்திய குழுவிற்குப் பதிலாக செயற்குழு ஒன்றைத் தெரிவு செய்தல்
(செயற்குழுவில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் அரச படைகளால் தேடப்படாத வெளிப்படையான மக்கள் வேலைகளை முன்னெடுக்கும் தகமையுடையவர்களாக அமைய வேண்டும் என்று கோரப்பட்டது.)

2. மக்களமைப்புக்களை உருவாக்கும் வேலைமுறைகளை ஆரம்பித்தல்.

3. அரசியல் தத்துவார்த்தப் பத்திரிகை ஒன்றை வெளியிடுதல்.

4. அப்பத்திரிகைக்கான பெயர் ஒன்றைத் தெரிவுசெய்தல்.

5. தனிநபர் படுகொலைகளையும் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளையும் மக்கள் அமைப்புப் பலம் பெறும் வரையில் தற்காலிகமாக நிறுத்திவைத்தல்.

6. பொலீசாரால் தேடப்படுகின்ற அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சிய கல்விகளில் ஈடுபடுதலும் முற்போக்கு அமைப்புகளோடு தொடர்புகளைப் பேணிகொள்ளலும் .

இந்த முன்மொழிவு எமது இயக்கத்திலிருந்த மூன்று வேறுபட்ட போக்குகளுக்கு இடையேயான சமரசமாகவும் அமைந்திருந்தது.

இங்கு பற்குணம், மைக்கல் கொலைகள் குறித்த விவாதங்களையும், பிரபாகரன் என்ற தனி நபர் குறித்த பிரச்சனைகளையும் இரண்டாவது பட்சமானதாகவும் மேற்குறித்த ஆறு அம்சங்களையும் முதன்மையானதாகவும் கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது உறுப்பினர்களை நோக்கிய எனது கோரிக்கையாக அமைந்தது.

சுந்தரம் முதலில் இதற்கு உடன்படவில்லை. தலைமையை மாற்ற வேண்டும் என்பதே பிரதானமானது என வாதிக்கிறார். பெரும்பாலானவர்கள் எனது திட்டத்தை ஏற்றுக்கொள்ள சுந்தரமும் அவர் சார்ந்த கருத்தை உடையவர்களும் தவிர்க்கவியலாதவாறு திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

இதே வேளை உமாமகேஸ்வரன் குறித்த பிரச்சனைகளுக்குப் பின்னர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்குகள் அதிகரிக்கின்றன. பிரபகரன் யாரையும் நம்புவதில்லை. தனது கட்டுப்பாடுகளை உறுப்பினர்களை நோக்கி இறுக்கப்படுத்துகிறார். அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேலுடன் லண்டன் திரும்பிச் சென்றுவிடுகிறார். பிரபாகரனுடன் தங்கியிருந்த ரவி பாலா போன்றோர் அவரது சர்வாதிகாரப் போக்கால் அதிர்ப்தி அடைகின்றனர். தலைமைக்கு எதிராகக் கேள்வி கேட்கக் கூடாது என ரவி சில தடவைகள் தம்பியால் எச்சரிக்கப்படுகிறார்.

இவ்வேளையில் தான் பிரபாகரன் எனது கடித்தை ஏற்று நாடு திரும்புகிறார். வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும் அழைத்துக்கொண்டு வருகிறார். கிட்டுவோடு வந்திறங்கிய பிரபாகரனைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். கிட்டுவை தண்டனை வழங்கி வீட்டிற்கு நான் அனுப்பி வைத்த விடயத்தைக் கூறுகிறேன். அது குறித்து இப்போதைக்குப் பேச வேண்டாம் என்றும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவோம் என்றும் பிரபாகரன் சொல்கிறார்.

நான் இயக்கத்தில் உருவான பிரச்சனைகள், எனது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஏனைய போராளிகளின் உணர்வலைகள் ஆகியவற்றைக் குறித்து விபரிக்கிறேன். பிரபாகரனை நூல்களை வாசித்துத் தர்க்கரீதியாகச் சிந்திக்குமாறு கோருகிறேன். நாங்கள் வரித்துக்கொண்ட வழிமுறை தவறானது நீண்டகால நோக்கில் அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பது பற்றியும் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறேன். இறுதியாக எனது முன்மொழிவுகளையும் விபரிக்கிறேன். பிரபாகரன் எதுவும் பேசவில்லை. ஆனால் மறுக்கவும் இல்லை.

இந்த உரையாடல்கள் நடைபெற்ற குமணன் வீட்டில் எங்களோடு ராகவனும் இருந்தார்.

புத்தகங்களை வாசிப்பதும் அரசியல் பிரச்சனைகள் குறித்த அறிவுத்தேடல் அவசியமானதாகவும் காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில் நாம் மார்க்சிய நூல்களை வாசிப்பது வழமை. நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ராகவன் ஒரு மார்க்சிய நூலை வாசித்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் திடீரென எழுந்து அந்தப் புத்தகத்தை ராகவனின் கைகளிலிருந்து பறித்து தூரே வீசிவிட்டு “இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆயுதங்களைக் களட்டிப் பூட்டக் கற்றுக்கொள்ளுங்கள் ” என்று சொல்கிறார்.

இன்னும் வரும்..

பாகம் 17,பகுதி பதினாறைப் படிக்க., பாகம் பதினைந்தைப் படிக்க.., பாகம் பதின்நான்கை வாசிக்க.. , பாகம் பதின்மூன்றை வாசிக்க..  பாகம் பன்னிரண்டை வாசிக்க.. பாகம் பதினொன்றை வாசிக்க.. பாகம் பத்தை  வாசிக்க.. பாகம்  ஒன்பதை வாசிக்க.. பாகம் எட்டை வாசிக்க.. பாகம்  ஏழை வாசிக்க.. பகுதி  ஆறை  வாசிக்க… பகுதி ஐந்தை  வாசிக்க… பகுதி நான்கை வாசிக்க.. பகுதி மூன்றை வாசிக்க.. பகுதி இரண்டை வாசிக்க..  பகுதி ஒன்றை வாசிக்க..

104 thoughts on “புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்”

 1. அய்யர் பத்த வைச்சிட்டார் எல்லாரும் கொள்ளி கொண்டு வாங்கோ. பிரபாகரன் புத்தகங்க
  ளுக்கு எதிரி எண்டு சொல்லப்போறார்…

  1. பிரபாகரன் புத்தகங்களுக்கு எதிரி இல்லை ..அதை படிகிரவனுகளுக்குதான். கற்பூர வாசனையும் பிட்டிகாதாம்.

 2. ஐயர் அவர்களே உங்களுடைய 17 வது தொடரில் ஊர்மிளாவின் இறப்பு சம்பந்தமாக நீங்கள் எழுதியதில் சந்தேகம் உள்ளது. சாதாரணமாக ஒரு இளைஞர் கூட புலி இயக்கத்தில் இணைய பயந்திருந்த அக்காலத்தில் கொழும்பில் உத்தியோகம் பார்த்து வந்த ஊர்மிளா துணிச்சலுடன் புலி இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட முதலாவது பெண் போராளியாவார்.
  புலி இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முதல் முறையாக உரிமை கோரி வெளியிட்ட துண்டு பிரசுரத்தை தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்து வெளியிட்ட உதவியது ஊர்மிளாவின் பங்களிப்பு குறிப்பிடதக்கது.
  இலங்கை பொலீசாரால் ஊர்மிளா தேடப்பட்ட போது உங்களுடன் தோணியேறி இந்தியாவுக்கு சென்ற முதல் பெண் போராளியும் அவரே. அவவுடைய மரணத்தை சர்வசாதாரணமாக எழுதியதுடன் மரணத்தில் வேறுபட்ட கருத்துக்களும் நிலவியதாகவும் எழுதியுள்ளீர்கள்.
  83 களில் ஜரோப்பிய நாடு ஒன்றில் சோட் பாலாவை சந்தித்து உரையாடிவர்களில் நானும் ஓருவன் என்ற வகையில் இதை எழுதுகிறேன் புலி இயக்கத்தின் ஆரம்பகட்ட செயற்பாடுகளை பற்றி அவருடன் கலந்துரையாடலின் போது பிரபாகரனை இணுவில் சந்தியில் வைத்து இன்ஸ்பெக்டர் சண்முகதாசனால் கட்டிப்பிடித்து இழுத்து செல்ல முற்பட்ட போது தான் சண்முகநாதனை சுட்டு எப்படி பிரபாகரனை காப்பாற்றியது உட்பட ஊர்மிளாவின் இறப்பைபற்றி கூறியபோது ஊர்மிளா கடும் சுகயீனமுற்றிருந்த போது அவவுக்கு எந்தவித மருந்துவ உதவியும் செய்யவிடாமல் பிரபாகரனால் தடுக்கப்பட்டதால் தான் ஊர்மிளா இறக்க நேர்ந்ததாகவும் கூறியிருந்தார் இவ்விடயம் உங்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை இதைப்பற்றிய உண்மையை எழுதுவீர்கள் என எதிர்பார்கிறோம்.

  வசந்தன்

 3. Hello Friends! if you let this Iyar keep on wrting this kind of story, even the rest of the image of Prabhakaran could be damaged.. I wish to tell one thing very clearly. once you become the leader of such a rebels groups, then you cannot allow everyone to talk at all the time. And also those who discuss like this in the absence of their leader are more dangerous than the enemy.while all these kind of people ,( secret enemies),planning to put him our of the leadership, they could have planned even to kill him.In such a situation,, Prabhakaran was living a long time not a easy matter. Noone cannot take this war for such a long time without brain, talent, brave, courage, knowledge,vigilance etc. Noone can leade this war for a long time, other than the great leader. The Chainese great leader Mr. Mao tase Tunge said. ” THERE IS NO CONSTRUCTION WITHOUT DESTRUCTION” Now Prabhakaran has done the D part. You , people, has to start the C part. Oh guys don’t get mad with me . This is my just opinion.

  1. Velavan
   Why are you running scared of facts?
   If Iyer is not telling the truth challenge him. Every falsehood should be contested and corrected.
   But do not try to silence people.
   We cannot pretend that everything was OK. Many things were wrong. They have to be brought to light to avoid old mistakes. Do we want the likes of Rudrakumaran or Nediyavan to mislead the Tamils? I think not.
   Iyer gives only one dimension. His interpretations are questionable in places. But reporting of events seems factual.
   There is no destruction of any sort here. It is a process of clearing the dust and dirt and cobwebs that covered over records.

   1. மசாலை
    உங்களில் எத்தனை பேர் உருத்திரகுமாரனையும் நெடியவனையும் ஏற்பதும் ஏற்காமல் விடுவதும். உலகம் ஏற்றுக்கொண்டு விட்டது உருத்திரகுமாரன் தான் நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவர் என்பதையும் தமிழீழ மக்களின் தலைவன் என்பதையும். உங்களைப்போல் ஆக்களுக்கு வேற முடிவே கிடையாது. சத்தம் போடாமல் இருக்கமுடியாதென்றால், நிலவைப்பார்த்து நாய் செய்த வேலையைச் செய்யலாம்.

    1. உருத்திரகுமாரனும்நெடியவனும் ஓர் அணியில் இல்லை அது தெரியுமா உமக்கு.?

  2. அய்யர் எழுதுவ்தை ஈழ்த்தமிழர் வாழும் உலகின் புலம்பெயர்நாடுகளின் எல்லா மொழ்களிலும்
   மொழிபெயர்த்து வெளியிட்வேண்டும். இதுவே ஈழ்த்தமிழினம்மீண்டுமோர் அழிவினை சந்திக்காம்ல்
   இருக்க வ்ழி காட்டும்.

   துரை

   1. முதலில் தமிழை எழுதப் படிக்கப் பழகும். பின்னர் மொழிபெயர்ப்புப் பற்றி பேசலாம்.

    1. Please be kind, Tamil? Well, people lived during those black era( last 25 years) can not learn any thing as previous people like you ( age concern), you know the factor.
     Therefore we / you, so called intellectual people need to incarnate them from those era. Can you see your past and just present, how many people know about world, politics( past and present) , our true history, balabalaba., how many people are willing to read? …so on so on … , obtaining Degree is not included in these social study.

     Please use soft word to teach to our young generation, tell them the truth ,,, we learned only the had full of it there are lots to learn where sea full of it .

     Thank you and hope you have my message.

     1. மனிதா,

      முதலில் தமிழில் படிக்கப் பழகும். எழுதவேண்டியதை தமிழில் எழுதும். உமக்குத்தெரிந்த எத்தனை தமிழ் குழந்தைகள் தமிழில் கதைக்கிறார்கள். படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். எம் இனத்துக்காக பாடுபட்டவர்கள் எதிரிக்கு துவக்கையும் நம்மினத்துக்கு இரக்கத்தையும் காட்டினார்கள். இப்போ என்ன நடந்தது?

  3. I do not have personal knowledge over what ever so far happened. One thing I would like to point out is, if a strategy is planned well, the result will also match. In Prabhakaran’s case, if any one sees chronologically, the results have lead to only destruction including the climax. From these, any one can infer, the approach should have changed long time back. Highly unfortunate, the approach went unchecked and it was continued. The result oh oh oh tremendous loss. This should serve as a lesson to the available tamils and as a lesson to the entire world who prefer unplanned, objectiveless goals. God save tamils. Of course, God only grants every ones wish. So it is for us to wish properly.

 4. Hello Mr. Garammasala That is why , I have already mentioned in it that it is my just an opinion but not a comment or statement. If it is my statement , there shouldn’t be any mistake. if it is a comment,still there could be some mistake because the comments are always coming from the view of the articles. The opinion is just an ideas of the moments. And it may change the next moment. Now let’s see what our friends wrting about. Good luck

  1. Mr Velavan
   If something is your opinion, be it so.
   Others have as much right to give their opinions about the impressions that your opinions create.
   You seem to try hard to avoid somethings being discussed.
   The more you try the less you succeed

 5. Velavan,

  what the heck you and your alikes have to show after years and years of killing someone becuase they have a different opinion than you. The only justification was that ‘we are fighting for a pure goal, and so have to kill anyone who crosses us’.

  Thalaivar, basically surrendered man, with both his hands up! For all the bravo talk he and his followers put out, the man begged for mercy, shaming all the brave boys and girls who fought for tamil eelam.
  Dont talk about the coward fool Piraba!

 6. அட்றா சக்கை… அட்றா சக்கை… ஐயர் இவ்வளவு காலம் எங்கிருந்தார்? இதே மாதிரி பிரபாகரன் உயிரோடு இருக்கேக்கை ஏன் எழுதேலை? .கண்கெட்டபிறகு சூரிய நமஸ்கரம் எதற்கு? அல்லது சுடலை ஞானமா? பிரபாகரன் இருக்கும்வரை வாலை (வால் இல்லாதவர்கள் முன்னாள் உள்ளதை) சுருட்டிவைத்துக்கொண்டவர்கள் பிரபாகரன் செத்தவுடன நிமித்தினம்! சர்வேசா……

  1. புலிகளை குற்ரம் சொன்ன்வர்கலெல்லாம் மேலோகத்திலேயே வாழ்கின்றன்ர். பூலோகத்தில்
   அய்யர்
   இருப்பதே தமிழர் செய்த புண்ணியம். துரை

  2. என்ன செய்வது. பிரபாகரன் அண்டையைப் போட்டபிறகுதான் தமிழர்களுக்கு பேச்சுச்சுதச்திரம் துளிர் விடத்துடங்குகின்றது. பேச முடிந்தால் பேசும் அதைவிடுத்து…….

 7. ஐயர் முன்னரே எழுதியிருக்க முடியாது இதுதான் வரலாற்றுநியதி.

 8. ஐயா, திரு பிரபாகரன் தமிழினத்தின் மொத்தக் கோபத்தின் முழுவடிவமாக இருந்திருக்கிறார் என்பதே உங்கள் எழுத்துக்களையும் வரலாற்றைத்திரும்பிப் பார்க்கும் போதும் தெரிகிறது. அவரைப் புரிந்து கொண்டவர்கள் அவருடன் தொடர்ந்து பயணித்திருக்கிறார்கள். அவரை உருவாக்கியது சிங்கள இனவாதம் அதனால் உருவான தமிழின வாதம். இன ஒடுக்குமுறை தமிழினத்திற்கு ஏற்படுத்திய அவமானம். அதனைவிட ஆயிரம் மடங்கு அவமானத்தை முள்ளிவாய்க்காலில் ஏற்படுத்தியுள்ளார்கள். அதன் பின் விளைவுகளை சாதாரண அளவுகோல்களால் அளவிட முயல்வது தவறு. எமது போராட்டம் நிரந்தரமாக தோற்றுப் போயிருக்கும். ஆனால் அது நடக்காமல் இடைவெளியில் தமிழர் வாழ்வில் பல நிகழ்ந்துள்ளன. உதாராணத்திற்கு நீங்கள் இந்த வரலாற்றை எழுதுவது போன்று. நாம் யாரும் பூரணமானவர்கள் அல்ல. சராசரி மனிதர்களில் இருந்துதானே விடுதலைப் போராளிகளும் உருவாகிறார்கள். ஒரு உண்மை என்னவெனில் இதுவரை காலமும் புலிகளுக்கு மாற்றீடாக ஏன் எமது மண்ணில் ஒரு விடுதலை அமைப்பு உருவாகவில்லை. சரியோ தவறோ பிரபாகரன் உறுதியான மனிதராக இருந்திருக்கிறார். அவர் போன்று உறுதியுடன் இதுவரை யாரும் இருக்கவில்லை.

  1. உருவாக்க விட்டார்களா?
   துப்பாக்கிகளும் விளக்குக் கம்பங்களுமல்லவா பேசின.
   இன்னமும் பிழைகளை நியாயப்படுத்திக் கொண்டே போனால் உருப்பட்டாற் போலத்தான்.

   1. புலிகளை எதிர்க்க முடியதாவிடத்து எப்படி பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது. துப்பாக்கிகளால் எல்லோரும் தான் பேசினார்கள். உருப்படவேண்டுமென்பதுதான் எனது விருப்பமும். நீங்களோ நானோ இனி எதையும் தீர்மானிக்கப்போவதில்லை. இனி வரும் காலம் எல்லாப் பதில்களையும் சொல்லும். மக்கள் சொல்வார்கள்.

    1. Soorya, “ஆயுதம் துக்காமல் அரசியல் செய்த பல இயக்கங்கள் எப்படி புலிகளிடமிருந்து தப்பிப் பிளைத்தன?” என்கிறீர்களே?
     ஒருவராலும் விடுதலைப் புலிகளை மறுத்து வடக்கில் அரசியற் கட்சியாக இயங்க முடியவில்லை. ஏன்?

     (போக, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயுதம் ஏந்திய கட்சியா?) கொலைப் பட்டியலை வாசிக்க வேண்டுமா?

     1. ஆயுதம் ஏந்தாத தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளும் கொலைகளை நியாப்படுதியவர்களும் இருந்தார்கள்.

      “ஒருவராலும் விடுதலைப் புலிகளை மறுத்து வடக்கில் அரசியற் கட்சியாக இயங்க முடியவில்லை. ஏன்?” இதுதான் எனது கேள்வியும்! என்ன அரசியல் அவர்கள் செயதார்கள்? இல்லை சேவைதானும் செயதார்களா?

   2. தமிழரின் விடுதலையை உண்மையில் நேசித்தவர்களையுமா புலிகள் போட்டுத்தள்ளினார்கள்? இல்லை விடுதலையென்ற பெயரில் மக்களைக் ஏமாற்றி் கொள்ளையடிதவர்களையா? ஆயுதம் துக்காமல் அரசியல் செய்த பல இயக்கங்கள் எப்படி புலிகளிடமிருந்து தப்பிப் பிளைத்தன?

  2. எவையெல்லாம் முன்பு தடைகளாக இருந்தனவோ அவையெல்லாமே கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக மக்கள் முன் அம்பலமாகி வந்திருக்கின்றன, சில தம்மையே அழித்துத் தமிழரில் கணிசமானோரையும் அழித்துக் கொண்டன.

   உங்களால் முடியாவிட்டால் ஒதுங்கிக் கொள்ளலாம். எனக்கு ஒரு மறுப்புமில்லை.
   கடந்தகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கவும் முடியாது என்றும் பிரபாகரன் வழிபாட்டால் எதுவும் ஆகப் போவதில்லை என்றும் சிலருக்கு விளங்கப் போவதுமில்லை.

   மக்கள் நிச்சயம் சொல்லத்தான் போகிறர்கள்.

   1. மக்களை அழிய விடாமல் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்வீர்களா. அல்லது நீங்களும் சேர்ந்துதான் அழித்தீர்களா. உங்கள் எழுத்துக்களில் மக்களின் அழிவு குறித்து கவலை தெரியவில்லை. புலிகளின் தோல்வி குறித்த மகிழ்ச்சிதான் தெரிகிறது. நாம் எமது மக்களை நேசிக்கிறோம் அதனால்தான் புலிகளின் தவறுகளுக்கு மேலால் புலிகளை ஆதரிக்கிறோம். எமது மக்கள் வாழவேண்டும் அதற்காக நாம் எதுவும் செய்வோம். எமது மக்களின் மரணத்தை ரசிப்பவர்களை ஆழமாக வெறுக்கிறோம்.

 9. Mr. Raj Look at those great leaders in the past. They also faced the same story in their life. Adolf Hitler commited sudcide at the end. Musolini was hanged to death by his enemy. Gandhi was shot dead by Koche. Nepolieon was killed without giving even a cup of water to drink. Idi Amin died in Saudy Arabia like a an orphan.Pot Pol died on a wooden bed like a begger.John Kennedy was shot dead on the public road in front of his all these people. .S.W.R.D.Pandaranayake was shot by his wife’s boy friend. Shangiliyan was hanged to death by christian fundamentalists in Kerala. And so on. you name it , everyone had faced amost the same end.So, it is not a shamful to say Prbhakaran’s story to anyone. Otherwise the world will not carry his even death’s news in their local language news paper for their people to read. There is no doubt that he is brave, smart, courage, vigilance,talent. even handsome.and he had all kind of talents , a leader has to have in his life.But we the people were around him , were not fit to have him as a leader. If we have the courage to stand by him to lead the war, he would have captured the entire country by this time. When the army killed over hundred and twenty thousands Sinhalese boys and girls ,the Sinhalese people didn’t run away from the counrty, not only that they didn’t hate their leader “Rohana Vijeyaweera” either. And then again, R.Premadasa killed over sixty five thousans young sinhalese boys and girls and their leader Rohana Vijeyaweera , still they support the JVP. They don’t abuse their leader like this. History is based mostly on war. Right after the 1983 communal riots, 75% of the colombo white colour job tamils were in the queue in front of the high commission of all the western countries. None of them ever never thought of their people or this country. Why, even your political leaders were there to send their sons and daugthers. At the age of seventeen , someone has thought of all these things. He,Prabhakara, had to drag this war with so many millions of unspeakable problems. Unless, he killed everyone who is not fit to be alive at this time, he couldn’t have take this war for thiry years. Who will listern to someone in this world, if they have no fear.He sacrified everything for what he dreamt. Pl don’t critizise such a great leadr. Because of him, at least, we a history to read and for our next coming generation to be proud of the past. I wish to write a lot but here it is not a place for all my writing because it is space just given us to write our short comments.

  1. Mr Velavan, do not utter irresponsible falsehoods like “S.W.R.D.Pandaranayake was shot by his wife’s boy friend.”
   It is this kind of muck raking that has helped to justify every manner of crime by the forces of evil.
   You also justify a number of foul murders in your comment.
   Don’t run away with excuses like”It is only an opinion”.
   It is evil to make offensive statements that cannot be substantiated.

 10. ***திண்ணையில் இருந்தபடி சிவப்பு மட்டை கிழித்தீர்களோ!

  உறுப்பினர்களுக்கு படியளந்தபடி,நரோட்னிக்குகள் பற்றி பறைஞ்சு திரிஞ்சீகளோ!

  சீனக் கம்யுனிச சுந்தர’ ஊடுருவல்,மனோ மாஸ்டரின் அகில’ அழகும்,நந்தனின் படித்த சிகப்பு மட்டைகளின் பக்க எண்களும், அரசியல் ஞானமாய்’ எப்படி அய்யா உங்களுக்கு விளங்கியது?

  முள்ளிவாய்க்காலின் பின் மூலைக்கு மூலை முகிழ்த்த விமர்சகர்களாக,முப்பது வருஷங்களின் முன்னும் இருந்தார்கள்.இவர்களுக்கு இயக்கம் என்பதின் பரிணாம வளர்ச்சி பற்றி எந்த சிற்றறிவும் இயல்பாகவே இல்லை என்பதே வெளிப்படை. இவர்களால் இருக்கின்ற அமைப்பினை நிர்மூலமாக்க முடியுமே தவிர நிர்மாணிக்க முடியாது என்பதே வரலாற்றுப் பாடம்.

  கீரோவை ஜீரோவாக்கும் முயற்சி என முன்னொரு கருத்தாளர் சொல்லியதாக நினைப்பு.முதற் பெண் போராளி பற்றி தொட்டுச் சென்றது பற்றி இன்னொரு கருத்தாளர் வினவல்.

  ஐயா! .உங்கள் தத்துவார்த்த விளக்கத்துடன் சம்பவங்களை தேர்ந்தெடுத்து எழுதுதல் உண்மையை மட்டும் எழுதுவதாக இருக்காது

  அய்யா! உங்களிடம் ஒன்று மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது.தனி மனித

  வெறுப்பினுடாக சரித்திரம் எழுதுகிறீர்கள்.

  1. தனிமனிதப் பகையும் படுகொலையும் அதிகார மோகமும் கொண்டு வெறுப்பினூடாக வளர்க்கப்பட்ட ஒரு தலைமையைப் பற்றி எழுதும் போது எழுதும் நோக்கமும் வெறுப்பானதாகவே தெரியும்.
   தயவு செய்து பொய்களையும் தவறுகளையும் கன்டால் சுட்டிக் காட்டுங்கள். எல்லாவற்றுக்கும் தார் பூசி உண்மையை மறுக்கப் பார்க்காதீர்கள்.

   முள்ளிவாய்க்காலுக்கு முதல் மாற்றுக் கருத்து எது இருந்தலும் ஏறிட்டும் பார்க்காமல் மணலுள் தலை புதைத்திருந்த தீக்கோழிகள் தான் இப்போது அதிர்ச்சியில் அலறுகின்றன.

   1. முள்ளை முள்ளால் எடுக்கின்ற தத்துவத்தை சுமந்தால் முறைகளை சொல்ல முடியாது.

    அய்யர் பூசி மெழுகிறார் என்று சொல்ல வருவதைப் புரியாமல்,வரிந்து கட்டி வக்காலாத்து வாங்கி விட்டு,எழுதுபவனை நோக்கி ‘தீக்கோழிகள்’ என்பது எந்த வகையில் தார் பூசும் உண்மை.

    விடுப்புப் புடுங்கவும்,திண்ணைப் பேச்ச்சுக்குத் தீனி தேடவும் இங்கு வந்து,ஒத்தூதுகிற வேலை எதுக்கு?

    இனியொருவுக்கு குத்தகைக்கு சொல்லாடல் செய்யும் உரித்துரிமை இருந்தால் மட்டும் போதாது,எழுதுகிற கருத்தை விளங்கவும் அறிவு வேண்டும்.

    எதை அறுப்பார்கள்,எங்கே தறிப்பார்கள்,எப்படித் திரிப்பார்கள் என்றே அவதானித்து எழுதுகிற கருத்துச் சுதந்திரக்காலத்தில் நாம் வாழுகிறோம் என்பதையும் புரிந்து கொள்ளவும்.

   2. “அய்யா! …தனி மனித வெறுப்பினுடாக சரித்திரம் எழுதுகிறீர்கள்.” என்பதற்கும் “அய்யர் பூசி மெழுகிறார் என்று சொல்ல வருவதற்கும்” இடையே மெத்த வேறுபாடுண்டு.
    ஒன்றை மற்றதாக விளங்கிக் கொள்ளுமளவுக்கு எனக்குப் பின்னவீனத்துவப் பரிச்சயம் போதாது.
    “எதை அறுப்பார்கள்,எங்கே தறிப்பார்கள்,எப்படித் திரிப்பார்கள் என்றே அவதானித்து எழுதுகிற கருத்துச் சுதந்திரக்காலத்தில் நாம் வாழுகிறோம் என்பதை” அறிய மிக்க மகிழ்ச்சி.
    ஆமாப்போடுவதை விட எதைப் பற்றியுமே வாய் திறக்க விடாத ஒரு பாரம்பரியத்துக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் அது விளங்குமானால் இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருக்கும்.

    “தயவு செய்து பொய்களையும் தவறுகளையும் கன்டால் சுட்டிக் காட்டுங்கள்” என்று தான் கேட்டேன். மாட்டேன் என்கிறீர்களே!

   3. “அய்யா! தனி மனித வெறுப்பினுடாக சரித்திரம் எழுதுகிறீர்கள்” என்பதற்கும் “அய்யர் பூசி மெழுகிறார் என்று சொல்ல வருவதற்கும்” மெத்த வேறுபாடுண்டு.

    “எதை அறுப்பார்கள்,எங்கே தறிப்பார்கள்,எப்படித் திரிப்பார்கள் என்றே அவதானித்து எழுதுகிற கருத்துச் சுதந்திரக்காலத்தில் நாம் வாழுகிறோம்” என்பதை அறிய மெத்த மகிழ்ச்சி. அதைத் தலைவருக்கு ஆமாப் போடுவதை விட வேறெதற்கும் சுதந்திரமில்லா த ஒரு காலத்து அரசியலை அங்கீகரிப்பவர்களும் அறிவராயின் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    நடந்த பேரழிவின் காரணங்களை அறிய விரும்பாததும் கருத்துக்களுக்குத் தடை போட முயல்வதும் தீக்கோழி மனநிலையன்றி வேறென்ன?

    பொய்களையும் தவறுகளையும் கண்டால் சுட்டிக் காட்டுங்கள் என்று கேட்டேன். முடிந்தால் செய்யுங்களேன்!

    1. ஒரு சாரார் பிரபாகரனை சூரிய தேவன் என்கிறார்கள். உங்களைப் போல் இன்னொரு சாரார் நாகாசுரன் என்கின்றனர். அவனை உருவாக்கிய எமது சமூகத்தின் சுயநல மனோபாவத்தினையும்_ சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கொடூரத்தையும் பார்க்க மறுக்கிறீர்கள். உங்களுக்னகும் போலி சூரிய தேவ வழிபாட்டாளருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

  2. நீங்கள் கூறுவது மிகவும் சரியானதே “அய்யா! உங்களிடம் ஒன்று மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது.தனி மனித “வெறுப்பினுடாக சரித்திரம் எழுதுகிறீர்கள்.” நீங்கள் சொன்னது போல் இது அவரின் தொடர் கட்டுரைகள் மூலம் மிகவும் தெளிவாகத்தெரிகின்றது.. இவர் இறுக்கமான இராணுவக் கட்டமைப்பு கொண்ட சர்வாதிகாரியாக பிரபாகரனைச் சுட்டிக்காட்டிப் பல கட்டங்களில் கொச்சைப் படுத்துகிறார் பாவம் இவர் புரிந்திருக்கவில்லை இன்றயை வல்லரசு நாடுகள் தங்கள் இராணுவப் பலத்தைக் உலகுக்குக் காட்டத்தான் பல நாடுகளில் காலூன்றி நிற்கின்றது என்று….. இராணுவம் எப்பொழுதுமே வலிமையானதாகத்தான் இருக்கவேண்டும்….ஆனால் அரசியல் சூழலுக்கும் காலத்துக்கும் ஏற்ப மாறுபடும்….இது எனது கருத்து

 11. hவணக்கம் ஐயரே
  மாத்தையா வறிய குடும்பத்தில் மாத்திரம் இருந்து வரவில்லை. காலம் சென்ற ஒரு அன்பரின் தகவலின் படி தோழர் சண்னின் கட்சியில் ஆரம்பத்தில் இருந்ததாகவே அந்த நண்பர் கூறியிருந்தார்.
  மேலும் சொன்ன நபரே மாத்தையாவின் தூரத்து உறவினராகும். தகவல் சொன்ன தோழரும் முன்ன சண்னின் கட்சியில் இருந்த தோழரே.

 12. சுந்தரம் மனோ மாஸ்டர் போன்றவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதை இப்போது முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரபாகரன் கையில் கிடைத்த துப்பாக்கி குரங்கின் கையில் கிடைத்தபூ மாலை. மூளை வளர்ச்சியடையாதவனிடம் கத்தியைக் கொடுத்தால் என்ன நடக்குமோ அது நடந்து முடிந்தது.

  ஒரு உண்மை என்னவெனில் இதுவரை காலமும் புலிகளுக்கு மாற்றீடாக ஏன் எமது மண்ணில் ஒரு விடுதலை அமைப்பு உருவாகவில்லை”

  இப்படி ஒரு இரத்தக்காட்டேரி இருக்கும் இடத்தில் விடுதலையாவது புரடச்சியாவது!!

  1. விடுதலை என்றால் என்ன என்று சொல்வீர்களா?

   1. விடுதலை சிங்கள அரசிடம் வாங்கி தமிழருக்குக் கொடுப்பது. இதை செய்யத்தான் பலவருடமாக “புலிகளுக்கு மாற்றீடாக பல விடுதலை அமைப்புகள்” முயற்சிசெய்கினம். 300000 தமிழரை விடுவித்தவர்களெல்லோ?

   2. தலைவரையும் புலிகளையும் தூற்றி துதிபாடும் ம்மணி என்ன திடீரெண்டு கரிசனை? வசதிக்கு தகுந்து வசைபாடக் கூடாது. இளையோர் அமைப்பை உசுப்பேத்த என்ன அவர்களுக்கு சொந்தமாக சிந்திக்க மண்டையில் மயிர்தான் உள்ளதா?

    1. நீங்கள் உசுப்பேத்திதானே தலைவனை காலடிநக்கி சாகடிதீர். அவர்கள் இளையவர்களாக மண்டையில் ஒருவேளை மயிராவது இருக்கலாம் உமக்கு அது கூட இருக்க வாய்ப்பில்லை.

     1. எழுதுவதைப் பார்த்தால் ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி இருக்கு. இளம் சந்ததிக்கு மண்டையில் மூளையும் இருக்கென்றுதான் சொன்னேன தவிர உஙளுக்கு மண்டையில் மூளை இருக்கா என்றா கேட்டேன்?
      உசுப்பேத்தி காலைநக்கி சாகடிக்க எனக்கு வேறு வேலை வெட்டியில்லை என்றநினைப்பா?
      எழுத சுதந்திரம் இருந்தால் எப்படியும் எழுதிக் கிழிக்கலாமென்ற நினைப்பா?

  2. தமிழ் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்

   1. வடக்கில்  இருந்து  பொன் பொருகளை கொள்ளையடித்தபின் வெறும் நூறு ரூபாயுடன் துரத்தப்பட  முஸ்லிம்களையும் ,பளிவாசல்களில் எந்த ஆயுதங்களும் இல்லாமல் எலோருக்கும் பொதுவான ஆண்டவனை தொழுதவர்களை கதவுகளை பூட்டி விட்டு சுட்டு இறந்தவர்களையும் , அடிமாடுகளாக யுத்தகளத்தில் முன் வரிசையில் அனுப்பி பலிவங்கப்பட்ட மடக்களப்பு தமிழ்  இளம் உயிர் களின் தாய் தந்தைகளை கேளுங்கள் …நீங்கள் பாவத்தில் உருகி சாவீர்கள்…

    1. ஆமாம் அப்டுல்லா லண்டனில் கூட எல்லாருக்கும் பொதுவான ஆண்டவனை “பள்ளிவாசலில் தொழ” ஸ்கட்லண்ட் யாட் ரெய்டு செய்து பள்ளியின் தூய்மையை அசிங்கப்படுத்தியது………………………. பள்ளியின் குருவை நாடுகடத்தியது? பல மசூதி குருமார்களுக்கு லண்டன் வர தடை விதித்தது………………………………………….. பாவம் முசுலிம் மத மக்கள் மார்க்கத்தின் பால் வாழ்பவர்கள் சரியா?

    2. ! ,பளிவாசல்களில் எந்த ஆயுதங்களும் இல்லாமல் எலோருக்கும் பொதுவான ஆண்டவனை தொழுதவர்களை கதவுகளை பூட்டி விட்டு சுட்டு இறந்தவர்களையும் , அடிமாடுகளாக யுத்தகளத்தில் முன் வரிசையில் அனுப்பி பலிவங்கப்பட்ட மடக்களப்பு தமிழ் இளம் உயிர் களின் தாய் தந்தைகளை கேளுங்கள் …நீங்கள் பாவத்தில் உருகி சாவீர்கள்…

     கவலை கொள்ளவேண்டாம் அப்துல்லா இறைவானால் அனுப்பப்பட்ட தூதுவன் அண்ணல் கருணா அம்மான் நம் துயர் துடைப்பார்

   2. விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முஸ்லிம்களை மோசமாக நடத்தியவை தான். அதை யாரும் நியாயப்படுத்த வேண்டியதில்லை.
    முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியது தவறு என்று புலிகள் கூடக் காலங் கடந்து ஒப்புக் கொண்டனர். பிறகும் அதை நியாயப் படுத்துகிறோமா?
    சில முஸ்லிம் அமைப்புக்கள் தமிழர் விரோத வன்முறையில் இறங்கியது உண்மை. அதன் பின்னணியும் கவனத்துக்குரியது.
    தமிழரைத் தமிழர் அழித்ததற்கு மேலாக எந்த முஸ்லிமும் செய்யவில்லை என்பதும் கவனத்துகுரியது.
    துரோகத்துக்கு ஏன் கருணாவைக் காட்டுகிறீர்கள். மற்றோர் புனிதர்களா? துரோகி என்று சொல்லப்பட்டோர் தான் துரோகிகளா அல்லது அவர்களை அழித்தோர் துரோகிகளா?

    1. சிவா , முஸ்லிம்களின் சிலர் விரோதமாக நடந்ததால் துரத்தியதாக கூறுகிறீர்களே அப்படி என்றால் யாழ் தமிழர்களில் எத்தனை “துரோக” குழுக்கள் இருந்தது அதுக்காக அவர்கள் சார்ந்த ஹிந்து இனத்தையே துரத்தி இருக்கலாமே….இன்னும் ஒன்ட்று…புலிகள் ஒருபோது தாங்கள் செய்ததது தவறு என்று கூறவே இல்லை..கடைசி வரை பெர்ச்சு வார்த்தைகளில் கூட ஒரு முஸ்லிம் பிரதிநிதிகளை சேர்த்து கொண்டு முஸ்லிம்களும் தமிழர்கள் என்று காட்டவே இல்லை….யார்ருக்கு சொல்றீங்க கதை …

     1. தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதனால் அப்பாவித் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவை சரியெனச் சொல்ல வருகிறீர்களா. உங்களிடம் ஒன்று கேட்கிறேன் தமிழர்களை மஹிந்தவின் படைகள் கொன்றொழித்த போது அதற்கு எதிர்ப்புக்குரல் கொடுத்தீர்களா அல்லது நீங்களும் சேர்ந்து நின்று படை நடத்தினீர்களா. எமது தமிழ் முன்னால் போராளிகள்தான் ஐயா சிங்கள இராணுவத்திற்கும் இந்திய படைகளுக்கும் ஒத்தாசை உதவி செய்தார்கள். அதுவும் உங்களுக்கும் தெரியும் தானே. யாராவது தமிழன் அவர்களை குறை சொல்கிறார்களா பாருங்கள். அதுதானய்யா தமிழனின் பெருந்தன்மை. அதைப்பாராட்ட மாட்டீங்க குறை சொல்ல மட்டும் வந்தீட்டீங்க.

    2. அப்துல்லா, முஸ்லிம்களின் சிலர் விரோதமாக நடந்ததால் துரத்தியதாக நான் எங்கே சொன்னேன்?
     “முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியது தவறு என்று புலிகள் கூடக் காலங் கடந்து ஒப்புக் கொண்டனர். பிறகும் அதை நியாயப் படுத்துகிறோமா?” — இதைப் பின்னவீனத்துவமுறையில் கட்டவிழ்த்துச் சொல்கிறீர்களா?

     கிழக்கில் நடந்த சில விடயங்கள் பற்றிய பின்னைய குறிப்பை (அதைக் கூட நிதானமாகப் பார்க்க வேண்டியதைச் சுட்டிக் காட்டினேன்) எதனுடனும் தொடர்பு படுத்துகிறிர்களா?

     மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பார்க்கிற போது “… கண்டதெல்லாம் மஞ்சளாகவே தெரியும்”.

   1. அய்யரின் நந்தனப்புகழ்ச்சிக்கு மெருகேற்றும் முயற்சி.கும்பல்களும் கோவிந்தாக்களும்….

    1. Nanthan is traitor , I do not know about Iyar, he is also supported to him to destroy the NLFT and informed to their loyal leader to kill Visu and his mates. How could any one even hurt by LTTE while he was the leader of NLFT.
     Ok close this chapter please, I like to read Iyar’s this story but my mind is boiling when I heard of them. Sorry.

    2. How do you define a traitor?
     Over two million lives have been sacrificed in the name of liberation. Most of the deaths were avoidable.
     Are not those who misguided the LTTE leadership into their misadventures and misjudgments and those who endorsed the misdeeds that are the real traitors?
     Before pointing fingers at indiviuals and naming them as traitors, one should come clean about one’s role and stand on the conduct of the tragic series of episodes since 2006.

 13. தனது தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாத சில வக்கிர புத்தியாளர்கள். இளையோர் அமைப்பை உசுப்பேத்தி சிவகுமாரனின் 36 வது நினைவு நாளில் அந்த தியாகியை அவமதிக்கும் வகையில் புலி கொடியேந்தி தங்கள் ஏக போக வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

 14. யார்தான் சகோதர கொலைகளை செய்யவில்லை அவர் அவர் தம் விரல் வீககங்களுக்கு ஏற்ப படுகொலை செய்தவர்களே. LTTE, PLOTE, EPRLF, TELO,TEA…….. எல்லோரும் தமிழர்களின் எயமனர்களாகவே இருந்தனர் இருக்கவும் ஆசைப் பட்டனர். அவர் அவர் தமது பலப் பரிட்சையின் அடிப்படையில் முன்னுக்கு வந்தனர். இவர்களை எல்லாம் ஒருநிலை படுத்தி, தவறுகளை திருத்தி சரியான பாதையில் விடுதலைப் போராட்டத்தை தடம் பதிக்க செய்ய முடியாத ப(த)டித்த புத்தி ஜீவிகளான எமது சமூகம், மோட்டு சிங் களவனிடம்? தோற்று விட்டோம். பிரபாகரனை குறை சொல்லுவதோ அல்லது வாழ்த்து பாடுவதோ இன்றைய காலத்தின் தேவை அல்ல. இக்கட்டுரை மூலம் நாம் எதிர் காலத்தில் எவ்வாறு புத்தி பூர்வமாக செயல் படவேண்டும் என்பதே எமக்குரிய செய்தியாக இருக்க வேண்டும். “யதார்த்தத்தை விளங்கி கொள்ள முடி யாத புத்தி ஜீவித்தனம் செத்துப்போன பிணம் ஒன்றின் மூளைக்கு சமனானது”. (கிட்டத்தட்ட ஈழதமிழர்களைப் போல, அவர் தம் போராட்ட முனைப் புகளை போலவும்…) மிகச் சரியான விடுதலைப் போராட்டம் பிழையான முறையில் வழிநடத்தப் பட்டதா?… இதனை விவாதித்து கொண்டிருப்பதில் பயனில்லை. நிகழ் காலத்திற்கும் எதிர் காலத் திற்குமாய் சரியான வழி முறைகளை தேடுவோம். இறுதியாக அனைவரிடமும் பகிர்வதற்கு சில விடயங்கள். …
  சரியான சக்திகள் பிழையான முறையில் போராடி தோற்றன. பிழையான சக்திகள் சரியான முறையில் போராடி தோற்றன. எங்குமே யனநாயக பண்பு இரட்சிக்கப் படவில்லை. போராட்டம் மக்கள் மயப் படுத்தப் படவில்லை.

  சுதந்தர போராட்டம் என்பது முழுமக்களின் பங்களிப்புகளின் மூலம் உட்கட்சி ஜனநாயகம், சமத்துவ பேணல், கருத்தாய்வு, பகுப்பாய்வு ராஜதந்திர நகர்வு என்பவற்றின் மூலம் கட்டுமானம் இடப்பட்டு வளற்ச்சி அடையுமாயின், அது முழுமை அடையும்.

  “வீதிக்கு இறங்கி கொடியை தூக்கி கோசம் போடுதல் மாத்திரம் மக்கள் போராட்டம் என அர்த்தம் கொள்ளுதல் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் அனர்த்தம் மாத்திரமே! அது தான் மக்கள் போராட்டம் என்றால் ஒரு புரட்சிகர உழைப்பிற்க்கு அர்த்தம் இருக்காது”.

  எனவே வெறும் விமர்சனங்கள் கறிக்கு உதவாது. வீண் விவாதங்கள் மூலம் சமூக வறட்சியை உருவாக்கமுடியுமே தவிர சமூக மலர்ச்சியை அல்ல. உங்கள் விவாதங்கள் விமர்சனங்கள் சமூக விடுதலையை, தேச உருவாக்கத்தை, ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்குமே ஆனால் எழுதுங்கள்,

  இல்லையேல்! சூ(பே)னாவின் முனையால் தொடர்ந்தும் சிந்தியுங்கள். உங்கள் எயமானர்களின் எலும்பு துண்டிற்காய்………..

  பண்புடன்
  S.G.ராகவன். (கனடா)

 15. யார் நடைபோடுவதற்கு அடி எடுத்துக்கொடுக்கும் அய்யரின் மென்றும் முழுங்கியும் சொல்லும் வாக்குமூலம்?பரிணாம வளர்ச்சி குதர்க்கவாதிகளால் சிதைக்கப்பட சுயநலவாதிகளால் கடத்தப்பட்டது. போராட்டம் தர்கீகங்களுடன் வளர்கப்படாது சிவப்பு சாயமிடப்பட்டு மனனம் செய்யப்பட்ட மந்திரங்களால் கவரப்பட்ட குதர்க்கவாதிகளால் சீரளிக்கப்பட்டது.
  ராகவனுக்கு ஆங்காங்கே ஆலவட்டம் போடுவதன் மர்மம் என்ன? சரி பிழைகளுக்கு அப்பால் ஊர்மிளா பற்றிய வரலாறு ஒரு வரி மட்டும் தானா? ஆதைவிட கேவலமாக நஞ்சை (…ஊர்மிளா சில காலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டாலும் வேறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன …பாகம்17) நயமாக சொன்னதன் நோக்கம் என்ன? சிவப்பு மடடைக்குள் இருந்த விளங்காத கருத்தியலில் போலி மயக்கம் இருந்ததேயொழிய சமூகத்திற்கு ஏற்ப நடைமுறைக்கு இசைவான பொது அறிவு இருக்கவில்லை.

 16. ” சங்கமாடிய தமிழ் என பேசிய
  தம்பிமார் எல்லாம் கடல் கடந்தனர் ….
  …துப்பு கெட்டவர் நாயிலும் கீழவர்
  அகதி லேபலில் தூசி தட்டட்டும் ..
  அகதி என்று சொல்லி தூசி தட்டட்டும் ..
  கப்பலேறி கனடாவில் நக்கட்டும் …..”
  அன்று உயிருக்கு பயந்து ஓடி ஒழித்து கொண்ட தமிழ் வீரர்களை கேலி செய்து புதுவை எழுதிய கவிதை அது.
  இன்று கப்பலேறி கனடாவில் நக்கியவர்களின் பிள்ளைகளும் ,அகதி லேபலில் தூசி தட்டியவர்களின் பிள்ளைகளும் ஈழத்திற்காக போராட போகிறார்களாம் ?
  முதலில் களத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.1 லட்சம் மக்கள் செத்தார்கள் என்றால் அதற்கான முழு பொறுப்பையும் புலிகள் தான் ஏற்க வேண்டும்.அல்லது உருத்திரகுமாரன் தான் ஏற்க வேண்டும்.1 லட்சம் மக்களை பலி கொடுத்துதாவது போராட்டம் வெல்ல பட்டதா ?
  ஆகவே கொள்கை தான் மாற்ற பட வேண்டும் என்பது தான் நிஜாயம் .!
  இல்லை அப்படி தமிழீழம் தான் முழுமையான தீர்வு என்றால் இங்கிருந்து கொண்டு வம்பளக்கும் வீரர்கள் தான் நாடு திரும்ப வேண்டும்.

  இனியும் இங்கிருந்து கொண்டு அங்கிருக்கும் மக்களை ஆபத்தில் தள்ளாதீர்கள்.ப்ளீஸ்

  மாத்தையா தோழர் சண்னின் கட்சியில் இருந்த சிலரிடம் தொடர்பு வைத்திருந்தார் .சண்னின் கட்சியில் இருந்த ஊசலாட்ட தோழர் ஒருவர் பொலிகண்டியை சேர்ந்த( சிவன் ) தொடர்பு வைத்திருந்தார் .ஆனால் மாத்தையா அசைந்து கொடுக்கவில்லை.

 17. Past is only good if it changes our life in a positive way. One thing was clear in our history is that Thamils damaged Thamils than that of Singhala government. So we all from politicians, leaders to ordinary people have to learn from past mistakes. No more arm struggle is possible in Srilanka but political struggle is possible in outside world. So let us work outside Srilanka for recognition for Thamils struggle and their existence. Truth and selfless love always prevail.
  Thanks

 18. “பிரபாகரன் திடீரென எழுந்து அந்தப் புத்தகத்தை ராகவனின் கைகளிலிருந்து பறித்து தூரே வீசிவிட்டு “இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆயுதங்களைக் களட்டிப் பூட்டக் கற்றுக்கொள்ளுங்கள் ” என்று சொல்கிறார்.” என்று ஐயர் முடித்தார். – எழுத்தைப் படிப்பதைப் பிரபா தடுத்தாரென்று எழுதியவுடன் பல எழுத்துக்கள் வந்து குவிகின்றன. மெச்சத்தக்கது. அவற்றில் பல எழுதுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்தாலும் அவையும் எழுத்தாகவே இருப்பது மெச்சத்தக்கது. அடுத்தவரின் அபிப்பிராயங்களை ஆயுதங்களால் நிறுத்தாமல் இதேபோல் எழுத்துக்களால் முகம்கொடுக்க நாம் ஆரம்பத்திலேயே பழகியிருந்தோமேயானல் இன்று நாம் எமது போராட்டம் எப்படி வெற்றிகண்டது என்பதைப்பற்றி எழுதிக்கொண்டிருப்போம். அதைப் பலர் விண்ணுலகத்திலிருந்துதான் படிக்கவோ பதிலளிக்கவோ வேண்டுமென்ற நிலையும் இருந்திருக்காது. ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துக்கள் பிறக்கட்டுமென மாஓ எழுதினார். ஒரேயொரு பூவைத்தான் அனைவரும் பூஜிக்கவேண்டுமென்று எம் காதிலே சூட்டிவிட்ட அந்தப் பூவும் உதிர்ந்த பின்னர் பாலைவனமாகிப்போன எம் மண்ணில் இனிப் புதிதாகத் தோட்டம் செய்வோம். எல்லோரும் எழுதுங்கள். எல்லோரையும் எழுத விடுங்கள். எல்லோருக்குமாக எழுதுங்கள். பூக்களைப் பறிக்காதீர்கள் – புத்தகத்தையும் தான்!

  1. இப்படி ஆளாளுக்கு எழுதி பேசி தான் எல்லம் கெட்டது பிரபாகரன் தலைமயில் ஒன்ற் பட்டு போராடி இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்

 19. வார்ந்தெடுத்து கருத்தெழுதும் வக்கற்ற முறையை விட,

  நீங்கள் வாய் மூடி இருந்தால்,உங்கள் அறிவுடமை இப்படி வெளிப்படாது.

  மட்டமான கருத்துச் சுதந்திரத்தில் மகிழ்வும்,மட்டம் தட்டிப் பார்ப்பதில் இரட்டிப்பு மகிழ்வும்,மண்டையில் மசாலா இருப்பதைத்தான் காட்டி நிற்கிறது.

  எனது எழுத்தில் என்ன கருத்திருக்கிறது என்ற விளக்கமற்று,எகிறிக் குதிக்கிறது யாருக்குச் சேவை செய்ய.

  தனி மனித வெறுப்பினை வரலாற்றாக எழுதியதும்,எழுதுவதும் அய்யர் தொடக்கம் மசாலா போன்ற ஒத்தூதிகளின் நடைமுறைதான் என்பதை இனியொரு முறையேனும் புரிந்து கொள்ளுங்கள்.

  கருத்துகளில் கனமில்லையெனின்,கேட்டேன்,மாட்டேன் என்ற கடைந்தெடுத்த சரக்கில் மசாலா பண்ணாதீர்கள்.

  தணிக்கைக்கு பின்னான என் கருத்துகளை மீண்டும் படியுங்கள்.

  1. கொஞ்சம் பரிதாபமான நிலையில், கேட்ட எதற்குமே பதில் சொல்ல முடியாமல் திணறுகிற போது, கேட்டவரை எதாவது சொல்லித் திட்டுவது தான் வழி.
   நீங்கள் மெச்சிய இயக்கத் தலைமை எல்லாரையும் எல்லாவற்றையும் அழித்த பின்பு, அகப்பட்ட எல்லாருக்கும் “துரோகி” “துதிபாடி” என்று பேசியவாறு நீங்கள் வாழ்க.
   அதுவே நம் இயக்கங்கள் காட்டிய வழியுமாகும்.

 20. நம்பிகெட்ட தமிழன்களும் நன்றிமறந்த தமிழன்களும் இருக்கும்வரை உண்மையான உள்ளர்த்தமான உறுதியுடைய தமிழன்கள் நேற்று,இன்றல்ல நாளைக்கும் தங்கள் வாழ்வுரிமை போராட்டத்தில் வெற்றி பெறமாட்டார்கள். மேற்குறிபிட்ட வரிகள் யாரும் சொல்லி யான் இங்கு எழதவில்லை…எனது சொந்த வாழ்வில் 45வருடங்கள் அங்கும் இங்கும் கண்டும் பங்குபற்றியும் பெற்ற அனுபவரிகளே அன்றி வேறொன்றும் இல்லை பராபரமே!!!

 21. சுய சிந்தனை அற்று எல்லாவற்றுக்கும் தலை ஆட்டிவிட்டு பின் தனிமனிதனின் தவையில் எல்லாப் பழியையும் போட்டு தப்பிவிட பார்கிரார் ஐயர். இன்று எமது போராட்டம் முள்ளிவாய்காலில சாம்பலாக அன்று தனிமனிதனுக்கு காட்டிய தீபமும் தூபமும் தான்.
  ஐயரின் கதை படிப்பது பலருக்கு கிளு கிளுப்பாகவும் சிலருக்கு விக்கிராமித்தன் ; கதையாகவும் உள்ளது. முரண்களை பார்கவும் நியாயத்தை தேடவும் பழகுவோம

  1. “முரண்களை பார்கவும் நியாயத்தை தேடவும் பழகுவோம்” என்கிறீர்கள்.
   காணுங்கள். காட்டுங்கள். நல்லது.
   விஷயத்தைப் பற்றிப் பேசுங்கள். சும்மா ஆளைத் திட்டி ஒரு பயனுமில்லை.

   1. துதி பாடிகளை போலவே வசைபாடிகளும் ஒரே மனப்பான்மையுடன் வாழ்கின்றார்கள். வாழ்வையும் வார்தையையும் உங்கள் பெயர் பிரதி பலிக்கின்றது. மற்றவர்களின் கேள்விகளிலும் வரிகளிலும் அர்த்தத்தை காண முயலுங்கள். அதை விடுத்து தாதாவின் அடியாள் போல் அலையாதீர்கள்.

   2. உங்கள் “தாதா” போய் விட்டார் என்பதால் மற்றவர்கட்குத் தாதாக்களைக் கற்பனை செய்யாதீர்கள்.

    1. இடம் காலியாய் இருப்பதால் தாங்கள் சற்று வேகத்தை கூட்டவும்.

   3. உங்களுக்குத் தான் தாதா இருந்தார், போய்விட்டார்.
    எனக்கு தாதாக்களுடன் பழக்கமில்லை. உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்
    உங்கள் வட்டங்களுள்ளே தேடுங்கள். கிடைக்கலாம்.

 22. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமைக்காக போராடிய,தன் மண்னின் விடுதலைக்காக் போராட்டிய ஒரு மாமனிதன் பிரபாகரன் !
  எந்த் ஒரு சுதந்திரப்போரும் எளிதில் முடியவில்லை.நீண்டகால் போராட்டத்தின் பின்னரே விடியலை கண்டடுள்ளது..தமிழீழ விடுதலைக்காக களமாட பல்வேறு யுக்திகள்… பல்வேறுசாகசங்கள்… உலகமே வியந்த்து. மிகப்பெறும் வல்லரசுகள எதிர்த்து தோழ்வியினை தழுவியது…. தவிர்க்கையலாது.
  மாயாவியாக மறைந்தும் மறையாது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமனிதனின் வாழ்வினை ஏதொ ஒரு சாதாரண வாழ்வாக எண்ணவேண்டாம்..
  அந்தமாமனிதனின் மறைவிற்குபின் அவரின் புகழினை களஙப்படுத்துவது பேடித்தனம்.

 23. agree 100%

  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமைக்காக போராடிய,தன் மண்னின் விடுதலைக்காக் போராட்டிய ஒரு மாமனிதன் பிரபாகரன் !
  எந்த் ஒரு சுதந்திரப்போரும் எளிதில் முடியவில்லை.நீண்டகால் போராட்டத்தின் பின்னரே விடியலை கண்டடுள்ளது..தமிழீழ விடுதலைக்காக களமாட பல்வேறு யுக்திகள்… பல்வேறுசாகசங்கள்… உலகமே வியந்த்து. மிகப்பெறும் வல்லரசுகள எதிர்த்து தோழ்வியினை தழுவியது…. தவிர்க்கையலாது.
  மாயாவியாக மறைந்தும் மறையாது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமனிதனின் வாழ்வினை ஏதொ ஒரு சாதாரண வாழ்வாக எண்ணவேண்டாம்..
  அந்தமாமனிதனின் மறைவிற்குபின் அவரின் புகழினை களஙப்படுத்துவது பேடித்தனம்.

  1. இது தனிமனிதனின் புகழ் பற்றிய பிரச்சனையல்ல.
   ஒரு அமைப்பு எப்படி வழி ட்ர்கவறியது என்ற தேடல்.
   பிரபாகரனுடைய தவறுகட்கு முழு அமைப்பும் ஆலோசகர்களும் பொறுப்பேற்க வேன்டும்.

  2. corrected text
   இது தனிமனிதனின் புகழ் பற்றிய பிரச்சனையல்ல.
   ஒரு அமைப்பு எப்படி வழி தவறியது என்ற தேடல்.
   பிரபாகரனுடைய தவறுகட்கு முழு அமைப்பும் ஆலோசகர்களும் பொறுப்பேற்க வேன்டும்.

 24. ஜனநாயகம் தெரிந்து கொள்
  மலையென்றாலும் தவறுகளை
  மடுவென்கும் ஆளுங்கட்சி
  மடுவென்றாலும் தவறுகளை
  மலையென்கும் எதிர்க்கட்சி
  இரண்டுமே தவறுதான்.

  சுற்றிவரும் பூமியை
  பற்றி இழுக்கிறது சூரியன்
  ஈர்ப்பு விசையால்
  உகலம் என்னவோ – சூரியனை
  விலகல் விசையுடனேயே
  சுற்றி வருகிறது;
  ஈர்ப்பு விசையும்
  விலகல் விசையும்
  எதிர் எதிர் விசையென்றாலும்
  பூமியை நிலை நிறுத்தும்
  பொது நோக்கில்
  இரண்டும் ஒன்றாகவே.

 25. தமிழ்மகள் காமுகர்களினால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறாள் இதனைக்கண்டு கொதித்தெழுந்த அவளது உறவுகளை காமுகர்கள் வஞ்சனையால் கொன்றுவிடுகின்றனர். தமிழ்மகள் சீரழிக்கப்படுவதற்கும் உறவுகள் கொல்லப்படுவதற்குமான காரணத்தை ஐயரும் ஐயரை ஆதரிப்போரும் ஆராய்ந்து வெளியிட்ட முடிவுகள் இதோ..

  தமிழ்மகள் பெரியவளாகி பருவமடைந்தது குற்றம், கவர்ச்சிகரமான அங்கவளர்ச்சிகளை கொண்டது குற்றம், அழகான தன் உருவத்தை வெளிக்காட்டியது குற்றம், இக்குற்றங்களை ஆராயாது உறவுகள் கொதித்து எழுந்தது மாபெரும் குற்றம். காமுகர்கள்பற்றி படித்து, அறிந்து அமைதியாக செயல்பட்டிருக்க வேண்டும்.

  1. மகேந்திரா உணர்ச்சி பிழம்பாகாதீர் உணர்வுபூர்வமாக சிந்தியும் செயற்படும். சாண்டில்யன் கதையெல்லாம் இனி எடுபடாது.

 26. தமிழ் மக்கள் பாவம் செய்யவில்லை தவறுசெய்கிறார்கள் இன்றும் தவறை தொடர்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசுகளாக தமிழர்களைப் பிரித்து ஆட்டசியமைக்கவைத்து அவர்களுக்குள்ளே சண்டை, பொறாமை, காழ்ப்புணர்ச்சிகளை உருவாக்கி அடிபடவைத்து வயிறுவளர்த்து வந்த ஆரியத்தையும், ஆரியக்கடவுள் வழிபாடுகளையும், ஆரியம் விடச்சொன்னாலும் நாங்கள் விடுவதாக இல்லை. தமிழர் கொண்டாட்டங்கள் தமிழரை முன்நிலைப்படுத்தும் கொண்டாட்டங்களாக மாற்றப்பட வேண்டும். வர்னாச்சிரம முறைகள் அரசியல்வாதிகளுக்கு சர்க்கரையாக இனிக்கிறது. இதற்குத் தமிழ்நாட்டுப் பிரபாகரனாக பெருமைப்பட்டுக்கொள்ளும் திருமாவளவனை ஓர் உதாரணமாக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட சாதி என்ற ஒரு கட்டமைப்பின் மூலமே அவரால் அரசியலுக்குள் நுளைய முடிந்துள்ளது. சக தமிழரையும் மனிதராக மதிக்கும் பண்பாடுகளை தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்க முன்வந்தால் தவறான அரசியல்வாதிகள் தோன்றுவதிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

  1. சேர சோழ பாண்டிய அரசுகள் தமிழ்ச் சிற்றரசுகளை அழித்துத் தான் உருவாகின. பார்ப்பனியம் தமிழ்ப் பேரரசுகளைக் கெடுக்கத் தேவை இருக்கவில்லை. புறநானூற்றுக் காலம் தொட்டே அரசுகட்காக மனிதர் அழிக்கப் பட்டனர்.
   பார்ப்பனரும் வேளாள மேட்டுக் குடிகளும் ஒன்றிணைந்து செயற்பட்ட காலமே மூவேந்தர் காலம்.
   அவர்கள் வழியில் கொடிய சோழப் பேரரசு ஒன்று எழுந்தது. அதைப் பற்றிப் பெருமைப் படுகிறோமே!

   திருமாவளவன் பற்றி என்ன சொல்லப் பார்க்கிறீர்கள்? அவர் நடத்துவது பொறுக்கி அரசியல். அவரால் தலித்துக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை.

   ethajam: “சமூகத்தின் இக்கட்டான சிக்கல்களையும் பாலியல் வன்முறை ஊடாகத்தான்” அண்ணாதுரை, கருணாநிதி கூட்டம் சொல்லிச் சினிமாப் பிழைப்பு நடத்தியது.
   தமிழக அரசியலை முன்னோடியாகக் கொண்டால் வேறென்ன கிடைக்கும்? பாவம் மகேந்திரா. ஆளை விடுங்கள்.

   1. பார்ப்பணர்களே தமிழாய் வாழ்ந்த தமிழ்ர் ஆலயங்களீல் சமஸ்கிருதத்தை கொண்டு வந்து நமது வழிபாட்டு முறயை மாற்றீயவர்கள் இன்றூம் இது வரையும் நம்து கோயில்களீல் சமஸ்கிருதம் தானே வாழ்கிறது.

 27. மகேந்திரா ஒரு சமூகத்தின் இக்கட்டான சிக்கல்களையும் பாலியல் வன்முறை ஊடாகத்தானா உதாரணம் சொல்ல வேண்டும்? வேறு உதாரணங்களே கிடைக்கவில்லையா? அல்லது ஞாபகம் வரவில்லையா?

 28. உலக அரசியல் நடைமுறைகளுக்கு ஏதுவாக நாம் மாறியிருக்க வேண்டும் இல்லையேல் உலகை எமக்கு ஏற்ற மாதிரி
  மாற்றி இருக்கவேண்டும்.இதை விடுத்து ஆயுதம் இருந்தால் அமெரிக்காவையும் ஆட்டிப்படைக்கலாம் என்று புத்தி
  அற்ற புலிகள் நினைத்ததன் விளைவு தான் இன்று எமது மக்களை தெருவெல்லாம் நின்று கையேந்தும் நிலைக்கு
  தள்ளியது. போராளிகளை நாம் என்றும் கவ்ரவிக்க வேண்டும்(இதற்குள் பிரபாவால் கொல்லப்பட்டவர்களும் அடக்கம்)
  பிரபா கிட்டு பொட்டு எனறு இந்தத் துரோகிகளை தூரத் தூக்கி வீசிவிட்டு புலிவேசம் போடும் வேசதாரிகளை இனியும்
  பொருள்படுத்தாமல் மகிந்த முழுத் தமிழரையும் கருவறுக்க முதல் புத்தியீவிகலும் புரட்சியாளர்களும் ஒன்றிணைதல்
  வேண்டும்.

  1. “உலகை எமக்கு ஏற்ற மாதிரி மாற்றி இருக்கவேண்டும்”. என்கிறீர்களே! எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட சனம் அதைச் செய்வது?
   உலக அரசியல் நடைமுறைகளுக்கு ஏதுவாக நாம் மாற வேண்டும் என்று சொல்லிச் சொல்லித் தான் அமெரிக்காவின் காலடிக்குப் புலிகளைக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
   நாம் முதலில் நமது நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதில் தெளிவைத் தேடுவோமா?

 29. //பிரபாகரன் திடீரென எழுந்து அந்தப் புத்தகத்தை ராகவனின் கைகளிலிருந்து பறித்து தூரே வீசிவிட்டு// ஹா ஹா ஹா அறிவுக்க் கொழுந்து..தானும் படிக்காது மத்தவனையும்  விடாது 

  1. புத்தகத்தைப் பறி கொடுத்தவரும்,அதை எழுதுகிறவரும், அந்த சம்பவம் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என திகில் கதையின் அடுத்த தொடருக்குக் காத்திருங்கள்.

   1. சொல்லாமலே  எங்களுக்கு தெரியுமில்ல ..கொத்து கொத்தா கொலைதான்…வேற என்ன.. ..கத்தி முனையல் ரத்தம்.. .ஐயருக்கு துணிவு ஜாஸ்திதானுங்கோ !

    1. எல்லாம் தெரிஞ்சவனுக இங்க, எதிக்கை வந்து சொதப்பிறீங்க.அல்லாரும் பூடுச்சு எண்டாப்பில, அயிருக்கு மட்டுமல்ல அப்துல்லாக்கும் துணிவு ஜாஸ்திதானுங்கோ!வந்த வீச்சுக்கு விளாசித் தள்ளுங்கோ.

 30. ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்…
  “அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

  இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.
  ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.
  இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
  நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும். அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன்.
  அவரது அந்த திறமையும் உறுதியும்தான் இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச் செய்திருக்கிறது.

  1. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு பாரடா படவேண்டும்..வளமாக இருந்த வன்னி நிலத்தையும் மக்களையும் பஞ்ச பரதேசிகளாகிய சரித்திரம் உலகுக்கு தெரிஞ்சுதான் பெரிய ஆப்பா வச்சானுகள்.

 31. அவர் இன்டர்நெட் டில் புரட்சி இஜக்கம் அல்லது கம்னிசம் நடத்தவில்லை உங்களமாதிரி ….இஜோஓ.. நிங்கல்லாம் …இப்படி பேசி பேசி சிங்களவன் இந்தின் இருந்து காசு வங்கி உங்கடை வாழ்வை வாலமகிடிங்க ..

  1. இது தனி மனித வீர சாகசம் பற்றிய விடயமல்ல.
   ஒரு விடுதலைப் போராட்டம் எங்கேயோ பிழையாகிப் போயுள்ளது.
   அது ஏனென்று விசாரித்தறிய வேண்டியுள்ளது. அதற்கு நாங்கள் தயாரில்லை என்றால், பிரபாகரன் இன்னும் சாகவில்லை என்றும் போரியல், அரசியல், சட்டம், நீதி நிர்வாகம், சிற்பம், இசை, இலக்கியம் …. ஆகியவற்றில் அவரை மிஞ்ச யாருமே இல்லை என்றும் முடிவின்றிப் பேசிக் கொண்டிருக்கலாம்.
   இவ்வளவு காலமும் ராஜராஜன் போன்ற தமிழ் ஆக்கிரமிப்பாளர்களின் பெருமை பேசிய நமக்கு ஒரு சமகால மாவீரன் உள்ளாரல்லவா. படிமத்தைப் பூசி மினுக்கி தலைமுறைக்குத் தலைமுறை மெருகேற்றி வருடாந்தம், மாதாந்தம், நாளாந்தம் விழாக் கொண்டாடலாம்.
   குறை இல்லை. ஆனால் அது நம்மை எங்கே கொண்டு செல்லும்?

   தமிழ் விடுதலை இயக்கங்களில் இருந்த ஜனநாயகமின்மையின் விவரணம் மட்டும் போதாது. அவற்றின் வேர்களும் கண்டறியப்பட வேண்டும்.
   ஐயரின் விமர்சனம் முதற்கண் ஒரு அரசியல் இயக்கத்தின் போக்குப் பற்றியது. அதிற் கவனம் செலுத்துவோமாக.

 32. இலங்கையிலேயே விவசாய உற்பத்தி தன்னிறைவு கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக வன்னியிருந்தது புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து தப்பியோடி வந்து வன்னியில் புகலிடம் பெறும்வரை அதன் பின் பிடித்தது சனியன் வன்னி மக்களுக்கு எந்த வித பொருளாதார முன்னேற்றமும் அங்கு ஏற்படவில்லை. சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப வளாகம் வைத்திருந்த புலிகளால் எதிர்கால ஈழத்தின் ஒரு மாதிரி கிராமத்தை கூட உருவாக்க முடியவில்லை. ஆனால் தமிழ் செல்வனுக்கு 5 வீடுகள் கிளிநொச்சியில் மாத்திரம் இருந்தது

 33. ஐயரே அடுத்த பதிவு ஏன் இன்னமும் வரவில்லை ஸஸ்பென்டா? புத்தகத்தை பறித்து எறிந்த பிற்பாடு என்னநடந்த்தது? உங்க்க கதையை ரொம்ப விரும்பி வாசிக்கும் வாசகர்களில்நானும் ஒருவன் கெதியா எழுதுங்கோ இப்பவெல்லாம் சீரியல்நாடகத்திற்கு இங்கு மவுசு இல்லை எல்லாம் படுத்திட்டுது. உங்க கதை பற்றிதான் எல்லாஇடமும் பரபரப்பாய் கதக்கினம்

 34. காலப் பதிவுகள்
  “புலிகளால் எதிர்கால ஈழத்தின் ஒரு மாதிரி கிராமத்தை கூட உருவாக்க முடியவில்லை.” இதில் உள்ள உண்மை தன்மை மிகவும் ஆழமாக உற்று நோக்கப் படவேண்டியது. வன்னியில் இரண்டு வருடங்கள் சமாதான காலத்தில் அரச திணைகளத்தில் பணியாற்றி உள்ளேன். அந்த அனுபவங்களுடன் கண்ட கேட்ட விடயங்கள் அனைத்தும்!, எதிர்கால அனர்த்தங்கள் குறித்து பல ஐயங்களை என் மத்தியில் உருவாக்கியிருந்தது. இன்று அது நிதர்சனமாக போனதை இட்டு மிகவும் வேதனை படத்தான் முடிகிறது. ஆனால் இன்று நாம் வேதனை படுவதோடும், விமர்சனம் செய்வதோடும் வாழ்கையை கழிக்கிறோம்.
  இன்று (ஐயர் உட்பட) பலர் இணையங்களை துறந்து கோவணத்தை இறுக்க கட்டி பூசையாக்க வெளிக்கிட்டார்கள், அன்று பலரும் இணைந்து விடுதலை புலிகளை, விடுதலை பாதையின் பால் குறைந்த பட்சம் எழுத்துக்கள் மூலமாவது அழுத்தங்களை கொடுத்திருக்கலாம், பல விடயங்களை சுட்டி காட்டியிருக்கலாம். ஆனால் எம்மில் பலர் அதனை அன்று செய்யவில்லை, இன்று இவற்றை எழுதுவதில் பயனில்லை. ஏனெனில் அவர்களது எழுத்துக்களில் தமிழர் தேசத்தின் நிகழ் காலத் தேவை அல்லது காலத்தின் தேவை உணரப் படவில்லை அல்லது உணர்த்த படவில்லை. இப்போதைய தேவை உடனடியான மீள் கட்டுமானம் அது அரசியல் பொருளாதார கவனிப்போடு பாதிக்கப் பட்ட தமிழர் வாழ் விடங்களில் வாழ்வாதாரங்களை கட்டிஎளுப்புவதாக இருத்தல் வேண்டும்.
  இதற்க்கு எம்மத்தியில் இருந்து தன்னார்வ குழுக்களாக நாம் மேலெழுதல் வேண்டும். அரசாங்கத்தையோ, வெளிநாடுகளையோ, தமிழ் தேசிய கூட்டமைப்பையோ நம்பியிருப்பதையோ! விட்டு விட்டு காலத்தேவையில்! உடனடியாக நாம் கால் பதிக்க வேண்டும். தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த காந்தீயம் போன்ற அமைப்புகளை உருவாக்கி மக்களின் இருப்புகளை அவர் தம் சொந்த மண்ணில் மேம்படுத்துவதே இன்று முதன்மையானது. இன்று தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படுவதில் இருந்து தடுப்பதற்கு இதுவே முதன்மை வழி. வாருங்கள் வன்னியிலும் வாகரையிலும் சம்பூரிலும் எமது நிலங்களை எமதுடையாக்குவோம். அகதியாக வாழ்வாதாரம் அற்று வழிதெரியாது இருக்கும் மக்களை குறைந்த பட்சம் ஒரு குடிசை போட்டாவது கொடுப்போம் தம் தாய் நிலத்தில் குந்து வதற்க்கு.
  இதன் மூலம் நாளை குடிசைகளிடையே பாதை சமைப்போம் நல் வாழ்வு படைப்போம். பருத்தித்துறையில் இருந்து பாணமை வரை உதவும் கரங்களை நீட்டி செல்வோம். இந்த பாதையில் பயணிக்க நீங்கள் எத்தனை பேர் தயார்? நீங்கள் சிலர் தயாரானால் நாளைய விடியல் நம் கையில்.
  எனவே
  சொந்த மண்ணில் மக்கள் வாழ்வதற்க்கு என்று ஆசை படுகிறார்களோ அன்று விடுதலையும் அவர்களுடன் கூடப் பயணிக்கும். சொந்த மண்ணில் வாழ அல்லாடும் மக்களிடம் எப்படி விடுதலை தீ முளை விடும். (“வீதிக்கு இறங்கி கொடியை தூக்கி கோசம் போடுதல் மாத்திரம் மக்கள் போராட்டம் என அர்த்தம் கொள்ளுதல் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் அனர்த்தம் மாத்திரமே! அது தான் மக்கள் போராட்டம் என்றால் ஒரு புரட்சிகர உழைப்பிற்க்கு அர்த்தம் இருக்காது”.)
  ஒபாமாவுக்கு காவடி தூக்கி என்ன கண்டோம்?, தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் காவடி ஆட்டம் பார்த்தோம் என்ன கண்டோம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்தோம் என்ன கண்டோம்? சம்பூர் வாகரை வன்னி படுகொலைகளை தடுத்தோமா? இல்லையே! தவறுகள் நம் மிடையே பல உண்டு.
  வன்னியில் சமாதான காலத்தில் நான் பணியாற்றிய போது முல்லை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க பணிமனையில் எனது சேயை தொடர்ந்தேன் அரச காணிகளில் வீடமைப்பு செய்வதற்கான உடனடி செயத் திட்டத்திற்காக மக்களிற்கு காணிகளை உரிமம் ஆக்கும் வேலையில் இரண்டு மாவட்டங்களிலும் குறைந்தது 8500 விண்ணப் பங்களை பரிசீலித்து பெரும் பாலநோருக்கு உரிமம் வழங்க ஆவன செய்திருக்கிறேன். 1990 களில் இருந்து நான் சேவை ஆற்ற தொடங்கிய 2005 ஆரம்பம் வரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே வன்னி இருந்தது. புலிகள் இக்காணிகளை மக்கள் உடைமையாக்க அரச அதிகாரிகளை நிர்ப்பந்திக்கவில்லை அல்லது அசமந்த போக்கில் இருந்தனர்.
  கண்டாவளையில் குடியிருப்பு காணிகளை பார்வையிட சென்று இருந்தேன். அங்கு குடும்ப பெண்மணி ஒருவர் கண்ணீர் விட்ட படி அழுத வண்ணம் வந்தார். 1977 இல் இருந்து அகதியா க வந்த காலம் தொட்டு இன்று வரையில் தமக்கு ஒரு சொந்த காணி இல்லை ஐயா! நாங்கள் மலையகத்தில் இருந்து வந்ததால் தான் இந்த புறக்கணிப்பா என என்னிடம் முறையிட்டார் அந்த மாது. பாவப்பட்ட அம்மாதுவின் ஓலை குடிசையை நோட்டம் விட்டு மெல்ல அவர்களின் குடும்ப நிலைமையை விசாரித்த வண்ணம் சற்று தலையை குனிந்து பார்த்த போது, மாவீரர்களின் படங்கள் தொங்கியது. ஒன்றல்ல இரண்டல்ல ஆறு படங்கள். அது ஒன்பது பிள்ளைகளை உள்ளடக்கிய குடும்பம், அன்று மூன்று பிள்ளைகளை உள்ளடக்கிய ஐந்து பேராக குறுகியிருந்த்தது. நான் கேட்டேன் இயக்கம் உங்களுக்கு ஒன்றும் தரவில்லையா? அவர்களின் குடும்ப தலைவன் சொல்கிறார் அவர்கள் பண மின்றி இருப்பார்கள் அதில் எமக்கு எப்படி தருவார்கள் என அப்பாவித்தனமாக. ஓலை குடிசையில் அன்று இருந்த குடும்பத்தின் நிலை இன்று அதுவும் இல்லையோ நானறியேன்.
  அன்று விடுதலை புலிகள் பல ஏற்ற தாழ்வுகளை இயக்கதிற்ற்குள்ளும் வெளியிலும் பேணியதை என் கண்கள் ஊடாக கண்டு இருக்கிறேன். வன்னியில் புலிகளின் திருமணம் முடித்த ஒரு இடை நிலை தளபதி மனம் பொருமி சொன்ன விடயத்தை இங்கு பதிகிறேன், அவங்கள், அவங்கள் எல்லாம் பெரிய காணியிலும் பெரிய வீடுகளிலும் இருக்கிறாங்கள் எங்களுக்கு குடியிருக்க ஒரு துண்டு நிலம் பெற முடியாமல் அலைந்து திரிகிறோம், என வேதனை பட்டதை என் காதுகளால் கேட்டு இருக்கிறேன். அத் தளபதி அவங்கள் என குறிப்பிட்டது விடுதலைப் புலிகளின் செல்வாக்கு உள்ள தளபதிகளையும் பிரமுகர்களையும் தான்.
  வன்னியில் திருமணம் முடித்த விடுதலை புலிகளுக்கு 3 லட்சம் இயக்கத்தால் வீடுகட்ட கொடுக்கப்பட்டது. (ஓலை குடில் போடவும் காணாது) ஆனால் வசதி படைத்த போராளிகள் மேலதிகமான பணத்தை போட்டு வசதியான வீடு கட்டி கொள்ளலாம். இப்படித்தான் வன்னியில் திருமணம் முடித்த சில போராளிகளின் வீடுகள் ஓலை குடில் களாகவும் சிலரின் வீடுகள் வசதி படைத்த கல் வீடுகளாகவும் இருந்தன. இந்த ஏற்ற தாழ்வுகள் போராளிகளின் மனத்தை கடுமையாக பாதித்தது. இதனை இயக்கத்தின் தலைமை கண்டு கொள்ளவேயில்லை. குறிப்பாக திருமணம் முடித்த போராளிகள் பலர் நீண்ட கால போராட்ட அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் இந்த ஏற்ற தாழ்வுகளாலும், திருமணம் முடித்து இருந்த காரணத் தாலும் போர்முனையை விட்டு விலகியும், போரில் ஆர்வம் அற்றும் இருந்தனர்.
  விடுதலை புலிகளிற்குள் சாதி மாறி திருமணம் செய்தவர்கள் பலர். சமாதான காலத்தில் தமது பிள்ளைகளை பார்க்க பெற்றோர் வன்னி சென்றனர். அங்கு குடும்பம் குட்டியாக தமது பிள்ளைகள் இருப்பதை பார்த்து சந்தோசமடைந்த புலிகளின் பெற்றோர், தமது மருமக்களின் அந்த தொந்தங்களை தோண்டி எடுத்தனர். ஐயகோ! அங்குதான் அவர்களிற்கு தாங்கள் நீண்டகாலமாக கட்டி காத்து வந்த சாதீயப் பெருமையெல்லாம்? காற்றோடு போய்??.., தமது பிள்ளைகள் கலப்பு திருமணம்? (இந்த வார்த்தையை பாவிப்பதில் எனக்கு உடன் பாடில்லை) செய்ததை அறிகின்றனர். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக புலிகுடும்பத்தை அவர்களின் பெற்றோர் பிரித்து விடுகின்றனர். இவ்வாறான விவாகரத்துகள் வன்னியில் மிக அதிகமாக நிகழ்ந்தன. இதற்கு புலிகள் சமரசம் செய்ய முற்பட்டாலும் சாதீய வெறித்தனம் அதற்கு இடங் கொடுக்கவில்லை. இதனால் விடுதலை புலிகள், தமக்குள் காதலித்து திருமணம் முடிக்கும் உறுப்பினர்கள், தமது சாதியை வெளிபடுத்த வேண்டும் எனக் குறிப் பிட்டதாக அறியக் கிடைக்கிறது. இதில் குறிப்பாக சாதீய அடிப்படையில் தாழ்ந்த மட்டத்தில் இருந்த பெண்களே அதிகம் பாதிக்கப் பட்டதாக கேள்வி பட்டேன். ஆக விடுதலை போராட்டம் சமத்துவம் இன்றியும், ஆணாதிக்க சிந்தனை தலைதூக்கியுமிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
  விடுதலை போராட்டம் வெறும் ராணுவ வாத கண்ணோட்டத்தில் மாத்திரம் கட்டியெழுப்ப பட்டதன் விளைவுகளே இவை. இதன் காரணமாக எமது விடுதலை போராட்டம் தவறானது என்ற கருத்துக்கு நான் வரவில்லை. நாம் பல தவறுகளை செய்துள்ளோம் தொடர்ந்தும் செய்கின்றோம் என்பதை நினைவில் வைத்து புதிய பாதையில் பயணிப்போம். அப்துல்லாவையும், அன்பழகனையும் ஒன்று சேர்ப்போம். ஆண்டான் அடிமை பேதைமை ஒழிப்போம். கீழவர் மேலவர் என்ற வேற்றுமை துறப்போம். ஈழவராக மேல் எழுவோம் வாருங்கள்.

  1. ராகவன் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் ஆனால் ஐயர் மட்டுமல்ல நீங்கள் கூட இந்த விமரிசனங்களை இன்றுதானே வெளிக்கொணர்கிறீர்கள். அந்த அளவிற்கு புலி அராஜகம் வேரூன்றியிருந்ததை மறுக்க முடியாது. புனரமைப்பு வேலைகளில் ஈடுபாடுள்ள பலரிடம் பொருளாதார பலமில்லை என்பது வருந்ததக்கது. புலம்பெயர் புலி பினாமி பணம் போதும் தற்காலிக மீள்கட்டுமான பணிகளிற்கு. ஆனால் பார்த்தீர்களா ஒரு பினாமியாவது பணத்தை வெளிக்கொணர முன்வந்தானென்று.

 35. பிரபாகரன் போன்றவ்ர்களிடம் மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தாலும் தவறில்லை. மார்கசியம் என்பதும் ஒரு கற்பனைவாதம் போன்றது. உலகில் எந்த சோசலிசநாடும் கம்யூனிசததை அடைந்துவிடவில்லை.. சோசலிசநாடுகள் என்று சொல்கிற எந்தநாடும் அதில் வெற்றியடையவில்லை. இன்று அய்யர் சொல்வதுபோல் மார்க்சிய சித்தாந்ததை மட்டும் கடைப்பிடித்திருந்தால் விடுதலைப்போரட்டம் வெற்றியடைந்திருக்கும். என்பதும் ஒரு மாயை. எமது போரட்டம் தோல்வியில் முடிவடைந்த காரணங்களை ஆரயவேண்டும். தனிநபர் துதி பாடுதலும் எம் இனத்தின் சாபக்க்கேடு. பேச்சு வார்தைக்காலத்தில் பிரபாகரனையே துதிபாடிகள் கெடுத்து முள்ளிவாய்க்க்கால் வரை கொன்டு சென்று விட்டார்கள். பிரபாகரனும் சுந்தரமும் மோதிக்கொண்டது எல்லாம் ஜாதிய் பிரச்சனையே அன்றி வேறு இல்லை. இனியாவது தமிழன் பிராமணனால் உருவாக்க்ப்பட்ட சாதி சடங்குமுறைகளைக்கைவிட்டு தமிழனாக இணையவேண்டும்.

 36. Please keep in mind this letter is proposed to send to AnnahazaraeRespected Sir,Now I am very happy to salute your uncompromised struggle against corruption. Certainly, I am proud of you. I wish you to get all success in your future  struggle to promote the country as corruption free india. Now, you are going to to fight for recall power. All the best.Jan Lokpal is the instrument to find out the corruption and give punishment. This only is not a permanent solution to terminate corruption. Jan lokpal will be able to punish the offender after completion of the scam and also disburse of the Fund. introducing of Jan Lokpal may only be control the Corruption but certainly not terminate the corruption. Then, what is the way to terminate the corruption. The only way is to introduce “Electronics Technologies” instead of currencies.Corruption is the main thing to create black money. The currency hiding itself by way of non-account transaction. The black money then transferred to foreign currency and deposited in some other bank in abroad. Therafter the fund enter into our country by name of foreign investment. These procedures leads our country to poverty and price hike.Opportunity is the main thing to push the man into corruption. If we arrest the way of opportunity there is no way to speak about corruption. Otherwise corruption will exist. Corruption is existing in the country by basically transferring the money or fund whatever it is by means of currency. We have to think about people’s consumption into value with the assistance of “technology” instead of currency. You know “Money” is backed by some values. By introducing the “Technology of Electronics” to the public consumption thereafter each and every transaction therein can be accounted and recorded. If the value transaction was accounted or registered, each and every values must be in our control and it would not be transferred to abroad or undermined. In this juncture, it is the only way to to terminate the corruption and control the value of our country’s wealth.Dear Sir, why don’t you think about this procedure to terminate the corruption and control our country’ wealth. If we bring out the economic value into account we easily find out the surplus value and also we will have vital records in this regard. Benefit of economic is backing all type of suppression in all over the world.There is yet another reason. Human being is the additional instrument of the corruption. If we introduce or to fight to introduce “Technology of Electronics” does not have human being. Its defined functions may authorize to transfer the value by way of registering accounts. So, we kindly request you to consider this process as a reasonable course.Thankig YouYour’s well wisherM.I.Haja JainulapudeenPresident of Federation Of Rural Develoment,Kumbakonam, Tamil Nadu – 612 002.

Comments are closed.