புது டெல்கி மாநாட்டில் தோழர் தம்பையா கலந்து கொள்கிறார்.

thambayaபுதிய – ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா புது டெல்லியில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் இயக்க மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்க கட்சிகளின் ஒன்றான இந்திய சோஷலிச ஐக்கிய மத்திய நிலையத்தின் 2வது அனைத்திந்திய மாநாடு புது டெல்கியில் இம் மாதம் 16ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை நடைபெறுகிறது. இம் மாநாட்டில் புதிய – ஜனநாயக கட்சியின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளும் தம்பையா இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமை, தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்க நிலைமைகள் சம்மந்தமாக இடம் பெறும் விவாதங்கள் கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாக்சிச லெனினிசக் கட்சிகளின் பிரதிநிதகளுடனும் தோழர் தம்பையா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை உப்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவார். அத்துடன் அங்கு இடம் பெறும் பொது மக்கள் கலந்து கொள்ளும் பகிரங்கப் பொதுக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.