புதிய ஜனநாயகக் கட்சி – யாழ்ப்பணம் பகிரங்க அரசியல் கருத்தரங்கு:புகைப்படங்கள்!

அண்மையில் புதிய –ஜனநாயகக் கட்சி யாழ்ப்பணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் “ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும்” என்னும் தொனிப்பெருளில் நடாத்திய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க.செந்திவேல், அரசியக்குழு உறுப்பினர் க.தணிகாசலம், வடபிரதேசச் செயலாளர் கா.கதிர்காமநாதன் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினரையும் படத்தில் காணலாம்

One thought on “புதிய ஜனநாயகக் கட்சி – யாழ்ப்பணம் பகிரங்க அரசியல் கருத்தரங்கு:புகைப்படங்கள்!”

  1. ‘உறுதியான மாற்று அரசியலே மக்களுக்கான எதிர்காலம்’ ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும் பற்றிய கருத்தரங்கு நெருக்கடியான காலகட்டத்திலும் துணிச்சல்மிக்கது. அதுமட்டுமல்ல கருத்தரங்கின் தொனிப்பொருள் மிகமிகத்தெளிவானது. இவர்களைப் போன்றதொரு துணிச்சல் சிங்களப் பேரினவாதிகளுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் வரவில்லை? மக்கள் மத்தியில் சென்று தங்களது கருத்தைக் கூட சொல்ல முடியாத இவர்களா தமிழ் மக்களின் பிரதிநிதிகள்? இவர்களால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயன்களும் கிடைக்கப் போவதில்லை. இவர்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் அடிமைகளாக்கவே விரும்புகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். -சாந்தா-

Comments are closed.