புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு) : ஐயர்

இந்த இரு வருட எல்லைக்குள் பல உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பண்ணைகளின் தேவை அதிகமாகிறது. எமது இயக்க உறுப்பினராவதற்கான நுழைவாயில் பண்ணைகள் தான். அங்குதான் அவர்களின் உறுதித்தன்மை பரிசீலிக்கப்படும். தேடப்படுபவர்களோ, முக்கிய உறுப்பினர்களோ பொதுவான பண்ணைகளில் நிரந்தரமாகத் தங்குவதில்லை.

பண்ணை வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் பலர். காடு சார்ந்த பிரதேசங்களிலும், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளிலும், எந்த வகையான மத்தியதர வாழ்க்கைக்கும், பண்பிற்கும் உட்படாத தனிமைப்பட்ட வசதியற்ற பண்ணைகளில் போராட வேண்டும் என்ற உறுதியோடு இறுதிவரை தாக்குப்பிடிக்கும் உறுப்பினர்களே இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாகச் இணைத்துக்கொள்ளப்படுவர்.

80 களில் புலிகள் இயக்கத்தின் அறியப்பட்ட போராளிகளாகத் திகழ்ந்த பலர் 1977 களின் இறுதியிலிருந்து எம்மோடு பண்ணைகளிலிருந்தவர்கள் தான். பண்ணைகளை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் என்னிடமே வழங்கப்பட்டிருந்தது. அவற்றை ஒழுங்குபடுத்துவதும், பண வசதிகள் குறித்து செயற்படுவதும், உறுப்பினர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதும், எனக்குப் பாரிய சுமையாகவிருந்தது. நான் ஓரிடத்தில் ஒரு நாளிற்கு மேல் தங்குவதே முடியாத ஒன்றாக அமைந்திருந்தது. பண்ணைகளிடையே பயணம் செய்வதும் ஒழுங்குபடுத்துவதும் பிரதான பணியாக அமைந்தது. பிரபாகரன் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கு புதிய பண்ணை உறுப்பினர்கள் பலரை தெரியாதிருந்தது. என்னிடமே அனைத்துத் தொடர்புகளும் முடங்கிப் போயிருந்தன.

முதலில் வவுனியா பூந்தோட்டம் பண்ணையும் தவிர புளியங்குளத்திற்கு அருகாமைலயமந்திருந்த பன்றிக்கெய்த்த குளம் பண்ணையுமே எம்மிடமிருந்தன. பின்னதாக , புதுக்குடியிருப்புக்கு அருகாமையிலுள்ள வள்ளிபுரம் என்ற இடத்தில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம். இது தான் எமது மூன்றாவது பண்ணை.

இப்பண்ணையுடன் ஒரு வீடும் அமைந்திருந்ததால் பல நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமையும் என உறுதிசெய்கிறோம். இங்கு நிலக்கடலை பயிர்ச்செய்கைக்கான நிலம் இருந்ததால் பண்ணையின் பராமரிப்புச் செலவுகளுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்பு இருந்தது. தவிர, ஆயுதங்களை மறைத்து வைக்கவும் இந்த இடத்தைத் தெரிவுசெய்வதாகத் தீர்மானிக்கிறோம். இந்த நோக்கங்கள் அனைத்துக்குமாக இந்தப்பண்ணையை 25 ஆயிரம் ரூபா பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்கிறோம். பன்றிக்கெய்தகுளம் பண்ணையைப் போலவே இந்தப் பண்ணையும் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்திருந்தது.

இப்ப்பண்ணை இயங்க ஆரம்பித்த உடனேயே மாங்குளம் பகுதியிலிருந்த கல்மடு என்ற இடத்தில் பண்ணையை உருவாக்குகிறோம் . இந்தப்பண்ணையை நாம் விலைகொடுத்து வாங்கவில்லை. இது காட்டுப்பகுதியில் அமைந்திருந்தது. முன்னதாக விவசாயம் செய்யும் நோக்குடன் இந்தப்பண்ணை காட்டுப்பகுதியில் தனியார் சிலரால் உருவாக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பராமரிக்கும் வசதியீனம் காரணமாக அதனை எம்மிடம் ஒப்படைக்கிறார்கள்.

அவ்வேளை, மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களுக்கான அங்கீகாரம் உருவாகியிருந்த காலகட்டம். இதனால் நாம் விடுதலை இயக்கம் எனத் தெரிந்துகொண்டே எம்மிடம் இந்தப் பண்ணை தரப்படுகிறது.

சிறீமாவோ ஆட்சிக்காலத்தில் இலங்கையில் விவசாயப் பொருளாதாரம் முன்னிலைக்கு வந்திருந்தது . தென்னிலங்கை இடதுசாரி அமைப்புக்களுடன் சிறிமாவோ ஏற்படுத்திய கூட்டு, தேசியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தது.

அந்த வேளையில் முத்தையன்கட்டுப் பகுதியில் பல படித்த இளைஞர்களுக்குக் தோட்டக்காணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காணியை ஒருவர் எமக்கு வழங்குகிறார்.ஒட்டிச்சுட்டானில் அமைந்திருந்த இந்தத் தோட்டக்காணி விவசாயம் செய்வதற்கு ஏற்ற பகுதியாக அமைந்திருந்தது.

இதன் பின்னதாக மடு வீதியிலுள்ள முருங்கன் பகுதியில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம் . இதுவும் ஒரு தெரிந்தவர் மூலம் இந்தப் பண்ணையைப் பெற்றுக்கொள்கிறோம். இது காட்டுப்பகுதியில் மிகவும் பாதுகாப்பானதாக அமைந்திருந்தது. இங்கு தங்குமிடம் எதுவும் இருக்கவில்லை. ஒரு தண்ணீர்க் கிணறு மட்டுமே அமைந்திருந்தது. நாங்கள் தங்குவதற்கான கொட்டில்களை அமைத்துக்கொள்கிறோம்.

பின்னர் பன்னாலை என்ற இடத்தில் ஒரு கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்குகிறோம். இது யாழ்ப்பாணப்பகுதியில் உருவான முதல் பண்ணை எனலாம்.

இப்போது எமது பண்ணைகளைக் கிழக்கு மாகாணம் வரை விரிவு படுத்துகிறோம். மட்டக்களப்பில் மியான் கற்குளம் மற்றும் புலிபாய்ந்த கல் என்ற இரண்டு இடங்களில் எமது பண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருகோணமலையில் பண்ணையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை எல்லாவற்றிற்கும் பின்னர் இறுதிக்காலத்தில் திருகோணமலை நகர்ப் பகுதியில் படிப்பகம் போன்ற ஒன்றை ஏற்படுத்துகிறோம். சிறு குடிசை ஒன்றை அமைத்து அங்கு நான்கு அல்லது ஐந்து பேர் வந்து பேசிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மூதூர் பகுதிகளில் பண்ணையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இறுதிவரை

பண்ணை அமைக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை. ஒப்பீட்டளவில் மாங்குளம் பண்ணையும் மடுப்பண்ணையும் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருந்தன. ஏனைய பண்ணைகளில் மன உறுதி மிக்கவர்களாக அடையாளம் காணப்படுபவர்களை இந்த இருபண்ணைகளிலும் சிறிய இராணுவப் பயிற்சிகளுக்காக தெரிவுசெய்து அழைத்து வருவோம். அங்கு சிறிய ரகத் துப்பாகிகளால் சுடப்பழக்குவோம்.

உடற்பயிற்சியிலிருந்து குறிபார்த்துச் சுடுதல் வரை பல நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.காட்டுப்பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதிகளில் அமைந்திருந்த இப்பண்ணைகள் இந்த நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமைந்திருந்தது.

தவிர தேவிபுரத்தில் தென்னம் தோட்டம் ஒன்று ஒரு வயதான பெண்ணிற்குச் சொந்தமாக இருந்தது. அவரது மகன் கூட இயக்கத்தில் இணைந்திருந்தார். ரத்தினம் என்ற அவரது மகன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்திருந்தார். இந்தத் தென்னந்தோப்பும் எமது இயக்கத்திற்கு வழங்கப்பட நாம் அதனையும் ஒரு பண்ணையாகப் பாவிக்கிறோம். இந்தப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும்,  நிர்வகிக்கும் பொறுப்பு என்னிடமே இருந்தது.

இந்தப்பண்ணைகளில் ஏறக்குறைய ஐம்பது பேர்வரை இணைந்திருந்தனர். பொதுவாக அனைவருமே மத்தியதரவர்க்க இளைஞர்களாக இருந்தனர்.இவர்களிடம் கணக்கு எழுதி வாங்குவது மட்டும் சிரமமான வேலைப்பகுதியாக எனக்கு இருந்தத்து. மத்திய குழுக் கூட்டங்களில் நான் கணக்குகளைச் சமர்ப்பித்தாலும் யாரும் அவற்றைப் பெரி;தாகப் பரிசீலிப்பதில்லை. அந்தளவிற்கு எம்மத்தியில் பரஸ்பர நம்பிக்கை இருந்தது.

பண்ணைகளில் இருந்தவர்களைத் தவிர இதே காலத்தில் வெளியே இருந்து இயக்கத்திற்கு முழு நேரமாக வேலை செய்பவர்கள் சிலரையும் இணைத்துக் கொள்கிறோம். இவர்களுக்கும் இயக்கச் செயற்பாடுகளுக்காக வெளியே அனுப்பப்படுபவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இது தவிர பண்ணைகளின் உறுப்பினர்கள் தொகை, வசதிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பண்ணைகளுக்கான பணம் வழங்கப்படும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று சிகரட் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த வேளைகளில் வழமையான சண்டைகளெல்லாம் வந்து ஓயும் தருணங்களும் உண்டு. ஒருவரது சிகரட்டை மற்றவர் திருடுவதும், அதற்காக மற்றவர்கள் முறையிடுவதும் போன்ற குடும்பமாக, பரஸ்பர நம்பிக்கைகளுடனும் உறுதியுடனும் எமது உறுப்பினர்கள் வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.

ஒவ்வோரு பண்ணைகளிலும் முதலில் இணைந்து கொண்ட உறுப்பினர்களே பொறுப்பாக இருந்தனர். பண்ணைகளில் வேலைப்பழு அதிகமாக எனக்கு உதவியாக குமணனும் மாதியும் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். நான் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப் பண்ணைகளிற்கு ஒரு தடவை தான் சென்று வந்துள்ளேன். குமணன்,மாதி ஆகியோரே இவற்றின் தொடர்பாளர்களாக இருந்தனர்.

பிற்காலத்தில் மனோ மாஸ்டரும் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களுடனான தொடர்புகளுக்கு எனக்கு உதவியாகச் செயற்பட்டார். குமணன்,மாதி,மனோ மாஸ்டர் ஆகியோரின் உறுதி மிக்க உற்சாகமான செயற்பாடுகள் மறக்கமுடியாதவை.

பண்ணைகளில் எமக்குக் குறித்தளவு வருமானமும் இருந்தது. ஒட்டிச்சுட்டனில் வெங்காயம் மிளகாய் போன்ற பயிர்ச்செய்கைகளும்,பன்றிகெய்த குளத்தில் நெற்செய்கையும் மேற்கொண்டோம். இவற்றை ஒழுங்படுத்துவதும், வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக்கொள்வதும் என இயக்க வாழ்க்கை சுமையானதாகவும், வேகமானதாகவும் ஒரு சில வருடங்களுள்ளேயே மாறிவிட்டது.

பிரபாகரன் , உமா மகேஸ்வரன், நாகராஜா போன்ற தேடப்படும் உறுப்பினர்கள் பண்ணைகளுக்கு சென்றுவருவதில்லை என்பதால் அவர்களுக்கு பண்ணை உறுப்பினர்களுடன் அதிக தொடர்புகள் இருந்ததில்லை. ஒரு குறித்த காலத்தின் பின்னர் மத்திய குழு உறுப்பினர்களும், தேடப்படுகிறவர்களும் மடுப் பண்ணையில் தங்கியிருந்தோம். நான் ஒவ்வொரு பண்ணைகளுக்கும் சென்றுவருவதால் நிரந்ததரமான தங்குமிடம் ஒன்று இருந்தில்லை.

உமா மகேஸ்வரன் , செல்லக்கிளி, ராகவன், நாகராஜா, கறுப்பி என்ற நிர்மலன், சற்குணா போன்றோர் மடுப் பண்ணையிலேயே தங்கியிருப்பர். வெளியே சென்று பண்ணைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு சித்தப்பா (ஞானம); ஆகியோர் செயற்பட்டனர். தவிர இங்கு இராணுவப் பயிற்சிகளும் மேற்கோண்டோம்.

இந்தப் பண்னையில் நம்பிக்கைகுரிய மூத்த உறுப்பினர்களும், தேடப்படுவோரும் தங்கியிருந்தனர். முக்கியமானவர்கள் மாங்குளம் பண்ணைக்கும் மடுப் பண்ணைக்கும் இடையே மாறி செல்வது வழமை. சாந்தன் கிட்டு போன்றோரும் மாங்குளத்தில் தான் தங்கியிருந்தனர். மாங்குளம் பண்ணை இரண்டாம் கட்டத் தெரிவுக்கான மையம் போல் செயற்பட்டது. உதாரணமாக,கிட்டு இயக்கத்தில் இணைந்து மூன்று மாதங்கள் அளவில் தேவிபுரம் தென்னந்தோப்புப் பண்ணையில் தங்கியிருந்த பின்னர் மாங்குளத்திற்கு இடம் மாற்றப்படுகிறார். அவர் இயக்கத்திற்கு ஏற்ற உறுதியான மனோவலிமை உடையவர் என அடயாளம் காணப்பட்ட பின்னர், மேலதிக பயிற்சிகளுக்காக இங்கு இடம் மாற்றப்படுகிறார்.

சேகுவேரா மக்களோடு தோட்டமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டாராம் என்று நீண்ட காலத்தின் பின் தான் அறிந்து கொள்கிறோம். போராட்டம் வெற்றியடைந்த தேசங்களிலெல்லாம் வெகுஜன அமைப்புக்களும் கூட்டுப்பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. போராளிகள் மக்களோடு இரண்டறக் கலந்திருந்தனர். மக்களிலிருந்து தனிமைப்பட்ட பண்ணைகளைத் தான் நாங்கள் உருவாக்கினோம். எங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என்ற ஞானோதயம் உருவான போது எல்லாமே முடிந்துவிட்டிருந்தது. இன்னொரு போராட்டம் எழுந்தால் இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு.

இந்தக் காலப்பகுதியிலேயே உழவு இயந்திரம் ஒன்றையும் , விசைப் படகு ஒன்றையும், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

படகிற்குப் பொறுப்பாக குமரப்பாவும் , மாத்தையாவும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீன் பிடித் தொழில் செய்துகொண்டே படகையும் பராமரித்துக் கொள்கிறார்கள். படகைப் பராமரிப்பதற்காகவும் மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளவும் இவர்கள் இருவரும் பண்ணையிலிருந்து வெளியிடத்தில் தங்கியிருந்தனர்.

உழவு இயந்திரம் தேவிபுரத்திலேயே விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. செல்லக்கிளி ஒரு உற்சாகமான போராளி, அவருக்கு உழவுதொழில் கைவந்த கலையாக இருந்தது. அவர் தான் தேவிபுரத்தில் விவசாயம் செய்வதில் தீவிரமாக இருந்தவர்.

 

மோட்டர் சைக்கிள் யாழ்ப்பாணத்திலேயே பாவிக்கப்பட்டது. எமது மத்திய குழு உறுப்பினராக இருந்த தங்காவிடம் தான் அது இருந்தது. அவர் இந்தக் காலப்பகுதியிலேயே இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் போது அதனை எம்மிடமே ஒப்படைக்கிறார்.

தங்காவைத் தொடர்ந்து, லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்துகொண்ட விச்சுவும் இயக்கத்திலிருந்து விலகிக்கொள்கிறார்கள். தங்கா ஒதுங்கிக்கொண்டதற்கான குறிப்பான எந்தக் காரணங்களும் சொல்லப்படவில்லை. ஆரம்பத்தில் இயக்கத்துடன் தனது வேலைகளைக் குறைத்துக்கொண்டவர், பின்னதாக முற்றாகவே செயற்பாடின்றி விலகிவிட்டார்.

விச்சுவிற்கு , உமாமகேஸ்வரனுடன் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிபெற்ற காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்ந்தவண்ணமே இருந்தது. இதே வேளை இங்கிலாந்தில் இருந்து சார்ள்ஸ் போன்றோரின் அரசியல் நடவடிக்கைகளோடு ஏற்பட்ட தொடர்புகளும் அவரை விலகுவதற்குத் தூண்டியிருக்கலாம் என நம்பப்பட்டது. விச்சுவை கொலைசெய்ய முற்பட்டாலும் பின்னதாக அது நடைபெறவில்லை.

நான் எமது முதல் பண்ணைக்காக உறுப்பினர்கள் வந்து சேர்வார்கள் என்று புகையிரத நிலையத்தில் காத்திருந்து இறுதியில் நிர்மலன் மட்டுமே வந்து சேர்ந்த போது ஏற்பட்ட விரக்தி மூன்று வருட எல்லைக்குள் மிகுந்த உற்சாகமாக மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேலான முழு நேர உறுப்பினர்கள். பலரின் ஆதரவு. உறங்குவதற்குக் கூட நேரமின்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயற்பட்ட அனைவரதும் அர்ப்பணிப்பும் தியாகங்களும் அளப்பரியவை. விடுதலை என்று வியாபாரமாக மாறிவிட்ட இன்றைய சூழல் அல்ல நாம் வாழந்த காலம்! அது அர்ப்பணிப்புகளோடு கூடியது.

பிரபாகரன், கலாபதி, ராகவன் குலம், செல்லக்கிளி, சற்குணா, சித்தப்பா என்ற ஞானம், கறுப்பி என்ற நிர்மலன், நாகராஜா, கணேஸ்வாத்தி, பேபி சுப்பிரமணியம், தங்கா, பாலா, விச்சு, உமாமகேஸ்வரன், சாந்தன், குமணன், மாதி, பண்டிதர், சுந்தரம், சிறி என்ற மாத்தையா கிட்டு, குமரப்பா என்ற குமரன், சங்கர், கண்ணன் என்ற சிவனேஸ்வரன, காத்தான், பீரிஸ், யோகன், பவானந்தன் மரைக்கார், ராஜன், மனோ மாஸ்டர், அழகன், நந்தன், நெப்போலியன், சசி, ரத்தினம், சிவம், சோமண்ணை, முஸ்தபா, சற்குணாத்தம்பி,காந்தன் டானியல் என்ற தயாளன், இந்திரன், செயந்தன், பொன்னம்மான்,ராம் என்ற ஐயர் ஆசீர், புலேந்திரன்,ஜெயாமாஸ்டர்,ரகு, வீரபாகு,சாத்திரி,லாலா என்ற ரஞ்சன், ரவி, போன்றோர் முழுநேர உறுப்பினர்களாக, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது இயக்கம் வேகமாக வளர்ச்சிபெறுகிறது.

ஒரு தேசத்தின் விடுதலைக்கான பணியின் சுமையை எமது தோள்களில் உணர்கிறோம். இவர்களோடு கூடவே பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகக் கல்விகற்றவாறே எம்மோடு இணைந்திருந்த அன்ரன் என்ற சிவகுமார்,தனி, கே.பி. என்ற குமரன் பத்மநாதன் ஆகியோரும் எனது தொடர்பு வட்டத்துள் புலிகளுக்காகச் செயற்படுகின்றனர்.

திருகோணமலையில் நான் அதிகமாகச் சந்திக்க வாய்ப்பற்றறிருந்த இளைஞன் ஜான் மாஸ்டரும் இணைந்து கொள்கிறார். இவர்களோடெல்லாம் எனது தோழமையுள்ள இனிய நினைவுகள் என்றும் பசுமையானவை. ஒரு குடும்பமாய் அவர்களின் துயரங்களோடும், மகிழ்வுகளோடும், அவர்களது போராட்ட வாழ்க்கையோடு இழப்பதற்கு எமது உயிரைத் தவிர ஏதுமின்றி கலந்திருந்த காலங்களோடு எனது எனது நினைவு நரம்புகள் வேர்விட்டுப் படர்ந்துள்ளது. இந்த நினைவுகளை இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்வேன்.

இன்னும் வரும்…

பாகம் ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

77 thoughts on “புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு) : ஐயர்”

 1. கண்ணன் – ஜோதீஸ்வரன்

  சிவனேஸ்வரன் -நிரஞசன் அல்லது காக்கா என்று நினைக்கிறேன்

  1. பண்டத்தரிப்பு, வடலியடைப்பை சேர்ந்த “கண்ணன் – ஜோதீஸ்வரன்” – தற்போதைய நல்லிணக்க அமைச்சரால் நயவஞ்சகமான முறையில் கொல்லப்படார்.

   உடுவிலை சேர்ந்த “சிவனேஸ்வரன் -நிரஞசன் அல்லது காக்கா” – யாரால் எதற்க்காக கொல்லப்படார்?

   1. உடுவிலை சேர்ந்த “சிவனேஸ்வரன் -நிரஞசன் அல்லது காக்கா” – யாரால் எதற்க்காக கொல்லப்படார்?

    உமாவின் திருமணம் பற்றிய மாற்று கருத்தினால் “காக்கா ” புளட்டினாலேயே கொல்லப்பட்டார்.

    1. அப்படியென்ன மாற்றுக் கருத்து? உமா விரும்பின பெண்ணைத்தானே திருமணம் செய்தார்? அத்துடன் உமாவிற்கு காக்காவின் குடும்பம் பாதுகாப்பு சம்பந்தமான உதவிகள் பல செய்திருந்தது. காக்காவை சங்கிலி “B” camp இனுள் வைத்து கொடூரமாக கொன்றது என்று கேள்வி. ஆரம்பத்தில் புலியில் உட்கொலைகள் பின்பகுதியில் புளட்டில்.

     1. ”ஆரம்பத்தில் புலியில் உட்கொலைகள் பின்பகுதியில் புளட்டில்.”

     2. புலியின் தலைவர்தானே புளட்டுக்கும் தலைமை தாங்கினார். ஆனால் உள் கொலைகளினால் புலி இராணுவ ரீதியில் பெரிய பாதிப்படையவில்லை ஆனால் புளட் அழிந்தே போனது.

    2. mamani

     என்ன மாற்றுக் கருத்தால் கொல்லப் பட்டார் என்று நிங்கள் சொல்லவில்லையே?

     1. திருமணம் இப்போ அவசரம் இல்லை முகாமில் இருக்கும் தோழர்கள் சோர்ந்து போவார்கள் என்பது “காக்கா” வின் வாதமாகவும் உமாவை எதிர்த்து பேசியதை வரட்டு வாதமாக கந்தசாமி வைத்து ஈற்றில் கந்தசாமி- காக்கா ஈகோ பிரச்சனையாக உருவெடுத்து ஈற்றில் காக்கா கொல்லப்பட்டதாகவும் அவரை தேடி வந்த உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டோ அன்றி மிரட்டப்ப்பட்டதாக அறிந்தேன்.

     2. சிவனேஸ்வரனின் சகோதரன விக்கினேஸ்வரன் என நினைக்கிறேன் . கொல்லப்பட்டார் . அத்துடன் அகிலன் என்றவரும் கொல்லப்பட்டார் . இப்படியாக உடுவிலை சார்ந்து 4 பேரிற்கு மேல் உட் கொலை .
      அச்சுவேலியில் ஒரு ஆறு பேர் B காம்பில் .
      ராஜ்மோகன் என்ற மாணவ்ரமைப்பு தலைவன் , திருமலை செல்வன், அகிலன் பின்பு மென்டிஸ் குழுவால் சவகச்சேரிப்பயிற்சியில் கொல்லப்பட்ட இளைஞர் இருவர் , அவர்களைக் கொன்ற யமாகா என்றவனையும் அவனது கூட்டாளியையும் கொன்ற மென்டிஸ் குழு , இப்படியாக் 50 – 100 உட் கொலை புளொட்டில் நடந்திருக்கிறது. இவர்கள் இவற்ரை மூடி மறைத்தே அரசியல் செய்கிறார்கள் . மற்ரவர்கள் கணக்கைக் கூட்டிச் சொல்லியும் அர்சியல் செய்கிறார்கள் . ஏன் இவர்களின் பெயர்களை வெளியிட முடியாது .உண்மையான் விபரத்தை ஏன் பிளொட்டில் இருந்தவ்ர்களால் வெளியிட முடியாது – பெயருடன்.

     3. விக்னேஸ்வரன் கொலை சம்பந்தமான உண்மையான விபரங்களை எவ்வளவு முயன்றும் எங்களால் பெறமுடியவில்லை.காக்கா கொலைசெய்யப்படுவதற்கும் குற்றம்சாட்டுவதற்கும் புரட்சிகர ஈழ விடுதலைக் கழக தலைமை உறுப்பினா;கள் உறவினா;’களாக இருந்தமை கொலைகாரா;களுக்கு ஏதுவாக இருந்தது என்பதே உண்மை.

     4. இளம்குமரானே எண்பதுகளில் மற்ற இயக்கங்களிலும் பார்க்க புலோட்டிலதான் கூட உட்கொலைகள், கூடுதலான கொலைகள் பிழைகளை சுட்டிக் காட்டினவைய, நியாயத்தை திருப்பி கேட்டவையை, விமர்சனம் செய்தவைய, கூடுதலா கொலை செய்யப்பட்டவை படிச்ச பெடியளும், அரசியல் தெரிந்த்த்வயலும், விமர்சனம் வைத்த பழைய உறுப்பினரும். உமா பழைய முரண்பாடினால் விச்சுவையும் கடத்தி வைத்து, விச்சு தப்பினதா அறிந்தது.

      உண்மைகள் உறங்குவதில்லை எண்டு சொல்றவை புலோட்காரர் இனி எலக்க்ஷன் காலத்திலாது வாக்கு கேட்கு முன் மக்கள் மத்தியில் செல்லேக்கே புளொட்டில் காணாமல் போனவைக்கு என்ன நடந்ததெண்டு விபரம் வைப்பினமோ?

      ஆனா இந்த உட்கொலை செய்தவை, அவெண்டை கண்டும் காணாது வால் பிடித்து இருந்த கூட்டம் இப்பவும் வெளிநாடுகளில சந்தோஷமா தாங்களும் ஒரு மனுஷர் எண்டு திரியினம். இவையால் எல்லாரையும் அம்பலப்படுத்த்வேனும். எல்லாரும் உங்களுக்கு திரிந்த விஷயங்களை சேகரித்து வெளியிடுங்கள். அப்படியென்றாலும் அதுகளிண்டை ஆத்மா சாந்தியடியும்.

     5. மணியம் அண்ணா வணக்கம் . நான் உங்கள் கருத்துடன் முரண் படவில்லை . எல்லா இயக்கத்திலும் நல்லவர்கள் , படித்தவ்ரகள் ,விடுதலையை நேசித்தவ்ரகள் தான் பெரும்பான்மை .தப்பியுளவ்ர்கள் எல்லொரும் குறைந்தது ஒரு முறையாவது உயிராபத்தைத் தாண்டித்தான் வந்திருப்பர்கள் . நன்ன் கேட்பது புளட்டில் உட்கொலை செய்யப்பட்டவ்ர்களின் பெயர் விபரம். சிலரின் பெயர் வெளி விடுவதால் , ஏதாவது அவ்ர்களின் குடும்ம்பத்துக்கு ஆபது எனில் வரது ஊர் விபரம் . இதையே எழுதத் தொடங்குங்கள். படித்தவ்ர்கள் அறிவாளிகள் என்று சொன்னால் உண்மை வெளிவராது
      1 . சிவனேஸ்வரன் காக்கா_ உடுவில்
      2 . விகினேஸ்வர்ன் : உடுவில்
      3. அகிலன் -உடுவில் – சுண்ணாகம் . ஐயர் என நினைக்கிறேன்
      4. அகிலனின் நண்பன் . அதே பகுதியை செர்ந்தவ்ர் – உளவுப் பிரிவில் தளத்தில் சத்தியமூர்த்தி , ரம்ணன் ஆகியோருடன் வேலை செய்தவர்
      5. ராஜ்மோகன் – மாலை தீவில் கொல்லப்பட்ட வசந்தியின் ஒன்றுவிட்ட சகோதரன்
      6. அச்சுவேலி ஆறு இளைஞர்கள்
      7.
      8.
      9.
      10.
      11.
      12. செல்வன் – பல்மருத்துவ மாணவன் – திருமலை
      14.அகிலன் – அவனதி நண்பன் .
      15. சிவா – கொக்கு சிவா – தீப்பொறி நேசனின் அண்ணா
      16.யமாகா பொறுப்பு வகித்த காம்பில் இரண்டு இளைஞர்கள் . சாவகச்சேரி
      17.
      18.யமாகா – மென்டிசால் கொல்லப்பட்டான்
      19. யமாகாவின் நண்பன்
      20. சந்ததியார் .
      இடைவேளியை நிரப்புங்கள் …
      மிகுதி எனக்கு தெரியாது . பிந்தளத்தில் நடந்தது பல என்க்குத்தெரியாது.
      தெரிந்தவர்கள் எழுதுங்கள் ….

    3. mamani, புலியும் புளொட்டும் (உமாவும் பிரபாவும்) உடைஞ்சதுக்கும் உர்மிளாதானே காரணம். பிரபாவும் முல்லிவைக்கால மண்டையப்போட்டதுக்கும் கலியாணம் கட்டினதுதானே காரணம். ஒரு உயிர் வாழ ஆசை.

     ஆனா உங்க வாதமும் சரி
     புலியின் தலைவர்தானே புளட்டுக்கும் தலைமை தாங்கினார். ஆனால் உள் கொலைகளினால் புலி இராணுவ ரீதியில் பெரிய பாதிப்படையவில்லை ஆனால் புளட் அழிந்தே போனது.

     1. உமா-பிரபா பிரிவிற்கு ஊர்மிளா முக்கிய காரணமல்ல ஆனால் அப்படி சிருஷ்டிக்கப்பட்டது.
      பிரபாவின் ஏகபோக தலைமைத்துவ ஆசைதான் பல கொலைகள் பிரிவுகளிற்கு காரணம். உமாவுடன் லெபனான் பயிற்சிக்கு சென்ற விச்சு என்பவர் புளட்டினால் கைது செய்யப்பட்டு பின் மதன் என்பரால் விடுவிக்கப்பட்டார். அதற்காக மதனும் அவருக்கு உதவி செய்த பண்ணையாரும் கொல்லப்பட்டனர்.

  2. பண்டத்தரிப்பு, வடலியடைப்பை சேர்ந்த “கண்ணன் – ஜோதீஸ்வரன்” – தற்போதைய நல்லிணக்க அமைச்சரால் நயவஞ்சகமான முறையில் கொல்லப்படார். -வாசுதவாவாவும் வேரு பலரும்

   1. யமகாவை கொலை செய்தாக கூறப்படும் மெண்டிஸ் எந்த விதத்திலும் சிவனேஸ்வரன் கொலையில் சம்மத்தப்படவில்லை. விஜயபாலன் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன மெண்டிஸ் பல உள்கட்சி கொலைகளை தடுத்திருகிறார்.நீங்கள் குறிப்பிடும்நபர் பாலமோட்டை சிவம் அல்லது பெரிய மெண்டிசாவிருக்கலாம்.

 2. ஆரம்பகால உறுப்பினர்களில் இருபது வீதத்திற்க்கு மேலோனோர் இயக்கங் களாலேயே கொல்லப்பட்டுள்ளனர் போல் தெரிகின்றது.மனோமாஸ்டர்,குமணன்,காக்கா காத்தான் என அழைக்கப்படும் ஜோதீஸ்வரன்,மாத்தையா,நெப்போலியன்,உமாமகேஸ்வரன்,சந்ததியார்,ஒபரோய் தேவன்,ரெலிஜெகன்,சிறிசபாரத்தினம்,பத்மனாபா,கண்ணன் என்ற ஜோதிஸ்வரன்,டானியல்,சுந்தரம் இவை எமக்கு தெரிந்த சிலர். தெரியாமல் எத்தனைபேர்?.கொல்லப்பட வேண்டியவர் பட்டியலில் இருந்தவர்கள் எத்தனை பேர்?விபரம் தெரிந்தவர்கள் வெளியிடுங்கள்.

  1. மனோமாஸ்டர் –?
   ,

   குமணன் — ? , காக்கா காத்தான் — இ

   ராணுவம் , மாத்தையா — புலி , நெப்போலியன் — ? , உமாமகேஸ்வரன் — புளட்(றோ) ,சந்ததியார் –புளட் , ஒபரோய் தேவன் — புலி , ரெலிஜெகன் — புலி , சிறிசபாரத்தினம் — புலி , பத்மனாபா — புலி ,கண்ணன் என்ற ஜோதிஸ்வரன் — புலி , டானியல் — ? , சுந்தரம் -புலி

   1. சந்ததியாரையும் சங்கிலிதான் போட்டது, இதற்க்கு உடன்தயாயிருன்தவை இப்பவும் லண்டனிலும் கனடாவிலும் இருக்கினம், சந்ததியோடை சேத்து எத்தனையோ படித்த இளம் பெடியள் அரசியல் பேசினதிற்கு கொல்லப்பட்ட அநியாய கொலைகள்.

    1. சந்ததியாரால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் இறை,உமா குமார்களுமிருக்கிறார்கள்.

     விடுதலைப் போராளிகளாக வார்க்கப்படுவதற்கான வாய்ப்புத்தான் இருக்கவில்லையே.

     கசாப்புக் கடைக்காராகவல்லவா வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.

     1. எதிர்த்துக் கதைத்தால் கொலை! அப்படிஎன்றால் எப்படி இயக்கப்போராளிகள் தமது அறிவை வளர்த்துக்கொண்டார்கள்?

   2. புலோட்டினுள்ளும் றோ இருந்ததோ?

    1. MANIYAM-INDIYAVIL KALAM AMAITHU SEYARPPATTA ANAITHU AMAIPPUKALILUM RAW OODURUVI IRUNTHATU. IVARKAL INDIA ARASIN VARKKA NALANAI PURINTHU KOLLAVILLAI. UMAMAGESWARAN PURATCHI PESI IRUKKAKAM. AVVARU AMAIPPU SEYARPADAVIDAMAL THAVARAKA RAW ANAIVARAIYUM VALI NADATHIYATHU. ULAGA MUTHALALIKALIN KAVALAN AMERIKKA CIA-SOUTH ASIA KAVALAN RAW. ARASIYAL ARIVILIKAL ANAIVARUM RAW VAI NAMPINARKAL. MAKKAL VIROTHIYAKA MARINARKAL. MARATHAVARKAL.ALIKKAPPATTARKAL

   3. மனோமாஸ்டர் –
    ,

    காக்கா (சிவனேஸ்வரன்) புளட்
    காத்தான் (கிருஸ்ணகுமார்) – புளட் பிரிந்த பொழுது புலிகளால் இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்கப்ப்டார் , ஆதாரம் இல்லை . ஐயர் தெரிந்தால் எழுதுங்கள்

    ராணுவம் , மாத்தையா — புலி , நெப்போலியன் — ? , உமாமகேஸ்வரன் — புளட்(றோ) ,சந்ததியார் –புளட் , ஒபரோய் தேவன் — புலி , ரெலிஜெகன் — புலி , சிறிசபாரத்தினம் — புலி , பத்மனாபா — புலி ,கண்ணன் என்ற ஜோதிஸ்வரன் — புலி , டானியல் — ? , சுந்தரம் -புலி
    இறை,உமா – புளட்

    1. மனோமாஸ்டர் – ரெலோவில் இருந்து ஒதுங்கி இருந்த பொழுது புலிகளால் கொல்லப்பட்டார்

 3. “ உறங்குவதற்குக் கூட நேரமின்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயற்பட்ட அனைவரதும் அர்ப்பணிப்பும் தியாகங்களும் அளப்பரியவை. விடுதலை என்று வியாபாரமாக மாறிவிட்ட இன்றைய சூழல் அல்ல நாம் வாழந்த காலம்! அது அர்ப்பணிப்புகளோடு கூடியது.”
  ஐயர் அவர்களே தியாகங்கள் அனைத்தும் அளப்பரியவையே.ஐம்பது போராளிகள் அர்ப்பணிப்போடு இருந்த காலம். பின்னர் ஆயிரம் போராளிகள் அப்படி மாறியிருந்தார்கள்.உங்கள் ஒப்பீடு போராளிகளை கொச்சைப்படுத்துகிறது.உறஙுவதற்கு நேரமில்லாமல் உண்ண நேரமில்லாமல் முழு அர்ப்பணிப்போடு ஆயிரம்பேர் இருந்திருக்கிறார்கள்.உயிரை கொடுத்திருக்கிறார்கள்.
  விடுதலையை வியபாரமாககருதுபவர்கள் எண்ணிக்கை இப்போதும் அப்போதும் ஒன்றுதான். 25/50தியாகிகளும் அர்ப்பணிப்பானவர்களும் நேற்றுவரை இருந்திருக்கிறார்கள்.அவர்களால்தான் நீங்கள் தொடக்கிவைத்த நெருப்பு இன்றுவரை எரிய முடிந்தது.அவர்களால் பதில் சொல்லமுடியாது ஏனென்றால் உண்மையான அர்ப்ப்ணிப்பு உள்ளவர்கள் உயிரோடில்லை.வரலாற்றை எழுதுங்கள் ஒப்பிடுவதும் பொதுமைப்படுத்துவதும் தர்க்கரீதியாகவும் இங்கு தவறாகிறது. எனென்றால் அது இன்றைய  சூழலல்ல நீங்கள் வாழ்ந்த காலம்.
  உங்கள் காலத்துக்கு ஓரளவு ஒத்துப்போவது புலனாய்வுப்போராளிகளதும் ரெக்கி போராளிகளின் வாழ்வும்தான். சமர்க்களத்து தியாகங்கள் அர்ப்பணிப்புகள் சரிதங்கள் ஏராளம்.
  வேண்டாமே இப்படி பின்னர் இந்த சரிதமும் ஒரு வியாபாரமாகிவிடும்.   

 4. அய்யரே!

  “ஒருவரது சிகரட்டை மற்றவர் திருடுவதும், அதற்காக மற்றவர்கள் முறையிடுவதும் போன்ற குடும்பமாக, பரஸ்பர நம்பிக்கைகளுடனும் உறுதியுடனும் எமது உறுப்பினர்கள் வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.”………

  “இவர்களோடெல்லாம் எனது தோழமையுள்ள இனிய நினைவுகள் என்றும் பசுமையானவை. ஒரு குடும்பமாய் அவர்களின் துயரங்களோடும், மகிழ்வுகளோடும், அவர்களது போராட்ட வாழ்க்கையோடு இழப்பதற்கு எமது உயிரைத் தவிர ஏதுமின்றி கலந்திருந்த காலங்களோடு எனது எனது நினைவு நரம்புகள் வேர்விட்டுப் படர்ந்துள்ளது.”

  இந்த வரிகள் வரலாற்றின் வளர்ச்சிப் படிக்கட்டுகள்.ஒரு முதிர்ச்சியின் மனவெளிப்பாடு.இவ்வாறான சிந்தனைகள் இன்று இருப்போருக்கு பிறக்காதா?

  மறுபடியும் எனது கேள்விகள்.
  உறுப்பினர்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டார்கள்? சேருவதற்கான அடிப்படைத் தகமைகள் என்ன? ஆள் பிடிகாரராக யாராவது செயற்பட்டார்கள? பண்ணைகளிருந்து ஏதாவது வருமானம் வந்ததா? கூட்டணியினரால் எத்தகைய பங்கு இதில் வழங்கப்பட்டது?
  இந்த இயக்க வளர்ச்சியில் குறிப்பிட்ட பல்கலைகழக மும்மூர்த்திகளின்(சிவகுமார்,தனி, கே.பி.) பங்களிப்பு என்ன?

 5. ////விடுதலை என்று வியாபாரமாக மாறிவிட்ட இன்றைய சூழல் அல்ல நாம் வாழந்த காலம்! அது அர்ப்பணிப்புகளோடு கூடியது.//// இந்த வரிகள் என்னையும்
  கஸ்டப்படுத்திச் செல்கின்றன. ஆரம்பகாலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பை அவ்வளவு பெரிய அர்ப்பணிப்புக்களால் கட்டியமைக்கபட்டது அது பின்னர் வியாபாரச்
  சந்தையாக மாறியதுமல்லாலம் எம்மால் ஸ்தாபிக்கப்பட்ட அந்த அமைப்பினுள் புதிதாக நுளைந்தவர்களால் நாம் விலக்கிக் கொள்ள நேரிடுகின்றது. நாம் விலகியதும் .
  அந்த அமைப்பு பிழையான பாதைக்குள் கொண்டு செல்லப்படது. அதன் விளைவுகளே நாம் கடைசியில் அனுபவத்திருக்கின்றோம். தங்கள் ஆதங்கம் புரிகின்றது ஐயரே!!
  இங்கு தோட்டா- வெடிகுண்டு என்ற பெயரில் இயக்கத்தில் இருந்து கொள்ளையடித்த கூட்டத்தினர் சிலர் வந்து தாங்கள் எல்லாம் என்பது போல் பந்தாக்காட்டிக்
  கொண்டிருக்கின்றனர் எனவே அவர்களுக்கு இன்னும் உறைக்கின்றமாதிரி சொல்லுங்கள். நாசமாய் போவானுகள் வன்னிச்சனங்களையே கொண்டுபோய் சாக்காட்டிப்போட்டு இப்பவும் வீரக் கதைபேசிக் கொண்டிருக்கின்றார்கள் அதுவும் தாங்கள் சுத்தமான 22 கரட் தங்கமாம்.

  1. நரேன், ஆரம்பகால உறுப்பினர் சுவிஸ் குலம் தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்பதை மக்களுக்கு தெரியபடுத்தணும்,மக்களிடம் போராட்டத்திற்காக வாங்கியபுணத்தை திருப்பிக்கொடுக்கவேணும் என்று கோரிக்கை வைத்தாராம் சேட்டுக்கிழிய நையப்புடைக்கப்பட்டார். தலைவர் வீரமரணமடந்துவிட்டார் என கே. பி அறிக்கை விட்டார். கைதுசெய்யப்பட்டார்.யாரால்? எதற்காக?
   தலைவர் இருக்கிறாருங்கோ. இருக்கிற சொத்தும் நமக்கே இனிமேல் வசூலிக்கிற சொத்தும்நமக்கே என்று விடுதலை போராட்டத்தை வியாபாரமாக்கிய வே…………. வல்……………………….

   1. இது நானுமறிந்த உண்மை. வியாபாரம் இன்னும் தொடரும் கதை

    துரை

   2. அளவெட்டி சிறியண்ணை! சுவிஸ் குலம் அவர்கள் தலைவர் பிரபாகரன் இறந்துபோனார் என்று அறிக்கைவிட்டு நையபுடைக்கபட்டு சேட்டுக் கிளிக்கப்பட்டார் எனநீங்கள் அறிக்கை விடுவது ஒரு பக்கத்தே இருக்கட்டும். முதலில் நீங்கள் என்ன சொல்லவாறீங்கள் என்பதை தெளிவாய் சொல்லுங்கோ?.. தலைவர் இருக்கிறாரா?
    இல்லையா?.. சரி இருக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஏன் அவர்இருக்கிறார் என்று ஒரு கேள்வி வருமல்லவா? அவர் இருந்து என்னத்தை இனிசெய்யப்போறார் என்று இன்னுமொரு கேளிவி வருமல்லவா?.. அதை விட அவர்இனியும் இருக்கவேண்டுமா?.. என்றும் கேட்கலாம் அல்லவா?…ஒருவேளை அவர்உயிருடன் இருந்தால்?.. வெளியே வரத்தானே வேண்டும். ஆனால் எப்போ வருவார்என்று யாராவது சொல்லுவார்களா? கண்டிப்பாக் அவர் வருவார் என்பதற்குயாராவது உத்தரவாதம் தரமுடியுமா?.. ஒருவேளை அவர் வராமலேபோய்விட்டால்?… அதுவும் தமிழீழக்கனவு போல் கற்பனையாகாதா?.. பிரபாகரனின்
    ஒரு பிறவியே போதும் சாமி. இனியும் மறுபிறவி வேண்டாம். மனிசரை நிம்மதியாகஇருக்க விடுங்கோ?..

    1. “யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்”

    2. வியாபாரத்தை தொடர்ந்து நடத்தவேணும் என்றால் தலைவர் இருக்கிறார் என்றுதானே சொல்லவேண்டும்.

    3. தலைவர் வந்தா போட்டுத் தள்ளுங்கோ? தமிழீழம் கனவு அல்ல, தமிழரின் தாயகம் அது. அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழரின் தாயகமாம் தமிழீழத்தை மீட்க இதுவரை நடந்ததைத்தான் இங்கு வாசிக்கிறோம்.

  2. விடுதலையின் பெயரால் கொலையும் செய்து மற்றவர்களைக்கொல்லக்கொடுத்து விட்டு தன் வாழ்க்கையை தப்பவைத்துக்க்கொண்டு வெளினாடுகளில் வாழ்பவர்கள் தாங்கள் மூட்டிய நெருப்பில் மற்றவர்களை விழ்ஹ வைத்து விட்டு தப்பி வந்துவிட்டு தப்பிலிகதை பேசுகிறவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது?விடுதலயின் பெயரால் இரண்டு வியாபாரங்கள் புலம்பெயர் தேசங்களில் இரண்டு வியாபாரங்கள் .. புலி எதிர்ப்பு , புலி ஆதரவு. இதில் ஈடுபடுபவர்களில்  கொள்ளை இலாபம் இப்போது புலிஎதிர்ப்புக்கு.
   இதில் இழ்ந்துபோனவர்கள் தமிழீழ கனவோடு மரணித்துப்போனவர்கள். புலிகள் 30000 இது தவிர அரம்பகாலங்களில் மரணித்த/கொல்லப்பட்ட மற்றைய போராளிகள் மக்கள்.இதிலும் தங்கள் கொள்கைகளை சட்டையை மாற்றுவதுபோல இந்த உயிர்விளையட்டில் மாற்றிவிட்டு இடையில் விட்டுச் சென்றவர்களப்பின்பற்றி தங்கள் உயிர்களை காவுகொடுத்தவர்களை   என்னத்தை சொல்ல
   தலமைதாங்கும்  இயல்புள்ளவர்கள் ஒரு கூட்டத்தையே ஒருவழியில் செலுத்தி அதன் பெயர்ரல் கொலைகளையும் செய்து பலிகொடுத்து பின்னர் தான் மட்டும் தப்பிவிட்டு தான் விலகிய பின்னர் அவர்கள் தவறு  என்று சொன்னால்  அவை வெறும் கொலைகளாகிவிடும்.நடந்த நடக்கின்ற கொலைகள் எல்லாவற்றிலும் அவர்கள் பங்கு இருப்பதை உணரவேண்டும்.சமூகம் தேசப்பற்று என்கிற பெயரில் கொலைகள் உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்ப்டுகிறது. சிங்களவர்களுக்கு ஒரு புலியை கொல்வது வீரம்.ஒரு வெள்ளைக்கு ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான் என்பது இனிப்பு.தமிழீழம் என்ற பெயரால் எதிரியையும் துரொகியையும் கொல்வது என்பது ஆயுதப்போராட்டத்துடன் ஆரம்பமாகிவிட்டது.துரோகம் அமைப்புக்கு மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.அமைப்புக்கு துரோகம் செய்தவர்கள், அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலானவர்கள் கொல்லப்பட்டார்கள். இது அனைத்து இயக்கஙளுக்கும் பொதுவாகத்தான் இருந்தது.தமிழீழ இலட்சியத்தின் பேரில்தான் அமைப்புக்கள் உருவாகின.
   இலட்சியத்துக்கு விசுவாசமாக அந்த அமைப்புக்கள் தொடர்ந்து இயன்ஙவில்லை.அந்த அமைப்புக்கள் தாமே விசுவாசமில்லாத இலட்சியத்துக்காக கொலயும் செய்து பலியும் கொடுத்தார்கள்.இவை வெறும் சூழ்னிலைக்கொலைகளாகி விட்டது. அவர்களால் துரோகிகளாக்கப்பட்டவர்கள் நிலை என்ன.பலி கொடுக்கப்பட்டவர்களின் நிலை என்ன?
   புலிகளை 22 காரட் தங்கம் என்று சொல்வதும் அவர்கள் தகரம் என்று சொல்வதும் இரண்டும் ஒரே மனப்பான்மையின் இரு வெளிப்பாடுகள்.புலிகள் ஒரு அரசாக செயற்பட்டார்கள்.ஓரு நாட்டை உருவாக்கி நாட்டுக்குண்டான சகல பொறிமுறைகளயும் கொண்டிருந்தார்கள்.மிக வெற்றிகரமாக வியாப்பாரமும் செய்தார்கள்.போராட்ட அமைப்பு ஒரு அரசமைப்ப்பாக இருந்தது. ஓரு போராட்ட அமைப்பை விட்டு அவர்கள அரசு அமைப்பு என்ற இரு முகம் காட்டதொடன்கியபோதே உலகின் போராட்ட வரலாறுகளுக்குள் அடங்காத ஒரு புது வழியாக அமந்து இது எதுவரை இட்டு செல்லும் என்று பல்வேறு ஊகங்களை உருவாக்கியது.ஆனால் தமிழீழம் என்ற கொள்கைக்கு விசுவாசமாக இறுதிவரை பாட்பட்டார்கள்.அதற்காகவே மரணித்தார்கள்.கொலைகள் புரிந்தார்கள். 
   ஒரு விசித்திரமான உண்மை.–எந்த இலட்சியம் என்ற பெயரால் என்னைக்கொன்றானோ அந்த இலட்சியத்துக்காகவே அவனும் இறந்துவிட்டான்  என்று அந்த ஆவிகள் சாந்தியடைந்திருக்கும்.
   எந்த இலட்சியத்துக்காக என்று சொல்லி என்னை கொன்றுவிட்டு, என்னைபலியெடுத்து விட்டு அதே இலட்சியத்தை கைவிட்டு –(தனிப்பட்ட ஈகோ ப்ரச்சினைகள்,குடும்பப்ரச்சினைகள், கொள்கைப்ப்ரச்சினைகள் ) னெஞ்சில் உரமில்லாத நேர்மைத்திறமில்லாத மனிதர்களாக வெளினாட்டில் உட்கார்ந்து கொண்டு அந்தக்காலத்தில் சரி இந்தக்காலத்தில் பிழை என்று பேசிக்கொண்டிருப்பவர்களைப்பார்த்து  அந்த ஆவிகள் சாந்தியடைந்திருக்குமா?
   ஆகக்குறைந்தது நீங்கள் உருவாக்கிய இலட்சியத்துக்காக இறந்த அனைவருக்கும் ஒரு மரியாதை கொடுங்கள்.

   நரேன் நீங்கள் ஏன் விலத்தினீர்?இலட்சியத்துக்கான அர்ப்பணிப்பு உச்சமாக இருந்திருந்தால் ஒரு பதவி ஒரு அடையளமாக ஒரு பணியாக இருந்திருக்கும்.தளபதியும் கிச்சைனில் வேலைக்கு  மாறியிருப்பான்  ஈகோ இருந்திருக்காது.இயக்கம் போராட்ட அமைப்பிலிருந்து ஒரு அரசாக மாறியதன் பின்னர் இந்த பதவிப்போராட்டங்கள் இயல்பாக போய்விட்டது.இயக்கம் சமூகத்தை ப்ரதிபலித்தது.
   எங்கள் சமூகம் இயல்ப்பாகவே அர்ப்பணிக்கும் இயல்புள்ள்து..எந்தத்துறையானாலும் அதை அர்ப்ப்ப்ணிப்பொடுதான் செய்கிறார்கள்.காட்டிகொடுப்பதிலும்தான்.அதனால்தான் இந்த இரத்தக்களரி

   1. புலியின் தலைவர்தானே புளட்டுக்கும் தலைமை தாங்கினார். ஆனால் உள் கொலைகளினால் புலி இராணுவ ரீதியில் பெரிய பாதிப்படையவில்லை ஆனால் புளட் அழிந்தே போனது.

    இயக்கங்களால உஒட்கொலை, வெளிக்கொலை எண்டு எல்லா அநியாயக் கொலையையும் வெளிக்கொண்டுவாருங்கள். ஐயருக்கும் உதவியா இருக்கும், அவயலை இழந்த குடும்பங்களுக்கும் நாங்கள் செய்யிற உதவியாரிருகூம், அவர்களும் நாட்டுக்காக போராட புறப்பட்ட தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று ஏங்கி கொண்டு இருப்பார்கள். இவயலை அம்பலப்படுதவேனும்.

    1. MANIYAM

     PULIKAL VERUM RANUVA AMAIPPAKA IRUNTHARKAL. ATHIKARA POTHAIYIL ANAIVARAIYUM ALITHTHARKAL. UMAMAGESWARAN ARASIYAL(POLI) PESIYA RANUVA AMAIPPAKA IRUNTHAR. POTHAIPORUL KADATHAL MOOLAM PANAM SAMPATHITHARKAL. PANAM SERNTHA POTHUM AAYUTHAM VANGAVILLAI. PIRAPAKARAN ORU KATTATHIL ALINTHVIDUVAR THAN ATHIKARATHTHUKKU VARALAM ENA ENNI IRUPPAR. AAYUTHAM ILLATHAL PLOT AAL PORADA MUDIYAVILLAI. THAVARANA THARUTHALAI THALAIVANANA UMAMAGESWARANAL AMAIPPUKKUL KELVIKAL VARUMPOTHU PATHI SOLLA MUDIYAVILLAI. ALIPPUKAL NADANTHANA

     UMAMAGESWARAN IYAKKATHAI KOOLIPPADAIYAKA NINAITHAN. MALI THEEVUKKU KOOLIPPADAI ANUPPINAN. PIDIPATTA PORALIKAI KAPPATTA VILLAI. ATHAN PINNAR THAN UMAMGESWARANIN SUYA ROOPAM AVARIN ATTKALUKKU THERINTHATHU. POTTU THALLI VIDDRAKAL.

     ANTHA VAKAIYIL PIRAPAKARAN PORADI IRANTHAR. AVAR SEYTHA THAVARU VERUM AAYUTHATHAI NAMPIYATHE. VARKKA ARASIYAL AVAR KARKKAVUL ILLAI-ARIYAVUM ILLAI. AVAR RANUVA NATAVADIKKAI MOOLAM EELATHAI ADIYAMUDIYUM ENA THAVARA NINAITHU VIDDAR

  3. சாப்பிடுவதும், இனப்பெருக்கம் செய்வதும்தான் மிருகங்களின் வேலை. அவைகளிற்கு விடுதலை உணர்வோ, அல்லது சுதந்திர தாகமோ கிடையாதுநண்பரே.அதைதான்நீரும் உமதுநண்பர்களும் இங்கு செய்கின்றீர்கள்:

   கொலைகாரன்,கொள்ளைக்காரன்,படிக்கதாவன் என்று நீங்கள் சொல்லும் மேதகு ,பிரபாகரன் பின்னால் ஆயிரக்கணக்கான இளையர்களும் , யுவதிகளும் செல்லும்போது…………. படித்த ,சுத்தமான, கறைகள் அற்றநீங்கள் தமிழ் மக்களுக்கு தலமை ஏற்று நடந்திருந்திருந்தால்…? தமிழ் மக்கள் உங்கள் பின்னால் அல்லவா வந்து இருப்பார்கள். ஏன் செய்யவில்லை நீங்கள் அன்பரே…. நீங்கள் செய்யமாட்டீர்கள்!ஆமாம் எப்படி செய்வீர்கள்

   கூரை ஏறி கோழி பிடிக்க ஏலாதநீங்கள், தமிழ் மக்கள் எங்களை
   வானம் ஏற்றி வைகுண்டம் கூட்டிச் செல்வதாக ,இனியும் தயவு செய்து பிலிம் காட்டாதீர்ர்கள்

 6. பொன்னமான் யாழ்.இந்துகல்லூரியில் படிக்கும் போதே படிப்பிலும் விளையாட்டு துறைகளிலும் ஒரு அசாத்திய வீரன் …அவர் இயக்கத்தில் இணைந்துகொண்டதும் அவரது குடும்பத்தினர் சிங்கள ஏகாதிபத்தியத்தால் மிகவும் கஷ்டப்பட்டார்கள் அந்த காலப்பகுதிகளில் …அவரைப்பற்றி கொஞ்சம் விபரமாக எழுதுமாறு பணிவன்போடு கேட்டுகொள்கிறேன்.

  1. அனைவரையும் கொன்று வீசிவிட்டார்களே வன்னியில் அன்று.
   உங்களுக்குத் தெரிந்தவர்கள் ஆடுகிறார்களே நாடகம் இன்று

 7. பாதகம் செய்பவரைக் கண்டால் -நாம்
  பயங்கொள்ளககூடாது என்றூ பாரதி எம் எல்லோருக்கும்தான் சொல்லியுள்ளான்.

 8. எமது தேசத்தில் காணப்படுவதாக கூறப்படும் பெருமளவிலான எண்ணெய் வளம் தான் அளவுக்கதிகமான இராணுவ பொருட்செலவுடன் கூடிய, அதி உட்ச வலுவுடன் யுத்தத்தை செய்கின்ற ஊக்கத்தை ஸ்ரீலங்கா அரசுக்கு கொடுத்தது. எந்த எண்ணெய் வளம் தமிழருக்கு ஆபத்தைக் கொடுத்ததோ அந்த வளமே சிங்களவருக்கும் ஆபத்தைக் கொடுக்கப்போகிறது. எண்ணெய் இருப்பதனான தரவு தவறானாலும் அல்லது அது சரியாகினும் அப்பாவி மக்கள் எல்லோருக்கும் தீங்கு தான். தயவு செய்து இங்கு கருத்து கூறுபவர்கள் அவற்றினால் தமிழினத்திற்கு ஏதாவது நன்மை விளையுமா என யோசியுங்கள். புலிகள் ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை. அவர்களையும் மக்களே உருவாக்கினார்கள். மக்களிலிருந்தே உருவானார்கள். அவர்களும் எமது மக்களே. காட்டிக் கொடுப்போரும் எமது மக்களே. எதிரியுடன் நிற்பவர்கள் மனம் மாறி தமிழினத்துடன் சேரும் போது விடுதலை நிச்சயமாகும். தமிழிலே எழுதி தமிழனைக் கொல்ல துணை போகக்கூடாது. எமக்கு நேர்ந்தது பேரழிவு தான். ஆனாலும் அந்த அழிவிலிருந்து வெளியே வந்து நமது சந்ததி மகிழ்வோடு, பலத்தோடு வாழ வேண்டும். யப்பானிய தேசம் பேரழிவிலிருந்து வெளியே வந்ததே. யப்பானிய மக்கள் மன்னர் பரம்பரையையே தொடர்ந்து நிந்தித்துக் கொண்டிருப்பின் யப்பான் முழுமையாக அழிந்து போய் இருக்கும். எமது எழுத்துக்கள் இனத்துக்கு நன்மையா என யோசிப்போம்.

  1. ஈழத்தமிழர் என்றால் அவர்கழுக்குள் எவ்வளவு பிரிவுகள், பகைமைகள்
   இருக்கின்றன. சாதிகள்,சமயங்கள்,,வடக்கு,கிழக்கு, தோட்டக்காட்டார்,
   கொழும்புத்தமிழர்,தென்னிலங்கைத்தமிழர் இப்படி பல.

   விடுதலை, உருமை,பிரச்சினை என பார்த்தால் ஒவ்வொருவரிற்கும்
   ஒவ்வொரு விதமானவை. இலங்கை அரசியலிலும், விடுத்தலைப்போராட்டத்திலும்
   ஆதிக்கம் செலுத்தியவர்கள் வட பகுதியைச் சேர்ந்த தமிழர்களேயாகும்.

   எனவே இதுவரை நடைபெற்ரது ஆதிக்க மோகமுள்ளவர்களின் அரசியலும், ஆயுதப்போராட்டமே.
   துரை

   1. ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்.தமிழர்கள் பிளவு பட்ட இனந்தான். அதனால்தான் சிங்களத்தலைவர்கள் தமிழர்களுடைய கோரிக்கைகள 40 வருடங்களாக பொருட்படுத்தவேயில்லை.அவர்களுக்குத்தெரியும் எப்படி ப்ரித்து ஆளுவது என்று .பிரிட்டிஷ்காரனும் அதைத்தான் செய்தான். பாருங்கள் கண்டி யாழ் நெடுஞ்சாலை இருக்கிறது. கிழக்கிலிருந்து ஒரு நெடுஞ்சாலை இல்லை இனியும் வராது.இந்தப்ப்ரிவினைகள் உயிர்வாழ்வது பேரினவாதத்தின் ஒரு திட்டத்தின் விளைவே.வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் சிங்களக்குடியேற்றங்கள் எல்லாமே பேரினவாதத்தின் தூரனோக்கு.
    அவர்கள் தமிழினம் ஒன்று சேராது என்று நினைத்திருந்த போது தான் ,( இந்தியா கூட ப்ரித்தாள நினைத்தது.). புலிகள் வளர்ந்தார்கள். ஒரு இராணுவத்தளபதி சொன்னது :எப்படி இந்தக்கூட்டத்திலிருந்து இப்படி பலமான அமைப்பை கட்டியெழுப்ப முடிந்தது என்பது அதனால் அவரை ஆச்சர்யமாக பார்க்கிறேன் என்று,.
    பேரினவாதந்தான் தமிழர்களை ஒன்றூ சேர்த்தது அதுதான் உண்மை. முரட்டுத்தனமாக இருந்த பெரினவாதம் இப்போது மிகவும் தந்திரமானதாக மாறியிருக்கிறது. பிரித்தாளுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்களாகிவிட்டனர்.பிரிவினைகள் அற்றுப்போவதற்கு வளங்கள் சமமாக பங்கிடப்படல் அதாவது பொருளாதார வளம் தான் ஒரு வழி.வளமான நாடு ஒரு தனி மனிதனுடைய வாழ்வை முன்னிறுத்தி திட்டங்களை வகுக்கிறபோது சமூக  முரண்பாடுகள் ஒழிக்கலாம்.
    எம்மை ஆளும் பேரினவாதம் இவையெல்லாவற்றையும் வளர்க்கும்
    நாம் பிரித்து ஆளப்படுகிறோம் என்பது தெரியாமலேயே பிரித்தாளப்படுவதுதான் துயரம்.அதற்கு துரை அவர்களின் சிந்தனை நல்ல உதாரணம். 

 9. எமது விடுதலைப்போரட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது என்பதுபற்றி ஆய்வு செய்வததே சிறந்தது.முத்லில்நாம் விட்ட தவறுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால்தான் நாம் தமிழீழகனவை நனவாக்கமுடியும். முதலில்நாம் இனிமேலாவது கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைய் வேண்டும்.நாம் ஒரு பகுத்தறிவுள்ள சமுகமாக மாறவேண்டும்.. பாரட்டுவிZஆக்கள் விருதுவZங்குதல் மாலைஅணிவித்தல். சாமத்தியசடங்கு ராகுகாலம்நல்ல்னேரம் பார்க்கும் பZக்கங்களை முதலில் களையவேண்டும். காதல் திருமணங்களை ஊக்கிவிக்க வேண்டும். வெளினாடுகளில் வாZஉம்நாம் முதலில் இன்னுமொரு பிள்ளை அதிகமாக பெறவேண்டும். த்மிZ ஈழத்தில் ஒரு பிள்ளையாவது ஒவ்வொரும் தத்து எடுக்கவேண்டும். வெளினாடுகளில் வாZஉம்நாம் தனித்துவமான இனமாக வேறு இனத்தவரால் பார்க்கபப்டும்நிலையை ஏற்படுத வேண்டும். எம்மினம் வேளினாடுகளில் உயர்ந்தநிலையில வாழ்ந்தால்நாம் கேட் காமலே எமக்கு ஒருநாட்டை உருவாக்கித்தரும் இந்த் உல்கவல்லதிக்கம்.

  1. “Operation success but patient died”

   பெத்ததுகளே தமிழ் கதைக்குதில்ல அதோட இன்னொண்டை பெத்தாலும் அதே நிலைதான்.
   மற்ற சமூகங்களுக்கு முன்னால் தலை குனிந்து நிற்க்கும் சமூகம்தான் நாங்கள். புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் செய்த கைங்கரியங்கலால்தான் இந்த இழி நிலை.

   நாங்கள்தான் எம் மக்களை கொன்றோம் சிங்களவன் அல்ல. எங்கள் போராட்டத்தின்
   பின்னடைவுக்கும் நாங்கள்தான் காரணம். நாங்கள்தான் முதல் குற்றவாளிகள். திருந்தாத இந்த மக்கள் கூட்டத்தை வைத்துகொண்டு எப்படி விடுதலை அடைவது, விமான நிலைய தாக்குதலுக்கு பின் மிக மிக மோசமாக இருந்த சிறிலங்காவின் பொருளாதார நிலையை தூக்கி நிறுத்தியவர்கள் யார்.
   தமிழ் சினிமா உலகைச் சார்ந்த ஒரு சிலரைத் தவிர மற்ற யாருமே எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஆனால் தமிழ் படம் பார்க்க முண்டி அடிக்கும் எம் மக்கள் கூட்டத்தை பார்த்தாலே புரியும் நாங்கள் எங்கே நிற்கிறோம் என்று. எங்கள் பணத்தில் ஊதி பெருத்தவர்கள் எம் மக்கள் வகை தொகை இன்றி கொல்லப்படும்போது என்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மற்ற மொழி நடிகர்களின் சம்பளத்தையும் எம் மொழி நடிகர்களின் சம்பளத்தையும் சனத்தொகை அடிப்படையில் பார்த்தாலே புரியும் வித்தியாசம்.

   1. தமிழ் நடிகர்கள் மொழி அல்லாத சாதி வழியே பார்க்கப்படுவதால் வேற்றூ மொழி நடிகர்கள் உள்லெ நுழைந்து கிடைக்கும் இடைவெளீயில் தம்மைத் தக்க வைக்கிறார்கள். பின்னர் தமிழைக்கற்றூ,தமிழரை அறீந்து கொண்டதும் தமிழரையே வீடு புகுந்து உதைக்கிறார்கள்.இதுவே புலம் பெயர்ந்த் நம்மிடமும் நடக்கிறது.

 10. வணக்கம்

  பின்ஊட்டங்களில் சிவனேஸன்(காக்கா) பற்றியும் விக்னேஸ்வரன் பற்றியும் எழுதப்பட்டவைகளைப் படித்தேன். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி மேலும் விபரம் தெரிந்தவர்களிடம் விபரம் அறிய ஆவலாய் உள்ளேன். தெரிந்தவர்கள் முடியமாயின் என்னைத் தொடர்பு கொள்வீர்களல்லவா. அல்லது பின்னூட்டங்கள் மூலமாகவேனும் தகவலைத் தரலாம்.

  Emal: kavithai1@hotmail.com

  கவிதா

  1. சங்கிலியால் காக்கா சித்திரவதை செய்து கொள்ளப்படபோது “B” camp பொறுப்ப இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தை சேந்தவர் கனடாவில இருக்கிறார், இதில சங்கிலியின் சில அந்தரங்க மர்மங்கள் வெளியில் தெரியாமல் இருக்க காக்கா கொல்லப்பட்டது என்றும் கேள்வி. இதைப் பார்த்த “B” camp இருந்த பெடியள் சுதசுவாதீனம் இல்லாமல் போனதும். உமாவின் இரு பக்கம் எல்லாருக்கும் தெரியாது. சுந்தரம் உயிரோடை இருந்திருந்தாலும் அவருக்கும் இதுதான் நடந்திருக்கும்,

 11. எனது ஊரான அச்சுவேலியில் பல அப்பாவிகளை போட்டுத் தள்ளிய புலி அமைப்பாளர்கள் தற்போது கனடாவில் வசதியாக வாழ்கிறார்கள். இதே அமைப்பாளர்கள் செய்த இன்னொரு கொடுமை காச்சலில் படுத்திருந்த மற்றும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்த TELO உறுபினர்களை தூக்கிக்கொண்டு வந்து உயிரோடு கொளுத்தினார்கள்.

  TELO அமைப்பு யாழில் தடை செய்யப் பட்டதை அடுத்து EPRLF அமைப்பைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் முல்லைத்தீவு வழியாக மட்டகளப்பு செல்ல புறப்பட்டவர்கள் இடையில் வழி மறிக்கப்பட்டு மாத்தையா குழுவால் இல்லாதொழிக்கப் பட்டதாக கேள்விப்பட்டோம். உண்மையா. என்னிடம் சிலர் பயணம் சொல்லிவிட்டு சென்றார்கள். அவர்களை நான் இன்னும் தேடுகிறேன். மாத்தையாவுடன் இருந்த பலர் தற்போது வெளி நாடுகளில் உள்ளார்கள். அவர்கள் உண்மையை கூறலாமே.

  1. Former Atchuvely area leader Amuthan is in London ; Nessan in Swiss; Unofficial area leader and Matthya’s friend Vicknaraja (Nissanthan) was in Canada now in Malaysia. His deputy Vethamoorthy (KKS Cement coporation Chemist) is in Canda (Montreal)

    1. Thanks skay. Sorry for typing mistake. Kannaady is in Canada, the Guru to SF, GR & MR.
     Vikkinam was in Canada, few months back. Mathaya and Vikkinam were best friends, only for the reason why Patkunam was killed as mentioned by Iyer. Mathaya used to visit our village for சூடு இறக்க . If any innocent person is killed in our village, the indication is that Mathaya is there.

     1. how can you escape in that time. this indicates you are the fraud and murderer.

  2. பாசை ஊர் ரிச்சட்டினை அயன் பட்டியால் சாக்காட்டடிய மலரவன் லண்டனில் தான் இருக்கின்றான்

   நீதி அமைச்சா; இந்திரன் வடக்கு கிழக்கு மாகாண சபை உருப்பினா; சிறி – மாத்தையா குழு வடமராட்சி தயாபரன் எல்லாரும் லண்டனில் தான் உள்ளனா;

   1. பாசையூரும்,குருநகரும் எப்போதும் முட்டிக்கொண்டே இருப்பார்கள் இங்கே மலரவன் எங்கே வந்தார்.கட்டிப்பிடிது புரண்டு சண்டையிடும் குணம் கொண்டதல்ல அவரது குடும்மபம். மண்டாக்கலை தூக்குபரல்ல அவர்.இந்துக்கல்லூரியில் சீனிய மாணவர் என் நினைக்கிறேன்.இப்போது பொறீயிலாளராக கடமையாற்றூபவர் மீது சேறூ வீசுவது அழகல்ல.

    1. அவர் சும்மா கொல்லவில்லை, தேவாலய பாதிரியாரிடம் சரணடந்தவரை விசாரணைக்கு என்று அழைத்து சென்று சூடேற்றிய அயன் போக்ஸ்சால் அழுத்தி அழுத்திக் கொண்டார். இதை இவருடன் இருந்தவர்களே சொல்லியுள்ளார்கள். இவர் இங்கிலாந்திலிருந்து கனடிய தமிழ் பெண்ணை மனம் செய்து அமெரிக்காவில் வேலை செய்த கணணி பொறியியலாளர்தான். இவர் அண்ணன் இந்திய கத்தோலிக்க கல்லூரி லயலோ கல்லூரியில் படித்து இங்கிலாந்தில் பஹுதி நேரம் புலியின் வானொலியில் ஒலிபரப்பாளராக கடமையாற்றியவர்.

     படிக்காதவன் தானோ கொலை செய்வான்? என்னுடன் படித்தவர்கள் பலர் இயக்கங்களில் இருந்துள்ளனர், படிப்பிலும், விளையாட்டு துறையிலும் நல்ல கெட்டிக்காரர், நிங்கள் சொல்வது போல் நல்ல குடும்ப பின்னணியில் உள்ளவர்கள், அவர்களும் ஆயுதம் தூக்கினால் என்ன செய்து இருப்ப்பார்கள். என் ஒரு நண்பன் இந்திய இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து, அவர்களாலேயே கொல்லப்பட்டவர். மலரவனுடன் இருந்தவர்களை கேளுங்கள் மிகுதி சொல்வார்கள். ஏன் மலரவனையே கேளுங்கள். இப்படியானவர்களாலேயே போராட்டம் இந்த நிலைக்கு வந்தது. இப்போ இவர் இங்கு திருமணம் செய்தி பொறியியலாளர், அங்கு இவரால் கொலைசெய்யப்பட்டவரின் குடும்பம்?

     1. சொல்வதெல்லாம் பொருந்துகிறது ஆனால் மலரவனா? அதிர்ச்சியாய் இருக்கிறது.தாங்கள் இந்துக்கல்லூரி மாணவரோ?

 12. இவர்களையெல்லாம் அடையாளம் காட்டி என்ன பயன்? இந்தக் கொலைகாரருக்கு எதிராக யாரால்நடபடிக்கை எடுக்க முடியும்? இவர்கள் சுகபோகம் அனுபவித்தது போதும், இவர்கள் தாமாக வெளியே வராவிட்டால் சாட்சிகள் வெளியே வந்து உண்மைகளை சொல்ல வேண்டும்.

  1. some one come and write their non sense comments. first think about them selves. kidnap,rape ,robbery and killings are the common work for the EPRLF,TELO 

   1. Yogan, who is some one writing nonsense? What is your response to Tikkiri?

    1. Soorya tell me which part is nonsense. Say Yes or No to my claims. Why did you people killed eight month pregnant woman. Why did you people killed a boy with mental illness and tied on lamp post. There is a very very long list.

     I think you do not know the apt meaning for the word nonsense. Truth is truth and nothing else. Pl tell those area leaders to come out and say no, if they have a back born.

     Thanx

   2. வடமராட்சிக்கு பொறுப்பாக இருந்த தாஸும் சிலரும் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.யாழ் வைத்தியசால்யில் வைத்து என்று நினைக்கின்றேன்.பொபி குறூப் செய்தது
    தாஸுக்கு வடமராட்சிப்பகுதிகளில் ஆதரவு இருந்தது.ஆதரவான மக்கள் கல்வியங்காட்டுப்பகுதியில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தினார்கள்.ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு கிரனைட் வீசப்பட்டது.ஒரு பையன் அதன் மீது விழுந்து படுத்துக்கொண்டான்.ஆனால் அது வெடிக்கவில்லை. இதன் பின்னர் சிறிது காலம் கழித்துதான் டெலோ அழிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் டெலோவில் இருந்தவர்கல் பலர் தப்பி விட்டார்கள்.மேலும் அந்தக்காலப்பகுதியில் சபாரத்தினம் ஒரு பிரபல நடிகையை வைத்திருப்பதாக பெசிக்கொண்டார்கள்.

  2. எல்லா இய்க்கங்களுக்குள்ளும் கொலை,கடத்தல்,பாலியல் துன்புறுத்தல் அல்லது அடக்குமுறை , களவு ஆகியன் எல்லா இயக்கங்களும் செய்தன .புளட் இயக்கம் தான் தனது இயக்கத்தில் நடந்த உட்கொலைகளை வெளியில் கொண்டுவந்தது . ஆகையால் புலொட் இயக்கமே தனது பிளைகளை, உட்கொலைகளை தெளிவாக விமர்சனம் செய்தால் , பின்பு மற்றவர்களும் தெளிவாக் விமர்சனம் செய்யலாம் . இந்த விமர்சன்மானது எதிர்கால மக்களுக்கு ஒரு சிறந்த பாதையாக அமையும். எமக்கு எனி இளப்பதற்கு என்ன இருக்கிறது . போராட்டம் முடிந்து விட்டது.இனிஒரு கடந்த காலத்தை தெளிவாக் விமர்சிப்பதன் மூலமே அடுத்த கட்டத்தை அடைய முடியும் .
   இதற்கு “இனிஒரு” ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகிறோம். 84 ம் ஆண்டு காலப் பகுதியில் புளட்டையே பெரும்ம்பகுதி மக்கள் நம்பியிருந்தார்கள் . புளட் விட்ட தவறே ஏனைய இயக்கங்களை தவறு விட வைத்தது. எனவே புளட்டே முதலில் சுவிமர்சனத்தை முன்வைக்கவேண்டும் .

   நன்றி
   ராமன்

   1. ஐயர் எழுதுறதை பார்த்தா ஆரம்பத்தில அரசியல் அறிவு போதாமையால இயக்கத்தை பாதுகாக்க சந்தர்ப்ப சூழ்நிலையால கொலையல் நடந்திருக்கு. ஆனா புளொட்டில மக்கள் விடுதலை இயக்கம் எண்டு பெயரையும் வைத்துக்கொண்டு செய்த உட்கொலைகளை சரிஎண்டா ஏன் மக்கள் முன்னை கொண்டுவந்து நியாயப்படுத்த பயப்படுநினம்? அதுதானோ யாழ்ப்பாணத்தில நல்ல சூரிய வெளிச்சத்தில பகல்ல போக முடியாம மெளுகுதிரிக்கு வெளிச்சத்தில போயினம். கொலையல செய்தவ உடந்தைய இருந்தவையை மக்கள் முன் அடையாலப்படுத்த்வேனும். புளொட்டில ஒருத்தனுக்கு இடி எண்டும் பெயர் வைத்திருக்கிறான்கள். அப்படியானவன் எண்டு கேள்விப்பட்டனான். உங்கை டொராண்டோவிலையும் லண்டனிலையும் இரண்டு இயக்கத்திளையும் இருந்து போட்டவங்கள் இருக்கிறாங்கள்.

  3. இவங்கள் செய்த தனிப்பட்ட விரோத காழ்ப்புணர்ச்சி கொலைகள் விடுதலைஎண்ட பெயரில செய்த அட்டகாசங்கள், இவங்களை வெளிச்சத்திலை கொண்டுவந்து அடையாளம் காட்ரதால இவங்களுக்கு கிடைக்காத தண்டனை இவங்கள் சார்ந்த மக்கள் முன்னால போகேக்க தன்னும் கிடைக்கும். இவங்கள் தாங்களாக வெளியே வர மாட்டாங்கள், தெரிந்தவைதான் அம்பலப்படுத்தவேண்டும். இப்பதானே இத்தனை இணைய தளங்கள் இருக்கு. ஐயர் வேறை எழுதிறார். இப்பவும் கருணாவும் டக்கிலஷுவும் கொஞ்சப்பாடா? கொழும்பில இருந்த தமிழரை கருணா ஒரு வழிப்பன்னி தன்னுடைய கமிசன் காசோட லண்டனுக்கு ஓடி இப்ப அமைச்சர். ஆனா கொழும்பில இருந்த பிசினஸ் காரற ஒரு வழி பண்ணிட்டான். கப்பம் வான்கிரவநிட்டை கப்பம் வாங்கி, தராதவனை போட்டு தள்ளி, மற்றவங்களை பயத்தில வியாபாரத்தை சிங்களவனுக்கோ கொழும்பு முசுலிமுக்கோ அரை குறை விலைக்கு வித்து குடும்பத்தோடை தப்பினோம் எண்டு நாட்டை விட்டு துரத்திட்டான்.

   1. அச்சம் கலந்த பயத்துடன் நாம் லண்டனில் இருந்தே நடுங்கிறோம் என்றால் மண்ணீல் வாழும் தமிழர் நிலை முள்ளீல் விழுந்த சேலை போல்தான்.

   2. MANIYAM

    ANAITHU IYAKKANGALUM VARKKA ARASIYAL ARIYAMAL THAVARU SEYTHULLARKAL. NLFT-PLFT PONTRAVARKAL SEYARPPATTARKAL VALARA VILLAI-SEYARPADA ANUMATHIKKAVUM ILLAI.

    IVARKALIN THODARCHITHAN TAMIL ARANGAM GROUP.

    THARUKALIL IRUNTHU KATTRU KOLLVOM

 13. இத்தால் சகலருக்கும் அறியத்தருவதாவது பிரச்சனை என்றவுடன் நாட்டைவிட்டு ஓடாமல் ஏன் இயக்கத்தில் சேர்ந்தீர்கள்.பின்பு அங்கு நடக்கும் பிழைகளை ஏன் கேட் காமல் விட்டீர்கள்.பின்னர் ஏன் சாகாமல் தப்பி வெளிநாட்டிற்கு ஓடிவந்தீர்கள்.எங்களை போல் முதலே ஓடிவந்து இப்போது பல கேள்விகள் கேட் கலாம்தானே?

 14. இங்கு பலர் தமிழரின் பிரச்சினையை திசை திருப்ப மிகவும் பிரயத்தனப்படுவது தெரிகிறது. நன்றி உயர்ந்த்த உள்ளங்களுக்கு. ஈழத்தமிழரைக் இனப்படுகொலை செய்த பெரிய தலைகள் இந்தியாவில் இருப்பதாக சொல்கிறார்கள் தோழர்களே தெரியுமா உங்களுக்கு. அது தெரிய வராது. தமிழரை முழுமையாக கருவறுப்பதே நோக்கம் போல் தெரிகிறது. நல்லது நடக்கட்டும். காந்தியும் புத்தரும் மேலே இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

  1. புலியின் பெயரால் தமிழரை கொலைசெய்தும், கொள்ளையடித்தும் வாழ்ந்தோரே அதிகம்.
   புலம் பெயர் நாடுகளில் சிங்களவர் தமிழரை ஏமாற்றுவதாகக் கூறி தமிழரை ஏமாற்றி வாழ்பவ்ரே அதிகம்.
   புலியின்பெயராலும் வேறு வழிகளிலும் உலகினை ஏமாற்றியோரும்,
   அரசாங்கத்துடன்

   சேர்ந்த சுயநலம் கொண்டவர்கழும்மே இன்று இலங்கையின் முதலீட்டாளர்கள்.

   துரை

   1. அடையாளம் தெரிகிறது தோழரே.

 15. Batticaloa, Paramadeva Ranjan (kanagaratnam MP Son) When they joined in LTTE movment

  Paramadeva was killed Kaluwanchkudi SL Police Station atttacked in 1984 , Ranjan was killed
  kokkulai SL Army camp attacked in 1985

  Who was beginning member in Batticaloa

 16. கொலைகலை செய்துவிட்டு கனடாவிலோ ஐரோப்பாவிலோ இருக்கும் கொலையாலிகலிகலின் விபரம்கலை பிரசுரித்தால், இந்த நாடுகலின் சட்டவிதிகலுக்கமைய வலக்கு போட்டு உல்லே தல்ல முடியும். விபரமுல்லவர்கல் இதனை வெலியிடவும்.

 17. In the eighties, many groups came to Vanni and recruited many. Students disappered from schools.Later we found out out that they all went to different groups. People of Vanni were not after this Tamil Eelam. The whole thing was stated by the people from Jaffna and Vadamrachi. All the rich familes from Jaffna and Vadamrachi went to UK and Canada. Majority of the people died in the war are all from Vanni. The ones who are suffering in the IDP camps are all from Vanni. When LTTE killed the TELO boys in Jaffna, many were burned to death at Thirunel Veli. Many were from Trincomalee and Mullaitivu. The ones from Jaffna were able to escape. Now everything is over. Those murderers who are now living in UK and Canada have started this thing called “Diaspora”. What is this for.? They are sending their children for piano and swimming lessons. But the ones back in Vanni has to suffer forever. Many of friends were killed by other grouips. I even witnessed a situation that a person killed his own brother becuase he was in the opposite group. My humble request for all the muderers who escaperd to UK and Canda but still making nosies about this diaspora war. You have done a great harm for the Tamils. You have got your life sorted. At least now, please stop all the nonsense. You are responsible for the slaughter and sacrifice of the innocent men, women and children in Vanni.

Comments are closed.