புதிய கூட்டு : அபாய ஒலி

இந்திய மத்திய அரசு கருணாநிதி இலங்கை அரசு ஆகியன இணைந்து நடத்திய நாடகம் தான் கருணாநிதி நிகழ்த்திய போர்க்கால உண்ணாவிரதம் என்றும் இவ்வாறான தந்திரோபாயங்களின் ஊடாகத்தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் நாட்டைத் திசை திருப்பினோம் என்று மகிந்த மற்றும் கோதாபய ஆகியோர் இந்திய ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கியிருந்தனர். இவர்களின் கூற்றிற்கு கருணாநிதி எப்போது மறுப்புத் தெரிவித்ததில்லை. இன்று கருணாநிதி இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேச்செடுக்கும் போதெல்லாம் அந்த நாடகம் தான் ஈழத் தமிழர்களுக்கு நினைவிற்கு வருகிறது.

மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கின்றதை ஒட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தின.
இதில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு ,பிரபுல் பட்டேல், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மன்மோகன் சிங், இலங்கை தமிழர் நிலையை அறிய தமிழக முதல்வர் கருணாநிதி ஆலோசனைப்படி அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
முன்னர் நாடகம் நடத்திய அதே குழுவோடு இப்போது புதிதாக இணைந்துள்ள சந்தர்ப்ப வாதிகள் ரீ.என்.ஏ.

குறைந்த பட்சம் 15 ஆயிரம் கைதிகளின் நிலை, விபரங்கள், முகாமில் உள்ளோரின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர், அங்கவீனமானோர் போன்ற அற்ப விபரங்களைக் கூட வெளியிடுவதற்கு அழுத்தங்களை வழங்க இதுவரை முன்வராத இவர்களின் கூட்டு புதிய அபாய ஒலி.

One thought on “புதிய கூட்டு : அபாய ஒலி”

  1. திருநெல்வேலியில் புலிகள் இருந்து தாக்குதல் நடத்திய கடைக்கு பக்கத்தில் இருந்த ஒழுங்கையில் உள்ள வீடொன்றீல் நாங்கள் தங்கிப் படித்த காலம் பல்கலைக் கழ்கம் எங்கள் கனவு.நாங்கள் குமுதம் வாங்கும் கடைதான் புலிகள் தாக்குதல் நடத்திய் இடம் என்பதால் அது ஒரு புனிதத் தலம் மாதிரி புலிகள் சினேகமாகத் தொடங்க இந்திய இராணூவத்துடன் யுத்தம் திலீபனின் உண்ணா விரதம்.பின்னர் யாழ்ப்பாணம் உயிர்த்து எழுந்த கம்பன் விழாக்கள் தொடங்கின.காலம் மறூபடி எதிராகி நல்லூரில் இராணூவம் நின்றது.இப்போது முள்ளீவாய்க்காலில் எல்லாம் முடிந்தது என்றா நினைக்கிறீர்கள்.கொடிய யுத்தம் இல்லாமல் தர்மம் தமிழனை காக்கும்.

Comments are closed.