பீகாரில் கிராமத்தைச் சூறையாடிய போலிஸ்: மாவோயிஸ்டுக்கள் கைதாகவில்லை

maoistபீகாரில் காயா மாவட்டத்திலுள்ள கொய்தா என்ற கிராமத்தில் சிறப்பு அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுக்கள் தலைமறைவாக இருப்பதாகக் கூறி இன்று அதிகாலை கிராமத்துள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் சூறையாடல்களிலும் பாலியல் சித்திரவதைகளிலும் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோய்தாவில் நடத்திய தேடுதலில் நடத்தப்பட்ட தேடுதலில் சேதவிபரங்கள் இன்னும் தெரியவரவில்லை. அண்மையில் ஏழு போலிசாரைக் கொலைசெய்த தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு திவாக்கா யாதவ் என்பவரைக் கைது செய்ததாக அரச தரப்பில் கூறப்படுகிறது. மாவோயிஸ்டுக்கள் தரப்பில் அத்தகவலில் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது. பீகாரில் பெரும் நிலப்பிரபுக்கள் தனியார் இராணுவங்களை வேலைக்கமர்த்தியுள்ளனர். கூலி விவசாயிகளும் ஏனையோரும் அரச படைகளின் சூறையாடலுக்கும் நிலப்பிரபுக்களின் அதிகாரத்திற்கும் உடப்ட வேண்டிய நிலையிலுள்ளனர்.