பிழைப்புவாதி கருணாஸின் மிரட்டலை எதிர்கொள்வோம்- நாம் தமிழர்

தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.ஆகவே இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும்.சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது.இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுதும் அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர்.ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார்.இது தொடர்பாக அவருக்கு முன் பனம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீத தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது.இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ்,அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகி கிரெஸ் கருணாஸ்,அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது.கறுப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது.இதன் தொடர்ச்சியாக தம்மைத்தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர்.இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு,தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும் ,தான் நடிகன் எனக்கு ஜாதி,மதம்,இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும்,பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும்,தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார்.ஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார்.சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத்தந்தது..அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார். இந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.சில முண்ணனி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது..தனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா,அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக்குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத்தரும் ஒன்றாகும். அவரது இந்த இனத்துரோகச் செயலை தமிழர்கள் ஒரு பொழுதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச்சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார்.நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார். தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது.இதனை சட்டப்படி சந்திக்கும்.தமிழர்களின் இனமானப்பணியில் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும்.

17 thoughts on “பிழைப்புவாதி கருணாஸின் மிரட்டலை எதிர்கொள்வோம்- நாம் தமிழர்”

 1. இது கருப்பு நாய் என்று சில நடிகைகள் இந்த நாயோடு நடிக்க
  மறுபதாக நாடகம் போட்ட இந்த கருப்பு ஈன நாய் ,இன்று உடம்பு
  மட்டும் கருப்பு அல்ல உளமும் கருப்புதான் என்று தமிழர்களுக்கு
  உரக்க குரைக்குது .

  1. எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு இருந்த எலும்பையும் இழந்த நாய்போல கருணாசும் ஆகிப் போனார் எனும்போது கவலையாக இருக்கிறது.

 2. Dear NAAM TAMILAR,when talks dont give results stick has to be used.give him a chance,let him go and come,to temple has he said.if at all, u get proofs about him participating in any functions,dont wait, bcz DROGIGAL kalaiedukka pada vendiyawargal.thats y desiya thalaivar said ”PROTECT ME FROM TRAITORS AND I WILL PROTECT YOU FROM OUR ENEMIES. sri.puligalin daagam tamileela thaayagam,PEOPLE WITH HEART AND TAMILS WITH DIGNITY TOO EXPECTS THE SAME.SRI

  1. Thalaivar, got rid of the thurogigal, and got his head split by kodaali. Thamilanin number 1 traitor is Pirabakaran. I am glad not only him, but his whole family was destroyed, so we got rid of this cancer completely.

  2. கருனா, ஒரு கெட்டிகாரன். புலி விசர்கலை பட்டி கவலை பட வேன்டாம்.

 3. கருணா என்று பெயரிட்டால் அது தமிழனை கருவறுக்கும் என தாய்மட்டும் தெரிந்திட்ட பெயரா அல்லது தந்தையும் சேர்ந்திட்ட பெயரா…மனித உள்ளம்கொண்ட கருணாவின் பெயர்கொண்டோர் என்னை மன்னிக்கட்டும்.

 4. மணியனின் சொற்கள் தேவையற்ற நிந்தனைகள்.
  இலங்கை அரசின் கூலிப்படைகளாக எத்தனயோ பேர் உருவாகியுள்ளனர். அது போலவே இயக்கங்களின் பேரில் நேர்மையற்றுப் பேசுகிறவர்களும் பலர் உள்ளனர். திட்டி என்ன வருகிறது?
  இத் தளம் கருத்துக்களை விவாதிக்கவும் விமர்சிக்கவும் நல்லவற்றை மெச்சித் தவறன செயல்களைத் தவறென்று சொல்லவும் மட்டுமே பயன்படுமாயின் எல்லாருக்கும் பயனுண்டு.
  யாரையும் வாய்க்கு வந்தபடி திட்டுவதால் எவரது கருத்தும் வலிமை பெறுவதில்லை.

 5. சிங்களவனின் மூத்திரம் , கருனாக்கலுக்கு தீர்தம் . ஏன்னா பணம் . மலரும் எங்கள் ஈழம். உனக்காக காத்திருக்காது.

  1. “சி*****ன் மூ***ம் …”
   இது போன்ற சொற்பிரயோகங்களுடன் தொடர்ந்தால், நாங்கள் எங்கே போய் முடிவோம்?

 6. இது போன்ற செய்திகளும் பின்னூட்டங்களும் இனியொருவை தரம் தாழ்த்துகின்றன. ஆசிரியர் குழு கவனம் எடுக்கவும்.

 7. தமிழீழ விடுதலை போராட்டம் விஜய் அன்ரனி, அசின் , கருணாஸ் என்று கூத்தாடிகளின் பெயரால் சிறுமைப்படுத்தப்படுகிறது. இலங்கைக்கு போகக்கூடாது என்று சொல்பவர்கள் யாராவது எவ்வளவு காலத்துக்கு போகக்கூடாது என்ற கால வரையறை யாரிடமாவது உள்ளதா? தமிழ் மக்கள் போன வருடம் மட்டும் கொல்லப்படவில்லை. 1918 ஆம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.1958,1960,1970கள்,1977,1981,1983 மூன்று பல நூற்றுக்கணக்கான படுகொலைகளின் வரலாறு கொண்டது.

  விஜய் அன்ரனி, அசின், கருணாஸ் என்று தொடங்கி சரத்குமார், சூர்யா, ராதாரவி என்று ஈழத்தமிழர்களும் கூத்தாடிகளை நம்பிய போராட்டமாக்க தமிழ்தேசிய போராட்டத்தை மாற்றப்போகிறார்கள்.

  தென்னிந்திய சினிமா ஏதோ புலம்பெயர் தமிழர்களை நம்பித்தான் இருப்பதாக சொல்வது சுத்த அபத்தம்.

  தென்னிந்திய சினிமாவை தமது வியாபாரமாக்கி புலத்தில் கூறி விற்கும் ஈழத்தமிழர்கள் மறக்கப்பட்டுவிடுகிறார்கள்.
  ஜரோப்பாவில் கலைஞரை துரோகி என்று சொல்லும் யாரும் கருணா நிதியின் கலைஞர் ரிவியை புறக்கணிக்க சொல்லி ஏதாவது பெருமெடுப்பில் போராட்டம் நடாத்தினார்களா?

  சினிமாவை வைத்து கொழுத்த முதலாளியான ஜங்கரன் கருணா மூர்த்தியை எதிர்க்க எந்த ஈழத்தமிழனுக்கும் துப்பில்லை. ஏனெனில் ஜங்கரனை நம்பியே ஜரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏராளமான தமிழ் தேசிய ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் உள்ளன. இந்த ஏகபோக உரிமையை வைத்துள்ள ஜங்கரன் இன்ர நசனலை யாராவது எதிர்க்க முடியுமா என்று மனட்சாட்சி இருந்தால் கேட்டுப்பாருங்கள். அதைவிட்டு தென்னிந்திய பிழைப்பை நம்பியே கலைஞர்களாகவுள்ளவர்களை பிழைப்புவாதிகள் என்று சொல்ல யாருக்கும் அருகதைஇல்லை.

  1. அப்பிடி போடுங்க அரிவாளை !

  2. நீங்கள் வேறு எங்கோபோகிறீர்கள் சுட்டப்பட்ட பிரச்சினை வேறு, யுத்தம் முடிந்தது என்று வெற்றி விழாவெல்லாம் கொண்டாடி முடித்த ராஜபக்ச , சந்திக்கு சந்தி புத்தருக்கு மடாலையம் கட்டிக்கொண்டிருப்பதும் இராணுவத்திற்கு வீடு மனை அமைத்துக்கொடுத்து தமிழரை தெருவில்விட்டு அசினை விட்டு சொட்டு மருந்து விட்டு படம்பிடிப்பதை விரும்புகிறீர்களா,

 8. தமிழருக்கென்று உலகில் ஓர் அரசை தோற்றுவிக்கும் திறன்கொண்ட புலி அமைப்பை உடைத்துவிட்டு, விளக்கின் சுடரை சுட்டும் விழிச்சுடராக வியந்து போற்றிக் கருத்தெழுதி விட்டில்பூச்சிகளும் சிறகடித்து பறக்கின்றன.

 9. கருணாநிதியின் கைக்கூலியாக இயங்கும் ஜங்கரன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு கருணாஸ் பற்றி பேசுவோம், ஈழத்தமிழன் ஜங்கரனை வைத்தே எங்களை க்ருவறுக்கின்றான் துரோகி கருணாநிதி,

 10. Spice jet group owned by Kalanithi maran will start it’s first international service to Colombo!Since Karunanithi did extra ordinary favour to Rajapakse……it’s pay back time!Besides south India,Sri lanka cud be their(maran’s)next business destination..!Who knows we will sure hav one more CHEMMOZHI MAANAADU soon!New mullai periyaar dam is on the way…..so kilo of rice price will likely tobe 0.50 paise.

Comments are closed.