பிள்ளையான்குழு மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு : இருவர் காயம்

மட்டக்களப்பு நகரின் புதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பி;ள்ளையான்குழு உறுப்பினர்கள் இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நேற்று சனிக்கிழமை இரவு 11.30மணியளவில் கோவிந்தன் வீதியில் உள்ள பிள்ளையான்குழு முகாமில் இருந்து புதூருக்கு சென்ற பிள்ளையான்குழு உறுப்பினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிசூட்டில் பி;ள்ளையார் குழு உறுப்பினர்களான கே.கமலேந்திரன்(19வயது),எம்.தேவசுகன்(18வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பி;ள்ளையான்குழு உறுப்பினர்கள் தம்மீது விசேட அதிரடிப்படையினரே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.