பிரெடெரிக்கா ஜென்ஸ்,முனாஸ் முஸ்தபா : மரண அச்சுறுத்தல்

லசந்த விக்கிரமதுங்க  கொல்லப்பட்ட பின்னர் பல தடவை  எச்சரிக்ப்பட்ட  அவரது  பத்திரிகையான சண்டேலீடருக்கு  மறுபடியும்  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

The-Sunday-Leaderநியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு, ‘சண்டேலீடரி’ன் பிரதம ஆசிரியர் பிரெடெரிக்கா ஜென்ஸ் மற்றும் செய்தி ஆசிரியர் முனாஸ் முஸ்தபா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக் கோரியுள்ளது.

‘சண்டேலீடரி’ன் நிர்வாக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இந்த வருட ஆரம்பத்தில் அவரது அலுவலகத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டு விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜென்ஸுக்கும் முஸ்தபாவுக்கும் கடந்த வாரத்தில் பல அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைத்துள்ளன. அக்கடிதங்களில், “எழுதுவதை நிறுத்துமாறு” அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

One thought on “பிரெடெரிக்கா ஜென்ஸ்,முனாஸ் முஸ்தபா : மரண அச்சுறுத்தல்”

  1. மாற்று அரசியலை முன்வைப்பதில் இனியொருவின் பங்கு மறுக்க முடியாத்து. சிறு சஞ்சிகைகள் என்றால் யாருக்கும் புரியாத மொழியில் பிரபலமான மெகா எழுத்தாளர்களை வைத்து இலக்கியமும் அரசியலும் பண்ணும் மனிதர்களுக்கு மத்தியில் புதியவர்களை வைத்து தமிழ் கூறும் உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். இப்போது இனியொருவைத் தாண்டி யாரும் அரசியல் பேச முடியது என்ற நிலை உருவாகி வருகிறது . நீங்கள் தரும் நம்பிக்கை புதிய சக்தியாக உருவெடுக்கும். நன்றி

Comments are closed.