பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில சட்டங்கள் ?

புதிய அரசியலமைப்பில் பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில சட்டங்கள் உள்ளடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரிவினைவாத மற்றும் இனவாத கருத்துக்களை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையிலான சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இலங்கையை பயன்படுத்த முடியாத வகையில் சட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் புதிய சட்டங்களை உள்ளடக்குவதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை வரையறுக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் சாசன யோசனைத் திட்ட வரைவு தயாரிப்பதற்கு முன்னர் அதன் உள்ளடக்கம் தொடர்பில் நிபுணர்கள் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2 thoughts on “பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில சட்டங்கள் ?”

  1. சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. குரக்கன்காரர் புலிக்கு புலியின் பாணியிலேயே எப்படி ஆப்பு வைத்தோம் எண்டும் சிங்கலவனுக்க்கு புலியை அடிக்கிறோம் எண்டும் ஆப்பு வைத்து இப்போ உண்மைகளை சொல்லவிடாமல் சரத்துக்கும் அமெரிக்காவுக்கும் ஐரோப்போவுக்கும் ஒன்றாக சேர்த்து வைக்கும் ஆப்பையும் இந்தியாவுக்கு எங்கட உற்ற நண்பன் நேசநாடு அயல்நாடு எண்டு சொல்லி சொல்லி உதவிகள் வாங்கிக்கொண்டு சீனாவுடன் பாக்கியுடன் சேர்ந்து வைக்கும் ஆப்பை சொல்லி சிரிக்கிராரோ?

    தாடிக்காரர் யாழ்ப்பாணத்தானின் வீக் பாயிண்ட் தெரிந்து பள்ளிக்கூட கட்டிடம் கோயில் கட்டிறேன் எண்டு உதவிகள் செய்து அரைவாசியை பாக்கெட்டில் போட்டு அவருடைய தோழமையான மக்களுக்கு வாசிகசாலைகள் திறந்து வைத்து அந்தந்த லெவெலுக்கு அடித்து எல்லோர் காதிலையும் பூ வைத்து இப்போ தமிழ் அமைப்புகள் ஒற்றுமையே பலம் எண்டு சொல்ல தியாகிகள் வீரர்கள் எல்லாம் கொவனத்தியும் கழட்டி வைத்துவிட்டு தனக்கு கீழ் வருவதையிட்டு சொல்லி சிரிக்க அதைக்கேட்டு குரக்கன்காரர் தமிழன் இவ்வளவுக்கு அறிவில்லாத ஒற்றுமையில்லாத முட்டாளா என்று சிரிக்கிராரோ?

    என்ன எக்காளமிட்டு சிரித்தாலும் நல்ல மகிழ்ச்சி கடலில இருக்கினமெண்டு தெரியிறது. ஆனா புலியும் கைவிட்ட அப்பாவி சனம் சிரிக்க கூட உரிமையிலாமல் தெம்பில்லாமல் இருக்கிறது. அதோட இந்த சனம் என்னத்தை யோசித்து சிரிக்கிறது. பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில சட்டங்கள் உருவாக்கப்பட தேவையில்லை. அதுக்குதானே வெளிநாட்டில கே பி மூலம் டீலுகள் நடக்கிறது. நாட்டில கொழும்பில கிழக்கின் மைனர் வடக்கில தாடி மைனர் களையெடுக்க இருக்கினம். 4000 வோட்டேடுத்த வன்னிக்கார் இரண்டும் கெட்டான் நிலை இந்தியாவோடையும் போக ஏலாது குரக்கணும் விதைக்க ஏலாது யானையில ஏறவும் முடியாது மாலைதீவுக்கும் போக ஏலாது கச்சதீவுக்கும் போக ஏலாது அரச மரத்தடியும் என்னவோ தெரியாது செல்வாவின் சமாதி நிழலும் களைப்பாற இப்ப அதுக்கும் போட்டி வெளிநாட்டிலையும் உள்நாட்டிலையும் போற போக்க பாத்தா தாடிக்கார் தான் தயவு போல. இதையெலாம் சொல்லி சொல்லி சிரிக்கினமோ. புலிஎண்டாலும் உள்நாட்டில சண்டை பிடிச்சு ஒரு குறுநில அரசாட்சி செய்தது. அதில இருந்து பிரிஞ்சவ மக்கள் போற்றும் கழகமா இருந்து தங்கடை தலையில தாங்களே மண் அள்ளிபோட்டு கடல் கடந்து மாலை தீவு போய் திரும்பி குறுநகர ஆட்சி செய்து இப்ப இந்த பாடு எண்டு சொல்லி சிரிக்கினமோ. எதோ தாடிக்கார் நல்லாத்தான் சிரிப்பூட்டுறார். இதை நம்பி இனிமேல யாரும் நகைசுவை நடிகர்களை கூப்பிடாமல் இவரை கூப்பிடலாம் எண்டு கூப்பிட்டு போடாதையுங்கோ.இவர் எல்லாருக்கும் ஆப்பு வைப்பார். இல்லாட்டி 4 ஜனாதிபதியுடன் இருந்தவர் எண்டு சொல்றவர் இப்ப நேரடி தொலைகாட்சி பேட்டியில் சந்திரிக்காவை பற்றி கேட்டால் என்ன சொல்வார். அப்பா இந்த சிரிப்பு எங்கே போகும்.

    எதோ புதிய அரசியலமைப்பில் பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில புதிய சட்டங்களை கொண்டு வருகினமோ இல்லையோ பிடிச்ச இடங்களில ஆமிக்காரன் இருந்துகொண்டு அபிவிருத்தி எண்ட பெயரில ஆமிக்காரன் முழுப்பேருக்கும் வீடுகள், பள்ளிக்கூடங்கள் ஷாப்பிங் சென்டர் தியேட்டர் எண்டு கட்டி ரோட்டுகள் போடுவினம். இதுதான் மில்லியன் பில்லியன் தொகையிலான அபிவிருத்திகள். என்ன யோசிக்கிறீங்கள்? இந்த அபிவிருத்திஎல்லாம் வடக்கிலையும் கிழக்கிலையும் தான். ஆனா தமிழனா பிறந்தவனுக்கு இல்லை.

  2. வன்னிக்கிறார் மண் கவ்வினதுக்கு அவையின்ரை கொள்கையில்லாத அரசியல்தான். ஒருக்கால் மஹிந்தரோட கூட்டுவைப்பினம் பின்னர் தாங்கள் தனித்துவமானவர்கள் கொள்கையை விற்று பிழைக்காதவர்கள் என்பினம். இவர்கள் கட்சி வைத்திருப்பதை விட கலைச்சுவிட்டு அரச மரத்திற்கு கீழ இருந்து போதிக்கலாம். இப்ப அந்த வன்னிக்காரரட்டை இருக்கிறவை என்னண்டால் தங்கடை தங்கடை வியாபாரத்திலதான் கூறியா இருக்கினம். பாவம் அவையளை நம்பின பெடியளை றோட்டில விட்டுட்டு போன பரதேசிகள். முதலில அங்க ட்சிக்காரர் உருப்பட வேண்டும் எண்டால் இப்ப உள்ள உள்ளவர் அரச மரத்திலை இருந்து போதிக்க புதியவை வந்து கட்சியை எடுத்தால்தான் ஏதேனும் கருவாட்டு துண்டாவது அவைக்கு கிடைக்கும். அல்லத hடிக்காரரை வால் பிடிக்க வேண்டியததான்.

Comments are closed.