பிரிதானியாவிலிருந்து வாரம் ஐந்து பேர் ஐ.ஸ்.ஐ.எஸ் இல் இணைந்து கொள்ளப் பயணமாகின்றனர்

அமெரிக்க இராணுவத்தின் இலச்சனையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்
அமெரிக்க இராணுவத்தின் இலச்சனையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்

பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஐந்து பேர் ஈராக் அல்லது சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொள்கின்றனர் என பிரித்தானியாவின் உயர் போலிஸ் அதிகாரியான ஹோகன் ஹோவ் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் இல் இணைந்து கொள்பவர்களின் தொகை முன்னர் அதிகமாகவிருந்தது. இப்போது வாரத்திற்கு ஐந்து பேர் மட்டுமெ செல்கிறார்கள் என்றார். ஏற்கனவே இணைந்து கொண்ட 500 பேர் நாடு திரும்பியிருப்பதாகவும் அவர்களால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க அரசாலும் அதன் மத்திய கிழக்கு நட்பு நாடுகளான காட்டார் சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய போன்றவற்றாலும் இயக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பை பயன்படுத்தி பல்வேறு அழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரைக்கும் உலக மக்களின் ஆத்ரவையும் சார்பான கருத்தையும் பெற்றிருந்த குர்தீஷ் தொழிலாளர் கட்சி என்ற சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் இடதுசாரி இயக்கம் அழிக்கப்படுகின்றது.

சிரியாவிலும் ஈராக்கிலும் நேரடி அமெரிக்கத் தலையீடுகள் நடத்தப்படுகின்றன. மக்கள் நாளாந்தம் கொலைக் களத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் கட்சியின் உறுப்பினர்களின் அச்சத்தை உருவாக்கி வெளி நாட்டவர்கள் மீதான தாக்குதலுக்குத் திட்டமிடப்படுகின்றது.

ஆக்குவதும் அழிப்பதும் நாமே என்று ஏகபோக அரசுகள் உலக மக்களைப் பந்தாடி வருகின்றன.

குர்தீஷ் முள்ளிவாய்காலின் பின்னணி – தொடரும் மனிதப்படுகொலைகள் : சபா நாவலன்