பிரான்ஸில் தலைமை விருந்தினராக மன்மோகன் சிங்

பிரான்ஸில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அந்நாட்டு தேசிய தினத்தில் தலைமை விருந்தினராக மன்மோகன் சிங் பங்கேற்கிறார். இது போன்ற கெüரவத்தைப் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அந் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார்.

எகிப்தில் உள்ள ஷரம்-எல்-ஷேக்கில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் அணிசாரா இயக்க உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் 118 வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.