பிரபாகரன் மரணித்தது 19ம் திகதியே : சரத் பொன்சேகா

அரசு சர்வதேச சமூகத்தின் போர்க்குற்றக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும், தான் எந்த சட்டவிரோதமான ஆணையையும் போர் நடந்த போது பிறப்பிக்கவிலை எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்பட்டிருப்பவருமான் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த மே மாதம் 19 ஆம் திகதியே கொல்லப்பட்டதாகவும் 18 திகதி கொல்லப்பட்டது என்பது தவறானது எனவும் இலங்கை ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.