பிரபாகரன் படம் விற்பனை தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ்.

தமிழகத்தில் நடைபெறும் எல்லா அரசியல் கட்சி மாநாடுகளிலுமே பிரபாகரன் படம், டி ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. தமிழகக் கூட்டங்களில் எப்போதுமே கவர்ச்சிகரமான கிராக்கி பிரபாகரன் படத்திற்கு உண்டு.இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளிலும் பிரபாகரன் படம் புலி இயக்க ஆதரவு நூல்கள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் பெரியாரின் படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சடிக்கப்பட்ட காலண்டரை விற்றது தொடர்பாக பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் பி. சுப்பிரமணியன், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிங்காநல்லூரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிணையில் வந்த சுப்ரமணியன் இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பது: தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவரின் புகைப்படம் அல்லது படத்தை வைத்திருப்பது என்பது அந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமையாது. மேலும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 39 (1) (பி) (1) ஆனது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட பேச்சுரிமையைப் பறிப்பதாக உள்ளது. எனவே, அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். தவிர, என் மீதான முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தமிழக காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6 thoughts on “பிரபாகரன் படம் விற்பனை தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ்.”

 1. ‘தேச பிதா’ காந்தியைக் கொன்ற கோட்சேயின் படத்தை யார் விநியோகித்தாலும் பிரச்சனை இராது.
  நிச்சயமாக ஹிட்லர் முசோலினி பிரித்தானியக் கொடுங்கோலர் படஙளுக்கெல்லாம் தடை இராது.
  இவர்கள் ஏன் பிரபாகரனுக்கு அஞ்சுகிறார்கள்?

  1. இந்திய தேசத்திற்கே வில்லங்கமாக காந்தி இருந்ததால்தான் கோட்சே காந்தியைக் கொல்ல வேண்டியதாயிற்றூ ஆக இந்தியா விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது ஏனெலில் தமிழர் எம்.ஜி.ஆர் காலமானதையே இன்னும் ஏற்றூக் கொள்ளாதவர்.

  2. அப்போ சவர்க்காரைத் தேசபிதாவாக்கி கோட்சேக்கு தேச பக்தர் என்று விருது வழங்க வேண்டியது தான்!

   கருத்து கந்தசாமி அவர்களே
   தயவு செய்து “என்ன வில்லங்கத்துக்காக” இந்து மத வெறியர்களால் அக் கொலை திட்டமிடப் பட்டது என்று சொல்லுவீர்களா?

   1. கெளஸ்காரெல்லாம் தேசபிதாவாக இருந்த காலம் போய் இப்போ தோணீ வந்து விட்டார்.அம்பானியரின் தேசமாக இந்தியா ஆகிக் கொண்டிருக்கிறது.காந்தி நோட்டுக்கள் அமெரிக்காவிலும் கிடைக்கும் காலம் இது.காந்தியை நேரு சகித்துக் கொண்டார் கிழம் பெரும் சுமையாக இருந்தது பின்னாளீல் காந்தி மகாத்மா ஆனதும் அரசியல் பிழைப்பிற்காகவே.காந்தியே இந்து வெறீயரை உருவாக்கினார் அவர்கள அவர் ஏமாற்ற முயன்றபோது அதைச் சகிக்க முடியாத கோட்சே கொலைகாரனானனார்.

  3. கருத்து கந்தசாமி அவர்களே
   தயவு செய்து “இந்திய தேசத்திற்கு வில்லங்கமான எதற்காக” அக் கொலை நடந்தது என்று சொல்லுவீர்களா?

   முற் குறிப்பிட்ட கருத்து கெட்டநோக்கங்களுடன் பரப்பப் படுவதாலேயே அதைத் தெளிவுபடுத்தக் கேட்கிறேன்.

  4. “பின்னாளீல் காந்தி மகாத்மா ஆனதும் அரசியல் பிழைப்பிற்காகவே.காந்தியே இந்து வெறீயரை உருவாக்கினார் அவர்கள அவர் ஏமாற்ற முயன்றபோது அதைச் சகிக்க முடியாத கோட்சே கொலைகாரனானனார்.”
   காந்தி மகாத்மா ஆனது சுதந்திரத்துக்கு வெகு காலம் முன்பு. காந்தி எனக்கு என்றுமே மகாத்மா அல்ல. ஆனால் இந்து வெறியரை காந்தியே உருவக்கினார் என்பது கொஞ்சம் அபத்தமானது.
   அவர் இந்து மதவாதத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் தவறினார். பெரியாரோ அம்பேத்கரோ ஜின்னாவோ கூட முன்வைக்காத குற்றச் சாட்டு உங்களது.
   காந்தி கொலை உயர்சாதி இந்துக்களின் மிகப் பிற்போக்கான ஒரு கும்பலின் சதி. அதை எளிதாக நியாயப் படுத்தாதீர்கள்.

Comments are closed.