பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

V.Pirabakaran inioru.com

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு என்பதே பலம் மிக்க இராணுவத்தைக் கட்டமைப்பது தான். இதன் அடிப்படையே ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி முகாமொன்றை உருவாக்குவது என்பதிலிருந்தே ஆரம்பிக்க முடியும் என நாம் கருதினோம். இதற்குரிய முழுமையான திட்டத்துடன் பிரபாகரன் முன்வருகிறார். திட்டமிட்டபடி மாங்குளத்தில் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்படுகிறது. இது வரையில் எழுந்தமானமாக சந்தர்ப்பம் கிடைக்கின்ற வேளைகளிலெல்லாம் நாம் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தோம். துப்பாகிகளைச் சுட்டுப் பழகுவது போன்ற சிறிய இராணுவ நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டோம்.

79 இன் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் தான் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இரணுவப் பயிற்சி ஆரம்பமாகிறது. முகாம் துல்லியமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டது.

பாதுகாப்புடன் கூடிய இராணுவ முகாம்களில் பங்கர்கள் வெட்டப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்டு ஒரு சிறிய இராணுவ முகாம் போலவே காட்சிதருகின்ற பயிற்சிக்களம் தயாரிக்கப்பட்டது. முதல் தடவையாக இராணுவப் பயிற்சிக்கென்றே சீருடைகள் தயாரிக்கப்படுகின்றன. பயிற்சி வழங்கப்பட்ட அனைவருக்கும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இராணுவப் பயிற்சி ஒழுங்கு முறைகள் கூடப் பிரபாகரனால் தயாரிக்கப்படுகின்றன. அவரின் நீண்ட நாள் இராணுவக் கனவோடு கூடிய திட்டங்கள் முதலில் நனவானது.

அரச இராணுவம் மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இதன் உள் நோக்கம் இராணுவத்தின் மனிதாபிமான,மென்மையான உணர்வுகளை முற்றாகத் துடைத்தெறிந்து, மக்களையும் அழிக்கவல்ல அரச இயந்திரத்தின் அலகாக உருவாக்குவது என்பதே. இதில் விசித்திரமானது என்னவென்றால் மக்கள் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிய நாங்களே எம்மையும் அறியாமல் மக்கள் பற்றற்ற இராணுவத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை மாங்குளத்தில் கட்டியெழுப்ப முனைந்தது தான்.

அனைத்திற்கும் மேலாக ஹிட்லரின் இராணுவ ஒழுங்கு முறைகளாலும் இராணுவ வெற்றிகளாலும் ஆளுமை செலுத்தப்பட்டிருந்த பிரபாகரன், ஜேர்மனிய இராணுவத்தின் ஒழுங்கு முறைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சிகளில் புகுத்த முற்படுகிறார். ஹிட்லரின் இராணுவம் கட்டுக்கோப்பானதாகவும் உறுதியானதாகவும் அமைந்திருந்தமையால் மட்டும் தான் வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்கிறது என்று கூறுகிறார். .

இராணுப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார். அதனை நானும் நிராகரிக்கவில்லை

இவ்வேளையில் தான் முதல் தடவையாக பிரபாகரனுக்கு எதிரான எதிர்ப்பலைகள் தோன்றுகின்றன. சில உறுப்பினர்கள் ஹிட்லரின் சலூயுட் முறை என்பது தேவையற்றது என வாதிட்டனர். பிரபாகரன் அவர்களுக்கு எதிராக வாதிடுகிறார். கட்டுக்கோப்பான இராணுவம் அமைய வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளும் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். அதன் ஆரம்பமே இந்த ஹிட்லர் முறை என்று வாதிடுகிறார். குறிப்பாக, பிற்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட குமணன் இதை எதிர்க்கிறார். அவரும் பயிற்சி முகாம் ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் விவாதங்களில் பங்குகொண்ட வேளையிலேயே இந்த விவாதம் ஏற்படுகிறது. இறுதியில் பிரபாகரன் முன்வைத்த அடிப்படையில் ஹிட்லர் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுதப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் தவிர, நாம் இந்தியாவில் சில இயந்திரத் துப்பாகிகளையும் சிறிய ரக ஆயுதங்களையும் வாங்கியிருந்தோம். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தின் பயிற்சி முகாம் போன்று அமைந்திருந்த எமது முகாமின் இராணுவ அணிவகுப்பு, முறையான உடற்பயிற்சி போன்றவற்றுடன் துப்பாகிகளால் சுட்டுப்பழகுதல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம்.

மக்கள் இராணுவம் உருவாகி வளர்ச்சியடைகின்ற நிலையில் நிலையான இராணுவமும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட சரியான சூழல் உருவாகும் என்கிறது மாவோவின் இராணுவப்படைப்பு. நாம் நிலையான இராணுவத்தை எல்லாவற்றிற்கும் முன்னமே உருவாக்கிக் கொள்கிறோம். அதற்கான அனைத்து ஒழுக்கங்களும் ஒரு அரச இராணுவத்திற்கு ஒப்பானதாகத் திட்டமிடப்பட்டது.

மத்திகுழு உறுப்பினர்களில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகியோர் இந்தியா சென்றுவிட்டதால் நானும் பிரபாகரனும் மட்டுமே பயிற்சி முகாம் குறித்த முடிவுகளுக்கு வருகிறோம். இந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. இன்பம் செல்வம் என்ற இரண்டு இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகள் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

பயிற்சி முகாமிற்கு கிட்டு, செல்லக்கிளி,சாந்தன்,ஜோன்,சித்தப்பா,குமரப்பா,மாத்தையா போன்ற முன்னணி உறுப்பினர்கள் அழைக்கப்படுகின்றனர். பிரபாகரன் பயிற்சி வழங்குகிறார். இவருக்கு ஹிட்லர் இராணுவ முறையில் வணக்கம் செலுத்துவதும் திட்டமிட்டபடி இடம்பெறுகிறது.

இந்த வேளையில் இயக்கத்தினுள் இன்னொரு பிரச்சனையும் உருவாகிறது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரகு. வீரவாகு என்ற இருவரைப் பிரபாகரன் பண்ணைகளில் பயிற்றப்படாமல், அவர்கள் குறித்து எந்த முன்னறிதலுமின்றி முகாமிற்குக் கூட்டிவருகிறார். பயிற்சி முகாமிற்குக் கூட்டிவரப்பட்ட இவர்களிருவருக்கும் ஏனைய முக்கிய உறுப்பினர்களுடன் இணைத்துப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து பிரபாகரன் நான் உட்பட யாருடனும் ஆலோசிக்கவில்லை. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் பண்ணைகளில் நீண்டகாலம் பயிற்றுவிக்கப்பட்டு, அவர்களின் உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட்ட பின்னரே இயக்கத்தின் பயிற்சி மட்டத்திற்கு உள்வாங்கப்படுவது வழமையாக இருந்தது. ஏற்கனவே பண்ணைகளில் பல உறுப்பினர்கள் நீண்டகாலம் இராணுவப் பயிற்சிக்காகக் காத்திருக்கும் வேளையில் திடீரெனெ இருவரைப் பிரபாகரன் கூட்டிவந்தது குறித்து சர்வாதிகாரப் போக்கு என்ற கருத்து எழுகிறது. இந்த நடைமுறைக்கு பிரபாகரனிடம் எந்த உறுதியான காரணமும் இருக்கவில்லை. பலர் இந்த பிரபாகரனின் இந்த நடவடிக்கை குறித்துக் கேள்வியெழுப்பிய வேளைகளில் அவரிடம் அதற்குரிய பதில் இருக்கவில்லை.

வல்வெட்டித்துறைச் சேர்ந்த இந்த இருவரும் குண்டுகள் செய்வதற்கான இரசாயனப் பொருட்களை அவர்கள் கல்விகற்றுக்கொண்டிருந்த ஹாட்லிக் கல்லூரியிலிருந்து திருடிய சம்பவத்திற்காகப் பொலீசாரால் தேடப்படுகின்றனர். பொலீசாரல் தேடப்படுவதால் இவர்கள் தலைமறைவாகவே வாழ்கின்றனர். குமணன், மாதி, ரவி போன்ற உறுப்பினர்கள் ஏனையயவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர்களை இயக்கத்தினுள் உள்வாங்கியது குறித்து பலத்த ஆட்சேபனைகளைப் பிரபாகரனுக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கல்விகற்றுக்கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்துகொள்கின்றனர். இது தெரியவரவே குமரப்பா,மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்புகொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றனர். வீரவாகுவும் வீட்டிற்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பிவைக்கிறார். வீட்டிற்குச் சென்ற அவர் பொலீசில் சரணடைந்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சி பிரபாகரன் மீதான அதிர்ப்தியை மேலும் அதிகரிக்கிறது. இதன் பின்னர் பிரபாகரனின் தன்னிச்சையான போக்கு குறித்துப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பிக்கின்றனர். பிரபாகரனின் இராணுவ மனோபாவமும் அதற்குரிய சர்வாதிகாரத் தன்மையும் சிறுகச் சிறுக இயக்கத்தின் நிர்வாகத்துள் நுழைய ஆரம்பிக்கிறது. அதற்குரிய எதிர்வினைகளை எம்மோடிருந்த போராளிகளின் முன்னேறிய பகுதியினர் அவ்வப்போது ஆற்றத் தவறவில்லை.அனைத்து வாதப்பிரதிவாதங்களோடு பயிற்சி முகாம் சில நாட்கள் நடைபெறுகிறது. சில காலங்களின் பின்னர் பயிற்சி முகாம் முடிவடைந்தது என்று கூறி நிறுத்தப்படுகிறது.

இந்தக் காலப்பகுதியில் காந்தீயத்தில் அகதி நிவாரண வேலைகளை மேற்கொண்டிருந்த சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார். பிரபாகரனைத் தொடர்புகொண்டு பேசுகிறார். பிரபாகரனும் சந்ததியாரும் பல தடவைகள் சந்தித்துக் கொள்கிறார்கள். அவரை புலிகளின் முக்கிய பொறுப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் விரும்புகிறார்.

உமாமகேஸ்வரனூடாக எமக்கு ஆதரவாக வேலைசெய்த முதல் பெண் ஊர்மிளா பொலீசாரால் தேடப்படுகிறார். கொழும்பில் வாழ்ந்த அவர் தலைமறைவாக வடக்கு நோக்கி வருகிறார். பெண் என்பதால் இலகுவாக அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுவிடலாம் என அச்சம் நிலவியது.

லண்டனில் வசித்துவந்த கிருஷ்ணன் என்பவருடைய தலைமையில் எமக்கு ஆதரவாகச் சிலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அன்டன் பாலசிங்கத்திற்குத் தொடர்புகள் இருந்தன. அன்டன் பாலசிங்கம் இந்தியாவிற்கு வந்து எம்மைச் சந்திக்க விரும்புவதாக எமக்குத் தகவல் வருகிறது. இதற்காகப் பிரபாகரனும் இந்தியா செல்ல விரும்புகிறார். பயிற்சி முகாம் மூடப்பட்டுவிட்டதால் இந்தியா சென்று பாலசிங்கத்தைச் சந்திக்கவும், ஊர்மிளாவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லவும் இது சரியான சந்தர்ப்பம் என எண்ணிய பிரபாகரன் இந்தியா செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். அப்போது சந்ததியாரைத் தொடர்புகொண்ட பிரபாகரன்,அவரோடு முன்னரே இணைந்து வேலைசெய்த உமாமகேஸ்வரனை இந்தியாவிற்கு தன்னோடு வந்து சந்திக்குமாறு அழைக்கிறார்.

சந்ததியாரும் இதற்கு இணங்கவே, பிரபாகரன், ஊர்மிளா,சந்ததியார், கலாபதி ஆகிய நால்வரும் எமது விசைப்படகில் இந்தியா செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ரவியும் பாலாவும் இந்தியா செல்கின்றனர்.

இன்னும் வரும்..

பாகம் பதின்மூன்றை வாசிக்க..

பாகம் பன்னிரண்டை வாசிக்க..

பாகம் பதினொன்றை வாசிக்க..

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

62 thoughts on “பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்”

  1. Dear Ranjan donn`t worry. Tamils already have poison in their blood.

   thurai

   1. தமிழினத்தின் மீட்பராக தலைவர் பிரபாகரனும், தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரின் அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை. பிரபாகரன் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய சொத்து ஆகவே அவர் இன்றைக்கு உங்களுடன் இருக்கிறார். பிரபாகரன் சொன்னால் நிச்சயம் செய்வார். காலத்தின் தேவை கருதி நாம் எல்லோரும் அவருடன் சேர்ந்து பயணிப்பது ஒவ்வொரு தமிழர்களுடைய தனிப் பொறுப்பாகும்.

    1. காலத்தின் தேவை கருதி நாம் எல்லோரும் அவருடன் சேர்ந்து பயணிப்பது ஒவ்வொரு தமிழர்களுடைய தனிப் பொறுப்பாகும்.
     எங்கு வேல் எங்கு?? சிங்கள இராணுவத்தின் சப்பாத்து கால்களைநக்கவா?

    2. ஐயா ஐயரே ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி நம்ம தல மேல கை வைச்சூட்டிங்க. இனிமே தோட்டா வால சுடுவாங்க, வேல் ஆல குத்துவாங்க கவனம், கவனம்.

    3. அவருடன் சேர்ந்து பயணித்தவ்ர்களிற்கு முள்ளிவாய்க்காலைக்
     காட்டி விட்டு ஓடினாரா? அல்ல்து தானும் தலையைக் கொடுத்துவிடாரா என்பதை திடமாகக் கூறமுடியுமா?
     தமிழில்
     விடுதலை என்னும் சொல்லிற்கு அர்த்தம் புரியுமா?
     கொலை
     கொள்ளைகளை தமிழரின் பிரச்சினையை சாட்டாக வைத்து

     வளர்த்தவர்கள் தான் புலிகழும் அவர்களின் தலைவரும்.
     உலகமெங்கும் இன்றும் தொடர்வது புலிகளின் பயங்கரவாதமேயாகும். விடுதலைப்போர் என்றோ தோற்றுவிட்டது. துரை

     1. துரை, இலங்கை பற்றி என்ன தெரியும்? சிங்களம் பற்றி என்ன தெரியும்? ஈழத்தமிழர் பற்றி என்ன தெரியும்? இனஒதுக்கல் பற்றி என்ன தெரியும்? இன அழிப்புப்பற்றி என்ன தெரியும்? தரப்படுத்தல் பற்றி என்ன தெரியும்? தமிழர் உரிமை பற்றி என்ன தெரியும்? விடுதலை பற்றி என்ன தெரியும்? தமிழர் வீரம் பற்றி என்ன தெரியும்?
      போராட்டம் பற்றி என்ன தெரியும்? போரியல் பரற்றி என்ன தெரியும்? தமிழ் வீரர் பற்றி என்ன தெரியும்? தமிழுக்காய் தன்னுயிர் கொடுத்த மறவர் பற்றி என்ன தெரியும்? என்ன கட்டப்பொம்மன் காலத்தில் வாழ்ந்த எட்டப்பனா?
      பண்டாராவன்னியன் காலத்தில் வாழ்ந்த காக்கைவனியன் பரம்பரையில் பிறந்தவனா? தமிழை தமிழனை குறை சொல்வதை நிறுத்திவிடும்.

 1. முன்பு பிரபாகரனில் ஹிட்லரின் ஆளுமை இருந்ததெனக் குறிப்பிடும்போது சிலர் அதை ஏற்கவில்லை. இப்ப அவருடன் கூட இருந்த ஐயர் அவர்களே சொல்கிறார்.

  “அனைத்திற்கும் மேலாக ஹிட்லரின் இராணுவ ஒழுங்கு முறைகளாலும் இராணுவ வெற்றிகளாலும் ஆளுமை செலுத்தப்பட்டிருந்த பிரபாகரன், ஜேர்மனிய இராணுவத்தின் ஒழுங்கு முறைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சிகளில் புகுத்த முற்படுகிறார். ஹிட்லரின் இராணுவம் கட்டுக்கோப்பானதாகவும் உறுதியானதாகவும் அமைந்திருந்தமையால் மட்டும் தான் வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்கிறது என்று கூறுகிறார். .

  இராணுப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார். அதனை நானும் நிராகரிக்கவில்லை”

  பிரபாகரனின் பாதை எண்பதுகளின் ஆரம்பத்திலேயே அறிந்ததே!
  யார்தான் சொல்லிக் கேட்டார்கள்?

  இது பிரபாகரனின் குற்றமல்ல; அவர் செய்வது எல்லாம் சரியென்று இந்த-நிலைக்கு வளர்த்து…… இன்று எம்மினத்தையே இந்த-நிலைக்கு கொண்டுவந்து விட்டவர்களே பொறுப்பாளிகளாவர் .

  1. ஒரு ஒழுங்கு முறையான கட்டுகோப்பான போராட்டத்தை வழிநடத்த ஹிட்லர்,சந்திரபோஸ் போன்றோரின் நெறிப்படுத்தலை போல கடுமையான கொள்கையை ஈழத்தேசியதலைவர் பின்பற்றினார் என்பதில் இம்மியளவும் விட்டுகொடுப்புக்கு இடமேயில்லை.ஆனால் எல்லோரையும் நம்பி ஏமாந்து போனாரே எங்கள் தலைவர் அதுதான் கவலை..அதாவது அன்று தொட்டு இன்றுள்ள கருணா வரை….சாதாரண ஒரு குடும்பத்தையே கொண்டுநடத்துவதென்பது முடியாத இந்தகாலகட்டத்தில் ஒரு அமைப்பில் இந்தமாதிரி களைகளை கண்டறிவது என்பது மட்டுமென்ன சுலபமான காரியமா?

   1. எதிர்களின் மனத்தை மாற்ருவதும், கவர்வதுமே அறிவாளிகளின்
    செயல். இவர்களாலேயே உலகினை வெல்ல முடியும். உயிகளைப் பறிப்பத்தன்
    மூலம்
    மேலும் எதிரிகளை வள்ர்க்கவே முடியும். இதனை இறுதி வரை உணராத
    ஒருவர் தமிழர்களிர்கு எப்படித்தலைவனாக முடியும். சர்வாதிகாரியாகவே
    பிரபாகரன் வாழ்ந்தார். தமிழரை விடுவித்த்து சிங்கள இராணுவமேயாகும். துரை

    1. சர்வாதிகாரியாய் இருந்ததால்தான் 1983 க்குபின் இதுவரை இனக்கலவரம் என்று சாதாரண சிங்களக்காடையள் அப்பாவித்தமிழரை அடிக்கவில்லை. தமிழருக்கென ஒரு கட்சி மட்டும் இருந்தது. இன்னும் ஒரு குறைந்தது 20 வருடங்களுக்கு இனக்கலவரம் இருக்காது. அடிச்ச காடையளும் இல்லை அடிக்கச்சொன்ன அரசியல் வாதியளும் இல்லை. இது எல்லாம் ஒரு இனத்தின் தேவை கருதி அதுக்கேற்ற தலைவனாய் இருந்ததால்தான் முடிந்தது. இப்பெல்லாம் முடிந்தது என்று சொல்லக்கூடும். 20 நாடுகளின் உதவியோடு மட்டுமல்லாது, போரியல் விதிமுறைகளையும் மீறி, போரில் பாவிக்கக்கூடாத ஆயுதங்களையும் பாவித்து, போராளிகள் என்ற பெயரில், அப்பாவிப்பொதுமக்களையெல்லாம் கொன்று குவிததார்களே. இதுதானாடா உன்னுடை சிங்கள ராணுவத்தின் திறமை? உன்னால் சொல்லமுடியுமா? எப்பாவது சிங்கள ராணுவம் போர் விதிமுறைப்படி போரிட்டது பற்றி?

     1. தம்பியும் புலிபடையும் தோன்றமுன்னர் சிங்களவர்களிற்கு வவுனியாவரை தான் துணியவாக் வர் முடிந்தது. இப்போ தம்பி
      காட்டிய
      வீரம் யாழ்ப்பாண்த்தில் தமிழனின் மார்பில்
      சிங்கள ராணுவம் கால் வைத்துள்ளது.

      இனியேன் இனக்கலவரம் தெற்கில்?
      வடக்கில்
      தமிழர்க்ளிற்கு அடிவிழும் கட்டத்திர்கு கொண்டுவந்து விட்ட தம்பியை முதலில் தேடிப்பிடித்து விட்டு வீர வசன்ம் எழுதினால்
      வாசிக்க் ந்ன்றாக்விருக்கும்.
      துரை

     2. 20 நாடுகளின் உதவியோடு இலங்கை அரசாங்கம் வென்றுள்ள்ளது. ஆனால் உல்கநாடெல்லாம் வாழும் த்மிழர் தமக்கே
      பண்ம் தரவேன்டுமென் மிரட்டி பறித்த பண்மும்
      வாங்கிய ஆய்தங்கழும் ஏன் தோற்ரனெ?

      பல்மிருந்தால் மட்டும் போதாது அறிவுத் திறமையும் வேண்டும். அறிவில்லாத தலைவன் தன் இனத்தை அழிவிற்கே கொண்டு சென்றான், செல்வான், துரை

     3. துரை இவ்வளவு தெளிவாக கதைக்கிறீரே மக்களின் விடுதலைக்கு நீர் எவ்வழியிலாவது போராட வேண்டியது தானே.இப்பொழுது தானே புலிகளும் இல்லை.அதை விட்டு விட்டு உமக்கு ஏற்றார் போல் கதைத்து ஏன் முட்டாளகிரீர்.நீரும் ஒன்று செய்யமட்டீர் செயிரவனையும் புகுந்து குழப்புவீர்.காட்டி கொடுப்பீர்.இப்படி பட்டவனை கொன்றவுடன் உடனே தொடன்கிவுடுவீர் உமது புராணத்தை

    2. எல்லாம் வாயாலே சொல்லிவிட்டு போகலாம் ஏன் நீர் முயற்சிக்க வேண்டியது????? தானே இவ்வாறு வெட்டி பேச்சு பேசாமல்.”நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை செயவார்கலடி வாய் சொல்லில் வீரரடி” உம்மை போன்றவர்களுக்கு தான் பாடி விட்டு சென்றார் போலும் பாரதி

   2. எல்லோரையும் நம்பி ஏமாறவில்லை நக்கீரரே! நம்ப வேண்டிய சகபோராளிகளை சந்தேகப்பட்டு நம்ப கூடாத மேற்குலக உளவு ஸ்தாபனங்களை நம்பி சோரம் போனவர்தான் உங்கள் தலைவர். கருணா மட்டும் துரோகியல்லவே உங்கள் மொழியில் ராகவன், மாத்தையா, கட்டைபாலா, உமாமகேஸ்வரன், சுந்தரம் போன்ற புலிகளின் அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் கே.பி , ருத்த்ரகுமார் போன்ற அனைத்துலக தொடர்பாளர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன்,திருச்செல்வம் போன்ற மிதவாதிகள் எல்லோரும் துரோகிகள் ஆக்கப்படும்போது எல்லோரையும் துரோகியென்று கைகாட்டுபவன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் சிந்திக்க மறந்ததன் விளைவுதான் இன்று நாம் கதியற்று நிற்கிறோம். சிறி லங்கா அரசின் போர் குற்றங்களை வெளிகொண்டு வருவதிலாவதுநாம் ஒற்றுமையாக செயற்படுகிறோமா?

    1. நீ மேற்குறிப்பிட்டவர்களில் அநீகமானோர் எப்படி பட்டவர் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சொக்கியமே.அந்தந்த நிகழ்வுகள் ஊடாக பயணித்திருந்தால் புரிந்திருக்கும்.

   3. எல்லோரையும் நம்பி ஏமாந்து போன சோணகிரி (வலசு) உங்கள் தலைவர் என்பதை நீங்களே பிரகடனப்படுத்தி விட்டீர்கள். காலம் கடந்த ஞானம் இது.

    1. தலைவர் இருக்கும்வரை காட்டிகொடுத்தது போதாதெண்டு இப்பவும் புலம்புகிறாங்கள்!!!

  2. அய்யரின் எழுத்தில் அலெக்ஸ் இரவி விளக்கம் சொல்லுங்கோ!

   இதில் பிரபாகரனில் ஹிட்லரின் ஆளுமை என்பது எது? இதில் நாஸிக் கொள்கை எங்கே?

   “இராணுவப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார்.”

   “பிரபாகரன் ஹிட்லரின் நாசிக் கொள்கையாலோஇ சுபாஸ் சந்திரபோசின் எதிர்ப்பு அரசியலாலோ ஆட்கொள்ளப்படவில்லை. அவை பற்றியெல்லாம் அவருக்கு கரிசனை இருந்தது கிடையாது. அவர்கள் கட்டமைத்திருந்த இராணும் குறித்தும் அதன் ஒழுங்கு முறைகள் குறித்துமே அவரின் முழுக் கவனமும் ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது. அன்று மாவோசேதுங்கின் இராணுவப்படைப்புகளை இவர் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவராலும் பிரபாகரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்று பிற்காலங்களில் நான் எண்ணுவதுண்டு.”

   ” சுபாஸ் சந்திரபோஸ் வாஞ்சிநாதன் போன்றவர்களை வாசிக்கும் இவர் அவர்கள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தார். தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இவ்வாறான விசித்திரக் கலவைக்கு எந்த அரசியலும் இருந்ததில்லை. இந்த மூவரும் இராணுவ வழிமுறையில் வெற்றிபெற்றவர்கள் என்பது தான் காரணமாக இருந்தது.”

  3. அன்னத்துக்கு பாலையும் தண்ணீரையும் ஊற்றி கொடுத்தால் தண்ணீரை விட்டு பாலை மட்டும் குடிக்கும் திறமை கொண்டதாம்

 2. .

  புலம் பெயர் மக்கள் தேசியத் தலைமையின் பணியை ஏற்கும் காலம்

  உலகத்தில் இரண்டாம் உலக யுத்த முடிவுக்கு பிற்பாடு ஐக்கிய நாடுகள் மன்று தோற்றம் பெற்றது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடு உலகத்தில் உள்ள தேசங்கள் ஒரு குடைக்கு கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.

  இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிற்பாடும், ஐக்கிய நாடுகள் மன்றின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடும் உலக அரங்கில் பல புதிய தேசங்கள் உருவாகியுள்ளன. இப்புதிய தேசங்களின் தோற்றத்திற்கு உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் நலன் சார் அரசியலே காத்திரமான காரணியாக அமைந்திருந்தது.

  எடுத்துக்காட்டாக அண்மையில் தனிநாடாக பிரிந்த கொசுவா தேசம், அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் பிராந்திய நலன் சார் அடிப்படையில் உருவாகக்கம் பெற்றிருக்கின்றது. இப்பின்புலச் அரசியல் சிந்தனைக் கோட்பாடானது அதாவது புவிசார் அரசியல் கொள்கை வகுப்பானது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பல பின்னடைவுகளையும் தடங்கல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

  தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய களம் மற்றும் புலத்தின் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டில், தமிழீழ விடுதலையை நோக்கிய பாதைக்கான அரசியல் அணுகுமுறையில் சிறு பிளவை ஏற்படுத்தியுள்ளது. இவ் அணுகுமுறை வேறுபாட்டை குழுமோதலாக பார்ப்பதை தவிர்த்து அவற்றின் பின்புலதில் உள்ள அரசியல் சிந்தனைக் கோட்பாட்டின் வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளல் அவசியம்.

  இச்சிந்தனைக் கோட்பாட்டின் வேறுபாட்டை மேலும் விளக்கும் வகையில் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முப்பது வருட கால அகிம்சை அதாவது அறவழிப் போராட்ட காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. தந்தை செல்வா அவர்களுடைய அறவழியிலான தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் இரண்டுவிதமான சிந்தனைப் பள்ளிக்கூடங்கள் அமைந்திருந்தன.

  1. தந்தை செல்வா அவர்களுடைய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கிய சிந்தனையை கொண்ட பள்ளிக்கூடம்

  2. எம்.பி நவரத்தினம் அவர்களுடைய சுயாட்சி கழகத்தினுடைய சிந்தனைப் பள்ளிக்கூடம்

  எம்.பி நவரத்தினம் அவர்கள் சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை எனக் கருதி சுயாட்சியே அதவாது தமிழீழம் தனியாப் பிரிந்து செல்வதே பொருத்தமான அரசியல் தீர்வெனக் கருதி பிரிந்து சென்றவர்.

  தந்தை செல்வா அவர்களைப் பொருத்தவரையில் ஏனையவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஓர் அரசியல்வாதி அல்ல. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வுக்காக மறவழியில் போராடியதோடு மட்டுமன்றி, 1972ம் ஆண்டு குடியரசு யாப்பு நிறைவேற்றப்பட்டதை அடுத்து (தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்ட யாப்பு) சிங்களப் பேரினவாதிகளுடனான பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி கண்டதையடுத்து தமிழீழ தனியரசு அமைப்பதே ஒரே ஒரு தீர்வு என தனது ஆழ்ந்த அரசியல் புரிதலின் ஊடாக முடிவை மேற்கொண்டவர்.

  நம்முடைய தேசியத்தலைமையானது எம்.பி நவரத்தினம் அவர்களுடைய சிந்தனைப் பள்ளிக்கூடத்திலிருந்து உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதேவகையிலான அரசியல் கோட்பாட்டை கொண்ட இரு வகையான அரசியல் சிந்தனைப் பள்ளிக்கூடங்கள் உலகில் காணப்படுகின்றன.

  1. பயங்கரவாதத்திற்க எதிரான போர் என்ற அடிப்படைச் அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயத்தை கொண்ட ஓர் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள்.

  2. தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ணய உரிமையை அடிப்டையிலான தீர்வை கொண்டு நிறைவுக்கு கொண்டுவரல் என்ற சிந்தனையை கொண்ட ஓர் பள்ளிக்கூடம்.

  இவ்விரு சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்களும் தேசிய விடுதலைப் போராட்டக் குழுக்களிடம் தமது சிந்தனைகளை வலுப்படுத்துவதற்காக அவர்களது சிந்தனைகளை விதைக்க முற்படுவார்கள். தற்போதைய உலக ஒழுங்கில் தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ண உரிமை அடிப்படையிலான தீர்வைக் காண வேண்டும் என்று சிந்தனைப் பள்ளிக் கூடத்தைச் சார்ந்தவர்களின் சிந்தனையே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

  இப்பயங்கரவாதத்திற்கு எதிராக அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயங்கள் ஊடாக செயற்படும் சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் நமது தமிழீழப் போராட்டத்திலும் பல சிந்தனைகளை நமக்குத் தெரிவிப்பார்கள். தமது கோட்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவும் தமது சிந்தனைகளை நமக்குள் விதைக்க முற்படுவார்கள்.

  இச்சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் திட்டமிட்டு செயற்படும் வல்லமை பெற்றவர்கள். இடதுசாரிப் போக்குடைய மாற்றுக் கட்சிகளின் ஒத்தாசையை நாடுவதன் மூலம் தமிழீழக் எண்ணக்கருவை தமிழ் மக்களிடம் இருந்து அழித்துவிடமுடியாது என்பதில் உலக மற்றும் பிராந்திய வல்லரசுகள் தெளிவு பெற்றுள்ளன.

  ஆகவே தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புக்களில் மிதவாதப் போக்குடையவர்கள் எனத் தாம் கருதுபவர்களை நாடிச் செல்ல இப்பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் தலைப்பட்டுள்ளனர். மிதவாதப் போக்குடையவர்களிடம் சொல்லப்படும் கருத்துக்கள் கீழ்வரும் அடிப்படையில் அமைந்திருக்கும்.

  தமிழீழம் என்ற கோரிக்கையை முதலில் கைவிடுங்கள். படிபடிப்படியாக உங்கள் கோரிக்கைகளை வையுங்கள் என ஆலோசனை வழங்கப்படும். இது ஏறிபடி அணுகுமுறை எனச் சொல்லப்படும்.

  ஆனால் அது இறங்குபடி அணுகுமுறை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது போய்விடும். இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன என்றொரு மிகப்பெரிய கேள்வி எம்முன் எழுந்துள்ளது. தமிழர்கள் பெறுமளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படும் மற்றும் செயற்படவிருக்கம் சனநாயக அமைப்புக்களை வலுப்படுத்துவதோடு, கொள்கை பற்றுருதி கொண்ட செயற்பாட்டாளர்களை அல்லது வேட்பாளர்களை முதலில் அடையாளம் காண வேண்டும்.

  அவர்களுக்கு நாம் ஆதரவு அளிப்பதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்களின் கவனத்தை நாம் ஈர்க்கலாம். அதாவது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ணய உரிமை அடிப்டையில் தீர்வைக் காண விளையும் சிந்தனைப் பள்ளிக் கூடத்தை சார்ந்தவர்களையாகும்.

  கொசுவா போராட்டம் சிதைக்கப்பட்டு ஒன்பது வருடத்திற்கு பிற்பாடு அதாவது அம்மக்கள் கொள்கை பற்றுருதியுடன் இருந்தமையால் தமது நாட்டுக்கான சுதந்திரத்தை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட நீரோட்டத்தில் சரியான திசையில் தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் ஏற்பட்ட தடங்கல்களை விலக்கியும், களையெடுப்புக்களும், இடைநிறுத்தல்களும் தமிழீழ தேசியத் தலைமையால் மேற்கொள்ளப்பட்டது.

  தமிழ் மக்களாகிய நாம் தமிழீழத் தேசியத் தலைமை கவனித்துக் கொள்வர் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் வாளாவிருந்தோம். ஆனால் தற்போது தமிழீழத் தேசியத்தலைமை நேரடியாக வழிப்படுத்தலுக்கான வேலையைசெய்ய முடியாதுள்ளது.

  இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் தேசியத் தலைமையின் செயற்பாட்டை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றை கருத்திற் கொண்டு வரும் தேர்தலில் கொள்கை பற்றுருதியுடன் உள்ளவர்களை தெரிவு செய்வது எமது கடமை என்பதை புரிந்து கொள்வோம்.

  1. புதுசாய் ஒருவர் “பிசினஸ்” தொடங்கியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன் யாராவது இவருக்கம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஒத்துழைப்பு செய்யுங்கப்பா?…  “வேல்” அண்ணை நீங்கள் நிலத்தை வாங்கி வீட்டைக்கட்டப்போறீங்களா இல்லை?… நிலத்தோடு சேர்த்து வீடு பாக்குறீங்களா??… இன்னும் எத்தனை பேர் கிளம்பியிருக்குறீங்கள் இப்படி?… வந்திட்டர் தமிழருக்கு வழிகாட்ட!!!…. போய்யா போ… போய்! புழைச்சுத்தின்ன வழியைப் பாருங்க!!!

  2. கொள்கைகள், விடுதலை உண்ர்வென்பது பிற்ந்தநாட்டில் மக்கலோடு மக்க்களாக்
   வாழும்போதே
   உண்ர முடியும். புலம் பெயர்நாடுகளில் 30 வருடத்திற்கு மேலாக் பக்கத்து வீட்டில்
   எந்த தமிழன்
   வாழ்ந்தாலென்ன நானும் என் பண்மும் என்று வாழ்ந்து விட்டு சிலர் கடைசி கால்த்தில்
   பிரமுகர்களாக் டிவியில் காட்சி தருபவர்களிற்குப் பெயர் தலைவர்களா? தமிழர்களின் அங்கத்தவர்களா? துரை

   1. நீங்கள் சொன்னதையே அன்று யூதர்களும் செய்திருந்தால் ………….

 3. Dear Tamilians, Stop reading inioru.com. It seems to be a poisonous site for tamilians. 

  1. It certainly is toxic to certain parasitic types.
   Why are some people so scared of different views.
   If there are lies and poisonous thoughts, why cannot they expose them and resist them with courage?
   Tamils have been poisoned by narrow nationalist thought for too long. It is time that they developed a different kind of more accomodative nationalism.

  2. Dear, when we read your comment only we can read your comment, “Stop reading inioru.com. It seems to be a poisonous site for tamilians”.

   Then how can we read your comment?

   And why are you reading INIORU?

   There is no harm in reading, when we read all only we can get all messages to analyze.

   Seems like you are very selfish, you are reading here and ask others to don’t read?

   What is your problem?

  3. Alex
   Some people have a phobia for fresh ideas. Such fear has existed from times ancient.
   They are right in a way. Powerful ideas are mightier than the most powrful weapon, for when people get to grips with them they become an unstoppable force. They try every trick in the book to prevent the spreading of ideas that people fear.

  4. CORRECTION TO
   Shiva
   Posted on 05/02/2010 at 5:58 am

   Alex
   Some people have a phobia for fresh ideas. Such fear has existed from times ancient.
   They are right in a way. Powerful ideas are mightier than the most powrful weapon, for when people get to grips with them they become an unstoppable force. They try every trick in the book to prevent the spreading of ideas that they fear.

 4. அய்யர் பிரபாகரனுடன் சேர்ந்து, “ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தி” விட்டு,

  இப்போது வந்து “நான் நிராகரிக்கவில்லை.” என்று கதை எழுதி,

  அதற்கு “பிற்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட குமணனை” சாட்சிக்கழைப்பது(உயிரோடிருக்கும் ராகவனைக் கைவிட்டு), அபத்தமாகப் படவில்லையா?

  1. வாதம்,
   உங்கள் வாதம் தான் அபத்தமாக உள்ளது. ராகவன் மட்டுமல்ல, ஜோன், சித்தப்பா, சாந்தன், ரவி, நாகராஜா போன்ற அனைத்து ஆரம்ப கால உறுப்பினர்களும் உயிரோடு தான் உள்ளனர். இவர்களில் யாருமே அய்யர் எழுதுவதை மறுத்தது கிடையாது. எனக்கும் இவர்களில் ஒருவரைத் தெரியும். அவர்கள் எழுதப்படும் உண்மைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். செத்துக் கிடக்கும் அனுபவங்களிலிருந்து இனிமேல் கற்றுக்கொள்வார்கள். ஈழப் போராளிகள் மட்டுமல்ல. இந்த உலகம் அனைத்தும் படிக்கவேண்டிய பாடங்கள் இவை. அதற்கு நுளைவாசலாக அய்யரின் தொடர் அமைகிறது.

   1. கர்னா!

    உங்களுக்கு தெரிந்த அந்த ஒருவரையும் எழுதச் சொல்லுங்கள்.நாங்களும் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.

    அதற்காக உங்களுக்குத் தெரியாத “அவர்கள் எழுதப்படும் உண்மைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.” என்பது அபத்தம்.

    மவுனமானவர்களை,

    மறைந்து வாழ்பவர்களை,

    மரணித்துப் போனவர்களை சாட்சியாய் அழைக்காதீர்கள்.

    பிரதிவாதம் அடிபட்டு போய்விடும் ஆபத்து இருக்கிறது.

    “உலகம் அனைத்தும் படிக்கவேண்டிய பாடங்கள்” எண்டு செஞ்சோற்றுக் கடனுக்காக கர்னா!

    நீங்க றீல் விடுங்கோ.

  2. வாதம்:
   “…’பிற்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட குமணனை’ சாட்சிக்கழைப்பது(உயிரோடிருக்கும் ராகவனைக் கைவிட்டு), அபத்தமாகப் படவில்லையா?” என்றீர்கள்.
   அதற்கு ராகவனும் பிறரும் மறுக்கவில்லை என்று பதில் வந்துள்ளது.
   அதற்கு முகம் கொடுக்காமல் கதையை வேறு திசையில் திருப்பப் பார்க்கிறீர்கள்.

 5. why are you come here and read article. We like so we read… Mind your business.

 6. மாவீரர்களே உங்களது பாதையிலே நாம் தொடர்ந்து போகின்றோம் உங்கள் பாத சுவட்டினிலே பூ வைத்து பாடுகின்றோம் இங்கிருந்து நாம் பாடும் சோக ராகமே உங்களது காதில் கேட்கவில்லையோ எங்கள் கண்ணில் இருந்து வழியும் நீர் உங்கள் கதை சொல்லுதே எம் தலைவன் வழியில் செந்தணலாய் நாம் செல்வோம் எதிர் கொள்ளும் படை தகர்த்து எம் பணி தொடர்வோம் மாவீரர்க…

  1. மாவீரரே நாம் இப்போ பணத்திற்கு திண்டாடுவது உங்களுக்கு தெரியவில்லையா? பிணத்தில் பிழைப்பு நடத்திய எங்களை இப்படி நடுத்தெருவில் விட்டு சென்றீரே! வட்டுகோட்டையென்றும் , நாடு கடந்த அதுவென்றும் ஏதோ வழியில் மீண்டும் வருவோம் பணம் பறிக்க ….

 7. யுத்தம் முடிந்த பின்பும், அதன் அலையால் இழக்கப்படும் தமிழ் உயிர்கள்
  அரசு எம்மக்கள் மீது சுமத்திய போர் முடிந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் எம்மிடம் இருந்து அகலவில்லை. அவை மக்களை படிப்படியாக நசுக்குவதாகவே உள்ளன. இங்கு எமது சமூகத்திடமே எமது மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு விடப்பட்டிருக்கிறது!

  கடந்ட 2006 ஆண்டின் அரைப்பகுதியிலிருந்து ஆரம்பித்த யுத்தம் தெடர்சியாக மூன்று ஆண்டுகள் நடைபெற்று கடந்தவருடம் மே மாதம் முடிவடைந்தது.

  மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்கால் வரை தொடர்ந்த இந்த யுத்தம், தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு இருண்ட பக்கத்தை தேற்றுவித்துள்ளது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்மிடையில் தொடர்சியாக இருந்த இன முரன்பாடு, இந்த இருள் நிலையை தமிழ் மக்களிற்கு அளிக்கக் காரணமாக இருந்தது.
  யுத்த காலத்தில் நடந்த கொடூரங்கள், மக்கள் அனுபவித்த துன்பங்கள் உலகெங்கும் அறிந்த செய்திகளாக இருந்த போதும், அவை வாசித்து அறியப்பட்டவையாக மட்டும் இருந்தமை கவலைக்குரியதே.

  இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முந்திக்கொண்டு நின்ற நோர்வே, ஐப்பான், ஐ.நா மற்றும் ஐரோப்பியா ஒன்றிய நாடுகளோ இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவோ. தட்டிக்கேட்கவோ முடியாமற்போனதும் தமிழ் மக்களது வரலாற்றில் தூரதிஸ்டமே.

  இந்த சம்பவங்கள் எல்லாம் அரசியல் சூழ்சியோடு நடந்தேற அதற்குள் அகப்பட்டுக் கொண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இன்று நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களது வாழ்வியல், பொருளாதார, சமூக, கலாசார, கட்டமைப்புகள் சீர்குலைக்கப்பட்டு ஒரு சூனியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

  இந்த அடிப்படைகளை வைத்து பார்கும்போது தமிழ் மக்களின் வாழ்வியலானது கடுமையான போரிற்கு (2006) முன்னதான காலப்பகுதி, யுத்தகாலத்தின் போதான அவல வாழ்வு, யுத்தம் முடிவடைந்த பின்னருமான சீரழிவுகள் என கால ரீதியாக தமிழ் சமூகம் சீரழிக்கப்பட்டு வருவதையே உனர்த்துகின்றது.

  இற்தக்கட்டுரையின் நோக்கமானது யுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்கள் படும் இன்னல்கள், எதிர்நோக்கும் சவால்கள் குறித்தே அமைகின்றது.

  யுத்த காலத்தின்போது தமிழ்மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், அதாவது உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், இடப்பெயர்வுகள் என எல்லாவற்றையும் ஏதோ ஒருவகையில் எல்லா சமூகத்தவரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்தளவிற்கு யுத்தகாலத்தின் நிலை இருந்தது மட்டுமல்லாது மனிதநேய அமைப்புக்கள் ஊடகங்கள் அவற்றை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தன.

  பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூச்சலிட்ட மகிந்தஅரசு அதனை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தபோது, அரசிற்கு பல்வேறு உதவிகளையும் புரிந்து ஊக்குவித்த அயல் நாடுகள் தமிழ்மக்களிள் மீது தொடரப்பட்ட யுத்தம் சரியானது என்ற பார்வையையே கொண்டு செயல்பட்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளின் உதவிகளுடன் நடைபெற்று முடிந்த யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானவர்கள்;; அங்கவீனராக்கப்பட்டனர். இன்றும் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சம் வரையான மக்கள் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டன. பொதுவாக வடக்கு கிழக்கின் பொருளாதாரம் பூச்சியம் ஆக்கப்பட்டது.

  இந்த அவலங்கள் எல்லாம் ஏற்கனவே பேசப்பட்டு அனைவரின் காதுகளுக்கும் புளிப்பேறிப்போய்விட்டவை. ஆனாலும் மக்கள் மத்தியில் இன்னமும் யுத்தத்தின் பயம், அனுபவித்த துன்ப-துயரம், என எவையும் அகன்று விடவில்லை. இவை எல்லாம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு தொடர் கதையாக தொடரப்போகின்றது என்பது தெளிவாகின்றது. போரின்போது உடல், உளரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த சுமையில் இருந்து மீள முடியாது தவிக்கின்றனர். இதனால் தற்கொலை செய்தல், தற்கொலைக்கு முயற்சித்தல், மற்றவர்களில் இருந்து விலகியிருத்தல், என்று மக்களின் செயற்பாடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

  அகதிமுகாம்களில் இருந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்படுகின்ற போதும் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே நடைபெறுகின்றது. தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளின் நிலையும் கவலைக்குரியதே. அவர்களை இன்று விடுவிக்கின்றோம் நாளை விடுவிக்கின்றோம் எனக்கூறும் அதிகாரிகள் செய்தித்தாள்களில் செய்தியாக மட்டும் பிரசுரிக்க விரும்புகின்றன்றனர். அண்மையில் அகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ் பல்கழக்கழகத்தில் கல்விகற்க அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவர்களின் தற்கொலைச்சம்பவங்கள் போரின் பின்னதான விளைவையே காட்டி நிற்கின்றது. உடலாலும் உள்ளத்தாலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த இந்த மாணவர்கள் தமது கல்வியாலும், சக மாணவருடன் ஒன்றித்து இருக்க முடியாத அளவிற்கு யுத்தம் அவர்களை மனரீதியாக பாதித்திருக்கின்றது. விக்ரர் அருள்தாஸ், திருவிழி, கருணாநிதி என்ற மூன்று பல்கலைக்கழக மாணவர்களை நாம் இழந்திருக்கின்றோம். அவர்களின் மரணம் என்பது அவர்களுடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும்மேலாக ஒரு செய்தியையே சொல்கின்றது என்பதை அவதானிக்க வேண்டும். இம்மாணவர்களின் தற்கொலைக்கு பின் பலரும் பலவிதமாகப்பேசிக்கொண்டனர். உண்மையில் யார் வேண்டுமானாலும் தமது நாவிற்கேற்றவாறு மாறிக்கொள்ளலாம். ஆனால் உண்மை என்ற ஒன்று எந்த நாவிற்கும் ஒன்றே என்பதுதான் அவசியமாகின்றது.

  மரணித்துப்பேன அந்த மாணவர்களுக்காக நாம் வருந்துகின்றோம். ஆனால் இன்றும் இதுபோலவே எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்துவிடும் என்பது பற்றி சிந்திக்க இன்றும் யாரும் முயலவில்லை என்றே கூறவேண்டும். இந்த மாணவர்கள் மறைவு மட்டுமல்ல தடுப்பு முகாம்களில் எத்தனையோ இளைஞர் யுவதிகள் தற்கொலைக்கு முயற்சித்தவண்ணமும், தற்கொலை செய்தும் இருக்கின்றனர். இவை தவிர மனஉளைச்சல், போக்குமாறல் தனித்து நடமாடல், ஞாபகமறதி என்ற நிலைக்கு பல இளையவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமாக இருப்பது யுத்தம் என்ற பேர் அனர்த்தமாகும்.
  மேலும் போரின் போது அங்க, அவயவங்களை இழந்து சக்கர நாக்காலிகளிலும், ஊன்றுகோள்களிலும் உலாவும் பலரின் மனதை யார் புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறமுடியும்? ஏதிர் காலத்தில் அவர்கள் எமது சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இவ்வாறான கேள்விகள் முடிவற்றவை. இவர்களுக்கு அரசோ தொண்டு நிறுவனங்களோ புனர்வாழ்வை அளித்தாலும், இழந்தவற்றை மீளப்பெற்றுவிட முடியுமா? சொந்தமாக வீடு இல்லை. வீட்டிற்கு அமைத்திருந்த வேலியில்லை என்று எத்தனை இழப்புக்களில் வாழும் மக்களின் மனங்களில் நாள்தோறும் தோன்றும் எண்ணங்கள் எப்படி இருக்கும்?

  இவ்வாறான அவலச்சூழலில் மகிந்த அரசு தமிழ் மக்களை மீள்குடியமர்த்தி அவர்களிற்கு வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்திவருவதாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்கின்றது. இதன்மூலம் பலவேறு உதவிகளைப்பெற்று சிங்கள தேசத்தை அபிவிருத்தி செய்வதில் முழுமூச்சுடன் செயற்பட்டுவருகின்றது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்தி அரசு தனது விருப்பங்களை நிறைவேற்றிவருகின்றது.

  அரசின் இத்தகய செயற்பாடுகளால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே. இதில் இருந்து தெரிவது திட்டமிட்டு தமிழர் பகுதிகள்மீது தெடுக்கப்பட்ட ஆயுதயுத்தம் முடிவடைந்தாலும் அடக்குமுறை மற்றும் ஆதி;க்க யுத்தம் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதன் அங்கங்களாகவே அகதிமுகாம் மக்களை மீழ்குடியமர்த்த தாமதிப்பதும், இளைஞர் யுவதிகளை தடுத்து வைத்திருப்பதுமாக உள்ளது.

  போர் முடிவுக்கு வந்தது, பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்த அரசு 180 நாட்களுக்குள் அனைத்து மக்களையும் மீள்குடியமர்த்துவோம் என்று கூறியிருந்தது. ஆனால் ஒரு வருடகாலம் ஆகியும் அரசின் ஆணை நிறைவேறவில்லை.

  இவற்றில் இருந்து பார்க்கும் போது தமிழ் மக்களின் எதிர் காலம் பற்றிய கேள்விகள் பலவாறாக எழுகின்றன. அதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதியான வாழ்வே அதிகம் கேள்விக்குள்ளாகின்றன.

  இன்றும் எத்தனை உயிர்கள் எம்மைவிட்டு நீங்கிவிடும் என்ற பயம் மக்களிடையே தோன்றியிருக்கின்றன. இங்கு முக்கியமான விடையம் என்னவெனில் பாதிக்கப்பட்ட ஒருவன் “நான் இன்னதால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று மற்றவர்களிடம் கூறப்போவதில்லை. அவனை சமூகம் தான் ஓரளவு அடையாளம் கண்டு காப்பாற்ற வேண்டும். இங்கு எமது சமூகத்திடமே எமது மக்களைக்காப்பாற்றும் பொறுப்பு விடப்பட்டிருக்கிறது. ஒரு உயிரைப் பாதுகாக்க அரசையோ, சர்வ தேசத்தையோ எதிர்ப்பார்க்க முடியாது. எனவே எமது சமூகத்தில் நிலவும் அடிப்படைப்பிரச்சினைகளை, அடையாளம் கண்டு அதற்கான மாற்று வழிகளைத் தேடுவது நம்மனைவரதும் கடமையாகும்

  அரசு எம்மக்கள் மீது சுமத்திய போர் முடிந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் எம்மிடம் இருந்து அகலவில்லை. அவை மக்களை படிப்படியாக நசுக்குவதாகவே உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் எல்லோரும் எமது வாழ்வையும், அதற்கான அற்பணிப்பையும் உணர்ந்து தேவையற்ற இழப்புக்களை தவிர்த்து முன்னேற அர்ப்பணிக்க வேண்டும். இதுவே எமது சமூக அபிவிருத்திக்கும், தமிழர்களின் இருப்புக்கும் ஒரு படியாக இருக்கும்..

 8. தமிழீழம் தமிழர்களின் கடமை

  வரலாற்றின் எந்தப்பக்கமும் மிக எளிதாக கடந்ததில்லை. அது பல்வேறு கடினத்தன்மைகளை உடைத்தெறிந்து உள்வாங்கி புதியவற்றை படைத்தளித்து பதிவு செய்கிறது. மார்க்ஸ் சொல்வதை போன்று, வார்க்க போராட்டத்தின் விளைவே வரலாறு. எந்த ஒரு வர்க்கமும் தனது விடுதலைக்கான போரில் தோல்வி கண்டதில்லை. காரணம் போராட்டம் என்பது ஏதோ ஒரு எல்லையை வகுத்து நடத்தப்படுவதில்லை. இந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு இதை முடித்துவிடலாம் என்று சொல்வதற்கு போராட்டம் கட்டடமல்ல. அது ஒரு இயக்கம்.

  அதன் ஒவ்வொரு அசைவும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அந்த இயக்கத்திலே சருக்கல் ஏற்படலாம், சரிவு ஏற்படலாம், தோல்வி ஏற்படலாம், வெற்றி ஏற்படலாம், ஒன்றுமே இல்லாமல் அழித்து துடைத்தெறியப்படலாம். ஆனால் அந்த வெறுமையிலிருந்து எவரும் எதிர்பாராத வகையிலே மீண்டும் அங்கே ஒரு பச்சை முளை விண்ணை எட்டிப் பார்க்கும். அது பூமியை பிளக்கும்போதே வெற்றி பெறுவேன் என்ற எண்ணத்தோடே பிறக்கும்.

  அந்த முளைதான் பின்னர் விருட்சமாய் இந்த உலகையே ஆட்டிப்படைக்கும். எந்த ஒரு போராட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதல்ல. அது ஏதோ ஒரு அடக்குமுறையின் விளைவாக, தன்னெழுச்சியாக உருவானது. போராட்டம் என்பது போராளிகளின்மேல் திணிக்கப்பட்ட சுமை. அது திரும்பி சுமக்கும் மகிழ்ச்சி அல்ல. ஆகவே, போராட்ட வரலாற்றில் திணிக்கப்பட்ட எதையும் எதிர்கொண்டு நிற்க வேண்டும் என்பதுதான் நியதி. அந்த அடிப்படையிலேதான் இன்றுவரை உலகெங்கும் தேசிய இனங்கள் தம்மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறையை உடைத்தெறிய தமது ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

  அந்த ஆற்றல் ஒடுங்கிப்போவதைப் போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மை தோற்பதில்லை என்கிற தத்துவத்தின்படி தமக்கான வரலாற்று குணத்தை, பண்பை, தன்மையை தக்கவைத்துக் கொள்ள இடைவிடாத போர்குணம் வெற்றியை நோக்கியே அந்த இனத்தை உந்தித் தள்ளுகிறது.இது உணரக்கூடியதா என்று கேட்டால், மிக சாதாரண பார்வையாளனுக்குக்கூட தெரியும், தம்முடைய விடுதலைக்கான போராட்டம் இதுவரை வரலாற்றில் எங்குமே தோற்கடிக்கப்பட்டது கிடையாது. சாதாரண விவசாய மக்களிடம், தொழிலாளர்களிடம் மாபெரும் ஏகாதிபத்தியங்களெல்லாம் சரணடைந்திருக்கின்றன.

  மாபெரும் வல்லரசுகள் எல்லாம் மண்டியிட்டிருக்கின்றன. எம்மை கேட்டுத்தான் கிழக்கிலே சூரியன் உதிக்கும் என்று சொன்ன பிரிட்டிஷ் ஆதிக்கம் சிதறி சின்னாபின்னமாகி இருக்கின்றன. காரணம் உழைக்கும் மக்களும், தேசிய இனங்களும் தமது தீர்மானமான நம்பிக்கைக்குரிய நீதியான தமது உரிமைகளுக்கான லட்சியங்களை மீட்டெடுக்க களத்திலே நிற்கிறார்கள். ஆனால் அடக்குமுறையாளர்கள் தமது தன்னலத்திற்காக தமது ஆதிக்க வெறியை அவர்கள்மேல் திணிப்பதற்காக எதிர்த்து நிற்கிறார்கள். எந்த ஒரு போராட்டம் என்றாலும் அது நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடப்பதுதான்.

  தமிழீழ மண்ணில் முள்ளி வாய்க்காலில் நடைபெற்று முடிந்த கடுஞ்சமர்கூட நீதிக்கும் அநீதிக்குமான சமர் என்பதிலே மாற்றுக்கருத்து நமக்குள் இருக்காது.அச்சமரின் இறுதிக்கட்டத்தில் தமது விடுதலைக்கான உரிமையை வென்றெடுக்க களத்திற்கு வந்த தேசிய இன மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். தமது சொந்த மக்கள் என்று கூறிக்கொண்ட ராஜபக்சேவின் சிங்கள பேரினவாத கொடுங்கோன்மை அரசு ஒரு இனமக்களை கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று போட்டது. அதற்கு முண்டு கொடுக்க இந்தியா இருகரம் விரித்து கையிலே கொடுவாளைக் கொண்டு ராஜபக்சேவின் பணியாளனாய் படுபாதகச் செயலை செய்தது. இந்தியா மட்டுமா? பாகிஸ்தான், சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என வல்லாதிக்க அரசுகள் எங்கேயும் தேசிய இன எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற வெறியோடு மிகக்கடுமையாக தமிழ் தேசிய இனத்தின்மீது தமது பாரிய கருவிச்சமரை கட்டவிழ்த்துவிட்டது.

  ஆனால் வரலாறு இந்த முட்டாள்களைப்பார்த்து சிரிக்கிறது. காரணம் இவர்களைவிட கொடுங்கோலர்களை எல்லாம் சாமானிய மக்கள் புரட்டிப்போட்டிருக்கிறார்கள். இவர்களைவிட கருவி தரித்தவர்களை எல்லாம் கருவறுத்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த கூட்டணி வெற்றி பெற்றுவிட முடியும் என்று காண்கின்ற கனவு கட்டாயம் ஒருநாள் முறியடிக்கப்பட போகிறது.தமிழீழ மக்களின் போர்குணமும் அவர்களின் நெஞ்சில் உறங்கி கிடக்கும் தாயக உணர்வும் தீச்சுடராய், எரிமலையாய், சூறாவளியாய் ஒருநாள் சுழன்றுவீசும். அப்போது காற்று போகும் திசையெல்லாம் போரிலே வீரவித்தான அந்த காவிய நாயகர்களின் சுடர்களை ஏந்திச்செல்லும்.

  காற்று விடுதலையை உலகிற்கு கற்றுத்தரும். பாடலும் கவிதையும் விடுதலைக்கான கருவிகளாய் மாற்றம் பெரும். அப்போது தமிழினம் மீண்டும் மீண்டுமாய் பேரெழுச்சியோடு தலைநிமிர்ந்து நிற்கும். அந்த காலத்திற்கான தயாரிப்பு இதோ அருகிலே இருக்கிறது. இது அவர்கள் ஓய்வெடுக்கும் காலம். எந்த ஒரு பணிக்கும் ஓய்வு தேவையல்லவா? இதோ ஒடுக்குமுறைக்கெதிரான சமரில் களமாடிய தமிழ் காவலர்களுக்கு இது ஓய்வின் காலம். இந்த காலக்கட்டத்திலே தான் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டுமென திட்டமிட வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

  உலகெங்கும் வாழும் தமிழினம் நமக்கான ஒரு நாடு வேண்டும் என்கிற எண்ணத்தை இன்னும் இன்னுமாய் தன்னுடைய மனங்களிலே ஏற்றி வளர்க்க வேண்டும். தனக்கான ஒரு நாடு, தம் இனத்திற்கான ஒரு நாடு என்கிற வார்த்தையிலிருந்து ஒரே ஒரு மில்லிகிராம் கூட நாம் கீழிறங்கி யோசிக்கக்கூடாது. நம் சுவாசத்தின் காற்று ஒவ்வொரு விநாடியும் விடுதலையின் அந்த மகிழ்ச்சியான தருணத்தை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையை தனக்குள் வளர்த்துக் கொண்டு தமது தாயக உறவுகள் ஒவ்வொரு மனங்களிலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.நமக்கான ஒரு நாடு இருந்தால் மட்டுமே நமது இனம் இனியும் அழியாமல் இருக்கும் என்கிற அடிப்படை கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலே பரப்புரை செய்வதற்கு குழுக்கள் அமைக்கலாம், ஒரு தேசிய இனத்தின் வீழ்ச்சியை துடைத்தெறிய வெற்றியை தூக்கி நிறுத்த நமது எண்ணங்களும் நமது செயல்களும் பெரும் காரணங்களாக இருக்கின்றன.

  இன்று புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழீழ இளைஞர்கள் தமது வாழ்க்கை முறையை தாம் வாழும் நாட்டின் கலாச்சார தன்மைகளுக்குள் இணைத்துக் கொள்ளாமல் தமது தேசிய இனத்தின் அடையாளத்தை அணிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தாம் வாழும் நாடுகளில் ஓ… நீங்கள் தமிழரா என்று ஐரோப்பியர்கள், ஜெர்மானியர்கள், அமெரிக்கர்கள் என அனைவரும் உங்களை வியந்து பார்க்க வேண்டும். தமிழர்களுக்கான பண்பாடு, கலை இலக்கியம் ஆகியவை தனித்தன்மையோடு இன்னும் உயிர் வாழ்வதாக உலகெங்கும் வாழும் மக்கள் உணரும்படி நம்முடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

  மாறாக நம்மை நாமே புதைத்துக் கொள்வது போல் தமிழ் மறந்து, நம் மொழி மறந்து, நமக்கான அடையாளத்தை மறந்து அவர்களைப்போல் மாறத் தொடங்கினோம் என்றால் நம்மை எந்த நிலையிலும் எந்த போராளியும் மாற்றி அமைக்க முடியாது. ஆகவே களத்திலே கருவியேந்தி சமர்புரிய ஒரு அணி என்றால் புலத்திலே கருத்து ஏந்தி சமர்புரிய நாம் அனைவரும் உறுதுணை புரிய வேண்டும். இது நமது போராட்டத்தை மேலும் உந்தித்தள்ள நம்மை தயார் படுத்தும்.தவிர்த்து நமது பண்பாட்டு பழக்க வழக்கங்களை இழந்து, நாம் புலிகள் என்பதை மறந்து, பூனைகளாக வாழப் பழகினோம் என்றால் வருங்காலம் நம்மை புலிகள் என்று பார்க்காது, பூனைகள் என்று பழிக்கும்.

  ஆகவே புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் இதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். வீட்டிலும் நம்முடைய உறவினர்களை பார்க்கும்போதும் கட்டாயமாக நாம் தமிழில்தான் பேச வேண்டும் என்கிற ஒரு கட்டுப்பாட்டை நமக்குள் உருவாக்கிக் கொண்டு தமிழ் மொழியை காப்பாற்ற துணைபுரிய வேண்டும்.இது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்றால் தாய் தமிழ் உறவுகளுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. முதலில் நம் இனத்தின் இறையாண்மையையும், நம் இனத்தின் மொழி ஆளுமையையும் நாம் புரிந்து கொண்டு அதை உயர்த்தி அதோடு வாழ்ந்து வளர்வதற்கு முதலில் முயற்சிக்க வேண்டும். தமிழில் பேசுவதுகூட கேவலம் என்கின்ற ஈனப்போக்கை கைவிட்டு நாம் தமிழ் தெரிந்த எல்லோரோடும் தமிழில் மட்டுமே பேசுவது என்கின்ற கொள்கையை நமக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  ஒவ்வொருவரும் சந்திக்கும்போது நாம் தமிழர்கள் என்கின்ற உணர்வை ஒவ்வொரு நொடியும் வளர்த்தெடுக்க வேண்டும்.உலகெங்கும் வாழும் தமிழர்களின் தேசிய அடையாளமாக தமிழீழ விடுதலைப்புலிகளும் நமது தேசிய தலைவரும் இருக்கிறார்கள். அவர்கள்தான் வீழ்ந்து கிடந்த தமிழை, புதைந்து கிடந்த தமிழினத்தை, புதைக்குள் இருந்த தமிழர் தம் மானத்தை தோண்டி எடுத்து உலகெங்கும் தம்மை யார் என்று அறிமுகம் செய்தார்கள். ஆகவே தமிழ்நாட்டில் வாழும் தமிழர் ஒவ்வொருவரும் தமக்கான தமிழ் தேசிய அடையாளத்தை அணிந்து கொள்ள தவறக்கூடாது. நமக்குள் புதைந்து கிடக்கும் இந்திய தேசிய மோகத்தை உடைத்தெறிய வேண்டும்.

  நாம் தமிழர்கள், நமக்கான ஒரு தேசிய மொழி, இனம், பண்பாட்டு சூழல் ஆகியவை பன்னெடு காலமாய் இருக்க நாம் அதை மறுப்பதோ, அல்லது ஏற்றுக் கொள்ள தயங்குவதோ நமது இனத்தை அடையாளம் தெரியாமல் செய்துவிடும். ஆகவே இதை வென்றெடுக்க தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களும் ஓங்கி ஒரே குரலில் சொல்ல வேண்டியது புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கு என்பதுதான். காரணம் புலிகள் தமிழ் தேசியத்தின் அடையாளம். புலிகள் தமிழின் இலக்கணம். புலிகளின் ஈரம் தமிழனின் பிறப்பிடம். ஆகவே புலிகள் தான் தமிழினத்தை உலகெங்கும் அறிமுகப்படுத்தி தமிழர்களுக்கான முகவரியாய் இருப்பவர்கள்.

  ஆகவே தாயக உறவுகள் அனைவரும் இதற்கான முன்முயற்சியை எடுத்து நமக்கான இனத்தை அடையாளத்தை காக்கும் வரலாற்று போராட்டத்தில் ஒவ்வொரு வாசற்படி தாண்டி வந்து பங்கேற்க வேண்டும். அது நிகழும்போது நமது சந்ததிகள் மகிழ்ச்சியோடு தாமும் தமிழர்கள் என்கின்ற மனநிலையோடு, மனநிறைவோடு இந்த மண்ணிலே வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை வளமாக இருப்பதற்கு இப்போதே நாம் பணியாற்ற வேண்டிய கடமைப்பட்டிருக்கிறோம். நமது தேசிய தலைவர் கூறுவதைப்போன்று நம்முடைய சந்ததியனரின் மகிழ்ச்சியான வாழ்விற்காகவே நாம் இத்தனை துயர் நிறைந்த சுமைகளை சந்திக்கிறோம்.

 9. தாயக உறவுகள் 80% பேர் வாக்களிக்காமல் விட்டு அதன் மூலம் ஒரு வலுவான செய்தியைச் சொல்லி விட்டார்களே.
  வட்டுக் கோட்டைத் தீர்மனத்தை முன் வைத்துக் கேட்டவர்கள் கூட மோசமாக நிராகரிக்கப் பட்டு விட்டனர். அந்த வேட்பாளர்களுள் பத்மினியும் கஜேந்திரனும் அடங்குவர்.

  தாயகத் தமிழர் தெளிவாகவே உள்ளனர்.
  இப்போது அவர்கள் ஏற்கக் கூடிய ஒரு புதிய அரசியல் பாதை அவர்கள் முன் இல்லை என்பது அவர்களது தீர்ப்பு. அது காலப் போக்கில் தான் வடிவு பெற முடியும்.

 10. தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும்.

  ‘என் தேசத்து மண்ணே!
  உனக்கு என் ரத்தத்தை தருவேன்.

  இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்…’

  அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகர…ன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.

  கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்.

  ”புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா?”னு கேள்வி கேட்கிறார் நிருபர். ‘புல்லும் துன்பப்படக்கூடாது’னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்’ என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம்.

  குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம். துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது.

  என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன். என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, ‘அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு.

  எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு.

  நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, ‘உண்மையை மட்டும் பேசுவது’ என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம். ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான். உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.

  கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா? கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார். அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. ‘அக்கா, அக்கா’னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது. இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது?

  ‘ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்’னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை. சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை?

  தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்?

  ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம். திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன். சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க.

  கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, ‘உன்னுடைய ரோல்மாடலா அவ’னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.

  முப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.

  உயிர் கண்மணி

  1. வாழ்க்கையையும் வரலாற்றையும் சினிமாப் படம் மாதிரிப் பார்க்கிறீர்கள்.
   தமிழனய்ப் பிறந்த, சமூகத்துக்குத் துரோகம் நினைக்காத எத்தனையோ பேருக்கு பிரபாகரன் ஹீரோ அல்ல. இரண்டரை லட்சம் பேர் இப் போரில் அழிந்திருக்கிறர்கள். 9 லட்சம் பேர் புலம் பெயர்ந்த்திருக்கிறர்கள். 5 லட்சம் பேர் உள்நாட்டில் அகதி வாழ்வு வாழ்கிறர்கள். 30 000 பேராவது முடமாகியுள்ளார்கள்.
   இவை கண்ணுக்குத் தெரிவதில்லை.
   யாரும் சொல்வதுமில்லை, காட்டுவதுமில்லை.
   யாரும் பதில் சொல்ல வேண்டாமா?

   1. xxx

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்து மனித அவலங்களும்தான் போராட்ட ஆதரவாளர் என்று கூறிக்கொள்வோரின் பிழைப்பு . எப்படி அதை தங்கள் எதிர்னிலை எடுக்க துணிவர்.

    1. எந்த ஒரு விடுதலை போராட்டத்தையும் நசுக்க அது சார்ந்த மக்கள் மீதே அரச இனவாதம் பாயும் இதை எத்தனையோ உலக போராட்டங்களிலும் கேள்வி பட்டுள்ளோம்.படித்துள்ளோம்.அது தான் எமக்கும் நடந்துள்ளது

   2. ஆக,xxx சொல்லவருவது ,பிரபாகரன் , ஈழப்போரட்டத்தில் பங்கெடுக்காமல் இருந்திருதால் , ஈழத்தமிழ் சமூகம் சுபிட்சமாகவும், புலம் பெயராமலும்,சிங்கள இனவெறியர்களை வெற்றிகொண்டிருக்கும்,[கருணாவும், xxx-ம் ஈழப்புரட்சியை முன்னெடுத்து முடித்துவைத்திருப்பார்கள். ]

  2. ஜோனாஸ் சவிம்பியும் அங்கோலா அரசுக்கு 30 ஆண்டுகளாகத் தண்ணி காட்டியவர் தான்.
   போராடுவது யாருக்காக, எதற்காக, போராடி எதை எப்படி வெல்லுவது என்று பாராமல், தனி மனித வீரத்தை மெச்சலாமா?

 11. மன ஆற்றலின் மன்னன்

  கடந்த ஏப்ரல் 15ந் தேதி தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு அடிப்படை இன அழிப்பின் அடையாளத்தை வரைந்து காட்டியது. “பேசப்படாத இனப்படுகொலை, இலங்கையில் போர் குற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு மனித உரிமை ஆர்வளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் இலங்கை நடத்திய மாந்த நேய அடக்குமுறைகளைக் குறித்தும், தமிழர்களின் வாழ்வு பறிக்கப்பட்டதை குறித்தும் பல்வேறு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சிலரின் சொற்கள் நமது மனங்களை இடியாய் உலுக்கி எடுக்கிறது. குறிப்பாக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜசேந்திர சச்சார் குறிப்பிடும்போது, தமிழர்களுக்கு சமத்துவமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒருவேளை இலங்கை அரசு இதை செய்ய தவறுமானால், தமிழர்கள் வேறொரு பாதையை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்.

  ஆக, உலக வரலாற்றிலே எந்த சூழ்நிலையிலும் தேவைகளை பொறுத்து அமைந்த போர் வடிவங்கள் சிறு மாற்றத்தோடு மீண்டும் செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பதை, செயல்படுத்தியதை நாம் காண்கிறோம். அதே கண்ணோட்டத்தோடு இலங்கையின் அடக்குமுறைகளை குறித்து அமைதி காக்கும் இந்த போராட்டம் மூச்சு வாங்குவதற்காக ஓய்வு எடுத்துக் கொள்ளும் நிலைதானே தவிர, போராட்டம் முடிந்தது என்று உறங்குவதற்கான நேரம் அல்ல. அப்படி உறங்கவும் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடக்குமுறையாளர்கள் இந்த போராட்டம் இல்லாவிட்டாலும்கூட, வரலாறுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு போராட்டங்களை அவர்கள் படித்தறிந்தாவது முடிவெடுக்க வேண்டும். இரண்டும் செய்யாத போது, இந்த ஆட்சியாளர்களின் கரங்களில் உள்ள அரச பயங்கரவாதம் தொடர்ந்து மக்களின் தார்மீக போராட்டத்திற்கு முன்னால் வெற்றி பெறாது, பெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் நிகழ்வுக்குப் பிறகு வருத்தப்படக்கூடிய ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கைகொள்ள வேண்டி வரும்.

  வரலாற்றில் நெப்போலியன் என்ற பெயர் இதுவரை யாராலும் மறந்துபோக முடியாத ஒரு மந்திர சொல்லாக பயன்பட்டிருக்கிறது. நெப்போலியன் தமது வாழ்வில் அடிமை தனத்திலிருந்து விடுபடுவதற்காகவே தொடர்ந்து போராடினார். ஆனால், நெப்போலியனுக்கு இப்படிப்பட்ட ஒரு போர் உணர்வை அவனுக்குள் எரிதழலாய் மாற்றி அமைத்தது அவன் மண்ணின் மீது அவன் கொண்டிருந்த அளவில்லா பற்று. இத்தாலிக்கு அருகில் உள்ள கோர்சிகா என்ற தீவு, ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தீவு. கோர்சிகாவில் அப்படி ஒன்றும் வளம் கொழிக்கும் தன்மை இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், அத்தீவு மத்திய தரைக்கடலின் நடுவே இருக்கிற தீவு என்பதால், மத்திய தரைக்கடலில் வந்து செல்லும் கப்பல்களில் வரிவசூலித்து வளமாக இருக்கலாம் என்கின்ற ஒரு காரணம் இருந்தாலும், மற்றொரு காரணம் முதன்மையானது.

  அது, அத்தீவுவில் அமர்ந்து கொண்டு கடல்வழியே தம்மீது யாரும் படை எடுத்து வராதபடி பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான். இதற்காகத்தான் பக்கத்தில் இருக்கும் எல்லா நாடுகளும் கோர்சிகாவை தமது நாடாக வைத்துக் கொள்ள விரும்பின. இரண்டு, மூன்று ஆண்டுகள் அல்ல. 30, 40 ஆண்டுகள் அல்ல. பல நூற்றாண்டுகளாக இந்த சின்னஞ்சிறு தீவு வெவ்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மாறி கொண்டே இருந்தது. அது ஒரு அடிமை தேசம் என்கின்ற நிலையிலிருந்து தம்மை உருமாற்றிக் கொள்ள, பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. கோர்சிகா மக்கள் பல போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் இத்தாலியர்களோ மிகச் சாதாரணமாக கரப்பான் பூச்சியை தெளிப்பான் கொண்டு அழிப்பதை போன்று கோர்சிகர்களின் போராட்டத்தை ஒடுக்கிப் போட்டார்கள். ஆனால் அதற்காக வாழ்நாள் எல்லாம் அடிமை சங்கிலியை பூட்டிக் கொண்டிருக்க கோர்சிகர்கள் விரும்பியதில்லை. தொடர்ந்து அவர்கள் விடுதலைக்கான போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்கள். மாறி மாறி இவர்களை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்களை இவர்களும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

  இந்நிலையில்தான் உலகையே வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன் கோர்சிகாவில் பிறந்தார். தொடர்ந்து தம்முடைய நாட்டின் வரலாற்றை வாசித்தறிந்தார். தமது நாட்டிற்கான விடுதலை தேவை என்பதை அவன் ஆழமாய் உணர்ந்தான். தமது 16 வயதில் பிரெஞ்ச் அரசின் ராணுவத்தில் பணியாற்றினாலும்கூட, தமது நாட்டின் விடுதலை ஒன்றே அவனுடைய முழுநேர கனவாய் இருந்தது. அதற்காக நெப்போலியன் களமாடிய பல்வேறு நிலைகளை நெப்போலியன் குறித்து வரலாறாக எழுதுவதற்கு நாம் செலவிடலாம். ஆனால் இந்நேரத்தில் இங்கே நாம் பதிவு செய்ய விரும்புவது யாரெல்லாம் தம் மக்களை நேசிக்கிறார்களோ, அவர்களெல்லாம் மாபெரும் போராளிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், உலகிற்கு தமது வீரத்தை அடையாளம் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். மாந்த குலம் வாழும் வரை அவர்களின் பெயர்கள் தொடர்ந்து உச்சரிக்கும் மந்திர சொற்களாக மாறி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

  இந்த வரலாற்று குறிப்பை நாம் சொல்வதற்கு காரணம், பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த கோர்சிகாவின் நெப்போலியன் உலகையே தமது காலடிகளுக்குள் கொண்டுவர நடத்திய போர் பயணம் இன்றுவரை யாராலும் மறக்க முடியவில்லை. ஆகவே, சில பத்தாண்டுகள் அடிமைகளாக சிங்கள பேரினவாதத்தின் கரங்களில் சிக்கி பிழியப்பட்ட அடையாளங்களாக இருக்கும் தமிழ் உறவுகள் தமது விடுதலைக்கான வீச்சு நிறைந்த மனநிலையை இந்த நேரத்தில் மீண்டும் கைகொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் நெப்போலியனை இங்கே நினைவுப்படுத்தி இருக்கிறோம். நெப்போலியனை காட்டிலும் மக்கள் மீது அக்கறையும், உலக மாந்தத்தின் மீது மரியாதையும், உலக மொழிகளின் மீது பற்றும் கொண்ட ஆற்றல் வாய்ந்த ஒரு தலைவன் நமக்கு இந்த வரலாற்றால் வார்த்தெடுக்கப்பட்டு, வாரி வழங்கி இருக்கிறது.

  அந்த தலைவன் விரல் நீட்டிய திசை வெற்றி என்று எக்காளம் ஊதுகிறது. அந்த தலைவன் விழி பார்த்த இடங்கள் தமிழனின் விளைநிலமாய் மாறி நின்றது. அந்த தலைவன் வார்த்தைகளிலிருந்து புறப்பட்ட வசீகரம், உலகையே தமது நிகழ்வுகளாய் மாற்றி அமைத்தது. ஆனால் அடக்குமுறையாளர்கள் ஒன்றிணைந்து தமது அடையாளத்தை அழிக்கும் அவலநிலைக்கு, கேடுநிலைக்கு வந்தார்களே! அங்கேயும் தமது மக்களின்மேல் கொண்ட அன்பை அந்த தலைவன் வெளிப்படுத்தினார். அந்த மண்ணின் மீது கலாச்சார பண்பாட்டு சீரழிவு நிகழ்த்தப்படக்கூடாது என்பதற்காக அதை பக்குவமாக ஒரு குழந்தையை தாய் சீராட்டுவதுபோல், சீராட்டி வளர்த்த எமது தேசிய தலைவர், தற்சமயம் அவரின் கட்டளைகள் இல்லாத காரணத்தினால் அவை சீரழிந்து கொண்டிருப்பதாக நாம் அறிகிறோம்.

  தில்லியில் நடைப்பெற்ற கருத்தரங்கில் இதை பெரியார் திராவிட கழக தலைவர் தா.செ.மணி மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அவர் தமது உரையில், “இலங்கை ஒரு முன்மாதிரி இனப்படுகொலையை நிகழ்த்தி காட்டியிருக்கிறது. சாட்சிகளற்ற மிகப்பெரும் இன அழிப்பை நடத்தி காட்டியிருக்கிற இந்த முன்னெடுப்பை உலக நாடுகள் உலகில் மாந்தத்தை ஒடுக்கும் பேராதிக்க அரசுகள் பின்பற்றக்கூடிய பெரும் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதைவிட அழுத்தமான அவருடைய வார்த்தைகள் என்னதென்றால், “இலங்கை அரசு தமிழர்களின் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. அவர்களின் பண்பாட்டை, நிலத்தை, கல்வியை, வாழ்வியல் ஆதாரங்களை என அனைத்தையும் அழித்திருக்கிறது” என்பதுதான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆக, நாம் எங்கே நமது போராட்டத்தை நிறுத்தினோமோ, அங்கிருந்து அந்த போராட்டத்தை நடத்துவதற்கு நம்மை தயாரித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நம்முடைய எண்ணங்கள் ஒருசேர ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

  வாழ்வியல் கட்டுமானம் என்பது விடுதலையின் உணர்வுகளிலிருந்து தோன்றக்கூடியவையாக இருக்க வேண்டும். விடுதலையே வாழ்வியலின் பெரும் ஆதாரமாகும். விடுதலையை தவிர்த்து வாழ்வு என்பது பிணத்திற்கு கிடைக்கும் மரியாதையை விட குறைவானதுதான். ஆகவேதான் பல நூற்றாண்டுகளாக மாந்தகுலம் தமது விடுதலைக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்தே மாந்தம் போராட்டத்தை நிறுத்தியது கிடையாது. அது தம்மை அடைகாத்துக் கொள்வது புதிய உயிரினை படைப்பதற்காகத்தான் என்பதை நமக்கு பல்வேறு சான்றுகள் எடுத்துரைத்திருக்கின்றன. தமிழீழ போராட்டமும் கூட அந்த அடிப்படையிலே இப்போது அடைகாக்கப்படுகிறது. நமது தேசிய தலைவரின் கட்டளைக்காக அது காத்திருக்கிறது. நமது போராட்டம் ஒருபோதும் தோல்வியுறாது என்பதற்கான பல்வேறு வரலாற்று ஆவணங்கள் நமக்கு முன்னால் பரந்து விரிந்திருக்கிறது.

  ஆகவே, தயக்க உணர்ச்சி கொள்ள வேண்டாம், தடுமாற வேண்டாம், கோர்சிகா என்ற தீவு மாபெரும் பிரெஞ்ச் மற்றும் இத்தாலி அடக்குமுறையாளர்களுக்கு எதிராக நிகழ்த்திய போராட்டங்களை முடிந்தால் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். அதோடு ஒப்பிடும்போது நமது போராட்டம் ஒருபெரும் நிகழ்வு அல்ல. தமிழர்கள் அறிவாளிகள், அதிநுட்ப நுண்ணறிஞர்கள், பண்பாட்டியல் மற்றும் அறிவியல் தளங்களில் சரியான தடங்களை கண்டறிந்தவர்கள். ஆனால் நாம் ஒன்றிணைய தவறியதே நம்மை இப்போராட்ட நிகழ்வுகளிலிருந்து மிக தூரத்திற்கு தள்ளியிருக்கிறது. ஆகவே தேசிய தலைவரின் கட்டளை பிறப்பதற்கு முன்னால் நாம் ஒரே கட்டாக நிற்க உறுதி எடுப்போம்.

  கடந்த ஆண்டு இந்த மே திங்கள் குருதி தெளிப்பின் நாட்களாக இருந்தது. குவலயமே அந்த படுகொலைகளை கண்டு பரிதபித்து நின்றது. நாமெல்லாம் உண்ண மனமின்றி, உறங்க உணர்வின்றி தவித்துக் கொண்டிருந்தோம். அந்த காலங்களை அசைப்போடுங்கள். நமது விடுதலையின் தேவை உங்களை உலுக்கி எடுக்கும். எந்த நிலையிலும் உங்களை நீங்கள் தவிர்த்துவிடாதீர்கள். நமக்கான போராட்டம் நாம் தான் நடத்த வேண்டும். நமக்கு வாய்த்த தலைவனைக் கொண்டு நாம் இந்த உலக அரங்கிற்கு நம்மை அடையாளப்படுத்துவோம். நாம் விழப்போவதில்லை. எழுந்து நிற்கும் உலக மக்களின் ஒரு இனம் என்பதை ஓங்கி உறக்க சொல்லுவோம். இந்த உலகில் இரண்டு ஆற்றல்கள்தான் ஆண்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, கருவி ஆற்றல். மற்றொன்று, மன ஆற்றல். காலப்போக்கில் மன ஆற்றலின் முன்னே கருவி ஆற்றல் அடையாளம் தெரியாமல் மழுங்கிப்போய்விடும் என்று மாவீரன் நெப்போலியன் கூறியதை நினைத்துப் பார்ப்போம். நமது மன ஆற்றலுக்கு முன்னால் இக்கருவி ஆற்றல்கள் தூள் தூளாக்கப்படும்.

  நமக்கான தமிழீழத்தில் பறக்கும் புலிக்கொடியில் இந்த பார் மகிழ்ந்து கர ஓசை எழுப்பும். அந்த நாளுக்காய் நீங்கள் அணி திரளுங்கள். இதைத்தான் எமது தேசிய தலைவர் ஆன்ம பலமே உயர்ந்ததென அடையாளப்படுத்தினார். ஆயுத பலத்தைவிட, ஆன்ம பலத்தை உயர்த்திப்பிடித்தார். அவர் மன ஆற்றலின் மன்னனாய் விளங்கினார்.
  baskran

 12. //தமிழை தமிழனை குறை சொல்வதை நிறுத்திவிடும்.//
  குற்ரமும் குறையும் சொல்வதில்
  தப்பில்லை. ஆனால் தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழரின் உயிகளையும் பலி கொடுத்து
  தாங்கள் உலக்முழ்வதும்நலவாழ்வு வாழ்வோரை தமிழரின் வீரத்திற்கு ஒப்பிடுவது எப்படியோ? துரை

  1. கண்ணைதிறந்து பாருங்கள் துரை முப்பதினாயிரம் போராளிகள், ஒரு இலட்சம் சனம் ஒரு இலட்சியத்துக்காக உய்ரிழந்திருக்குதுகள்.எங்கட சனம் எங்கள் மக்கள் அவர்கள் இல்லை எம்மோடு. இருக்கிறவர்கள் தங்கள் உயிரை அந்த மண்ணுக்காக கொடுத்தவர்கள் எங்கள் செல்வங்கள் அவர்கள் தான் வீரர்கள் இந்த உலகத்திலேயெ வர்கள் தான் பெரிய தியாகிகள்.
   தியாகங்களுக்கே மதிப்பளிக்காதா மனித ஜென்மங்கள் நிறைந்த  இனத்துக்காக உயிரைக்கொடுப்பது உலகத்திலேயே பெரிய வீரம்.
   யாரோ பக்கத்துவீட்டில் இருக்கிறவன் புலிக்கு வால்பிடித்து வசதியாயிட்டான் என்கிற ஆத்திரத்தில்  உயிரைக்கொடுத்த்வர்களை கொச்சைப்படுத்துபவதா?

   1. தமிழரின் உருமைக்காக ஆயுதமேந்தி சிங்களவராலும், தமிழர்களாலும்
    கொல்லப்பட்டவ்ர்கள் அனைவரும் தமிழர்க்ளால் வண்ங்கப்பட வேண்டியவ்ர்களே.

    இந்த அழிவுகழிற்கு காரண்மான தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    துரை

    1. தலைவன் இல்லாமல் எங்கே தமிழரின் உரிமைக்காக யாரிடா போரிட முடியும்?

     1. கொலைகள் கொள்ளைகள் செய்தும், தமிழர்களை
      ஆயுதங்களால் அடக்கியும், மிரட்டியும், தலைவனாக் தன்னைத்தானே ஆக்கியவ்னிற்கும் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?

      துரை

    2. “தலைவன்” இல்லாமல் போரிட முடியாதென்றால், இரண்டு வழி உண்டு.
     ஒன்று பேரினவாதமும் பெரு வல்லரசுகளும் விதித்ததை ஏற்றுச் சும்மா கிடப்பது. (இது த.தே.கூ. காட்டும் பாதை. டக்ளஸ் காட்டும் பாதையும் கூட).
     மற்றது “தலைவன்” உயிரை மீட்பதற்காக (இறந்ததாக நம்பாதவர்கள் போக) மற்றவர்கள் வழிபாடு, பூசை, தவம், நோன்பு இப்படி ஏதாவது செய்வது.

     “தலைவன்” இல்லாமல் போரிட வழிகள் உண்டு. அவை “தலைவன்” போன வழியாகா.

 13. Kanamne,
  சச்சார் “தமிழர்களுக்கு சமத்துவமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும்” …”ஒருவேளை இலங்கை அரசு இதை செய்ய தவறுமானால், தமிழர்கள் வேறொரு பாதையை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்று சொன்னார்.
  என்ன பாதை என்று அவருக்கோ அங்கிருந்தோருக்கோ தெரியுமா?

  இலங்கை அரசு தவறும் என்பதில் நமக்கு அதிகம் ஐயமில்லை. அப்போது நாங்கள் நெப்போலியனைத் தேடிப் புறப்படப் போகிறோமா?
  வாய்ப் பந்தல் போடாமல் இது வரை முயலாத எதை என்று யதார்த்தமாகச் சொல்லுவீர்களா?

  1. XXX வெவ்வேறு மனிதர்களின் மாறுபட்ட சிந்தனைதான் அன்று மாதக்கணக்கில் எடுத்த பயணங்கள் இன்று மணித்தியாலங்களில் முடிகின்றது. முப்பது வருடங்களாக இருந்த மனித ஆயுட்காலம் இன்று நூறு வருடங்களையும் தாண்டியது. படிச்சவன் அறிவாளி அனுபவசாலிகள் சொல்லுவதைக்கேளுங்கள், எழுதுவதைப்படியுங்கள்.

  2. எந்தப் படிச்சவன் அறிவாளிகளைநம்புகிறது?
   பொன்னம்பலம் ராமநாதன், ஜி.ஜி. பொன்னம்பலம், செல்வநாயகம் அமிர்தலிஙகம், சம்பந்தன், சிவத்தம்பி, நீதியரசர் விக்னேஸ்வரன், இப்பிடி ஒருநீளமான பட்டியல் இருந்தது.
   எல்லாரும் எங்களை எங்கே கொண்டு போய் விட்டார்கள்?
   கேட்டும் படிச்சும் தான், யாரையும் கேள்வியில்லாமல் நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

   மாதக்கணக்கில் எடுத்த பயணங்கள் இன்று மணித்தியாலங்களில் முடிகின்றது மெய் தான்.
   பெரும்பான்மையோரின் வாழ்க்கை என்னவோ வறுமையில் தான் இருக்கிறது. மனித இருப்பே மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதற்கு எந்தப் படிச்சவன் அறிவாளிகளை நம்புகிறது?
   சனம் வாய் திறந்து எதிர்த்துப் பேசா விட்டால் அழிவு தான் மீதம்.

 14. புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது நரிகள் ஆட்டம் போடுமே, நரிகள் வேஷம் கலையும்போது புலிகள் வென்று காட்டுமே

  1. நரிகளே புலிவேசம் போட்டு நடத்திய நாடக்ம் இடையில் முடிந்து போய்விட்டது.
   பதுங்கிப்
   பாயுமே புலிகள். அன்றி பதுங்கி ஓடியவையும் புலியாகுமோ? துரை

 15. தலைக்குத்தான் தொப்பி – ஒருவன் தகுதிக்குத்தான் பதவி விலைக்குள் பலிபோகும் சிலருக்கு வேண்டுமா வசதியும் வாழ்வும் பதவியும்?

  1. . .பல காலமாக ஐயர் அவர்ளை எழுத சொல்லிக் கேட்டேன்….உண்மைகள் உறங்குவதும் இல்லை.அழிவதும் இல்லை. “மரணம் வழஙகும் மனித வெறி ஓயட்டும்”

 16. ulaga mozi kalil tamil mizi endrum valara kudiya muththa kudi

  tamil,
  egipth,
  parasigam,
  duruki,
  samaskirutham,
  seenam.

  ethil thamilukku endru thani nadu kidaiyathu
  enna ulagam sir ethu ?

Comments are closed.