பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐயின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழுக்காகத் தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

9 thoughts on “பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம்”

 1. சிதம்பரத்திற்கே ரகசியமா?அவரைத் தாண்டித்தான் எதுவும் அசையுமா.ஆக ஒரு பைல் மூடப்படுகிறது.

  1. சிதம்பரமெல்லாம் ஒரு தமிழனா?

   1. யார் தமிழன் என்று விவாதிக்கப் போனால் உலகில் தமிழர்களே மிஞ்ச மாட்டார்கள்

    1. தன் இனம் அழிக்க்ப்படும் போது பதவிக்காக சோனியாவின் காலடியில் வீழ்ந்த்து கிடந்தசிதம்பரமெல்லாம் ஒரு தமிழ்னா?

 2. தாய்மொழி தமிழாய் இருப்பவர்கலே தம்மை மாற்றாராய் மாற்றூம் போது சிதம்பரம் தமிழனாய் எனக்குப் பெருமை.தமிழ்ப் பெயர் வைப்பது,தமிழில் உரையாடுவது என்றேல்லாம் தமிழனாய் இருக்கவே வெட் கப்படும் போது வேட்டி கட்டிய தமிழன் என் பண்பாட்டிற்கும் தமிழ் குலத்திற்கும் பெருமை.சிதம்பரம் சைவத்தின்,தமிழின் சொத்து.சொத்தை வாதம் செய்து தமிழிற்கு கெடுதி செய்யாதீர்.

  1. வேட்டி கட்டிய தமிழன் என்றாலென்ன கட்டாத தமிழன் என்றாலென்ன ; கருணாநிதி சிதம்பரம் தரவழிகள் எல்லாருமே மக்கள் விரோத நாசகாரக் கும்பல்கள் தான்.

 3. விஜய் திரு சிதம்பரம் அவர்கள் தமிழ்ச்சங்கத் தலைவர் அல்ல அவர் இந்திய தேசத்து உள்த்துரை அமைச்சர்.கலைஜர் இந்தியாவில் உள்ள தமிழ் மானில முதல்வர்.இங்கு அவர்கள் உணர்வு பூர்வமாக செயற்பட முடியுமே தவிர நிர்வாக் ரீதியாக தொழிற்பட முடியாது.

 4. எ ங்கள் அண்ணன் சிதம்பரம ஆவணம் என்று தான் சொன்னார்.நீங்கள் அதை மரணச்சான்றிதழ் என்று எழுதி அவர் கொமணத்தையும் உருவப்பார்க்கிறீர்கள்.

  1. ‘அண்ணன்’ சிதம்பரம் எல்லார் கோவணத்தையும் உரியப் பார்க்கிறாரே! அதற்கென்ன சொல்லுகிறீர்கள்?

Comments are closed.