பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்

lyca_seemanசீமான் தனது கழுத்து நரம்பிற்கு காப்புறுதி செய்துகொள்வதற்கு லைக்காவிடம் பணம் கேட்கலாம். கத்தி என்ற மசாலா படத்திற்கு பிரபாகரனின் பேரால் சீமானின் நாம் தமிழர் கட்சி விளம்பரம் ஒட்டியிருக்கிறது. ஜெயலலிதாவிற்காக ‘தெய்வத்தைத் தண்டிக்கலாமா’ என்று ஒட்டிய விளம்பரத்தை விஞ்சியதாக இது அமைந்துள்ளது. ஈழ விடுதலைக்காகப் போராடுபவர்களைப் பயங்கரவாதிகள் என்று பாரிவேந்தர் என்ற பச்சைமுத்து கூறிய எதிரொலி மறையும் முன்னரே பாரிவேந்தர் ஏழைகளின் கொடைவள்ளல் எனக் கழுத்து நரம்பை உள்ளே இழுத்து வைத்துக்கொண்டு சொன்ன சீமான், இலங்கை அரச ஆதரவு லைக்காவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேல் மூலையில் பிரபாகரன், மறு மூலையில் பெரியார் கீழே வாயைத் திறந்து சினிமாக் காட்டும் சீமான், நடுவே கத்தியைத் தயாரித்தளித்த லைக்கா நிறுவனத்திற்கு நன்றி என்று எழுதிய பிரசுரம் நாம் தமிழர் குழுவினரால் தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. முகநூலில் சீமான் குழுவினர் விளம்பரத்தைப் பகிர்கின்றனர்.

அறுபது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சூறையாடப்பட்ட தேசிய இனம் வன்னியில் சாரிசாரியாக அழிக்கப்பட்டது. இதன் பின்னரும் ஈழத் தமிழர்களைச் சூறையாட பல் தேசிய நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு எழுந்தன. லைக்கா நிறுவனம் இன அழிப்பின் முன்னரே ஒரு மில்லியன் டொலர்களைச் கொள்ளையடித்தது. லைக்கா தனது கொள்ளைக்கு மேலும் சில இரக்கமற்ற அடிமைகளை இணைத்துக்கொண்டது. அவ்வாறான அடிமைகளில் ஒருவரே சீமான். இன்று பிரபாகரனின் பெயர் சீமானின் கொள்ளைக்கு அனுமதிப்பத்திரமாகிவிட்டது. இலங்கை அரசின் சிங்கள பௌத்த பேரினவாதம் மட்டுமல்ல, ராஜபக்ச குடும்பம் மட்டுமல்ல, சீமான் வகையறாக்களும் தமிழ்மக்களைச் சூறையாடுகிறார்கள். விளம்பர போஸ்டர் தொடர்பாக நாம் தமிழர் தஞ்சாவூர் கிளையைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, லைக்காவும் தமிழர்கள், நானும் தமிழன் நீயும் தமிழன் வாயைப் பொத்திக்கொண்டு கத்திபடத்தைத் தியட்டரில் பார் என்றார்கள்.

லைக்கா தொடர்பான தகவல்கள்:

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்
லைக்கா : குருதிபடிந்த கரங்கள்
இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா
லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு
சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்
http://www.eelamdaily.com/news/11847/57/.aspx
http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

6 thoughts on “பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்”

 1. எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது, ஏனெனில் அவர்கள் வியாபாரிகள், அவர்கள், மேம் போக்காய் சிலிர்க்க வைக்கவும், மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும், அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள், அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும், ஆழ்ந்த சிந்தனையும், தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது “சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய், கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி.” 

  அட்டக் கத்திக் கலைஞர்கள்…மொண்ணைக் கத்தி மக்கள்! – அலெக்ஸ் பால் மேனன்

  இந்தக் கட்டுரையை பின்வரும் இணையத் தளத்தில் காணலாம்
  tamil.oneindia.com/

 2. கத்தி படத்திற்கு மட்டுமல்ல சர்வதேச  பணச்சுருட்டல்களிற்கும்
  சீமானோடு  தலைமறைவாகவுள்ள பலரும்  பிர்பாகரனின்
  படத்தையும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்தையுமே   கவசமாக
  பயன்படுத்தியுள்ளனர். அதனாலே தானோ   உலகம்   பணமுள்ளவ்ர்களிற்கு
  பாது காப்பு கொடுப்பதற்காக  விடுதலைப்புலிகளின்  ஆயுத பலத்தினை ழித்து
  கேபி யோடு சேர்ந்தவ்ர்களிற்கு  பாதுகாப்பும் வரவேற்புமகொடுக்கின்றது.

 3. “மேல் மூலையில் பிரபாகரன், மறு மூலையில் பெரியார் கீழே வாயைத் திறந்து சினிமாக் காட்டும் சீமான்” 

  The content is wrong. is not  Periyar Photo, its Nature Agriculture ” Namm Alvar Ayya, [Avl].

  1. You written the article! And you made comments such a joke!
   When Tamils become rich and famous you (inioru. Com) can’t tolerate! Shaame 

   1. இலங்கையில் உயிரிழப்பு  உடமையிழப்பு, உலகெங்கும் அகதி வாழ்க்கை.
    இதுதான்  இலங்கைத்தமிழனின்  தலையெழுத்தா என ஏங்கும் தமிழுலகம்.
    இந்த் அகதிகளையும்  அழிவுகளையுமே  ஆதராமாகவும் சந்தர்ப்பமாகவும்
    துற்பிரயோகம் செய்தும்  கோடீஸ்வரானோர் தமிழர்களா? 

Comments are closed.