பிணையக் கைதிகளுள் ஒருவரைக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.

பீகார்

மாநிலம் லக்கிசார் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 29.08.2010 அன்று போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே கடும் சண்டை நடந்தது. இம்மோதலில் அதில், 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 போலீஸ் அதிகாரிகளை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.சப் இன்ஸ்பெக்டர்கள் ரூபேஷ் குமார், அபய்பிரசாத் யாதவ், பீகார் ராணுவ போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே, பீகார் ராணுவ போலீஸ்காரர் எடேஷம்கான் ஆகியோர் கடத்தப்பட்டவர்கள் ஆவர். அவர்களை மாவோயிஸ்டுகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர்.சிறையில் இருக்கும் 8 மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்தால்தான், 4 போலீஸ் அதிகாரிகளையும் விடுவிப்போம் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதற்கு 1.09.2010 அன்று மாலை 4 மணிவரை அவர்கள் கெடு விதித்தனர். இந்த கெடு நேரத்துக்குள், 8 மாவோயிஸ்டுகளையும் விடுவிக்காவிட்டால், 4 போலீஸ் அதிகாரிகளையும் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகளும், பிணைக்கைதிகளின் குடும்பத்தினரும் மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கெடுவை 02.09.2010 அன்று காலை 10 மணி வரை மாவோயிஸ்டுகள் நீட்டித்தனர். இக்கட்டத்தல் தொடர்பாக மத்திய அரசோ, உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, பீஹார் மாநில அரசோ அக்கரை காட்டாத நிலையில் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக இருப்பவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை மாவோயிஸ்டுகள் 02.09.2010 அன்று கொலை செய்தனர் இந்தநிலையில், லக்கி சராய் காட்டுக்குள் ஒரு உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காட்டுக்குள் சென்று உடலை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தியதில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட பீகார் ராணுவ போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே உடல் என்பது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்ட போது மாநில அரசு இது தொடர்பாக எங்களை அணுகவில்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

43 thoughts on “பிணையக் கைதிகளுள் ஒருவரைக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.”

 1. மாவோயிஸ்டுக்கள் தமக்கான கொள்ளிகளை தாமே பற்றவைக்கத்தொடங்கிவிட்டனர்.

  மக்களைப்பிரிந்து, சாகசம் என்ற பெயரில் எதிரி விரிக்கும் வலைக்குள் லாவகமாக அவ்ந்து விழுவதாகத்தான் தெரிகிறது.

  மிகவும் வருத்தமளிக்கும் செய்தி இது.

 2. ஆயுதப் போராட்ட வரலாற்றில் இலங்கையர்களான எங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு
  அதுவும்மல்லாமல் எழுபது காலப்பகுதிலேயே சிறிக்காக்குளம் நக்சல்பாரி சாருமயூன்சார்
  போன்ற போன்றவரின் செய்திகள் இந்தியாவில் இருந்து ஆங்கிலப் பத்திரிக்கையான “லிபரேசன்” பத்திரிக்கையின் முக்கிய பகுதி மொழிபெயர்கப்பட்டு எமக்கு வாசிக்கப்படும்
  இதெல்லாம் நடந்து முடிந்து நாற்பது ஆண்டுகள் ஆகிறது.
  பலதையும் பத்தையும் கேட்டாயிற்று. ஆரம்பத்தில் நான் ஒரு மாவோவாதியாகவே உருவெடுத்தேன்.காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறியே தீரும். முன்பு நடந்தவை
  இன்று பொருதமில்லாதனவாக இருக்கும். மக்களுக்கா வாழ்வதென்பது எப்பொழுதும்
  மகத்தானது தான். மக்கள் பாதுகாப்பு கருதியே எப்பவும் போராட்டம் திட்டமிடப்படவேண்டும். மாவோவாதிகள் ஆயுபலத்தால் எதையும் சாதிக்கமுடியாது
  இந்தியதேசிய முதாலித்துவத்தை வீழ்த்த முடியாது என்பதை முதலில் உணரவேண்டும்.
  காலநேரம் சாத்தியப்படும் வரை இன்றைய முதாலித்துவ அரசோடு சமாதான உடன்பாட்டிற்கு போவதே மூலஉபாயதந்திர மட்டுமல்லாமல்….பழங்குடிமக்களை பாது
  காப்பதற்கான உபாயமும்மாகும்.

 3. எனக்கு நடந்தது மாஒயிஸ்டுகளுக்கு நடக்கும் நாள் தொலைவில் இல்லை….

  1. உங்களுக்கு என்ன நடந்தது?
   நீங்கள் செத்த பிரபாவா சாகாத பிரபாவா?

 4. Thiru.Mayooran,

  ///மக்களைப்பிரிந்து, சாகசம் என்ற பெயரில் எதிரி விரிக்கும் வலைக்குள் லாவகமாக அவ்ந்து விழுவதாகத்தான் தெரிகிறது.
  ///

  this is as irrational argument as any apologist for the maoists can make. Maoists have destroyed public property including schools and railways and murdered hundreds of inncoents in the past. they are almost like a mafia and extort local busienssman and contractors for money. they do not want the poor people in their area of control to come out of poverty. otherwise they will loose their hold.
  more info soon 

  1. What is irrational about the comment?
   Not falling in line with your thinking?

   1. State has not acheived much. but Maosim is not the alternative for this failure. ok.
    no one is justifying the Indian state. but here the issue is the methods to counter them or solve the basic issues of poverty, hunger, etc.

    And you can compare China and Taiwan ; North and South Korea to know about which system is effective and humane in solving the problems of poverty and hunger. Proof is right in front of us from history. ok.

  1. The proof is right in front of us as imperialist wars and oppression of minorities and poor masses.

   I think that you need to learn a little about the “success’ stories of Taiwan and South Korea from HISTORY before making flippant remarks about comparison.

   1. //I think that you need to learn a little about the “success’ stories of Taiwan and South Korea from HISTORY before making flippant remarks about comparison.//

    G.Masala, You are the one who is igonrant of history and make flippant remarks. Can you campare North and South Koreas ? and i guess you are an emigrant Eelam Tamil living in the ‘capitalistic’ west.. I wonder why marxists like you preder those capitalist nations instead of communist paradise like N.Korea, Vietnam or Cuba. Any takers for migration to these paradises on earth where men are not exploited by the capitalists ?

    1. i guess these communist nations would welcome you all with open hands and hearts if your prefer to emigrate there. There is plenty of work and food availabe there in those collective farms of N.Korea. any takers ? or is all the talk of communism only mere eye wash ?

   2. //The proof is right in front of us as imperialist wars and oppression of minorities and poor masses.///

    Sure the iraq war can be termed as imperialist and fasicist. no one can deny that. but the war policy is not shared by true democrats or liberals. and if Al Gore had won in 2000 elections, then US invasion would not have taken place. We have no hesitation in admitting the wrongs and atrocities committed by US or UK. principles of liberal democracy and free markets are important, not nations or individuals. but you people refuse to admit the violations of Mao or Stalin…

   3. Mr KRA
    Please find out the historical facts about the “success stories” of the countries concerned without repeating the same story.
    There are very balanced books on Korea and China and the Taiwan province.

    Unfortunately there is no “communist” country today. Cuba ans DPRK are socialist and do not need agents, unlike the imperialists who seek and find intellectual stooges everywhere to mislead the public.

    All said, whether they like it or not, their fortresses are crumbling.

    1. வெகு நாட்களாகவே இவர் தைவானை காட்டி தொ வளர்த்த நாடு பார் என்று பேசி வருகிறார்.சீன தேசியவாத கட்சி தலைவர் ஷாங்காய் ஷேக் மாவோவிடம் தோற்று அங்குள்ள மக்களிடம் கொள்ளை அடித்த கொண்டு இங்கு ஓடி வந்த கதையோ நமது சகோதரர்கள் என்று நினைத்து வரவேற்ற மக்களை சர்வாதிகாரம் செய்ததால் எதிர்த்து போராடிய மக்களை ஒரு வாரத்தில் பல ஆயிரம் கொன்றதையோ , அறிவு துறையினரை அனைவரையும் கொன்ற கதையையோ , அந்த போராட்டத்தால் தான் இங்கு ஜனநாயகம் மலந்தது என்பதையோ , இன்றுவரை கோ மிங் தாங் என்ற கட்சியின் பெயரில் அந்த சீன தேசியவாத கட்சியினரே அரசியலிலும் பொருளாதாரத்திலும் இன்றும் கொலாசுகிறனர் என்பதை அறிந்திருகிரார என்று தெரிய வில்லை . கோ மிங் தாங் இந்த கட்சி உலகிலேயே பணக்கார கட்சியாக பரினமிததில் அமரிக்காவின் பங்கு அதன் பிரதி பலனாக பல சதி புரட்சிக்கு இங்கு ஆட்கள் பயிற்சி  கொடுத்தமை என வரலாறு ஆயிரம்.இவர் மாய்ந்து மாய்ந்து முதலாளிதுவத்க்கு ஆதரவாக காடும் இந்த நாட்டில் குழந்தையை பெற்று வளர்க்க அதிக செலவாக உள்ளதால் மக்கள் குழந்தை பெற்று கொள்வதை நிறுத்தி விட்டதால் இங்கு பிறப்பு விகிதம் மிக கடுமையாக குறைந்து உள்ளது முதலாளித்துவ கொடூரத்தின் இன்றைய நிலை .இதை எல்லாம் இவர் ஒப்பு கொள்ள போவதில்லை தனது கருத்தையும் மாற்றி கொள்ள போவதுமில்லை என்பது இவரது ஒரு வருட பின்னூட்டங்களை படித்த அனுபவத்தில் உணர்தவை.

     1. Taiwan started off as a right wing dictatorship under Chaing Kai Sheik. but over the susequent decades it evolved into a mature liberal democracy with free markets making it one of the most prosporous nations. ok.

     2. Most developed nations have a aging population with declining birth rates. nothing special about Taiwan. Do you deny that when compared to N.Korea or mainland China, Taiwan transformed into a developed nation and a liberal democracy today from being a poor and war torn nation in 1945. Its citizens enjoy a very high standard of living and all the old shades of dictatorship is now gone and democracy is vibrant there.

    2. //Cuba ans DPRK are socialist and do not need agents, unlike the imperialists who seek and find intellectual stooges everywhere to mislead the public.//

     Mind your words Mr.G. I can easliy call you names in this net. no big deal. you can be termed as a stooge for fools and idiots who refuse to learn from histoty. yeah, there were no pure communist nations till date. only socialist ntations who move towards pure communism. but what are you people doing in the capitalism west instead of participating the glorious revolution towards pure communism in DPRK or Cuba. when you emigrated from Eelam, who did you choose Canada or w.Europe ? what for ? are you working for a revolution there ? or if not why didn’t you choose Cuba or DPRK where immigration much easier and no hassles about visa or citizenship ?

    3. G.Masala :

     try these :

     வட கொரியா என்னும் நரகக்குழிhttp://nellikkani.blogspot.com/2009/05/blog-post.html

     கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html

 5. பிணைகைதியான ஒரு போலிஸ்காரரை கொன்ற செயலில் என்ன சதி அல்லது எதிரி விரித்த வலை இருக்கிறது ?  இப்படி rationalise செய்வதை தான் irrational comment என்றேன்.

  நான் அளித்த் EPW சுட்டியை நிதானமாக படிக்கவும். பிறகு புரியும் மாவோயிஸ்டுகளின் சாதனைகள் என்னவென்பதை.

  அவர்களின் அடிப்படை பிரச்சனையே அவர்களின் பெயரில் இருக்கும் மாவோ.  மாவோவின் வழியில் பிரச்சனைகளை தீர்க்கும் திட்டம் எப்படி இருக்கும் ? மாவொ பற்றி பலருக்கு இங்கு முழுசா தெரியாது :

  http://en.wikipedia.org/wiki/Mao_Zedong

  மாவோவின் Great Leap Forward மற்றும் Cultural Revolution இல் அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகளை பார்த்தால், ஈழத்தில் கொல்லப்பட்ட எண்ணிக்கை mere peanuts. understand that first.

  1. பொலிஸர் சும்மா இருக்கப் போய்த் தானே மாஓ வாதிகள் கடத்தினார்கள்.
   பொலிஸ் அட்டூழியத்துக்கு எதிர்வினை அதை ஒத்ததாக இருக்கக் கூடாது என்பது தான் மயூரனின் வாதம்.

   “பிணைகைதியான ஒரு போலிஸ்காரரை கொன்ற செயலில் என்ன சதி அல்லது எதிரி விரித்த வலை” என்ற தொனிப்பட மயூரன் எதையுமே சொல்லவில்லையே!
   உங்கள் கற்பனைகளை ஏன் பிறர் மீது திணிக்கிறீர்கள்?

 6. Mr.  athiyaman , without enough  knowledge do not  pass easy comments on great leap forward, great cultural revolution  and maoism. 

  1. Mr.Mayan, Pls share your ‘enough’ knowledge about Great Leap Forward, Cultural revolution and maosim that i may be ignorant of. It is a pity that you were not born in China under Mao and lived thru the G.L.Forward days. The Chinese themselves now admit the facts about those terrible days. try any University of this world for facts about these…

   1. Most of the negative assessments of the Deng Era to justify ita rightward swing are now giving way to more positive assessments.
    Those who depend on imperialist sources for their information will not like to know them.
    The GPCR was a major civil uprising which was necessary, but did not fulfil its objectives.
    Debating the numbers game of the West is a waste of breath.

    But all that is besides the point: There is a killer state in India. Where do honest and conscientious Indians stand. Let us not duck that question?
    I think that each has exposed his/her morality by his/her response to events.

    1. ///he GPCR was a major civil uprising which was necessary, but did not fulfil its objectives.//

     that was a diabolical plot by Mao to divert attention from the terrible results his experiments during G.Leap forward produced and to protect his position and power. The young Red Guards were motivated to punish and kill anyone deemed as ‘revisionist’ or bourgeause mentality with no proper or reasonable inquiry in a court of law operating on modern jurisprudence. it was the law of the jungle and can be equated to religious fanatisim, Spanish inqusition, etc.
     Millions of inncoents were persequted and the whole nation was in chaos. It is now recognised as an unmitagated disaster by the Chinese themselves.

   2. First read something sensible about the GPCR (from not necessarily a left point of view/.

   3. Why are you digressing so much.
    Why don’t you respond to questions close to home, and concerning the MURDEROUS INDIAN STATE?

 7. Mao is the greatest leder of modern china,We are very proud to supporting his ideas.not like slavemind Indian,liking back of americans.

 8. Mr. Athyaman, please go through ” documents of the  Great Proletarian Cultural Revolution in China”  published by NTAREASHTRIYA PRAKASHAN, Saharanpur  or Wlliam Hinton book  on Mao   and China

  1. செஞ்சீனாவில், மாவோவின் ‘பரிசோதனைகள்’ இன்னும் கொடுமை. பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் நம்பாமல், தாந்தோன்றித்தனமாக, முட்டாள்தனமா, மாவோ வழிகாட்டிய படி, இரும்பு உருக்காலைகள் சிறிய அளவில் கிராமம் தோரும் உருவாக்கபாடு, மிக மட்டமான, பயனில்லாத எக்கு உருவாக்கபட்டது. அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. ஏன் கைவிடப்பட்டது என்பதை மாவோயிஸ்டுகளும், வினவு தோழர்களும் ‘விளக்கு’வார்களா ?
   With no personal knowledge of metallurgy, Mao encouraged the establishment of small backyard steel furnaces in every commune and in each urban neighborhood. Huge efforts on the part of peasants and other workers were made to produce steel out of scrap metal. To fuel the furnaces the local environment was denuded of trees and wood taken from the doors and furniture of peasants’ houses. Pots, pans, and other metal artifacts were requisitioned to supply the “scrap” for the furnaces so that the wildly optimistic production targets could be met. Many of the male agricultural workers were diverted from the harvest to help the iron production as were the workers at many factories, schools and even hospitals. Although the output consisted of low quality lumps of pig iron which was of negligible economic worth, Mao had a deep distrust of intellectuals and faith in the power of the mass mobilization of the peasants. Moreover, the experience of the intellectual classes following the Hundred Flowers Campaign silenced those aware of the folly of such a plan. According to his private doctor, Li Zhisui, Mao and his entourage visited traditional steel works in Manchuria in January 1959 where he found out that high quality steel could only be produced in large scale factories using reliable fuel such as coal. However, he decided not to order a halt to the backyard steel furnaces so as not to dampen the revolutionary enthusiasm of the masses. The program was only quietly abandoned much later in that year.

   Substantial effort was expended during the Great Leap Forward on large-scale, but often on poorly planned capital construction projects, such as irrigation works often built without input from trained engineers.

   1. திரு.அதியமான் அவர்கட்கு,

    உங்களுக்கும்,எனக்கும் “இடதுசாரியம்-பொருளாதாரங் “குறித்துத் தூண்டிலில் விவாதம் நடந்தது.நான் முதலாளியப் பொருளாதாரத்தை சோஷலிசப் பொருளாதாரத்துக்கூடகப் புரிவதை விட(சோஷலிசத்தின் பொருளாதார விமர்சனத்தை நீங்கள் புரிய வெறுப்பதால்) சில்வியோ கேசல் குறித்துரைத்த நியாயப் பொருளாதாரப் பொறி முறையூடாக புரிந்துகொள்ளக் குறித்தேன்.நீங்கள் மீளவும் அதே பாணியில் சோஷலிசத்தைக் கொச்சைப் படுத்துவதிலேயே காலத்தைக் கடத்துகிறீர்கள்.

    முதலாளியப் பொருளாதாரத்தை:

    ஆடம் சிமித்(Adam Smith),

    ஜோர்ன் மைனாட் கெய்னஸ்(John Maynard Keynes),

    சில்வியோ கேஷல் (Silvio Gesell)

    ஆகிய மூவரிடம் புரிய முனைவது முதலாளியத்தின் குறைபாடுகளைப் லிபரலாளர்களாக இருப்பவர்களுக்குகந்தது.

    இங்ஙனம் அவர்களைப் புரிந்துவிட்டு,மார்க்சிடம் வாருங்கள்.

    இதன் புரிதலில் என்ன குறைபாடுண்டென்பதை சில்வியோ கேஷல் (Silvio Gesell)மொழியில் நீங்கள் ஏலவே புரிந்திருப்பீர்கள்.அதை,நடைமுறை ரீதியாக இன்றைய முதலாளிப் பொருளாதாரத்தின் அதிர்வில் உரைக்கும்போது மார்க்சின் பொருளாதார விமர்சனம்,சோஷலிசப் பொருளாதாரப் பொறிமுறை சரியானதென நீங்கள் குறைந்தபட்சமாவது ஒத்துக்கொள்ளுந் தருணம் நிச்சியம் ஏற்படும்.

    இதை எனது அனுபவத்தில் கூறுவதிலிருந்து தவிர்த்துத் திருவாளர் பிரிடிறிக் ஹாயக்கின் .(Friedrich A.Hayek)The Road to Serfdom லிருந்து கூறுகிறேன்.ஹாயெக்(Hayek) முதலாளியத்தின் பாதையை அடிமைப்படுத்தலுக்கான வழியென விமர்சித்து மாற்றங்களைக் கோரியவர்.அவர் முதலாளியப் பொருளியலாளர்.

    அடுத்துச் சீனாவினது பொருளாதாரம் சோலிசப் பொருளாதாரமில்லை.பாதி அரச முதலாளியம் மறுபாதி நவலிபரல்களது பொருளாதார முன் நகர்வையொட்டிய தனியார் பொருளாதாரப் போக்கு.இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதே சீனாவின் பொருளுற்பத்தி-தராதரங் குறித்துப் புரியலாம்.

    சீனா குறித்து பலகோடிப் புனைவுகளை மேற்குலகம் அவிழ்த்துவிடும் குப்பைகளை இங்கே கொட்டுவதால் சீனாவின் வலுவை எவரும் தகர்க்க முடியாது.அதைச் சீன மாணவர்கள் உலகத்தில் நிறுவியுள்ளனர்.

    மேற்குலகம் தனது உற்பத்திவலுவைச் சீனாவிடம் இழந்துபோகாதிருக்கவும்,தொடர்ந்து உற்பத்தியாளர்களாகவும் மற்றைய தேசங்கள் வெறும் நுகர்வாளர்களாகவும் இருத்திவைக்கப் பல நாடகம் ஆடுகிறது.அது,பொருளாதாரம்,பௌதிகம்,சமூக விஞ்ஞானத்துள் பல பொறிகளை உருவாக்கிவைத்துள்ளது.

    இன்றைய சூழலில் பேராசிரியர் மில்டன் பிறீட்மானையும் (Prof.Dr.Milton Friedman)அவரது பொருளாதாரக் காடைத்தனக் கோளாறுக் கருத்துகளையும் ,அதுசார்ந்து இயங்கும் அமெரிக்காவையும் புரிந்துகொள்ள மேற்கூறிய மூவரையும் கற்றேயாகவேண்டும்.இதைச் சாத்தியப்படுத்தாத எந்த நபரும் மார்க்சியம் குறித்தோ அல்லது சோஷலிசப் பொருளாதாரங் குறித்தோ பேசுவதில் பயன் இல்லை.

    1. // திருவாளர் பிரிடிறிக் ஹாயக்கின் .(Friedrich A.Hayek)The Road to Serfdom லிருந்து கூறுகிறேன்.ஹாயெக்(Hayek) முதலாளியத்தின் பாதையை அடிமைப்படுத்தலுக்கான வழியென விமர்சித்து மாற்றங்களைக் கோரியவர்///

     wrong. Hayek termed collectivism as the road to serfdom, not capitalim. i would recommend the book ‘Free to Choose’ by Milton Friedman.

     ///சீனா குறித்து பலகோடிப் புனைவுகளை மேற்குலகம் அவிழ்த்துவிடும் குப்பைகளை இங்கே கொட்டுவதால் சீனாவின் வலுவை எவரும் தகர்க்க முடியாது.//// what kuppai ? does the fact that millions of innconets were killed and jailed under Mao a ‘kuppai’ ; and human rights violations still continue behind that bamboo curtain. and Chinese ruling elite and party officials are now mafia like (along with PLA) and corruption there is much worse than in India, with no hope of basic democracy or freedoms.

     1. அதியமான்,நீங்கள் முதலாளியத்தைப் பற்றிப் புரிந்துகொண்டது என்ன?அதன் அடிப்படையென்ன?இது குறித்து முதலில் புரியவையுங்கள்.சமவுடமைமீதான வெறும் எதிர்ப்புப் போதாது.
      பிரிடிறிக் காயக்(Friedrich August von Hayek )அரசமுதலாளியத்தின் எதிரி.பொருளாதாரத்தில் பொதுவுரிமையென்பதைத் தவிர்த்துக்கொள்வதற்கான முயற்சியல் எழுபதுகளில் தீவிரமான நவ லிபிரல்களது ஐரோப்பிய மைவாதச் சிந்தனையாளர்.அவர் குறித்தான சிந்தனையென்பது முதலாளியத்தில் அதீதமான தனியுடமையைக் கோரியவர்.அவர்தாம் அதிகாரத்துக்கான நிறுவனமயப்படும் அரச முதலாளியத்தை தவிர்த்துச் செயற்பட்டபோது முதலாளியத்தின் மொனோப்போல்அடிமைப்படுத்தலுக்கான வழியெனக் கருத்தாடியவர்(Choice in Currency (1976) and Denationalisation of Money (1978).அவர் நவலிபரல்களது தலைமைக்குருக்களான ஆடம்சிமித் (Adam Smith) und மற்றும் யோர்ன் லுக்(John Locke )கேயின் பொருளாதாரப் புரிவை தாரளமயத்துள் இணைக்க விரும்பியர்.
      அவரது கருத்தானது முதலாளியமானது அரசமுதலாளிய மாறமுடியாதென்பதும்,அது சோசலிசமாக முடியாதென்பதும்.
      நான் சுட்டிய விடையம் முதலாளியத்தின் முகங்களையும் ,கொடூரங்களையும் அவரது விளக்கங்களுக்கூடாகப் புரியும்படி.அதுதாம் இன்றைய பொருளாதாரக் காட்டுமிராண்டித்தனத்துக்கு எடுத்துக்காட்டு.நவலிபரல்களது எதேச்சதிகாரமான பொருளாதாரப் போக்குத் தொழிலாளர்களை புதிய வைகளில் ஒடுக்குகிறது.இதைப் புரிவதற்கு காயக்கைச் சுட்டிக்காட்டினேன்.
      லிபரலிசம் இப்போது பூமியையே விலைகூறித் திருவது புரியப்படுவது முதலாளியத்தைத் திறன்படப் புரியும்போது மட்டுமே சாத்தியம்.ஜேர்மனியப் பொருளாதாரப் போக்கில் தாக்கஞ் செய்தவர் லூவிக் ஏர்காட்.(Ludwig Erhard)அவரும்,கார்ல் போப்பருங்(Karl Popper) கூட காயக்கது கொள்கைகளை வழிமொழிந்தவர்கள்தாம்.என்றபோதும்,அடிமைப்படுத்தலுக்கான தெரிவு முதலாளியத்தின் முகமென்பதை அவரது நூலிருந்து(The Sensory Order: An Inquiry Into the Foundations of Theoretical Psychology. University of Chicago Press, 1953.) புரிவதென்பது கொலக்ரிவிசத்தின் அடிப்படை முதலாளியத்தின் அடிப்படைத் தகர்வைக் கோரியதல்ல.மாறாக அது அரச முதலாளியமானதென்பதை முதலாளியத்தைத் தவிர்த்துவிட்டுச் சோசலிசமெனப் பகர முடியுமா?

 9. அதெல்லாம் சரி அதியமான் பரிந்துரைக்கும் தாராளவாதம் வீழ்ச்சியை தழுவி விட்டதே ! அதை கொஞ்சம் விளக்கினால் நல்லது.
  மாவோ புராணத்தை பிறகு பார்ப்போம்.

 10. ///இங்ஙனம் அவர்களைப் புரிந்துவிட்டு,மார்க்சிடம் வாருங்கள்.//

  பார்க்கவும் :

  ‘உபரி மதிப்பு என்னும் மாயயை’

  http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html

  மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
  சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
  ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
  கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும்
  பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
  நிகழ்கின்றன. மார்க்ஸின் ‘விஞ்ஞானப்படி’ ஒவ்வொறு சுழற்ச்சியின்
  மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
  குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
  பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
  புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
  உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
  மேலும் மேலும் ‘சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
  முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
  கட்டமைப்பே இயல்பாக அழியும். ஆனால் கடந்த 150 வருட
  பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
  பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
  விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
  தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
  படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.

  1. Can any Marxist here explain why the basic and most important hypothesis of Das Capital proved to be false : ‘that is each recession / depression will be worse than the previous one while the standard of living of the working class will be reduced progressively over the time due to depletion of the net surplus value in the sytem in due course of time’ ? opposite happened. the living and working conditions of the workers of the world, esp in Europe, which were terrible during Marx’s time had improved dramtically in these 150 years. How ?

  2. this is a reply from my economics professor about this post :

   Dear Athiyaman,

   Value determination is looked at by Adam Smith from the demand and supply angles. From the demand side, it is the estimation of the person who wants the good which determines value. From the supply side, in the primitive economy, where there was no property rights, it was the amount of labour which determined the value. After property rights entered the scene, he concluded that cost of production would determine the value. Since cost of production consisted of prices for the use of land, labour and capital, the conclusion that prices are determined by other prices was challenged by Ricardo. Marx was trying for the elusive measure of value, like a metre, which is having unvarying quality at all times and tried to locate it in abstract labour. He did not succeed. Piero Shraffa did attempt another route to arrive at the solution and partially succeeded.

   Your critique of Marx on the empirical plane is certainly valid.

   However, the quest for an unvarying measure of value would continue to haunt the minds of people in the future, as it did in the past. IMHO, Marx would continue to remain an enigma and would be relevant then also.

 11. Mr KRA has successfully wriggled himself out of distorting what Mayooran said and branding him ‘irrational’ by drawing a red herring.
  He should be congratulated on this feat, although it is not unusual for him.

 12. அதியமான்,நீங்கள் முதலாளியத்தைப் பற்றிப் புரிந்துகொண்டது என்ன?அதன் அடிப்படையென்ன?இது குறித்து முதலில் புரியவையுங்கள்.சமவுடமைமீதான வெறும் எதிர்ப்புப் போதாது.

  பிரிடிறிக் காயக்(Friedrich August von Hayek )அரசமுதலாளியத்தின் எதிரி.பொருளாதாரத்தில் பொதுவுரிமையென்பதைத் தவிர்த்துக்கொள்வதற்கான முயற்சியல் எழுபதுகளில் தீவிரமான நவ லிபிரல்களது ஐரோப்பிய மைவாதச் சிந்தனையாளர்.அவர் குறித்தான சிந்தனையென்பது முதலாளியத்தில் அதீதமான தனியுடமையைக் கோரியவர்.அவர்தாம் அதிகாரத்துக்கான நிறுவனமயப்படும் அரச முதலாளியத்தை தவிர்த்துச் செயற்பட்டபோது முதலாளியத்தின் மொனோப்போல்அடிமைப்படுத்தலுக்கான வழியெனக் கருத்தாடியவர்(Choice in Currency (1976) and Denationalisation of Money (1978).அவர் நவலிபரல்களது தலைமைக்குருக்களான ஆடம்சிமித் (Adam Smith) und மற்றும் யோர்ன் லுக்(John Locke )கேயின் பொருளாதாரப் புரிவை தாரளமயத்துள் இணைக்க விரும்பியர்.

  அவரது கருத்தானது முதலாளியமானது அரசமுதலாளிய மாறமுடியாதென்பதும்,அது சோசலிசமாக முடியாதென்பதும்.

  நான் சுட்டிய விடையம் முதலாளியத்தின் முகங்களையும் ,கொடூரங்களையும் அவரது விளக்கங்களுக்கூடாகப் புரியும்படி.அதுதாம் இன்றைய பொருளாதாரக் காட்டுமிராண்டித்தனத்துக்கு எடுத்துக்காட்டு.நவலிபரல்களது எதேச்சதிகாரமான பொருளாதாரப் போக்குத் தொழிலாளர்களை புதிய வைகளில் ஒடுக்குகிறது.இதைப் புரிவதற்கு காயக்கைச் சுட்டிக்காட்டினேன்.

  லிபரலிசம் இப்போது பூமியையே விலைகூறித் திருவது புரியப்படுவது முதலாளியத்தைத் திறன்படப் புரியும்போது மட்டுமே சாத்தியம்.ஜேர்மனியப் பொருளாதாரப் போக்கில் தாக்கஞ் செய்தவர் லூவிக் ஏர்காட்.(Ludwig Erhard)அவரும்,கார்ல் போப்பருங்(Karl Popper) கூட காயக்கது கொள்கைகளை வழிமொழிந்தவர்கள்தாம்.என்றபோதும்,அடிமைப்படுத்தலுக்கான தெரிவு முதலாளியத்தின் முகமென்பதை அவரது நூலிருந்து(The Sensory Order: An Inquiry Into the Foundations of Theoretical Psychology. University of Chicago Press, 1953.) புரிவதென்பது கொலக்ரிவிசத்தின் அடிப்படை முதலாளியத்தின் அடிப்படைத் தகர்வைக் கோரியதல்ல.மாறாக அது அரச முதலாளியமானதென்பதை முதலாளியத்தைத் தவிர்த்துவிட்டுச் சோசலிசமெனப் பகர முடியுமா?

 13. KRA
  You are not dealing with the central issue of the article.
  You started with distorting a comment by Mayuran.
  You were challenged and seem unable to wriggle out. Then you started to systematically digress to duck the issue.

  Is not the Indian state a killer state targetting its citizens?
  What way do the people have to protect themselves from the killer state?
  Mayuran only questioned the correctness of certain deds by the Maoists, whom the oppressed seem to trust.

  Do write your own articles about Mao, Stalin, Ho Chi Minh, MK Gandhi, Nelson Mandela, Osho, et alia.
  But here, all that is beside the point, and can only help you to run away from a question that you raised.

Comments are closed.