பாழடைந்த சிறையில், இருட்டில் என்னை அடைத்துள்ளார்கள்- சீமான்.

சிங்களர்களுக்கு எதிராகப் பேசிய சீமானைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக காவல்துறை இந்நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இன்று மனுவை விசாரித்த நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ‘’பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பாழ் அடைந்த இருட்டுத் தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர்.இது சட்ட விரோதமான செயல். எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும். மேலும் தனிமை சிறையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும்’’ என கூறியுள்ளார்.நீதிபதிகள் நாகப்பன், கிருபாகரன் முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ஆஜராகி, சீமான் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை என்று கூறினார்.இதைக்கேட்ட நீதிபதிகள், அரசு இது குறித்த பதிலை வரும் செவ்வாய்க் கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

5 thoughts on “பாழடைந்த சிறையில், இருட்டில் என்னை அடைத்துள்ளார்கள்- சீமான்.”

  1. சும்மா கொன்ச நால் இருங்கன்னே. முதல் வகுப்பு அறை கேட்குதோ? இப்படி தன்யா ஈழத்தமிழன் அவதிப்பட்டான். சும்மா டயலக் விட்டா மட்டும் போதாது. நீங்கலும் அனுபவித்து பாரன்னே!

  2. ஏண்டா பன்னாடை இந்திய அரசுக்கு முறையாக வருமான வரிச் செலுத்தும் அரசியல் கைதிகளை முதல் வகுப்பில் அடைக்க சட்டத்திலேயே இடம் இருக்குடா முட்டாக்……… உங்க கருணாநிதி மட்டும் என்ன உண்மையிலே பாம்புகள் பல்லிகள் நடுவிலா சிறையில் இருந்தான்……..ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது. எதிர்ப்பே இல்லாத காலத்தில் போராடியது………..

  3. கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் பாம்புகள் பல்லிகள் நடுவில் இருந்தார் என்பது நாமெல்லாம் நம்பிய ஒரு கட்டுக்கதை.உண்மையில் இப்போதுதான் கருணாநிதி பாம்புகள் பல்லிகள் மட்டுமல்லாது ஆளை விழுங்கும் ஆக்டோபஸ்களும் சூழ இருக்கிறார் கருணா.

  4. கருணாநிதி பாம்புகள் “மத்தியில்” பாளையங்கோட்டை சிறையில் இருக்கவில்லை!!! திருனெல்வேலி நகராட்சி செயர்மன் மூலம் கொடுத்து அனுப்பிய “”மெத்தையில்”” சுகமாக படுத்து உறங்கினார் !!!மேலும் ,அவ்ருக்கு மதிய உணவு திருனெல்வெலிடவுன் கணபதி விலாஸ் ஓட்டலில் இருந்து ,ஒட்டல் அதிபர் மகன் சூரியனாராயணன் மூலம் வத்தல் குழம்பு,வடை பாயாசத்துடன் படைக்கப்பட்டது!!! யாரை ஏமாற்றுகிறார் இந்த கருணானிதி!! ஓட்டை வசனத்தை வைத்துக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றி,தமிழ்,தமிழ், என்று கூக்குரல் செய்வதே இவருக்கு வேலை!!!அடுத்து வரும் தேர்தலில் இவரை தோற்கடிப்பதே தமிழரின் வேலையாக இருக்க வேண்டும் !!!

    1. சீமானுக்கு வச்சாச்சு ஆப்பு ………..

Comments are closed.