பாலியல் மோசடியில் அமெரிக்க அதிகாரிகள்.

12.09.2008.

அமெரிக்காவில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்வதற்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள் பலர் பாலி யல் மோசடியில் சிக்கியுள்ளனர். பகாசுர எண்ணெய் நிறுவனங்களின் தில்லுமுல்லுகளுக்கு உதவியாக இருந்ததற்காக லஞ்சம் வாங்கிய தோடு ஒழுக்கக்கேடான விஷயங்களி லும் ஈடுபட்டிருந்தனர் என்பது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்க மண்ணில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக நிறுவ னங்கள் மீது வரிகள் விதிக்கப்படு கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டது. அதிகாரிகளின் மோசடி யால் ஏராளமான பணம் வராம லேயே போய் விட்டது என்று குற் றம் சாட்டப்படுகிறது. இதை வசூ லிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள துறையில் பணிபுரிபவர்களில் மூன் றில் ஒருவர் பாலியல் மோசடியில் சம்பந்தப்பட்டிருந்ததாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த மோசடியாளர்கள் பெரும் நிறுவனங்களுக்கு உதவியாக இருந்துள்ளனர். அதிகாரிகளில் இருவர் 135 முறை லஞ்சம் வாங்கி யுள்ளனர். ஏராளமான பரிசுகளைப் பெற்ற அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்துகளுக்கும் அடிமை யாக இருந்துள்ளனர். இந்த உதவி யால் அளவுக்கு மீறிய எண்ணெய் உறிஞ்சப்பட்டுள்ளது. 2002 முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மோசடிகள் தற்போது அம்பலமாகி யுள்ளன.

டென்வர் மற்றும் வாஷிங்டன் அலுவலகங்களில் பணிபுரியும் 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இவர்களில் பலர் ஓய்வு பெற்று விட்டனர். சிலர் விருப்ப ஓய்வில் சென்று விட்டனர். இதனால் நட வடிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குரியதாகவே உள் ளது. ஆனால் கொள்ளை லாபம் சம் பாதித்துள்ள நிறுவனங்களிடமி ருந்து வரவேண்டிய தொகை வசூ லிக்கப்படுமா என்பது பற்றி அமெ ரிக்க நிர்வாகம் மவுனம் சாதிக்கிறது.

பகாசுர நிறுவனங்களான செவ்ரான், ஷெல், ஹெஸ் மற்றும் கேரி வில் லியம்ஸ் போன்ற நிறுவனங்கள் இத் தகைய மோசடிகளில் அமெரிக்க அதிகாரிகளை ஈடுபடுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.