பார்வதியம்மாள், சிவத்தம்பி, கருணாநிதி- முதுமையின் இயலாமையும் முதுமைகளின் வக்கிர மனங்களும் : மதி

கருணாநிதி தள்ளுவண்டியில் தான் அலைகிறார் ஆனால் பதவி பித்து தலைக்கேறி ஆடுகிற ஆட்டத்தில் முதிய வயதில் தனது வயதை ஒத்தவர்களின் பிரச்சனைகளை அவர் கண் கொண்டு பார்க்கத் தவறுகிறார்.. இப்போதும் பாராட்டு விழாக்கள், விருதுகள், குத்துப்பாட்டை ரசித்தம் என தினம் தோறும் பல மணிநேரம் ஒரு மாநில முதல்வர் செலவு செய்கிற நிகழ்வுகள் இவைதான்.

இந்தக் குத்துப்பாட்டு நிகழ்வுகளின் அடுத்த பாகம்தான் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டு. அதாவது உலகின் மூத்த மொழியாம்? தமிழுக்கு கோவையில் மாநாடு. தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விக்கு எதிராக மெட்ரிக் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பொறுந்தாது என தமிழக அரசு முடிவெடுக்க இருப்பதாக செய்தி. இதுதான் கருணாநிதியின் மொழிப்பற்று. கருணாநிதி சொன்னால் தமிழ் செம்மொழி, கோவிலில் தமிழ் வேண்டும் என்று யாராவது கோரினால் அது வன்முறை.. என் ஆட்சியை கலைக்கப்பார்க்கிறார்கள் என்று கதறுகிறார் இந்த கல்லக்குடி நாயகர்.

போர் நிறுத்தம் கேட்ட தமிழக உணார்வாளர்களை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளிய கருணாநிதி. மக்களின் ஆதரவோடு மக்களுக்கு எதிரான பாசிசத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். ஊடகங்களின் மௌனம், சகல தொழில்களிலும் தனது குடும்பத்தினரின் ஆக்டோபஸ் கரங்கள் என தமிழகமே ஆபத்தான சூழலுக்குள் தள்ளப்படும் நிலையில் இன்றைய தேதியில் கருணாநிதிக்கு காட்டப்பட வேண்டியது எதிர்ப்பு மட்டுமே ஆமாம் ஊடகங்கள் கருணாநிதியின் மிகப்பெரிய ஜால்ராவாக மாறி விட்ட நிலையில் இணையங்களாவது கருணாநிதியின் மக்கள் விரோத ஆட்சியை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் செயல்பட வேண்டும்.

பார்வதியம்மாளுக்கு காட்ட வேண்டிய மனித நேய உதவியில் கருணாநிதி நடந்து கொண்ட விதம் என்பது ஒரு பார்வதியம்மாளுக்கு நடந்த விஷயம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுமே வெட்கித் தலைகுனியும் படியான நிகழ்வுதான் இது தனக்குப் பிடித்த ஜால்ராக்களை மட்டுமே வைத்து பாராட்டு விழா பாணியில் கோவையில் நடத்த இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு சிவத்தம்பி வருவது அவ்வளவு உகந்ததல்ல செம்மொழி மாநாட்டைத் தவிர்த்து அவர் வெளி நிகழ்வுகளில் கந்து கொண்டால் அவருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. சொரணையற்ற சிவத்தம்பி அப்படி வந்து கருப்புக் கொடி யாராவது காட்டினால் அவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்பதும் இங்கே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

உலகெங்கிலும் தமிழ் மக்கள் தோற்றுப் போனதான உணர்வில் தவிக்கும் போது, தங்களின் கையாலாகாதத் தனத்தால்தான் போர் நிறுத்தம் கேட்ட தங்களை நொறுக்கினார் என்று தமிழ் மக்கள் ஆற்றாமையால் துடிக்கும் போது சிவத்தம்பி மட்டும் பொறுப்பற்ற முறையில் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வது மக்கள் உணர்வை புண்படுத்துவது போலாகும். இதை அவராக புரிந்து கொண்டால் நல்லது யாராவது புரிய வைத்தால் அது அவருக்குத்தான் இழுக்கே தவிற புரிய வைத்தவர்களுக்கு இழுக்கல்ல மாறாக புரிய வைத்தவர்கள் தற்காலத்தில் அரசியல் ரீதியாக தங்களின் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்தையும் அரசியலாக்கு போராடு

கருணாநிதியின் ஆதரவாளர்கள், கூட்டணித்தலைவர்கள், அல்லக்கைகள் அனைவரும் சொல்வது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களுக்குள் ஒற்றுமையில்லை, எல்லாவற்றையும் அரசியல் ஆக்குகிறார்கள் என்பதுதான். கனரக ஆயுதங்களால் புலிகளும் பொது மக்களும் கொன்றொழிக்கப்பட்ட போது ஈழத்தில் போரே நடைபெற வில்லை என்று சொன்னதும். மே மாதம் துயரமான 18, 19, 20 தேதிகளை ஒட்டி துன்பமான நாட்களில் டில்லியில் போய் தனது குடும்பத்தினர்களுக்கு பதவி வேண்டி கருணாநிதி நடத்திய பேரங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்?

கருணாநிதி தலைமையில் ஒற்றுமையாய் இருப்பதும் சாத்தியமா? இந்த ஒற்றுமை என்பது சாம்பல் மேட்டில் நின்று கொண்டு தனக்கு வாழ்த்துப்பா பாட அனைவரையும் அரைகூவி அழைப்பதும். விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட் இந்திய தேசிய அரசியலுக்கு அடிவருடி வேலை பார்க்க தமிழர்களை அணி திரட்டுவதுமில்லாமல் வேறென்ன? ஆகவே இந்த ஒற்றுமை அவசியம் இல்லை. குட்டிமணியை இலங்கை அரசிடம் பிடித்துக் கொடுத்த கருணாநிதியின் இந்த ஒற்றுமை நாடகம் இப்போது சந்தி சிரித்துக் கொண்டிருப்பது யதார்த்தமான ஒன்றுதான். எல்லாவற்றையும் மறந்து விட்டு இப்போது கருணாநிதி நம்மை ஒன்றுபடக் கோரும் போது. தமிழர்கள் இழந்து விட்ட ஒவ்வொன்றையும் கருணாநிதி முன்னால் வைக்க வேண்டும். நீங்கள் வேறாகவும், நாங்கள் வேறாகவும் இருக்கும் போது இந்த ஒற்றுமைதான் எதற்கு.

பார்வதியம்மாள் ஒரு வேளை நாளையே சூழல் காரணமாக தமிழகம் திரும்பி வந்தாலும் சரி கருணாநிதியின் சின்னப்புத்தியை நாம் மன்னிக்காமல் அரசியலாக்கி போராட வேண்டும். சிவத்தம்பி செம்மொழி மாநாட்டிற்குச் செல்வது என்பது ஈழத் தமிழன் ஒவ்வொருவருக்கும் நேரும் அவமானம். கருணாநிதியின் வாழையிலையில் கை நனைக்கும் சிவத்தம்பிக்கு எதிர் கால வரலாற்றில் எஞ்சியிருப்பது என்ன?.

இந்நிலையில்தான் கருணாநியின் தமிழ் அரிப்புக்காக பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி கோவையில் நடத்தப்படும் செம்மொழி மாநாட்டிற்கு தமிழறிஞர் சிவத்தம்பி வருகிறார் என்கிற செய்தி அசிங்கமான ஒரு சரணடைவாக இருக்கிறது. தமிழர்களில் பல லட்சம் பேர் யுத்தத்திற்கு பலியாகியிருக்கும் நிலையில் கருணாநிதியிடம் சில சலுகைகளைப் பெற்றுக் கொண்டு செம்மொழி மாநாட்டிற்கு சிவத்தம்பி செல்வது என்பது தமிழன் எல்லாம் செத்தாலும் பரவாயில்லை தமிழ் மொழி வாழட்டும் எனப்து போல இருக்கிறது. முதிய நிலையில் தனது கோரிக்கைகளை நிராகரித்த கருணாநிதியையும் அவரது நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியையும் நிராகரித்த பார்வதியம்மாளின் நடவடிக்கையோடு சிவத்தம்பியின் வருகையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த கல்வி மான்களின் சூதும் வாதும் மௌனமும் எவ்வளவு வன்மமான ஒன்றாய் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

17 thoughts on “பார்வதியம்மாள், சிவத்தம்பி, கருணாநிதி- முதுமையின் இயலாமையும் முதுமைகளின் வக்கிர மனங்களும் : மதி”

 1. mokkai pathivu.. more than care for parvathiyamma, sounds like you want to hit karunanidhi.. ur one point agenda is oppose karunanidhi.. ! nalla manushangada neenga..

 2. ஆமாம் அரசியல் ஆக்க வேண்டும். சிவத்தம்பி இதற்கு மேலும் செம்மொழி மாநாட்டிற்குச் சென்றால் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் அவரை புறக்கணிக்க வேண்டும்.

 3. வேலன் நீங்கள் கருணாநிதிக்கு அல்லக்கை வேலை பார்க்காமல் இருந்தால் சரி மக்கள் விரோத கருணாநிதியை மக்கள் மனறத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

  நன்றி

 4. சிவத்தம்பி தெளிவாகச் சொல்லியிருந்தார் தனது பதிலை. அதற்கு மேல் அவருக்கு நெருக்கடி கொடுப்பதில் அர்த்தமில்லை. அவரளவில் அது போதுமானது. புலியான புலியெல்லாம் கடைசியில் இந்தியாவைப் பகைக்கக் கூடாது என்று இருந்த நிலையில் தனியொருவரை வைவதில் அர்த்தமில்லை. 

  ஒரு போது தமிழினக் காவலன் என்பீர்கள். பின்னர் துரோகி என்பீர்கள். இந்தியா – தமிழ்நாடு பற்றி எப்போதாவது தெளிவான நிலைப்பாடெதுவும் இருந்திருக்கிறதா? அதில்லாமல் விழுந்தபாட்டிற்கு குறி சுடுவதை நிறுத்துவது நல்லது. 

  1. சிவத்தம்பி எப்போதுமே நாடகமாடுபவர் தான். செம்மொழி அராய்ச்சி மாநாடு ஒரு அண்மைய நிகழ்வு மட்டுமே.
   யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி இடத்துக்கும் ஆட்களுக்கும் தக்க படி ஒவ்வொன்றைச் சொன்ன பெருமை அவருக்குரியது. சிவத்தம்பியின் செம்மொழி மாநாட்டுநாடகம் இந்த இணையத் தளத்தில் சில மாதங்கள் முன்பே விரிவாகப் பேசப்பட்டது.

   mathan, சிவத்தம்பியைப் பற்றி என்ன குற்றமும் சொல்லலாம். தெளிவகத் தன் நிலைப்பாட்டைச் சொல்லுகிற குற்றத்தை மட்டும் அவர் மீது சுமத்தாதீர்கள் .
   அவரது தீராநதி நேர்காணலிலும் நன்றாக நழுவியுள்ளார்.

   கருணாநிதியைத் தமிழினக் காவலன் என்பவர்களின் பேச்சையெல்லாம் எடுக்காதீர்கள். அவரை நம்பி ஏமாறும் மக்கள் தமிழ்நாடில் தான் மிக மிகாதிகம்

  2. A sickly old female was granted a visa.
   She was refused entry on arrival, and no valid reason was given.
   She was asked to re-apply.
   The visa is granted with conditions that are humiliating and most offensive.

   If the person on a medical or tourist visa will address public plitical meetings, it breaches the terms of the visa, even normally. What is illegal about her talking to people, especially in this age of the internet?
   Who politicised the problem? Who strengthened the hands of Gopalasamy and Nedumaran who were thus far clutching at straws?
   Does not it seem funny that the sick old man is scared stiff of the sickly old woman?

   Kindly leave the LTTE out of my argument. I have never had anything to do with the LTTE or for that matter its ememies.

  3. A sickly old female was granted a visa.
   She was refused entry on arrival, and no valid reason was given.
   She was asked to re-apply.
   The visa is granted with conditions that are humiliating and most offensive.

   If the person on a medical or tourist visa will address public plitical meetings, it breaches the terms of the visa, even normally. What is illegal about her talking to people, especially in this age of the internet?
   Who politicised the problem? Who strengthened the hands of Gopalasamy and Nedumaran who were thus far clutching at straws?
   Does not it seem funny that the sick old man is scared stiff of the sickly old woman?

   Kindly leave the LTTE out of my argument. I have never had anything to do with the LTTE or for that matter its ememies.

 5. It is extremely disturbing to find such people like Velan & Mathan. Shame! Shame!! Shame!!!

  1. Dear SirDr.V.Pandian ,Professor K.Sivathamby is a seemly property of Tamil Community.But he is from pain got Eelam Tamil Community.Do you know what happend in this month of 2009.We are strongly say Prof.K.Sivathamby should be regret the Kovai Semmoli Maanaadu.Eelam Tamils” pain Experince” is news for somebody.That`s why they dont know.

 6. http://transcurrents.com/tc/2010/05/proltte_politicos_stand_fully.html

  Pro-LTTE politicos stand fully exposed as Mrs.Velupillai is ‘advised’ to return to Sri Lanka
  by D.B.S. Jeyaraj

  LTTE Leader Velupillai Prabhakaran’s mother Parvathy Velupillai will return to Sri lanka from Malaysia instead of going to India as expected

  Though given a conditional 6month visa by India for her to get medical treatment in Tamil Nadu the ailing octogenarian has not availed of it.

  Mrs.Velupillai was”advised” by Tamil Nadu politicians like Nedumaran to return to Sri Lanka instead of coming to India for political reasons.

  Since the conditional visa stipulated that she should not meet Tamil Nadu politicians people like Nedumaran &Vaiko were angry about it.

  Since the hidden agenda of these pro-LTTE politicos was to exploit the sick lady&do politics they were aghast at the ban on her meeting them.

  These were the same people who had protested about her not being refused entry into India for medical treatment.Now they stand fully exposed.

  The problem of this sick old woman must be dealt with humanely&with dignity instead of crude attempts to politicise the humanitarian issue.

 7. English
  I think it is the correct time to put a full stop MK.
  Nature is not taking old man’s life so artificially means must be welcome by world Tamil communities.

  French
  Je pense que c’est l’heure correcte de mettre un point Mk. La nature ne prend pas les moyens de la vie du vieil homme tellement artificiellement doit être bienvenue par les communautés de Tamoul du monde.

  1. I think that this is a most unethical utterance.
   The website should not allow such calls for murder.

   MK is not the problem. He is only its symbol. Tamilnadu politics has to cure itself of a complex political ailment of which the DMK, ADMK, MDMK etc are one part. None of the electoral options is better than the disease that ails Tamilnadu.

 8. சிவத்தம்பியும் கருணாநிதியும் சேர்ந்து செய்யும் பித்தலாட்ட நிகழ்வு அது. மேற்படி செம்மொழி மகாநாட்டுக்கு கண்டனம்தெரிவித்து லா சப்பல் (பாரிஸ்) பகுதிகளில் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த போது புலி எதிர்ப்பு அரசியல் பேசும் நபர் ஒருவர் கருணாநிதி லா சப்பலுக்கு மரக்கறி வாங்க வரும் போது அதைப் படிப்பார் எனக் கிண்டல் செய்தார். செம்மொழி மாநட்டை எதிர்ப்பது என்பது புலிகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதல்ல. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படும் போது வேடிக்கை பார்த்த கருணாநிதிக்கு செம்மொழி மாநாட்டை நடாததுவதற்கு எந்தவித தகுதிகளும் இல்லை. அதற்கான எதிர்ப்புகளை எந்த வழியிலும் நாம் தெரிவிக்கலாம்.

  1. செம்மொழி மாநாட்டை ஈழத் தமிழர் பிரச்சனையுடன் குழப்பத் தேவையில்லை.
   கருணாநிதி மாநாட்டை நடத்தும் நோக்கம் தன் வாழ்நாளில் ஒரு தமிழாரய்ச்சி மாநாட்டுக்காவது தான் முதற் குடிமகனாக இருக்க வேன்டும் என்ற அற்ப ஆசையே.
   அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளின் போது உலகத் தமிழாரய்ச்சி மாநாடுகள் தமிழகத்தில்நடந்தன. 2011இல் நடக்கவிருந்த உலகத் தமிழாரய்ச்சி மாநாட்டை 2010இல் நடத்தக் கேட்டு அது மறுக்கப் பட்டதால் அவசர அவசரமாக ஏற்படுத்தப் பட்டதே இம் மாநாடு.
   அதற்கு உடந்தையாகத் தமிழகத்தின் கால்கழுவி வயிறு வளர்க்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் இருந்தனர். சிவத்தம்பியும் தமிழகத்தில் தன் செல்வாக்குக்கு –இடதுசாரிகளை அன்றிக்– கருணாநிதி போன்றோரையே சில காலமாக நம்பி இடுந்துள்ளார்.
   பொருளுக்கும் புகழ்ச்சிக்குமான சிவத்தம்பியின் ஆசை நாமறிந்தது. ஈழத் தமிழர் பிரச்சனை புகுத்தப் பட்டதும் தடுமாறிய சிவத்தம்பி, கருணாநிதி மிரட்டியதும் பெட்டிப் பாம்பாகி விட்டார்.
   கருணாநிதி நடத்தும் மாநாடு ஒரு மோசடி. உருப்படியான ஆராய்ச்சி மாநாடு எதுவும் இத்தகைய அவசரக் கோலத்தில் ஆயத்தப் படுத்தப் பட்டதில்லை.
   இது தமிழையும் தமிழாராய்ச்சியையும் அவமதிக்கும் ஒரு நிகழ்வு. அதற்குத் தமிழ்ப் பேராசிரியர்கள் உடந்தை. அவர்கள் கருணாநிதியை விடக் கேவலமானவர்கள்.

 9. கயவன் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆட்டம் முடியும் காலம் அருகில் வந்துவிட்டது.

  1. குயவன் கருணாநிதி அவர் செய்யும் இலக்கியம் தமிழுக்கான கொடை.தமிழ்த்தாயின் தவப்புதல்வன் காலம் கடந்தும் வாழ்வார்.

Comments are closed.