பார்வதியம்மாளை தமிழகம் கொண்டு வர முயல்கிறார்… திருமா.

ஆறு மாத கால வீசா பெற்று சிகிச்சைக்காக வந்தவரை திருப்பி அனுப்பினார் கருணாநிதி. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முதிய பெண்ணிடம் கருணை காட்ட மறுத்த கருணாநிதி தொடர்ந்து வித விதமான தந்திரமான நிபந்தனைகளை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தினூடாக விதித்து வந்தார். இந்நிலையில் கருணாநிதி, சிதம்பரம் குழுவினரின் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை பார்வதியம்மாள் நிராகரித்து விட்டார். இப்போது அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ள நிலையில் யாழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பார்வதியம்மாள் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி நிபந்தனைகளை ஏற்க வைத்து தமிழகம் அழைத்து வரும் முயர்ச்சியில் திருமாவளவன் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. செம்மொழி மாநாட்டை ஒட்டி ஈழத் தமிழர்களை தமிழகம் முழுக்க தீவீர கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் இந்த நேரம் பார்வதியம்மாள் வந்தால் நன்றாக இருக்காது. ஆகவே செம்மொழி மாநாடு முடிந்ததும் அவரை அழைத்து வரலாம் என்ற திட்டத்தோடு திருமா இந்த முயர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.