பார்வதியம்மாளிடம் இருந்து நிராகரிப்புச் செய்தி வரவில்லையாம்- கருணாநிதி உற்சாகம்.

1. அரசு செலவில் அரசு சொல்கிற மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் எவரையும் சந்திக்கக் கூடாது.

3. ஒரு மாத சிகிச்சை முடிந்ததும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விட வேண்டும்

என்ற கருணாநிதியின் நிபந்தனைகளின் பேரில் பார்வதியம்மாளுக்கு விசா வழங்க முன்வந்த இந்திய மத்திய அரசின் கோரிக்கைகளை மௌனமாக நிராகரித்து வல்வெட்டித்துரைக்கே சென்று விட்டார் பார்வதியம்மாள். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து பதிலளித்த கருணாநிதி, ” பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதியே மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் சிகிச்சையளிக்க உத்தரவிட்டது. அதில், கடும் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.தமிழக அரசுக்கு பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி வரவில்லை. அவர் தமிழகத்திற்கு சிகிச்சை பெற மறுப்பு தெரிவிக்கவில்லை” என்று உற்சாகத்துடன் கூறினார்.