பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஈழத் தமிழர்களுக்காக போராடுவோம்- டி.ராஜா உறுதி.

இந்தியாவுடைய அழைப்பின் பேரில் டில்லி வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ், பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை, விநாயகமூர்த்தி, சுமந்திரன் ஆகிய 6 எம்.பிக்களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜாவை சந்தித்தனர். அப்போது அவர்கள், இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.அதற்கு டி.ராஜா, ‘’பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்கள் கட்சி இலங்கை தமிழர்களுக்காக போராடும். தமிழர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்கும் படி இலங்கை அரசை வற்புறுத்தும் படி மத்திய அரசை கேட்டுக்கொள்வோம்’’ என்று கூறினார்.