பாபா அணு ஆய்வக விபத்து:தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பு?

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஏன் ஏற்பட்டது, அங்கே பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பதாக விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.