பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுங்கள் – போகம்பறை தமிழ்ச் சிறைக்கைதிகள் வேண்டுகோள்.

கண்டியிலமைந்துள்ள போகம்பர சிறைச்சாலையிலுள்ள தமிழக் கைதிகள், தாங்கள் சக கைதிகளால் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், அண்மைக்காலங்களில் இத்துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்றும் கூறி தங்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு கோரி சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சருக்கும், ஆணையாளருக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
நாங்கள் சிறைச்சாலைகளில் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றோம், தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்களை ஏனைய கைதிகள் புலி இப்போது அழிக்ப்பட்டுவிட்டது எனக்கூறி அடித்துத் துன்புறுத்துகிறார்கள். இவ்விடயங்களை நாங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்களும் எங்களுடன் வாக்குவாதப் படுகிறார்கள். எங்களுக்கு உண்பதற்கு பொதிய உஒவு கிடைப்பதில்லை. தண்ணீர் கிடைப்பதில்லை. மலசல கூட வசதிகள்கூட எங்களுக்கில்லை என கடிதத்தில் கறிப்பிடப்பட்டுள்ளது.
பல குற்றச்செயல்களிலும் போகம்பறைக் கைதிகள் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.