பாசிஸ்டுகளும்(புலிகளும்) பச்சோந்திகளும்(புலிஎதிர்ப்பாளர்களும்): பாண்டியன் தம்பிராஜா/செய்தி ஆய்வு

அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள, பெளத்த, பேரினவாத அரசுகள் ஏற்படுத்தியமையும்É அந்த இரசாயன தாக்கத்தின் விளைவாக பாசிஸ கூட்டமான புலிகள் உருவாகியமையும் எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.இலங்கையில் மக்கள் சிந்திய இரத்தமும், பிய்த்தெறியப் பட்ட அவர்களின் உடல்களுமே எமக்கெல்லாம் குடியுரிமைகளை பெற்றுத் தந்ததை மறந்து நாம் எங்கேயோ, எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம்.
 
இந்த இனப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என பல முறை கூட்டங்கள் போட்டுப் பேசி எந்தவித முடிவும் இல்லாமல் கலைந்து சென்றுள்ளோம்.ஒரு பகுதியினர் இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கும் புலிகளை தமிழ்மக்களிடம் இருந்து அன்னியப்படுத்துவதற்கும்இலங்கை அரசு நியாயமான அரசியல் தீர்வொன்றை வைக்க வேண்டும் (நான் உட்பட)எனவும்- மறுபகுதியினர் புலிப்ப பாஸிசத்ததை மாத்திரமே கருத்திற் கொண்டு எங்களுக்கு ஒன்றுமே தேவையில்லை புலிகள் தோற்கடிக்கப்பட்டாற் போதும் எனவும்(எஸ.எல்.டி யின் முன்னணி உறுப்பினர்கள்)பேசி முடிவின்றி முடித்துள்ளோம்.
 
நாம் ஒன்றும் மிக இறுக்கமாக கட்டப்பட்ட இராணுவ இயக்கத்தை நடத்தவில்லை.அத்துடன் இங்கு இலங்கை மக்களின் இனப்பிரச்சனை பற்றி பேசப்படுவதாலும் இங்கு வெளிப்படையாக எல்லோருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களின் கருத்ததை கூறுவதையே விரும்புகிறேன்.
 
திரு இராஜநாயகம் அவர்கள் ஒரு கூட்டத்தில் ‘நாய்க்கு கல்லை எறிந்தால் எப்போதும் காலைத்தான் து}க்கும்.அது போல் நாங்களும் எப்ப பார்த்தாலும் இலங்கை அரசு ஒன்றும் தராது தராது எனத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்’என பேசினார்.இதற்கு மறுதலையாக கடந்த பதினைந்து வருடங்களாக எதற்கும் புலிகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்  என்பதை மறந்து விட்டார்.புலியின் இருப்பிற்கான காரணமே சிங்கள பெளத்த இனவாத அரசுகளே என்பதை (சிங்கள மக்களை குறிப்பிடவில்லை)ஒரு இடதுசாரி அமைப்புடன் தொடர்புடைய அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு மிக வியப்பாய் உள்ளது.
 
இந்த இணையத்தளங்களில் வாசிப்பவர்கள் எழுதுபவர்கள் தொண்ணூற்றைந்து வீதமானவர்களுக்கு தம்மை ஜனநாயகவாதிகள் என சொல்லிக் கொள்வோருடன் நெருக்கமான தொடர்புடையவர்கள்.ஆதலால் பல உதாரணங்களை சொல்லவில்லை.அப்படி இருந்த போதும் ஒரே ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது.ஒன்றுமே வேண்டாம் என சொன்ன எஸ்.எல்.டிஎப் பின் முன்னணி உறுப்பினர்கள் திடீரென இவங்கை அரசு முன்வைத்த குற்றுயிரும் குலையுயிருமான(என்னை பொறுத்த வரை)தீர்வை மிக வேகமாக நிராகரித்ததன் பின்னணி எனக்கு புரியவில்லலை.
 
மீண்டும் பாசிஸ புலிகள் தொடர்பான ஏராளமான தகவல்கள் உங்களுக்கு தெரியும் எனபதால் அவற்றை குறிப்பிடவிலலை.தயைகூர்ந்து என்னை புலிமுத்திரை குத்தி விடாதீர்கள்.
 
அண்மைக்காலம் வரை புலியுடன் நெருக்கமாய் இருந்து விட்டு புலிகள் தமக் கெதிராய் திரும்பியவுடன் புலிகளை எதிர்த்துவருபவர்களுடன் ஒருபோதும் நாம் இயங்க முடியாது என்பதை பலரிடம் பல தடவைகள் சொல்லி வந்துள்ளேன்.ஏனெனில் என்னைப் போல் சுப்பமார்க்கெட்டில் கூலித் தொழில் செய்பவர்கள்தான் புலியாதரவாளர்களுடன் நேரடியாக பேசக் கூடியதாய் உள்ளது.அவர்கள் எப்போதுமே புலிகளுக்கெதிராக நாம் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காது அல்லது அதை ஏற்றுக் கொண்டு பின்பு புலிகளுடன் ஒட்டுறவாய் இருந்து விட்டு தற்போது எம்மிடம் வேலை செய்பவர்களைப் பற்றி காரசாரமாக விவாதம் செய்வார்கள்.இது ஓரளவிற்கேனும் வென்றெடுக்க கூடிய புலியாதரவாளர்களை வென்றெடுக்க முடியாதுள்ளது.
 
புலியெதிர்ப்பு அரசியலுக்குள் பலரும் வந்ததால் இங்கு போட்டி அதிகரித்துள்ளது.ஆதலால் பலர் வேறு வேறு தளங்களை நோக்கி-உதாரணமாக சாதி அரசியல், பெண்ணியப் பிரச்சனைகள்,புலம் பெயர் இலக்கிய சந்திப்பு என தாவுகிறார்கள்.அங்கும் ஒரு தீர்மானகரமான சக்திகளாய் உருவெடுக்காது மோதிக் கொள்கிறார்கள்.இவர்களைப் போன்றவர்களின் நடவடிக்கைகளால் புலிப்பாசிஸத்திற்கெதிரான போராட்ட சக்திகளின் கவனம் திசைதிருப்பப்படுவதுடன் அச் சக்திகளின் ஆற்றல்களும் நேரமும் முற்றாக விரயமாகின்றது.
 
இணையத் தளங்களில் வரும் புலிப் பாஸிசத்திற்கெதிரான எழத்துக்கள் எல்லாம் தன்னலமற்று ஈழக்கனவுகளுடன் இறந்து போன ஆயிரக்கணக்கான போராளிகளை கொச்சைப் படுத்துவனவாய் வெளிவருகின்றன.உதாரணத்திற்கு தேனியில் கேதீஸ் லோகநாதனையும் லக்ஸ்மன்கதிர்காமரையும் ஒரே தராசில் வைத்து எழுதப்பட்ட கட்டுரையை மீள் பிரசுரம் செய்து (தினகரனிலிருந்து)கேதீஸ்லோகநாதனை மறுபடி கொலை செய்துள்ளார்கள்.ஒரு இளைஞனின் பரிதாப மரணம் என்ற தலைப்பில் செழியன் சிவகுமாரனைப் பற்றி எழுதிய கட்டுரை அந்தப் போராளிகளை மிகவும் கொச்சைப் படுத்துபவையாக அமைந்துள்ளது.
 
முன்பு தமிழ்ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாசிசப் புலிகளிடம் போராட்டத்தை பறி கொடுத்த பின்னர் விடுதலைப் போராட்டத்தற்கான அடிப்படை காரணிகளையே மறுதலிக்கின்றனர்.உதாரணமாகÉ
 
1)தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடகிழக்கின் கடற்கரைப் பிரதேசங்கள் இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கெனவும் அது தமிழருக்கு மி அதிகமானது எனவும்அத்தோடு நாம் கோரும் நிலப்பரப்பும் அதிகமானது எனவும்,
 
2)பல் கலைக் கழகங்களுக்கான தரப்படுத்தல் மிகச் சரியானது எனவும்,
 
3)தமிழ் தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இனப்பிரச்சனையை அளவுக்கு மீறி பெருப்பித்து விட்டார்கள் எனவும்,
 
4)தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மிக அதிகம் எனவும் வசதிகளோடு உள்ளன எனவும்(இவர்களின் பிள்ளைகள் கம்êட்டரில் பயிற்சிகள் செய்ய அங்கே மின்சாரமின்றி பாடசாலைகள் இயங்க)என்றவாறாகபல காரணங்களை கூறி,
 
தொடக்க காலத்தில் இந்தப் போராட்டத்தை ஆதரித்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை பலிகொடுத்து இங்கு தப்பியோடி வந்த பின்பு இப்போது போராட்டத்திற்கான காரணங்களை மிகவும் கொச்சைப் படுத்துகிறார்கள்.

 
 
இது போன்ற ஏராளமான தவறான அரசியல் கணிப்புக்களை பாஸிஸப் புலிகளின் தொல்லை தாங்காமல் மேற் கொண்டு வருகின்றோம்.எனவே நண்பர்களே, நாம் இலங்கையிலுள்ள இனமுரண்பாட்டை தீர்ப்பதற்காக மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வோம்.உதாரணமாக,ரிபிசி றேடியோ இலங்கை அரசிடம் பணம் பெற்றதா என்பதை கூறலாம்.

அல்லது எஸ்.எல்.டிஎப் பின் முன்னணி உறுப்பினர்கள் இலங்கை து}தரக அதிகாரிகளை சந்திப்பதாக வரும் தகவல்களை (எமக்கு பகீரென்று இருக்கும்)வெளிப்படையாக சொல்லலாம்.

அல்லது தேசம் நெற்றில் வெளிவந்த சர்ச்சைக்குரிய பயணங்களை மேற் கொண்டவர்கள் தமது பயணம் தொடர்பாக வெளிப்டையாக கூறுவது போன்றவற்றை செய்வதன் மூலமே ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை தீர்ந்து பரஸ்பரம் இணைந்து இயங்க முடியும்.

எனவே முன்பு கூட்டணி அரசியல்வாதிகள் மாதிரி எல்லாவற்றையும் நாம் பார்த்துக் கொள்கிறோம்,நீங்கள் எமக்கு தொண்டராக இருங்கள் என 21ம் நூற்றாண்டிலும் கூறாதீர்கள்.
 
தயைகூர்ந்து இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க முதலமைச்சா; கனவுகளை ஒதுக்கிவிட்டு(வடகிழக்கு கிராம சபை தலைவர்களின் பெயர்களை ‘முதலமைச்சர்’ என மாற்றினாற் கூட இங்கு முதலமைச்சர் கனவுகளுடன் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு அடங்காது)திறந்த மனதுடன் கை கொடுக்க வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றேன்.