பாக்தாத் குண்டுவெடிப்பில் 70 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 70 பேர் பலியாகினர்; 105 பேர் காயமடைந்தனர். bagdad

பாக்தாத்தின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பினால் அந்த இடமே அதிர்ந்ததாகவும், அடர்த்தியான கரும்புகை வானை நோக்கி எழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும், அவசர உதவி வாகனங்கள் விரைந்து செல்லும் சப்தமும் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.