பாக்கியசோதி சரணமுத்து விற்குகொலைப் பயமுறுத்தல்

Letter[1]The Centre for Policy Alternatives (CPA) இன் நிறைவேற்றுப் பணிப்பாளரான பாக்கியசோதி சரணமுத்து விற்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க போன்ற இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிக்கொணர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அதே பாணியிலான அச்சுறுத்தலே இது. முனைவர் பாக்கியசோதி சரவணமுத்து பினித்தா பேரேரோவிற்கு(Ms. Benita
Ferrero-Waldner) வழங்கிய தகவல்களின் அடிப்ப்டையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி வழங்கல் இலங்கைக்கு மறுக்கப்படவிருப்பதாகவும் இதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு இவரே பொறுப்பு என்றும் இக்கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது,
வன்னித் தடுப்பு முகாம்களில் மக்களின் இன்னல்கள் பற்றி தொடர்ச்சியாகச் சிங்கள மக்கள் மத்தியிலும் சர்வதேசச் சமூகத்திடமும் கூறிவரும் சரவணமுத்து அவர்களுக்கு தொலைபேசியிலும் பலதடவை இதேவகையான அச்சுறுத்தல் விடுக்க்ப்பட்டுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர், இவர் ஒருவரின் குரலே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது என்பது குறித்துக்காட்டத்தக்கது.

Envelope[1]