பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்- 49 பேர் பலி.

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாய மடைந்தனர். அரசு அலுவலகங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பெஷாவருக்கு அருகில் உள்ள யாகாதுந்த் என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த பகுதி அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதி யாகும். சந்தையின் அருகில் உள்ளது. மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு களை கட்டிக்கொண்டு வந்த மர்மநபர் மக்கள் சந்தடி நிறைந்த பகுதிக்கு வந்த வுடன் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் 49 பேர் கொல் லப்பட்டனர். மேலும் 20 பேர் படு காயம் அடைந்தனர்.பெஷாவர் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் இந்தத் தாக்குதலில் கொல்லப் பட்டனர். பலியானவர்களில் பெண் கள், குழந்தைகளும் அடங்குவர்.இந்த பகுதியில் சிறை மற்றும் முக் கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. தற்கொலை குண்டு தாக்குதலில் சில கட்டிடங்கள் சேதமடைந்தன. மூன்று ஹோட்டல்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி யிருக்கக்கூடும் என்றும் இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் அஞ் சப்படுகிறது. இஸ்காக் கான் என்ற பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், ஒரு மனிதன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவ ரை தடுத்து நிறுத்த பாதுகாவலர்கள் முயன்றனர். ஆனால் அவர் நிறுத்தா மல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று திடீரென ஒரு இடத்தில் கீழே விழுந்தார். அப்போது பயங்கர சத்தத் துடன் வெடிகுண்டு வெடித்தது என்றார்.அதிகாரிகள் கூறுகையில், தாலி பான்களுக்கு எதிராக இந்த பகுதியில் அமைதிக்குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்தக்குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் போலீஸ் அதிகாரி களை சந்திக்க இருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த மாதம் தீவிரவாதிகள் இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தி ஏராளமான ராணு வத்தினரை கடத்திச் சென்றனர். இந்தப்பகுதியில் பாகிஸ்தானில் இயங்கும் தாலிபான் குழுவின் செய் தித்தொடர்பாளரான முகமது உமர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக தாக்கு தல் நடந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது. கடந்த வாரம் லாகூரில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். 180 பேர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாலிபான்களை ஒடுக்க வேண்டும் என்று பாக். அரசை அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்து வருகிறது. அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானின் நேரடித் தாக்குதல் களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதி லடியாக தாலிபான்தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.