பள்ளிவாசல் கோபுரங்களுக்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு!

suissசுவிட்சர்லாந்தில் உருவாகி வருகின்ற ஒரு புதிய பள்ளிவாசலில் மினாரா எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஒர் கருத்து வாக்கெடுப்பில், தடைவிதிக்க வேண்டும் என பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துள்ளதாக உத்தியோகபூர்வ முடிவுகள் காட்டுவதாக சுவிஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

மினாராவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக 57 சதவீத வாக்குகள் விழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை முன்மொழிந்தவர்கள் வலது சாரி மக்கள் கட்சியினர் ஆவர். இக்கோரிக்கையை எதிர்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது.

சுவிட்சர்லாந்தின் முஸ்லிம்கள் இனி தம் மீது தாக்குதல்கள் அதிகரிக்கலாம், தம்முடைய உரிமைகள் பாதிக்கப்படலாம் என்று அஞ்சுவதாக அந்நாட்டில் முஸ்லிம்களின் மூத்த பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.