பல துருவ உலகத்தில் வெனிசுலா ஒரு முக்கிய சக்தி: சாவேஸ்

 

savosஉலகின் எரிபொருள் வல்லரசுகளில் வெனிசுலாவும் ஒன்று என்றும், உலக சக்திகளை நகர்த்திச் செல்வதில் வெனிசுலாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை உலகம் உணர்ந்துள்ளது என்றும் வெனிசுலா ஜனாதிபதி பெருமிதப்பட்டார்.

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் 11 நாட்கள் சுற்றுப் பயணம் செய்த பின் நாடு திரும்பிய சாவேஸ் வழக்கமான ‘ஹலோ பிரசி டென்ட்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே கலந்துரையாடிய போது இவ்வாறு தெரிவித்தார். இவருடைய பயணத்தின் பலனாக வெனிசுலா பல ஆயிரம் கோடி டால க்கான எரிபொருள் ஒப்பந்தங்களை லிபியா, அல் ஜீரியா, சிரியா, ஈரான், பெலாரஸ், ரஷ்யா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் செய்து கொண் டுள்ளது.

வெனிசுலா நாளொன்றுக்கு 4.5 லட்சம் பீப்பாய் கூடுதல் கன எண்ணெய் உற்பத்தி செய்ய ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வாகனங்களில் பயன்படக் கூடிய திரவ இயற்கை வாயு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை அளிக்கும் ஒப்பந்தத்தையும் ரஷ்யாவுடன் செய்துள்ளது. பாரசீக வளை குடாவிலிருந்து இயற்கை எரிவாயு எடுக்க சுமார் 76 கோடி டாலர் செலவுள்ள திட்டத்தை ஈரானுடன் வெனிசுலா செய்து கொண்டுள்ளது.

வெனிசுலாவில் உள்ள ஏராளமான வளம் எதிரிகளுக்கு படையெடுக்கும் ஆசையைத் தூண்டும் என் தால் ரஷ்யாவுடன் ஆயுதங்களும், ராணுவ சாதனங்களும் வாங்குவதற்கான ஒப் பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மக்களிடம் தெரிவித்தார்.

சுமார் 20 கோடி டாலர் கூட்டு முதலீட்டில் வெனிசுலா – ஈரான் வங்கி நிறுவப்படும் என்றும் சாவேஸ் குறிப்பிட்டார். பல துருவ உலகுக்கு தேவையான நிதிக் கட்டமைப்பை இரு நாடு களும் உருவமைப்பதாக சாவேஸ் தெரிவித்தார்.